
Post No. 8872
Date uploaded in London – –30 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்
பண்டிகை நாட்கள் – நவம்பர் 14 தீபாவளி ,கேதார கௌரி விரதம், குபேர பூஜை, CHILDREN’S DAY; 15 கந்த சஷ்டி விரத ஆரம்பம் ; 20- கந்த சஷ்டி ; 29-கார்த்திகை
அமாவாசை– 14; பௌர்ணமி-29; ஏகாதஸி-11,26;
சுபமுகூர்த்த தினங்கள்—4, 6, 11, 12, 13, 20, 26

நவம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை
அஸ்வமேத யாகங்கள் மூலம் அரசர்கள் பாபங்களை அழித்தார்கள் – பாரத் மஞ்சரி
முச்யந்தே ஸர்வ பாபேப்யோ ஹயமேதே ன பூமி பாஹா
XXX
நவம்பர் 2 திங்கட் கிழமை
அவா இல்லார்க்கும் துன்பம்- திருக்குறள் 368
ஆசை இல்லாதவர்க்கு துன்பம் இல்லை
xxx
நவம்பர் 3 செவ்வாய்க் கிழமை
ஒருவனுடைய செல்வச் செழிப்பைக் காட்டத்தான் யாகங்கள் நடத்தப் படுகின்றன – பிருஹத் கதா மஞ்சரி
க்ரதுர்நாம பாஹ்யத்ரவிண ஆடம்பரஹ
XXX
நவம்பர் 4 புதன் கிழமை
ந லிங்கம் யதி காரணம் – மனு ஸ்ம்ருதி 6-66, ஹிதோபதேசம் 4-90
வெளிவேஷம் மட்டும் துறவிகளின் அடையாளம் அல்ல
xxx
நவம்பர் 5 வியாழக் கிழமை
ஒருவனை வஞ்சிப்ப தோறும் அவா – திருக்குறள் 366
பாவம் செய்ய வைப்பது ஆசைதான்
XX

நவம்பர் 6 வெள்ளிக் கிழமை
தேவர்களுக்குப் பிரியமான யக்ஞங்களைச் செய்வது நன்மை பயக்கும் – சிசுபாலவதம்
புரோதாச புஜாம் இஷ்டாமிஷ்டம் கர்த்துமல ந்தராம்
XXX
நவம்பர் 7 சனிக் கிழமை
நவம்பர்அஸமந்தோ பவேத் ஸாதுஹு – ஸ ம்ஸ்க்ருத பழமொழி
திறமையற்றோர் சந்நியாசி ஆகிவிடுவார்கள்
xxx
நவம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை
இன்பம் இடையறா நீண்டும் — அவா கெடின் –திருக்குறள் 369
ஆசையில்லாவிட்டால் எப்போதும் பேரானந்தம்தான்
xxx
நவம்பர் 9 திங்கட் கிழமை
அவா நீப்பின் …… பேரா இயற்கை தரும்- திருக்குறள் 370
அழியாத இன்பம் தருவது ஆசை இல்லாமை
XXX
நவம்பர் 10 செவ்வாய்க் கிழமை
ஆஸ்ரமத்தில் வசிப்பது பற்றின்மைக்கு உதவும் – கஹா வத் ரத்நாகர்
நிவ்ருத்தி போஷகஹ ஆஸ்ரமதமஹ
xxx

நவம்பர் 11 புதன் கிழமை
மனதைக் கட்டுப்படுத்தாதவனுக்கு தலையை மழித்து என்ன பயன்
மனசோ நிக்ரஹோ நாஸ்தி முண்டனம் கிம் கரிஷ்யதி
xxx
நவம்பர் 12 வியாழக் கிழமை
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – குறள் 280
மொட்டையும் தாடியும் தேவையே இல்லை (துறவிக்கு); உலகம் பழிக்கும் காரியங்களைச் செய்யாமல் இருந்தாலே போதும் . தம்மபதம் , பஜகோவிந்தம் நூல்களிலும் உளது
xxx
நவம்பர் 13 வெள்ளிக் கிழமை
ந ப்ராப் னுவந்தி யதயோ ருதிதேன மோக்ஷம் –பாததாதித க
எல்லாவற்றையும் கண்டு துக்கப்படுவதால் மட்டும் மோட் சம் கிடைத்துவிடாது
XXX
நவம்பர் 14 சனிக் கிழமை
ந தேன ஜாயதே சாதுர் யே நாஸ்ய முண்டிதம் சிரஹ- ஸ ம்ஸ்க்ருத பழமொழி
மொட்டை அடித்துக்கொண்டதால் மட்டும் சந்யாசி ஆகிவிடமுடியாது
xxx


நவம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை
யார் ஒருவர் வேள்விப் பிரசாத த்தை சாப்பிடுகிறாரோ அவர்கள் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் – பகவத் கீதை 3-13
யக்ஞ சிஷ்டாசினஹ ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை ஹி
XXX
நவம்பர் 16 திங்கட் கிழமை
வேள்வியிலிருந்து மழை உண்டாகின்றது ; வேள்வியோ மனிதனின் முயற்சியில் உண்டாகின்றது- பகவத் கீதை 3-14
யக்ஞா த் பவதி பர்ஜன்யஹ யக்ஞஹ கர்மஸமுத்பவஹ
XXX
நவம்பர் 17 செவ்வாய்க் கிழமை
நம்பிக்கை இல்லாமல் வேள்வி செய்வது பயனற்றது – பகவத் கீதை 17-15
ச்ரத்தா விரஹிதம் யக்ஞம் தாமஸம் பரிசக்ஷ தே
XXX
நவம்பர் 18 புதன் கிழமை
அஹோ கஷாய பாஹுல்யம் முனீ னாமபி ஜாயதே – பிருஹத் கதா கோச
அந்தோ, துறவிகளும் கூட அதிக ஆசைக்குட் பட்டுவிடுகின்றனர்
xxx
நவம்பர் 19 வியாழக் கிழமை
அவா என்ப …….. பிறப்பீனும் வித்து –குறள் 361
ஆசையே மீண்டும் மீண்டும் பிறவித துன்பத்தைத் தரும்
xxx

நவம்பர் 20 வெள்ளிக் கிழமை
வேண்டாமை அல்ல விழுச் செல்வம் ஈண்டில்லை – குறள் 363
ஆசையில்லாமல் இருப்பதே செல்வம் ; அதைவிட பில்லியன் டாலர் எதுவும் இல்லை
xxx
நவம்பர் 21 சனிக் கிழமை
எங்கும் நிறைந்த இறைவன் வேள்வியில் உறைகிறான் – பகவத் கீதை 3-15
ஸ ர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞஏ ப்ரதிஷ்டிதம்
XXX
நவம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை – குறள் 362
ஒருவன் விரும்பினால் பிறவாமையை விரும்பவேண்டும்
xxx
நவம்பர் 23 திங்கட் கிழமை
தூ உய்மை என்பது அவாவின்மை -குறள் 364
சுத்தம் என்பது ஆசையில்லாத நிலை ; ஆசை என்பது அழுக்கு
xxx
நவம்பர் 24 செவ்வாய்க் கிழமை
ஒரு துறவியின் பேசசு மூலம்தான் அவரை எடைபோட வேண்டுமா?
லோகெ மு னீ னா ம் ஹாய் கிரா ஸ்திதிஹி
XXX

நவம்பர் 25 புதன் கிழமை
ஆண்டிகளுக்குள் மோதல் வந்தால் நொறுங்குவது பிச்சை எடுக்கும் சட்டிகள்தான் .- கஹா வத் ரத்நாகர்
ஸா தூ னாம் கலஹே நூ னம் கேவலா கர்பர க்ஷதி ஹி
XXX
நவம்பர் 26 வியாழக் கிழமை
நாமம் போட்டவன் எல்லாம் தாதனா , விபூதி பூசினவனெல்லாம் ஆண்டியா ?
XXX
நவம்பர் 27 வெள்ளிக் கிழமை
ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும் – தமிழ்ப் பழமொழி
XXX
நவம்பர் 28 சனிக் கிழமை
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
XXX
நவம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை
ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது.
XXX
நவம்பர் 30 திங்கட் கிழமை
முனிவர்களுக்குள் சாந்தமும் மறைவாக எதையும் எரிக்கும் சக்தியும் உளது – சாகுந்தலம்
ச மப்ரதானேஷு தபோதனேஷு கூ டம் ஹி தாஹாத்மகஸ்தி தேஜஹ

tags – வேள்வி, துறவி , பழமொழிகள், நவம்பர் 2020,
xxx subham xxxxxx
You must be logged in to post a comment.