ஹிந்தி படப் பாடல்கள் – 71 – ஒரு ராகம்-இரு மலர்கள் (Post No.8197)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8197

Date uploaded in London – – – 18 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 71 – ஒரு ராகம்-இரு மலர்கள் – 4 – தர்பாரி கானடா!

R. Nanjappa

தர்பாரி கானடா!

தர்பாரி கானடா ராகம் நம்மிடமிருந்து ஹிந்துஸ்தானி இசைக்குப் போனது. அக்பர் சபையில் இதை தான்ஸேன் அறிமுகம் செய்துவைத்தார். அதனால் இது “தர்பாரி” என்ற அடைமொழியுடன் வழங்கப்படுகிறது.. மிக கம்பீரமான ஆழ்ந்த ராகம். இரவில் பாடவேண்டியதெனச் சொல்வார்கள், இந்த ராகம் பல “மூட்” களைப் பிரதிபலிக்க உதவும். அவற்றில் இரண்டு பார்ப்போம்.  

கித்னா ஹஸீன் ஹை மௌஸம்   कितना हसीन है मौसम, कितना हसीन सफ़र है
साथी है खुबसूरत, ये मौसम को भी खबर है
मिलती नहीं है मंज़िल, राही जो हो अकेला
दो हो तो फिर जहाँ भी, चाहे लगा लो मेला
दिल मिल गये तो फिर क्या, जंगल भी एक घर है
ना जाने ये हवायें क्या कहना चाहती हैं
पंछी तेरी सदायें क्या कहना चाहती हैं
कुछ तो है आज जिस का हर चीज़ पर असर है
  कुदरत ये कह रही है, आ दिल से दिल मिला ले
उल्फ़त से आग ले कर, दिल का दिया जला ले
सच्ची अगर लगन है, फिर किस का तुझको डर है  


கித்னா ஹஸீ(ன்) ஹை மௌஸம், கித்னா ஹஸீன் ஸஃபர் ஹை ஸாதீ ஹை கூப் ஸூரத்  யே மௌஸம் கோ  பீ கபர் ஹை   எத்தனை அழகான சூழல், எத்தனை இனிய பயணம்’ உடன் இருப்பது நல்ல அழகி என்று இயற்கைக்கும் தெரியும்!   மில்தீ நஹீ ஹை மன்ஃஜில், ராஹீ ஜோ ஹோ அகேலா தோ ஹோ தோ ஃபிர் ஜஹா(ன்) பீ சாஹே லகாலோ மேலா தில் மில் கயே தோ ஃபிர் க்யா, ஜங்கல் பீ ஏக் கர் ஹை   தனியாக பயணிப்பவருக்கு அடையவேண்டிய இடம் கிடைப்பதில்லை! இருவராக இருந்தால் விரும்பிய இடத்தில் விழா கொண்டாடலாம்! மனதிற்குப் பிடித்து விட்டால் பின் என்ன, காடும் ஒரு வீடுதான்!  

நா ஜானே யே ஹவாயே(ன்) க்யா கஹனா சாஹதீ ஹை பஞ்சீ தேரீ ஸதாயே(ன்) க்யா கஹனா சாஹதீ ஹை குச் தோ ஹை ஆஜ்  ஜிஸ் கா ஹர் சீஃஜ் பர் அஸர் ஹை

  இந்தத் தென்றல் காற்று என்ன சொல்ல விரும்புகிறது என்று தெரியவில்லை! இந்தப் பறவைகளின் எதிரொலி என்ன சொல்ல விழைகிறது என்று தெரியவில்லை! இன்று ஏதோ மாயம் தான், ஒவொன்றிலும் அதன் தாக்கம் இருக்கிறது!   குத்ரத் யே கஹ்ரஹீ ஹை, ஆ தில் ஸே தில் மிலாலே உல்ஃபத் ஸே ஆக் லேகர், தில் கா தியா ஜலா லே ஸச்சீ அகர் லகன் ஹை, ஃபிர் கிஸ்கா துஜ் கோ டர் ஹை   மனதுடன் மனது இணையட்டும் என்று இயற்கை சொல்கிறது! அன்பு என்ற நெருப்பிலிருந்து இதயம் என்ற விளக்கை ஏற்று! அன்பு உண்மையாக இருந்தால் பின் எதற்கு அஞ்சவேண்டும்?  

Song: Kitna haseen hai mausam  Film: Azad 1955 Lyrics: Rajinder Krishan Music: C.Ramchandra Singers: C.Ramchandra & Lata Mangeshkar YouTube link:  https://www.youtube.com/watch?v=jaZnV-zzl0o    

தர்பாரி கானடா ராகத்தில் இத்தனை அழகிய டூயட்! சி. ராம்சந்த்ராவின் மேஜிக்! இந்தப் படத்தின் இசை பூராவுமே ஒரு மேஜிக் தான்! இது தமிழ் மலைக்கள்ளன் படத்தின் ஹிந்தி வடிவம். இதற்கு இசையமைக்க தயாரிப்பாளர்  நௌஷத்தை அணுகினார். ஒரு மாதத்திற்குள் இசை தயாராகவேண்டுமென்றார். நௌஷத் அது தன் வழியல்ல என்று சொல்லிவிட்டார். வேறு சிலரை அணுகிய பின், சி.ராம்சந்த்ராவிடம் வந்தார். அவர் சவாலை ஏற்றுகொண்டதுடன் சிறந்த இசையமைத்து பாட்டுகள் பிரபலமாயின. இந்தப் பாட்டில் இன்னொரு விசேஷம். இந்த மெட்டு தலத் மெஹ்மூதுக்காக அமைக்கப்பட்டது! ஆனால் தலத்தால் அந்த சமயத்தில் பாடல் பதிவிற்கு வரமுடியவில்லை- சி.ராம்சந்த்ராவே பாடினார்! பாட்டும் சிறப்பாக அமைந்துவிட்டது! குரலும் தலத் குரல் போலவே இருக்கிறது! இது தலத் குரல் என்றே பலர் நினைத்தார்கள்! நம் ஷைலேந்த்ராவே அப்படித்தான் நினைத்து 100 ரூபாய் பெட்டும் கட்டித் தோற்றுப்போனார்!    இப்பொழுது இன்னொரு பாட்டு பார்ப்போம்.  

அப் கஹா(ன்) ஜாயே(ன்) ஹம்   अब कहाँ जाएँ हम, ये बता ऐ ज़मीं
इस जहां में तो कोई हमारा नहीं
अपने साये से भी लोग डरने लगे
अब किसी को किसी पर भरोसा नहीं
अब कहाँ जाएँ हम…

हम घर-घर जाते हैं, ये दिल दिखलाते हैं
पर ये दुनिया वाले, हमको ठुकराते हैं
रास्ते मिट गए, मंज़िलें खो गईं
अब किसी को किसी पर भरोसा नहीं
अब कहाँ जाएँ हम…


नफ़रत है निगाहों में, वहशत है निगाहों में
ये कैसा ज़हर फैला, दुनिया की हवाओं में
प्यार की बस्तियाँ, ख़ाक होने लगीं
अब किसी को किसी पर भरोसा नहीं
अब कहाँ जाएँ हम…

हर साँस है मुश्किल की, हर जान है इक मोती
बाज़ार में पर इनकी, गिनती ही नहीं होती
ज़िन्दगी की यहाँ, कोई कीमत नहीं
अब किसी को किसी पर भरोसा नहीं
ये बता ऐ ज़मीं…  
 

அப் கஹா(ன்) ஜாயே ஹம், யே பதா ஏ ஃஜமீன் இஸ் ஜஹா(ன்) மே தோ கோயீ ஹமாரா நஹீ அப்னே ஸாயே ஸே பீ லோக் டர் நே லகே அப் கிஸீ கோ கிஸீ பர் பரோஸா நஹீ அப் கஹா(ன்) ஜாயே (ன்) ஹம்.….   இப்பொழுது நான் எங்கே போவது? பூமியே, நீயே சொல்! இந்த உலகில் எனக்கென்று யாருமில்லை மக்கள் தங்கள் நிழலைக்கண்டே பயப்படுகிறார்கள் இப்போது யாருக்கும் யார்மீதும் நம்பிக்கை இல்லை! இப்பொழுது நான் எங்கு போவேன்?   ஹம் கர் கர் ஜாதே ஹை(ன்) யே தில் திக்லாதே ஹை(ன்) பர்  யே துனியாவாலே ஹம் கோ டுக்ராதே ஹை(ன்) ராஸ்தே மிட் கயே, மன்ஃஜிலே(ன்) கோ கயீ அப் கிஸீ கோ கிஸீ பர் பரோஸா நஹீ அப் கஹா(ன்) ஜாயே ஹம்…   நான் ஒவ்வொரு வீட்டிற்கும் போகிறேன்,மனதாரப் பழகுகிறேன் ஆனால் இந்த உலகத்தவர் என்னை ஏற்றுக்கொள்வதில்லை வழி அழிந்துவிட்டது, இலக்கு மறைந்துவிட்டது இப்பொழுது எவருக்கும் எவரிடத்திலும் நம்பிக்கை இல்லை! நான் எங்கு போவது!   நஃப்ரத் ஹை நிகாஹோ(ன்) மே, பஹ்ஶத் ஹை நிகாஹோ(ன்) மே யே கைஸா ஃஜ ஹர் ஃபைலா, துனியா கீ ஹவாவோ(ன்) மே ப்யார் கீ பஸ்தியா((ன்) காக் ஹோனே லகீ அப் கிஸீ கோ கிஸீ பர் பரோஸா நஹீ அப் கஹா(ன்) ஜாயே(ன்) ஹம்.   ஒவ்வொரு முகத்திலும் வெறுப்பு, ஒவ்வொரு முகத்திலும் மிருக வெறி தெரிகிறது! உலகத்தின் நிலைமையில் எந்த விதமான விஷம் பரவிவிட்டது! மக்கள் அன்பாக வாழ்ந்த இடங்கள் சாம்பலாகிப் போகின்றன இப்பொழுது யாருக்கும் யாரிடமும் நம்பிக்கை இல்லை!   ஹர் ஸான்ஸ் ஹை முஷ்கில் கீ, ஹர் ஜான் ஹை ஏக் மோதீ பாஃஜார் மே பர் இன் கீ கின்தீ நஹீ ஹோதீ.. ஜிந்தகீ கீ யஹா(ன்) கோயீ கீமத் நஹீ அப் கிஸீ கோ கிஸீ பர் பரோஸா நஹீ அப் கஹா(ன்) ஜாயே(ன்)  ஹம்   ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்கிறார்கள் ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது! ஆனல் உலகமாகிய சந்தையில் இவற்றை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை உயிருக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை இப்பொழுது எவருக்கும் எவர் மீதும் நம்பிக்கை இல்லை! நான் எங்கு போவேன்….  


Song: Ab kahan jaayen hum Film: Ujala 1959 Lyrics: Shailendra Music: Shankar Jaikishan  Singer: Manna Dey YouTube link:  audio https://www.youtube.com/watch?v=bkXry1DhTIs  Video :          https://www.youtube.com/watch?v=FwRT_MfsPUY    தர்பாரி

கானடாவின் முழு உருவை விளக்கும் பாடல்! அருமையான  ஷங்கர் ஜெய்கிஷன் மெட்டிற்குத் தகுந்த அருமையான கவிதையை எழுதிவிட்டார் ஷைலேந்த்ரா. மன்னா டே அருமையாகப் பாடியிருக்கிறார்.             

Virus-free. www.avast.com Attachments area Preview YouTube video Kitna Haseen Hai Mausam – Azaad Songs – Dilip Kumar – Meena Kumari – Lata Mangeshkar – Filmigaane Kitna Haseen Hai Mausam – Azaad Songs – Dilip Kumar – Meena Kumari – Lata Mangeshkar – Filmigaane Preview YouTube video Ab Kahan Jayen Hum (From “Ujala”) Ab Kahan Jayen Hum (From “Ujala”) Preview YouTube video Ab Kahan Jaye Hum | Manna Dey | Ujala | Shammi Kapoor | Shankar Jaikishan Ab Kahan Jaye Hum | Manna Dey | Ujala | Shammi Kapoor | Shankar Jaikishan