வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***