எட்டாம் நாள் திரு நாள் – வேட்டைத் திருநாள் – ஏன்? (Post No. 2613)

arjuna hunter

Article written by london swaminathan

Date:  9 March, 2016

 

Post No. 2613

 

Time uploaded in London :–  8-28

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த வேட்டைத் திருநாள் உற்சவ மகிமைக் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

 

 

 

கதைச் சுருக்கம்:

அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்தான். அப்பொழுது, துர்யோதனின் ஏவலின் பேரில் முகாசுரன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அர்ஜுனனைத் தாக்க வந்தான். அர்ஜுனனைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமானும் வேடன் உரு தாங்கி வந்தான். அடிபட்ட பன்றி ஒரு முனிவனிடம் தஞ்சமடைய அர்ஜுனனும், சிவபெருமானும் தானே பன்றியை முதலில் வில்லால் அடித்ததால் தனக்கே சொந்தமென்று உரிமை கொண்டாடுகின்றனர்.

 

siva hunter

இருவரும் இது குறித்து பெரும் சண்டையில் ஈடுபட்டவுடன், தேவர்கள் அனைவரும் கூடினர். அப்பொழுதுதான் அர்ஜுனனுக்கு, தான் யாரைக் குறித்து தவம் செய்தானோ அந்த சிவ பெருமானே நேரில் வந்ததைக் கண்டு காலில் விழுகிறான். சிவனும், அர்ஜுனனின் பக்தியை மெச்சி, அவன் கேட்ட பாசு பத அஸ்திரத்தைத் தருகிறான். ஆனால் வேடனென்று தன்னை ஏசியதால், அர்ஜுனனும் ஒரு ஜன்மத்தில் காளஹஸ்தியில் வேடனாகப் பிறந்து சிவனை அடைவான் என்று ஒரு சிறிய சாபம் இடுகிறார். அவரே காளஹஸ்தியில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் ஆவார்.

 

இந்த சிவனின் வேடமே, சிவன் கோவில் உற்சவங்களில் எட்டாம் நாளன்று வேட்டைத் திருநாளாகக் கொண்டாடப் படுகிறதென்றும், அவ்வாறு வேடுவ வேடம் தரித்து சுவாமிக்கு முன்னால் செல்லும் உரிமை ருத்ர கணிகைகளுக்கே உண்டு என்றும் ஆதாரங்களுடன் எழுதுகிறார் அஞ்சுகம்.

shiva_arjuna

இதோ அந்த மூன்று பக்கங்கள்:–

 

pandri1

pandri2

 

pandri3

–subam-