ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2 (Post No.5327)

Written by S Nagarajan

 

Date: 16 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5327

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2

 

ச.நாகராஜன்

 

4

கிறிஸ்தவ மதம் எப்படியெல்லாம் பரப்பப்பட்டது என்பதை முதலில் அறிய வேண்டும். அதே சமயம் ஹிந்து மதம் ஒருநாளும் ‘மதமாற்றும் முயற்சியில்’ எந்த நாளும் எந்த தேசத்திலும் எவராலும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இங்கா இனத்தினர் மீது திட்டமிட்ட பிரசாரம் ஒன்று 1524-25இல் மதமாற்றும் பாதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபிரான்ஸிஸ்கோ பிஜாரோ (Francisco Pizzaro) இதற்கென ஆன்மாக்களை அறுவடை செய்யவும் அதே சமயம் முடிந்த மட்டில் தங்கத்தையும் கூடச் சேர்த்து அறுவடை செய்யவும் புறப்பட்டார்.

இதில் ஒரு முக்கூட்டு அணி  ஒன்று சேர்ந்தது.

ஃபாதர் ஃபெர்னாண்டோ டி ல்யுக் (Father Fernando de-lugue) என்பவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் பிஜாரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அவரது பயணத்திற்கு ஆதரவு தருவேன் என்றும், வளைகுடாவிற்குத் தெற்கே பெரு சாம்ராஜ்யத்தில் உள்ள மாகாணங்களில் இடம் பார்த்து பிடித்து அவர்களை தமக்கென ஆக்குவது என்றும் ஜெயித்த இடங்களை பாதிக்குப் பாதியாக பங்கு போட்டுக் கொள்வது என்றும்  ஃபெர்னாண்டோ ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதில் உதவ முன்வந்த இன்னொரு பாதிரியார் ஃபாதர் வெல்வர்ட் ((Father Velverde)  கிறிஸ்தவத்திற்கென ஆன்மாக்களை அறுவடை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

திட்டப்படி தாங்கள் நுழைந்த இடங்களில் எல்லாம் கொள்ளையடித்தனர். பூர்வ குடியினர் அனைவரையும் கொன்று குவித்தனர். என்றாலும் கூட மிக எளிமையாகவும் அஹிம்சை வழியில் இருந்ததாலும், பரந்த மனதுடன் இருந்த இங்கா அரசு அவர்களை மன்னித்தது. தங்களது இனத்தின் மீது இங்கா அரசு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

 

இங்கா சக்கரவர்த்தி அனுமதியின்றி அரசவையில் நுழைந்த போதிலும் கூட ‘அன்னியர்களை’ வரவேற்றார். அத்தோடு மட்டுமன்றி அவர்களுக்குச் சில பரிசுகளையும் அளித்தார்.

இங்கா சக்கரவர்த்தியிடம் பிஜாரோ தாங்கள் கடல் கடந்த ஒரு நாட்டிலிருந்து வ்ந்திருப்பதாகவும் இங்கா நாட்டின் எதிரிகளைச் சமாளிக்க உதவி புரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Holy Kailash is in China now!

 

1532ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி பிஜாரோவுக்கும் சக்கரவர்த்தி அடாஹுவால்பாவுக்கும் (Atahualpa) s இடையே ஒரு சந்திப்பு கஜமார்க்கா (Cajamarca) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஸ்பெயினில் இருக்கக்கூடிய எந்த அரங்கத்தையும் விட மும்மடங்கு பெரிதான ஒரு அரங்கத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 

சக்கரவர்த்தி தனது சபையினருடன் நிராயுதபாணியாக அங்கு நுழைந்தார். ஆனால் பிஜாரோவோ ஆயுதம் தாங்கிய தனது வீரர்களை அங்கே சுற்றியிருந்த வீடுகளில் ஒளித்து வைத்திருந்தார்.

அரங்கத்திற்குள் நுழைந்த சக்கரவர்த்தி அங்கே யாரையும் காணாமல் வந்திருந்த அன்னியர்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்.

 

அப்போது வெல்வெர்ட் பாதிரியார் ஒரு கையில் சிலுவையுடனும் இன்னொரு கையில் பைபிளுடனும் உள்ளே நுழைந்தார். வந்தவர் சக்கரவர்த்தியிடம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக அறிவித்தார்.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை விவரித்த வெல்வெர்ட் சக்கரவர்த்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஸ்பெயின் அரசருக்கு கீழ்ப்படிந்த அரசராக இருக்குமாறு கூறினார்.

அடாஹுவால்பா தான் எந்த அரசருக்கும் கீழ்ப்படிந்து இருக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

“உங்கள் மன்னர் பெரிய மன்னராக இருக்கலாம். இப்படி கடல் கடந்து உங்களை அனுப்பி இருப்பதால் அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரை எனது சகோதரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். மத நம்பிக்கையைப் பொறுத்த வரை அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது கிறிஸ்து அவரால் உருவாக்கப்பட்டவராலேயே சாகடிக்கப்பட்டார். ஆனால் எங்கள் கடவுளோ சொர்க்கத்தில் இருந்து கொண்டு குழந்தைகளாகிய எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அடாஹுவால்பா.

 

இதைக் கேட்டவுடன் வெல்வெர்ட், பிஜாரோ ஒளிந்திருந்த இடத்திற்குச் சென்று, “இந்த நாய்க்காக நாம் நமது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

உடனே பிஜாரோ சமிக்ஞையைக் காட்ட ஒளிந்திருந்த வீரர்கள் அங்கு நிராயுதபாணியாக இருந்த அனைவரையும் கொன்று குவித்து, அடாஹுவால்பாவைச் சிறைக் கைதியாகப் பிடித்தனர்.

 

உடனே அடாஹுவால்பா அவரிடம் தன்னை விடுவித்தால் அவரது அறை முழுவதையும் தங்கக் கட்டிகளால் நிரப்புவதாகக் கூறினார்.

அப்படியே பிஜாரோ அறை முழுவதும் தங்கக் கட்டிகளால் நிரப்பப்பட்டது.

 

என்ற போதிலும் அடாஹுவால்பா விடுவிக்கப்படவில்லை.

மற்றவர்களுடன் இணைந்து கிறிஸ்தவ மிஷனரி  கிறிஸ்தவ மதத்தைத் தழுவாததன் காரணமாக அடாஹுவால்பாவை உயிருடன் எரிப்பது என்று கையெழுத்திட்டது.

அடாஹுவால்பா மிகப் பெரிய சக்கரவர்த்திக்கே உரித்தான பண்புடன் நடந்த அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

 

சங்கிலியால் கட்டப்பட்டு சிதையில் அடாஹுவால்பா கிடத்தப்பட்டார்.

வெல்வெர்ட் பாதிரியார், கொள்ளையடிக்கப்பட்டதில் சம பங்கு கேட்டவர், இறுதி முயற்சியாக அடாஹுவால்பாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற அவரை கிறிஸ்தவ மதம் தழுவுமாறு கேட்டார்.

 

மதம் மாறுமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது மன்னர் திடமாக அதை மறுத்து விட்டார்.

மதம் மாறினால் அவர் உயிருடன் எரிக்கப்பட மாட்டார் என்று வெல்வெர்ட் மீண்டும் கூறவே அந்த இக்கட்டான நிலையில் அடாஹுவால்பா மதம் மாற ஒப்புக் கொண்டார்.

 

கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன வார்த்தையை மீறவில்லை.

அடாஹுவால்பா உயிருடன் எரிக்கப்படவில்லை. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

இது தான் முதல் அமெரிக்க கிறிஸ்தவரின் கதை.

  • சோகக்கதை!

வரலாறு முழுவதும் எடுத்துப் பார்த்தால் அடாஹுவால்பா பிஜாரோவுக்குக் கொடுத்த பிணைத் தொகை தான் மிகப் பெரியது என்பது கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.

இந்தப் பிணைத் தொகையை இன்றைய பணமதிப்பில் மாற்றிப் பார்த்தால் அது 1700 லட்சம் டாலர் ஆகும்.

(இந்திய ரூபாய் மதிப்பில் 113900 லட்சம் ரூபாய் ஆகும்!)

இப்படித்தான் தென் அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.

 

அற்புதமான தங்கச் சிலைகள் உருக்கப்பட்டன. அவற்றை கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பினர். இங்கா நாடு முற்றிலுமாக காலியானது. செல்வத்தை இழந்தது.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசு தனது கொள்ளைக்காரர்களை அனுப்பி கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது.

 

ஃபிரான்ஸில் ட்ரேக் (Francis Drake), ஹாகின்ஸ் (Hawkins) போன்றவர்கள் இதற்காக அனுப்பப்பட்டனர்.

இந்த கொள்ளைக்காரர்களைத் தான் இன்றைய பிரிட்டிஷ் பள்ளிக் குழந்தைகள் பெரும் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

 

அமெரிக்காவின் பூர்வ குடியினர் இன்று ஏழ்மையில் வாடுகின்றனர். 98 சதவிகிதம் நிலப்பரப்பு சில குடும்பங்களைச் சேர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலப் பிரபுக்கள் ஸ்பானிஷ் கொள்ளைக்காரர்களின் வமிசாவளியினர். மிகுந்த துயரமான நினைவுகளுடனும் ஏழ்மையுடனும் தங்கள் சொந்த மொழியைப் பேசிக் கொண்டு தங்கள் நம்பிக்கை வழியில் நடக்கிறார்கள் ஒரிஜினல் பூர்வ குடியினர்.

 

 

இவர்களுக்கு துயரத்திலிருந்து என்று விடுதலை கிடைக்கும் என்பது தெரியவில்லை!

காலம் அவர்களுக்குக் கை கொடுத்து அவர்களை உயர்த்துமா?

– தொடரும்

***