ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்! (Post No.7917)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7917

Date uploaded in London – – – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்!

R.Nanjappa

கிழக்கும் மேற்கும்!

பண்பாட்டு, தத்துவ இயல்களில் கீழை நாடுகளும் மேலை நாடுகளும் இரு துருவங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. வாழும் கீழை நாகரிகத்திற்கு சிறந்த பிரதிநிதியாகத் திகழ்வது நமது பாரத நாடு. இவற்றினிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தரும் ஸ்ரீ அரவிந்தரும் எழுதியிருக்கிறார்கள். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும்  East and West In Religion (1933), Eastern Religion and Western Thought (1939)  ஆகிய புத்தகங்களில் இவ்விஷயத்தை அலசியிருக்கிறார். இவற்றிற்கிடையே, இவற்றின் அணுகுமுறைகளில் வேறுபாடு இருந்தாலும், ஒன்றின் வழியில் மற்றதைப் புரிந்துகொள்வது சாத்தியமே என்று எழுதியிருக்கிறார்.இருந்தாலும் இவை  வெவ்வேறானவை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. 

East is East, West is West, and never the twain shall meet என்ற வரி வேதவாக்காகக் கருதப்படுகிறது. 1889ல் இதை எழுதிய ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling), இத்தோடு நிறுத்தவில்லை! அவர் எழுதியது:

Oh, East is East, and West is West, and never the twain shall meet,
Till Earth and Sky stand presently at God’s great Judgment Seat;
But there is neither East nor West, Border, nor Breed, nor Birth,
When two strong men stand face to face, though they come from the ends of the earth!

— lines 1-4. The Ballad of East and West, 1889

இந்த நீண்ட கவிதையில் ஒரு பட்டாணிய கொள்ளைக்காரனும் ஒரு கர்னலின் மகனும் எதிரிகளாகக் கிளம்புகிறார்கள், ஆனால் மற்றவரின் வீரத்தையும் பண்பையும் கண்டு நண்பர்களாகி விடுகிறார்கள். குணமெனும் குன்றேறி  நின்றவர்களுக்கு, கிழக்காவது, மேற்காவது!

நல்ல பண்புகளும் சிந்தனைகளும் உள்ள மக்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். இத்தகையோரின் பழக்க வழக்கங்கள் வேறுபட்டாலும், ஒழுக்கம் ஒருதன்மைத்தாகவே இருக்கும். Goodness is Universal. அன்னியர் என்பதனாலேயே அவர்கள் விரும்பத் தகாதவர்களாகி விடமாட்டார்கள். மிலேச்சன் என்ற சொல்லை எப்பொழுது இந்தியன் கற்றானோ அப்பொழுதே அவன் மனம் குறுகிவிட்டது என்பார் ஸ்வாமி விவேகானந்தர்!

கிப்லிங், விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் எழுதியபோது, இந்தியா “வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு” பிரிட்டனுக்கு அடிமையாக நின்றது.  அப்போது இந்தியர்களுக்கே தம் பெருமை  தெரியாதிருந்தபோது, அதை எடுத்துச்சொல்வது அவசியமாயிற்று. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பல விஷயங்களில் மேலை நாட்டு முறைகளை கண்மூடிப்  பின்பற்றத் தொடங்கிவிட்டது! மேலை நாட்டைப் பின்பற்றுவதே நவீனமாவது என்று ஒரு எண்ணம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது! இன்று பள்ளிப் படிப்பு படித்தவர்களெல்லாம் நடையுடை பாவனைகளில் மேலை நாட்டவரே!

நமது கலை, பண்பாட்டு அம்சங்களில் பலவும் மேலை நாட்டு சிந்தனை முறைகளின் தாக்கத்திற்கு இலக்காகிவிட்டன. முக்கிய பொழுதுபோக்கு அம்சமான சினிமாவும் இதற்கு இலக்கானது ஆச்சரியமல்லவே! பலவிதத்திலும் ஹாலிவுட்டே உலக சினிமாவின் மெக்காவாகத் திகழ்கிறது! 

நமது சினிமா இசைவாணர்கள் மேலை நாட்டு சங்கீதத்திலிருந்து கடன் வாங்கியோ, கொள்ளையடித்தோ  [lifted, plagiarised] வந்திருக்கிறார்கள்! 1950 வாக்கில் கோவா இசைவாணர்கள் வந்ததும் chord, prelude, interlude, counter melody, elaborate orchestration, arrangement போன்ற பல மேலை இசை அம்சங்கள் ஹிந்தி திரையிசையில் கலந்து அதை மேன்மைப் படுத்தின! அதற்கும் முன்பிருத்தே நம் இசைஞர்கள் மேற்கத்திய இசையிலிருந்து எடுத்தாளவும், ஊக்கம் பெறவும் – Inspiration! – செய்தார்கள்!  ஹிந்தியில் நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட பாடல்கள் இருக்கின்றன .அதுவும் 70களுக்குப் பிறகு இது மிகவும் அதிகமாகிவிட்டது. (அசிங்கமும் ஆகிவிட்டது.)

 ஆனால் நாம் பொற்காலத்தில் இப்படி  நடந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

தில் தில் ஸே மிலாகர் தேகோ

दिल, दिल से मिला कर देखो
नज़रों में समा कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल से मिला कर देखो

தில் தில் ஸே மிலா கர் தேகோ

நஃஜ்ரோ(ன்) மே ஸமா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதி ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

மனதோடு மனது கலந்து பார்

கண்ணொடு கண் கலந்து பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்


हम प्यार में खो गये ऐसे
परदेस में राही जैसे
उल्फ़त का नशा जब हो ही गया
दामन को छुडा़यें कैसे
नज़रें तो उठाकर देखो
वो तीर चला कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो

ஹம் ப்யார் மே கோ கயே ஐஸே

பர்தேஸ் மே ராஹீ ஜைஸே

உல்ஃபத் கா நஷா ஜப் ஹோ ஹீ கயா

தாமன் கோ சுடாயே(ன்கைஸே

நஃஜ்ரே தோ உடாகர் தேகோ

வோ தீர் சலா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதீ ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே……

அன்னிய தேசத்தில் வழி தவறிய பயணி போல

நான் காதலில் தடுமாறுகிறேன்

காதல் என்னும் போதை ஏறியபின்

இடத்தை விட்டுப் போவது எப்படி?

பார்வையைத் தான் சற்று உயர்த்திப் பார்

அந்த பாணத்தைத் தான் செலுத்திப் பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா, இல்லையா பார்!

लहरा के हवा जब आई
फिर डसने लगी तन्हाई
दिल पहुँचा वहाँ दिलबर था जहाँ
लो बजने लगी शहनाई
दिल में तो बैठा कर देखो
कुछ पास तो आकर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो  

லஹரா கே ஹவா ஜப் ஆயீ

ஃபிர் டஸ்னே லகீ தன்ஹாயீ

தில் பஹுஞ்சா வஹா(ன்) தில்பர் தா ஜஹா(ன்)

லோ பஜ்னே லகீ ஷஹனாயீ

தில் மே தோ பைடாகர் தேகோ

குச் பாஸ் தோ ஆகர் தேகோ

அப்னா தோ பனாகர் தேகோ

ஹோதீ ஹை முஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

தென்றல் வீசத் தொடங்கியதும்

தனிமை வாட்டத் தொடங்கியது!

காதலி இருந்த இடத்திற்கே மனது சென்று விட்டது!

பின் மனது கீதமிசைக்கத் தொடங்கி விட்டது!

மனதில் அமர்த்தித் தான் பார்

சற்று அருகில் வந்து தான் பார்

உன்னவனாக எண்ணித் தான் பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்!

Song: Dil dil se milakar dekho  Film: Mem Sahib Lyricist: Rajinder Krishan

Music: Madan Mohan  Singer: Kishore Kumar [ There is another version with different lyrics sung by Asha Bhonsle.]

எளிய இனிய பாடல், ‘லைட் மூடில்பாடப்பட்டது.

இது 1934ல்  வெளிவந்த Isle of Capri  என்ற பிரபல பாட்டின் மெட்டில் அமைந்தது, இதை பின்னர்

பிரபல ஹாலிவுட் பாடகர்நடிகர் ஃப்ராங்க் ஸினாத்ரா (Frank Sinatra), டீன் மார்டின் (Dean Martin), Bing Crosby இன்னும் பலர் பாடினார்கள்

There is even a nice video clip of Dean Martin singing this song  (dino4ever) In the lyrics, there is a line: “Lady, I’m a rover,

Can you spare a sweet word of love?” which is the theme of this song . But the original song ends differently. It is charming in its own way.

கிஷோரின் குரலைக் கேளுங்கள்! எந்த ஹாலிவுட், கீலிவுட்டும் கிட்ட நெருங்க முடியாது. மதன் மோஹன் மெட்டில் இனிமை அதிகம், கனம் அதிகம். பின்னணி முற்றிலும் வேறு! நம்மை ஆடவைக்கும் இசை!

தண்டீ ஹவா

ठंडी हवा ये चांदनी सुहानी
मेरे दिल सुना कोई कहानी
लम्बी सी एक डगर है जिंदगानी
मेरे दिल सुना कोई कहानी

தண்டீ ஹவா யே சாந்த்னீ ஸுஹானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

லம்பீ ஸீ ஏக் டகர் ஹை ஃஜிந்தகானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

இந்தத் தென்றல், இந்த நிலவொளிஆஹா, என்ன அழகு

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

வாழ்க்கை நீண்ட  ஒரு பாதை

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

सारे हसीं नज़ारे, सपनो में खो गये
सर रख के आसमां पे परबत भी सो गये
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஸாரே ஹஸீன் நஜாரே ஸப்னோ மே கோகயே

ஸர் ரக்கே ஆஸ்மா(ன்) பே பர்பத் பீ ஸோ கயே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானி

இந்த அழகிய காட்சிகள்எல்லாம் கனவில் மூழ்கிவிட்டன!

இந்த பர்வதமும் பார்வானின் மடியில் தலைவைத்து உறங்கிவிட்டது!

மனமே நீ எனக்கு ஒரு கதை சொல்

அதைக்கேட்டு  நான் சாந்தி அடைய வேண்டும்!

நமது இறுதி லட்சியம் தெரியாதே!

ऐसे मैं चल रहा हूँ, पेड़ों की छाँव में
जैसे कोई सितारा, बादल के गाँव में
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता

जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஐஸே மை  சல் ரஹா ஹூன் பேடோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஜைஸே கோயீ ஸிதாரா, பாதல் கே காவ்(ன்) மே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

மரங்களின் நிழலில் நான் நடந்து போகிறேன்

ஏதோ நட்சத்திரம் மேகங்களின் ஊரில் நடப்பது போலிருக்கிறது!

மனமே, கேட்டால்  சாந்தி  பெறவேண்டும்அப்படி ஒரு கதை சொல்!

நாம் போகுமிடம் தெரியாதே!

थोड़ी सी रात बीती, थोड़ी सी रह गयी
खामोश रुत जाने, क्या बात कह गयी
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

தோடீ ஸி ராத் பீதி, தோடீ ஸி ரஹ் கயீ

காமோஷ் ருத் ஜானே, க்யா பாத்  கஹ் கயீ

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

இரவு சிறிது கழிந்து விட்டது, இன்னும் சிறிது இருக்கிறது

இந்த பருவம்மவுனமாக எதையோ சொல்லிச் சென்றதே!

மனமே எதாவது ஒரு கதை சொல்

அதைக்கேட்டு சாந்தி பெறவேண்டும்.

நாம் சென்று அடையவேண்டிய இடம் தெரியாதே!

Song: Thandi hawa ye chandni suhani Film: Jhumroo 1961

Lyricist: Majrooh Sultanpuri

Music & Singer: Kishore Kumar.

எத்தனை அருமையான பாடல்! என்ன  அழகான கவிதை! மலை வானத்தில்  தலைவைத்து உறங்கிவிட்டதுஎத்தனை அழகிய கற்பனை!

இது Julius La Rosa பாடிய DOMANI 1955 என்ற பாட்டின் மெட்டில் அமைந்தது. மிக அழகிய பாடல்ஜூலியஸ் ரோஸா நன்றாகவே பாடியிருக்கிறார். கிஷோர் குமார் அனேகமாக முழுதும் ஒரிஜினல் மெட்டையே தொடர்கிறார். அவரது குரல் வளம் பாட்டிற்கு மெருகூட்டுகிறது. தனக்கேயுள்ள சில முத்திரைகளையும் பதித்திருக்கிறார். இரவல் மெட்டுதான், ஆனால் எங்கோ இட்டுச் சென்று விட்டார்!

Kishore has not just lifted the tune, but uplifted the song!

இரண்டு பாடல்களுமே இறுதி அமைப்பில் இந்திய இசை போலவே தெரிகின்றன. பண்டிதர்கள் இவற்றுக்கும் ராகம் சொல்ல முடியும்எல்லாம் அடிப்படையில் ஸ்வரம் தான்! மதுரை மணி ஐயர் ஸ்வரத்தைஇங்கிலிஷ் நோட்என்று பாடுவாரே!

சமீப காலத்தில் மரபு இசை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு தோற்றுவித்த படம் தெலுங்கில் வந்தசங்கராபரணம்“. அதில் இந்தியமேற்கத்திய இசையின் ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு சிறிய டயலாக் வரும்.

மேலை நாட்டு அம்சங்களை எடுத்துக்கொள்வது தவறில்லை. எதை, எப்போது, எவ்வளவு, எப்படிஇதில் தான் நமது திறமையையும் பண்பாட்டுப் பிடிப்பையும் காட்டவேண்டும்!

வாழ்க்கை நீண்ட பயணம், வாருங்கள் பாடிச் சிரித்துச் செல்வோம் என்ற பொருளில் ஷகீல் பதாயுனியும்  ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்:

लम्बे हैं जीवन के रस्ते –  आओ चले हम गाते हँसते 

லம்பே ஹை ஜீவன் கே ரஸ்தேஆவோ சலே ஹம் காதே ஹஸ்தே!

இப்படிக் கிழக்கும் மேற்கும் இசையில் இணைந்தால் நல்லது தானே! நாமும் டாக்டர் .சிதம்பரநாதன் செட்டியாருடன் சேர்ந்து சொல்லலாம்:

மேல் நாடு வேறு, கீழ் நாடு வேறு-இரண்டும் சேரின் பேறு!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 25 , கிழக்கு, மேற்கு,

***