வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 1(Post No.10,529)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,529

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

ஞானமயம் பகிரும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.

19-20-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு மகானின் சரிதத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம். வாருங்கள் பயணிக்கலாம்……..

வள்ளிமலை சென்று வணங்குவார் மாநிலத்தில்

வெள்ளிமலை போல மிகவோங்கி-உள்ளியன

எல்லாம் பெறுவர் இனியராய் இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வர் பரிந்து.

    -திருமுருக கிருபானந்தவாரியார்

முருகு என்ற சொல்லுக்கு இளமை,அழகு,தெய்வத்தன்மை எனும்பதினேழு வித அர்த்தங்களைச் சுட்டுகிறது தமிழகராதி. அப்படிப்பட்ட ஆறுமுகன் நமக்கு உணர்த்துவது என்ன,அவனருள் நம்மை என்ன செய்யும், பார்க்கலாமா………

ஒன்றே பரம்பொருள் எனக் காட்டுவான்,இரு வினைகளைப் போக்குவான், மும்மலங்களை அகற்றுவான்,நான்கு வேதங்களின் கருத்தைத் தருவான், ஐந்து புலன்களை அடக்குவான், ஆறு முகங்களின் மூலம் ஆறு ஆசிகளை வழங்குவான், ஏழு நாட்களும் நல்லவையே என்று உணர்த்துவான், எட்டு திசைகளும் உகந்ததே எனக் குறிப்பிட்டு, ஒன்பது கிரகங்கள் விளைவிக்கும் தீமைகளை விரட்டி அடித்து, வாழ்வில் பத்துக்குப் பத்து தந்திடுவான் நம் வேலவன்!  (நன்றி: கௌமாரம்)

தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய விழாக்களில் அப்படிப்பட்டஆறுமுகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நடப்பு ஆண்டின் இறுதி தினம் மற்றும் வரும் புத்தாண்டின் முதல் நாளும் அழகன் முருகனின் “புகழ்”பாடி ஆராதிக்கும் பொன்னாளாகத் தணிகையிலும், சுவாமிமலையிலும் படித் திருவிழா வாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கடந்து போகும் ஆண்டில் விளைந்த நன்மைகள் போல் வரவிருக்கும் வருடத்திலும் நல்லவையே நடந்து, வாழ்வை வளமாக்க,மனமுறுகி முருகனை வேண்டி “மைசூரு சுவாமிகள்” அனுகிரகத்தால் நடத்தப்படும் விழாவே இது.

யார் இந்த “மைசூரு சுவாமிகள்”?

அதன் பின்னணி விவரங்களைச் சுவாமிகளுடன் கூடவே இருந்து,நெருங்கிப் பழகிய ஆனையாம்பட்டி சாது ஶ்ரீகுஹாநந்த பாரதி சுவாமிகள், திரு கல்யாண சுந்தரம் (1957),சுவாமி அன்வாநந்தா (1975),பி.எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோரின் நேரடி அனுபவக் கட்டுரைகளின் வாயிலாகவும், வடதிருமுல்லை வாயில் ஶ்ரீவைஷ்ணவி தேவி ஆலய வெளியீடு ‘வள்ளிமலை வள்ளல்’ என்ற நூல் மூலமும் அறிய முடிகிறது.

கொங்கு நாட்டில் பவானி நகருக்கு அருகில் பூநாச்சி கிராமத்தில் வசித்த சிதம்பர ஜோசியர்-லஷ்மியம்மாள் தம்பதிக்கு வெகுநாட்களாகப் புத்திரப் பாக்கியமில்லாமல் வருந்தினார்கள். ஒரு சமயம் திருச்செங்கோட்டு ஈசனை வழிபட நாகத்தின் மூலம் சமிக்ஞை கிடைக்கப் பெற்று அதன்படி அனுசரிக்க, அவர்களுக்கு 25-11-1870-ல் கார்த்திகை மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. மகேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  அக்குழந்தைக்கு அர்த்தநாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் படிப்பில் நாட்டமில்லாமல் கிராமியக் கலைகளில் ஈடுபாடு கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் ‘குழந்தை திருமணம்’ செய்விக்கப் பட்டதும் மைசூருக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அரண் மனையில் தலைமைத் தவசிப்பிள்ளையாக இருந்த உறவினரிடம் உதவியா ளராகச் சேர்ந்து விரைவிலேயே சமையற்கலையின் நுணுக்கங்களைக் கற்று, நளபாகத்தில் கைதேர்ந்தவரானார். அரச சமூகத்தின் தனிப்பட்டத் தலைமைத் தவசிப்பிள்ளையாகவும் பரிணமித்தார்.

அதுவரை அவரை அணைத்துச் சென்ற அதிர்ஷ்டதேவதை இப்போது விலக ஆரம்பித்து விட்டாள். ஒரு கல்யாணத்துக்குச் சென்றவரை விதி விட்டுவிட வில்லை. அசல் மாப்பிள் ளையைத் தவிர்த்து இவரை மணாளனாக்கி இரண்டாம் திருமணம் செய்து வைத்து விட் டனர். துன்பத்துக்கு மேல் துன்பத்தை அவர் அனுபவித்தக் காலம் அது. மூன்று வருடத் துக்குப் பின் முதல் மனைவி, மூன்று மகள்கள் இயற்கை எய்தினர். தொடர்ந்து 1907-ல் இரண்டாவது மனைவியின் இரு பெண் குழந்தைகளும் இறந்தனர். அத்துடன் தீராத வயிற்று வலியும் சேர்ந்துகொள்ள வாழ்க்கையே வெறுத்துவிட்டது அவருக்கு. பழநி ஆண்டவரின் அபிஷேகத் தீர்த்தத்தை அருந்தினால் உபாதை நீங்கும் எனத் தோழர் கூற 1908-ல் மனைவி,எஞ்சிய ஒரே மகன் நரசிம்மனுடன் பழநி சென்றடைந்தார். அங்கு அன்றாட ஆலயக் கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,அபிஷேகத் தீர்த்தத்தை அருந்திவர வாட்டியக் குன்மநோயும் அரவே அகன்றது. அத்துடன் முருகனின் திருவிளையாடலும் ஆரம்பித்தது.

அக்காலத்தில் மூலவரின் அபிஷேகத்தின் போது திருப்புகழ்ப் பாட்டுக்கு நடனமாடுவதுண்டு. ஒருசமயம் மதுரை தேவதாசி ஒருவர் “வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய,கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள் புரள…”. (813)பாடலுக்கு நாட்டி யமாட,அதில் லயித்து ஓர் ஆனந்தப் பரவசநிலையை அடைந்தார். திருப்புகழ்ப் பாடலைப் படித்து ரசிக்க நினைத்தாலும் எழுத்தறிவு இல்லாமை தடங்கலாக நின்றது.

அப்போது அவருக்கருகில் திடீரெனத் தோன்றிய ஒரு மாயச் சிறுவன் (வேறுயார், ‘அழகன்’ தான்!)தமிழ் சொல்லிக் கொடுக்க முன்வர, துரிதகால இடைவெளியில் கற்றுத் தேர்ந்து,திருப்புகழ் பாடுவதில் புலமைப் பெற்றார்.‌ ஓர் இனந்தெரியாத உள்ளுணர்வு அவரை ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்த,  திருச் செந்தூர்,  திருவண்ணா மலை, இலங்கை எனப் பல தலங்களைத் தரிசித்து விட்டுத் திரும்பவும் அண்ணாமலை வந்தடைந்தார். பகவான் ரமணரைச் சந்தித்து அவருக்குப் பணிவிடை செய்தும், திருப் புகழ்ப் பாடி மகிழ்வித்தும் வந்தார். ரமணர் அவர் கண்களுக்குத் தண்டாயுதபாணி யாகவே காட்சியளித்தார். அங்கு திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் கற்றறிந்தார். அர்த்தநாரியின் எதிர்காலத்தைத் தன் யோகசித்தியால் அறிந்து கொண்டவர் அவரை வட இந்தி யத் தலங்களைத் தரிசித்து வரப் பணித்தார். இமயமலைச் சாரலில் சந்தித்த ஒரு சித்தரால் ஈர்க்கப்பட்டு,அவரிடமே தீட்சைப் பெற்று,சித்தரின் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்று, ஶ்ரீசச்சிதானந்த சுவாமி எனும் சன்னியாச நாமத்தையும் பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பின் ஆவலுடன் ரமணமகரிஷியைப் பார்க்க வந்தவருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.

வந்ததும் வராததுமாய் அவரை ‘உடனே மலையடிவாரம் திரும்பிச் செல்!’ என மகரிஷி கட்டளையிட, ஒன்றும் புரியாதவராய்த் திரும்பினார். அவரது துறவற வாழ்வில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது அச்சம்பவம். கீழே இறங்கியவரை உடலெல்லாம் சேறும் சகதியுமாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் மகான் ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள். சேறும் சகதியும் சந்தன மணம் வீசியது! “வாரும்,வாரும்!சின்ன சாமி அனுப்பினாரா?” என்று வினவியவர், ஶ்ரீசச்சிதானந்தருக்கு ஆதிசங்கரரின் சிவமானஸ ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

XXXXX

to be continued……………..

tags — வள்ளிமலை ,ஶ்ரீ   , சச்சிதாநந்த , ஸ்வாமிகள், 

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 1 (Post No.10118)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,118

Date uploaded in London – 21 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

ஸ்ரீ காமாக்ஷி தேவியையும் அருணாசல சிவனையும் ஸ்ரீ ராமரையும் போற்றி பெரும் தபஸ்வியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலித்த பெரும் மகான்

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!

தர்மக்ஷேத்ரம் என்றும் ப்ரஹம புரம் என்றும் போற்றப்படும் கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகரில் ஆதி சங்கர பகவத்பாதர் காமாக்ஷி அம்மனைத் தொழுது வழிபட சில நடைமுறைகளை வகுத்து அதைத் திறம்படச் செய்ய நர்மதை நதிக்கரையில் வசித்து வந்த 30 குடும்பங்களை காஞ்சிக்கு அழைத்து வந்தார். அந்தக் குடும்பங்கள் வழிவழியாக இந்த பூஜாமுறைகளை நடத்தி வந்தனர். இந்தக் குடும்பங்களுள் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள்  என்பவர் பெரும் புக்ழ் பெற்றவராக இருந்தார். இவரது தமையனார் சிதம்பர சாஸ்திரிகளின் பெண்ணான மரகதத்தை காமாக்ஷியின் அம்சம் என்றே இவர் கருதினார். மரகதம் தனது 12வது வயதிலேயே சாஹித்ய சங்கீத கலாநிதி என்ற பெரும் பட்டத்தைப் பெற்றார். அவருக்குத் திருமண வயது ஆகவே காமகோடி வம்சத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த வரதராஜர் என்பவரை அவர் மணந்தார். வரதராஜர் ஸ்ரீவித்யா சித்தி பெற்றவர். இந்த தம்பதியருக்கு மகனாக உத்தரமேரூர் அருகில் உள்ள வாவூர் கிராமத்தில் 1870 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி – தைமாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் – சேஷாத்ரி ஸ்வாமிகள் அவதரித்தார். சனிக்கிழமை பிறந்ததால் அவருக்கு சேஷாத்ரி என்று பெயர் சூட்டப்பட்டது.

இளவயதில் ஒரு நாள் மரகதம் தனது நான்கு வயதான சேஷாத்ரியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். வரதராஜ பெருமாள் உற்சவம் நிகழ இருப்பதால் வியாபாரிகள் தாங்கள் செய்த பொருள்களை கூடையில் வைத்து விற்பனைக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நவநீத கிருஷ்ணனின் வெங்கலச் சிலை வார்ப்புகளை ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேஷாத்ரி அந்த குவியலின் மீது தன் கையை வைத்தார். அந்த பொம்மைச் சிலைகளில் ஒன்றை சேஷாத்ரி எடுத்துக் கொண்டார். இரண்டனா பெறுமானம் உள்ள  அந்தச் சிலைக்கு பணத்தை மரகதம் தரவே அதைப் பெற வியாபாரி மறுத்து விட்டார். மறுநாள் மரகதம் குழந்தையுடன் அதே பாதையில் செல்லும் போது முதல் நாள் கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த அந்த வியாபாரி மரகதம் முன்னால் நமஸ்காரம் செய்து சேஷாத்ரியின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். ‘தங்கக் கை, ‘தங்கக் கை’, என்று கூவினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

#விஷயம் என்னவெனில் சாதாரணமாக மிக குறைந்த அளவே விற்பனையாகும் அந்த பொம்மைகள் அன்று முழுவதும் விற்றுத் தீர்ந்தன என்பது தான். அன்றிலிருந்து அனைவரும் தங்கக் கை என குழந்தையை அழைக்க ஆரம்பித்தனர். இந்த கிருஷ்ணருக்கு ஸ்வாமிகள் நெடுங்காலம் பூஜை செய்து வந்தார். உரிய வயதில் சேஷாத்ரியின் நாக்கில் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் சரஸ்வத மஹாபீஜத்தையும் சரஸ்வத தசஸ்லோகி மந்திரத்தையும் தர்பை புல்லால் எழுதி அனுக்ரஹித்தார். அன்று பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்த சேஷாத்ரி ஸ்வாமிகள் மூன்றே வருடங்களில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். இசையைக் கற்று இசை மேதையானார். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களையும் கசடறக் கற்றார். 15ஆம் வயதிற்குள் அவர் புகழ் எங்கும் பரவியது. வந்தவாசியில் அவர் ராமாயண கதாகாலக்ஷேபம் செய்ய மக்கள் மெய்ம்மறந்து அதைக் கேட்டனர். விதிவசத்தால், அவரது தந்தையும் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகளும் இறைநிலையை எய்தினர்.

17ஆம் வயதில் அவரது அன்னையார் அவருக்கு மணம் முடித்து வைக்கத் தீர்மானித்தார். ஆனால் ஜோதிடரோ சேஷாத்ரி பெரும் யோகி என்றும் அவர் சந்யாசி ஆவார் என்றும் தீர்க்கமாகக் கூறி விட்டார். இதனால் பெரிதும் வருத்தமுற்ற மரகதம் ஒரு நாள் அவரை அழைத்து ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வ்ம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சலதத்வே ஜீவன் முக்தி என்பதை மும்முறை சொல்லி அவர் மார்பைத் தட்டிக் கொடுத்தார். ‘அம்பா சிவே’ என்ற கீர்த்தனையையும் அவரைப் பாடச் சொன்னார். ‘அருணாசலா, அருணாசலா’ என்று கூவியவாறே சேஷாத்ரி ஸ்வாமிகளின் மடியில் அவர் உயிரைத் துறந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் சுதந்திர புருஷராக அலைய ஆரம்பித்தார். அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் கர்மாவைத் தீர்க்க ஜபம் செய்வதாக கூறுவார். ஒரு லட்சம் தடவை மந்திரத்தைச் சொல்லி விட்டதாகவும் இன்னும் அரை லட்சம் தான் பாக்கி என்றும் அவர் கூறினார். கோவிலில் அவரை சுற்றமும் நட்பும் தொந்தரவு செய்யவே மயானத்திற்குச் சென்று ருத்ர பூமியான அங்கு தனது தியானம் உள்ளிட்டவற்றைச் செய்யலானார்.

தனது  மாமாவிற்கு எண்ணெய் தேய்த்து விடுவது அவரது வழக்கம். ஒரு நாள் அப்படிச் செய்யும் போது திடீரென்று வானத்தைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்து மீண்டும் வந்து எண்ணெயை எடுத்தார். ‘அங்கே வானத்தில் என்ன பார்த்தாய்’ என்று கேட்டார் மாமா. “அதோ அங்கு தேவதைகள் சென்று கொண்டிருக்கின்றனர், அதைப் பார்த்தேன்”  என்றார் அவர். ‘அவர்களுடன் கந்தர்வர்கள் சிலரும் செல்கின்றார்களோ’ என்று கிண்டலாக மாமா கேட்க, ‘ஆமாம் ஆமாம் கந்தர்வர்களும் பாடிக் கொண்டே செல்கின்றனர்’ என்றார் சேஷாத்ரி. ‘ஆஹா, என்ன ராகமோ’ என்று கேட்க ‘பிலஹரி ராகம்’ என்றார் சேஷாத்ரி. இதனால் திடுக்கிட்ட மாமா, ‘அவர்கள் எங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை’ என்று கேட்க, ‘கர்மாவை முழுவதும் கழித்தவர்களின் கண்களுக்கே அவர்கள் தோன்றுவர்’ என்றார் சேஷாத்ரி.

ஒரு நாள் பாலாஜி ஸ்வாமிஜி என்பவர் ஹரித்வாரிலிருந்து ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டு வந்தார். அவரை சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்துக் கண்களில் நீராய் பொழிந்தார். ‘மாஷுச மாஷுச வருந்தாதே, வருந்தாதே’ என்றார் அவர். ஆறு நாட்கள் அவருக்குச் சேவை செய்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரது பக்குவ நிலையைக் கண்ட பாலாஜி அவருக்கு சந்யாச தீக்ஷையை அளித்தார். அன்றிலிருந்து அவர் சந்யாசியானார். காஞ்சியில் சிறிது நாட்கள் தங்கிய பின்னர் காவேரிப்பாக்கம் சென்றார். இது காஞ்சிக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமம். பின்னர் திண்டிவனத்தில் சிலர் அவரைப் பார்த்தனர். பின்னர் 1889ஆம் ஆண்டு தை மாதம் ரத ஸப்தமி அன்று திருவண்ணாமலையை வந்து அடைந்த ஸ்வாமிகள் அங்கேயே இருக்கலானார்.



Miracles of Sri Seshadri Swamikal | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/06/20 › miracles-of-s…

20 Jun 2014 — Ramana is known to all spiritual aspirants around the world. But Seshadri Swami is not known to many outside Tamil Nadu. His life was full of …

tags — சேஷாத்ரி , ஸ்வாமிகள்,seshadri swamikal, ஸ்ரீ,