வாகனங்கள் தோன்றியது எங்கே? ஏன்? எப்போது?

வேத காலம் முதல் இன்று வரை தெய்வங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் ஒரே மதம் இந்துமதம் தான். சிந்து சமவெளியிலும் யானை மேல் நிற்கும் உருவத்தைக் கண்டோம். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்கிருத நுல்ல்களிலும் சிற்பங்களிலும், பழைய காசுகளிலும் வாகன உருவங்கள் காணப்படுகின்றன. காலக் கண்க்கீட்டின்படி பார்த்தால் சுமேரியாவில் கி.மு.3500 முதல் வாகனங்கள் இருக்கின்றன. ஆயினும் கலாசார தொடர்ச்சியைப் பார்க்கையில் இந்தியாதான் இதன் தாயகமாக இருந்திருக்க வேண்டும் என்று துணிய முடிகிறது.

 

வாகனங்கள் என்பது என்ன? இறவனைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் உருவங்கள். பெரும்பாலும் மிருகங்கள் அல்லது பறவைகள் இந்தப் பணியைச் செய்கின்றன. தேர்கள், சப்பரங்கள், மலை, சூரியன் ,சந்திரன், ராவணன், அனுமன் போன்றோரையும் வாகனங்களாகக் காண்கிறோம். கொடிகள் தோன்றியது இந்தியாவில தான். இதை முன் ஒரு கட்டுரையில் விளக்கிவிட்டேன். முதலில் கொடிகளில் என்ன சின்னங்களைக் கண்டோமோ அதுவே பிற்காலத்தில் வாகனமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள் முருகனின் மயில் கொடி மயில் வாகனமாக மாறியதையும், விஷ்ணுவின் கருடக் கொடி, அவரது கருட வாகனமாக மாறியதையும் சிவனின் ரிஷபக் கொடி ரிஷப வாகனமாக மாறியதையும் காணலாம்.

 

பிற்காலத்தில் வாகனங்களுக்கு தத்துவ பூர்வ விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. பிள்ளையார் போன்ற ஒரு கனமான உருவம் எலி மீது போக முடியுமா என்று கேட்கும் போது தீய சக்திகளை இறைவன் அடக்கி ஆள்வதையே இது காட்டுகிறது என்று விளக்கப்படுகிறது. இவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்த கதைகள்.

 

பல தெய்வங்களுக்கான காயத்ரி மந்திரங்களில் எதை நாம் இன்று வாகனமாகக் கருதுகிறோமோ அதை கொடியாகவே மந்திரம் சொல்லுகிறது. எடுத்துக் காட்டாக சனைச்வர காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம். காகத்வஜாய (காக்கைக் கொடியோன்) என்று மந்திரத்தில் வருகிறது. ஆனால் காக்கை வாகனம் என்று நாம் சொல்லுவதோடு சிற்பங்களில் அப்படியே பார்க்கிறோம்.

 

வாகனங்களின் சின்னங்கள் எப்படித் தோன்றியது என்பதற்கு சிலர் ஆரிய திராவிட வாதத்தைப் புகுத்தி அபத்தமான விளக்கங்களைக் கொடுக்கின்றனர். பிராணிகள் அல்லது காலுக்கு அடியில் உள்ள அரக்கர்கள், திராவிடர்களை வசப்படுத்தி அடிமைப்படுத்தியதைக் காட்டுகிறது என்பது அவர்களது வாதம். இது உண்மையல்ல என்பதற்கு எனது கட்டுரையில் கொடுத்துள்ள வெளிநாட்டுத் தெய்வ வாகனங்களே சான்று. அங்கும் பிராணிகளைப் பார்க்கிறோம். ஆகவே இவை பொருந்தா வாதங்கள்.

முதல் கட்டத்தில் கொடிகளீல் இருந்த சின்னங்களே வாகனங்களாக மாறின. இரண்டாம் கட்டத்தில் அவைகளுக்கு தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்பதே எனது துணிபு. ஆனால் வெளிநாட்டுத் தெய்வங்களுக்கு எப்படி சிம்ம வாகனம், மான் வாகனம், புலி வாகனம் என்பன வந்தது என்பது தெரியவில்லை. ஒருவேளை விலங்குகளையும் வசப்படுத்தும் சக்தி தெய்வங்களுக்கு உண்டு என்பதை இவை காட்டக்கூடும்.

 

இராக் நாட்டில் ஏழு கடவுளர் வாகனக்களில் பவனிவரும் காட்சியை விளக்கி படங்களையும் கொடுத்திருக்கிறேன் (ஆங்கிலக் கட்டுரையில்). துருக்கியில் எழிலிகாய என்னும் இடத்தில் 12 தெய்வங்கள் அணிவகுத்துப் போகின்றனர். இந்தப் படத்தையும் பிரசுரித்துள்ளேன். இவர்கள் துவாதச ஆதித்யர்களாக இருக்கலாம். இராக், துருக்கி, சிரியா ஆகிய முஸ்லீம் நாடுகள் கி.மு 1800 முதல் வேத கால தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்களாக இருந்ததை வெளிநாட்டு அறிஞர்கள்தான் முதலில் நமக்கே சொன்னார்கள். வேத கால தெய்வங்களைக் குறிப்பிடும் கி.மு.1400 கல்வெட்டு துருக்கி-சிரியா எல்லை பகுதியில் கண்டெடுக்கப்ப்பட்டது. அந்த பகுதியில் வாகனக் குறிப்புகள் கிடைப்பதாலும் சம்ஸ்கிருத மொழியில் குதிரைப் பயிற்சி நடைபெற்றதாலும் இந்துக்காளே வாகனங்களுக்கு காரண கர்த்தாக்கள் என்றால் மிகையாகா.

 

Please read my other articles on Vahanas in my blogs:

Iraq: 7 Gods Procession on Vahanas

Deer Chariot: Rig Veda to Santa Claus

Hindu Vahanas around the World

Vahanas in Kalidasa and Tamil Literature

 

உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்

வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?