Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MOTIVATION
வெற்றிக்கான இருபது குணங்களைக் காட்டும் சிங்கம், கொக்கு, சேவல்,காக்கை, நாய், கழுதை!
ச. நாகராஜன்
நமது அற நூல்கள் எங்கிருந்தாலும் யாரிடமிருந்தும் நல்லனவற்றைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களை மிருகங்களிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் கூடக் கற்கலாம்.
இப்படி இருபது குணங்களை நமது அறநூல் பட்டியலிடுகிறது.
சிங்கத்திடமிருந்து ஒரு குணத்தையும், கொக்கிடமிருந்து ஒரு குணத்தையும், சேவலிடமிருந்து நான்கு குணங்களையும் காக்கையிடமிருந்து ஐந்து குணங்களையும், நாயிடமிருந்து ஆறு குணங்களையும் கழுதையிடமிருந்து மூன்று குணங்களையும் நாம் கற்கலாம்.
சிங்கத்திடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்
ஒரு வேலை சிறியதாக இருந்தாலும் சரி அல்லது பெரியதாக இருந்தாலும் சரி, அதை முடிக்க உங்கள் முழு பலத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். இது தான் சிங்கத்திடமிருந்து ஒருவர் கற்க வேண்டிய ஒரு குணமாகும்.
கொக்கிடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்
புத்திசாலியான ஒருவன் நேரமும் காலமும் இடமும் நமக்கு ஒத்து இருக்கும் போது தான் நமது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும்.
இப்படி நமக்கு வெற்றி தரும் தருணத்தைக் காத்திருந்து பெற்று வெற்றி அடைவதைக் கொக்கிடமிருந்து கற்க வேண்டும்.
ஔவையார் மூதுரையில் கூறும் அறிவுரை இது:
அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
சேவலிடமிருந்து கற்க வேண்டிய நான்கு குணங்கள்
காலையில் சீக்கிரமே எழுந்திருப்பது, எதிரியுடன் சண்டை போடத் தயாராக இருப்பது, தனக்குக் கிடைத்த ஆதாயங்களை புதிதாக வருபவருடன் பகிர்ந்து கொள்வது, சந்தோஷத்தை வலியப் பெற்று அனுபவிப்பது ஆகிய இந்த நான்கு குணங்களையும் சேவலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
காக்கையிடமிருந்து கற்க வேண்டிய ஐந்து குணங்கள்
உடலுறவில் ரகசியத்தைப் பாதுகாப்பது, தைரியமாக இருப்பது, பரபரப்பு அல்லது மனநடுக்கம் கொள்ளாமல் இருப்பது, எதிர்காலத்திற்குச் சேமித்து வைத்துக் கொள்வது, எந்த ஒன்றையும் உடனடியாக அல்லது அவசரம் அவசரமாக நம்பாமல் இருப்பது ஆகிய இந்து ஐந்து குணங்களையும் காக்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
நாயிடமிருந்து கற்க வேண்டிய ஆறு குணங்கள்
நிறைய உண்பது. குறைவாகவே கிடைத்தாலும் அதில் திருப்தி அடைவது, உடனடியாக தூக்கம் அடைவது, நல்ல தோழனாக இருப்பது, நம்பிக்கைக்குரிய பணியாளனாகவும் இருப்பது, அதிக தைரியத்துடன் இருப்பது ஆகிய இந்த ஆறு குணங்களையும் நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
கழுதையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று குணங்கள்
எவ்வளவு களைத்திருந்தாலும் சுமையைச் சுமந்து செல்வது, மழையோ வெய்யிலோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலையைச் செய்து முடிப்பது, திருப்தியுடன் செல்வது ஆகிய இந்த மூன்று குணங்களையும் கழுதையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆக இப்படி இருபது குணங்களை சிங்கம், கொக்கு, சேவல், காக்கை, நாய், கழுதை ஆகியவற்றிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஒரு நாளும் நமக்குத் தோல்வியே கிடையாது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சரஸ்வதி நதி தீர வயிரவி வனம் முருகன் கோவில் பற்றி அருணகிரிநாதர் பாடினார் ; இதுவரை நம்மால் அந்த ஊரினைக் கண்டுபிடிக்க முடியவில்லை ; திருப்பதி மலை மீது முருகன் இருப்பது பற்றியும் பாடினார்; அது பாலாஜி கோவிலா அல்லது வேறு ஒரு முருகன் கோவில் இருந்ததா என்றும் தெரியவில்லை ; பழனி பற்றிய கதையில் மாம்பழம் பற்றி நாம் அறிவோம் ; ஆனால் அருணகிரியோ மாதுளம் கனி பற்றிப் பாடுகிறார் அந்தப் புதிரும் விடுபடவில்லை இப்போது சிதம்பரம் திருப்புகழில் முருகப்பெருமான்தான் மனு ஸ்ம்ருதி நூலினைக் கொடுத்தார் என்று பாடி மேலும் ஒரு புதிர் போடுகிறார்!
****
சந்திரவோலைகுலாவ -சிதம்பரம் திருப்புகழ்
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல் …… மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர் …… சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய …… ரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய …… முங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட …… கண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய …… கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ்வளி நாய கொண்குக …… அன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவும காசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர …… தம்பிரானே.
……… சொல் விளக்கம் ………
(By Sri Gopalasundaram in kaumaram.com)
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர்
……….., அவர்களுடன்
மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு
கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன்.
இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர்
நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா …
இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர
சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில்
இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே,
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன்
தொழுது இன்புறவே மனு நூல் விளம்பிய கந்த வேளே …
லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே,
மனு நூல் (தரும சாஸ்திரத்தை) எடுத்து ஓதிய கந்த வேளே.
சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகா மணி
மோக வஞ்சியர் செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக … செங்
குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு
பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த
வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த
வள்ளிக்கு நாயகனே,
ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ
கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா
சவுந்தர தம்பிரானே. … செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை
என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில்,
திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.
* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.
***
மனு நூல் என்பதை பொதுவில் தர்ம சாஸ்திரம் என்று திரு கோபால சுந்தரம் எழுதியுள்ளார் . மனு முதலான தர்ம சாஸ்திரங்கள் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் இந்துக்கள் காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு சட்ட விதிகள் மாறும் என்று எண்ணி மனுவுக்குப் பின்னர் சுமார் 20 ஸ்ம்ருதிகளை/ சட்டப் புஸ்தககங்களை எழுதியுள்ளனர்; இப்போது இந்தியர்கள் பின்பற்றுவது இந்திய அரசியல் சட்டம் எனப்படும் சட்டம் ஆகும் . அதையும் கூட நாம் அவ்வப்போது திருத்தி வருகிறோம். சங்க காலம் முதல் மஹாத்மா காந்தி காலம் வரை மனு ஸ்ம்ருதியைப் பாராட்டியதால் நாமும் மனு நீதி சோழனுக்குப் பல இடங்களில் சிலை வைத்தோம்.
கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும், மன்னர்கள் மனு நீதிப்படி ஆட்சி செய்ததாகப் புகழ்ந்துரைத்துள்ளனர் . அருணகிரிநாதரும் அவ்வாறே கருதி முருகன் மீது மனு தர்ம நூலை ஏற்றிவிட்டார் போலும்!
–subham—
Tags– மனு நீதி சாஸ்திரம்,முருகன் கொடுத்தது, அருணகிரிநாதர், புதிய தகவல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia 44; One Thousand Interesting Facts -Part 44
***
Item 278
புறநானூறு4, பாடியவர்: பரணர், பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி,
In Purananuru verse 4 composed by Paranar, we see a metaphor describing the king in the battlefield.
Blood stained sword of the Choza king- red sky;
Anklets- horns of the bull;
Shield with the holes- targets ;
Horses with red mouth- tiger that killed a deer;
Elephants- Yama, God of death;
The king riding a chariot- sun rising in the blue sea.
***
279
தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே
There is a beautiful simile as well.
The countries conquered by you are wailing, crying like a motherless child.
Poet Paranar is famous for his similes and metaphors.
***
280
Very interesting story about fox headed poet
புறநானூறு5, பாடியவர்: நரிவெரூஉத்தலையார், பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
There are two interpretations. 1.He is from a town named Nariverūuthalai which is not correct.
2.He has a disgusting head like a fox which was cured by the king.
Here also there are two interpretations.
As soon as he saw the king, his head disease was cured by a MIRACLE. And he got normal face with normal head.
In those days kings were considered Gods. People believed that just kings could do miracles. Even Tiruvalluvar talks about such miracles. If the king rules justly, the fields will yield tremendous harvest without any effort, he said.
Second interpretation is the king helped him to get proper medical treatment.
***
281
காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி,
He is also using a simile about children.
I have to tell you something! Protect your country like you would guard an infant.
****
Full of Hindu Puranic Details!
Puranānūru 6, Poet KāriKizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi
282
From Himalayas to Kanyakumari
Poet Kaarikizaar gives us very important details:
Eka Bharat- One India. From North to South and from East to West, One India.
Still there are some ignorant people in India who has been writing that British rule united India. But Hindu scriptures have been writing Aa Setu Himachala—From Dhanushkoti to Himalayas—
புறநானூறு6, பாடியவர்: காரிகிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
Pandya King Mudykudumi Peruvazuthi bows his head only on two occasions. When he is going around the Shiva Temple and when Brahmins bless him reciting the Four Vedas.
முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே, இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே
The word Shiva never occurs in Tamil until very late period like sixth century CE. But the poets used Blue throated, Three Eyed/Trayambaka god to mention Lord Siva. Here three eyed god is used.
***
284
Throughout Sanskrit literature particularly, Kalidasa works, we see the kings are compared to Pancha Bhutas/five elements, Dik Palakas/Eight Vedic Gods of Eight Directions and Sun and Moon. Even in Purushasukta of Rig Veda tenth Mandala we see Sun and Moon are associated with the all-pervading God.
Here the poet compared the king with sun and moon. தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும், மன்னிய பெரும, நீ நிலமிசையானே!
Comparison with Kalidasa
Raghuvamsa – 1-29;2-75; 3-27; 4-11, 12; 6-31, 32.
In 4-11,12 and 6-31,32 we see Moon and Sun comparison to kings in Kaldasa.
***
285 Go Loka
It looks like the poet was thorough with Hindu scriptures
He mentioned Yama;
He mentioned Go Loka (World of Cows)
He mentioned also the Sea Dug by Sagaras; that is why ocean is called Saagaram in Sanskrit
முப்புணர் அடுக்கிய Three Layers Bhur Bhuva Suvaha ; தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் Ancient ocean; ஆனிலை உலகத்தானும் Go LOka –, தெரிகோல் ஞமன் போல Yama with Balance to weigh the Papa and Punya
*** 286
Sanskrit words used by the poet
Nagar- Temple
Gnaman -Yama
Yaagasaalaa – Firepit Sacrifice Shed
Ulakam – lokam
Desam- theyam
Muni- munivar
(Naan marai – four vedas)
***
287
Dharma, Artha Kama, Moksha
Four Hindu values are mentioned in Tolkappiam and Tirukkural; in fact Kural is named (Muppaal in Tamil) Dharma, Artha, Kama in the same order.
Here the commentators add one more interesting interpretation. Poet Karikizar mentioned Mokha by mention the King Circumambulating temple, mentioned Dharma by the mention of Bowing to Brahmins in Yaga sala, Kama by referring to Let your anger disappear when you see family women, and Artha by mentioning conquering enemy lands.
To be continued…………
Tags- Purananuru Wonders 4, Go loka, Hindu Values, Yaga Sala, bowing to Brahmins, Going round temple, Ancient Tamil Encyclopaedia 44, One Thousand Interesting Facts -Part 44
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்!
ச. நாகராஜன்
துலியா நகர் மாஜிஸ்ட்ரேட்டிற்கு முன்னால் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஒருவன் நகைகளைத் திருடி விட்டான் என்பதே அந்த வழக்கு.
அந்த நகைகளை வைத்திருந்தவனோ அவற்றை ஷீர்டி சாயிபாபா தான் தனக்குக் கொடுத்தார் என்றான்.
“அவரையே கேட்டுப் பாருங்கள். அவர் தான் இதற்கு சாக்ஷி” என்றான் அவன். அனைவரும் திகைத்தனர்.
மாஜிஸ்ட்ரேட்டிற்கு வேறு வழி இல்லை.
அவர் ஷீர்டி சாயிபாபாவிற்கு சம்மனை அனுப்பினார்.
கான்ஸ்டபிள் ஒருவன் சம்மனைக் கொண்டு வந்து ஷீர்டி சாயிபாபாவிடம் கொடுக்க முனைந்தார்.
“அதை அந்தத் தீயில் போடு” என்றார் பாபா.
அங்கிருந்த சீடர் ஒருவர் அதை வாங்கித் தீயில் போட்டார்.
இது கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்தும் அவர் வராமல் இருந்ததற்காக அவருக்கு பிடி வாரண்ட் அனுப்பப்பட்டது.
கண்பத்ராம் என்ற கான்ஸ்டபிள் பாபாவிடம் வந்து, “பாபா, அவர்கள் வாரண்டை அனுப்பி இருக்கிறார்கள்’ என்றார்.
“என்னுடன் தயவு செய்து துலியாவிற்கு வர முடியுமா?” என்று அவர் பணிவுடன் கேட்டார்.
“அதைத் தூக்கி எறி” என்றார் பாபா.
அவர் திகைத்துப் போனார்.
அங்கிருந்த சீடர் என்.ஜி. சந்தோர்கர் ஒரு யோசனை கூறினார். அதன் படி ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டது. அதில் பாபா ஏராளமான பக்தர்களால் வணங்கப்படுபவர் என்றும். இப்படி வாரண்ட் அனுப்புவது முறையற்றது என்றும் சாட்சியம் நிச்சயம் தேவைப்பட்டது என்றால் ஒரு கமிஷனரை அனுப்பலாம் என்றும் மகஜரில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டான நானா ஜோஷி கமிஷனராக ஷீரடிக்கு வந்தார்.
விசாரணை ஆரம்பமானது.
கமிஷனர்: உங்கள் பெயர் என்ன?
பாபா: என்னை எல்லோரும் சாயி பாபா என்று அழைக்கிறார்கள்.
கமிஷனர்: உங்களுடைய தந்தையின் பெயர் என்ன?
பாபா: அவர் பெயரும் சாயிபாபா தான்.
கமி: உங்கள் குருவின் பெயர் என்ன?
பாபா: வெங்கூசா
கமி: அவரதி ஜாதி, மதம் என்ன?
பாபா: கபீர்
கமி: ஜாதி? இனம் என்ன?
பாபா : பரவார்திகர் (இந்தச் சொல்லுக்கு கடவுள் என்று அர்த்தம்)
கமி: வயது என்ன?
பாபா: பல லட்சம் வருஷங்கள்.
கமி: நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியம் என்று சத்தியம் செய்வீர்களா?
பாபா: நான் சொல்வதெல்லாம் சத்தியமே.
கமி: உங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரியுமா?
பாபா; தெரியும். எனக்கு எல்லோரையும் தெரியும்.
கமி: அந்த குற்றம் சாட்டப்பட்டவர் உங்களது பக்தன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார். அது உண்மையா?
பாபா : ஆம், நான் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன். அனைவரும் என்னுடையவரே.
கமி: நீங்கள் அந்த நகைகளைக் கொடுத்ததாக அவர் சொல்கிறார். கொடுத்தீர்களா?
பாபா; ஆம். நான் கொடுத்தேன். யார் யாருக்குக் கொடுக்கிறார்கள்?
கமி: நீங்கள் அவற்றை அவருக்குக் கொடுத்தீர்கள் என்றால், அவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை எப்படி உங்கள் வசம் நீங்கள் வைத்திருந்தீர்கள்?
பாபா: இதெல்லாம் என்ன? இந்த சனியனோடு எனக்கு என்ன தொடர்பு?
கமிஷனர் திகைத்தார். பிறகு அனைவரும் கூடி யோசித்தனர்.
கிராமத்திலிருந்த குறிப்புகளைக் கொண்டு வருமாறு அனைவரும் கூறினர். அதில் கிராமத்தைச் சேராத அந்நியர்கள் வந்ததற்கான குறிப்புகளை எடுத்தனர்.
அதில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த கிராமத்திற்கு அந்து குறிப்பிட்ட தேதியில் பாபாவைச் சந்தித்தற்கான எந்த வித குறிப்பும் பதிவாகியிருக்கவில்லை.
பாபா கிராமத்தை விட்டு எங்கும் செல்பவர் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இவற்றையெல்லாம் கமிஷனர் எழுதி பாபாவிடம் காட்டினார்.
பாபா அவை உண்மை தான் என்றார்.
கமிஷனர் ஒருவாறாக தனது அறிக்கையைத் தயார் செய்தார்.
பாபாவிடம் கையெழுத்து கேட்கவில்லை கமிஷனர்.
அங்கிருந்து அவர் சென்றார். சாட்சியம் இப்படியாக முடிந்தது.
பாபா எந்த ஒரு காலத்திலும் எந்த ஒரு பேப்பரிலும் தன் கையெழுத்தை இட்டதே இல்லை.
விசித்திரமான இந்த வழக்கு இப்படியாக முடிந்தது!
ஆதாரம்: Sri Sai Baba’s Charters and Sayings – B.V. Narasimhaswami
The Hardy–Ramanujan number: What 1729 reveals about Srinivasa Ramanujan, even to non-mathematicians
National mathematics day: We explore the Hardy–Ramanujan number to explain two things about the legendary Indian mathematician Srinivasa Ramanujan, on his 138th birth anniversary.
Written by Yashee New Delhi | Updated: December 22, 2025 07:20 PM IST
5 min read
Ramanujan birth anniversary: December 22 is observed as National Mathematics Day in honour of Srinivasa Ramanujan. (Photo: Wikimedia Commons)
National Mathematics Day: December 22 is observed as National Mathematics Day in India to honour Srinivasa Ramanujan, the man who seemingly knew infinity. While Ramanujan is celebrated as a genius and a legend, often, there is the danger of popular discourse around him stopping right there — celebrating him as an unknowable genius, and not making enough efforts to understand him.
Ramanujan is known for the many formulae he scribbled on pieces of paper — proved as correct by other scientists — without showing anything of the process he used to arrive at the formula. In mathematics, a discipline of order and method and patterns and connections, what Ramanujan did was highly unorthodox. There is the popular legend that once in England, when asked about his methods, Ramanujan said the deity Namagiri appeared to him in his dreams and explained the processes to him.
On his 138th birth anniversary, we discuss a number that bears his name, the Hardy–Ramanujan number, to explain two things about him: his innate genius for spotting rules and patterns, and yet the rigorous work that had trained his mind to work the way it did.
some basics about Srinivasa Ramanujan
Ramanujan was born in 1887 to a Tamil Brahmin Iyenger family. He died of ill health at just 32. But in those short years, he accomplished work that continues to fascinate modern scientists, and made him one of the youngest members of the Fellows of the Royal Society in England and the first Indian to be elected as a Fellow of Trinity College, Cambridge.
He grew up largely in the temple town of Kumbakonam in Tamil Nadu. Krishnaswami Alladi, an Indian-American professor of mathematics at the University of Florida, has written that Ramanujan’s family venerated the goddess Namagiri, worshipped at the Temple of Namakkal in the state. While his aptitude for mathematics was apparent early in life, for some years, Ramanujan worked alone. In 1913, he wrote two letters to the highly regarded English mathematician G H Hardy, who recognised his genius and called him to England.
Here, while his work got the necessary exposure, Ramanujan fell sick frequently, due to the cold and his inability to manage a sufficiently nutritious vegetarian diet, resulting in hospitalisations. It was during one such hospital visit that the Hardy–Ramanujan number came about.
What is the Hardy–Ramanujan number?
The Hardy-Ramanujan number is 1729, the smallest number that can be expressed as the sum of two cubes in two different ways: 1³ + 12³ = 1 + 1728 = 1729; and 9³ + 10³ = 729 + 1000 = 1729. While many readers can wonder, ‘okay, so what?’, it is the way Ramanujan saw the number that is interesting.
The anecdote goes thus: Ramanujan was hospitalised in Putney and Hardy came to see him in a taxicab. He remarked to the Indian that the vehicle that brought him here had a “dull” number, 1729, and “hopefully it is not unfavourable omen.”
Ramanujan replied, “No, Hardy, it is a very interesting number; it is the smallest number expressible as the sum of two cubes in two different ways.”
Thus, Ramanujan was instantly able to see a rare pattern in a number randomly thrown at him.
What does the Hardy–Ramanujan number reveal about Ramanujan?
So far, so good and so intuitive. But mathematicians have written about how this wasn’t a random divining of patterns by Ramanujan, but a result of his deep interest in numbers — he wasn’t just “unusually blessed”, but a rigorous and innovative thinker.
The 2016 book My Search for Ramanujan: How I Learned to Count, by mathematicians Ken Ono and Amir D Aczel, mentions the Putney hospital incident. The book adds, “Ramanujan was aware of this property of 1729 because of work he had done on a problem studied by Euler that can be found in his notebooks. The number 1729 appears in Ramanujan’s works in yet another context, this time related to Fermat’s last theorem. It appears that he was thinking about near misses to Fermat’s claim.”
The translation for non-mathematician readers is: Euler is the Swiss mathematician Leonhard Euler, who had worked on cubes. Fermat’s last theorem is French mathematician Pierre de Fermat’s 1637 theorem that there are no whole numbers x, y, z such that xⁿ + yⁿ = zⁿ where n is greater than 2, or, no two cubes can add up to another cube. Now if 9³ + 10³ had equalled 1728 and not 1729, it would violate Fermat’s theorem, because 1728 is 12³.
This shows Ramanujan’s deep fascination with numbers and the laws that govern them. He had spent time dwelling on “near misses”, a number that almost violated a centuries-old theorum, showing his preoccupation and deep study of numerical rules and patterns. Thus, his recognising the pattern at the Putney hospital was not just another instance of unexplained and lucky genius manifesting itself, but the result of a lifelong, if unconventional, study.
FROM INDIAN EXPRESS 22-12-2025
கணித மேதை சீனிவாச ராமானுஜர், FROM JANAM TV
கணித மேதை ராமானுஜரின் பிறந்தநாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சீனிவாச ராமானுஜர் பள்ளி படிப்பில் சுமாரான மாணவர். ஆங்கிலம், Physiology போன்ற பாடங்களில் எப்போதும் தோல்வியையே சந்தித்தவர். உயர்கல்விக்கு செல்ல எழுதப்படும் இண்டர்மீடியட் தேர்விலும் தோல்வி அடைந்தவர். தொடர் தோல்வியால் உதவித்தொகையையும் இழந்தவர்.எளிமையாகச் சொல்வதென்றால், பொது பார்வையில் அவர் ஒரு மக்கு மாணவர். ஆனால், இதே ராமானுஜர்தான், கணிதவியலில் இந்தியாவின் முகமாகத் திகழ்கிறார். லண்டன் ராயல் சொசைட்டியில் மிகவும் இளம் வயதில் உறுப்பினராகத் தேர்வானார். சுமார் 3,900 கணித சமன்பாடுகளையும், குறியீடுகளையும் கண்டுபிடித்தார். pi-இன் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடும் முடிவிலித் தொடர்களை உருவாக்கினார்.
அவரது கணித சூத்திரங்கள் 100 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை டி-கோட் செய்யப்பட்டபடியே உள்ளன. தமிழரான ராமானுஜனின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் படமாக எடுத்துள்ளார்கள் என்றால், அதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை உணரலாம். (ப்ரீத் – https://www.youtube.com/watch?v=YzCNegbL1Hw) 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன். சிறுவயதில் இருந்தே கணிதம்தான் அவரது உலகம். அனைத்து பாடங்களிலும் தோல்வியடையும் அவர், கணிதத்தில் மற்றும் முழு மதிப்பெண் பெற்றுவிடுவாஅவரை விட வயதில் மூத்த மாணவர்களுக்குக் கணித பாடம் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவரது கணித அறிவு இருந்தது. 1904ம் ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு அவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், கணிதம் தவிர்த்துப் பிற பாடங்களில் தேர்ச்சி பெறாததால் உதவித்தொகையை அவர் இழந்தார்.
பின்னர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்த ராமானுஜரால், அங்கும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், கடைசி வரை அவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இருந்தபோதும், வீட்டில் இருந்தபடியே கணித புத்தகங்களை அவர் படிக்கத் தொடங்கினார். முழு நேரமும் கணித ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தார். இதனிடையே, சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்த அவர், அங்கும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கணித ஆய்வில் ஈடுபட்டபடியே இருந்தார்.ராமானுஜரின் இந்தத் திறமை இங்கிலாந்தில் இருந்த பிரபல கணித ஆய்வாளரான G.H. Hardy-ன் காதிற்கு சென்றது. உடனடியாக, லண்டன் வரும்படி ராமானுஜருக்கு அவர் அழைப்பு விடுத்தார். அடிப்படையில் ராமானுஜர் ஒரு பிராமணர். எனவே, அவர் கடல் கடந்துசெல்ல கூடாது என, அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இருந்தபோதும், கணிதம் மீதான காதல் காரணமாக, அவர் கடல் தாண்டி லண்டன் சென்றடைந்தார்.
அங்கு ஜி.ஹெச். ஹார்டி, ஜான் இ. லிட்டில்வுட் போன்ற கணிதவியல் அறிஞர்களுடன் பணிபுரியத் தொடங்கினார். மேலும், Mock Theta Functions, Partition Theory, Modular Forms போன்ற முக்கிய கணித கோட்பாடுகளை உருவாக்கினார். பல நூற்றாண்டுகளாக விடை காணப்படாமல் இருந்த கணித சூத்திரங்களை விளக்கிக் கட்டுரைகளையும் வெளியிட்டார். குறுகிய காலத்திலேயே கணித உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தார் ராமானுஜர். அத்துடன், கணிதவியலில் புதிய அத்தியாயத்தையே அவர் தொடங்கி வைத்தார்.நாமக்கல்லில் உள்ள நாமகிரி தாயார்தான், ராமானுஜரின் குலதெய்வம். தாயார் மீது அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உறங்கும்போது தனது கனவில் நாமகிரி தாயார் கணித சூத்திரங்களுக்கான விடைகளை அளிப்பார் எனவும், அதனை காலை எழுந்தவுடன் குறித்து வைத்துகொள்வேன் எனவும் ராமானுஜர் தெரிவித்துள்ளார்.
தனது அனைத்து கணித சாதனைகளுக்கு காரணம் நாமகிரி தாயார்தான் என அவர் விளக்கம் அளிக்கிறார். இப்படி ஒரு புறம் கணிதவியலில் அடுத்தடுத்து பல சாதனைகளை அவர் படைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக தொடங்கியது.லண்டனின் சீதோஷன நிலை, உணவு உள்ளிட்டவை அதற்கான காரணமாக அமைந்தன. இதனால், அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப நேரிட்டது.
அப்போதும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. சிறுநீரக கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால், 1920ம் ஆண்டு கும்பகோணத்தில் அவரது உயிர் பிரிந்தது. இத்தனைக்கும் அவருக்கு அப்போது வெறும் 32 வயதுதான் ஆகியிருந்தது. அவர் இறந்து தற்போது 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனாலும், அவரது கணித கோட்பாடுகள், சூத்திரங்கள், சமன்பாடுகள் மீதான ஆய்வுகள் தொடர்ந்தபடியே உள்ளன.
இன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள பார் கோடுகளின் எண் அமைப்பு, ஏடிஎம் கார்டுகள், பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் புள்ளியியல் கோட்பாடு உள்ளிட்ட பலவற்றிலும் ராமானுஜனின் பங்களிப்பு உள்ளது. அவரது பிறந்தநாளான டிசம்பர் 22ம் தேதியை மத்திய அரசு, தேசிய கணித தினமாக கொண்டாடி வருகிறது. தொடக்கத்திலேயே கூறியதுபோல இந்தியாவின் கணிதவியல் முகமாக அவர் திகழ்ந்து வருகிறார். சீனிவாச ராமானுஜர், இந்தியாவின் பெருமிதம். சீனிவாச ராமானுஜர், இந்தியாவின் பொக்கிஷம்.
–SUBHAM—
TAGS- MATHEMATICIAN, RAMANUJAN, கணித மேதை ,சீனிவாச ராமானுஜன்
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 12 PM GMT
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer –Mrs Jayathy Sundar Team
***
NEWS BULLETIN
VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil
****
Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore
Topic- Vallam Temple
****
Talk by Prof S Suryanarayanan, Chennai
Topic-Muthuswamy Diksitar Kritis
***
SPECIAL EVENT-
Talk on Glory of Tamil
By Dr Jai Ganesh (Ilamaran)
Tamil Scholar, Author, Speaker on Radio and TV.
He has received several awards; authored five books
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 21 December 2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்
***
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவிஆனந்தும் , லதா யோகேஷும் வழங்கும் செய்திசெய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் —சொற்பொழிவு—
பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்
தலைப்பு –திரு வல்லம் தலம்
****
சொற்பொழிவு
பேராசிரியர் சூரியநாராயணன்
தொடர் சொற்பொழிவு
தலைப்பு – முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
தலைப்பு –தலைநிமிரச் செய்த தமிழ்
சொற்பொழிவாளர்
முனைவர் பாஜெய்கணேஷ் (இளமாறன்)
முனைவர்பா.ஜெய்கணேஷ் (பா. இளமாறன்)
இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்
எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும்தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் , செங்கல்பட்டு மாவட்டம்
மயிலம் தமிழ்க்கல்லூரியில் இளங்கலையும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பயின்றவர். பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையோடு தமிழ்இலக்கணஉரைவரலாறு:யாப்பியல்உரைகள்என்னும் தலைப்பில் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.
இலக்கணம், உரைகள், பதிப்புகள் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் 10 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரின்நூல்கள்: தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் – பன்முகவாசிப்பு, முதலானவை ஆகும்.
இதழ்களின் ஆசிரியர் குழு: புதிய புத்தகம் பேசுது, மாற்றுவெளி, காட்சிப்பிழை ஆகியவற்றில் இருந்ததோடு தற்போது வல்லமை, சான்லாக்ஸ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
விருதுகள்:
1. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2013 ஆம் ஆண்டில் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றமை.
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம் சிறந்த இளம் ஆய்வாளர்க்கான விருதினை 1,50,000 பொற்கிழியுடன் 2014ஆம் ஆண்டு வழங்கியமை.
இளம் ஆய்வறிஞர் விருது, குடியரசுத் தலைவர் விருது (செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் வழி) மே, 2015.
தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்
ழகரம் – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை – 60 வாரங்கள்
தமிழோடு விளையாடு – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை
வெளிநாட்டுப் பயணம்
2016 ஆம்ஆண்டு அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து பயணம்செய்தமை.
2019 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேறக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தமை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ENGLISH VERSION POSTED YESTERDAY WITH MORE PICTURES.
லிங்கோத்பவர்
லிங்கம் என்றால் அடையாளம், குறி என்று பொருள்; இறைவன் உருவமற்றவன் என்பதைக் காண இந்த உருவத்தை ஆன்றோர்கள் பயன்படுத்தினர் ; அதற்குள் இருப்பது என்ன என்று அறியாதோர் கேட்டால் அப்போது அதற்குள் உருவமுள்ள மூர்த்தியாக சிவன் வெளிப்படுவார்
ஆக உள்ளானும் அவன்! இல்லானும் அவன்! – என்பதைக் காட்டுவதே லிங்கமும் லிங்கோத்பவரும் ஆவர் . கோவில்களில் சிவன் சந்நிதி பிரகாரத்தில், ஒரு மாட த்தில் லிங்கோத்பவரைக் காணலாம் .
என்ன கதை?
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது ;நீ பெரியவனா, நான் பெரியவனா என்று மோதினர்; நடுவர் சிவபெருமானிடம் கேட்டு விடுவோம் என்று பட்டி மண்டப மேடையை கைலாயத்துக்கு நகர்த்தினார்கள் ; அவர் சொன்னார்; இருவருக்கும் ஒரு ‘டெஸ்ட்’ வைக்கிறேன். என்னுடைய முடியை ஒருவர் தேடுங்கள், கால் அடியை ஒருவர் தேடுங்கள். யார் முதலாக வந்து கண்டதை ரிப்போர்ட் செய்கிறீர்களாளோ அவரே பெரியவர் என்றார். உடனே பிரம்மா அன்னவாஹனத்தில் பறந்தார் ; ஏற்கனவே வராஹ அவதாரம் எடுத்துப் பழக்கப்பட்ட விஷ்ணு வராஹமாக மாறி பூமியைத் தோண்டினார். அப்போது சிவன் இருந்ததோ ஜோதி வடிவத்தில்; ஆண்டுகள் பல உருண்டோடின. .எவரும் ‘கோல்’ போட முடியவில்லை ஆட்டம் ‘டிராவில் முடியுமோ என்று பக்தர்கள் அ ஞ்சினர் . அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு தாழம் பூ கீழே விழுந்து கொண்டிருந்தது; ஏ பூவே எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார் பிரம்மா. நான் சிவன் முடியிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் விழத் துவங்கினேன் என்றது பூ; எனக்கு ஒரு சின்ன உதவி செய்; சிவனிடம் அழைத்துச் செல்கிறேன்; நான் சிவன் முடியைத் தரிசித்ததாகச் சொல் என்று மன்றாடினார் ;தாழம்பூவும், இரக்கப்பட்டு அப்படியே செய்தது. இருவரும் திருட்டு முழி முழித்தவுடன் சிவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. பிரம்மாவுக்கு தண்டனை கொடுத்தார் அவருக்கிருந்த ஐந்து தலைகளில் பொய் சொன்ன வாயுடைய தலையைக் கிள்ளி எறிந்தார் இனி உனக்கு பூலோகத்தில் பூஜை, அர்ச்சனை இல்லை போ என்றார்; தாழம் பூவையும் சபித்தார் எந்த பூஜையிலும் உனக்கு இடமில்லை போ என்றார்
(உண்மையில் இந்தக் கதையின் உட்கருத்து: நீயா நானா என்ற வாதத்துக்கு முடிவே இல்லை அது விதண்டாவாதம் என்பதும் பொய்ச் சாட்சி சொன்னால் தண்டனை உண்டு என்பதும் கதையின் கருத்து ; அதை விளக்குவதற்கு ஆன்றோர்கள் எட்டுக்கட்டிய கதை இது என்பதே என் அபிப்ராயம்).
அத்தோடு லிங்கம் என்பது ஆதி அந்தமற்ற உருவமில்லாத கடவுள் என்பதை விளக்கவும் அதையே பாமர மக்கள் உருவத்துடனும் வணங்கலாம் என்பதை விளக்கவும் எழுந்த கதை இது;
லிங்கோத்பவர் சில இடங்களில் மனித முகம் உடைய அன்னத்தையும் பன்றியையும் காட்டுகிறது. பெரும்பாலான இடங்களில் சிவ பெருமானின் பாதி உருவம் மட்டும் லிங்கத்துக்குள் காட்டப்பட்டு இருக்கிறது.
***
ஏகபாத மூர்த்தி
ஒற்றைக்காலில் சிவபெருமான் நிற்கும் வடிவம் இது ; ஏக பாதம் என்றால் ஒரே கால்
ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது. ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர். இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் ஜடாமகுடமும் தரித்து இருப்பார் .
உலகம் அழியும் காலத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவார்கள். சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன ஒவ்வொரு சிவன் கோவிலிலும் பிரகார மாடத்தில் உள்ள இம்மூர்த்தி சில மாறுதல்களுடன் காணப்படுகிறார்.
***
ஊர்த்வ தாண்டவர்
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிநார். அதுவரை சிவனுக்குச் சரிசமம் ஆகிய தேவி, அம்பாள் காலைத் தூக்கி ஆட முடியாமல் வெட்க்கித் தலை குனிந்தார் சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.
***
காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தி
யமனின் வேறு பெயர்கள்- காலன், அந்தகன்
காலன் என்னும் யமனைக் காலால் உதைத்துத் தள்ளிய சிவனின் வடிவம் காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தியாகும் . திருக்கடையூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.
மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16 வயதுதான் முழு ஆயுள் என்று பிறப்பதற்கு முன்னரே ரிஷிக்குத் தெரியும்; அதன்படி, 16 வயது முடியும்போது, எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் காட்டி அனைத்துக் கொண்டிருந்த போது , எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான்.
–SUBHAM—
TAGS-Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34,லிங்கோத்பவர், கால சம்ஹார மூர்த்தி, ஏகபாத மூர்த்தி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 21- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று 5 வது நாளாக நடந்தது.
மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
****
திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு
”சட்டம் – ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் – ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,” என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.’இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்
இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ‘தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார்.
***
ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்தது.
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தமானது.
மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனையையொட்டி தூண் உள்ளது. நெல்லித்தோப்பு, பாதைகள், படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட்டு வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை முழுவதும் உரிமையியல் கோர்ட்டு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
******
இன்று சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, இன்று டிசம்பர் 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
உலகின் வெவ்வேறு பிரதேச நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.
***
திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்தப் பிளேடுகள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். பிளேடுகள் திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.
கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடியை சேகரிக்க இந்த அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
****
சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு?
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் அவரிடமும் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கடிதத் தில் கூறப்பட்டுள்ளதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமானது, வெறும் திருட்டு சம்பவம் அல்ல.முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திரைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது.
இதில், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர், இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள்-; நம்பகமானவையும் கூட.
இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில், 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகியுள்ளது.
தங்கக்கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விபரங்களை அளிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கடிதத் தில் கூறியுள்ளார்
****
சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடத்தை இஸ்லாமியர்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்; .இஸ்லாமிய குழுக்களால் நிர்வாகிக்கப்படும் ஹஜ் விடுதிகளில் தேச விரோத சதிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹஜ் விடுதியால் தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
***
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
வேலூர் ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார். திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மனை, குடியரசு தலைவர் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, ஆயிரத்து 800 கிலோ எடைக் கொண்ட வெள்ளி விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் குடியரசு தலைவர் வழிபாடு நடத்தினார்.
இதனை அடுத்து, மகாலட்சுமி மற்றும் வைபவ லட்சுமிக்குப் பூஜை செய்த திரௌபதி முர்மு, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
****
பெரிய சிவ லிங்கம் பீகாருக்கு புறப்பாடு
120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட்கல்லில் உருவான சிவலிங்கம்..இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணத்தைக் துவக்கியுள்ளது
ஒரே கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட மிக உயரமான சிவலிங்கம் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருக்கிறது. 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், மகாபலிபுரத்தில் திறமையான கைவினைஞர்களின் பல வருட உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது.
இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய வழிபாடாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் 28 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…
மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2
ச. நாகராஜன்
இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயிண்ட் ஜார்ஜின் சிலுவையை அடிப்படையாகக் கொண்டதாகும். கிறிஸ்தவத்திற்காக உயிரைத் துறந்த ஒரு ராணுவ செயிண்ட் இவர். சிலுவைப் போர்களுக்கு ஊக்கமூட்டும் நபராகத் திகழ்ந்தவர் இவர். சின்ன ஒரு கற்பனை செய்து பார்ப்போம் – இந்தியாவின் தேசீயக் கொடியில் ஓம் என்ற எழுத்தைச் சேர்த்தால் என்ன ஆகும்? ஐநாவிலிருந்து உலகில் உள்ள அனைத்து “முற்போக்கு நாடுகளூம்” களத்தில் இறங்கி நம்மைத் திட்டும்.
பாரம்பரியமான பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்து மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியவர்களை இன்றும் வணங்கும் இங்கிலாந்து இன்றும் கூட ராஜாக்களின் அரசியல் அமைப்பைத் தான் கொண்டிருக்கிறது! ராணி தான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். அவரே சர்ச்சுக்கும் தலைவி! அதாவது சர்ச் தான் அந்த நாட்டின் முக்கிய முதுகெலும்பு!
இந்தியாவில் ஒரு அரச வம்சமும் இப்போது அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 12 அரச பரம்பரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தாம் உலகின் முக்கால் பாகத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் பிபிசி ஒலிபரப்பின் படி இந்தியா ஒரு எதேச்சாதிகார நாடு; இங்கிலாந்தோ ஜனநாயக நாடு!
தேசீய கீதங்களை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதத்தில் ராணி 11 தடவை குறிப்பிடப்படுகிறார். அவர்கள் படையெடுத்து அடிமையாக்க முயலும் நாடுகளை வெற்றி கொள்ள இறைவனின் அருள் கோரப்படுகிறது. அமெரிக்க தேசீய கீதம் அடிமைத்தனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதை இன்னும் நீக்கியபாடில்லை. அதை இயற்றியவர் அடிமைகளை வைத்திருந்த ஒரு எஜமானர் தான். ஆனால் இந்திய தேசீய கீதமோ ஒரு மதத்தையும் ஒரு கடவுளையும் குறிப்பிடவில்லை; எவருக்கும் எதிரான கருத்து அதில் இல்லை.
அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 2006ம் ஆண்டு கிறிஸ்தவத்தைக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியது. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் சர்ச்சுகளுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டவையாகும். பிரான்ஸின் அரசியல் சட்டத்திலோ சர்ச்சையும் அரசையும் வேறுபடுத்தும் பகுதிகள் பல இடங்களில் இல்லை.
வட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கமே சர்ச்சுகளை நடத்துகின்றன; நிர்வகிக்கின்றன!
அராபிய நாடுகள் வெளிப்படையாகவே இஸ்லாமிய நாடுகள் தாம்!
ஐரோப்பாவோ கிறிஸ்தவத்தை மதசார்பின்மை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கடைப்பிடிக்கிறது. உலகளாவிய விதத்தில் ஒரு நல்ல பெயரை இது கொடுக்கும் அல்லவா! காகசீய கிறிஸ்தவ உணர்வைக் கொண்டுள்ள இதன் ஆழ்ந்த உணர்வை உக்ரேனியத்துடனான நட்பில் பார்க்க முடியும்.
காலனிகளை அடிமைப்படுத்தும் இந்த கிறிஸ்தவ நாடுகள்
மூன்றாம் உலகநாடுகளை தங்கள் மதம், அடையாளம், பண்பாடு ஆகியவற்றை உதறக் கோருவது ஒரு இரட்டை வேடம் அல்லவா? உலகில் சமத்துவத்தைக் கோரும் இதன் வெளிவேஷம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதை சுயமதிப்புள்ள எந்த நாடும் பொறுத்துக் கொண்டு அவற்றுடன் சேர முடியாதல்லவா!
– முற்றும்
**
ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்