அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20 (Post No.3414)

 

Article Written by S NAGARAJAN

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 5-43 AM

 

Post No.3414

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20

ச.நாகராஜன்

 

Picture sent by Dr Carani Sanjeevi

சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை என்று

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்த அங்கு அமைதி நிலவியதைத் தொடர்ந்து ஸு யுன் சாந்தமாக வூவைப் பார்த்தார்.

 

 

 

வூவின் ஆவேசமான உரைக்கு பதிலாக ஸு யுன் கூறலானார் : “தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து  கொள்ள வேண்டாம்.மத்திய அரசின் முக்கியமான அதிகாரி டாங். அவருக்கு உங்களுடன் சமாதானம் பேச எல்லா அதிகாரமும் உண்டு. அப்படி சமாதானம் எற்பட்டால் பீஜிங்கின் அதிகாரபூர்வமான அதிகாரிகளுள் ஒருவராக நீங்களும் ஆகி விடுவீர்கள். இது வரை இறந்து போன உங்களின் வீரர்களைப் பற்றி என்னால் செய்ய முடிவது அவர்களுக்கு உரிய  முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்வது தான். சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பற்றி டாங்குடன் பேசி அவர்களை விடுவிக்கச் சொல்கிறேன். இந்த என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்றால் பகை இன்னும் தொடரும். உங்களிடமும் படைபலம் உண்டு.டாங்கிடமும் அது இருக்கிறது.

உங்களுடைய பலம் குறைவு என்பதால் டாங்கின் பண பலம், படைபலம் இவற்றுடன் பீஜிங்கின் அதிகார பலத்தின் துணையும் டாங்கிற்கு வரும். என்னிடம் அதிகார பலம் இல்லை. ஆனால் என் சொல்லின் மூலம் பகையை முடித்து நாட்டிற்கும்  மக்களுக்கும் நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.”

இந்த ஸு யுன்னின் உரையைக் கேட்டு வூவும் அவனது சகாவும் நெகிழ்ந்து போனார்கள்.

 

 

வூ  தன் சார்பில் ஸு யுன் பேசலாம் என்று கூறினான்.

தனது சார்பில் ஆறு நிபந்தனைகளைச் சொல்ல வேண்டுமென்று வூ சொல்ல அதை கவனமாக ஸு யுன் கேட்டார்.

1)சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் வூவின் ஆட்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.2) வூவின் படையைக் கலைக்க நிர்ப்பந்திக்கக் கூடாது. 3) வூவின் ராணுவ அந்தஸ்தைக் கீழிறக்கக் கூடாது 4) தனது படையை கமாண்ட் செய்ய வூவுக்கு உரிமை உண்டு 5) கடந்த காலச் செயல்களைப் பற்றி எந்த விதமான் விசாரணையும் செய்யக் கூடாது  6) இரண்டு படைகளும் சம உரிமை பெற்றவையாக் இருத்தல் வேண்டும்.

 

 

ஸு யுன் கூறினார்: “இதற்கு டாங் சம்மதிப்பார் என்றே நம்புகிறேன். அவருடன் நான் பேசிய பின் அவரது பிரதிநிதிகள் இது  பற்றி முழுவதுமாக உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.”

வூ : “பூஜ்யரே! உங்களைத் தகாத விதத்தில் நடத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த விஷயத்தை  மட்டும் நீங்கள் கூறியபடி முடித்து வைத்தால் உங்களுக்கு எப்போதுமே நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்.”.

 

 

ஸு யுன் : “ஐயோ அந்தப் பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். எனக்கும் இது நன்மையைச் செய்வ்தால் தானே நான் இதைச் செய்கிறேன்.”

 

வூவும் அவனது ச்காவும் மிகுந்த மரியாதையுடன் ஸு யுன்னை நடத்தினர். சில நாட்கள் தங்களுடன் இருக்குமாறு அவர்கள் கூறியதை பணிவுடன் ஸு யுன் மறுத்தார்.

பயணத்திற்கான பணம், உணவு, வண்டி, கூட வழிகாட்டி துணைக்கு வருவதற்கான படை வீரர் ஆகிய அனைத்திற்கான ஏற்பாடுகளையும் வூ செய்வதாகக் கூற் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிய் ஸு யுன் கொஞ்சம் உணவை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

 

 

அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட ஸு யுன் தன் வழியில் பயணப்பட்டார்.

சிறிது தூரத்தில் வூவின் ஆட்களில் பலர் ஸு யுன்னை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினர்.

அவர்கள் தான் முதலில் ஸு யுன்னைப்  பிடித்து அடித்தவர்கள்.

அவர்க்ள் கண்களில் இப்போது கண்ணீர். “போதிசத்வர் எங்களை மன்னிப்பாரா” என்று அவர்கள் புலம்ப ஸு யுன் அவர்களுக்கு ஆறுதல் அளித்துத் தேற்றினார்.

 

 

குன்மிங் நகருக்கு வந்த ஸு யுன்னுக்கு வரவேற்பு பிரமாதமாக் இருந்தது.டாங் அவரை  ம்டாலயம் வந்து சந்தித்தார்.

“உங்களைப் பல காலமாகச் சந்திக்கவில்லை.எனது பாட்டி, தந்தை,மனைவி, சகோதரன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். நான் மிகுந்த மனச்சோர்வுட்ன் இருக்கிறேன்.போதாதற்கு நாடெங்குக் கொள்ளைக்காரர்கள் பெருகி விட்டனர். “ என்று டாங் கூறினார்

 

 

 

அதைக் கேட்ட ஸு யுன், “இறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய புத்தமத இறுதிச் சடங்குகளை நடத்தித் தருதல்,  யுயான் டாங்கில் உள்ள மடாலயத்தை விரிவுபடுத்திப்  பெரிதாக்குதல், புத்த தர்மத்தைப் ப்ரப்பி துயர்படுவோரின் துயரை நீககுதல் ஆகிய மூன்று பணிகளையும் தான் செய்ய விழைவதாகக் கூறினார்.

டாங்  ஸு யுன்னிடம், “முதல் மற்றும் கடைசி பணியைச் செய்வது சுலபம். இரண்டாவது பணிக்கு அரசின் நீதித் துறையின் ஆணை வேண்டும்” என்றார்.

 

 

“நீதித் துறையுடன் நீங்கள் பேசினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தக் கொள்ளைக்காரகள் பற்றிய விஷயத்திற்கு வருவோம். அந்தக் கூட்டத்தின் இரு தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்க்ள் சமாதானத்திற்குத் தயார். அவர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்” என்று ஆரம்பித்த ஸு யுன் அனைத்து விஷயங்களையும் விவரமாகக் கூறினார்.

 

 

இதையெல்லாம் கேட்ட டாங் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

உடனே உரிய அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது.

எல்லாம் சுபமாக முடிந்தது. கொள்ளையடிப்பதும் போர் நடப்பதும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

அந்த வருடமோ முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஷாங்காயில் உள்ள தர்ம மையத்திற்கு நிது திரட்டுவதும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

குன்மிங் நகரில் ஸு யுன் தன் புது வருட ஆரம்ப நாளைக் கழித்தார்.

ஸு யுன்னுக்கு 79ஆம் வயதும் முடிந்தது.

******* தொடரும்