பிரார்த்தனையால் பலன் உண்டா? (Post No 2714)

beemasingan5

Written by london swaminathan

Date: 11 April, 2016

 

Post No. 2714

 

Time uploaded in London :–  9-22 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய சக்ரவர்த்தி பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டார்; படுத்தபடுக்கையாய்க் கிடந்தார். அரண்மனை வைத்தியர்கள் வந்து சிகிச்சை செய்தும் உடல் நலம் தேறவில்லை. அரசவை முதியோர்களைக் கலந்தாலோசித்தார். அவர்களில் சிலர், உங்களிடமிருக்கும் மிக உயர்ந்த பொருளை இறைவனுக்குக் காணிக்கையாக்கினால், உங்கள் மகன் உயிர் பிழைப்பார் என்றனர்.

 

உடனே பாபர் தனது கஜானாவிலுள்ள மிக உயர்ந்த பொருளை எடுத்து வா என்று நிதியமைச்சருக்கு உத்தரவிட்டார். அவர் ஒரு பெரிய பை நிறைய வைரக் கற்களைக் கொண்டுவந்து, அதில் மிகப்பெரிய , நன்கு பட்டைதீட்டப்பட்ட, ஜொலிக்கும் வைரத்தைக் காட்டி, இதுதான் மிக விலை உயர்ந்த பொருள் என்றார். (படத்தில் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களைக் காட்டுவதைப் பார்க்கலாம்). அந்த வைரத்தை விட, தன்னுடைய உயிர் மதிப்புமிக்கதா? என்று கேட்டார். எல்லா அமைச்சர்களும், மன்னர் மன்னவா! அதில் சந்தேகம் என்ன? என்று பதிலிறுத்தார்கள்.

 

உடனே பாபர், ஒரு கம்பளத்தை விரித்தார்; முழந்தாளிட்டார். இறைவா! என்னுடைய இன்னுயிரை எடுத்துக் கொண்டு, என் மகனை உயிர் பிழைக்க வை என்று வேண்டினார். ஹுமாயூன் படுத்திருந்த படுக்கையை மூன்று முறை வலம் வந்தார். அவருடைய நோய் தனக்கு வந்துவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்தார்.

 

அவர் சொன்னபடியே பாபருக்கும் நோயும் வந்தது. அவர் சில நாட்களில் இறந்தும் போனார். அவருடைய மகன் ஹுமாயூன் உயிர்பிழைத்துக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

 

எல்லா மதங்களிலும் பிரார்த்தனைக்கு மதிப்பு உண்டு. அதனால்தான் பிரார்த்தனைக்காகக் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று கட்டி வைத்திருக்கின்றனர்.

 

“நம்பினார் கெடுவதில்லை; இது நான்குமறைத் தீர்ப்பு” – என்று மஹா கவி பாரதி பாடியதும் இதை உறுதி செய்யும்.

-சுபம்-

 

 

மூன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639)

3 NAZIKAI THRONE (2)

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2639

 

Time uploaded in London :–  6-15 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

HUMAYUN BABAR (2)

மொகலாய அரசர்களுள் ஹூமாயூன் இரண்டாவது அரசராவார். ஹுமாயூன் என்னும் சொல்லுக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். ஆனால் அவர்தான் மிகவும் துரதிருஷ்டசலியாக இருந்தார். இதற்குக் காரணம் அவரேதான். நல்ல வீரர்; இளகிய மனமுடையவர். ஆனால் சிற்றின்பப் பிரியர். அபினி தின்பதிலும் விருப்பமுடையவர்.

 

அவர் பட்டத்துக்கு வந்த சில நாட்களுக்குள் செர்ஷா என்னும் ஆப்கானிய பட்டாணியர் தலைவன் படையெடுத்து வந்தான். அவனை எதிர்த்து ஹுமாயூன் சென்ற போது அவன் மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டான்.; ஹுமாயூன் நடந்து, நடந்து சென்று வங்காளம் வரை போய்விட்டார். அங்கே மீண்டும் குடி, கூத்தில் காலத்தைக் கழித்தார்.

 

மழைக்காலம் துவங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்தது. அந்த நேரத்தில் செர்ஷா, மலைகளிலிருந்து இறங்கி வந்து போர் தொடுத்தான். வங்காளத்துக்கும் டில்லிக்கும் இடையேயுள்ள பாதையை அடைத்து முற்றுகையிட்டான். ஹுமாயூன், வங்களத்திலிருந்து, தலைநகர் டில்லிக்குப் போக முயற்சித்தார். முடியவில்லை. அவரது படைவீரர்களும் அதிகாரிகளும் நோய்வாய்ப்பட்டனர். உடனே செர்ஷாவுடன் சமாதானம் செய்துகொண்டு சில பகுதிகளை அவனுக்குத் தருவதாகச் சொன்னார். உடனே அவர் டில்லிக்குப் போக பாதையைத் திறந்துவிடுவதாக செர்சா வாக்கு கொடுத்தான். அவனை நம்பி எல்லோரும் கங்கைக் கரையில் ஓய்வு எடுத்தனர். அன்றிரவு அவர்கள் மீது பாய்ந்த ஆப்கன் படைகள் பலரையும் கொன்று தீர்த்தன.

 

ஹூமாயூன் உயிர் பிழைக்க வேண்டி முக்கிய அகாரிகளுடன் குதிரை மீது ஏறி கங்கை நதியைக் கடக்க முயன்றார். பலரும் கங்கைப் பிரவாகத்தில் சிக்கி இறந்தனர். ஹூமாயுனும் நதியில் விழுந்து மூழ்கி இறக்கவிருந்த நேரத்தில், தோல் பைகளில் கங்கை ஜலத்தை நிரப்பும் ஒரு நீர்துருத்திக்காரன், இரண்டு தோல் பைகளில் காற்றை நிரப்பி அந்த மிதவையில் நீந்திச் சென்று கொண்டிருந்தான். அவன், ஹுமாயூன் மீது இரக்கப்பட்டு தன் துருத்தியைப் பிடித்துக்கொண்டு நீந்தி வரும்படி கேட்டுக்கொண்டான். ஹுமாயூனும் அப்படியே செய்து கங்கை நதியைக் கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார்.

humayun-3

உயிர்தப்ப வைத்த உதவிக்கு நன்றிக்கடனாக அவனை மூன்று நாழிகை நேரத்துக்குச் சிம்மாதனத்தில் உட்கார வைத்து மொகலாய சாம்ராஜ்யத்தை ஆள்வதற்கு அனுமதிப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆக்ரா போய்ச் சேர்ந்தவுடன், அந்த நீர்துருத்திக்காரன், அவரிடம் போய் நின்றான். உடனே அவனை மூன்று நாழிகை நேரத்துக்கு சிம்மாசனத்தில் அமரவைத்தான். அதுமட்டுமல்ல.

 

நீர்துருத்திக்காரன், தன் கொண்டுவந்த தோல்பையை துண்டு துண்டாக நறுக்கி அதில் தன் பெயரை முத்திரையிட்டு, அதை நாணயமாக்கி உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்தான்.அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கவும் மன்னரிடம் உதவி நாடினான்.

 

இந்தக் நிகழ்ச்சி முடிந்தபின்னர், ஹூமாயூன், டில்லிக்குச் சென்றார். அங்கே திடீரென்று செர்ஷா தாக்குதல் நடத்தி, ஹுமாயூனை டில்லிக்கு வெளியே துரத்திவிட்டான். ஹூமாயுன், தன் சகோதர்ககளிடம் உதவி கேட்டார். அவர்கள் உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்து ஹுமாயூனை ஓட ஓட விரட்டினார்கள். அவர் பாரசீகத்துக்குத் தப்பிப் போனார். அங்குள்ள மன்னர், இவனுக்கு அன்பாக உதவிகளைச் செய்தார். அவருடைய படைகளின் உதவியுடன்  காபூல் நகரைப் பிடித்தார்.15 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லிக்கு வந்து மீண்டும் ஆட்சியை ஏற்றார். அதற்கு முன்பாகவே செர்ஷாவும் அவருடைய மகனும் இறந்து போனார்கள்.

இதுதான் ஹுமாயுனின் கதை!

ஒரு நாழிகை= 24 நிமிடம்

-சுபம்-