வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

Written by london swaminathan

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  22-14  (British Summer Time)

 

Post No. 5085

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு சொல்லும் விநோதச் செய்திகள்

மநு நீதி நூல்- Part 18

Third Chapter begins

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக்  கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

 

3-1.மூன்று வேதங்களையும் படிப்போர் 36 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் அல்லது 9 ஆண்டுகள் அல்லது வேதத்தின் ஒரு கிளையை (ஷாகா) முடிக்கும் வரை பயிலலாம்.

3-2.மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வேதத்தைப் பயின்ற பின்னர் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கவும்

3-3.வேதம் பயின்று முடித்தவனை சந்தனம், மலர் மாலை, மதுபர்க்கம் (பால்+தேன்), பசு தானம் கொடுத்து மரியாதை செய்க

3-4.இந்த பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் அழகான பெண்ணை மணக்கலாம்.

3-5. மதச் சடங்குகளைச் செய்யவும் பிரஜா உற்பத்திக்காகவும் தன் கோத்ரத்தில் சேராத தாயின் ஏழு தலைமுறைகளில் தொடர்பில்லாத ஒரு பெண்ணை கல்யாணம் கட்டு.  இது   மூன்று வருணத்தாருக்கும் பொருந்தும்.

 

 

3-6. ஆடு மாடு, தன, தான்யம் மிகுந்த குடும்பத்தில் பெண் எடு; ஆயினும் பின்வரும் பத்து குலத்தைத் தவிர்.

 

3-7.ஆண் குழந்தைகளே பெறாத குடும்பம், சடங்குகளைப் பின்பற்றாதோர், வேதம் ஓதாதோர், உடல் முழுதும் முடியுடையோர், க்ஷயரோகம், வயிற்று வலி, மூல வியாதி உடையோர், பெரு வியாதி, வெண் குஷ்டம் உடையோர், யானைக் காலர், குடும்பத்தில் பெண் எடுக்காதே.

3-8.செம்பட்டை முடி, சிவப்புக் கண்கள், உடல் முடியுடையோள், நோயாளி, கடும் சொல் உடைய பெண்கள் வேண்டாம்

3-9. நட்சத்திரம், நதி, மலை, மரம், அடிமைப் பெண்கள் , ஈன ஜாதி, பறவை, பாம்பு ஆகிய பெயர்களை உடைய பெண்கள் வேண்டாம்.

யார், யாரை மணக்கலாம்?

3-10. அழகான, நற் பெயர் உடைய, மென் குரல், மென் முடி, வெண் பற்கள், இன் சொல்லினள், அன்ன நடை உடைய பெண்கள் நல்லது

 

3-11.சஹோதரன் இல்லாதவள், தகப்பன் பெயர் தெரியாதவள் வேண்டாம். அவர்களுக்குப் பிறப்போர் புத்ரிகா, புத்ரன் ஆவர். பின்னொரு அத்யாயத்தில் விளக்கம் உளது.

3-12.தனது வருணப் பெண்ணை மணப்பது சிறப்பு; ஆயினும் இரண்டாம் கல்யாணம் செய்வதாயின் பின்வரும் கட்டளைகளை மனதிற் கொள்க

3-13. நாலாம் வருணத்தவன் (சூத்திரன்) தனது வருணத்திலும் வைஸ்யன் தனது இனம்+ நாலாம் வருணத்திலும், க்ஷத்ரியன் மற்ற இரு வருணத்திலும் பிராஹ்மணன் நால் வருணத்திலும் மணக்கலாம்.

3-14 . அந்தணனுக்கும் அரசனுக்கும் சொந்த இனத்தில் பெண் கிடைக்காவிடில் முதல் மணமே நாலாம் வருண பெண்ணைக் கூட மணக்கலாம்.

3-15. தாழ்ந்த ஜாதியில் மணப்பவர்கள், பிறக்கும் குழந்தைகளையும் நாலாம் வருணத்துக்கு இழுத்துவிடுவர்.

3-16. நாலாம் வருணத்தவனை மணப்பவன் பதிதன் என்று அத்ரி, சௌனகர், கௌதமன் பிருகு முதலியோர் கூறுவர்.

 

3-17.  தாழ்ந்தகுலப் பெண்ணுடன் படுக்கும் அந்தணன், நரகத்தை அடைவான். பிறக்கும் பிள்ளையும் பிராஹ்மணன் இல்லை.

3-18. அப்படிப் பிறக்கும் பிள்ளை கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள், தேவர்கள் ஏற்க மாட்டார்கள்.

3-19. தாழ் குலப் பெண்ணின் அதர பானமும் மூச்சுக் காற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாவத்தை உண்டாக்கும்.

3-20. அடுத்த ஸ்லோகத்தில் இம்மை மறுமைப் பயன்களை நல்கும் எட்டுவகைத் திருமணங்கள் பற்றி இயம்புவேன்

 

எனது கருத்துகள்

  1. தமிழ் இலக்கியத்தில் நக்கீரர் 48 ஆண்டுகள் வேதம் பயின்றதாக உரைகாரர் உரைப்பர். ஒரு முனிவர் வேதம் எல்லாம் படிக்க 300 ஆண்டுகள் போதவில்லை என்றும் நாலாவது ஜன்மத்தில் பயின்றாலும் ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று இந்திரன் சொன்னதாகவும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம். இப்போதுள்ள வேதங்களையே எவரும் முழுக்க கற்க இயலாது; அழிந்து போன வேதங்களைக் கணக்கிற் கொண்டால் பல ஜன்மங்களும் போதாது.

 

2.இந்த 36 ஆண்டு, 48 ஆண்டு மனப்பாடப் படிப்பு இந்தியாவின் தனிச் சிறப்பாகும் இத்தகைய விஷயங்கள் வேறு பண்பாட்டில் இல்லாததால், ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது வெள்ளி டை மலை என விளங்கும். வெளிநாட்டில் இருந்து இந்துக்கள் வரவில்லை. இந்த நாட்டில் தோன்றிய பண்பாடே காரணம்.

 

  1. பிராஹ்மணர்கள் நால் வ மணக்கலாம் என்பதே புரட்சிகரமான கருத்து. மற்ற வர்ந்த்தாரும் ஏனையோரை மணக்கலாம் என்பது தற்காலத்துக் கருத்.து

4.மநு, மற்ற ஸ்ம்ருதிகாரர்களின்  கருத்துகளையும் மொழிகிறார். அகவே அக்காலத்திலேயே பல ஸ்ம்ருதிகள் இருந்ததை அறிகிறோம் அக்காலத்தில் கலப்பு மணம் இருந்ததை மநுவும் கோடிட்டுக் காட்டுகிறார். மக்களுக்குப் பல ஸ்ம்ருதிகளைப் பின்பற்றும் உரிமை இருக்கையில் மநு ஸ்ம்ருதியை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகூறுவதில் என்ன பொருள் உளது?

 

5.யாரை மணந்து கொள்ளலாம் என்பதில் கோத்ர முறை வருகிறது; ஒரே கோத்ரத்தில் பிறந்தவரை மணக்கக் கூடாது, நெருங்கிய உறவினரை மணக்கக் கூடாது  என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞான உலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

 

  1. நட்சத்திரங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்களை பெண்களுக்குச் சூட்டக் கூட்டாது என்பது விநோதமான கருத்து . இன்றும் நட்சத்திரப் பெயர்களான ரேவதி, அஸ்வினீ, பரணி, கிருத்திகா, ஆருத்ரா, கங்கா, நர்மதா காவேரி, ஸரஸ்வதீ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் பெயர்களில் காணலாம். இந்துக்கள் எல்லா இயற்கைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டுவர். இதிலிருந்து மநு மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவாகிறது

 

 

7.இத்தகைய பெயர் சூட்டும் முறையும் ஏனைய பண்பாட்டில் இல்லாததால் இந்துகள் அனைவரும் இங்கு தோன்றி ஒரே கலாசாரத்தை உருவாக்கினர் என்பது பொருத்தமாகும்.

8.வியாதிகள் பற்றி மநு எச்சரிப்பது ஆரோக்கிய வாழ்வை விரும்புவோரின் பட்டியலில் மநுவும் ஒருவர் என்பது புலனாகிறது.

 

9.மூன்று வேதங்களைப் பயின்றோர் த்ரிவேதி;

நான்கு வேதங்களைப் பயின்றோர் சதுர்வேதி;

இரண்டு வேதங்களைப் பயின்றோர்  த்விவேதி என அறியப்பட்டனர். ஒரு வேதத்தைப் பயின்றோர் கூட அரிதாகி வரும் நாளில் பெயரளவுக்கே த்ரிவேதி,சத்ர்வேதி முதலிய பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அத்தகையோர் ஒருகாலத்தில் இருந்தனர்.

  1. பெண்களின் வருணனையில் அன்ன நடை யானை நடை முதலியன சங்கத் தமி ழ் இலக்கியத்தில் இருக்கிறது ஆக இமயம் முதல் குமரி வரை சிந்தனை ஒன்றே. அதுமட்டுமல்ல இக்கருத்துகள் வேறு கலாசாரத்தில் இல்லாததால் பாரத கலாசாரம் இங்கே தோன்றி இங்கே வளர்ந்தது என்பதையும் அறிக.

தொடரும்……………