History Cross Word 31-12-18 (Post No.5864)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –17-58
Post No. 5864


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி31-12-18 (Post No.5863)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –14-06
Post No. 5863


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குறைந்தது 15 தமிழ்ச் சொற்களைக் காணலாம்;

பிரித்துப் படித்தால் கூடவே கிடைக்கும்.

விடை கீழே தரப்பட்டுள்ளது.

TAMIL CROSS WORD 31-12-18

1
2


3

4


 5


6





7
8











9






10








  11







12



குறுக்கே

1.முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;

2.புனிதமான  பிராணி (வலமிருந்து இடம் போனால்)

4.ஒருபெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு

10.சிவப்பு நிற  மணல்

8.-கொடைக்கு இலக்கணமானவன்தர்மனுக்கு அண்ணன்

9.குமரி  முதல் கேரளம் முழுதும்  வீற்றிருக்கும் தேவி

12.இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது

6. சென்னை பாஷை- வியாபாரம் செய்;  வாங்கு

11.பசுந்தரையில் படர்வது

கீழே

2.திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்

1.அவனுக்கு என்ன —-  —-  வாழ்க்கைஅப்பா விட்ட சொத்து இருக்கிறது

3.மஹாபாரதத்தில் பாண்டவர்   கானகம் ஏகிய பகுதி

5.ஹோலி பண்டிகை  காலத்தில்   நடக்கும் தெருக்   கூத்து

7.(கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல்  கிரஹப்  பிரவேசம் வரை  தேவைப்படும் பாத்திரம்

10.போக (வினைச் சொல்)பிரியமான (பெயர்ச் சொல்)

Answers

சு1
ப2


வ3
க4
ன்னிகா 5தா  ம்

போ6
னீ

கு7
க8

ர்ன்
ர்


சொ
ப9

தி

செ10
ம்ண்
ம்

ல்
  பு11
டி




வை12கைறு

குறுக்கே

1.சுப- முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;

4.கன்னிகாதானம்-ஒரு  பெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு

செம்மண்-சிவப்பு நிற  மணல்

8.கர்ணன்  -கொடைக்கு இலக்கணமானவன்;   தர்மனுக்கு அண்ணன்

9.பகவதி-குமரி  முதல் கேரளம் முழுதும்வீற்றிருக்கும் தேவி

12.வைகை ஆறு-  இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது

2.பசு- புனிதமான  பிராணி (வலமிருந்துஇடம் போனால்)

6.போனீ- சென்னை பாஷை- வியாபாரம் செய்;   வாங்கு

11.புல் – பசுந்தரையில் படர்வது

கீழே

2.பன்னீர் சொம்பு – திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்

1.சுகபோக-அவனுக்கு என்ன —-   —  வாழ்க்கை; அப்பா விட்ட சொத்து இருக்கிறது

3.வனபர்வம்- மஹாபாரதத்தில் பாண்டவர்  கானகம் ஏகிய பகுதி

5.காமன் பண்டிகை  -ஹோலி பண்டிகை   காலத்தில்  நடக்கும் தெருக்கூத்து

7.கும்ப (கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல்  கிரஹப்  பிரவேசம் வரை  தேவைப்படும் பாத்திரம்

10.செல்ல- போக (வினைச் சொல்); பிரியமான (பெயர்ச் சொல்)

–subham–

போலி எழுத்தாளர்களை சமாளிப்பது எப்படி? (Post No.5862)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –7-24 am
Post No. 5862


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அலெக்ஸிஸ் பிரொன் (Piron) என்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர். ஒரு சமயம் அவர் ஒரு போலி எழுத்தாளரிடம் மாட்டிக்கொண்டார். எதிர்பாராத நேரத்தில் அந்த ஆசாமி வந்து,  ‘ஐயா பெரியவரே, என் கவிதைகளை நீங்கள் கேட்டு, கருத்து சொல்ல வேண்டும்’ என்றார்.

தயவு தாட்சிண்யம் காரணமாக பிரோனும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால் கவிதை எழுதியதாகச் சொல்லிக்கொண்டு வந்த படைப்பாளி, பயங்கரக் ‘கள்ளக் காப்பி’ அடிப்பவர். பிரபல கவிஞர்களின் எழுத்துக்களை அப்படியே எடுத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஓரிரு சொற்களைச் சேர்த்து தான் எழுதியதாக பாவனை செய்தார்.

பிரோனுக்கு என்ன  செய்வதென்று தெரியவில்லை. போலிக் கவிஞர் கவிதை வாசிக்கும்போது, எங்கெங்கு எல்லாம் மற்றவர் படைப்புகளைத் திருடி இருந்தாரோ அந்த இடமெல்லாம் தன் தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு பவ்யமாக சலாம் போட்டார்.

போலிக் கவிஞர் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒரே வியப்பு. திடீரென்று கவிதைகள் வாசிப்பதை நிறுத்திவிட்டு.

‘அன்பரே! அவ்வப்பொழுது தொப்பியைக் கழற்றிவிட்டு தலை குனிந்து சலாம் போடுகிறீர்களே! இதன் தாத்பர்யம் என்னவோ?’

உடனே  பிரோன் சொன்னார்:

‘ஓ! அதுவா? வேறு ஒன்றுமில்லை; நான் பழைய நண்பர்களைச் சந்திக்கும்போது  போடும் சலாம் அது! பழக்க தோஷம்; அவ்வளவுதான்- என்றார்.

(காப்பி அடிக்கப்பட்ட பழைய கவிஞர்களின் வரிகள் வந்த போதெல்லாம் அவர் சலாம் போட்டது, போலிக் கவிஞருக்குப் புரிந்ததோ இல்லையோ!)

Xxx

பாழாய்ப் போன பார்ஸல் மீண்டும் வந்தது!

ஸ்கட்லாந்தைச்சேர்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) . அவர் நாவல் ஆசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:–

“வசந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பெரிய பார்ஸல் நியூயார்க்கிலிருந்து வந்தது. அவசரம் அவசரமாகப் பிரித்தேன். ஒரு பெண்மணி ஒரு பெரிய கதை எழுதி, அன்பான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

‘அன்பரே! பெருந்தகையோனே!

என் கதைக்கு ஒரு அழகான முன்னுரை பின்னுரை எழுதுக.

எங்கெங்கெல்லாம் திருத்த வேண்டுமோ அங்கெங்கெல்லாம் ‘நகாசு’ வேலை செய்து திருத்துக. இதை வெளியிடவும் ஏற்பாடு செய்துவிடுங்கள்; காப்பி ரைட் கேட்டு பலரும்  வாசலில் ‘க்யூ’வில் நிற்க வேண்டும்; அப்படி என் கதையை ஜொலிக்கச் செய்துவிடுங்கள்’.

இதைப் படித்துவிட்டு பார்சலின் அட்டையைப் பார்த்தேன்.  எனக்கு ஐந்து பவுன்  அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து நொந்து போனேன்.அந்தப் பெண்மணி சரியாக தபால் கட்டணம் செலுத்தவில்லை!

காலம் உருண்டோடியது; காலைத்  தபால்களை ஆவலுடன் பிரித்துப் படித்துக்  கொண்டிருந்தேன். ஒரு பெரிய பார்ஸல்! அவசரப்பட்டு பிரித்துவிட்டேன்! என் பாழாய்ப்போன ஞாபக மறதி! அதே பெண்மணியின் பார்ஸல்!! கத்தை கத்தையாக எழுத்துப் பிரதிகள். அத்துடன் பவ்யமான ஒரு கடிதம்

“மீண்டும் அதே கதையை அனுப்புவதற்கு மன்னிக்கவும்; போன தடவை பார்ஸல் அனுப்பிய   பின்னர்தான் ஒரு செய்தி படித்தேன். கடலில் பெருங் காற்றாம்; ஒரே புயல் மழையாம். ஒருவேளை நான் அனுப்பிய பார்ஸல் உங்களிடம் வந்து சேரவில்லையோ என்று ஒரு ஸம்சயம்; அவ்வளவுதான்”.

ஸர் வால்டர் ஸ்காட் தலை மயிரைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான்; வெந்து,நொந்து, நைந்தே போனார்.

xxx

என் தரத்துக்கு ‘காப்பி’ அடிக்கவில்லையே!

சாமுவேல் கோல்ட்வின்  (Samuel Goldwyn) என்பவர் போலந்து நாட்டில் பிறந்த அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்.

ஒரு பொய்யன், அவர் எழுதுவதாக,அவர் பெயரில் போலி விமர்சனங்களைப் பத்திரிக்கையில் எழுதி வந்தான். இது சாமுவேலுக்கும் தெரியும். ஒரு முறை அந்த ‘போலி சாமுவேல் கோல்ட்வின்’, உடல் நலம் குன்றி எழுதவில்லை. உடனே மற்றொரு பொய்யன் கோல்ட்வின் பெயரில் அந்த வாரப் பத்திரிக்கையில் எழுதி இருந்தான்.  அதைப் அடித்த உண்மைச் சாமுவேலுக்குக் கொஞ்சம் வருத்தம்.

“அடடா! முந்தைய போலி போல, இவருக்கு நன்றாக எழுதத் தெரியவில்லையே!”-

என்று அங்கலாய்த்தார்!

சுய விமர்சனத்திலும் ஒரு பெருந்தன்மை!

xxxx

பென் ஜான்ஸனா! பிச்சைக்காரனா?

பென் ஜான்ஸன்(Ben Johnson)  என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர்.

அந்தக் காலத்தில் கிராவன் பிரபு (Lord Craven) என்பவர் , பென் ஜான்ஸனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். நண்பர்களிடம் பேசுகையில், ‘அட, எவ்வளவு சிறந்த எழுத்தாளர் அவரை என்றாவது ஒரு நாள் பார்க்க வேண்டும்’ என்று செப்பியிருந்தார்.

இது பென் ஜான்ஸனின் காதுகளையும் எட்டியது. உடனே ஒரு நாள், குசேலர் (சுதாமா) கிருஷ்ண பரமாத் வைப் பார்க்கப் போனது போல, கந்தலும் பிசுக்கும் உடைய ஆடைகளுடன் கிராவன் பிரபுவின் அரண்மனைக்குப் போனார்.

காவற்காரன் கேட்டான்:

யாரடா நீ?

‘நானா? பென் ஜான்ஸன் என் பெயர். ஐயாவைப் பார்க்க வந்தேன்’.

சீ’ போ! பிச்சைக்காரப் காரப்பயலே! ஐயாவைப் பார்க்க வந்தவனின் மூஞ்சியையும், மொகரையையும் பாரு’– என்று திட்டி விரட்டினான்.

பென் ஜான்ஸனும் விடவில்லை

டேய் போடா; நீதாண்டா பிச்சைக்காரன். நான் பென் ஜான்ஸண்டா; கொப்பன் மவனே! என்று பதிலுக்கு வசை பாடினார்.

ஏதோ அரண்மனை வாசலில்

‘’கச முசா’’ நடக்கிறது என்பதை அறிந்த கிராவன் பிரபு வாசலுக்கு வந்தார்.

‘ஐயா என்ன வாக்குவாதம்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

நானா? நான் பென் ஜான்ஸன்! ஐயாவைப் பார்க்க வந்தேன். அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்’.

அட! நீங்கள் பென் ஜான்ஸனா?

ஒரு வாத்து வந்தால் கூட ‘சூ’ என்று விரட்டப் பயப்படும் ஆள் போல அல்லாவா இருக்கிறீர்கள்! தி ஸைலண்ட் உமன் புஸ்தம் எழுதிய பென் ஜான்ஸனா? என்றார் கிராவன்.

பென் ஜான்ஸனா விடுவார்! படைப்பாளி ஆயிற்றே!

‘’சூ, சூ’’ என்று உரத்த குரலில் விரட்டிக் காட்டினார்.

கிராவன் பிரபுவுக்கு ஒரே குஷி! குசேலரை, கண்ணபிரான், அரண்மனைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தது போல ஸர்வ உபசாரங்களையும் செய்தார்.

tags–போலி எழுத்தாளர்கள், பிரோன்;சர் வால்டர் ஸ்காட், பென் ஜான்சன்

–சுபம்–

You can’t even say a Boo to a Goose! Authors Anecdotes (Post No.5861)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –5-25 am
Post No. 5861


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


Lord Craven during the reign of King James I was anxious to meet Ben Johnson, the poet. When the later learned of it he proceeded to call on his lordship. He was in a very shabby condition and the porter insulted him and asked him to go about his business. The poet, enraged, returned the compliment s. Lord Craven, hearing the disturbance came out to inquire about it.


I understand your lordship wishes to see me, said the poet.
You, friend! Exclaimed Lord Craven. Who are you?

“Ben Johnson “

No,no, you can’t be Ben Johnson who wrote “The Silent Woman “.
; you look as if you could not say Boo to a goose.


Boo, then! Cried Ben Johnson.


His lordship laughed and profusely apologised: you are Ben Johnson after all.

Xxxx



Sir Walter Scott told this story


“ One morning last spring, I opened a huge bunch of despatch…the contents proved to be a MS play by a young lady of New York who kindly requested me to read and correct it, equip it with prologue and epilogue, procure it for a favourable reception from the manager of Drury Lane and make Murray or Constable bleed handsome ly for the copyright ; and inspecting the cover I found that I had been charged five pounds odd for the postage . This was bad enough— but there was no help, so I groaned and submitted. A fortnight or so after, another packet , of not less formidable bulk arrived, and I was absent enough to break its seal too without examination.

Conceive my horror when out jumped the same identical tragedy of The Cherokee Lovers, with a second epistle from the authoress, stating that, as the winds had been boisterous, she feared the vessel entrusted with her former communication might have foundered, and therefore judged it prudent to forward a duplicate “.

Xxx


At an unguarded moment Piron was buttonholed by a poetaster who, standing his victim in a corner, announced that he was going to to read him the five entire acts of a tragedy he had just dashed off. After hearing the first scene, Piron perceived that the play was nothing but a potpourri of verses pillaged from other poets. So as he stood wearily listening he took off his hat and made a low bow to each quotation he recognised. The author at length lifted his eyes, observed Piron’s repeated salutation, and asked him why he bowed so often.
Why, said Piron as he edged away, that is the way I am accustomed to recognise old friends when I find them “.

Xxxx

Albert Smith once wrote an article in “Black woods “ , signed AS.
“Tut”, said Douglas Jerrold, on reading the initials, “what a pity Smith will tell only two thirds of the truth.

Xxxx



Self criticism is an admirable human trait. It is demonstrated in this story of Samuel Goldwyn. A ghost writer, who had been doing a series of articles purporting to be by Goldwyn, became sick and one of the pieces was done by a substitute ghost. Goldwyn, upon reading this article, expressed some dismay, saying,


“This is not up to my usual standard “.

Tags–  authors anecdotes, Goldwyn, Sir Walter Scott, Piron, Ben Johnson

Xxx subham xxx


செப்பு மொழி பதினெட்டு (Post No.5860)

Written by S Nagarajan


Date: 31 DECEMBER 2018


GMT Time uploaded in London – 4-39 am


Post No. 5860

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

சொல்ல வேண்டியதை நகைச்சுவையுடனும் மனதில் தைக்கும்படியும்   தங்கள் கருத்துக்களைச் சொல்ல அறிஞர்கள் முன் வந்தால் அது எப்படி இருக்கும்?

இதோ பார்க்கலாம்!

மார்க் ட்வெய்ன்

Mark Twain

Thunder is good, thunder is impressive, but it is lightning that does the work.

இடி பிரமாதம் தான், உள்ளத்தில் கிளர்ச்சியை ஊட்டுவது தான், ஆனால் மின்னல் தான் வேலையைச் செய்கிறது.

I never could tell a lie that anybody would doubt, nor a truth that anybody would believe.

மற்றவர்கள் சந்தேகப்படாதபடி என்னால் ஒரு பொய்யைச் சொல்ல முடிவதில்லை அல்லது அவர்கள் நம்பும்படியாக ஒரு உண்மையையும் சொல்ல முடிவதில்லை.

April 1. This is one day upon which we are reminded of what we are on the other three hundred and sixty-four.

ஏப்ரல் 1. இந்த ஒரு நாள் தான் மற்ற முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களிலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறது.

It is a difference of opinion that makes horse races.

ஒருவருக்கொருவர் இருக்கும் கருத்து வேறுபாடு தான் ரேஸில் குதிரைகள் ஓடக் காரணமாக இருக்கிறது.

It is better to keep your mouth shut and appear stupid than to open it and remove all doubt.

வாயை மூடிக் கொண்டு முட்டாளாக இருப்பது எவ்வளவோ மேல் – வாயைத் திறந்து மற்றவர்கள் சந்தேகம் அனைத்தையும் போக்குவதை விட!

Carlyle said “a lie cannot live”. It shows that he did not know how to tell them.

கார்லைல் சொன்னார் – “ஒரு பொய் நீடித்து நிலைத்து நிற்காது” என்று. இதிலிருந்து என்ன தெரிகிறது – அவருக்கு அவற்றைச் சொல்லும் விதம் எப்படி என்று தெரியவில்லை என்பதைத் தான்.

Every one is a moon, and has a dark side which he never shows to anybody.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சந்திரனைப் போல, களங்கமான பக்கத்தை அவன் யாருக்கும் காண்பிப்பதில்லை.

Get your facts first, and then you can distort them as much as you please.

முதலில் அனைத்து உண்மைகளையும் சேகரித்து விடுங்கள், அப்புறம் அதை உங்கள் இஷ்டப்படி திரித்து விடலாம்.

Voltaire

வால்டேர்

When it is a question of money, everybody is of the same religion.

பணம் என்ற பேச்சு வந்தால் அங்கு அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

A long dispute means that both parties are wrong.

ஒரு வழக்கு நீடித்துக் கொண்டே போகிறது என்றால் இரண்டு கட்சிக்காரர்களும் தப்பானவர்கள்  என்பதைத் தான் அது காட்டுகிறது.

Common sense is not so common

பொது அறிவு என்பது பொதுவாகக் காணப்படுவதில்லை.

Jonathan Swift

ஜோனாதன் ஸ்விஃப்ட்

Fine words! I wonder where you stole them.

அருமையான வார்த்தைகள்! அவற்றை நீ எங்கிருந்து திருடினாய் என்று தான் ஆச்சரியப்படுகிறேன்.

What religion is he of? Why he is an Anythingarian.

அவன் எந்த மதத்தைச் சார்ந்தவன். அவன் ஒரு ‘எனிதிங்கேரியன்’

As universal a practice as lying is, and as easy a one as it seems, I do not remember to have heard three good lies in all my conversation, even from those who were most celebrated in that faculty.

உலகம் முழுவதற்கும் பொய் சொல்வது பொதுவானதாக இருப்பது போலவும், ரொம்ப சுலபமாக இருப்பது போலவும் காண்பித்தாலும், மற்றவருடனான எனது எல்லா சம்பாஷணைகளிலும் மூன்று நல்ல பொய்களை நான் கேட்டதில்லை, அந்தக் கலையில் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் கூட!

May you live all the days of your life.

வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நீ வாழ்வாயாக!

Argument is the worst sort of conversation.

விவாதம் என்பது மிக மோசமான சம்பாஷணை.

Bex Stout

பெக்ஸ் ஸ்டவுட்

There are two kinds of statistics, the kind you look up an the kind you make up.

இரண்டு விதமான புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒன்று நீ எதிர்பார்ப்பது இன்னொன்று நீ மேக்-அப் செய்து விடுவது.

Gilbert Wells

ஜில்பர்ட் வெல்ஸ்

The man who has no secrets from his wife either has no secrets or no wife.

மனைவிக்குத் தெரியாத ரகசியமே ஒருவனிடம் இல்லை என்றால் ஒன்று அவனிடம் ரகசியம் என்பதே இருக்காது அல்லது அவனுக்கு மனைவியே இருக்க மாட்டாள்.

 Tags–நகைச்சுவை

***

வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்! (Post No.5859)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –18-37
Post No. 5859


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 37

மனு தர்ம சாஸ்திரத்தின்  ஏழாவது அத்தியாயத்தில் 99 ஸ்லோகங்களைக் கண்டோம். இன்று 160 வரை காண்போம். முதலில் இணைப்பைப் படிப்பதற்கு முன்னால் சுவையான விஷயங்களை புல்லட் பாய்ண்டு bullet points களில் தந்து விடுகிறேன்.

மநுவை உலக மஹா ஜீனியஸ் genius என்று புகழ்வதற்குக் காரணம் அவர் இங்கே கூறும் நிர்வாக அமைப்பு, உளவாளி விஷயம், தூதர் விஷயம், அரசனின் அன்றாட ஆலோசனை, வரிவிதிப்பு விஷயம் ஆகியன ஆகும்.

மநுவின் மஹா மேதவித் தனத்துக்கு சர்டிபிகேட் கொடுப்பவர் தமிழ் வேத மஹா முனிவர் திருவள்ளுவ நாயனார் ஆவார். மநு சொல்லும் எல்லா விஷயங்களையும் அவர் அரசியலில் சொல்லி  விடுகிறார். சில மநு ஸ்லோகங்களை வள்ளுவர் அப்படியே தருகிறார்.இதை நானும் தனிக் கட்டுரைகளில் தந்துள்ளேன். அந்தக் காலத்தில் பேராசிரியர் V R . ராமச்சந்திர தீட்சிதர் முதல் தற்காலப்  பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வரை அனைவரும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டனர்.

அழகான அட்வைஸ் Advice

ஸ்லோகம் 7-99 முதல் 7-102 வரை மன்னர்களுக்கு புத்திமதி சொல்கிறார். அந்த 4 புத்திமதிகளும் அரசியல், நிதித் துறையில் வெற்றி அடைய விரும்புவோருக்கும் பொருந்தும்.

ஸ்லோகம் 102, 105, 110 முதலியவற்றின் எதிரொலியைத் திருக்குறளிலும் காணலாம்.

ஆமையும் கொக்கும்

ஆமை போல அடக்கம்- இது பகவத் கீதை முதல் திருமூலர் வரை கையாளும் இந்து உவமை; கொக்கு போலக் காத்திரு என்பதும் பர்த்ருஹரி முதல் வள்ளுவன் வரை காணலாம்.இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் மநு ஐயாதான்.

மநுவைப் படிக்கும் ஆங்கிலேயர்கள், வெள்ளைத்தோல் அறிஞர்கள் , அனைவரும் ஒரு விஷயத்தை மனமுவந்து அளிகின்றனர். மநு சொல்லும் தெய்வங்களனைவரும் வேத காலக் கடவுளர்.ஆகையால் அவர் வேத காலத்தை ஒட்டியவர் என்று தெளிவு  பெற்றனர்.அண்மைக்கால ஸரஸ்வதி நதி ஆய்வும் மநுவை கி.மு 2000 க்கு முன்னர் தள்ளிவிட்டதை முன்னரே பார்த்தோம்.ஆயினும் ‘சூத்ராள்’ பற்றிப் பல விஷயங்களை சுங்க வம்ஸ மன்னர்கள் சேர்த்துள்ளனர் அல்லது அவர்கள் பிராஹ்மண அரசர்களென்பதால் எவரோ துணிச்சலாகக் ‘கை வைத்திருக்கலாம்’. அவர் சொல்லும் ஒட்டு மொத்த விஷயங்களையும்   பார்க்கையில் இவை பிற் சேர்க்கைஎன்பது வெள்ளிடைமலை என விளங்கும்.

அட்டை போல உறிஞ்சு, கன்று போல பால் குடி, தேனீ போல தேன் எடு (sloka 129)

இது அவர் வரிவிதிப்புக்குக் கொடுத்த அட்வைஸ். இதற்கு முன்னர் ஆமை, கொக்கு, ஓநாய்,சிங்கம் முதலிய உவமைகள் வருகின்றன.இந்த மூன்று பிராணிகள்  பற்றி   மநு சொன்னதை ஒன்பது உரைகாரர்களும் ‘சிக்’கெனப்பிடித்து அழகாக விளக்கினர்.

பணக்காரர்களாக இருந்தால் எங்கள் பிரிட்டனைப்போல 60% வரி; ட்டை போல உறிஞ்சு.இங்கு 60000 க்கு மேல் சம்பளம் இருந்தால் அட்டை (leech), இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிவிடுவர் (கடுமையான வரிவிதிப்பு).

என்னைப்போ ல ஏழைப் பங்காளர்-மிடில் கிளாஸ் middle class – என்றால் கன்று(calf)  போல வரி விதிப்பு! பாதி உனக்கு, பாதி எனக்கு.

மிக ஏழை என்றால் தேனீ (bee)  தேன் எடுப்பது போல வரிவிதிப்பு. அதாவது மலருக்கு ஒரு தீங்கும் இல்லை. மலருக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பலன் வேறு! அதுவும் மலருக்குத் தேவை இல்லாத தேன். இப்படி அற்புதமான வரி விதிப்பு முறையை மநு கூறுகிறான்  ஸ்லோகம் 129

சங்க இலக்கியத்திலும் ஸம்ஸ்க்ருத இலக்கியம் நெடுகிலும், விளைச்சல்,உற்பத்திப் பொருட்களுக்கு  ஆறில் ஒரு பங்கு  வரி விதிப்பு பேசப்படுகிறது.இதற்கும் மூல புருஷன் ஐயா மநு தான்.

எங்கள் பிரிட்டனிலும் VAT 17.5 சதவிகிதம்தான்! ஆறிலொரு பங்குதான்! மநு சொன்னதை இன்றுவரை பிரிட்டன் பினபற்றுகிறது.

மநு சொன்ன விஷயங்களில் சூத்ராள் எதிர்ப்புப்  பிற்சேர்க்கை ஸ்லோகங்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டால் அதிசய விஷயங்களைக் காணலாம். ஆனால் அப்படி எறிந்தால், பாவம் மார்கஸீயங்களும் திராவிடங்களும் பேசுவதற்கு எதுவுமின்றித் தவியாய்த் தவிப்பார்கள்!!

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்!!

ஸ்லோகம் 7-135 முதல்  வேத பண்டிதர்களுக்கு வரி போடாதே என்கிறார். வள்ளுவரும் பசுக்கள் பால் தராது, பிராஹ்மணர்கள் வேதத்தை மர்றந்து விடுவர்- அரசன் நேர்மையான ஆட்சி செய்யவிடில்  என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறான்.(காண்க ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் — குறள்

தஸ்யூ யார்?

ஸ்லோகம் 7-143ல் தஸ்யூ என்றால் திருடன் என்று சொல்கிறார். பத்தாவது அத்தியாயத்தில் மேலும் பிரஸ்தாபிக்கிறார். அதையும் பின்னர் காண்போம். உலகிலுள்ள எல்லா சமுதாயத்திலும் நல்லோரும் தீயோரும் உண்டு . நாடாள வந்த அயோக்கியர்களும், மதத்தைப் பரப்ப வந்த கிராதகர்களும் தஸ்யூ என்றால் திராவிடர்கள், பழங்குடி மக்கள் என்று பொய் மூட்டை கட்டி விட்டனர். தத்துப்பித்து திராவிடங்களுக்கும், மார்கஸீய விஷமங்களுக்கும் ‘கோதுமை அல்வா’ போட்டது போல ஆயிற்று. சாகுந்தலத்திலும் கூட தஸ்யூ என்றால்  கொள்ளைக்காரன் என்று காளி தாஸன் விளம்புவான். நம் நாட்டைக் கொள்ளையிட்ட பிரிட்டானியர்கள் நம்மைப் பொறுத்த ட்டில் தஸ்யூக்கள்!

பெண்கள் ஜாக்கிரதை

மன்னர்கள் ரஹஸிய ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள், கிளிகள், மைனாக்கள் போன்றவை இருந்தால் ஆபத்து என்கிறான்– மநு ஸ்லோகம் 7-150

அண்மையில் பிரிட்டனில்கூட ஒரு கள்ளக் காதலி வருகையை மைனா சொல்லிக் கொடுத்து பத்திரிக்கைகளில் பெரிய செய்தி வெளியானது. பெண்கள் பற்றி மஹாபாரதம் முதல் கம்ப ராமாயணம் வரை இப்படி ஒரு ரஹஸியம் காக்க முடியாத செய்தி உளது

பெண்கள் வேலைசெய்வது பற்றியும் சொல்லுவதால், மநுவின் காலத்தில் பெண்கள் வேலை செய்தததும் தெரிகிறது –ஸ்லோகம் 125

சம்பள விகிதாசாரம் 126 முதல்

அம்சமான organization ஆர்கனைசேஷன்

மநு 7-110 முதல் 7-10 வரை நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை அழகாகச் செப்புகிறான்

ஸ்லோகம் 7-153 முதல் தூதர்கள்,உளவாளிகளமைப்பு பற்றிப் பேசுகிறான். ராமாயண, மஹாபரதத்தில் தூதர், உளவாளிகள் பற்றிப் படிக்கிறோம். உலகில் நாகரீக முதிர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே இது இருக்கும். எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களில் இப்படி விரிவானதொரு நீதி நூல் இல்லாமையால் நாம்தான் உலகிற்குக் கொடிகள், சின்னங்கள், தூதர் முறை, உளவாளி அமைப்பு என்பதை எல்லாம் கற்றுத தந்தோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி எனவிளங்கும்.

நான்  மேலே பிரஸ்தாபித்த பெரும்பாலான விஷயங்கள் ஒன்பது உரைகாரர்களின் வியாக்யானங்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக காமாந்தகியின் நீதி சாரம் என்னும் நூல் எடுத்தாளப்படுகிறது.

மரண தண்டனை ஜிந்தாபாத்

வள்ளுவன் மரணதண்டனை ஆதரவாளன். கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல்– என்ற குறளில் கொலைகாரர்களை களை எடுப்பது போலப் பிடுங்கி எறி என்பான் வள்ளுவந்0– இது மநு ஸ்லோகத்தின்  மொழி பெயர்ப்பு

கருமிகளைக் கண்டால் கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விட்டுக் காசைப் பறி என்பான் வள்ளுவன் (காண்க- கயமை அதிகாரம்1077, 1078, 550, 1224).

இதுவும் மநு சொன்னதே. மன்னர்கள் ,வன்செயலைப்– பலவந்தத்தைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்பான் மநு.

காண்க ஸ்லோகம் 99-160

பாபிலோனிய ஹம்முராபியின் 282 சட்ட விதிகளில் பக்கத்துக்குப் பக்கம் ‘கொல், கொல், கொல்’ என்று கொக்கரிக்கிறான்.ஆனால் மநுவில் அளவோடு தண்டனைகள் பேசப்படுகின்றன.

7-99. Let him strive to gain what he has not yet gained; 
what he has gained let him carefully preserve; 
let him augment what he preserves, and 
what he has augmented let him bestow on worthy men.

100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them.

101. What he has not yet gained, let him seek to gain by his army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by various modes of increasing it; and what he has augmented, let him liberally bestow on worthy men.

7-102. Let him be ever ready to strike, 
his prowess constantly displayed, and 
his secrets constantly concealed, and 
let him constantly explore the weaknesses of his foe.

tags-மநு நீதி நூல்- பகுதி 37

–தொடரும்

ENGLISH CROSSWORD 30-12-18 (Post No.5858)

Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –15-41
Post No. 5858


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1


2












3

4



5










6




7

















8
9







FIND OUT AT LEAST 10 WORDS IN THE CROSS WORD. ALL THE WORDS ARE FROM HINDU SCRIPTURES

1. wife of Yajnavalkya, who was learnt philosophy from her husband

3. – birth name of Swami Vivekananda and prime Minister of India

6. – meaning gold coloured ; pre fix of many demons. In the Rig Veda even the golden egg has this word as prefix

9. = means health

DOWN

1. – A king born out of the body of his father; South Indian Chozas claim him as their forefather

2. second of the four yugas

4. Grandson of Chyavana Rishi. His beloved Pramdvara died just before the marriage. Then this man gave his half life to her and revived her and led a happy married life.

5. The god with whose praise the Rig Veda begins and ends

7. – English word yoke came from this word, meaning unite body and mind together

Answer

M1
AIT2REYI

A


R



N3
AR4ENDRA5

D

UT


G

H6
IRANY7AN

A

UY
O
I

T


U
GO8
9AROGYAM

ACROSS

1.MAITREYI-wife of Yajnavalkya, who was learnt philosophy from her husband

3.NARENDRA- birth name of Swami Vivekananda and prime Minister of India

6.HIRANYAN- meaning gold coloured ; pre fix of many demons. In the Rig Veda even the golden egg has this word as prefix

9.AROGYAM= means health

DOWN

1.MANDHATA- A king born out of the body of his father; South Indian Chozas claim him as their forefather

2.TRETA YUG(A)- second of the four yugas

4.RURU- Grandson of Chyavana Rishi. His beloved Pramdvara died just before the marriage. Then this man gave his half life to her and revived her and led a happy married life.

5.AGNI- The god with whose praise the Rig Veda begins and ends

7.YOGA- English word yoke came from this word, meaning unite body and mind together

8.0M- All the Veda mantras begin with this monosyllabic mantra

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 30-12-18 (Post No.5857)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –14-30
Post No. 5857


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD 30-12-18

இந்தக் கட்டத்தில்  உள்ள குறைந்தது 16 சொற்களைக் காணுங்கள்விடையுமுளது!!!

1
2
3
4










5


 

67

8




9

10

1112
13




குறுக்கே

2. -தேன்கள்அனிச்ச மரம்குங்கும மரம்

4. – சிவன் முன்னால் வரும்பதத்துக்கும் முன்னால் வரும்பொருள்=சிறந்ததலையாய

5. – கோரமான வாயுடைய கானகப் பிராணி

7. (வல இடமாகப் பதியவும்)= அடக்கம்

9. = சூரியன் உதயமாகும்பொழுது

10. – பயிர்களுக்கிடையே வளரும்

11. = மொத்தம் நான்குஇந்துமத்தின் ஆணிவேர்

13. = இவள் இல்லாமல் ஒரு வீட்டு வேலையும் நடக்காது

கீழே

1. மராட்டியர் பக்திப் பாடல்ஸம்ஸ்க்ருதப் பொருள்= பழுதில்லாதது

2. ஐந்தெழுத்து மந்திரம்

3.பிள்ளைக்கு கொடுக்கும் மருந்து

6.குளம்ஆற்றினுள் உள்ள பள்ளம்

8.நோவு

9. சோழநாட்டின் உயிர் நாடியான நதி

10.பண்பாடு,ஆடல்பாடல்ஓவியத்துடன் ஒட்டிக் கொள்ளும் சொல்

12.= எண் சாண் உடம்புக்கு இதுதான் பிரதானம்

13.நேரம்பொழுதுகாலம்

அ1
ந2வ3ம்
ப4

ங்
சி
ம்
க5டுவாய் பு   லி
ம்ம6ய7

வ8




கா9லை
ளைக10

வே11த12
வே13லைக்காரி

Across

2.நறவம்-தேன், கள், அனிச்ச மரம், குங்கும மரம்

4.பர ம- சிவன் முன்னால் வரும்; பதத்துக்கும் முன்னால் வரும்; பொருள்=சிறந்த, தலையாய

5.கடு வாய்புலி- கோரமான வாயுடைய கானகப் பிராணி

7.யமம் (வல இடமாகப் பதியவும்)= அடக்கம்

9.காலை= சூரியன் உதயமாகும்பொழுது

10.களை- பயிர்களுக்கிடையே வளரும்

11.வேத = மொத்தம் நான்கு; இந்துமத்தின் ஆணிவேர்

13.வேலைக்காரி = இவள் இல்லாமல் ஒரு வீட்டு வேலையும் நடக்காது.

((2.நறவம்,4.பர ம,5.கடு வாய்புலி,7.யமம் (வல இடமாகப் பதியவும்)

9.காலை,10.களை,11.வேத,13.வேலைக்காரி ))

Down

1.அபங்கம்-மராட்டியர் பக்திப் பாடல்; ஸம்ஸ்க்ருதப் பொருள்= பழுதில்லாதது 

2.நமசிவாய= ஐந்தெழுத்து மந்திரம்

3.வசம்பு= பிள்ளைக்கு கொடுக்கும் மருந்து

6.மடு= குளம், ஆற்றினுள் உள்ள பள்ளம்

8.வலி= நோவு

9.கா வேரி= சோழநாட்டின் உயிர் நாடியான நதி

10.கலை= பண்பாடு,ஆடல், பாடல், ஓவியத்துடன் ஒட்டிக் கொள்ளும் சொல்

12.தலை (வலி)= எண் சாண் உடம்புக்கு இதுதான் பிரதானம்

13.வேளை=நேரம், பொழுது, காலம்

((1.அபங்கம்,2.நமசிவாய,3.வசம்பு,6.மடு,8.வலி,9.கா வேரி,10.கலை

12.தலை (வலி),13.வேளை))

–subham–

FOUR TIPS FOR SELF IMPROVEMENT- MANU (Post No5856)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –9-35 am
Post No. 5856


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Manu’s administrative skill is revealed in chapter seven; the world praised him for his ideas on administration, taxing, spies and ambassadors.

His first four slokas given below are applicable to anyone who wants to succeed in life.

Britain and other western countries follow one sixth taxing– 17.5% until today. This is in all Tamil and Sanskrit books of ancient India. Manu says beautifully about taxing- Tax the people in three ways:-

Like a leech

Like a calf

Like a bee

For highly paid staff, suck like a leech (60% tax)

For middle income groups take tax like calf (20% tax)

For the low income group take (nectar) like a bee! (it helps the plants in pollination and the flowers never lose anything! Actually they are not taxed at all).

Tiru Valluvar, author of Tamil Veda has borrowed all the ideas in this section and repeated them in Tirukkural.

The commentators on this section quote widely from another Sanskrit treatise Nitisara of Kamandaki.

Here are the interesting matter in bullet points

We continue here with the Seventh chapter slokas 99 to 160.

1.Sloka 7-99-102 BEAUTIFUL ADVICE

The advice given to kings is applicable to anyone who wants to succeed in life politically or financially.

2.TIRUKKURAL

All the ideas put forth by Manu here are in Tamil Tiruukral under Royalty (chapters 39-63), State Cabinet (chapters 64 to 73) politics (chapters 74 to 78) and Alliance (Tirukkural chapters 79-95).

Great scholars like V R Ramachandra Dikshitar, Dr Nagaswamy and others have written books on it. Some of the couplets in Tirukkural are verbatim translations of Manu!

About awarding death sentence and using Force, Valluvar follows Manu (Kolaiyir Kodiaaarai Venthoruththal…..).

(About the age of Valluvar and Manu, I have already written; Valluvar came several centuries after Manu)

3.Manu’s slokas 7-110 to 7-120 are about organisation in Administration

4.Animal similes

Tortoise and Heron similes are used by Krishna in Bhagavad Gita, Valluvar in Tirukkural and Bhartruhari, Tirumular etc.

See Manu’s use of Tortoise, Heron, Lion, Wolf, Leech, Calf and Bee in slokas 105, 106,129.

Commentators give lot of information on these similes! Very interesting!

5.Protect Vedic Scholars

Manu says it in sloka 7-135. Tamil Veda author Tiruvalluvar also warns rulers, if the king doesn’t rule properly, “Cows won’t give milk, Brahmins will forget Vedas” (aapayan kundrum, aru thozilor nuul marappar)

6. Hindu scriptures always insist one sixth of one’s income as tax. This is followed by many countries even today

7.Who is a Dasyu?

Manu explains Dasyus as Thieves and Robbers. Kalidasa also followed it in Shakuntala. In addition to sloka 7-143, Manu explains who is a Dasyu in chapter 10 as well. We will see it later. Foreigners deliberately called Dravidians and aborigines as Dasyus. They did it to divide the Hindu society. Every society in the world has goodies and baddies- Devas and Asuras, Angels and Demons. But foreigners deliberately interpreted Dravidians and aborigines as Dasyus. Dasyus are baddies in a society.

8.Warning about women!

Manu’s sloka 7-150 warns about keeping parrots and women in secret political consultations. This is found in all ancient Tamil and Sanskrit books, probably in other cultures as well.

9.Slokas 7-153 ++ talk about Spies and Ambassadors which we see in Ramayana and Mahabharata as well. This shows India was the most advanced civilization in the ancient world.  To achieve such a maturity, India must have existed several thousand years before the Babylonian, Egyptian and Greek civilizations.

10.Sloka 7-125 shows that women were working in those days. Pay structure is also discussed.

xxxx

Now we continue with the Seventh Chapter of Manu Smrti:-

Manu Smrti Chapter 7 contd.

Instructions to a King


FOUR POINT FORMULA


7-99. Let him strive to gain what he has not yet gained;

what he has gained let him carefully preserve;

let him augment what he preserves, and

what he has augmented let him bestow on worthy men.


100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them.


101. What he has not yet gained, let him seek to gain by his army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by various modes of increasing it; and what he has augmented, let him liberally bestow on worthy men.

7-102. Let him be ever ready to strike,

his prowess constantly displayed, and

his secrets constantly concealed, and

let him constantly explore the weaknesses of his foe.



103. Of him who is always ready to strike, the whole world stands in awe; let him therefore make all creatures subject to himself even by the employment of force.

104. Let him ever act without guile, and on no account treacherously; carefully guarding himself, let him always fathom the treachery which his foes employ.



TOTOISE  SIMILE


7-105. His enemy must not know his weaknesses, but he must know the weaknesses of his enemy; as the tortoise hides its limbs, even so let him secure the members of his government against treachery, let him protect his own weak points.


HERON SIMILE


7-106. Let him plan his undertakings patiently meditating like a heron; like a lion, let him put forth his strength; like a wolf, let him snatch (his prey); like a hare, let him double in retreat.


107. When he is thus engaged in conquest, let him subdue all the opponents whom he may find, by the (four) expedients, conciliation and the rest.

108. If they cannot be stopped by the three first expedients, then let him, overcoming them by force alone, gradually bring them to subjection.

SAMA, DANA, BEDA, DANDA

109. Among the four expedients, conciliation and the rest, the learned always recommend conciliation and the employment of force for the prosperity of kingdoms.


NIP IT IN THE BUD


7-110. As the weeder plucks up the weeds and preserves the corn, even so let the king protect his kingdom and destroy his opponents.


111. That king who through folly rashly oppresses his kingdom, (will), together with his relatives, ere long be deprived of his life and of his kingdom.

112. As the lives of living creatures are destroyed by tormenting their bodies, even so the lives of kings are destroyed by their oppressing their kingdoms.

113. In governing his kingdom let him always observe the (following) rules; for a king who governs his kingdom well, easily prospers.

114. Let him place a company of soldiers, commanded (by a trusty officer), the midst of two, three, five or hundreds of villages, (to be) a protection of the kingdom.

ORGANISE 10, 20, 100, 1000



7-115. Let him appoint a lord over (each) village, as well as lords of ten villages, lords of twenty, lords of a hundred, and lords of a thousand.

116. The lord of one village himself shall inform the lord of ten villages of the crimes committed in his village, and the ruler of ten (shall make his report) to the ruler of twenty.

117. But the ruler of twenty shall report all such (matters) to the lord of a hundred, and the lord of a hundred shall himself give information to the lord of a thousand.

118. Those (articles) which the villagers ought to furnish daily to the king, such as food, drink, and fuel, the lord of one village shall obtain.

119. The ruler of ten (villages) shall enjoy one kula (as much land as suffices for one family), the ruler of twenty five kulas, the superintendent of a hundred villages (the revenues of) one village, the lord of a thousand (the revenues of) a town.

120. The affairs of these (officials), which are connected with (their) villages and their separate business, another minister of the king shall inspect, (who must be) loyal and never remiss;



TOWN SUPERINTENDENT


7-121. And in each town let him appoint one superintendent of all affairs, elevated in rank, formidable, (resembling) a planet among the stars.

122. Let that (man) always personally visit by turns all those (other officials); let him properly explore their behaviour in their districts through spies (appointed to) each.

123. For the servants of the king, who are appointed to protect (the people), generally become knaves who seize the property of others; let him protect his subjects against such (men).

124. Let the king confiscate the whole property of those (officials) who, evil-minded, may take money from suitors, and banish them.

WOMEN IN EMPLOYMENT ANND WAGE STRUCTURE


7-125. For women employed in the royal service and for menial servants, let him fix a daily maintenance, in proportion to their position and to their work.

126. One pana must be given daily as wages to the lowest, six to the highest, likewise clothing every six months and one drona of grain every month.

127. Having well considered the rates of purchase and of sale, the length of the road, the expense for food and condiments, the charges of securing the goods, let the king make the traders pay duty.

128. After (due) consideration the king shall always fix in his realm the duties and taxes in such a manner that both he himself and the man who does the work receive (their due) reward.



LEECH, CALF,BEE SIMILE



7-129. As the leech, the calf, and the bee take their food little by little, even so must the king draw from his realm moderate annual taxes.


130. A fiftieth part of the increments on cattle and gold may be taken by the king, and the eighth, sixth, or twelfth part of the crops.

131. He may also take the sixth part of trees, meat, honey, clarified butter, perfumes, (medical) herbs, substances used for flavouring food, flowers, roots, and fruit;

132. Of leaves, pot-herbs, grass, objects made of cane, skins, of earthen vessels, and all articles made of stone.



PROTECT VEDIC PUNDITS


7-133. Though dying with want, a king must not levy a tax on Srotriyas/ VEDIC PRIESTS , and no Srotriya, residing in his kingdom, must perish from hunger.

134. The kingdom of that king, in whose dominions a Srotriya pines with hunger, will even, ere long, be afflicted by famine.

135. Having ascertained his learning in the Veda and (the purity of) his conduct, the king shall provide for him means of subsistence in accordance with the sacred law, and shall protect him in every way, as a father protects the lawful son of his body.

136. Whatever meritorious acts such a Brahmana performs under the full protection of the king, thereby the king’s length of life, wealth, and kingdom increase.

137. Let the king make the common inhabitants of his realm who live by traffic, pay annually some trifle, which is called a tax.


138. Mechanics and artisans, as well as Sudras who subsist by manual labour, he may cause to work for himself one day in each month.

TAX WITH DISCRETION


7-139. Let him not cut up his own root by levying no taxes, nor the root of other men by excessive greed; for by cutting up his own root or theirs, he makes himself or them wretched.

140. Let the king, having carefully considered each affair, be both sharp and gentle; for a king who is both sharp and gentle is highly respected.

141. When he is tired with the inspection of the business of men, let him place on that seat of justice his chief minister, who must be acquainted with the law, wise, self-controlled, and descended from a noble family.

142. Having thus arranged all the affairs (of) his (government), he shall zealously and carefully protect his subjects.



REAL MEANING OF DASYU


7-143. That monarch whose subjects are carried off by robbers (Dasyu) from his kingdom, while they loudly call for help, and he and his servants are quietly looking on, is a dead and not a living king.

144. The highest duty of a Kshatriya is to protect his subjects, for the king who enjoys the rewards, just mentioned, is bound to discharge that duty.

145. Having risen in the last watch of the night, having performed the rite of personal purification, having, with a collected mind, offered oblations in the fire, and having worshipped Brahmanas, he shall enter the hall of audience which must possess the marks considered auspicious for a dwelling.



MEET PEOPLE


7-146. Tarrying there, he shall gratify all subjects who come to see him by a kind reception and afterwards dismiss them; having dismissed his subjects, he shall take counsel with his ministers.

147. Ascending the back of a hill or a terrace, and retiring there in a lonely place, or in a solitary forest, let him consult with them unobserved.

148. That king whose secret plans other people, though assembled (for the purpose), do not discover, will enjoy the whole earth, though he be poor in treasure.

149. At the time of consultation let him cause to be removed idiots, the dumb, the blind, and the deaf, animals, very aged men, women, barbarians, the sick, and those deficient in limbs.



WOMEN AND SECRET


7-150. Such despicable persons, likewise animals, and particularly women betray secret council; for that reason he must be careful with respect to them.

151. At midday or at midnight, when his mental and bodily fatigues are over, let him deliberate, either with himself alone or with his ministers, on virtue, pleasure, and wealth,

152. On reconciling the attainment of these aims which are opposed to each other, on bestowing his daughters in marriage, and on keeping his sons from harm,



SPIES AND AMBASSADORS


7-153. On sending ambassadors, on the completion of undertakings (already begun), on the behaviour of (the women in) his harem, and on the doings of his spies.

154. On the whole eightfold business and the five classes of spies, on the goodwill or enmity and the conduct of the circle of neighbours he must carefully reflect.

155. On the conduct of the middlemost prince, on the doings of him who seeks conquest, on the behaviour of the neutral king, and on that of the foe let him sedulously meditate.

72 CONSTITUENT PARTS


7-156. These (four) constituents (prakriti, form), briefly (speaking), the foundation of the circle (of neighbours); besides, eight others are enumerated (in the Institutes of Polity) and (thus) the (total) is declared to be twelve.



157. The minister, the kingdom, the fortress, the treasury, and the army are five other constituent elements of the circle; for, these are mentioned in connexion with each of the first twelve; thus the whole circle consists, briefly speaking, of seventy-two constituent parts.


158. Let (the king) consider as hostile his immediate neighbour and the partisan of (such a) foe, as friendly the immediate neighbour of his foe, and as neutral (the king) beyond those two.


159. Let him overcome all of them by means of the (four) expedients, conciliation and the rest, (employed) either singly or conjointly, (or) by bravery and policy (alone).

160. Let him constantly think of the six measures of royal policy (guna, viz.) alliance, war, marching, halting, dividing the army, and seeking protection.

–subham–

காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்! (Post No.5855)

Written by S Nagarajan


Date: 30 DECEMBER 2018


GMT Time uploaded in London – 5-29 am


Post No. 5855

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!

ச.நாகராஜன்

 வாழ்வில் ஏற்படும் சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். ஏன் அப்படி நடந்தது என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது.

நல்ல விஷயம் என்றால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுவோம். கெட்ட விஷயம் என்றால் என் விதி; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கூறிப் புலம்பி அழுது தீர்ப்போம்.

அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய எல்லோருக்குமே ஒரு ஆவல் இருக்கிறது.

ஜோதிடத்தில் மனிதனுக்குத் தீராத ஆசை ஏற்படுவது எதிர்காலத்தை அறியத் துடிக்கும் மனிதனின் இந்த மனப்பான்மை தான்!

 இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆஸ்டிரிய – பிரிட்டிஷ் தத்துவஞானியான சர் கார்ல் ரெய்மண்ட் பொப்பர் ( Sri Karl Raimond Popper – பிறப்பு 28-7-1902 மறைவு 17-9-1994) , ‘தர்க்கரீதியாகப் பார்த்தால் வரலாற்றின் எதிர்காலம் பற்றி  நம்மால் முன்கூட்டி கணிக்கவே முடியாது’ ( for strictly logical reasons, it is impossible for us to predict the future course of history) என்றார்.

அடுத்த விநாடி நடக்கப் போவதை அறியாதவன் ஆயிரம் ஆண்டுக்கு ஜோஸியம் சொன்னானாம் என்று அவர் எள்ளி நகையாடுகிறார்.

பல சம்பவங்களைப் பார்க்கும் போது நமக்கு வியப்புத் தான்  மேலிடுகிறது.

மூழ்கவே மூழ்காத கப்பல் என்று விளம்பரம் செய்யப்பட்ட டைட்டானிக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு 1912 ஏப்ரலில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

வட அட்லாண்டிக்கில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி அது உடைந்தது; அதில் பயணித்த 2224 பயணிகளில் 710 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

அது மூழ்கியவுடன் தான் அதில் பயணிக்கத் தவறியவர்கள் யார் யார், ஏன் அவர்கள் அதில் பயணிக்கவில்லை என உலகினரால் விசேஷமாகப் பார்க்கப்பட்டார்கள்.

அவர்கள் ‘Just Missed It’ Club – அதாவது ‘மயிரிழையில் பிழைத்தவர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இந்தப் பட்டியலில் ஏராளமானோர் இருந்தனர்.  அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களுள், தொழிலக முன்னோடிகள் என்று சொல்லக் கூடிய ஹென்றி க்ளே ஃபிரிக் (Henry Clay Frick),  ஜே.பி. மார்கன் (JP Morgan), ஜே. ஹொரேஸ் ஹார்டிங் (J. Horace Harding) ஆகியோரும் அடங்குவர்.

இந்த மூவருமே டைட்டானிக் கப்பலில் பயணப்பட ஏற்பாடுகளைச் செய்தவர்கள்!

ஹென்றி க்ளே ஃபிரிக் அமெரிக்காவின் தலைசிறந்த செல்வந்தர்களுள் ஒருவர். எஃகு, உருக்குத் தயாரிப்பாளர். பிப்ரவரியிலேயே தனக்கும் மனைவிக்குமாகச் சேர்த்து டிக்கட்டை முன்பதிவு செய்திருந்தார் அவர். ஆனால் திடீரென்று அவர் மனைவிக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டது. கணுக்கால் எலும்பில் முறிவு ஏற்படவே, இத்தாலியில் அவர் மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆகவே அவர்களால் டைட்டானிக்கில் பயணிக்க முடியவில்லை. இவர்களுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த B-52,54,56 ஆகிய மூன்று சூட் ஜேபி மார்கனுக்கு ஒதுக்கப்பட்டது. வங்கித் தொழிலில் கொடி கட்டிப் பறந்த மார்கனும் மிகச் சிறந்த செல்வந்தர் தான். ஆனால் ஐரோப்பாவில் அவரது வணிக சம்பந்தமான திட்டத்திற்காக அவர் கொஞ்சம் அதிக காலம் தங்க வேண்டியதாயிற்று. அவரும் பயணத்தை ஒத்திப் போட்டார். இந்த முறை இவருக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ஜே. ஹொரேஸ் ஹார்டிங்கிற்கும் அவரது மனைவிக்கும் ஒதுக்கப்பட்டன. இவரும் வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த பணக்காரர் தான்! ஆனால் இவர்களுக்கு இதற்கு முன்னர் கிளம்பிய கப்பலில் இடம் கிடைத்ததால் இவர்கள் முந்திக் கொண்டு அதில் சென்றனர்; காலன் பிந்திக் கொண்டு விட்டான்!

துரதிர்ஷ்டவசமான அந்த அறைகள் வொய்ட் ஸ்டார் லைன் சேர்மனான ஜே. ப்ரூஸ் இஸ்மேக்குப் போய்ச் செர்ந்தது.

மூன்று தொழிலதிபர்களும் டைட்டானிக் ஆபத்திலிருந்து எப்படி பிழைத்தனர்!

யாராலும் சொல்ல முடியவில்லை. துரதிர்ஷ்டவசமான அந்த அறைகளுக்கு அவர்கள் செல்லவே இல்லை!

இதே போல லண்டனில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சை சேர்ந்த பாதிரியாரான ஜே. ஸ்டூவர்ட் ஹோல்டனும் (J. Stuart Holden) இதில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது மனைவியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்படவே பயணத்திற்கு ஒருநாள் முன்னர் ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று தன் பயணத்தை அவர் தள்ளி வைத்தார்; பிழைத்துக் கொண்டார். இப்படி ஏராளமானோர் துரதிர்ஷ்டவசமாக முடியப் போகும் பயணத்தைத் தவிர்த்தனர்.

இதெல்லாம் யாரால், ஏன் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.

இப்படி உயிர் பிழைக்க அதிர்ஷ்டம் காரணமாகும் நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க,  சில சிறிய நிகழ்வுகள் ஒருவருக்குப் பெரிய வாழ்வைத் தந்து விடுவதையும் பார்க்கிறோம்.

மன்னர் நான்காம் ஜார்ஜுக்கு ஒரு சமயம் திடீரென்று வலிப்பு வந்து விட்டது. தற்செயலாக அங்கு சென்றிருந்த ஒரு கிராம வைத்தியர் அவருக்கு உடனடி சிகிச்சை கொடுத்தார்; மயக்கமடைந்த மன்னருக்கு உணர்வு வரும்படி செய்தார். மன்னரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் மனநிலையை மாற்றி அவரைச் சிரிக்கவும் வைத்தார். அவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக அவர் அரண்மனை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

இப்படி எத்தனையோ பெருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதையும் பார்க்கிறோம்; அவர்கள் பிரபலமாவதையும் பார்க்கிறோம்.

விஷம் கொடுத்துச் சாகாமல் இருப்பவர்கள் என்ற விஷயத்தை நம்ப முடியாது என்றாலும் கூட ரஸ்புடீனை எடுத்துக் கொண்டால் சற்று பிரமிப்பு தான் ஏற்படும்.

அவருக்கு கடுமையான விஷம் தரப்பட்டது. ஆனால் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பிழைத்துக் கொண்டார்.

இதே போல பதினான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்த ஒரு குழந்தை புல்தரையில் விழுந்து ஜம்மென்று நடந்த கதையையும் செய்தித் தாளில் பார்க்க நேரிடுகிறது.

என்ன ஆச்சரியம் போங்கள், இந்த மனித வாழ்க்கை!

காலன் அழைத்தாலும் காத்து விடுகிறது அதிர்ஷ்டம்!

சில சமயமோ நல்ல விஷயம் நடப்பதில்லை; எதிர்பார்த்ததற்கு மாறாக  ஏடாகூடமாக ஏதாவதொன்றில் சிக்கிக் கொள்கிறோம்.

வரலாற்றின் எதிர்காலம் இருக்கட்டும்; வரக் கூடிய அடுத்த கணமே நமக்கு எப்படி இருக்கும் என்பது தெரியாது, அது பற்றிச் சொல்லவும் முடியாது என்பது தான் உண்மை போலும்!

***