சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்

prasnam

(பிரஸ்னம், கேரளம்)

Research Article No.1811; Date: 19th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 6—45 AM

(This is already published in English)

இமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகளை உடையது ஏக பாரதம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு பாரதம் என்பதால் பிராந்தியத்துக்கு பிராந்தியம் கொஞ்சம் வேறு பாடு இருந்திருக்கும். தமிழ் மொழியும் அதன் சகோதர மொழிகளும் பேசப்பட்ட தமிழ் நாட்டில் பரத நாட்டியமும், ஆந்திரத்தில் குச்சிப்புடியும், கேரளத்தில் கதகளியும் கர்நாடகத்தில் யக்ஷகானமும் இருந்தன. இதற்காக அவர்களை வேறு வேறு இனம் என்று வேறு படுத்திப் பார்ப்பதில்லை. உலகிலேயே நீண்டகாலம் உட் சண்டை போட்ட இனம் தமிழ் இனம். சேர சோழ் பாண்டியர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு தமிழ் நாட்டையே பாழாக்கினர்! இதற்காக அவர்களில் ஒருவர் ஆரியர், மற்றொருவர் திராவிடர் என்று சிண்டு முடியவில்லை.

ஆனால் வெளி நாட்டினர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய-திராவிட விஷ விதைகளை ஊன்றினர். இங்கே காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநலமிகள் அதற்கு “ஆமாம்சாமி” போட்டனர். ஆனால் ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர், அரவிந்தர் போன்றோர் அந்த இனவெறிக் கொள்கைக்கு ஆப்பு வைத்தனர். ஹிட்லர் மட்டும் இந்த ஆரிய இன வெறிக் கொள்கையை நம்பி தான் தூய ஆரியன் என்று சொல்லிக்கொண்டு இரண்டு கோடி மக்கள் இறக்கக் கரணமானான் (காண்க: ஹிட்லரின் சுய சரிதை மெய்ன் கெம்ப்).

oxford-water-diviner

தண்ணீர், புதையல் கண்டுபிடித்தல், ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து

சகுனம், ஆரூடம் விஷயங்களில் பாரதம் முழுதும் ஒரே கொள்கைதான். காக்கை முதலிய பறவைகள் இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நரி முதலிய மிருகங்கள் இப்ப்டிப் போனால் என்ன, தும்மல், பல்லி சொல்லுக்கு என்ன பலன், வானத்தில் தோன்றும் வால் நட்சத்திர முதலியவற்றால் என்ன ஏற்படும்? இப்படி நூற்றுக்கணக்கான விஷயங்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் வருகின்றன. அதற்கு முன்னரே இது வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.

காகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதைக் குறிப்புகளை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இப்பொழுது வேத கால இலக்கியங்களில் இருப்பதை சுமேரிய மற்றும் இதாலிய எட்ருஸ்கன் நாகரீகங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

சங்க கால இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. வேத கால இலக்கியம் 3700 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆகையால் வேத காலத்தை சங்க காலத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தது 1700 ஆண்டு இடைவெளி இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளுதல் சாலப் பொருத்தம்.இந்துக்களின் பல நம்பிக்கைகளை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. பூகம்பம், சுனாமி, கிரகணம், இனி வரப்போகும் பருவக் காற்று, சூறாவளி முதலிய காலங்களில் பிராணிகள் முன்கூட்டியே செயல்படுகின்றன.

கேரளத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை துவங்கும் முன் ஒரு குறிப்பிட்ட பறவை வரும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே – என்ற பழமொழி போல இந்தப் பறவை  வரும் முன்னே—தென்மேற்குப் பருவமழை வரும் பின்னே” – என்று புது மொழி சொல்லுவார்கள்.

dowsing rod

காகம் பற்றி கௌசீதகீ பிராமணம்:

ஒரு பெண்ணுக்கு உரிய மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவான்? எந்த திசையில் பெண் வீட்டார் முதலில் காகங்களைப் பார்க்கின்றனரோ அந்த திசையில் இருந்து ஒருவன் இந்தப் பெண்ணை மணம் புரிய வருவான்  ( KB 34-24). புது மொழி: காகம் வரும் முன்னே, மாப்பிள்ளை வருவார் பின்னே!!

பசுமாடுகள் பற்றி சதபத பிராமணம்

சோமயாகம் செய்கையில் பசுமாட்டின் செயல்பாடு யாகம் செய்பவரின் அதிர்ஷ்டம் எப்படி என்பதைக் காட்டும்  ( SB 4-5-8-11) புது மொழி: பசு மாடு ஆடும் முன்னே; ஐயர் குடுமி ஆடும் பின்னே!!

ஆந்தைகள் பற்றி ஹிரண்யகேசி க்ருஹ்யசூத்ரம்

ஊரைச் சுற்றி ஆந்தை பறந்து வந்து வருங்காலத்தை உரைக்கட்டும்; இந்தப் பறவை இறைவனின் இருப்பிடம் வரை செல்பவை. ரிக்வேத காலத்திலேயே இந்த நம்பிக்கை இருந்தது (HGS 1-17-1)

ஆந்தைகள் லெட்சுமியின் வாஹனம். மேலை நாடுகளில் பெரும்பாலான பள்ளிக்க்கூடங்கள், பல்கலைக் கழகங்கள் சின்னங்களில் ஆந்தை இருக்கும். அது அறிவின் சின்னம்.அதீனா என்னும் கிரேக்க நாட்டு சரஸ்வதிக்கு இவள் வாஹனம்.(எனது வாஹனங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

babylonian liver.jpg1900 BCE sippar,iraq

கல்லீரல் ஜோதிடம் (பாபிலோனியா)

பெண்ணும் மண்ணும்: கோபில க்ருஹ்யசூத்ரம்

ஒரு பெண் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். விரும்பிய மண் வகை உருண்டைகளைக் கொண்டு வரவேண்டும். அதை வைத்து அவளை அறிந்து விடலாம் (G G S 2-1-3ff)

ஆங்கிலத்தில் “உன் நண்பர்கள் பெயரைச் சொல்; நீ எப்படிப்பட்டவன் என்று சொல்லி விடுகிறேன்” — என்பார்கள்.

“நீ படிக்கும் புத்தகங்களின் பெயர்களைச் சொல்; நீ யார் என்று சொல்லி விடுகிறேன்” — என்பர். இவை எல்லாம் பழமொழிகள்.

புது மொழி: மண் வாசனை பெண் வாசனையைக் காட்டிவிடும்!!

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா?

ஒரு பிராமணக் குழந்தை தன்னிச்சையாக ஒரு பெண்ணின் எந்த உடல் பகுதியில் கை வைக்கிறதோ, அந்த உடற் பகுதிக்கு, உடல் உறுப்புக்கு என்ன பெயரோ அதை வைத்து ஆணா, பெண்ணா என்று ஆரூடம் சொல்லும் வழக்கம் வேதகாலத்தில் இருந்ததாக வேத இண்டெக்ஸ் எழுதிய கீத் கூறுகிறார் (Keith 390-1)

சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆண், பெண் என்ற ‘பால் பகுப்பு’ உண்டு.

புது மொழி: தொட்டால் தெரியும் ஆணா, பெண்ணா!

மதுரை நகரில் மில்லியன் மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். அப்பொழுது கள்ளழகர் (பெருமாள்) என்ன ‘கலர்/ வண்ணப் பட்டு’ ஆடை உடுத்தி வைகை ஆற்றி இறங்குகிறார் என்பதை விவசாயிகள் ஆவலுடன் பார்ப்பர்.ஏனெனில் அந்தக் கலரைப் பொறுத்து அந்த வருட மழையும் அறுவடையும் இருக்கும் என்பது மதுரை ஜில்லா நம்பிக்கை.

Piacenza_Bronzeleber.jpgEtruscan

எட்ருஸ்கன் கல்லீரல் வரை படம்

பாபிலோனிய, சுமேரிய நம்பிக்கைகள்

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.

எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு, மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000 ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

மஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள், படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா? அடிக்காதா? என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.

துருக்கி நாட்டவர் வயதான பெண்களைக் கொண்டு குறி சொன்னார்கள். இந்த வழக்கம் தமிழர்—கிரேக்கர் இடையே இருப்பதை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

இந்தியாவில் தென் குமரி முதல் வடவிமயம் வரையுள்ள பிரஸ்னம், கயிறு சோதிடம், நாடி சோதிடம், ஜாதக் கட்டு என்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஜோதிட வகைகளிலும் நாமே ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம் பெறுவோம்!!

ashtamangalya+prasnam+at+triprayar

Read also my articles:

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.