இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி! (Post No. 7577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7577

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர் புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சுருக்கமான கதை –

பாரசீகம் என்ற நாட்டின் தற்கால பெயர் ஈரான் (Persia= Iran). உலகில் எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர்கள் மன நிம்மதி பெறுவதற்கு அடைக்கலம் புகும் நாடு இந்தியா. பாரஸீகத்தில் மிர்ஜா கயாத் பேக் என்பவர் புகழ்மிகு குடும்பத்தில் பிறந்த செல்வந்தர். பாரசீகத்தில் முஸ்லிம்களின் கொடுமைகள் அதிகரிக்கவே குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவை எல்லாம் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. சம்ஸ்கிருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெரிய வணிகர் கூட்டம், ஒரு சார்த்தவாகன் தலைமையில் ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்லும். சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் தந்தை மாசாத்துவானைப் பார்க்கலாம். நளனின் மனைவியான தமயந்தி கூட  ஒரு வணிகக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுப்பாதையைக் கடந்து வந்ததை படிக்கிறோம். இதே போல மிர்ஜா பேக் தனது மகள் நூர் ஜஹான், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் பிரபல வணிகர் தலைவனான, மா சாத்துவன் ஆன, மாலிக் மசூத் வணிகர் குழுவுடன் பாதுகாப்பாக புறப்பட்டார். அந்தக் குழு இந்தியா வந்து சேர்ந்தது tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

அப்போது இந்தியாவை மொகலாய மன்னர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். நூர் ஜஹானையும் மிர்ஜா பேக்கையும் அழைத்து வந்த மாலிக்கிற்கு அரண்மனையில் உள்ள பலரைத் தெரியும் . ஆகையால் நூர்ஜஹானின் தந்தையான மிர்ஜா பேக்கையும் சகோதரர்களையும் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று அக்பர் முன்னிலையில் பிரசன்னமானார். உடனே அக்பரும் அவர்களுக்கு அரண்மனையில் சேவகம் செய்ய சில பணிகளைக் கொடுத்தார்.

அப்போதிலிருந்து நூர் ஜஹானின் வாழ்க்கை  பட்டம் போல உயர, உயர,மேலே சென்று, பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. அவள்  அடிக்கடி அம்மாவுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலவ வருவாள் . அழ கா ளும் அறிவாலும் அனைவரையும் கவர்ந்தாள் . அக்பரின் மகன் இளவரசன் சலீம் அவளைக் கண்டவுடன் காதல்  கொண்டான் . சலீமின் பிற்காலப் பெயர் ஜஹாங்கிர். ஆயினும் விதி வசம் வேறு மாதிரி இருந்தது  17 வயதான போது,நூர் ஜஹான் , பர்த்வான் கவர்னரான ஷேர் ஆப்கான் கானுக்கு மனைவியானாள்.

அக்பர்  இறந்த பின்னர்,   இளவரசர்  சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரில் 1605ல் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தின் மன்னர் ஆனார். தன்  தம்பியை அனுப்பி ராஜத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி  நூர்ஜஹானின் கணவரைக் கைது செய்ய அனுப்பினார். நூர்ஜஹானின் கணவரான ஷேர் ஆப்கான் கான் அவசரப்பட்டு கத்தியை  சுழற்றவே, ஜகாங்கீரின் ஆட்கள், அவர் மீது பயந்து,  அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு நூர்ஜஹானைப் பிடித்துவந்து ஜஹாங்கிர் முன்னிலையில் விட்டனர். இதற்கு 4 ஆண்டுகளுக்குப்  பின்னர், நூர்ஜஹானுக்கு 34 வயதானபோது, ஜஹாங்கிரின் மனைவி ஆனாள்.

நூர் ஜஹானுக்கு ஜஹாங்கீர், முதலில் ‘நூர் மஹால்’ – அரண்மனையின் ஒளி விளக்கு – பட்டம் அளித்தார். பின்னர் ‘நூர் ஜஹான்’–  உலகத்தின் ஒளி விளக்கு— என்ற பட்டங்களை அளித்தார். ஜஹாங்கீருக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி முழுப் பொறுப்பையும் நூர் ஜஹானிடம் விட்டார். அவள் 11 ஆண்டுகளுக்கு அக்கால உலகின்  மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தைத் திறம்பட ஆண்டார். சகல கலா வல்லி  ஆனார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஒருகாலத்தில் ஜஹாங்கீர் வெளியிட்ட நாணயத்தில் பின்கண்ட வாசகம் காணப்படுகிறது-

ஜஹாங்கிரின் கட்டளையின் பேரில்

தங்கத்துக்கு நூறு மடங்கு மதிப்பு

அதிகரித்துவிட்டது . சக்ரவர்த்தியின் மனைவி

நூர்ஜஹானின் பெயர் அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது மனைவியின் பெயரால் தங்கத்துக்கு 100 மடங்கு மதிப்பு அதிகமாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார். புதுவகை உணவு வகைகள், பாஷன் உடைகளைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

நூர்ஜஹான் 4 புலிகளைச் சுட்டுக்கொண்றதைக் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு ஜஹாங்கிர் ஒரு லட்ச ரூபாய்  மதிப்பில்  வைர மோதிரம்  பரிசளித்தார். இன்றைய விலையில் பத்து கோடி இருக்கலாம். ஆயிரம் ஏழைகளுக்குத் தங்கக் காசுகளையும் விநியோகித்தார். நூர்ஜஹானுக்கும் தர்ம கைங்கர்யங்களில் பிரியம் உண்டு

காலம் செல்லச் செல்ல நுரஜஹானுக்கு கஷ்டகாலம் துவங்கியது ஜஹாங்கிரின் மூத்த மகன் பெயர் இளவரசன் (Prince Khurram) குர்ரம் . இவனுடைய பிற்காலப் பெயர் சக்ரவர்த்தி ஷாஜஹான். இவனுக்குப் பேரழகி மும்தாஜ்மஹாலைக் கல்யாணம் செய்துவைத்த ஆசப்கான் ஷாஜஹானுக்கு முழு ஆதரவு தந்து தனது மருமகன் அரசுக்கட்டில் ஏறும் நாளைக் கனக்குப் போட்டுக்கொண்டிருந்தான். நூர்ஜஹான் வேறு  கணக்குப்போட்டாள் . தனது முதல் கணவர் மூலம் பிறந்த பெண்ணை மணந்த, ஜஹாங்கிரின் இளைய மகன் ஷாரியார் சிம்மாதனம் ஏற திட்டம் தீட்டினாள் . புரட்சி tamilandvedas.com, swamiindology.blogspot.com வெடித்தது.

போரும் தொடர்ந்தது. காபூல் நகர கவர்நர் பதவி வகித்த மஹாபாத் கான் உதவியுடன் புரட்சியை ஒடுக்கினாள் நூர்ஜஹான்.

காலப் போக்கில் நடந்த கசமுசாவில் அதே மஹாபத் கான், அரசுக்கு எதிராகத் திரும்பி, ஜஹாங்கிரையும் நூர்ஜஹானையும் சிறைப்பிடித்தான் . நூர் ஜஹான் தப்பிச் சென்று பெரும்படை திரட்டி வந்தாள் . வில்லாதி வில்லியான அவள் யானை மீது ஏறி, பிரவாஹம் எடுத்து வந்த நதியில் இறங்கி அக்கரை சேர்ந்தாள் . ஆனால் அவளைத் தொடர்ந்து வந்த படைகள் பின்தங்கின. மஹா பாத் கான் அவளை மீண்டும் சிறைப்பிடித்தான். பின்ர் அவள் பெண்களுக்கே உரித்தான சாதுர்யங்களைப் பயன்படுத்தி தன்னையும் கணவர ஜஹாங்கிரையும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடுவித்துக் கொண்டார்.

குடிப்பழக்கத்தால் உடலைப் பலவீனமாக்கிக் கொண்ட ஜஹாங்கிர் காஸ்மீரிலிருந்து லாகூருக்குச் செல்லும் வழியில் 1627ல் மரணம் அடைந்தார். குர்ரம் என்ற ஷா ஜஹான்  பதவி ஏற்றார். ஆயினும் நூர்ஜஹானை அன்போடு நடத்தினார் . அவளுக்கோ வாழ்க்கை வெறுத்துவிட்டது. தனிமையில் வாடினார் .பழங்காலத்தில் நடந்த  புகழ்மிகு நிகழ்வுகள் மனதில் நிழல் ஆட வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது .,கணவன் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 1646ல் , அவளுடைய 72ஆவது வயதில் உயிர்நீத்தாள் . லாகூரில் தனது கணவருக்காக மிக அழகான பூந்தோட்ட சமாதியை அமைத்திருந்தார் . அதற்குச் சற்று தொலைவில் இவளது உடலும் அடக்கம் செய்யப்பட்டது..

அதில் எழுதப்பட்டுள்ள சோகமயமான  வாசகம் செப்புவது யாதெனில் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ,தனிமையான எனது கல்லறையில் ரோஜாக்கள் மலராது;

இசை பாடும் குயில்கள் சங்கிதம் இசைக்காது;

இருள் அகற்றும் நட்புறவு  ஒளிவீசும் விளக்குகளும் ஒளிராது;

அதில் சிறகு எரித்து விழுவதற்காக  விட்டில் பூச்சிகள் கூட வாராது..

முடி சார்ந்த மன்னரும் பின்னர்ப்  பிடி சாம்பராய்ப் போவார்கள் என்றாலும், இந்திய வரலாற்றில் அழியாத சுவடுகளை பதித்து விட்டாள் ‘பாரசீக ரோஜா’ –ராணி.நூர் ஜஹான்

Tags —  நூர் ஜஹான், முஸ்லீம் ராணி, மொகலாய, ஜஹாங்கிர் , ஷா ஜஹான்

–subham—