ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?(Post 10,379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,379

Date uploaded in London – –   26 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்து வருகிறோம். இதோ இன்னும் ஐந்து

சுபாஷிதங்கள் :-

த்வாவிமௌ புருஷௌ லோகே ஸ்வர்கஸ்யோபரி திஷ்டத: |

ப்ரமுஸ்ச க்ஷமயா யுக்தோ தரித்ரக்ஷ்சைவ தானவான் ||

இந்தப் பூவுலகில் ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருவர் மட்டுமே இருக்கின்றனர். மன்னிக்கத் தெரிந்த, அதிகாரத்தில் இருக்கும் ஒரு அதிகாரியும், தரித்திரனாக இருந்தாலும் தானம் கொடுக்கும் ஒரு ஏழையுமே அவர்களாவர்.

Two persons in this world stand above the heaven. An office-bearer possessed of forgiveness and poor (man) who is liberal.

*

கனகபூஷண சங்க்ரஹணோசிதோ யதி மனிஸ்த்ரபுணி ப்ரணிதீயதே |

ந ஸ விரௌதி ந சாபி ஷோபதே பவதி யோஜயிதுர்வசனீயதா ||

தங்க நகையில் பதிக்கப்பட வேண்டிய நவரத்னமணி ஒன்று ஈய ஆபரணத்தில் பதிக்கப்பட்டால் அது குறையாகக் காணப்படப்போவதுமில்லை அல்லது அழகற்று இருப்பதுமில்லை. நவரத்னமணியை ஈயத்தில் வைத்தானே அவன் தான் கெட்ட பெயருக்கு ஆளாவான்!

If a gem worthy of being set in a golden ornament is lnlaid in lead, it neither grumbles not does it look ugly. The person (who connects the gem with lead) becomes subject to blame.

*

பாத்ரவிஷேஷன்யஸ்தம் குணாந்தரம் வ்ரஜதி ஷில்பமாதாது: |

ஜலமிவ சமுத்ரஷுக்தௌ முக்தாபலதாம் பயோதஸ்ய ||

ஒரு சிற்பியின் கலை ஒரு அருமையான பொருளில் வைக்கப்பட்டால் அது இன்னும் அதிக மேன்மையை அடைகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் மேகத்துளிகளானது சிப்பியில் விழும் போது அந்தத் துளிகள் முத்துக்களாகப் பரிமளிக்கின்றன!

The art of sculptor attains more excellence if put in an excellent object. For instance, the water of a cloud, falling in a sea-shell becomes pearls.

*

சீமந்தினீஷு கா சாந்தா ராஜா கோபூத் குணோத்தம: |

வித்வத்பி: கா சதா வந்த்யா தத்ரைவோக்தம் ந புத்யதே ||

பெண்மணிகளுள் சாந்தமானவள் யார்? எந்த ராஜா குணோத்தமன்? வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இதிலேயே இருக்கிறது! இருந்தாலும் (எளிதில்) புரிந்து கொள்ளப்படுவதில்லை

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை இந்த சுபாஷித ஸ்லோகத்திலேயே உள்ளது. ஸ்லோகங்களின் நான்கு பாதங்களில் ஒவ்வொரு பாதத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் மூன்று விடைகளும் வந்து விடும்!!

சீமந்தினீஷு –  சாந்தா   இதில் சீ + தா = சீதா என்பது முதல் கேள்விக்கு விடை

ராஜா – குணோத்தம:   இதில் ரா + ம = ராம என்பது இரண்டாம் கேள்விக்கு விடை

வித்வத்பி: – வந்த்யா  இதில் வி + த்யா = வித்யா என்பது மூன்றாம் கேள்விக்கு விடை.

ஆக,

பெண்மணிகளுள் சாந்தமானவள் சீதா!

குணோத்தமனான ராஜா ராமன்!

வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது வித்யா (கல்விச் செல்வம்)

Who is (most) composed among women? Who was the most religious king? What is always respectable to the learned? (The answers to these questions) are told there only. However they are not understood. (The answers can be obtained by joining the first and last letter of each quarter of the verse as follows : Sita, Rama, Vidya)

*

லோப மூலானி பாபாநி ரஸபூலாஸ்ச வ்யாத்ய: |

இஷ்டமூலாநி ஷோகானி த்ரீணி த்யக்த்வா சுகீ பவ ||

பேராசையே பாவத்திற்கான அடி வேர். வியாதிகள் சுவையை அடைப்படையாகக் கொண்டுள்ளவை. சோகத்தின் காரணம் ஆசைப்படும் பொருள்களை விரும்புவதால் தான்! இந்த மூன்றையும் விடு, சந்தோஷமாக இரு! (சுகீ பவ!)

Greed is the root-cause of evil (deed). Diseases have taste at their basis. The root of grief is desired objects. Give up all the three and be happy.

***

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

tags- பேராசை, பெண்மணி, சீதா, ஸ்வர்க்க,