உண்மை வைஷ்ணவன் யார்?(Post No.9648)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9648

Date uploaded in London – –  –26 May   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்!

உண்மை வைஷ்ணவன் யார்?

ச.நாகராஜன்

11 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்த ஒரு யூ டியூப் பதிவு! 124 நாடுகளில் உள்ளோர் இந்தப் பாட்டைப் பாடுவதாக அபூர்வமான காட்சி அமைப்பு உள்ளது. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அனைவரும் பார்க்க வேண்டிய அவசியமான் வீடியோ பதிவு இது. 5 நிமிடம் 44 வினாடிகள் மட்டும் ஒதுக்குங்கள் போதும்!

எந்தத் தொடுப்பில் பார்க்கலாம்? இதோ இருக்கிறது தொடுப்பு:

பாடல் என்ன பாடல்? இதோ விவரம்:-

மஹாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் அது. நரசிம் மேத்தா என்ற மகான் எழுதிய ஒரு குஜராத்தி பாடல் அது. அதில் உண்மையான வைஷ்ணவன் யார் என்பதை கவிஞர் விளக்குகிறார். பாடல் இது தான்:-

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே

ஜே பீட பராயே ஜானேரே

பரதுக்கே உபகார் கரே தோயே

மன் அபிமான் ந ஆனே ரே (வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே

நிந்தா ந கரே கேனீ ரே

வாச் கச்ச மன் நிஸ்சல ராகே

தன் தன் ஜனனீ  தேனே ரே (வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகி

பரஸ்த்ரீ ஜேனே மாத ரே

ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே

பர தன் நவ் ஜாலே ஹாத் ரே (வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே

த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே

ராம் நாம் சூன் தாலீ லாகீ

சகல தீரத் தேனா தன்மாம் ரே (வைஷ்ணவ)

வண லோபீ  நே கபட-ரஹித சே

காம க்ரோத நிவார்யா ரெ

பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா

குல் ஏகோதேர் தார்யா ரே

இதைத் தமிழில் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அழகுற மொழிபெயர்த்துத் தந்துள்ளார் இப்படி:-

வைஷ்ணவன் யார்?

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்                                                         வகுப்பேன் அதனைக் கேட்பீரே                                                                                                               பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும் அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்;

நாயக னாகிய ஸ்ரீராமன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இனி வைஷ்ணவ ஆசாரியரான நஞ்ஜீயர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அவர் எப்போதும் கூறுவது இது:- “ எந்த ஒருவனும் தன்னை உண்மையான வைஷ்ணவன் தானா என்பதை எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து எப்போது அவன் இரக்கத்தால் கிளர்ச்சியுறுகிறானோ, “ஓ” என்று கத்துகிறானோ அப்போது அவன் உண்மையான வைஷ்ணவன் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது அவனது நெஞ்சம் மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து இறுகி இருக்கிறதோ, அதைப் பார்த்து இன்புறுகிறானோ அப்போதே அவன் வைஷ்ணவன் என்ற சொல்லுக்கு உரியவருடன் சேர்ந்தவன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு வைஷ்ணவனாய் இருப்பது என்பது கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பது என்று அர்த்தம். கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பவன் என்றால் அவன் வைஷ்ணவனாய் இருக்கிறான் என்று அர்த்தம். அது அவன் எதை நம்புகிறானோ அதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான் என்று அர்த்தம். அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்பதே அந்த இலட்சியங்களுள் ஒன்றாகும்.

விடுமின் என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இது:

வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே

இதை விளக்க வருகையில் நஞ்சீயரைப் பற்றிய இந்த விஷயத்தை பகவத் விஷயம் நூல் தருகிறது.

முக்கியக் குறிப்பு: இந்தப் பாடலைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு சுவாமிநாதன் இதே ப்ளாக்கில் (www.tamilandvedas.com) எழுதியுள்ளார். கட்டுரை எண் 2133. பதிவான தேதி 7-9-2015 கட்டுரை தலைப்பு: அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

***

tags- உண்மை , வைஷ்ணவன் , கவிஞர், வெ.ராமலிங்கம் பிள்ளை, நரசிம்ம  மேத்தா

  •