கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1 (Post No.7000)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-17 am

Post No. 7000


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.

கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து  சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-

1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்

மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.

இதோ கவிதை:-

நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ

நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)

மன்னருக்குப் புகழ்மாலை

ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.

யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி

ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)

XXX

மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.

தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்

சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ

ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)

–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து

ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல் (Post No.5404)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 8-25 am (British Summer Time)

 

Post No. 5404

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்புகள் பற்றி எவ்வளவோ படிக்கிறோம். பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

 

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

 

1924 ஆம் ஆண்டிலேயே சூத்ரகன் என்ற பிரபல ஸம்ஸ்க்ருத நாடகாசிரியர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ (மண்ணியல் சிறுதேர்) நியூயார்க்கில் நாடக மேடை ஏறியதும் அது பற்றி நேஷன் என்ற பத்திரிக்கையின்  கலை விமர்சகர் ஜோஸப் வுட் க்ரட்ச் நீண்ட விமர்சனம் எழுதியதையும் அப்படியே கொடுத்துள்ளார் நேரு.

“அந்த நாடகம் யார் எழுதியது, எந்த நூற்றாண்டில் எழுதியது என்பதைவிட அதன் இதயத்தைத் தொடும் அம்சங்களும், உண்மையுமே மிகவும் கவர்ர்ந்திழுக்கிறது. இது போன்ற ஒரு தூய நாடகத்தை ஐரோப்பாவில் காண முடியாது” என்றார்.

 

ஷேக்ஸ்பியர் எழுதிய Mid Summer Night’s dream

‘மிட் சம்மர் நைட் ட்றீம்’ என்ற நாடகம் அந்தக் காலத்திலேயே , அதாவது 1892 ஆம் ஆண்டில்– ஸம்ஸ்க்ருத மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியையும் எழுதியுள்ளார்.

 

 

1789-ஆம் ஆண்டில் ஸர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES) காளிதாசனின் சாகுந்தலம் நடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் மேலை உலகம் முழுதும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டானதாகவும் உடனே அவரது மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஜெர்மன், பிரெஞ்ச், இதாலிய மொழிகளில் சாகுந்தலம் வெளியானதாகவும்நேருஎழுதுகிறார். அது மட்டுமல்ல கெதே (GOETHE) போன்ற பெரும் புலவர்களை இது மிகவும்  ஈர்த்தது என்கிறார்.

நாடகங்களுக்கு அறிமுகம்/ பீடிகை (PROLOGUE) எழுதுவது ஸம்ஸ்க்ருத நாடகங்களில் மட்டுமே உண்டு. காளிதாசன் நாடகங்களைப் பார்த்துத்தான் பாஸ்ட் (FAUST) போன்ற நாடகத்தில் அறிமுகம்/ பீடிகை இடம்பெற்றது என்றும் சொல்கிறார்.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் வில்ஸன் (WILSON) பவபூதி, காளிதாஸன் நாடகங்களைப் புகழ்ந்து எழுதியதையும் மேற்கோள் காட்டுகிறார். ‘இசை போன்று ஒலிக்கும் மஹத்தான காவியங்கள்’ என்பது வில்ஸனின் பாராட்டுரை.

 

2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதித்த வரம்புக்குள் இவ்வளவும் நடந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாடகம் முதலிய கலைத்துறைகள் படிப்படியாகக் குறைந்தமைக்கு இஸ்லாமிய மதத்தின் கலை வெறுப்பே காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. இந்தக் கலைகள் அனைத்தும் இந்தியாவின் தேசீய மதத்தைத் தழுவி இருந்ததால் ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்காமல் போயிற்று என்பதைக் குறிப்பிட்ட நேரு இதை முழுதும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே கலைகளின் வீழ்ச்சியைக் காண முடிகிறது என்பார்.

 

ஸர் வில்லியம் ஜோன்ஸ் சொன்ன கருத்தை அப்படியே கொடுத்துள்ளார்.

 

“சம்ஸ்க்ருத மொழி, எவ்வளவு பழமையாக இருக்கட்டும்; அதன் அமைப்பு மிகவும் அதிசயமானது. கிரேக்க மொழியை விட சிறப்பானது; லத்தீன் மொழியைவிட வளம் பொருந்தியது; இரண்டு மொழிகளையும் விடசெம்மையானது; ஆயினும் வியப்பான ஒற்றுமையைக் காணமுடிகிறது. வினைச்சொற்களின் வேர், இலக்கண அமைப்பு ஆகியவற்றில் அதிக ஒற்றுமை இருப்பதை தன்னிச்ச்சையாக நடந்தது என்று எண்ண முடியாது. எந்த ஒரு மொழி அறிஞனும் அவை ஒரே மூலத்திலிருந்து பிறந்த மொழிகள் என்றே எண்ணுவான். அந்த மூல மொழி இப்போது இல்லாமல் இருக்கலாம்”.

 

நேருவும் தனது சொற்களில் சம்ஸ்க்ருத்த மொழியின் வளமை, பழமை, செம்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறார்.

 

பாணினி பற்றி (ABOUT PANINI)

உலக மஹா இலக்கண மேதை, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய, பாணினி பற்றி ஜவஹர்லால் நேரு, டிஸ்கவரி ஆப் இந்தியா- வில் கூறுகிறார்:-

“கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டிலேயே பாணினி என்பவர் ஸம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதிவிட்டார். அவருக்கு முந்தி இருந்த இலக்கண வித்தகர்களின் பெயர்களையும் அவர் செப்புகிறார். அவரது காலத்தில் ஸம்ஸ்க்ருத மொழி செம்மொழியாகி  எப்போதும் வளரும் இலக்கியமாக உருப்பெற்றது. அவர் எழுதிய புத்தகம் வெறும் இலக்கண புஸ்தமன்று. அதற்கும் மேலானது . பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயி) பற்றி சோவியத் (ரஷ்ய) பேராசிரியர் ஸ்டெசர் பாட்ஸ்கி பகர்கிறார்: ‘

‘மனித சிந்தனையின் மஹத்தான சாதனைப் படைப்புகளில் இதுவும் ஒன்று. இதுவும் இதன் மீது பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம் என்னும் பேருரையும் இந்திய விஞ்ஞான சிந்தனையின் அடிப்படையாகத் திகழ்கின்றன.’

 

பாணினிக்குப் பிறகு பல வியாக்கியானங்களும் பிற்சேர்க்கைகளும் வந்த போதும் இன்றும் அது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தின் அளவுகோலாக நிற்கிறது. பாணினி யவன லிபி பற்றிச் சொல்லுவது வியப்பானது – அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது.

 

பாணினி பல்வேறு நாட்டியங்கள் பற்றி உரைப்பது 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டியம், நாடகம் வளர்ந்ததைக் காட்டுகின்றது.

 

அடிக்குறிப்பு:

கீத் போன்றோர் கி.மு.300 வாக்கில் பாணினி இருந்ததாகச் சொன்னாலும் அவர் புத்தர் காலத்துக்கும் முந்தியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாணினி சொல்லும் விஷயங்களில் எங்குமே புத்தமத வாசனை துளிக்கூட இல்லை.

 

 

வட மேற்கு இந்தியாவில் தற்போதைய பெஷாவர் (பாகிஸ்தானில் உள்ளது) நகருக்கு அருகில்  புத்தர் பிறபதற்கு முன்னர் (2700 ஆண்டுகளுக்கு முன்னர்) தட்ச சீலம் நகரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் கலைகள்,சம்யம் ஆகியவற்றைப் போதித்தது (இதுதான் உலகின் முதல் பல்கலைக்கழகம்).அதில் கல்வி கற்க தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பிராஹ்மணர்களும் பிரபுக்களின் பிள்ளைகளும் பயமின்றி, ஆயுதப் பாதுகாப்பின்றி பயணம் செய்ததை ஜாதக் கதைகளில் காண்கிறோம். அதில் படித்துப் பட்டம் பெறுவதை பெறும் கௌரவமாகக் கருதினர். பாணினியும் இந்த இடத்தில் கல்வி கற்றவரே.முன்காலத்தில் பிராஹ்மண (வேத) பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் பௌத்தம் கற்பிக்கும் கேந்திரமாக மாறியது.

 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது நான் சேர்த்த விளக்கங்கள்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், சிறைவாசத்தின்போது நேரு எழுதியது டிஸ்கவரி ஆப் இந்தியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல்)

 

–சுபம்–