Research Article written by london swaminathan
Date: 3RD August 2016
Post No. 3031
Time uploaded in London :– 16-02
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பூமியைப்போல பல்லாயிரக் கணக்கில் கிரகங்கள் இருப்பதும், பால்வெளி மண்டலம் (MILKY WAY –மில்கி வே) போல கோடிக் கணக்கில் பிரபஞ்சங்கள் இருப்பதும் இப்பொழுது விஞ்ஞானிகள் வெளியிடும் தகவல்கள். ஆனால் இது இந்துக்களுக்கு எப்பொழுதோ தெரிந்த விஷயம்!
நக்கபிரான் அருளால் இங்கே நடைபெறும்
உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் — வளர்
தொகைபல கோடிபல்கோடிகளாம்
இக்கணக்கெவர் அறிவார் – புவி
எத்தனையுளதென்பது யார் அறிவார்?
— என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. அவர் நம் காலத்தவர்
ஆனால் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னால் வாழ்ந்த மாணிக்கவாசகரே — அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரே — இந்த அரிய உணமையைப் பாடியுள்ளார். கலிலியோ, கோபர்நிகசுக்கு முன்னதாக வானத்தை அளந்தவர்கள் நாம்!
இதோ திருவாசகப் பாடல்:–
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்
–திரு அண்டப் பகுதி, திருவாசகம்
இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.
இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.
நமக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பனும் எல்லோருக்கும் தெரிந்த — எல்லா இந்துக்களுக்கும் தெரிந்த — இவ்வுண்மையை போகும் போக்கில் சொல்லிவிடுகிறான்:–
தோன்றல் நீ முனியின் புவனத் தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் எதிர் அல என்றலின்
சான்று வேதம் தவம் பெரும் ஞானமே
–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்
இதன் பொருள்:-
தலைவனே நீ சினம் கொண்டால், இம் மூவுலகங்கள் போல முப்பது கோடி உலகங்கள் ஒன்றாகக்கூடி எதிர்த்தாலும், அவை உன் ஆற்றலுக்கு ஏற்றவை அல்ல. இவ்வாறு கூறுவதற்கு வேதங்களும், எமது தவமும், தத்துவ ஞானமும் சான்றுகள் ஆகும்.
முப்பது கோடி உலகங்கள் என்பதை அப்படியே அர்த்தம் (LITERAL MEANING) கொள்ளாமல் பல கோடி உலகங்கள் என்று படிக்க வேண்டும்.
ஆக கம்பன் காலத்திலேயே இப்படி வானியல் அறிவு இருந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரிய மண்டலம் போன்றவை எ து அவர்களுக்குத் தெரியும்.
பிற கிரகங்களில் உயிரினங்கள்
விஞ்ஞானிகள் இதுவரை பிற கிரகங்களில் உயிரினங்களைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இந்து புராணங்கள் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதையும் அவர்களுடைய நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளன:–
பிற கிரகங்களில் வாழ்வோருக்கு கண்கள் இமைக்காது
1.கால்கள் நிலத்தில் பதியாது
2.அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.
3.நினைத்த மத்திரத்தில் கிரகம் விட்டு (INTER GALACTIC TRAVEL) கிரகம் செல்வர்.
4.வேண்டிய உருவங்கள் எடுக்கவல்லவர்.
5.அவர்கள் போட்டுக்கொண்ட மாலைகள் வாடா.
6.அவர்கள் மேல் உலகில் செக்ஸில் (NO SEX REGION) (உடல் உறவில்) ஈடுபடமுடியாது.
7.அவர்களுக்கு ஒளிமிகுந்த (PHOSPHOROUS) உடல் உண்டு.
கம்பனும் புற அண்டம் (EXTRA TERRESTRIAL) பற்றிப் பாடுகிறான்:–
கம்பன் காலத்திலேயே புற அண்டங்களில் உயிரினங்கள் வாழ்பவது தெரியும்!
புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் எம் அம்பொடு வீழ்வரால்
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்
–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்
இதன் பொருள்:-
முனிவர் உரைத்ததைக் கேட்ட சூரிய குல ராமன், அவரிடம், இவ்வரக்கர்கள் இனிமேல் தீங்கு செய்ய மாட்டோம் என்று கூறி என்னிடம் அடைக்கலம் அடையாவிட்டால், அவர்கள் இந்த அண்டத்தை விட்டு வேறோர் அண்டத்துக்கு ஓடிப்போனாலும் என் அம்பால தாக்கப்பட்டு அழிந்தொழி வார்கள் எனவே நீங்கள் துன்பத்தை ஒழியுங்கள்.
இப்பாட்டில் சொல்லப்படும் அறிவியல் கருத்துகள்:–
1.புற அண்டம் உண்டு
2.அவற்றுக்கு பயணம் செய்வதும் சாத்தியமே.
இந்த அறிவியல் கருத்துகள் இல்லாவிடில் இத்தகைய சொற்கள் பாடலில் இடம்பெறா.
இல்லாத ஒன்றை கற்பிப்பது புலவர்க்கு இயலா.
இருப்பதையே அவர்கள் சொல்லுவர்.
ஆக கம்பராமாயணம் முழுதும் வரும் வானில் கருத்துகளை ஒட்டு மொத்தமாக தொகுத்துப் பார்த்தால் அக்காலத்தில் மக்களுக்கு எவ்வளவு தெரிந்தது என்பதை அளவிட முடியும்
கோள், கோளம், அண்டம்
அண்டம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு முட்டை என்று பொருள்.
இந்த பிரபசம் , விண்வெளியில் உலவும் கிரகங்கள் இவறுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய இச்சொல்லிலிருந்து அவர்களுக்கு அக்காலத்திலேயே பூமி, பிரபஞ்சம் எல்லாம் வட்டவடிவமானவை என்பது தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது.
பூகோளம், மண்டலம், கோள் என்பன எல்லாம் வட்ட வடிவத்தையே குறிக்கும்.
தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் கோள், கோளம் என்பன கி கங்களுடன் தொடர்புடைய சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்டுவெல்களும், மாக்ஸ்முல்லர்களும் பிதற்றிய ஆரிய– திராவிட மொழிக் கொள்கைகளை உதறிவிட்டுப் பார்த்தால் அற்புதமான மூல மொழி– உலகிற்கெல்லாம் தாய்மொழி தெரியும்.
–சுபம்–
You must be logged in to post a comment.