ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***