
Post No. 9755
Date uploaded in London – –20 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.

ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் (RICHARD BRINSLEY SHERIDAN) நகைச்சுவையுடன் எழுதும் நாடக ஆசிரியர் ஆவார்.
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பிறந்தார். நடிப்பும் நாடகமும் அவர் ரத்தத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள் ஆகும். அவரின் தந்தை ஒரு நடிகர். தாயாரோ நாடகங்களையும் நாவல்களையும் எழுதியவர்.
ஆயினும் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த இயலவில்லை. ஆகவே ஷெரிடன் , கல்வி கற்பதற்காக இங்கிலத்துக்குச் சென்றபோது, குடும்பம் பிரான்ஸுக்கு குடியேறியது .
பிறந்த தேதி –அக்டோபர் 31, 1751
இறந்த தேதி – ஜூலை 7, 1816
வாழ்ந்த ஆண்டுகள் – 64
PUBLICATIONS எழுதிய நூல்கள் –
1775- தி ரைவல்ஸ் THE RIVALS
1775 – செயின்ட் பாட்ரிக் டே SAINT PATRICK’S DAY
1775 – தி டுவேன்னா THE DUENNA
1777- தி ஸ்கூல் பார் ஸ்கேண்டல் THE SCHOOL FOR SCANDAL
1779 – தி க்ரிட்டிக் THE CRITIC
ஷெரிடனுக்கு 19 வயதான போது , அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு வந்தது.அவர்கள் பாத் என்னும் நகரில் வசித்தனர்.
அங்கு ஷெரிடன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.எலிசபெத் அன் லின்லி என்பவருடன் அவர் காதல் விவகாரத்தில் சிக்கினார். அவர் சிறந்த பாடகி.அவருக்காக இரண்டு முறை மற்றவர்களுடன் மோதினார் .1773ல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வந்தனர்
லண்டனில் டாக்டர் ஜான்ஸன் , ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஆகிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. எலிசபெத்தின் பாடல் தொழில் மூலமே அவர்கள் காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால் ஷெரிடன் , எழுத்துமூலம் பிழைக்க எண்ணினார்.
23 வயதில் தி ரைவல்ஸ் என்ற நாடகத்தை எழுதினார். அதே ஆண்டில் மேலும் இரண்டு நாடகங்களை எழுதி வெளியிட்டார். மூன்றும் வெற்றி அடைந்தன. உடனே பிரபல நாடக அரங்கு அவருக்கு நடிகர்/ மானேஜர் என்ற இரண்டு பணிகளை அளித்தது.
ஷெரிடன் எழுதிய நாடகங்களில் மிகவும் நகைச்சுவை ததும்பியது ஸ்கூல் ஃ பார் ஸ்கே ண்டல் என்ற நாடகம்தான். 18ம் நூற்றா ண்டின் நாடகங்களில் மிகவும் பிரபலமானது . முட்டாள்தனமும், கொடூரமும், சுய விளம்பரமும் கொண்ட மனிதர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் இது .
நாடகத்தில் பேசிப் பேசி நல்ல பேச்சாளராக உருவானார். இதன் மூலம் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியையும் வகித்தார்.

XXX
old article
ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post …
https://tamilandvedas.com › ஷெர…
1.
13 Aug 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஐரிஷ் கவிஞர், நாடக ஆசிரியர், அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த …

—subham—
tags- நகைச்சுவை, நாடக ஆசிரியர், ஷெரிடன்
You must be logged in to post a comment.