ஹிந்தி படப் பாடல்கள் – 32 – தரச் சரிவின் காரணம்? (Post No.7949)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7949

Date uploaded in London – – – 10 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 32 – தரச் சரிவின் காரணம்?

R.Nanjappa

  தரச் சரிவின் காரணம்?   திரையிசையின் தரம் தாழ்ந்துவிட்டது-தாழ்ந்து வருகிறது என்று பரவலாகச் சொல்கிறார்கள் யோசித்தால் இரண்டு முக்கிய காரணங்கள்.தெரியும். ஒன்று, சில இசைஞர்கள் தொடங்கிவைத்த புதிய உத்திகள் அம்சங்கள்-, குறிப்பாக  மேலை நாட்டு இசையின் சில அம்சங்கள்- eg. Beat. இதை முதலில் புகுத்தியவர் சி.ராம்சந்த்ரா. ஆனால் அவர் இனிமையை இழக்கவில்லை. பிறகு ஓ.பி நய்யார் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கினார். அப்பட்டமான மேற்கத்திய இசை. ஆனால் அவரும் இனிமையை  விடவில்லை. அவர் கேட்ட தொகையைக் கொடுக்க இயலாத தயாரிப்பாளர்கள், வேறு இசைஞர்களை நய்யார் பாணியை பின்பற்றச் செய்தார்கள். கடைசியில் நய்யாருக்கே மார்கெட் இல்லாமலாகிவிட்டது!  ஷங்கர் ஜெய்கிஷனும் இந்த வலையில் (குழியில்?) விழுந்தார்கள். 60களில் அவர்கள் இசையமைத்த ஒரு படத்திற்கு வந்த விமர்சனத்தில்.”ஃபிலிம்ஃபேர்” பத்திரிகை இப்படி எழுதியது: The music may be intended to be breezy, but it only succeeds in being noisy. பின்னர் ஆர்.டி. பர்மன் வந்தார். நமது திரை இசை முற்றிலும் திசை மாறியது. அதற்குப்பின் இதுவே பழக்கமாகிவிட்டது. ஆர்.டி பர்மன் காலத்திலும் தாரிப்பாளர்கள் பிறரிடமும் அதே பாணி இசையைக் கேட்டனர். 1977ல் வந்த ‘கரோண்டா’ – Gharaonda – படத்திற்கு இசையமைத்த ஜெய்தேவிடமும்  இதையே கேட்டனர். அவர் தயங்கினார், இசையவில்லை. அவர் உதவியாளர்கள், ‘நாம் சமாளித்துக் கொள்ளலாம், மறுக்காதீர்கள்’ என்றனர். விளைவு?


‘ஏக் அகேலா இஸ் ஷஹர் மே” என்ற அழகிய பாடல்! அது  ஜெய்தேவ் செய்த மாஜிக்! ஆர்.டி.பர்மனுக்குப் பின் வந்தவர்கள் இன்னும் அதள பாதாளத்திற்கே சென்றுவிட்டனர்! தாழ்ந்த ரசனை என்ற வெந்தழலை மக்கள் சிந்தையில் இட்ட இசைஞர்களே அதற்கு இந்தனம்** ஆகி விட்டனர்!   திரை இசையின் தரம் தாழ இன்னொரு முக்கிய காரணம் ஸ்டார் நடிகர்கள். நல்ல இசை இவர்களைச் சுற்றியே வருகிறது.50களில் இவர்கள் மென்மையான பாத்திரங்களில் வருவார்கள். gentle, gentlemanly roles. திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர், பரத் பூஷண், ப்ரதீப் குமார் என்ற எந்த முன்னணி நடிகரின் படத்திலும் ‘ஜென்டில்” ஹீரோ தான்! இசையும் அதற்குத் தகுந்த முறையில் கனமாக, இனிமையாக இருந்தது. ஷம்மிகபூர் வந்ததும் ஹீரோவின் பிம்பம் மாறியது. பிறகு அமிதாப் பச்சன் அடிதடி சகாப்தத்தைத் தொடங்கினார். நல்ல இசையும் உதைவாங்கி, ஓடிவிட்டது! ராஜேஷ் கன்னா மட்டுமே இதற்கு விலக்காக இருந்தார். 70களில் அவர் படங்களில் மட்டுமே நல்ல இசை இருந்தது! ரசிகர்கள் விரும்புவதைத்தானே தரவேண்டும் அதைத்தானே தருகிறோம் என்பார்கள். ஆனால் ரசிகர்களை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?  Fish rots from the mouth (not from the tail), என்பார்கள். சரிவு மேலிடத்திலிருந்துதான் தொடங்குகிறது.  50 களில் வந்த இந்த பாட்டுக்களைக் கேளுங்கள். இப்போது  இப்படி வருமா?    ஸுஹானா ஸஃபர்.   

#सुहाना सफ़र और ये मौसम हसीं
हमें डर है हम खो न जाएँ कहीं
ஸுஹானா ஸஃபர் ஔர் யே மௌஸம் ஹஸீ(ன்) ஹமே டர் ஹை ஹம் கோன ஜாயே(ன்) கஹீ(ன்)   இனிய பயணம், அருமையான பருவம் இங்கேயே எங்கோ மறைந்து விடுவேனோ என பயம் வந்துவிட்டது!

ये कौन हँसता है फूलों में छुपकर
बहार बेचैन है किसकी धुन पर
कहीं गुनगुन, कहीं रुनझुन, कि जैसे नाचे ज़मीं
सुहाना सफ़र..


யே கௌன் ஹஸ்தா ஹை பூலோ(ன்) மே சுப் கர் பஹார் பேசைன் ஹை கிஸ்கீ துன் பர் கஹீ குன் குன் கஹி(ன்) ருஞ்சுன் கீ ஜைஸே நாசே ஃஜமீன். ஸுஹானா ஸஃபர்……   இந்த மலரினுள் மறைந்து இருந்து சிரிப்பது யார்? எவருடைய இசையைக் கேட்டு இந்த வஸந்தம் தன் வசமிழந்து விட்டது?

மெல்லிய குரலிசை, மெல்லிய சலங்கை சப்தம்- பூமியே நடனமாடுகிறதோ?

ये गोरी नदियों का चलना उछलकर
के जैसे अल्हड़ चले पी से मिलकर
प्यारे-प्यारे ये नज़ारे निखार है हर कहीं
सुहाना सफ़र..


யே கோரீ நதியோ(ன்) கா சல்னா உசல்கர் கே  ஜைஸே அல்ஹட் சலே பீ ஸே மில்கர் ப்யாரே ப்யாரே யே நஃஜாரே நிஸார் ஹை ஹர் கஹீ ஸுஹானா ஸஃபர் .   இந்த நதிப்பெண் இப்படி இரைச்சலுடன் ஒடி வருகிறாள்- யாரோ பெண் தன் காதலனைச் சந்தித்துவிட்டு ஓடிவருவது போல் இருக்கிறது!. இந்த அழகிய காட்சிகள் எங்கும் மகிழ்ச்சிமயமாக்கி விட்டது!.. .


वो आसमां झुक रहा है ज़मीं पर
ये मिलन हमने देखा यहीं पर
मेरी दुनिया, मेरे सपने, मिलेंगे शायद यहीं
सुहाना सफ़र.ஓ ஆஸ்மான் ஜுக் ரஹா ஹை ஜமீ(ன்) பர் யே மிலன் ஹம்னே தேகா யஹீ(ன்) பர் மேரீ துனியா மேரீ ஸப்னே மிலேங்கே ஷாயத் யஹீ ஸுஹானா ஸஃபர்.……    அதோபார்- நீல வானம் பூமியைத் தொடுகிறது! இந்த சந்திப்பை நான் இங்கு முன்பே பார்த்திருக்கிறேனோ? என் உலகம், என் கனவு-இங்கேயே நிறைவுபெறும்! இனிய பயணம், அருமையான பருவம்….  

Song: Suhana safar Film: Madhumati 1958 Lyrics: Shailendra Music: Salil Chaudhury Singer: Mukesh  

இங்கே ஹீரோ பார்ப்பது வானம்-பூமியின் சங்கமம். இது கடந்தகால-நிகழ்கால, நிகழ்கால-எதிர்கால சங்கமங்களின் அறிகுறியாக நிற்கிறது (என்பது கதைப்போக்கிலிருந்து நாம் பின்னர் தெரிந்துகொள்கிறோம்.) நாம் இந்தப் பாடலில் இசை-கவிதை-குரல் ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தை அனுபவிக்கிறோம்! இந்தப் படத்தில் தலத் மஹ்மூத் பாடுவதாக இருந்தது. முகேஷ் அப்போது கஷ்டத்திலிருந்தார்,அதனால் தன் நண்பர் முகேஷுக்கு  விட்டுக்கொடுத்தார் தலத்! இருவருமே இசைஞர் சலீல் சவுத்ரிக்கு உகந்தவர்கள்! யே கௌன் ஹன்ஸ்தாஹை ஃபூலோ(ன்) மே சுப் கர்: ‘ மலரினூடு நீயே இருத்தியால் மலர் பறிக்கவும் மனம் நண்ணேன்” என்ற தாயுமானவரின் வாக்கு நினைவுவருகிறது! இன்று இத்தகைய இயற்கைக் காட்சிகளை ரசிக்க நமக்கு நேரம் இருக்கிறதா?  

When the green wood laughs with the voice of joy,
And the dimpling stream runs laughing by;
When the air does laugh with our merry wit,
And the green hill laughs with the noise of it;
When the meadows laugh with lively green,
And the grasshopper laughs in the merry scene;                                                                     –  William Blake: Laughing Song,1794.   ஹம் ஹை ராஹி ப்யார் கே    हम हैं राही प्यार के, हमसे कुछ ना बोलिए जो भी प्यार से मिला, हम उसी के हो लिए ஹம் ஹை ராஹி ப்யார் கே, ஹம் ஸே குச் ந போலியே ஜோ பீ ப்யார் ஸே மிலா, ஹம் உஸீ கே ஹோ லியே   நான் அன்பின் பாதையில் போகிறேன், என்னை எதுவும் சொல்லாதீர்கள்! என்னிடம் யார் அன்புடன் வருகிறார்களோ, நான் அவர்களுக்கு அடிமை!

दर्द भी हमें कुबूल, चैन भी हमें कुबूल
हमने हर तरह के फूल, हार में पिरो लिए
जो भी प्यार…


தர்த் பீ ஹமே கபூல், சைன் பீ ஹமே கபூல் ஹம்னே ஹர் தரஹ் கே ஃபூல், ஹார் மே பிரோ லியே ஜோ பீ ப்யார் ஸே மிலா…   கஷ்டம் வந்தாலும் சரி, சுகம் வந்தாலும் சரி- எனக்கு சம்மதமே!

எல்லா வகை மலர்களையும் நான் மாலையில் தொடுத்து விடுவேன்!

धूप थी नसीब में, धूप में(तो) लिया है दम
चांदनी मिली तो हम, चांदनी में सो लिए
जो भी प्यार…


தூப் தீ நஸீப் மே, தோ தூப் மே லியா ஹை தம் சாந்த்னீ மிலீ தோ ஹம், சாந்த்னீ மே ஸோ லியே ஜோ பி ப்யார் ஸே…   வெய்யிலில் தான் இருக்கவேண்டுமென்று .. எழுதியிருந்தால்,  அங்கேயே பிழைத்துக் கொண்டேன் நிலவொளி கிடைத்தாலோ அதிலேயே தூங்கிவிட்டேன்.

दिल पे आसरा किये हम तो बस यूँ ही जिये
इक कदम पे हंस लिए, इक कदम पे रो लिए
जो भी प्यार…தில் பே ஆஸ்ரா கியே, ஹம் தோ பஸ் யூ(ன்) ஹீ ஜீயே இக் கதம் பே ஹஸ் லியே, இக் கதம் பே ரோ லியே ஜோ பீ ப்யார் ஸே….   மனதில் நம்பிக்கை வைத்து, இயல்பாக வாழ்ந்து வருகிறேன் ஒரு அடியில் சிரிப்பு, ஒரு அடியில் அழுகை- அதனால் என்ன?…

राह में पड़े हैं हम, कब से आप की क़सम
देखिये तो कम से कम, बोलिए न बोलिए
जो भी प्यार…


ராஹ் மே கடே ஹை ஹம், கப் ஸே ஆப் கீ கஸம் தேகியே  தோ கம் ஸே கம், போலியே ந போலியே ஜோ பீ ப்யார் ஸே மிலா…   எவ்வளவு நேரமாக உங்கள் வழியில் காத்திருக்கிறேன்! உங்கள் மீது ஆணை! பேசினால் பேசுங்கள், இல்லையென்றால் வேண்டாம்-   குறைந்தது பார்க்கவாகிலும் கூடாதா?  

Song: Hum hai rahi pyar ke  Film: Nau Do Gyarah 1957 Lyricist: Majrooh Sultanpuri Music: S.D.Burman Singer: Kishore Kumar  

எத்தனை இனிய பாடல்! கிஷோர் குமாரின் முந்தைய ஆண்டுகளில் பாடிய அருமையான பாடல்! வாழ்க்கைத் தந்துவங்களைச் சொல்லும் பாடல். இயற்கையிலிருந்து எடுத்த சொற்கள்; ஹர் தரஹ் கீ ஃபூல், தூப், சாந்த்னீ- ஆகுபெயராக நின்று எல்லவித அனுபவங்கள், கஷ்டம், சுகம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் வருவதை ஏற்றுக்கொள், சந்தோஷமாயிரு, அன்புடன் பழகு என்ற இந்த மன நிலையைக் கொண்டவனாக இங்கு ஹீரோவை வருணிக்கிறார். சென்ற அத்தியாயத்தில், இரண்டு பாடல்களில் பெண்களின் கண்ணோட்டத்தைப் பார்த்தோம். இங்கு ஆண்களின் மனஓட்டத்தைப் பார்க்கிறோம். அவர்கள் குதிரையிலும் சைக்கிளிலும் போனார்கள். இங்கு ஒருவர்  இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே நடக்கிறார் ; ஒருவர் சிறிய டிரக்கில் போகிறார். ஆனால் அதே மன நிலைதான்!


Beauty, Love, Hope- the beauty around inspires hope of Love!  Or, may we say, the hope of Love induces one to notice the beauty around! The same romantic mood!   Thou wilt not languish here, O Fried, for whom I travel in these dim uncertain ways Thou wilt assist me as a Pilgrim gone In quest of highest Truth.                                                      -Wordsworth
                                                             ****** **

இந்தனம் என்றால் விறகு என்று பொருள்! (சுந்தரம் பிள்ளையின் பிரயோகம் இது. “வந்தவிக் கயவர் நும் சிந்தையிற் கொளுத்திய வெந்தழற் கவரே இந்தனம் ஆகுக” என்பார் அவர்)