சங்கீத ஞான சூன்யம்! (Post No.4447)

Written by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  20-17

 

 

Post No. 4447

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபல வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் சக்கைப்போடு போடுவார். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த வீட்டுக்காரர் சிறுவயது மேதை மிஸ்சாவை அழைத்து ‘வயலின் வாசித்துக் காட்டு. எல்லோரும் கேட்கட்டும்’ என்றார். அவரும் தனது முழுத் திறமையைக் காட்டுவதற்காக உலகப் புகழ்பெற்ற சங்கீத மேதை, பியானோ கலைஞர், சாஹித்ய கர்த்தாவான பீதோவனின் (Ludwik Beethoven’s Sonata) ஒரு வயலின் பாடலை வாசித்தார். அந்தப் பாட்டில் நிறைய இடைவெளிகள் (stops, Pauses) வரும். அதாவது சில வினாடிகள் அமைதி நிலவும்.அதை வாசித்தபோது எல்லோரும் மெய் மறந்து கேட்டனர். அந்தக் குழுவில் சங்கீத ஞான சூன்யப் பாட்டி ஒருத்தியும் இருந்தார். அவர் ஏன் இந்தச் சின்னப் பையன் இப்படி நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான் என்று கவலைப்பட்டார். எல்லோருக்கும் முன்னால், மெதுவாக நடந்து சென்று எஸ்சாவின் முதுகில் தட்டிக்கொடுத்து “டேய் பையா, உனக்கு தெரிந்த பாட்டை வாசியேன்டா, ஏன் சிரமப்டுகிறாய்?” என்று சொன்னார்.

 

இதை எஸ்சா  எல்மானே எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இது அவருடைய இளம் வயதில் நடந்த நிகழ்ச்சி.

 

சங்கீத சாம்ராஜ்யம்

ஜஸ்சா ஹைபிட்ஸ் (Jascha Heifitz) முதல் முதலில் நியூயார்க்கில் வாசித்த வயலின் கச்சேரிக்குப் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அது நல்ல சுகமான வசந்த காலம். புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஜோசப் ஹாப்மான் அருகில் மற்றொரு புகழ் பெற்ற வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) உட்கார்ந்திருந்தார். கச்சேரி சூடுபிடித்தது. எல்லோரும் வாயில் கொசு, ஈ புகுந்தாலும் தெரியாத அளவுக்கு மெய்மறந்து கேட்டனர். ஆனால் எல்மானுக்கு வியர்த்து விறுவிறுத்தது. உட்கார முடியவில்லை; கச்சேரி நல்ல படியாக அமைய வேண்டும் என்ற கவலை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கைவிரல்களை சட்டைக்குள் விட்டுக் குடைந்து கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோசப் இதை கவனிப்பதையும் அவர் அறிவார்.

 

ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு துவங்குவதற்கு முன்னர் இருந்த இடைவெளியில் ஜோசப்பைப் பார்த்து, அவர் காதில் ரஹஸியமாக,

“ஒரே புழுக்கமாக இருக்கிறதல்லாவா? ஒரே வியர்த்துக் கொட்டுகிறதல்லவா? “ என்றார்.

 

அவர் சிரித்துக் கொண்டே காதில் முனகினார்:

‘பியானோக்காரர்களுக்கு வியர்க்காது’ என்றார்.

xxxxxx

என் வயலின் காலை வாரிவிடவே விடாது

சாம் வார்ட் (Sam Ward) என்பவர் புகழ்பெற்ற இதாலிய வயலின் மேதை நிக்கலோ பகனீனி (Niccolo Paganini) பற்றி ஒரு கதை சொல்லுவார்:

 

மற்றொரு இசை மேதை ஒரு நண்பரை அழைத்து வந்திருந்தார்.

உங்கள் நண்பருக்கு சங்கீதம் பிடிக்குமா? என்றார்.

அவர் ஆமாம் என்று சொன்னவுடன், பகனீனி ஒரு கிதாரை எடுத்தார். நாளைய கச்சேரிக்கு நான் பயிற்சி செய்வதை அவரும் கேட்கட்டும் என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். அரை மணி நேர வாசிப்பில் பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினார். அவருடைய கிதார் பேசியது, பாடியது, உறுமியது, கெஞ்சியது கொஞ்சியது, மிஞ்சியது, விஞ்சியது ஆனந்தக் கூத்தாடியது. கேட்டவர்கள் எல்லோரும் அசந்தே போயினர்.

  

உடனே வந்திருந்த பிரபல மேதை, அடடா, அடடா, அப்படியானால் நாளைய வயலின் கச்சேரிக்கு எப்போது பிராக்டீஸ் செய்யப்போகிறீர்கள்; அதையும் கேட்க ஆசை என்றார்.

பகனீனி சொன்னார்:

“ஆங்! தேவையே இல்லை! என் வயலின் என்னை என்றைக்கும் காலை வாரிவிடாது.”

 

அந்த அளவுக்கு வயலின் வாசிப்பு அவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் கலந்திருந்தது. அவ்வளவு நம்பிக்கை!

 

–Subham —

 

Audience who don’t know Music! (Post No.4446)

COMPILED by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-24 am

 

 

Post No. 4446

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Instrumentalists  Anecdotes -3 (In the past two days I have posted  many instrumentalists’ anecdotes)

 

PIANISTS DON’T FEEL HOT!

There is a legend which would have it that, when Jascha Heifetz made his triumphant New York debut among the audience were other violinist Mischa Elman and the distinguished pianist Josef Hofmann. The hall was crowded and it was an evening in spring. The concert progressed and the audience was spellbound by the genius of Heifetz. As the music went on, Elman became increasingly nervous and fidgety, running his finger frequently around the inside of his collar and mopping at his forehead with a hand kerchief. In the pause between two selections, he leaned over and whispered to Hofmann

“Awfully hot in here, isn’t it?”

Hofmann smiled and whispered back, “Not for pianists”.

 

Xxx

Audience who don’t know music!

Mischa Elman, the violinist, takes delight in telling the following story,

While visiting the friend of a family I was asked to play something to the assembled group of people. For an urchin of seven, as I was at that time, I flatter myself I rattled off Kreutzer Sonata of Beethoven’s finely. The sonata has in it several long and impressive rests. In one of these rests a motherly old lady leaned forward, patted my shoulder and said,

“Please try something you know, dear “

 

Xxx

I Don’t Care!

Jascha Heifetz arrived in great haste at Radio city, perilously near being late for a radio concert with the NBC Symphony Orchestra. He hastened into the elevator carrying his violin in its case.

“You will have to go in the freight elevator with that”, said the operator.

“I have no time, said Heifetz, I am in a hurry”.

“I don’t care”,said the operator.

“All musicians with instrument s have got to ride in freight elevator”.

“Look ,said the exasperated musician, I am Jascha Heifetz”.

“I don’t care if you are Rubinoff, said the operator, you have got to ride in the freight elevator”.

 

Xxx

MUSICAL CATARACTS IN NORWAY

Ole Bull, celebrated 18th century Norwegian violinist, was a man of singular and beautiful simplicity of character. He spoke English with much expression and had quaint turn s of dialect as original as they were unstudied. He was describing the grandeur of the hills and fiords of his native land and its deep forests resounding with musical cataracts when someone exclaimed,

“Did you play to them, Ole?”

“No, he replied, I listened “.

Xxxx SUBHAM xxx

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை? (Post No.4445)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-02 am

 

 

 

Post No. 4445

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 3

முதல் இரு கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

 

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?

 

ச.நாகராஜன்

அத்வைத விளக்கத்தில் ராக, த்வேஷாதிகளைப் பற்றிப் பார்ப்போம்

*

 

ஐயா, அத்வைத விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்.மூன்று கரணங்கள் என்று சொன்னீ ர்கள் அல்லவா, அவற்றிற்கு ஸ்வயமாகவே கர்த்ருத்வம் உண்டா?

ஸ்வயமாக இல்லை. ராக, த்வேஷாதிகளால் பிரேரேபிக்கப்படுவதனால் உண்டாகிறது.

 

அப்படியா? ராக, த்வேஷாதிகள் எவை?

ராக,த்வேஷாதிகள் மொத்தம் பதினாறு.

ராகம், த்வேஷம், காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம், ஈருஷை, அசூயை, டம்பம், தருப்பம், அஹங்காரம்,

இச்சை, பக்தி, சிரத்தை என இவை பதினாறாகும்.

 

இவற்றைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!

ராகம் – பெண்களிடத்தில் சித்த விருத்தி

த்வேஷம் – அபகாரம் செய்தவனுக்கு பிரதியாக திருப்பிச் செய்ய ஆசைப்படுதல்

காமம் – பூமி, வீடு உள்ளிட்டவற்றை வாங்க, சம்பாதிக்க விரும்பல்

குரோதம் – மேற்படி இச்சையை அடைய எதிர்ப்பவரிடம் கோபித்தல்

லோபம் – பொருளை நல்ல காரியத்திற்காகச் செலவழிக்க விரும்பாமல் இருத்தல்

மோஹம் – பணச்செருக்கால் இன்னதைச் செய்யலாம், இன்னதைச் செய்யக்கூடாது என்பதை யோசிக்காமல் மந்த புத்தியுடையவனாக இருத்தல்

மதம்- செல்வச் செருக்கால் தன்னால் செய்ய முடியாத காரியமே இல்லை என்று எண்ணுதல்

மாச்சரியம் – செல்வத்தினால் தனக்குச் சமமாக இருக்கும் ஒருவனைக் கண்டு பொறாமை கொள்ளல்

ஈருஷை – பிறருடைய துக்கம் அவரை விட்டு நமக்கு எப்படி வந்தது என்று எண்ணுகிற சித்த விருத்தி

அசூயை – சுகம் தனக்கே உள்ளது (உரித்தானது), மற்றவர்க்கு இல்லை என்று எண்ணும் சித்த விருத்தி

டம்பம் – ஒரு தர்மம் செய்யும்போது அதில் தனக்கு பிரசித்தி அதிகம் உண்டாக வேண்டுமென்ற சித்த விருத்தி

தருப்பம் – தனக்குச் சமமானவனே இல்லை என்று எண்ணுதல்

அஹங்காரம் – சகல விஷயத்திலும் தனக்குச் சக்தி உண்டு என்று எண்ணுதல்

இச்சை – உண்ணல், கழிதல், கருமம் செய்ய விரும்பல்

பக்தி – குரு, நல்லோர், தேவதைகள் ஆகியோரிடமும் வேத வாக்கியத்திலும் ப்ரீதி கொள்ளல்

சிரத்தை – யாகம் முதலிய கர்மங்களில் நம்பிக்கை கொள்ளல்

இந்தப் பதினாறில் இச்சையைத் தள்ளுவது அசாத்தியம்; (முடியாத காரியம்)

பக்தி, சிரத்தை ஆகிய இரண்டையும் அனுஷ்டித்து, மற்ற பதிமூன்றையும் தள்ள வேண்டும்.

சரி, ஐயா, இந்த ராக, த்வேஷாதிகள் எதனால் வருகின்றன?

அபிமானத்தினால்

 

இந்த அபிமானம் எப்படி வருகிறது?

அவிவேகத்தினால்.

 

இந்த அவிவேகம் எப்படி உண்டாகிறது?

தனது உண்மையான சிதாத்ம ஸ்வரூபத்தை அனாதிகாலமாக மறைத்தலும், ஆத்ம ஞானத்தினாலேயே  நிவிருத்தியாகத் தக்கதுமாகிய அனாதி அஞ்ஞானத்தினாலும்.

இந்த அஞ்ஞானம் எப்படி வந்தது?

இது அனாதி என்று வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் இதற்குக் காரணம் சொல்வது முடியாது.

 

இந்த அஞானம் ஆதி இல்லாதது என்றால், அந்தமும் அதற்குக் கிடையாஞ்தா?

அஞ்ஞானத்திற்கு ஆதி இல்லை, உண்மை தான். ஆனால் ஆதி இல்லாவிட்டாலும் கூட அந்தம் உண்டு. எப்படி என்று கேளுங்கள்,

பிராகபாவத்திற்கு ஆதியில்லை, அந்தமுண்டு.

பிராகத்வம்சபாவத்திற்கு ஆதியுண்டு, அந்தமில்லை.

 

ஒன்றுமே புரியவில்லை, சற்று விளக்கமாகக் கூறுங்கள்!

சொல்கிறேன்.

குடம் உண்டாவதற்கு முன்னர் குடம் இல்லை எனப்படும் அபாவம் வெகு காலமாக இருக்கிறது.

குடம் இல்லை என்னும் அபாவ வாக்கியம் எப்போது உண்டாயிற்று என்பது தெரியாத போதிலும் கூட, குடம் உண்டானவுடனேயே ஆதி இல்லை என்கிற அபாவ வாக்கியத்திற்கு அர்த்தம் உண்டாகி விடுகிறது.

 

இது தான் பிராகபாவம் எனப்படுகிறது.

அடுத்து, நசிக்கச் செய்வதால் இல்லாமை உண்டாகிறது.

எப்படி என்று பாருங்கள். குடத்தை உடையுங்கள்.குடம் உடைக்கப்பட்டவுடன் குடம் இல்லாமை உண்டாகிறது.

உண்டான இல்லாமைக்கு அந்தமில்லை.

ஆகையால் இதுவே பிராகத்வம்ஸாபாவம்.

ஆகவே, வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றால் உண்டாகும் வியாதிகளுக்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும், மருந்துகளினால் அவைகளை நீக்கிக் கொள்ள முயல்வது போல, அஞ்ஞானத்துக்குக் காரணம் தெரியாவிட்டாலும் கூட,ஞானத்தினால் அது நாசமாகிறது. இது உண்மையே!

 

இந்த அஞ்ஞானத்தின் ஸ்வரூப லக்ஷணம் எப்படிப்பட்டது?

அது சத்துமல்ல; அசத்துமல்ல. அவயவம் உள்ளதல்ல; அவயவம் இல்லாததுமல்ல. இவ்விரண்டும் சேர்ந்ததுமல்ல. சேராததுமல்ல.

அது அநிர்வாச்சியம். அதாவது வாக்கினால் சொல்லத் தகுந்ததல்லாதது. (சொல்ல முடியாத ஒன்று)

ஏனெனில்,  ஸ்தூல ஆகாயமே சூக்ஷ்மமானது.

அதிலும் சூக்ஷ்மம்  (தன் மாத்திரை என்னும்) அபஞ்சீக்ருத ஆகாயம்,

அதிலும் சூக்ஷ்மம் சத்துவம் முதலிய குணங்கள்,

அவைகளிலும் சூக்ஷ்மம் அஞ்ஞானம்.

ஆகவே இப்படிப்பட்ட சூக்ஷ்மத்திற்கெல்லாம் மூல காரணமாக இருக்கின்ற காரணத்தினால் அவயவம் உள்ளதல்ல.

அன்றியும், அதுவே ஸ்தூல பதார்த்தமாகிய ஜகத்காரமாய் பரிணமிக்கின்ற காரணத்தினால்  அவயவம் இல்லாததுமல்ல.

இப்படி அநாதியாகவுள்ள அஞ்ஞானத்தினால் அவிவேகமும் – அவிவேகத்தினால் அபிமானமும் – அபிமானத்தினால் இராக த்வேஷாதிகளும் – இராக த்வேஷாதிகளால் கர்மமும் – கர்மத்தினால் சரீரமும் – சரீரத்தினால் சம்சார துக்கமும் – ஆத்மாவுக்குப் பரம்பரமாக வருகிறது.

ஆஹா!, ஐயா புரிகிறது, நன்றி!

***

புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’ (Post No.4444)

Written by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-38 am

 

 

Post No. 4444

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler  (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

அவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில்  அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

 

இசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்

விலை என்ன? இதன் விலை என்ன? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.

 

ஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.

பிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக? என்றார்.

 

நீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.

அடக் கடவுளே! நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.

“ஏ, மாப்ளே! அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம்   கடைக்குளதான் நடந்தது. கடையின்  மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.

 

ஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.

பெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம்? லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது!

 

xxxxx

 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!

“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா!”

 

டாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா! நீ பெரிய மேதை டா! என்றார்.

பூ, ச்சீ, மேதையா? என்ன சொன்னாய்?

உனக்குத் தெரியுமா? புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.

உடனே சாரசதே சொன்னார்:

“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா? 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்!!!”

 

(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?)

இசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.

 

xxxxx

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!

“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்!”– பெடெரெவ்ஸ்கி

 

போலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:

நான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.

 

நான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து  பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்! என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்!

 

TAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்

–SUBHAM–

Most Famous Violin ‘Thief!’(Post No.4443)

COMPILED by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  6-38 am

 

 

Post No. 4443

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Violin Practice-14 hours a day for 37 years!

Dr Axel Munthe, seated in the lounge of the Victoria Louise, was enthusiastically hailed by a brother physician.

What a genius you are! Thus the brother physician ended a long eulogy .

But Dr Munthe smiled and said, “A genius,eh? Well at his villa in Biarritz, Sarasate was once called a genius by a famous critic . But Sarasate (Spansih Violinist) frowned and shook his head.

“A genius!”,he said.

“For thirty seven years I have practiced fourteen hours a day, and now they call me a genius!”

Xxx

Audience knew it!!!

Paderewski once explained that he practiced faithfully every day. If I miss one day s practice,said he, I notice it. If I miss three days, the audience s notice it.

 

Xxx

 

‘Violin Thief!’

Fritz Kreisler, the violinist,found himself in Hamburg one evening with an hour to spare before taking his boat to London.

, where he was to play the following evening. So he wandered into a music shop.

The proprietor asked to see his violin which he carried under his arm. In a moment he disappeared, to reappear with two policemen. One laid his hand on Kreisler s shoulder and said,

“You are under arrest”.

“For what?” Asked Kreisler.

“You have Fritz Kreisler’s violin.”

“Well, I am Fritz Kreisler”.

“Come,come” said the policeman,

“You can’t pull that one on us . Come to the station”.

 

Kreisler s boat sailed in an hour.

He had to do some quick thinking.

“I looked around, he says, and in the corner, I saw a victrola. I asked the proprietor if he any of Kreisler s records, he produced The Old Refrain, put it on for me and played it through.”

“Now, I said, let me have my violin. Then with whatever skill I may command I played The Old Refrain. When I was through I said, Are you satisfied now?”

With profuse apologies, they bowed him out to freedom.

 

Xxx

World’s Greatest Violinist!

It is said that Jescha Heifetz and Mischa Elman were dining together in a restaurant much frequented by artists. The waiter approached the table with an envelope which bore simply the inscription

To the worlds greatest violinist

Heifetz, who has picked it from the tray bowed and handed it across the table and said

“For you,Mischa”

Elman read it and said “No,no” and handed it back

“Something for you,Jascha”.

Thus they shilly shallied back and forth until finally Heifetz was persuaded to open it. He drew out the letter and unfolded it.

It began,” Dear Fritz”.

(Fritz Kreisler was a famous Austrian born violist)

Xxxx SUBHAM xxxx

 

மலேசியாவின் கவலை! (Post No.4442)

 

Written by S.NAGARAJAN

 

 

Date: 29 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-34 am

 

 

 

Post No. 4442

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இஸ்லாமிய சர்ச்சை

மலேசியாவின் கவலை!

ச.நாகராஜன்

 

இன வாதம் மற்றும் மதச் சண்டைகளால் நாட்டின் ஒற்றுமையும் அமைதியும் பாதிக்கப்படுவதாக மலேசியாவின் ஆட்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

சமீப வாரங்களில் சில தனி நபர்களின் செயல்கள் பொறுத்துக் கொள்ளக் கூடிய நாகரிகத்தையும் தாண்டிச் சென்று விட்டதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த செயல்கள் இஸ்லாமின் பெயரால் செய்யப்படும் போது அது விளைவிக்கும் சேதம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

ஒரு மதமாக தனது மதத்தினருக்கு மரியாதையையும் நிதானத்தையும் கற்பிக்கும் இஸ்லாம் சில  குழுக்களாலும் தனி நபர்களாலும் நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

 

இந்த அறிக்கை ஜோஹாரின் சுல்தான், சுல்தான் இப்ராஹிம், சுல்தான் இஸ்கண்டர், ராஜா முடா ஆஃப் பெர்லிஸ், துங்கு சையத் ஃபைஸுதின் புத்ர ஜமாலுல்லைல் ஆகியோர் எடுத்த நிலையைப் பிரதிபலிக்கிறது.

 

***

முஸ்லீம்களுக்கு மட்டும் என்ற நிலையை மலேசியா வாழும் லாண்டரிக்காரர்கள் சிலர் எடுத்த நிலைப்பாட்டால் மலேசிய ஒற்றுமையும் அமைதியும் குலையும் தருணத்தில் மேற்கண்ட அறிக்கை வெளியாகியுள்ளது என்பதை நிருபர் குறிப்பிடுகிறார்.

 

எங்கு நோக்கினாலும் பிடிவாதமும் தீவிரவாதமுமே வழி என்று இருக்கும் இஸ்லாமியருக்கு மலேசிய ஆட்சியாளர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

 

அஸ்வின் குமாரின் முழு செய்தி அறிக்கையின் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்.

***

 

The Muslim Malaysian Medicine :

 

Report dated 10-10-2017

 

The Malay Rulers have expressed concern that unity and harmony in the country is eroding following a series of racial and religious controversies.

 

Keeper of the Rulers’ Seal Tan Sri Datuk Seri Syed Danial Syed Ahmad in a statement yesterday said the Rulers found that in recent weeks, the actions of certain individuals had gone beyond all acceptable standards of decency, risking the harmony that currently exists within the country’s multi-religious and multiethnic society.

 

“The Rulers are of the opinion that the damaging implications of such actions are more severe when they are erroneously associated with or committed in the name of Islam.”

 

As a religion that encourages its followers to be respectful, moderate and inclusive, the reputation of Islam must not be tainted by the divisive actions of certain groups or individuals which may lead to rifts among the rakyat,” the statement read.

 

The statement echoed the stance taken by the Sultan of Johor, Sultan Ibrahim Sultan Iskandar, and the Raja Muda of Perlis, Tuanku Syed Faizuddin Putra Jamalullail, in prohibiting Muslim-only launderettes in both states.

 

“After 60 years of independence, we must continue to act in accordance with the principles embodied within the Constitution and manifested in the spirit of the Rukun Negara,” the Rulers stressed. They added that the Rukun Negara, which outlined five guiding principles for the country, must continue to serve as a compass to all citizens including leaders and government officials.

Meanwhile, the Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism (MCCBCHST) president Datuk R. S. Mohan Shan said the statement from the rulers was timely, reports Ashwin Kumar.

 

“This country is famous for its unity and harmony. Any incident which degrades the harmony among the people should not be tolerated and that is what the rulers want checked,” he said. Mohan also pointed out that Sultan Ibrahim made the right decision when he expressed dismay over the laundrette’s move. The laundrette owner then apologised and agreed to abide by Sultan Ibrahim’s decree.

 

(Rulers concerned over growing intolerance– newsdesk@ thesundaily.com, 10 October 2017,Ashwin Kumar).

***

 

தனித்தனியே ஆங்காங்கு வெவ்வேறு நாடுகளில் நிகழும் சம்பவங்கள் பலவற்றை உலகமே உற்று நோக்கி வருகிறது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியை ஆய்ந்து வருகிறது.

இவை தெரிவிக்க வரும் செய்தியை யார் வேண்டுமானாலும் சுலபமாக உணரலாம்.

***

My Violin Never Fails Me-Paganini (Post No.4441)

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 18-27

 

 

Post No. 4441

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Instrumentalists Anecdotes

Dull wit becomes a Genius!

Once when Paderewski played before queen Victoria, the sovereign exclaimed with enthusiasm,

“Mr Paderewski ,you are a genius !”

“Ah, Your Majesty, perhaps, but before I was a genius , I was a drudge.”

(DRUDGE= ONE WHO DOES A MENIAL, HARD WORK)

Xxxx

Violin and Guitar

Sam Ward told this story of Paganini,

The master held a guitar across his lap,

Your young friend is musical?,enquired he.

Fanatico!, replied Gear.

Then he shall hear me practice for tomorrow night’s concert

Taking the guitar he converted that little understood instrument into an orchestra of bewildering and harmonic sonority. Now it seemed a battle, with the clash of swords, shouts of combatants, the roll of the drum. Then wails of pain and grief appeared to emerge from the sounding board over which his fingers flew like what the westerners call greased lightning. The performance lasted perhaps half an hour, and the dampness of his dishevelled locks indicate d the intensity of the emotion and the exertions that expressed it.

When the mastero received, with a sad smile, our frantic applause, I inquired whether he was going to rehearse on the violin for the morrow. He shook his head, I never rehearse the violin. My practice is the gymnastics of the guitar, to be sure of my suppleness of finger and delicacy of touch. My violin never fails me.

 

Xxx

Who is a good pianist?

Paderewski was once traveling incognito through Germany. He stopped for the night at a small in the Black Forest. In the main room of the inn was an old battered piano. Paderewski asked the landlord if he might try it. Upon doing so he found that the instrument was not only badly out of tune but that a number of the keys were stuck and would strike no sound at all. He remarked upon this to the landlord. The latter, offended  at the criticism of his piano replied, if you were a good pianist you could skip over those keys so it wouldn’t matter.

 

Xxxx

Get Married!

A young lady called one day on Rubinstein,the great pianist, who had consented to listen to her playing.

What do you think that I should do now?, she asked when she had finished.

Get married, was Rubinstein’s answer.

Xxxx Subham xxx

 

 

பெண்டாட்டி தாசன், ராமானுஜ தாசனாக மாறிய சுவைமிகு கதை (Post No.4440)

 

COMPILED by London Swaminathan 

Date: 28 NOVEMBER 2017 

Time uploaded in London- 6-43 am

Post No. 4440

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளை உறங்காவில்லியார் சரிதத்தை கண்ணபிரான் பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டில் அழகான தமிழ் நடையில் எழுதியுள்ளார். ஆகையால் அதை அப்படியே இணைப்பாகக் கொடுக்கிறேன். பெண்டாட்டிதாசனாக இருந்த உறங்காவில்லி, ராமானுஜ தாசனாக மாறிய கதை மிக உருக்கமான கதை. சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் போல வைணவ மரபில் இவர் ஒரு வேடர் குல அடியார் ஆவார்.

இரண்டாவது பகுதியில் ஜாதியில் உயர்ந்ததாக நினைத்த அடியார்களுக்கு ராமானுஜர் தன் வழியில் பாடம் கற்பித்த ஒரு சம்பவமும் வருகிறது.

.இரண்டு சம்பவங்களும் மிக உருக்கமான சம்பவங்கள். அனைவரும் படித்து ஆனந்தமடைய வேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

—Subham–

 

 

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***

31 Quotations from Tirukkural of Tiruvalluvar (Post No.4438)

Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 16-28

 

 

Post No. 4438

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

December 2017 ‘Good Thoughts’ Calendar

31 Quotations from Tamil Veda Tirukkural of Tiruvalluvar, Great Tamil Poet.

 

Important Days- 2-Kartikai Deepam; 11-Bharati’s Birth Day; 25-Christmas; 29- Vaikunda Ekadasi

Auspicious Days- 7, 13

Ekadasi Fasting Days- 13, 29.

New Moon/amavasyai-17/18

Full Moon/ Purnima- 3

December 1 Friday

Just Rule: The world clings to the feet of the great leader who wields his sceptre with love for his subjects (Kural 541)

December 2 Saturday

Miracle: Rains and harvests are rich in the land ruled by the righteous sceptre of an able leader (Kural 545)

December 3 Sunday

Vigilance: He who is not forearmed against coming danger, shall repent his fault at the end (535)

December 4 Monday

Success: Concentrate the mind upon what you want to achieve; it becomes easy then to attain (540)

December 5 Tuesday

Sharing with Kith and Kin: The crow invites its kind to share its prey without concealing it; fortune abides only with men of a similar nature (527)

 

December 6 Wednesday

Employing: Entrust affairs to men of four virtues: loyalty, intelligence, clear vision and non-craving (513)

December 7 Thursday

Suspicion: Fortune forsakes the leader who suspects the loyalty of him that endeavours to carry out a design (kural 519).

 

December 8 Friday

Selecting and Entrusting: Apply four tests in choosing genuine officers:Virtue, wealth, pleasure and fear of death (501)

 

December 9 Saturday

Greatness: A man’s deeds are the touch stone of his greatness and littleness (505)

December 10 Sunday

TRUST: Never trust a man without testing him; when the test is over, decide what you can entrust him with (Kural 509)

 

December 11 Monday

Crocodile Tactics: In deep waters the crocodile overpowers all; out of waters, others overpower it. (495)

December 12 Tuesday

Elephant and Fox (BE TACTFUL) : A fierce elephant that has faced lancers, can be foiled by a fox, if it is stuck in a marshy grounds (Kural 500)

December 13 Wednesday

TACTIS: The sea sailing ship cannot move on land. The strong wheeled high chariot cannot run on water (Kural 496)

December 14 Thursday

Time of Action: The crow defeats the owl during daytime. The leader seeks right time to quell the enemy (481)

December 15 Friday

Right Time: One can even win the world if he chooses the proper place and acts in the right hour (484)

 

December 16 Saturday

Time and Ram: The quiescence of a strong man is like the step back of a fighting ram before charging (Kural 486)

December 17 Sunday

Heron and Time: In adverse time feign peace and wait like a heron; strike like its peck when the time is opportune (490)

December 18 Monday

Overloading (FORETHOUGHT): The axle of an over loaded cart breaks by adding even a gentle peacock’s feather (475)

December 19 Tuesday

Thrift (SAVE THE MONEY): His amassed wealth will quickly vanish who lavishes it without thrift, upon needless things (480)

December 20 Wednesday

To be or Not to be (TAKE DECISIVE ACTION, DON’T DELAY): It is ruinous to do what should not be done; and ruinous also to omit what should be done (466)

 

December 21 Thursday

Have Good Company:-Purity of heart and purity of action both come from good company (455)

 

December 22 Friday

Greatmen:-The leader who has worthy friends and acts ably, has nothing to fear from terrible enemies (Kural 446)

December 23 Saturday

Supporters:-There is no profit without capital; there is no stability for a leader without strong supporters (449)

December 24 Sunday

Self-Introspection: Let a man cure his faults and then scan others’. Who then can find fault with him? (Kural 436)

December 25 Monday

Boasting: Never extol yourself in any mood nor do any act that is good for nothing (439)

 

December 26 Tuesday

Wisdom: Wisdom is a weapon which defends against decline; it is the inner fortress that baffles the enemy’s entry (421)

December 27 Wednesday

Do in Rome as Romans do:- To live in conformity with the world is wisdom (426)

December 28 Thursday

Listen:- Listen to whatever is good, however little; little as it may be, it will bring you much greatness.

 

December 29 Friday

Depression:- Though a man has no learning, let him listen; like a staff , it will support him in his depression

December 30 Saturday

Wise discourses: Polite speech is difficult for those who do not listen to wise discourses (419)

 

December 31 Sunday

Lady without breasts: The unlettered man aspiring to speak (in public platforms) is like a lady without her two breasts courting love. (Tirukkural couplet 402)

January First 2018 Monday- HAPPY NEW YEAR

–Subham–