வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே – குமாரில பட்டர் (Post No.7894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7894

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த மாபெரும் தத்துவ மேதை குமாரில பட்டர் . முதல் முதலில் தமிழ் மொழியை திராவிட பாஷை என்று குறிப்பிட்டவர். ஆதி சங்கரர் விவாதத்துக்கு வந்த போது , அவரை தனக்கு வயதாகி விட்டதால் மண்டன மிஸ்ரருடன் விவாதியுங்கள் என்று நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஷமதி நதி தீர  நகரத்துக்கு அனுப்பியவர். இவர் மிலேச்சர்களாகிய வெளிநாட்டுக்காரன் சொல்லும் விளக்கங்களை ஏற்காதே என்று  1300 வருஷங்களுக்கு முன்னரே செப்பியவர். பல தமிழ் சொற்களை தனது சம்ஸ்கிருத நூலில் குறிப்பிட்டவர்.

குமாரில பட்டர் பற்றிய அதிசயமான விஷயங்களை முன்னரே பல கட்டுரைகளில் எழுதிவிட்டேன். அதை படிக்காதோருக்கு இதோ அதிசயப் பட்டியல்:-

முதல் அதிசயம்

புத்த மதத்தினர் போல நடித்து நாளந்தா பல்கலைக்கழகத்தில் (Nalanda University)  படித்தபோது ஒருநாள் புத்தமத தலைவருடன் கடுமையான வாக்குவாதாத்தில் இறங்கியபோது இவரது குட்டு வெளிப்பட்டது . உடனே பலகலைக் கழகத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார் . அப்படிக் குதிக்கையில் நான் சொல்லும் வேதங்கள் உண்மையென்றால் எனக்கு ஒரு காயமும் ஏற்படக்கூடாதென்று சொல்லி குதித்தார் . ஐயருக்கு செமை அடி. குருவிடம் போனார்.

“என்ன சுவாமிகளே; நம்முடைய தத்துவமே வேதத்தில் உள்ள சடங்குகள்தான் பிரமாணம்; வேதாந்தம் எல்லாம் பின்னார்தான் என்னும் பூர்வ மீமாம்சை தத்துவாமயிற்றே. அதன் மீது சத்தியம் செய்து குதித்த என் கதியைப் பார்த்தீர்களா?” என்று ஐயப்பாடு கிளப்பினார். குரு சிரித்துக் கொண்டே சொன்னார்– நீதான் வேதத்தின் மீதே  சந்தேகப்பட்டாயே ; அதான் உனக்கு இந்த அடி- என்றார் . வேதங்கள் உண்மையானால் — என்று ஒரு ‘ஆல்’ (If)  சேர்த்தாயே ; ஏன் ? உனக்கே முழு நம்பிக்கை இல்லையா?” என்று வினவ குமாரில பட்டர் தன் தவற்றை உணர்ந்தார்.

இரண்டாவது அதிசயம்

‘‘காலா ! உனை சிறு புல்லென நான் மதிக்கிறேன் என்றன்  காலருகே வாடா ! சற்றே  உனை மிதிக்கிறேன்’ என்று பாடினார் பாரதி. இப்படி சாவையும் துச்சமென மதித்தவர் குமாரில பட்டர். சங்கரர் வாதம் செய்ய வந்தபோது இவர் உமிக்கரி குவியலுக்கு  இடையில் உட்கார்ந்து கொண்டு தனது உடலை அணு அணுவாக எரித்துக்கொண்டு இறந்தார் . புத்த மதத்தினரிடம் பொய் சொன்ன பாவத்தைக் கழுவ இப்படி செய்தார். ஆனால் ஞானத்தீ யில் மூழ்கியவரை உண்மைத் தீ வாட்டாது. ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவிய ஜனக’ மன்னனை பாரதியார் பாடியதை நாம் அறிவோம்.

மூன்றாவது அதிசயம்

குமாரில பட்டரை வென்றால் உமது அத்வைத சாஸ்திரம் வட இந்தியாமுழுதும் பட்டொளி வீசிப் பறக்கும் என்று சொன்னதால் ஆதி சங்கரர் இவரை நாடி வந்தார். அவரோ இவரை மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கையிலோ ‘மொபைல் போன்’ கிடையாது. வண்டியிலோ ‘கூகிள் மேப் , சாட்டலைட் நேவிகேஷன்’ (Google Map, Satellite Navigation) இல்லை. எப்படி மிஸ்ரர் வீட்டை அடையாளம் கண்டுபிடிப்பது ? நர்மதைக் கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்களுக்கு ஒரே சிரிப்பு; ஒரு சின்னப்பையன் நம்ம ஊர் அய்யரோட வாதம் செய்ய வந்திருக்கிறானே என்று நகைத்து ‘சம்ஸ்கிருத மொழியில் விடுகதை வடிவில்’ வழி சொன்னார்கள். அவர்களுக்கு ஆதி சங்கரர் பரமசிவன் அவதாரம் என்பது தெரியாது. சங்கரர் வழி கண்டு பிடித்தார். வீட்டின் கதவு ‘திதி’ என்பதால் தாளிடப்பட்டிருந்தது . ஒரு மரத்தை வளையும்படி சங்கரர் கட்டளை இட்டார்; மரமும் யானை, மன்னரை ஏற்றிக்கொள்ள குனிவது போல குனிய அதன் மேல் ஏறி வீட்டுக்குள் குதித்தார்.

நாலாவது அதிசயம்

மண்டன மிஸ்ரருடன்  வாதம் செய்யும் போது , பட்டிமன்ற நடுவர் வேண்டுமே. ‘வேதத்தின் சடங்குதான் முக்கியம்; இறைவனைப் பற்றி கவலை இல்லை’  என்று சொல்லும் பூர்வ மீமாம்சை தத்துவம் மிஸ்ரர் தத்துவம். வேதாந்தமே முக்கியம்; இறைவன் உண்டு; அவனுடன் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று ஐக்கியமாவதே லட்ச்சியம் என்பது உத்தர மீமாம்சை. அதை ஆதரிப்பவர் சங்கர்; இருவரும் உலக மஹா மேதாவிகள்; இந்த மேதாவிகளுக்கு ஈடு கொடுக்கும் ஒரே ஆள்தான் அந்த ஊரில் உண்டு. அவள்தான் மிஸ்ரரின் மனைவி சரசவாணி ; சரஸ்வதி தேவியின் மறு  அவதாரம். அவர் பட்டிமன்ற நடுவராக இருக்க சம்மத்தித்தார். அவள் சைக்காலஜி  (Doctorate in Psychology)

படிப்பில் டாக்டரேட் வாங்கியவள். ஆகையால் சொன்னாள் – ‘நான் தீர்ப்பு சொல்கையில் என் கணவர் என்பதால் அவருக்கு சாதமாகத் தீர்ப்பு சொல்லிவிட்டேன் என்ற அபவாதம் எனக்கு வரக்கூடாது. ஆகையால் இருவர் கழுத்திலும் மாலை போட்டுக் கொள்ளுங்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்தான் தோற்றவர்’ என்றாள் . அவள் பெரிய சைன்டிஸ்ட்; சைக்காலஜிஸ்ட்; நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும் ; சொல்லுவதற்கு பசையான வாதம் இல்லாமல் வசை மொழி பாடுவோர் உடலில் வெப்பம் அதிகமாகி மாலை முதலில் வாடும் என்று அவளுக்கு தெரியும்.

கணவர் மாலை முதலில் வாடியது ; பின்னர் செக்ஸ் sex பற்றி கேள்வி கேட்டு பிரம்மச்சாரி சங்கரரை அவள் மடக்கப் பார்த்தது, பின்னர் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரின் சீடர்களானது முதலியவற்றை முன்னரே எழுதிவிட்டேன்

XXXX

யவனர் பற்றி குமாரில பட்டர்

சபர ஸ்வாமின் எழுதியது சபர பாஷ்யம்;  இது ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் மீதான உரை.. இதன் மீது குமாரில பட்டர் எழுதிய உரை ‘தந்த்ர வார்த்திகம்’. அதில் காணும் விஷயம் (1-3-6-10)-

சோடிதம் து ப்ரதியே தா விரோதாத் பிரமானேன — சூத்திரம் 10

வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மிலேச்சர்கள் சொல்லும் வியாக்கியானத்தை ஏற்க வேண்டுமா அல்லது சொற்பிறப்பு இயல் (etymology) எனப்படும் நிருக்தத்தையோ அல்லது சம்ஸ்க்ருத இலக்கண விளக்கத்த்தையோ ஏற்க வேண்டுமா என்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த சூத்திரம் வருகிறது .

பூர்வ பக்ஷ :-

பூர்வ பக்ஷ என்பது பொதுவான கருத்து அல்லது எதிரியின் கருத்து ;இதைச் சொல்லிவிட்டு உரை எழுதுவோர் தம் கருத்தை முன் வைப்பர்

“ஒரு உதாரணத்துக்கு திராவிட பாஷையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் ‘சோறு’ என்று சொல்லுவார்கள். அதை  வடக்கிலுள்ளோர் சோர (திருடன்) என்று அர்த்தம் செய்யலாம்  இன்னும் பல சொற்கள் உள . ‘பாப’ என்பது பாம்பு, பாவம் என்று பொருள் படும். ஒரு பாம்பு தீமையே செய்யும் என்பதால் இப்படிப்பொருள்.

வேதங்களை பொறுத்த மட்டில் மிலேச்சர்களுக்கு கருத்து சொல்லும் அதிகாரமின்மையால் இலக்கண விளக்கமும், சொற்பிறப்பியல்/ நிருக்த விளக்கமுமே  ஏற்கப்படும் .

இந்த விளக்கத்துக்கு நேர் மாறான கருத்தைச் சொல்லாவிடின் மிலேச்சர் விளக்கத்தை அங்கிகரிக்கலாம்” .

(மிலேச்சர் = சங்க இலக்கியத்தில் வெளிநாட்டு மொழி பேசிய ரோமானியர்களைக் குறிக்கும். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள எல்லா வெளிநாட்டினரையும் குறிக்கும். பாரதியார் பாடல் முதலிய பிற்கால நூல்களில் துலுக்கர்களைக் குறிக்கும்)

அனந்தம் மிலேச்ச தேஷாம்ஸ்ச  கஹ சர்வோநூபலப்ஸ்யதே

“மிலேச்சர் நாடுகள் அதிகமாக இருக்கின்றனவே. அவர்களின் சொற் பிரயோகத்தை எல்லாம் எப்படி ஒருவர் அறியமுடியும் ?

மிலேச்சர்களிடமிருந்து புதிய விளக்கம் வந்தால் நம்முடைய விளக்கமும் மாறும்.  அவர்களுடைய கருத்துக்களை நாம் புறக்கணிக்கும்போது ஆர்யாவர்த்த்தில் உள்ள அர்த்தங்களை பார்க்கலாம். நமது தர்மத்தைப் பின்பற்றாதவர்கள்  சொல்லின் உருவத்தை சிதைத்தது போல அர்த்தத்தையும் சிதைக்கலாம்.

திராவிட பாஷைகளின் விஷயத்திலேயே இவ்வளவு வேறுபாடு இருக்கையில் நாம் எப்படி தொலை தூரத்திலுள்ள பாரசிகர், பார்ப ர்கள், யவனர்கள், ரோமானியர்கள் இடையே புழங்கும் சொற்களிலிருந்து நம் சொற்களுக்கு அர்த்தம் கற்பிக்க இயலும்?”

குமாரில பட்டரின் இந்த வாதத்தை ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “வேதத்தின் கொள்கைகளுக்கு எதிரான வியாக்கியானங்களை  வேறு மொழி பேசுவோர் சொன்னால் ஏற்காதே. நமது கருத்தை  ஏற்கும் வாதத்தங்களை ஒப்புக்கொள்வோம்”.

இந்த வாதத்துக்கு முடிவுரை  எழுதுகையில் மிலேச்சர்களின் அர்த்தங்களை ‘ஓரளவு’ ஏற்கலாம் என்கிறார். ஆனால் உள்நாட்டுக்குள்ளேயே திராவிட பாஷையில் உள்ள ‘சோறு’ என்ற சொல்  வடக்கிலுள்ளவர்களுக்கு தவறான பொருள் தரக்கூடும் என்பதால் வேதத்தை எதிர்க்காத அர்த்தங்களை ஒப்புக்கொள்ளலாம்.

1300 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இப்படி எழுதியது நம்மை வியப்புக்கு உள்ளாக்கும். ஏனெனில் அவர் சொல்லும் மிலேச்சர்கள் “யவனர்/கிரேக்கர்களும் ரோமானியர்களும் பார்ப்பரர்களும்” ஆகும். அப்போதே கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இருந்திருக்கின்றனர்!!

குமாரில பட்டர் மிகவும் பரந்த அறிவுள்ளவர் என்பதும், நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்த உலகின் பல நாட்டு அறிஞர்களை சந்தித்து அளவளாவியர் என்பதும் தெரிகிறது.

TAGS — மிலேச்சர் , குமாரில பட்டர் , யவனர், திராவிட பாஷா, சோறு , வெள்ளைக்காரன்

–SUBHAM–

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்