Written by London Swaminathan
Date: 4 October 2017
Time uploaded in London- 11-07 am
Post No. 4270
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
உலகில் ரிக் வேதத்தை அலசி ஆராய்ந்தது போல வேறு எந்த மத நூலையும் எந்த வெள்ளைக்காரர்களும் மார்கஸீய வாந்திகளும் ஆராய வில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி! இவர்கள் எல்லா சமய நூல்களையும் இப்படி அணுகி இருந்தால் இவர்கள் ‘யோக்கியர்’கள். ஆனால் மற்ற சமய நூல்களில் சொன்னவற்றை நியாயப்படுத்தி எழுதினார்கள் (குத்து, வெட்டு, கொலை செய், கற்பழி) அவைகளைக் குறைகூறவில்லை. சுமார் 50 வெள்ளைத் தோல்களும் , நூற்றுக் கணக்கான மார்கஸீய வாந்திகளும் இந்திய வரலாறு பற்றி எழுதியதை இன்றுவரை பாட புத்தகத்தில் வைத்துள்ளனர். நான் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சரித்திரப் பட்டம் வாங்கியவன். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவமிகளின் உபந்யாசங்களில் உள்ள சரித்திரம் எதுவும் அதில் இல்லை. மார்கஸீய, காங்கிரஸ் தில்லுமுல்லுகள் எழுதிய — வெள்ளைக்கார்கள் எழுதிய —-டல்ஹௌசி பிரபுவின் சீர்திருத்தம், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றுவது ஏன்? என்று பல பாடங்களைப் படித்துதான் பட்டம் வாங்கினேன்.
ஆனால் 70 வருடங்களுக்கு முன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் பேசிய உரைதனில் பேசிய போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மனின் நாலாவது நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும், துருக்கியில் கி.மு 1380 ஆண்டு வேத கால தெய்வக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும் எந்த சரித்திரப் புத்தகத்திலும் இல்லை. மத் தியப்பிரதேசத்தில் தாரா என்னும் இடத்தில் மசூதிக்குள் சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் அவர்களுடைய சொற்பொழிவு மூலம் அறிந்ததே!
அயோக்கியர் எழுதிய வரலாற்றை விட்டு விட்டு வெள்ளைத் தோல் எழுதியவற்றுக்கு வருவோம். வேத கால இலக்கியங்களை சுமார் 50 வெள்ளையர்கள்– இல்லை இல்லை கொள்ளையர்கள்—- ஆராய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன் மொழிகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் நூற்றுக் கணக்கான நூல்களையும் எழுதிக் குவித்துள்ளனர். அவைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை எல்லாம் பெரிய ஆராய்ச்சி நூல்கள் என்று அக்காலத்தவர் கருதினர் (ஆனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்; அவைதான் எனக்கும் பயன்படுகின்றன! அவற்றைப் படித்தபின்னர் அவர்களே அவர்களை முட்டாள் என்று காட்டிவிட்டனர் என்பதாவது எனக்குத் தெரிந்தது)
வேதங்கள் நான்கு: ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.
அவற்றை அடுத்து வந்தவை பிராமணங்கள் எனப்படும் உரைநடை இலக்கியம். இவை பிரம்மாண்ட அளவில் இருக்கின்றன. அப்போது மோசஸ் பிறக்கவில்லை . இதுவரை மோஸசுக்கு வரலாற்று ஆதாரம் தொல்பொருட்துறை ஆதாரம் கிடைக்கவில்லை ஆனால் அவர்தான் மூன்று மதங்களுக்குத் தலைவர்!!!
வெள்ளைக்கார “யோக்கியர்” இதை எல்லாம் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். விக்கிபீடியாவைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்மூர் திராவிட தத்துப் பித்துகளுக்கும் “கெக்கெப் பிக்கே”க்களுக்கும் இது புரியாது. அவ்வளவு மூளை!!!!
பிராமண்ட பிராமண நூல்களை அடுத்து வந்தவை ஆரண்யகங்கள் ( காட்டு நூல்கள்) அவற்றை அடுத்து வந்தவை உலகப் புகழ் பெற்ற உன்னத உபநிஷத்துகள்.
சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு வரலாற்று, தொல்பொருட்டுறை ஆதாரங்கள் இருக்கின்றன; கி.மு 1400 முதல்; சரஸ்வதி நதியின் விஞ்ஞானச் செய்திகள், வேதங்களை கி.மு 2000க்கு முந்தியவை என்று காட்டிவிட்டன. சுருங்கச் சொன்னால் வேதங்களோ பிராமணங்களோ தோன்றிய காலத்தே உலகில் தமிழ் மொழி இல்லை, கிரேக்க மொழி இல்லை, லத்தீன் மொழி இல்லை; கொஞ்சம் சீன மொழியும், ஹீப்ரூ /எபிரேய மொழியும் இருந்தன. மற்ற மொழிகள் இன்று மியூசியங்களில் உள்ளன.
ஆக இவ்வளவு பழமையான பிராமண இலக்கியங்களில் என்சைக்ளோபீடியா போல பல விஷயங்கள் உள்ளன அவற்றின் சப்ஜெட்களை- பொருளடக்கம், இன்டெக்ஸ் போட்டாலே அவர்கள் பிரஸ்தாபிக்கும் விஷயங்களின் பட்டியல் கிடைத்துவிடும்! கணிதம், வான சாத்திரம், அரசனின் பட்டாபிஷேகம் முதலியன குறித்து அவர்கள் சிலாகிக்கும் விஷயங்களைக் கண்டால், வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் நல்ல ஜோக் புக்ஸ் JOKE BOOKS என்று நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; பசுமரத்தாணி போலப் பதியும்.
179 பேர் படுகொலை! நரபலி!!
பிராமண நூல்களில் அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம், புருஷமேத யாகம் குறித்துப் படித்த வெள்ளைக் காரர் களுக்கு ஒரே குஷி; மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய கூலிகள், இது என்னத் தத்துப் பித்து உளறல் என்று பரிகசித்தனர். இதை வைத்தே இந்துமதத்தை கோழிகளைக் கூடைக்குள் அமுக்குவது போல ஒரே அமுக்காக அமுக்கிவிடுகிறேன் பார் என்று கொக்கரித்தார்கள்; மெக்காலே போன்றோர் இந்த வேகத்தில் ஆங்கில கல்வி பரவினால் இந்தியாவும் இராது; இந்துமதமும் இராது என்று எழுத்தில் வடித்தனர். நம்மூர் திராவிடங்களும் ஜஸ்டிஸ் கட்சிகளும் பலமாக மண்டையை ஆட்டின.பரிதபக் கேஸுகள்!!!
சோழன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் செய்தது புற நானூற்றில் உள்ளது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது புறநானூற்றிலும் காளிதாசனின் ரகுவம்சத்திலும் — குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சோழப் பேரசன் கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவ யாக குண்டம் நிறுவி வேள்வி வேட்டதும், ரிக் வேதம் சொல்லுவது போல எல்லோரையும் ஏழு அடி நடந்து வழியனுப்பியதையும் புற நானூறும் ஏனைய சங்க நூல்களும் செப்புகின்றன. வருணனையும், இந்திரனையும், விஷ்ணுவையும் தமிழ்க்கடவுள்கள் என்று ‘ஒல்காப்புகழ் தொல்காப்பிய’னும் செப்பி விட்டான். இந்த 2000 ஆண்டுக்கு முந்தைய விஷயங்கள் வெள்ளைக்காரர்
களுக்குத் தெரியாது!
கால்டுவெல் போன்றோர் உளறிய உளறல்களை மரத் (மறத்) தமிழர்கள் ஆங்காங்கே மறுத்து அடிக்குறிப்பு சேர்த்தனர்.
பிராமண நூல்களில் சதபத, ஐதரேய , தைத்ரீய பிராமணங்கள் யாக யக்ஞ்ங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அதில் தைத்ரீய பிராமணம் யஜூர் வேதத்தைச் சேர்ந்தது. அதில் புருஷமேத யக்ஞம் எனப்படும் நரபலி யக்ஞத்தில் 179 பேர் தீயில் ஆகுதி அளிக்கப்பட்டதாக பட்டியல் உள்ளது அதைப் அடித்த வெள்ளைகளுக்கு ஒரே ஆனந்தம்! இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்று போதுமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்!
மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற அரை வேக்காடுகள்– மான் தோல் போர்த்திய புலிகள் — சாயனர் சொன்ன வியாக்கியானத்தைச் சொல்வதாக சொல்லி — அவர் சொல்லாத விஷயத்தையும் சேர்த்தனர்-
‘ஆரிய’ என்ற சொல்லின் பொருளை ‘ரிஷி முனிவர்கள்’, ‘வடக்கில் இமயத்தின் அடிவாரத்தில் வாழ்பவர்கள்’- ‘சம்ஸ்கிருத மந்திரங்களில் வல்லவர்கள்’- ‘பண்பாடு மிக்கவர்கள்’- ‘நாகரீகம் தெரிந்தவர்கள்’- ‘மாண்புமிகு’– என்ற உண்மைப் பொருளைப் பாரதி பாடல்களிலும் புற நானுற்றிலும் காணலாம்– மாக்ஸ்முலர் வகையறாக்கள் ஆரியர் என்பது ஒரு இனம் என்றும் அதில் தானும் ஒருவன் என்றும்- அவர்கள் ஜெர்மனி முதலிய இடங்களில் வாழ்ந்தனர் என்றும் இந்தியாவுக்குள் கி.மு 1500 வாக்கில் நுழைந்திருக்கலாம் என்றும் கதை கட்டினர். இவை எல்லாமின்று ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப்’ போய்விட்டன.
ஏனெனில் சரஸ்வதி நதியின் விஞ்ஞான ஆராய்ச்சியும் நாஸா NASA புகைப்படங்களும் வெள்ளைத் தோலை உரித்துவிட்டன.
பிராமண நூல்களில் புருஷமேத யக்ஞத்தில் பலியிடப்பட்ட, அல்லது பலியிடப்பட வேண்டிய 179 பேரின் பட்டியல் உள்ளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் — மூன்று கட்டுரைகளில் – 179 பேரின் பட்டியலையும் கொடுத்துவிட்டதால் இங்கே தரப்போவதில்லை..
அதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை மட்டும் விண்டுரைப்பேன்!
1.தீயில் தூக்கிப் போட வேண்டிய முதல் ஆள் பிராமணன் என்று பட்டியல் துவங்குகிறது. இதைப் படித்தவுடன் வெள்ளைத்தோல்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. சூத்திரன், ராக்ஷசன், அசுரன் என்று சொல்லி இருந்தால் , பார்த்தீர்களா பிராமணர்களின் அட்டூழியங்களை என்று எழுத முடியும்.
2.இதற்குப் பின்னர் போர் வீரன், வணிகப் பெருமகன், சூத்திரன் ஆகியோர் வருகின்றனர்.
- இந்தப் பட்டியல் மறை மொழியில் உள்ளது. அதாவது ஒரு சமுதாயம் என்பது இவர்கள் இல் லாமல் இல்லை என்று உணர்த்த எழுதப்பட்டது போல உளது. காரணம் என்னவெனில் இப்படி ஒரு யாகம் நடந்ததாக எங்குமே தகவல் இல்லை. பல நூறு ராஜாக்களில் ஒருவரான ஹரிசந்திரன் காலத்தில் சுனஸ்சேபனைப் பலிகொடுக்க முயன்றபோது புரட்சித்தலைவர் விசுவாமித்ரர் தடுத்துவிட்டதாத இருக்கிறது. சிறுத்தொண்டர் (பெரிய புராண) ஆதி சங்கர நரபலி முயற்சிகளும் காபாலிகர்களால் முயலப்பட்டதே அன்றி புருஷ மேத யக்ஞத்தின் பகுதியாகாது. மேலும் சங்கரர், சிறுத்தொண்டர் கதைகளும் தமிழ்த் திரைப்படங்கள் போல இனிதே- சுபம் – என்றே முழுமை பெறுகின்றன.
- 179 பேர் பட்டியலில் பல சொற்களுக்கு வெள்ளைகளுக்கே அர்த்தம் புரியவில்லை; விளக்கம் இன்றி அப்படியே எழுதிவிட்டனர்.
- இந்தப்படியலில் டாக்டர், வான சாத்திர அறிஞன், பொற்கொல்லன் ரதகாரன், கொல்லன், இசை துறை கலைஞர்கள், நாட்டிய சிகாமணிகள், இசைக்கருவி வாசிப்போர், மன்னருக்கு வரிவசூல் செய்வோர், மன்னருக்குப் பட்டாபிஷேகம் செய்வோர் ஆகியோரும் உள்ளது. அதாவது, இவர்கள் ஒவ்வொருவராக தீயில் போடப்பட வேண்டும்
ஆக இந்தப் பட்டியலை இலக்கிய பூர்வமாக, எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்ய முடியாது என்று கண்ட வெள்ளைகளும் மார்கஸீய வாந்திகளும் பேசாமடந்தை ஆகிவிட்டன. இதைப் பற்றி பிரஸ்தாப்பிபதைவிட இதை தொட்டும் தொடாமலும் பட்டும் படாம லும் சொல்லிவீட்டு அந்தக் காலத்தில் — ஆதிகாலத்தில் — இருந்த நரபலியின் எச்சம் -சொச்சம்- மிச்சம்- மீதி என்று ஒரு வரி எழுதி விட்டு ஓடிப்போய் விட்டார்கள்
வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த பயங்கரவாதிகளுக்கு புஸ்வாணமே கிடைத்தது!!!!!
- இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் 50 வெள்ளைகளும் 100 மார்கஸீயங்களும் 1000 திராவிடங்களும் ஒரு மந்திரக் கருத்திலும் ஒருமித்த கருத்து கொள்ளவில்லை. ஆரியர் கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மட்டும் சொன்னால் போதும்– காட்டினால் போதும்– 300 வருஷம் நம்மை ஆண்ட வெள் ளையன் தயவும் ரொட்டித் துண்டும் கிடைக்கும் என்று வா லாட்டின.
7. இதைவிடப் பெரிய விசயம் என்ன வென்றால், கி,மு.1200ல் படிப்பறிவற்ற –மாடு மேய்க்கும்—அநாகரீகக் கும்பல் கைபர் கணவாய் வழியாக நுழைந்தது என்று சொல்லிவிட்டு- கிமு. 1000ல் அவர்கள் பிராமணங்களில் சொன்ன விஷயங்களைப் பட்டியல் போடுவது – “சூடான ஐஸ்க்ரீம்” என்று சொல்லுவது போல இருந்தது. உலகில் எந்த நாகரீகமும் இப்படி வளர்ந்ததாக சாட்சியம் இல்லை. நாம் சுமேரிய, எகிப்திய நாகரீகம் பற்றிப் படிப்பதெல்லாம் 5000 ஆண்டு வரலாறு. ஆக அதே அளவுகோலை இந்துக்களுக்கும் வைத்தால் நாம் 10,000 ஆண்டு வரலாறு உடையவர் ஆகி விடுவோம். அது எப்படி?
பிரம்மாண்டமான வேத இலக்கியமும் பிராமணங்களும் உருவான போது உலகில் வேறு எந்த இலக்கியமுமே இல்லை. எகிப்திய, பாபிலோனிய இலக்கியம் எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. ஆனால் ரிக்வேதச் சொற்களை, கொட்டாம் பட்டி காய்கறிக்கூடைக் கிழவி முதல் இமயமலை ரிஷிகேஷ் பண்டிதர்வரை இன்று வரைப் பேசி வருகின்றனர்; போற்றி வருகின்றனர். நமக்குத் தெரிந்த தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றுக்கு அப்போது இலக்கியமே இல்லை. ஹீப்ருவீல் அதற்குப் பின்னர்தான் மோசஸ் கதைக்கத் துவங்கினார். அவருக்கும் வரலாற்று ஆதாரம் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமே உளது. சீன மொழிக் கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உளது. அழிந்து போன எகிப்திய, பாபிலோனிய கவெட்டுகளும் ஜில்காமேஷ் போன்ற பிதற்றல்களும் உப்பு புளி எண்ணை விற்ற கணக்குகளுமாக உளது. 1,20,000 களிமண் கல்வெட்டுகள் கிடைத்தன. ஆயினும் ரிக்வேதம் போல ஒரு கவிதைத் தொகுப்பு கிடையாது. நாமோ அதை வியாசர் கி.மு 3102-க்கு முன் தொகுத்ததாகப் படிக்கிறோம்.
ஆக, நரபலி யாகம் நடக்கவில்லை. அதில் பிராமணன் முதலான 179 பேரைத் தீக்கிரையாக்கவும் இல்லை. அவர்கள் வேள்வி என்று சொன்ன சொல் பிறகாலத்தில் பகவத் கீதையில் வேள்வி என்ற சொல் பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டது போலப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
நானே வெள்ளைக்கரன் மொழிபெயர்ப்பை வைத்துதான் இவ்வளவையும் எழுதுகிறேன். அவன் எத்தனை தப்பு விட்டானோ? திரித்து எழுதினானோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்து அறிஞர்கள் மஹா நாடு கூட்டி ரிக் வேதத்தில் உள்ள 10,000 மதிரங்களுக்கும் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் அல்லது கான்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்கள் சொல்லுவது போல அவைகளை அர்த்தம் பாராமல் மந்திரங்களாக உச்சரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் ஆதிசங்கரர்களும் வியாச மகரிஷிகளும் நமக்கு விளக்கம் தருவர் என்று நம்புவோமாக.
TAGS: இந்து, நரபலி, யக்ஞம், புருஷமேதம், 179 பேர் படுகொலை
-சுபம்—