
ஹிந்தி படப் பாடல்கள் – 68 – ஒரு ராகத்தில் இரு மலர்கள் (Post N0.8176) WRITTEN BY R. NANJAPPA Post No. 8176 Date uploaded in London – – – 15 June 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. ஹிந்தி படப் பாடல்கள் – 68 – ஒரு ராகத்தில் இரு மலர்கள் – திலக் காமோத் – 1 R. Nanjappa திலக் காமோத் ராகம் நமது ராகங்கள் பல சூழ்நிலைகளுக்குத் தகுந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவை. அதனால் ஒரே ராகத்தின் மீது பல மெட்டுக்களை அமைக்க முடியும். அப்படி திலக் காமோத் ராகத்தின் அடிப்படையில் அமைந்த இரு பாடல்களைப் பார்க்கலாம். ஹியா ஜரத் ரஹத் தின் ரைன் hiyaa jarat rahat din rain ho raamaa jarat rahat din rain hiyaa jarat rahat din rain ho raamaa jarat rahat din rain ambvaa ki daali pe koyal bole ambvaa ki daali pe koyal bole tanik na aavat chain O raamaa jarat rahat din rain baswaari mein madhur sur baaje baswaari mein madhur sur baaje birhi papiharaa bolan laage madhure madhur madhu bain O raamaa jarat rahat din rai aas adhoori pyaasi umariyaa chaaye andheraa sooni dagariyaa darat jiyaa bechain darat jiyaa bechain O raamaa jarat rahat din rain hiya jarat rahat din rain O raamma jarat rahat din rain ஓ ராமா, கண்கள் இரவு பகல் மூடாமல் விழித்திருக்கின்றன மூடாமல் விழித்திருக்கின்றன குழலில் இனிமையான ஸ்வரம் எழுகிறது மரத்தின் கிளைகளில் குயில் பாடுகிறது (ஆனாலும்) சிறிது கூட நிம்மதி இல்லை, ஓ ராமா! கண்கள் விழித்திருக்கின்றன பபிஹரா இனிய குரலில் பாடத்தொடங்கி விட்டது மதுரக் குரலில் பாடுகிறது ஓ ராமா, கண்கள் மூடவில்லை! ஆசைகள் நிறைவேறாமல் இருக்கின்றன ஏக்கம் நிறைந்தே வயது கழிந்துவிட்டது! எங்கும் இருள் பரவுகிறது வெற்று வழியாகி விட்டது மனதில் கவலை, நிம்மதி இல்லை கண்கள் இரவு பகல் மூடாமல் இருக்கின்றன ஓ ராமா, கண்கள் மூடவில்லை Song: Jarat rahat din rain Film: Godaan 1963 Lyrics: Anjaan Music: Pandit Ravishankar Singer: Mukesh Raag: Tilak Kamod இது போஜ்புரி மொழியில் எழுதப்பட்ட பாடல். (இது உ.பி பகுதியில் பரவலாகப் பேசப்படும் பிராந்திய மொழி. இதை அரசியல் ஹிந்தி அல்லது ஹிந்தி அரசியல் கபளீகரம் செய்து வருகிறது,] ‘கோதான்’, முன்ஷி பிரேம்சந்த் எழுதிய (1936) புகழ்பெற்ற கதை. இப்படம் அதன் மீது எடுக்கப்பட்டது. இது ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கையை விளக்குவது. இந்த பாட்டு வரும் இடம் மிக நன்றாக கிராமத்துச் சூழலை விளக்குவதாகத் தொடங்கும். ஆனால் நம் விவசாயிக்கு பல கவலைகள்-விவரித்துச் சொல்ல இயலவில்லை- கண்கள் இரவு பகல் மூடவில்லை என்கிறான். கடைசியில் வெளிப்படையாகவே சொல்கிறான்: தரத் ஜியா பேசைன்- மனதில் நிம்மதி இல்லை. இந்தப் பாட்டை முகேஷ் பாடியிருக்கும் விதம் மனதைக் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது; பாட்டின் கருத்தும் முகேஷின் குரலும் அப்படி ஒத்துப் போகின்றன! இதற்கு மெட்டமைத்த ஸிதார் மாஸ்டர் பண்டிட் ரவிஷங்கர் ஒரு ஜீனியஸ்! சரியான ராக பாவத்தைக் கொண்டுவந்து விட்டார்! இனி இதே ராகத்தில் இதே முகேஷ் பாடிய சற்று வித்தியாசமான பாடலைப் பார்க்கலாம். முஜே மில்கயீ ஹை mujhe mil gayi hai mohabbat ki manzil koi poochh le yeh mere hamsafar se mujhe mil gayi hai nazar se nazar ka bada faasla thhaa magar aaj dil ke kareeb ho gaye ho tujhe maine dekha dil ki nazar se meri bhi nazar mein haseen ho gaye ho haseen ho gaye ho mujhe mil gayi hai mere haath mein yoon tera haath aaya ke gulshan mein jaise bahaar aa gayi ho magar haath se yoon khincha haath tera main samjha kali koyi sharma gayi ho sharma gayi ho mujhe mil gayi hai mohabbat ki man jise sunkar dil ki huyi tez dhadkan mujhe aaj aisi kahani mili hai nigaho se chahe n nigahe mili na mohabbat ki lekin nishani mili hai mujhe mil gayi hai mujhe milgayi hai mohabbat ki manzil இன்று எனக்கு காதலின் லட்சியம் எட்டிவிட்டது என் துணையிடம் கேட்டுப் பார்க்கட்டும்! காதலின் லட்சியம் எட்டி விட்டது! கண்களுக்கிடையே அதிக இடைவெளி இருந்தது ஆனால் இன்று இதயங்கள் நெருங்கி விட்டன இதயத்தின் வழியாக உன்னை நான் பார்த்தேன் என் கண்களிலும் அழகும் இனிமையும் நிறைந்துவிட்டன! எனக்குக் காதலின் லட்சியம் கிடைத்து விட்டது! என் கைகளில் உன் கை பட்டதும் சோலையில் வசந்தம் வந்தது போலாகியது! என் கைகளிலிருந்து உன் கை விலகினால், ஏதோ மலருக்கு வெட்கம் வந்தது என்று நினைப்பேன்! எனக்கு அன்பின் லட்சியம் கிடைத்துவிட்டது! கேட்டதும் மனது சந்தோஷத்தில் படபடக்கும்-அப்படிப்பட கதை இன்று கிடைத்துவிட்டது! முகத்தோடு முகம் சேரவில்லை- ஆனால் அன்பின் அடையாளம் கிடைத்துவிட்டது! எனக்கு அன்பின் லட்சியம் கிடைத்துவிட்டது! Song: Mujhe Milgayi hai Film: First Love 1961 Lyricist: Gulshan Bawra Music ; Dattaram Singer: Mukesh Raag: Tilak Kamod YouTube link: audio; https://www.youtube.com/watch?v=LaPCvtSG3os&feature=emb_logo https://www.youtube.com/watch?v=oDwx3In6h1I இது வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போன படம்! B grade என்று கூடச் சொல்லமுடியாது. ஆனால் தத்தாராமின் இனிய இசையைக் கொண்டது. படம் படுத்துவிட்டதால் இசையை பலரும் அறியவில்லை. திலக் காமோத் ராகத்தையே விளக்கும் பாட்டு! அருமையான கவிதை எழுதியிருக்கிறார் குல்ஷன் பாவ்ரா! For a classical presentation of this Raga, listen to this recording of Shuba Mudgal: https://www.youtube.com/watch?v=kpLjoa_6D6c Then we will realise how great our old Music directors were who gave the essence of the raga in less than four minutes in songs that we remember still after 60 years! Virus-free. www.avast.com Attachments area Preview YouTube video mujeh mil gayi hai |