Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
26-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
கோலாகல கோலாலம்பூர்!
ச.நாகராஜன்
குதூகலம் தரும் கோலாலம்பூர்
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியாவில் உள்ள கோலாகலமான கோலாலம்பூரை அறியாதவர் இருக்க முடியாது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளான பழமை வரலாற்றைக் கொண்ட மலேயாவுடனான இந்திய நாட்டின் பண்பாடு மற்றும் வர்த்தக வரலாறும் மிகப் பழமையானது.
மலாயா என்பது ஹிமாலயா என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்பது தொடங்கி மலாயா என்றால் மலைகள் அடங்கிய பிரதேசம் என்பது வரை பல்வேறு காரணங்கள் இதனுடைய பெயர்க் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
127,724 சதுரை மைல் பரப்பளவுள்ள மலேசியாவின் இன்றைய ஜனத்தொகை மூன்று கோடியே 28 லட்சம். சராசரி உஷ்ணநிலை 27 டிகிரி செல்ஸியஸ்.
பிரிட்டிஷாரின் பிடியில் காலனியாக இருந்த மலாயா 1957 ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. வட போர்னியோ, சராவக், சிங்கப்பூர் ஆகிய மூன்று காலனிகளாக அமைந்திருந்த இது 1963 செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியாவாக தனி நாடாக ஆனது.
மலேசியா என்றவுடன் பத்துமலை முருகன் கோவில் தான் நமது நினைவுக்கு முதலில் வரும் இடம். குன்று தோறும் ஆடி வரும் குமர வடிவேலனைத் தரிசித்து அதிலிருந்து மலேசியா டூரைத் தொடங்குவதே முறை.
பத்துமலை முருகன் கோவில்
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் பத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.
அது அமைக்கப்பட்ட காலத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள மலை என்ற புகழைப் பெற்றது. 140 அடி உயரமுள்ள தெய்வீக முருகன் பல்லாயிரக்கணக்கான மக்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலித்தார்; அருள் பாலித்து வருகிறார். (இப்போது சமீபத்தில் சேலம் ஆத்துரை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள முருகன் 146 அடி உயரமுள்ள முருகனாக அமைந்து உலகிலேயே உயரமானவராக ஆகிறார்.)
இங்குள்ள குகைக் கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன.
அருகிலே பத்து ஆறு ஓடுகிறது. அதன் அடிப்படையில் பத்து மலை முருகன் என்ற சொல் தோன்றியது.
நாகப்பட்டின பக்தர் ஒருவர் 1890இல் அங்கு ஒரு வேலை வைத்து வழிபடலானார். அது பெருமளவில் மக்களை ஈர்த்து பெரும் கோவிலாகக் காலப்போக்கில் உருவானது.
1500 கனமீட்டர் சிமெண்ட், 250 டன் எஃகு கம்பிகள் ஆகியவற்றோடு 300 லிட்டர் தங்கக் கலவையால் அமைக்கப்பட்ட பொன்னொளிர் முருகனின் பக்தர்கள் லட்சோபலட்சம் பேர்கள்.
தைப்பூசத் திருவிழாவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தரைமட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்தில் உள்ள கோவிலை அடைய 274 படிக்கட்டுகளுடன் கூடிய பாதை உண்டு.
இந்த விழா நடக்கும் போது கோலாலம்பூர் கோலாகலமாகத் திகழும்.
இங்கு நேர்த்திக்கடனாக அலகு குத்துதல் நடக்கும்; காவடிகள் எடுக்கப்படும். தமிழகத்திலிருந்து பலர் இங்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவதும் உண்டு. மலேசியா வாழ் சீனர்களும் இப்படி தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் அலகு குத்துதல், காவடி எடுத்தலை மேற்கொள்வது குறிப்பிடத் தகுந்தது.
பத்துமலையின் இடப்புறத்தில் இராமாயண குகை உள்ளது. இங்கு செல்லும் வழியில் 50 அடி உயரமுள்ள அனுமார் சிலையைக் காணலாம். அனுமார் கோவிலும் உள்ளது. இந்த குகையில் ராமபிரானின் வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாகக் கண்டு மகிழலாம்.
கோலாலம்பூரில் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு என ஏராளமான இடங்கள் உள்ளன.
துங்கு அப்துல் ரஹ்மான் தேசீயப் பூங்கா
மலேசியாவின் முதல் பிரதம மந்திரியான துங்கு அப்துல் ரஹ்மான் பெயரில் திகழும் இந்தப் பூங்கா ஐந்து தீவுத் தொகுதிகளைக் கொண்டது.
வெள்ளை வெளேரென உள்ள மணலையும் பவழப் பாறைகளையும் கொண்டுள்ள கயா தீவு, அழகிய கடற்கரையைக் கொண்டுள்ள மனுகன் தீவு உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரளாகக் கூடி மகிழ்வது வழக்கம்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட்டம் அதிகமாகும்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்
உலகின் உயரமான கோபுரங்களில் ஒன்று பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம். 88 மாடிகளைக் கொண்டுள்ள இதன் உயரம் 1483 அடி. 41 மற்றும் 42 மாடிகளில் இது இரண்டையும் இணைக்கும் வானூர்தி பால இணைப்பைக் கொண்டுள்ளது. இங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மேலிருந்து நகரின் அழகைப் பார்த்து மகிழலாம். அருகில் அமைந்துள்ள பூங்காவான கே எல் எல் சி பூங்காவில் நீர் விளையாட்டுக்கள் உண்டு. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் அது ஒளிரும்.
கே எல் டவர்
பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த கோபுரம் மலேசியாவின் தொலைத்தொடர்பு சேவைக்கான இடமாகும். இதன் உயரம் 1381 அடி.
வானளாவிய கோபுரங்கள் பல கொண்ட மலேசியாவில் மிக உயரமான கட்டிடம் மெர்டெகா டவர். இதன் உயரம் மலைக்க வைக்கும் 2227 அடி. இது 118 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டிடம்!
இங்கு புக்கிட் நானாஸ் காடு என்ற வனப்பகுதி 9 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோலாலம்பூரில் இதயப் பகுதியில் இருக்கும் இது ஜாக்கிங், ட்ரெக்கிங், காட்டு வழிப் பாதை நடை உள்ளிட்ட பயிற்சிகளுக்குச் சிறந்த இடம். இங்குள்ள மூலிகைத் தோட்டம் புகழ் பெற்ற ஒன்று.
பெர்ஜயா டைம் ஸ்குயர்
இந்த தீம் பார்க்கில் சுமார் 24 ரைடுகள் உள்ளதால் இது குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்குள்ள சாகஸ பூங்கா பல அம்சங்களைக் கொண்டு அனைவரையும் கவரும் என்பதால் நிறைய நேரம் ஒதுக்கிக் குழந்தைகளுடன் சென்று மகிழலாம். அத்தோடு இங்கு கடைகளும் உள்ளதால் ஷாப்பிங்கையும் முடித்து விடலாம்.
லிட்டில் இந்தியா
லிட்டில் இந்தியா செல்லாமல் கோலாலம்பூர் பயணம் முடிவுற்றதாக ஆகாது. ஏராளமான கடைகள் நமது தமிழ்நாட்டுக் கடைகளை நினைவூட்டும். இங்குள்ள கடைவீதியில் நடந்து சென்று நமக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். தமிழில் பேசும் வியாபாரிகள் அதிகம் உண்டு. உணவு விடுதிகளும் இங்கு உண்டு. இதே போல சீன பாரம்பரியத்தின் அடிப்படையிலான ஒரு இடம் சைனா டவுன்.
கோலாலம்பூரில் உள்ள பெட்டாலிங் வீதியில் சீனாவில் தயாராகும் அனைத்துப் பொருள்களையும் பார்த்து வாங்கலாம். இரவிலும் இயங்கும் இடம் இது.
தரத்தைச் சோதித்து விலை சரியானது தானா என்று பார்க்கும் அடிப்படைத் தகுதி வாங்குபவர்களுக்கு இங்கு தேவை.
புக்கிட் பெண்டாங்
இரவு நேர கிளப்புகளுக்கும் களியாட்டங்களுக்கும் பிரபலமான இடம் புக்கிட் பெண்டாங். பல கேளிக்கை நிகழ்ச்சிகள் இரவைச் சூடாக்கும். பல மால்கள் உள்ள இடம் என்பதால் ஷாப்பிங் செய்ய சரியான இடம் இது.
மூங்கில் மற்றும் தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டுள்ள இங்குள்ள கைவினைப் பொருட்கள் பயணிகளைக் கவரும். பெண்களுக்கோ எனில் அழகிய வண்ண ஆடைகள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட காலணிகள், நீரைக் குளுமையாக வைத்திருக்கும் மண் ஜாடிகள், இன்னும் மலேசியப் பயண நினைவாக அமையும் நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே கடைகளில் வாங்க முடியும். விலையும் நியாயமானது தான்!
லங்காவி தீவு
சற்று அதிக நாட்களை மலேசியப் பயணத்திற்கு ஒதுக்க நினைப்பவர்கள் 104 தீவுக் குழுமமான லங்காவி தீவிற்குச் செல்லலாம்.
கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு கொண்ட இடம் இது.
(ஹெ)லாங் என்பது ஒரு வகைப் பருந்து. காவி என்பது வண்ணத்தைக் குறிக்கும். காவி வண்ணப் பருந்து ஒன்று ஒரு கல்லை கொத்துவதை மீனவன் ஒருவன் பார்த்தான். அதனால் லங்காவி என்ற பெயரை இந்தத் தீவு பெற்றது.
இன்னொரு காரணமும் கூறப்படுகிறது : பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதை ஆண்ட லங்காசுக்கா வம்சத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் உருவானதாம்!
ஃபெர்ரி சர்வீஸ் மூலமாக இதை கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். விமான தளமும் உள்ளது.
இத் தீவைப் பற்றிய பல மர்மக் கதைகள் உள்ளன. ம(ஹ்)சூரி என்ற ஒரு பெண் பற்றிய நீண்ட கதையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஏழு தலைமுறையைக் கடந்த கதை இது.
கதையின் சுருக்கம் இது:
தாய்லாந்தில் புக்கெட் பகுதியில் பாண்டக் மாயக் மற்றும் மாக் ஆண்டக்கிற்கு மூன்றாவதாகப் பிறந்த பெண் மசூரி. இந்தக் குடும்பத்தினர் அங்கிருந்து லங்காவி தீவிற்குக் குடி பெயர்ந்தனர். பேரழகியான மசூரி 1762 முதல் 1800 வரை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவளை வான் டாரூஸ் என்ற ஒரு போர்வீரன் மணந்தான். அவன் சயாமில் நடந்த ஒரு போரில் பங்குகொண்டு சயாமுக்குச் சென்றான். அந்தக் காலத்தில் மசூரியிடம் ஒரு இளைஞன் பேசலானான்.
மசூரியின் பேரழகைக் கண்டு பொறாமை கொண்ட அவளது மாமியார் அவளது ஒழுக்கத்தைக் குறித்துத் தவறான வதந்தியை ஊர் முழுவதும் பரப்பவே ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவளை ஒரு மரத்தில் கட்டினர். அவளை வாளால் வெட்டினர். ஆனால் அவள் இறக்கவில்லை. தன்னை குடும்ப ‘க்ரிஸ்’ என்று சொல்லப்படும் வாளினால் வெட்டினால் மட்டுமே கொல்ல முடியும் என்று அவள் சொல்லவே, அவளது சொல்லைக் கேட்டு அவளது குடும்ப வாளால் அவளை வெட்டினர். அவளது உடம்பிலிருந்து வெள்ளையாக ரத்தம் வழிந்தோடியது. அவள் இறந்தாள். அவள் இறக்கும் போது, செய்யாத ஒரு குற்றத்திற்காக தன் மீது கேவலமான ஒரு பழியைச் சுமத்தித் தனக்கு அநியாயமான தண்டனை கொடுத்ததற்காக, ‘ஏழு தலைமுறைக்கு இந்த தீவு வளங்குன்றி நாசமுறும்’ என்று சாபம் கொடுத்தாள். அன்றிலிருந்து ஏழு தலைமுறை லங்காவித் தீவு வெறிச்சோடி வளம் குன்றிப் பொலிவை இழந்தது.
இங்கு வரும் பயணிகள் அனைவரும் மசூரியின் கல்லறைக்குச் செல்வது வழக்கம். மசூரியின் கதை உண்மை என்றும் ஏழு தலைமுறையாக வெறிச்சோடி வாடிக் கிடந்த லங்காவி, சாபம் தீரப் பெற்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் தான் வளமடைய ஆரம்பித்தது என்றும் இந்த தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர். அது அவர்களின் திடமான நம்பிக்கை.
சில வார்த்தைகளில் மலேசியா
மலேசியாவைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று மலேசிய அன்பர்களைக் கேட்டால் அவர்கள் கூறுவது :
சொர்க்கத்தின் வாயில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் தவித்த நான், அது மலேசியாவில் தான் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன்.
ஊழிக்காலம் வரும் வரை இங்கு மலேசியாவில் நடக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்!
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வளத்துடனும் செல்வத்துடனும் மனநிம்மதியுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான் ஹிந்து மதம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்.
இதற்கென ஏராளமான அருமையான வழிகளையும் உத்திகளையும் வழிகாட்டுதலையும் அது தருகிறது.
ஹிந்து மத சாஸ்திரங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு உண்டு என்பதை வலியுறுத்துகின்றன.
சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகம் ஒன்று தரும் அரிய செய்தி இது:
இதன் பொருள்: உலகில் உள்ள மற்ற சாஸ்திரங்கள் எல்லாம், மனிதருக்கு ஒரு வழியில் விநோதமாத்திரமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவனுக்கு ஆபத்து வரும்போது எந்த ஒரு வேடிக்கை சாஸ்திரமும் அவனைக் காப்பாற்ற வராது. மனிதனின் கஷ்டத்தைப் போக்கி வைத்தியமோ, ஜோதிடமோ, மந்திரமோதான் ஆபத்திலிருந்து அவனை விடுவிக்கும்.
இவற்றில் ஒரு பகுதியாக மந்திரம், யந்திரம், தந்திரம், மணிகள், மூலிகைகள், வாஸ்து அமைகின்றன.
இத்துடனும் ஜோதிடம், எண்கணிதம், மூச்சுக்கலை, யோகா, தலயாத்திரை வழிபாடு உள்ளிட்ட இன்னும் பல வழிகளையும் ஹிந்து மத அறநூல்கள் தருகின்றன.
பெங் சுயி சீன வாஸ்து சாஸ்திரம்.
நவமணிகளை அவரவர்க்கு உரிய விதத்தில் தேர்ந்தெடுத்து அணிவது, வாஸ்து சாஸ்திரப்படி இல்லங்களையும், அலுவலகங்களையும் அமைப்பது, பெங் சுயி படி பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய மூன்றும் எளிய வழிகள்.
அவற்றின் பல வழிகளையும், உத்திகளையும் இந்த நூலில் காணலாம்.
சுருக்கமாக மணி, மந்திர, ஔஷதம் என்பது காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் சொல் தொடர். இந்த மூன்றில் மணிகளைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது; நலம்பெற, வளம்பெற உரிய வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் வாஸ்து சாஸ்திரம் மற்றும் சீன வாஸ்து சாஸ்திரமான பெங் சுயி பற்றிய விளக்கங்களையும் தருகிறது.
அன்பர்கள் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் கூடிய அணுகுமுறையில், இதை ‘உதவும் கையேடாக’ எப்போதும் தம்முடன் வைத்துக்கொண்டு நலம்பெற வாழ்த்துகிறேன்.
இந்தக் கட்டுரைகளை மாலை மலர் பத்திரிகையில் வெளியிட்ட தினத்தந்தி அதிபர் திரு S. பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும் ஆலயம் ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகையில் வெளியிட்ட திருமதி மஞ்சுளா
ரமேஷ் அவர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு காலங்களில் வெளியானவை.
இங்கு ஒரே நூலாகத் தொகுத்துத் தரப்படுகிறது. ஆகவே ஒருசில குறிப்புகள் மீண்டும் வந்திருப்பதைக் காணலாம், என்றாலும்கூட அவை நலம் பயக்கும் முக்கியமான குறிப்புகள் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை படிப்பதும் நல்லதுதானே!
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன்வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைப் படிக்கும் அன்பர்கள் வாழ்க்கையில் எல்லா நலங்களையும் பெற்று முன்னேறுவர் என்பதில் ஐயம் இல்லை.
இறைவன் அருள்பாலிப்பானாக!
நன்றி.
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விழா நாட்கள் – ஆகஸ்ட் 1 ஆடிப்பூரம் /ஆண்டாள் பிறந்த தினம்; 3-ஆடிப்பெருக்கு , சிலருக்கு ரிக் உபாகர்மம்; 5-வரலெட்சுமி விரதம் ; 11- யஜுர் உபகர்மா சிலருக்கு ரிக் உபாகர்மம், ரக்ஷா பந்தன்; 12- காயத்ரீ ஜபம்; 13- ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை ; 15- சுதந்திர தினம் ; 19- ஜன்மாஷ்டமி ; கோகுலாஷ்டமி /கிருஷ்ணர் பிறந்த தினம் ; 20-ஸ்ரீ ஜயந்தி ; 31- கணேஷ் சதுர்த்தி
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்
xxx
ஆகஸ்ட் 16 செவ்வாய்க் கிழமை
வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
xxx
ஆகஸ்ட் 17 புதன் கிழமை
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
xxx
ஆகஸ்ட் 18 வியாழக் கிழமை
பசிப்பிணி என்னும் பாவி
xxx
ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
xxx
ஆகஸ்ட் 20 சனிக் கிழமை
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி ‘மனம் கவல் ஒழிக!’ என மந்திரம் கொடுத்ததும்
xxx
ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக் கிழமை
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன்
xxxx
ஆகஸ்ட் 22 திங்கட் கிழமை
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும் வந்து ஒருங்கு குழீஇ ‘வான்பதி தன்னுள்
xxx
ஆகஸ்ட் 23 செவ்வாய்க் கிழமை
திரு விழை மூதூர் வாழ்க!’ என்று ஏத்தி ‘வானம் மும் மாரி பொழிக! மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
xxx
ஆகஸ்ட் 24 புதன் கிழமை
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பல உடன் பரப்புமின் காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
xxx
ஆகஸ்ட் 25 வியாழக் கிழமை
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
xxx
ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்
01-060
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
xxx
ஆகஸ்ட் 27 சனிக் கிழமை
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க!’ என வாழ்த்தி அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு
xxx
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக் கிழமை
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய மா பெரும் பத்தினி
xxx
ஆகஸ்ட் 29 திங்கட் கிழமை
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
xxx
ஆகஸ்ட் 30 செவ்வாய்க் கிழமை
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை? மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்? பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல’
xxxx
ஆகஸ்ட் 31 புதன் கிழமை
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்,
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் பிடவமும் தளவமும் முட முள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி 03-160
xxxxx
Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2022 காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மஹாவீர வசனாம்ருதம் என்ற நூலிலிருந்து மேலும் பல சுவையான பொன்மொழிகளைக் காண்போம். அர்த்தமாகதி என்னும் பிராக்ருதக் கிளை மொழியில் அமைந்த ஸ்லோகங்கள் இவை:-
புச்சா வி தே பயாயா கிப்பம் கச்சந்தி அமரபவ ணாஇம்
ஜேஸிம் பிஓ தவோ ஸ ஞ்ஜமோ ய கந்தீ ய பம்பசேரம் ச
நல்ல குணங்களை அதாவது தவம், புலனடக்கம், பிரம்மச்சர்யம் , மன்னிக்கும் குணம் ஆகியவற்றை உடையோர் விரைவில் சொர்க்கலோகத்தை அடைவர்; வாழ்க்கையின் பிற்பாதியில் நல்லனவற்றை அடைந்தாலும் இது முடியும்.
XXX
இட்டீ ஜூஇ ஐஸோ வண்ணோ ஆ உம் ஸுஹமணு த்தரம்
புஜ்ஜோ ஜத்த மணுஸ்ஸேஸு தத்த ஸே உவ வஜ்ஜ இ
ஒருவனுடைய சொர்க்க லோக வாழ்வு முடிந்த பின்னர் (புண்ணியம் எல்லாம் செலவழிக்கப்பட்ட பின்னர்) அவன் செல்வச் செழிப்புள்ள, புகழும் பெயரும் உள்ள, குடும்பத்தில் பிறந்து நீண்டகாலம் சுகமாக வாழ்வான்.
ஒரு சமணத் துறவி செஸ் /சதுரங்கம்/ சூதாட்டம் ஆடுவதற்குக் கற்கக் கூடாது.;
மதத்திற்கு எதிராகப் பேசக் கூடாது .
XXX
ஸே ஹு சக்கூ மணுஸ்ஸாணம் ஜே கங்கா ஏ அந்த ஏ
அந்தேண குரோ வஹ இ சக்கம் அந்தேண லோட்டஇ
ஆசையின் விளிம்பில் வசிப்பவன் மனிதர்களின் கண் (வழிகாட்டி); ஒரு கத்தியானது அதன் விளிம்பில் உள்ளது ; ஒரு சக்கரமானது அதன் விளிம்பில் உள்ளது .
அதாவது கத்தியின் கூர்மையும், சக்கரத்தின் விரிசல் இல்லாத விளிம்பும் போல வழிகாட்டுபவன் (கண்) யார் என்றால் ஆசை அனைத்தையும் துறந்தவனே .
XXX
துல்லஹா உ முஹாதாஈ முஹாஜீவீ வி துல்லஹா
முஹாதாஈ முஹாஜீவீதோ வி கச்சந்தி ஸோக்கஇம்
எதையும் எதிர்பாராமல், சுய நலமின்றி கொடுப்போரும் , கொடுத்ததை என்ன, ஏது எனப் பாராமல் ஏற்போரும் இந்த உலகில் அரிது . அவ்விரு வகையினரும் மரணத்திற்குப் பின்னர் உயர்நிலை அடைவர் .
XXX
ஸீஹம் ஜஹா குட்டமிஹா சரந்தா தூரே சரந்தி பரிஸங்கமணா
ஏவம் து மோஹாவி ஸமிக்க தம்மம் தூரேன பாவம் பரிவஜ்ஜ ஏ ஜ்ஜா
சிங்கத்திடமிருந்து குட்டி மிருகங்கள், பயந்து கொண்டு , எப்படி விலகி ஓடுகின்றனவோ , அப்படி புத்திசாலி மனிதன், விவேகத்துடன், பாவச் செயல்களிலிருந்து தொலைவில் செல்லவேண்டும்
XXX
ஜத்தேவ பாஸ கஇ துப்பஉத்தம் காஏண வாயா அது மாணஸேணம்
தத்தேவ தீரோ படிஸாஹரேஜ்ஜா ஆஇண்ணஓ கிப்பமிவ க்கலீனம்
மனம், மொழி, மெய்யினால் ஒரு தவறு செய்து விட்டோம் என்று கண்ட அந்த நொடியிலேயே , ஒரு துறவியானவன் , சேணத்தை / லகானைப் பிடித்திழுத்த குதிரை போல நின்றுவிட வேண்டும்..
அதாவது, உடனே நின்று, சிந்தித்துத் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும்
XXX
வேராஇம் குவ்வஈ வேரிதஓ வேரேஹிம் ரஜ்ஜஈ
பாவோ வகா ய ஆரம்பா துக்கபாஸா ய அந்தஸோ
வெறுப்பவன் மற்றவர்களை வெறுத்துக் கொண்டே இருக்கிறான். (கொடியவன் கொடும் செயல்களையே செய்துகொண்டு இருக்கிறான் ). அதில் இன்பமும் அடைகிறான். ஆனால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதை அறிவதில்லை.அவை அவனுக்கு துன்பத்தை விளைவிக்குமென்பதையும் உணர்வதில்லை .
XXX
ஜஸம் கித்திம் ஸிலோகம் ச ஜா ய வந்தண பூயணா
ஸவ்வ லோயம்ஸி ஜே காமா தம் விஜ்ஜம் பரி ஜாணியா
புகழ், கீர்த்தி, எல்லோரும் அறிந்தவன், பட்டங்கள், வணங்கப்படுபவன் , சுக போகங்கள் — இவை அனைத்தையும் ஒரு அறிவுள்ள மனிதன் தெரிந்துகொண்டு, பின்னர் துறக்க வேண்டும் .
அதாவது அவற்றின் செல்வாக்கு எவ்வளவு பெரிது என்று தெரிந்த பின்னரும், அதில் மயங்கி விடாமல், அவற்றை ஒதுக்கவேண்டும்.
XXX
நேரஇ யத்தாயே கம்மம் பகரேத்தா நேரஇஏஸு உவ வஜ்ஜந்தி , தம் ஜஹா
மஹாரம்பயாஏ , மஹாபரிக்கஹயா ஏ பஞ்சிதியவஹேணம் குணிமாஹேணம்
உயிரினங்கள் நரகத்தில் உழல்வதற்கு செய்வினையே/ கர்மனே காரணம் ; அவையாவன : – மற்ற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் ( போர், படுகொலை); பொருள்களை குவித்தல் ( இது மற்றவர்களை கொள்ளை அடிப்பதாலேயே ஏற்படும்); ஐந்தறிவு படைத்த உயிரினங்களைக் கொல்லுதல் ; மாமிஸம் சாப்பிடுதல் ;
XXX
குஸக்கமேத்தா இமே காமா ஸன்னிருத்தம்மி ஆஇயே
கரஸ ஹேஉம் புராகாஉம் ஜோகக் கேமம் ந ஸம்விதே
மனிதர்களின் குறுகிய ஆயுட்காலத்தில் , சுகபோகங்கள் என்பன ஒரு புல் முனையில் தொங்கும் நீர்த்த துளி போன்றதே ; பின்னர் ஏன் மனிதன் இதை உணர்ந்து மேல் நிலை அடைய மனித வாழ்வைப் பாதுகாத்துப் பயன்படுத்துவதில்லை !
25-7-2022 சான்பிரான்ஸிஸ்கோவில் ஆன் லைனில் பார்க்க முடிந்த படம் ராக்கெட்ரி!
Rocketry the Nambi effect!
R. மாதவனின் அருமையான படம் என்று ஒரு வரியில் சொல்லி விட்டால் இந்தப் படத்திற்கு நியாயமான ஒரு விமரிசனத்தை வழங்கியதாக ஆகாது.
இதை எடுக்க எவ்வளவு உழைப்பு, கஷ்டம், உற்சாகம், பணம், ஏராளமானோரின் ஒத்துழைப்பு, அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்ற துடிப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளார்ந்த, எதையும் எதிர்பார்க்காத தேச பக்தி இருக்க வேண்டும்!
அந்த வகையில் அரிய சாதனையைச் செய்து வெற்றி பெற்றிருக்கும் R. மாதவன் பாராட்டப்பட வேண்டியவர்.
அவர் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல விளங்கும் இந்தப் படம் அவரது வாழ்க்கை ஏணியில் அவர் உயர ஏறி நிற்கும் சிகரம் என்றும் கூடச் சொல்லலாம்.
நம்பி நாராயணன்!?
யார் இவர்?
1994களில் இஸ்ரோ எனப்படும் நமது இந்திய விண்வெளி ஆய்வு மையம் பிஎஸ் எல் வி ராக்கெட்டைச் செய்ய மிக்க முனைப்புடன் ஈடுபட்டிருந்தது.
அப்போது அதற்கு க்ரையோஜெனிக் எஞ்ஜினின் தொழில் நுட்பம் தேவையாக இருந்தது.
அதை உருவாக்க வெறியுடனும் துடிப்புடனும் நமது இளம் விஞ்ஞானிகள் செயலாற்றி வந்தனர்.
அவர்களுள் முக்கியமான ஒருவர் நம்பி நாராயணன்.
இறை பக்தி, தேச பக்தி இரண்டும் கொண்ட இவருக்கு ஒரு வாழ் நாள் சோதனை வந்தது.
அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்க முயன்று பணம் பெற்றதாக ஒரு அபாயகரமான குற்றச் சாட்டு. மாலத்தீவு உளவுப்பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா உசேன் மூலமாக இந்தச் செயலை அவர் செய்ததாக வழக்கு.
அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார்; சித்திரவதை செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசம்!
இந்தச் செய்தியை அளவுக்கு அதிகமாக ஆச்சரியமூட்டும் விதத்தில் ஊடகங்கள் ஊதி ஊதிப் பரப்பின.
அவரது வீட்டில் கல் எறியப்பட்டது.
அவரது மீனா என்ற மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அவமானத்திற்கு உள்ளாயினர்; பழிச்சொல்லுக்கு ஆளாயினர்.
அவர் இந்த அபாண்ட குற்றச்சாட்டை த்னி ஒரு ஆளாகத் தனித்து எதிர்த்து நின்றார்.
குற்றச்சாட்டு சொல்லப்படும் ஜனவரி 24ஆம் தேதி, தான் சொல்லப்படும் இடத்தில் இல்லவே இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்தார்.
ஆனால் மரியம் ரஷீதாவே அவர் முன்னால் விசாரணையின் போது தன்னை இப்படி செய்யச் சொல்லி நிர்பந்திப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு போலியானது, திட்டமிட்ட சதியால் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபித்த அவருக்கு 2012இல் கேரள அரசாங்கம் கேரள உயர்நீதி மன்ற உத்தரவின் படி பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகத் தந்தது.
2018இல் ஐம்பது லட்ச ரூபாய் அவரை மனதளவில் கொடுமைப்படுத்தியதற்காக நஷ்ட ஈடாகத் தரப்பட்டது.
1998இல் அவரை நிரபராதி என்று அறுதியிட்டுத் தீர்ப்பு வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
அவருக்கு 1.3 கோடி ரூபாய் தரவேண்டும் என்று ஆணையிடவே அதுவும் தரப்பட்டது.
2021இல் ஒரு விசேஷ கமிட்டி, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று கூறவே கேரள போலீஸின் 18 அதிகாரிகள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டிருக்கிறது.
1969இல் பிரின்ஸ்டனில் கல்வி பயின்ற இளம் வயது நம்பி நாராயணன், தனது சாமர்த்தியத்தால் வெவ்வேறு விதமாக பல்வேறு தொழில் நுட்பங்களைப் பெற்ற விதம் படத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
விக்ரம் சாராபாய் அவரை எப்படி நன்கு மதித்தார், திடீரென்று உயிரிழந்த அவரது இழப்பால் நம்பி நாராயணன் எப்படி துயருற்றார் என்பதெல்லாம் வரலாறு.
விண்வெளியிலும் மண்ணகத்திலும் விக்ரம் சாராபாய் என்றும் புகழுடன் விளங்கும் படி தான் உருவாக்கிய எஞ்சினுக்கு விகாஸ் என்ற பெயரை (அவரது பெயரிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துக்களால் அமைக்கப்பட்ட, பொருள் பொதிந்த பெயர்) நம்பி சூட்டுகிறார்!
12-12-1941இல் பிறந்த நம்பி நாராயணனுக்கு இப்போது வயது 81.
மாதவன் அவரிடம் பல நாட்கள் அமர்ந்து பேசி திரைக்கதையை நன்கு அமைத்திருக்கிறார்.
தமிழில் சூர்யா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சாருக் கான் ஆகியோர் நம்பி நாராயணனை ஒரு பேட்டி காண்பதாகப் படம் ஆரம்பிக்கிறது.
அதில் அவரது வரலாறு சொல்லப்படுகிறது.
சிம்ரன் அவரது மனைவியாக நடிக்கிறார். தமிழில் விக்ரம் சாராபாயாக ரவி ராகவேந்திரா நடிக்கிறார்.
அளவான வசனம்; அற்புதமான காட்சிகள்!
முதலில் உடல் எடை கூடிய படி முதிர் வயது நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் இளம் வயது அட்டகாச நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.
படத்தின் இறுதிக் காட்சியில் நிஜ நம்பி நாராயணனே காட்சி தருகிறார்.
உள்ளத்தை நெகிழ வைக்கும் காட்சிகள்!
எந்த ஒரு தேசபக்தருக்கும் வரக்கூடாத பழி – தேசத் துரோகக் குற்றம் – அவர் மீது என்கின்ற போது உள்ளம் வேதனைப்படுகிறது!
அவருக்கு மோடி அரசால், 2019ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
படம் உலகெங்கும் உற்சாகமாக வரவேற்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி!
மாதவனுக்குள் இவ்வளவு திறமை இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது!
ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமல்லவா!
ஆகவே இத்தோடு நிறுத்துவதே சரி.
படத்தை குடும்பம், நண்பர்கள் சூழப் பார்த்து விடுங்கள்!
இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர்.
அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.
அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.
பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார்.
‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!
அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.
அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.
இந்த நூலை அழகுற மின் நூலாக வெளியிட முன் வந்த ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமணர் காட்டிய பாதையில் நடப்போம்! உயர்வோம்!!
நன்றி 26-12-2021
ச.நாகராஜன் பங்களூர்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
He truly is the eye/guide of men, who dwells on the end of desire; a razor runs on its edge and a wheel rolls on its end/rim ( those parts only useful).
Xxxx
August 2 Tuesday
By the light of universal knowledge/omniscience,by the avoidance of ignorance and delusion ,by totally destroying love and hatred, the soul attains moksha, which is nothing but absolute bliss.
Xxx
August 3 Wednesday
Just as the smaller/weak animals keep away from a lion,being afraid of him , even so a wise man,discerning the religion,should keep himself away from sin.
Xxx
August 4 Thursday
The moment a monk sees that he has committed an evil act , either in thoughts , words or deeds, he should instantly withdraw himself as a noble horse comes to a halt, instantly the reins are pulled. ( the moment he realises his mistake , he should immediately correct himself).
Xxx
August 5 Friday
Those who give for nothing ( without any selfish motive) and those who receive for nothing,both these types are very rare. Both of them attain a good state of existence after death.
Xxx
August 6 Saturday
A monk should not learn to play chess/gambling and should not indulge in speech contrary to religion.
Xxx
August 7 Sunday
Fame,glory,reknown, homage and honours ,pleasures and enjoyment s — all these a wise man should know and comprehend and renounce.
Xxx
August 8 Monday
Here,in this world, men are born for practising religion
Xxx
August 9 Tuesday
Having thoroughly realised and understood ,the cycle of birth and death, a man should live, being firm in the rules of good conduct .
Xxx
August 10 Wednesday
O Man , emaciate yourself, and waste yourself ( undergo physical hardships by austerities).
Xxx
August 11 Thursday
Every good deed done shall have its reward for men/ will bear fruit.
Xxx
August 12 Friday
Oh father, the suffering of pain in the hell is infinitely more intense and painful than the suffering seen in the world of men.
Xxx
August 13 Saturday
Living beings are born in hell because of their own Karman. The karma is as follows:
By doing actions that involve great injury to living beings; by amassing vast possessions; by killing five sensed living creatures; by eating flesh.
Xxx
August 14 Sunday
Those men who,through the exercise of various vows and discipline s , become pious house holders will be born as human being s . Kindness,, love of discipline, compassion and absence of jealousy are the causes for human birth.
Xxx
August 15 Monday
Human life is the capital. Profit is celestial existence; through loss of the capital , men are sure to be born either as denizens of hell, or as lower creatures.
Xxx
August 16 Tuesday
He is born as a human being, after his celestial life is exhausted in a family where there is prosperity and plenty, splendour and glory, name and fame longevity and eminent happiness.
Xxx
August 17 Wednesday
In this very limited span of life,allotted to human beings , these worldly pleasures are like a dew drop dangling on the tip of a blade of grass.
Xxx
August 18 Thursday
And whatever actions a man may have committed, good or bad, accompanied by that Karman only, he goes to the next form of existence.
Xxx
August 19 Friday
Human birth is only momentary and abounds in diseases,old age,death,pangs and agonies.
Xxx
August 20 Saturday
See young and old, and sometimes even in the mother’s womb, human beings die. As a hawk catches a quail, so is the span of life snapped, when the term of life is exhausted.
Xxx
August 21 Sunday
He,who is free from impurities and sins, like burnished gold which is purified of all its impurities in fire, and who is above love and hatred— him we call a true Brahmana.
Xxx
August 22 Monday
He,who is an ascetic,lean,self controlled,and who has reduced his flesh and blood,by severe austerities, who observes the vows strictly, and has attained Nirvana- him
Xxx
August 23 Tuesday
He, who knows broadly, both the mobile and immobile types of living beings,and does not injure them in thoughts or deeds or words- him
Xxx
August 24 Wednesday
He, who does not take anything that is not given to him, be it sentient or non sentient, small or large , — him
Xxx
August 25 Thursday
He, who is not defiled by, pleasures, like a lotus, which grows in water but is not wetted by it— him
Xxx
August 26 Friday
He, who is not greedy, lives on nothing ( that is by begging only) who has no house, nor property, and has no attachment with house holders— him
Xxx
August 27 Saturday
One does not become a Sramana/ Jain, by tonsure, nor a Brahmana, merely mechanically repeating the sacred syllable Aum, nor an ascetic by living in the woods, nor a Tapasa by garments of kusa grass and bark.
Xxx
August 28 Sunday
By one s own actions one becomes a Brahmana or a Kshatriya or a Vaisya or Sudra
Xxx
August 29 Monday
Some learn the sciences calculated harm and destroy other living beings; others study spells involving of destruction of various living beings and creatures
Xxx
August 30 Tuesday
A wise man, who has gained strength, which leads to the expiation of sinful actions, annihilates all the Karman done in the past, and does not also incur any fresh Karman
Xxx
August 31 Wednesday
As a tortoise withdraws its limbs in its own body, so a wise man should withdraw sins and temptations etc with the help of meditation.
Xxxx
Over 6000 Tamil and English quotes from Hindu scriptures are posted in my blogs from 2017; please read them and spread them. Always quote our blogs as source.
–subham—
Tags- August 2022, Calendar, Jain Quotations, Mahavira, Vacanamrutam, Sramana,
சமீபத்தில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வந்ததால் எனக்கு திரைப்படம் பார்க்க ஓய்வு நேரம் சற்று கிடைத்திருக்கிறது.
அதில் மூன்று நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
மூன்றும் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள்.
முதல் படம் A TWELVE-YEAR NIGHT.
2018ஆம் ஆண்டு வெளியான படம் இது. கெய்ரோ 40வது பன்னாட்டு திரைப்பட விழாவில் கோல்டன் பிரமிட் விருதைப் பெற்றா படம் இது. இதன் இயக்குநர் ஆல்வாரோ ப்ரெஸ்னர்.
1973ஆம் ஆண்டு சர்வாதிகார ராணுவ ஆட்சியின் பிடியில் உருகுவே அகப்பட்டது. இடதுசாரி டுபாமாரோஸ் குழு அதை எதிர்த்தது.
இந்தப் புரட்சியில் டுபாமாரோஸில் முக்கியமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் வாடினர்.
ஜோஸ் பெபே முஜிகா, மௌரிசியோ ரோஸன்காஃப் மற்றும் எலுடெரியோ ஃபெர்னாண்டஸ் ஹுய்டோப்ரோ ஆகிய மூவர் எப்படி இந்த சிறைவாசக் கொடுமைகளைத் தாங்கினர் என்பதைப் படம் சித்தரிக்கிறது.
சிறை அதிகாரிக்கு ரோஸன்காஃப் காதல் கடிதம் எழுதிக் கொடுப்பது, சிறையில் சுவரைத் தட்டித் தட்டி ஒரு கோட் லாங்வேஜ் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற சுவாரசியமான காட்சிகள் உள்ளன.
12 ஆண்டு கால சிறைவாசம். வெவ்வேறு இடங்களுக்கு இவர்கள் மாற்றப்பட்டனர்; மிகக் கொடூரமாக நடத்தப்பட்டனர்.
அதைச் சித்தரிக்கிறது இந்தப் படம்.
ராணுவம் அவர்களைக் கொல்ல முடியவில்லை – சர்வதேச நாடுகளின் அழுத்தத்தினால்.
பெபேயின் தாயார் அவரது நிலையைக் கண்டு அதிர்ந்து போனது உள்ளத்தை உருக வைக்கும்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் பின்னால், பெபே முஜிகா, உருகுவேயின் 40வது ஜனாதிபதியாக ஆனார என்பது தான். 2010 முதல் 2015 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார்.
ஒரு 12 வருட சிறைவாசத்தை சுவாரசியமாகக் காட்ட முடியும் என்பதற்கு இந்த 122 நிமிட நேரம் ஓடும் இந்த ஸ்பானிஷ் படம் ஒரு எடுத்துக்காட்டு.
2) ARGO
ஆர்கோ 2012ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கப் படம்.
பென் ஆஃலெக்கால் தயாரிக்கப்பட்ட இந்த படம் அமெரிக்க சி ஐ ஏயின் (ஏஜண்ட்) டெக்னிகல் ஆபரேஷன் மானேஜரான டோனி மெண்டஸ் எப்படி இரானில் சிக்கிய ஆறு அமெரிக்க தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார் என்பதைச் சித்தரிக்கிறது.
1979ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஈரானிய இஸ்லாமியர்கள் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர். அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஈரானிய ஷாவிற்கு கான்ஸர் நோய்க்கு சிகிச்சை அளிக்க அவருக்கு அமெரிக்காவில் புகலிடம் தந்ததை எதிர்த்து இந்த தாக்குதல் நடந்தது.
66 பேர் தூதரகத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தப்பிய ஆறு பேர்களைப் பற்றிய கதை தான் இது. அவர்கள் கனடிய தூதரான கென் டெய்லர் வீடில் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டனர்.
கனடிய அரசு அமெரிக்க அரசுடன் எப்படி மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களை மீட்க உதவுகிறது என்பதை திரைப்படம் நன்கு சித்தரிக்கிறது.
வெறி பிடித்த ஈரானிய கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் அவர்களைத் தேடுகிறது. அவர்களை பத்திரமாக தனி ஆளாக டோனி மீட்கிறார்.
கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்படக் குழுவினர் போல ஒரு போலிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஈரானில் படம் எடுக்க அனுமதி பெறுகின்றனர். இதற்காக போலியாக ஆனால் நிஜம் போல இருக்கும் திரைக்கதை தயாரிக்கப்படுகிறது. காமராமேன், நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட குழு அவர்களைப் பற்றிய பிரசுரங்கள், அவர்கள் தங்கி இருக்கும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் மிகக் கவனமாகத் தயாரிக்கப்படுகிறது.
ஈரானில் இந்த விவரங்கள் எல்லாம் சரி பார்க்கப்படும் போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் அந்தக் காட்சிகளை ஆவலுடன் பார்ப்பது நிச்சயம்.
ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஈரானிய எல்லையைக் கடந்த பின்னர் விமானத்திலேயே அவர்கள் அடையும் மகிழ்ச்சி…..!
1999இல் வெளியான ஒரு புத்தகமே திரைக்கதைக்கு அடிப்படை. சில காட்சிகள் திரைப்பட விறுவிறுப்பிற்காக உண்மையிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதாக சில விமரிசகர்கள் கருதினாலும் படம் நல்ல வெற்றியை அடைந்தது.
ஆஸ்கார் விருது பெற்ற இந்தப் படத்தின் கதாநாயகனான டோனி மெண்டஸ் 19-1-2019இல் மரணமடைந்தார்.
3. A CALL TO SPY
இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிட்லர் மின்னல் வேகத் தாக்குதலில் பல நாடுகளைக் கைப்பற்றினான்.
அவன் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் இருந்த யூதர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாயினர்.
கெடுபிடியான நாஜி ராணுவம் எல்லையில்லா வெறித் தனத்துடன் ஆட்டம் போட்டது.
அந்தக் காலத்தில் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., உளவு பார்க்க பெண் உளவாளிகளைத் தேட ஆரம்பித்தது.
அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது, அவர்களைத் தங்களுக்குத் தேவையான இடங்களில் சேர்ப்பது, வயர்லெஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட செய்திகளை கோட் லாங்வேஸ் மூலம் பெறுவது உள்ளிட்டவற்றை சிஐஏ அதிகாரிகள் செய்கின்றனர்.
இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உண்மைக் கதை தான் ‘எ கால் டு ஸ்பை’.
124 நிமிடம் ஓடும் இந்த அமெரிக்கப்படம் 2019இல் வெளி வந்தது.
சாரா மெகன் தாமஸால் தயாரிக்கப்பட்டது. இயக்குநர் : லிடியா டீன் பிட்சர்.
மூன்று பெண்மணிகள் பிரான்ஸ் நாட்டில் எப்படிப்பட்ட சாகஸ வேலைகளில் ஈடுபட்டனர் என்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதில் ஒரு பெண்மணிக்கு ஒரு கால் தான்! இன்னொரு கால் செயற்கைக் கால்!
வயர்லெஸ் ஆபரேடரான நூர் (இந்திய நடிகை ராதிகா ஆப்தே இந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார்) என்ற ஓரு இளம் பெண் தன் உயிரையே தியாகம் செய்கிறார். ஜெர்மானிய ராணுவத்தினரால் அவர் சுடப்படும் காட்சி நம்மை உருக வைக்கிறது.
செயற்கைக் காலுடன் உள்ள வர்ஜினியா ஹால் பனி மலைகள் மற்றும் காடுகள் வழியே தப்பி அமெரிக்கா மீள்கிறார். சி ஐ ஏ யின் ஏஜண்டுகளின் குழுவில் முதல் பெண்மணியாக அவர் பின்னால் ஆகிறார்.
ஸ்பை த்ரில்லர் வரிசையில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதுமே வரவேற்கின்றனர்.
வரலாறு சம்பந்தமாக அது புகட்டும் பாடங்களை அறிய இந்தத் திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.
அந்த வகையில் கதை, தயாரிப்பு, வசனம், நடிப்பு, கேமரா, அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் சிறந்து விளங்கின்றன.
இந்த மூன்று வெற்றிப் படங்களை யார் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.
தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.
இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.
பழமை
உலகில் இப்போது பயன்படுத்தப்படும் மொழிகளில் எந்த மொழியையும் விட மிகப் பழமையான சான்று கிடைத்த மொழி சம்ஸ்கிருதம். துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் பொகாஸ்கோய் பகுதியில் கிடைத்த சம்ஸ்கிருதக் கல்வெட்டில் (கி.மு 1400) வேதகால தெய்வங்களான மித்ரன், வருணன் முதலியோரைக் காண்கிறோம். அதற்குப் பின் மிட்டனி வம்ச அரசர்களின் (கி.மு.1300) பெயர்களில் தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களைப் படிக்கிறோம். எகிப்தில் உள்ள அமர்னா கடிதங்களில் தசரதன் எழுதிய உருக்கமான கடிதங்களைக் காண்கிறோம். 3000 ஆண்டுகளுக்கு முன் கிக்குலி எழுதிய அஸ்வ (குதிரை சாத்திரத்தில் சம்ஸ்கிருதத்தில் 1,2,3,4 முதலிய எண்களைப் பார்க்கிறோம். இவ்வளவு பழமை வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லை.
அருமை
சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை. இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு அறிவியல், தர்க்கவியல், உளவியல், மானுடவியல் கதைகள் முதலிய எல்லா இயல்களுக்கும் நூல்கள் கிடைக்கின்றன. இவைகள் எல்லாம் நாளந்தா, தட்சசீலப் பல்கலைக்கழகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் எஞ்சிய நூல்கள்! இப்போதுள்ள பழைய நூல்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டாலேயே அது பல நூறு தொகுதிகளாக வெளியாகும். கி.மு 800-ல் கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞன் இலியட், ஆடிசி காவியங்களை எழுதுவதற்கு முன்னரே வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் என பிரம்மாண்டமான இலக்கியத் தொகுதிகளை உருவாக்கிவிட்டனர் சம்ஸ்கிருதம் பேசிய ரிஷி, முனிவர்கள்.
பெருமை
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” என்றும் “பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே, பார்மிசை ஏதொரு நூல் இது போலே” என்றும் சொற்தேரின் சாரதியாம் பாரதியால் போற்றப்பட்ட பெருமைமிகு நூல்கள் உடையது சம்ஸ்கிருதம்..காலத்தால் அழியாத ராமாயண, மஹாபாரதம் உடையது இம்மொழி. நாலு லட்சம் புராண ஸ்லோகங்களில் உள்ள கருத்துகள் மனித சமுதாயம் எல்லாவற்றுக்கும் பயன்படும். நாட்டியம் என்றால் பரதம், வைத்தியம் என்றால் சரக சம்ஹிதை, சோதிடம் என்றால் ப்ருஹத்ஜாதகம், வான சாத்திரம் என்றால் ஆர்யபட்டீயம், யோகம் என்றால் பதஞ்சலி, தத்துவம் என்றால் சங்கரன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
புதுமை
உலகோர் வியக்கும் பாணினியின் இலக்கண நூல் உடைத்தது இம்மொழி. கம்ப்யூட்ருக்குள்ளும் எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் செம்மை செய்யப்பட்ட செம்மொழி. பாரதியும் வியக்கிறான்:
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பருந்திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்”
என்று பாடி ஆனந்தம் அடைகிறான். நமக்கு சம்ஸ்கிருத அறிஞர்களின் பட்டியலையும் தருகிறான்! சம்ஸ்கிருதத்தில் உள்ள விடுகதைகள், புதிர்கள் எல்லாம் ஒரு தனி இலக்கியக் களஞ்சியம். அதைப் பற்றி எழுதி மாளாது. முதலில் கையில் கிடைத்த காசா லட்டைச் சாப்பிடுவோம். மேலும் பல தொகுதிகள் வெளிவர வாழ்த்துவோம்.
16-12-2021 ச.சுவாமிநாதன் லண்டன்
*
*
புத்தகத்தில் நான் தந்த என்னுரையில் ஒரு பகுதி இது:
என்னுரை
சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு பெரும் கடல். பெரும் பாண்டித்யம் இல்லாமல் அதில் நான் புகுந்து சம்ஸ்கிருத செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கம்பனுடைய சொற்களால் ‘ஆசை பற்றி அறையலுற்ற’ கதை தான். .
சுபாஷிதங்களின் சிறப்பைக் கண்டு ஆயிரக்கணக்கில் அவற்றைச் சேர்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.
இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய எனது சகோதரர் திரு ச. சுவாமிநாதனுக்கு எனது நன்றி. இன்று இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் ஒரே துறை இண்டாலஜி தான். மனதிற்குத் தோன்றியவற்றை எல்லாம் மேலை நாட்டு அறிஞர்களும், தங்களை ஸ்வயமாக “செகுலரிஸ்ட் அறிஞர்கள்” என்று கூறிக் கொள்வோரும் இதில் இதுவரை ஏற்படுத்திய சேதத்திற்கு உலகின் வேறு எந்த சேதத்தையும் இணையாகக் கூற முடியாது. அப்படிப்பட்ட துறையில் அத்திப் பூ போல அபூர்வமான நுட்பமான தனது அறிவாலும் ஆழ்ந்த ஆராய்ச்சிப் புலமையாலும் லண்டன் சுவாமிநாதன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அர்த்தமுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகளை இண்டாலஜியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு புதையல். அவர் இந்த நூலுக்கு தக்க ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். மீண்டும் அவருக்கு என் நன்றி.
சம்ஸ்கிருதத்தில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கணக்கான நல்ல நூல்களை இனம் கண்டு தரவிறக்கம் செய்து எனக்குத் தந்து கொண்டிருக்கும் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இது ஒரு முதல் முயற்சியே. அடுத்து பல பாகங்களில் இன்னும் அரிய சம்ஸ்கிருதச் செல்வத்தை வழங்க இறைவனின் அருளை வேண்டுகிறேன்.
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
The following slokas are from Mahavira Vacanamrutam (Pronunciation- Mahaaviira vacanaamrutham)
Chattaari paramamghani dullahaanika jantuno
Maanusattam suyi saddhaa sanjmammi ya viiriyam
“Four things of paramount value are difficult to obtain in the world. They are human birth, religious instruction, faith in the religion and energy to practise self control.
And though they be born with a human body, it will be difficult for them to hear religious instruction, on which they will undertake austerities, forgiveness and abstinence from injury to all living beings (Ahimsaa)”
It is very interesting to see the same thought in Tamil and Sanskrit verses as well. Famous Tamil poetess Avvaiyaar also saud that it is rare to be born as a human being; that too without any disabilities.
Aadi Shnakara, the greatest of the Hindu philosophers, says in his Viveka Chudamani (pronunciation– Choodaamani)
For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmanahood; rarer still is the attachment to the path of Vedic religion.
Xxx
Just as a bee sucks the honey from the flowers of a tree, but never harms the flowers while it satisfies itself, even so the monks, who are free from greed and attachment, and who are bent on attaining peace and equanimity in the world,and engrossed in seeking pure food and drinks, like bees from the flowers.
Xxx
A true monk should not eat for the sake of the delicious taste but for the maintenance of life.
Xxx
When a monk does not care to learn discipline, out of conceit, , anger, vanity, and carelessness, that itself, constitutes his spiritual poverty, which leads to his own ruin,like the fruit of a bamboo tree.
The bamboo tree bears fruit once in hundred years, and then the tree dies/ withers
Xxx
If there were innumerable mountains of gold and silver, each as big as the Kailasa mountain, they are nothing to a greedy man; for desire is boundless like space.
Xxx
Wealth will not afford protection either in this world or in the next, to a careless man, whose light of knowledge is extinguished.
Xxx
In thought, words or deeds, a monk should not undertake harmful activity to living beings , who live in this world, whether they are mobile or immobile.
Xxx
All living creatures in the world desire to live. Nobody wishes to die. And hence it is that Jain monks avoid the terrible sin of injury to living beings.
Xxxx
Without right faith, there cannot be right knowledge. Without right knowledge, there can be no virtuous conduct. Without virtuous conduct, there cannot be freedom from Karma. Without freedom from karmas, there cannot be Nirvana/ liberation
Xxx
to be continued………………………
Tags- human birth, Jain monk, greedy, Nirvana, Ahimsa
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்!
ச.நாகராஜன்
பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் அரசாட்சி செய்யும் போது அவன் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தான்.
1799இல் அவன் அரியணை ஏறிய பின் ஏராளமான விஞ்ஞானிகளுக்குப் பரிசுகளையும் தங்க மெடல்களையும் வழங்க ஆரம்பித்தான்.
வானவியல் பற்றி ஆய்வு நடத்தியதற்காக லோலாண்ட் விருதை (Lolonde Prize in Astronomy) ஒரு சிறிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஒருவருக்கும், 6000 நக்ஷத்திரங்களைப் பட்டியலிட்ட ஒரு துறவிக்கும் அவன் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தான். ஒரு ஆங்கிலேயருக்கு வோல்டா விருது என்னும் விருதை மூன்று முறை வழங்கினான்.
அந்தக் காலத்தில் எர்னஸ்ட் ஃப்ளோரென்ஸ் கால்ட்னி என்பவர் ஒரு அரிய சோதனையைச் செய்து காட்டினார். அவர் ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி. ஒரு இரும்பினால் ஆன தடியின் மீது ஒரு மெல்லிய தகட்டை வைத்து அந்தத் தகட்டின் மேல் மெல்லிய மணல் துகளை அவர் பரப்பினார். அந்தத் தகட்டின் ஒரு பக்கத்தில் வயலினின் வில்லை வைத்து மேலும் கீழும் இழுக்க அதனால் ஏற்பட்ட ஒலி அதிர்வலைகளால் பல்வேறு வடிவங்கள் அந்தத் தகடில் உருவாக ஆரம்பித்தன.
இதனால் மிகவும் மகிழ்ந்து போன மன்னன் நெப்போலியன் அவரை பெரிதும் கௌரவித்தான்.
அத்தோடு இதை அறிவியல் பூர்வமாக விளக்குபவருக்குப் பரிசு அளிக்கவும் முன் வந்தான்.
அந்தப் பரிசை வென்றவர் தான் சோபி ஜெர்மெய்ன் (Sophie Germain) என்ற பெண்மணி.
(1776-1831)
சோபி பாரிஸில் வளர்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு பட்டு வியாபாரி.
1789இல் பிரெஞ்சு புரட்சி வெடித்த போது அவருக்கு வயது 13 தான்.
கணிதத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்த போது ஆர்க்கிமிடீஸ் கொல்லப்பட்டார் என்பதைப் படித்து வியந்து போன சோபி அப்படி என்ன கணிதத்தில் இருக்கிறது என்று பிரமித்து கணிதத்தில் ஆர்வத்தைச் செலுத்தலானார்.
லத்தீன் மொழியில் வல்லவரான அவர் ஜாமெட்ரியில் தனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தலானார்.
நியூடன், யூலர் ஆகியோரின் நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.
1894இல் கஸ்பர்ட் மாங்கே (Gaspard Monge) என்பவர் இயற்பியல் மற்றும் பொறியியல் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஆனால் அதில் பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சோபியால் அதில் சேர முடியவில்லை.
அதிக ஆர்வம் கொண்ட சோபி பல வித பாடக் குறிப்புகளைச் சேகரித்துத் தானே படிக்க ஆரம்பித்தார்.
தனது அறிவால் அந்தக் காலத்தின் பிரபல விஞ்ஞானிகளை பிரமிக்க வைத்தார்.
இந்தக் கால கட்டத்தில் தான் கால்ட்னி தனது கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தார்.
இதைப் பற்றி ஆராய முன் வந்தார் சோபி.
தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இதற்கான தீர்வை கணித வடிவில் அவர் தந்தார்.
முதலில் அதற்குப் பரிசு வழங்கப்படவில்லை. 1813ஆம் ஆண்டு இரண்டாம் முறை தனது ஆய்வுப் பேப்பரை அவர் சமர்ப்பித்தார். அது அங்கீகரிக்கப்பட்டது. தனது ஆய்வை மேலும் தொடர்ந்த சோபி 1816இல் மூன்றாம் முறையாக விரிவான ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்தார்.
பரிசையும் வென்றார்.
எலாஸ்டிக் ஸ்டர்க்ஸர்ஸ் (Elastic Structures and Numner Theoty( மற்றும் நம்பர் தியரி பற்றி விரிவான ஆய்வை அவர் மேற்கொண்டார். அதில் வியக்கவைக்கும் பங்களிப்பைச் செய்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மார்பகப் புற்று நோய் வியாதியால் அவர் பீடிக்கப்பட்டார்.
1831இல் தனது 55ஆம் வயதில் அவர் மறைந்தார்.
கணித மேதையாகத் திகழ்ந்த அவருக்கு பெண் என்ற காரணத்தால் கல்வி கற்பதில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிட்டி இருப்பின் உலகம் போற்றும் மேதையாக அவர் ஆகி இருக்கக் கூடும்!
என்றாலும் கூட மிக அதிசயமாக ஒலி அலைகளுக்கு ஒரு சக்தி உண்டு என்பதை நிரூபித்த கால்ட்னி காலத்தில் அவர் வாழ்ந்ததும் அதை கணிதவியல் மூலமாக விளக்கியதும் பெருமைக்குரிய ஒரு விஷயம் தான்!
உலகம் அறியாத இந்த மேதையை நாம் அறிந்து அவரைப் போற்றலாமே!
***
புத்தக அறிமுகம் – 11
12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள்!
இதில் அறத்தை மேற்கொண்டு அதன் வழியே பொருளை ஈட்டி இன்பம் துய்க்காத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை.
காதலை மையமாக வைத்து எழுகின்ற கதைகளும் உண்மைச் சம்பவங்களும் கோடானு கோடி!
காதலுக்காக மணிமுடியையே துறந்தார் எட்டாம் எட்வர்டு. எமனிடமிருந்தே சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி!
காதல் கவிதைகள் இல்லாத மொழிகளே உலகில் இல்லை.
சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக் கணக்கில் காதல் கவிதைகள் உள்ளன.
சிருங்கார ரஸத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த பூமி பாரத பூமி.
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் சில கவிதைகள் பற்றி அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதி வந்தேன்.
அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளைwww.tamilandvedas.comஇல் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்தத் தொகுப்பை புத்தகமாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!
இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
பங்களூர் 15-3-2022
ச.நாகராஜன்
*.நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.