திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17.24
Post No. 5671

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Jyeshta picture, posted by Lalgudi Veda

திருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.

திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.

JYESHTA DEVI POSTED BY  LALGUDI VEDA

தேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)— பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.

திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை  ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட   ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.

மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய– திருமகளைப் பாடிய — திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.

இதோ  திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்

179, 519, 617, 920

அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு-179

பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு – 519

உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – 920

விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..

இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.

இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.

இதோ முகடிக் குறள்கள்

617, 936

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்- 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.

அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால் மூடப்பட்டார் -936

சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்

இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.

Tags– ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்

–சுபம்–

Leave a comment

Leave a comment