‘மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்(Post No.9646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9646

Date uploaded in London – –25 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெர்மன் மெல்வில். HERMAN MELVILLE

(1819 – 1891)

அமெரிக்க இலக்கியத்தின் தூண்களில் ஒருவர் ஹெர்மன் மெல்வில். இவருடைய புதினமான (MOBY DICK) மோபி டிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகும்.

      நியூயார்க் (NEW YORK) நகரில் மெல்வில் பிறந்தார். அவருடைய தந்தை பெரிய வியாபாரி. ஆனால் மெல்விலுக்கு 15 வயதானபோது தந்தையின் வியாபாரம் படுத்தது. அவர் நொடித்துப் போனார். இதனால் மெல்வில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குப் போக நேர்ந்தது.

      எழுத்தாளராகவும் பண்ணைப் பணியாளராகவும் ஆசிரியராகவும் பல தொழில்களுக்கு மாறிய அவர் இறுதியில் திரைகடல் ஓடித் திரவியம் தேடப் புறப்பட்டார்.

      1839-இல் அமெரிக்காவிலிருந்து லிவர்பூல் நகரத்திற்கு (பிரிட்டன்) வந்தார். இந்த கடற்பயண அனுபவமே அவரது நாவல் RED BURN-க்கு கருப்பொருளாக அமைந்தது.

      இரண்டாவது முறையாக அவர் கடற்பயணம் சென்றது ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில். இதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டதுதான் MOBY DICK

      இதற்கடுத்த கடற்பயணத்தின்போது ஒரு தீவில் மனிதர்களை உண்ணும் காட்டு மனிதர்களிடத்தில் (CANNIBALS) இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அந்த தீவின் பெயர் MARQUESAS ISLANDS. காட்டு மனிதர்களுடன் தான் வாழ்ந்ததையே கதையாக எழுதினார். இதுதான் இவருடைய முதல் வெளியீடு (அச்சான முதல் நூல்)

      அந்தத் தீவுகளிலிருந்து இவரை ஒரு ஆஸ்திரேலிய கப்பல் மீட்டது. ஆனால் கப்பலுக்குள் கலகம் வெடிக்கவே இவரையும் கலகக்காரர்களையும் பசிபிக் கடல் நாடான TAHITI-யில் இறக்கிவிட்டு கப்பல் சென்றுவிட்டது. பின்னர் ஒரு அமெரிக்கக் கப்பலைப் பிடித்து ஹானலூலு (HONOLULU) தீவு வழியாக அமெரிக்கவுக்குச் சென்றார்.

      நியூயார்க்கில் வாழத்துவங்கிய அவர் 1847இல் திருமணம் செய்து கொண்டார். 1850இல் மாஸசூசட்ஸில் பிட்ஸ்பர்க் என்னும் இடத்தில் நிலம் வாங்கினார். அவருக்கு அருகிலேயே நத்தேனியல் ஹாதோர்ன் (NATHANIEL HAWTHORNE) என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் வாழ்ந்தார். MOBY DICK நாவலை எழுதமாறு இவரைத் தூண்டியது நத்தேனியல்தான்.

      ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில் வேட்டைக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை MOBY DICK நாவல் விளக்குகிறது. மோபி டிக் என்னும் வெள்ளைத் திமிங்கிலத்தை (White Whale) அவர்கள் தேடுவதாக கதை அமைந்துள்ளது. இது திமிங்கில வேட்டைக் கதைபோலத் தோன்றினாலும் உண்மையில் இங்கு உருவகப்படுத்திய விஷயம் மனிதனின் வாழ்க்கைதான். தீயசக்திகள் எப்படி மனிதர்களைக் கவர்ந்து இழுக்கிறது – அவை எவ்வளவு கொடியவை என்பதை ஆசிரியர் சித்தரிக்கிறார். முதலில் இந்தப் புத்தகத்தைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அரைகுறையான பாராட்டுகளே கிடைத்தன.

      மெல்வில் தனது கடைசி 35 ஆண்டுகால வாழ்வில் எழுதியது மிகமிகக் குறைவே.

–subham–

மோபி டிக் , நாவல், ஹெர்மன் மெல்வில்,Herman Melville