Tamil Words in English- 37 (Post No.8984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8984

Date uploaded in London – –30 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 37

WORDS BEGINNING IN ‘U’

TWO U WORDS PROVE MY THEORY.

What is my Theory?

All ancient languages came from Sanskrit and Tamil.

All ancient words can be traced back to Tamil or Sanskrit.

A root from the Proto Indian language can only branch out in two ways- one Sanskrit way or 2.Tamil ways

Two words support my theory

U.1.Eka in Sanskrit Oka in Telugu, Ein in German, Un in French Uno in Italian and Spanish.

Ein and Un are closer to Tamil Onnnu, Ondru and English ONE.

So the classification of languages is false. No Indo European , No Dravidian; only Proto Indian

U.1.Eka ஏக in Sanskrit Oka ஒக in Telugu, Ein ஐன் in German, Un அன்  in French Uno யுனொ  in Italian and Spanish.

Ein and Un are closer to Tamil ஒண்ணு Onnnu, ஒன்று Ondru and English ஒன்  ONE.

So the classification of languages is false. No Indo European , No Dravidian; only Proto Indian.

திராவிட மொழி என்று எதுவும் கிடையாது. மூல இந்திய மொழி ஒன்றே. அதிலிருந்து ஒரு வேர்ச் சொல் தமிழ் போலப் பிரியலாம் அல்லது சம்ஸ்கிருதம் போலப் பிரியலாம்.

U.2.Look at Nail- Nakha in Sanskrit, Nagel in Dutch, Una in Spanish, Ongle in French, Unghia in Italian and Ukir in Tamil.

Dutch word Nagel is closer to Nakha in Sanskrit.

Unghia in Italain is closer to Ukir in Tamil.

So Indo- European is an absurd theory.

U.2.Look at Nail-நெய்ல் = நகம்  Nakha in Sanskrit, Nagel நகெல்  in Dutch, Una உன in Spanish, Ongle ஓங்கில் in French, Unghia உங் கியா n Italian and Ukir in Tamil.உகிர்

Dutch word Nagel is closer to Nakha in Sanskrit.நகில்= நகம்

Unghia in Italain is closer to Ukir in Tamil. உங்கி – உகிர்

So Indo- European is an absurd theory.

ஆகையால் இந்தோ ஐரோப்பிய மொழிக்கொள்கை அபத்தமானது

These are not the two examples. There are 100s of examples

XXXX

U.3.URANUS — VARUNA யுரேனஸ் = வருண

U.4.UMBRA– AAKAASA, AMBARAM IN SKT IS SKY அம்பரம்/சம்ஸ்கிருதம் = வானம், ஆகாயம்

U.5.UMBRELLA –SMALL SEMI SHAPED SKY ON YOUR HEAD அம்ப்ரெல்லா

AMBARAME THAN EERE TIRUPPAVAI (அம்பரமே தண்ணீரே – திருப்பாவை)

UMBERA IS ACTUALLY U SHAPED, EITHER UP OR UPSIDE DOWN- அம்பர = ஆங்கில எழுத்து U போன்றது.

UMBELLIFERAE U SHAPED FLOWER , AAMBAL FLOWER, , KUUMBU, KUMPIDU, KUMUTHAMஆம்பல், குமுதம் மலர் போல கூம்பு வடிவம் – அம்பர வடிவம். சிந்து-சரஸ்வதி திரை எழுத்துக்களில் கடைசி எழுத்து கோப்பை வடிவமானது. இதை முதல் எழுத்து என்று நிரூபித்தால் இதன் பொருள் அ , அம், அம்ப என்று படிக்கலாம் .

INDUS SARASWATHI RIVER CIVILISATION HAS LOT OF U SHAPED END SYMBOLS. THEY SAY THEY ARE END LETTERS.

IF SOMEONE CAN PROVE THEY ARE BEGINNING LETTERS I WILL GIVE THEM AM, AMB, AMBAL, KUUMBU, KUMBHA AS PHONETIC VALUE. SANSKRIT AND TTAMIL HAVE HIGHEST NUMBER OF WORDS IN A

U.6.ULTRA , ULTIMATUM FINAL, TOP, அப்பால் APPAAL , உச்ச UCHCHA IN SKT.

U.1.UNUS ONNU ONDRU FROM EIN IN GERMAN, ONE

U.1.UNI CELLULAR ETC எண் ஒன்று காண்க

U.7.URB, URBAN UUR IN TAMIL PURA , PURIIN SKT அர்பன் = ஊர்ப் புற  ஊர்/ புர

MIRROR IMAGE OF URBU IS BURA, PURA அர் பு= புர்ர ; வல  இடம் படிக்க

U.8.URINE SIR UNEER IN TAM.  சிறு நீர்

U.9.ULTA I–  உல்ட்டா NSIDE OUT, UPSIDE DOWN UL PURAM KAAN உட்புறம் காண்

U.10.UTILITY , USAGE –UPA YOGA உபயோக

U.11.UNITE– INAI இணை

UNITY INAIPPU , OTRUMAIIN இணைப்பு

U.12.UPSTARIS — UPPARIKAI

U.13.UPPER –UUPER UYARA; அப்பர்= ஊபர் ; உயர, உப்பரிகை.

U.14.UTTER—-UTHTHARAVU ITTAN உத்தரவு இட்டான்

U.15.ULVA,— PUUL , puuzai, unparliamentary word; V = P  எழுதக் கூ டா த சொல்

U.16.URNA — WOOL வுல்

URNA NUUL, UURNA NAABHI SPIDER  உல் / கம்பளி நூல் ; இது தவிர ஊர்ன நாபி = சிலந்தி எனப்படும்

U.17.UGLY– ASLEELAM/ Panini அஸ் லீ லம் என்பார் பாணினி

U.18.UNDER – ANTAR , IN OR DOWN அந்தர் = உள்ளே

U.19. UN – NEGATIVE PREFIX அன்  எதிர்மறை முன்னொட்டு ருதம் – உண்மை , அன் ருதம் பொய்

U.20. USHAS – USHER  உஷஸ் என்பது காலைக் கதிரவன் வருவதை அறிவிக்கும்; அதே போல அஷரர் என்பவர் மண்டபத்துள் , புதிதாக வருபவரை அழைத்துச செல்வர்.

tags- tamil words-37

—SUBHAM—

TAMIL ‘NAMASTE’ FROM LONDON ON 29-11-20 (Post No.8993)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8983

Date uploaded in London – –30 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“TAMIL THUNDER” BROADCAST KNOWN AS “THAMIL MUZAKKAM” WAS BROADCAST ON SUNDAY 29-11-20 UNDER THE AUSPISCES OF GNANA MAYAM.

THE FOLLOWING PROGRAMMES WERE INCLUDED:–

PRODUCED BY LONDON SWAMINATHAN WITH CO PRODUCERS MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

xxxx

PRAYER BY MRS SUKANYA SHANKAR

TALK ON KARTHIGAI DEEPA FESTIVAL BY SRI NAGANATHA SIVACHARYA , CHIEF PRIEST OF LONDON MURUGAN TEMPLE.

XXX

THIRUPPUGAL BY MRS JAYANTHI SUNDAR AND GROUP

MR SURESH VISWANATHAN AND MRS SUMATHY SURESH

MISS SHRUTHI AND MRS ANUSHA MURALI

MISS DIKSHA MURALI

XXX

TALK BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN OF BENGALURU ON TIRUVANNAMALAI SHRINE

TEVARAM BY MR BALASUBRAHMANYAN AND MRS PADMA BALASUBRAHMANYAN

TALK BY S NAGARAJAN OF BENGALURU ON LAMPS IN TAMIL LITERATURE

KALYANA SONG BY MRS SARASWATHY CHANDRASEKARAN

VAAZKA NIRANTHARAM OF BHARATIYAR BROADCAST IN THE BEGINNING AND AT THE END. TWO DIFFERENT VERSIONS OF THE SAME SONG.

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL ND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

Xxxx  subham xxx

PLEASE JOIN US TODAY — MONDAY 30-11-2020

TODAY’S MENU ON GNANA MAYAM BROADCAST

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND
XXX

SPEECH BY SRI ANANTHA NARAYANA BHAGAWATHAR OF KUMBAKONAM, A FAMOUS SAMPRADAYA BHAJAN SINGER WHO HAS VISITED SEVERAL COUNTRIES INCLUDING USA.
HE WILL TALK AND SING SOME KIRTANS.

XXXX

MR BALASUBRAMANYAN SINGS KRTIS BY SRI SADASIVA BRAHMENDRAL, THE GREAT SAINT WHO HAS COMPOSED KRTIS IN BEAUTIFUL SIMPLE SANSKRIT.

MRS DAYA NARAYANAN SINGS ALVAR PASURAMS/ TIRUPPAVAI

MRS ANNAPURANI PANCHA NATHAN SINGS DEVOTIONAL COMPOSITION IN MALAYALAM .

WE BEGIN WITH A PRAYER FROM NEEDAMANGAML MRS JAYASHREE UMA SHANKAR.

XXXX

DR NARAYANAN KANNAN TALKS ON ALVARS AND VAISHNAVAM

XXXX

EVERY SUNDAY FOR TAMIL
EVERY MONDAY FOR HINDUISM
XXX
SAME TIME ONE PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME
XXX
WHERE ? AT FACEBOOK.COM/GNANAMAYAM
Facebook.com/gnanamayam
XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.
SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY
THANKS FOR UR GREAT SUPPORT.

PRODUCER- LONDON SWAMINATHAN


–SUBHAM–

இலக்கியத்தில் கார்த்திகை தீபம்! (Post No.8982)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8982

Date uploaded in London – – 30 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

29-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!. IF YOU WANT TO LISTTO THIS TALK, PLEASE VISIT Facebook.com/gnanamayam

இலக்கியத்தில் கார்த்திகை தீபம்!

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று கார்த்திகை தீபத் திருநாள்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்!

விளக்கினின் முன்னே வேதனை  மாறும்!

என்பது திருமூலரின் அருள் வாக்கு!

ஹிந்துக்களின் வாழ்க்கையில் தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.

பண்டொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த காலத்தில் சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்!

கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு பேருமே குழந்தையை தனிதனியே சீராட்டும் வண்ணம் ஆறு உருவமாக அவர்களை மகிழ்வித்து கார்த்திகேயன் என்ற பெயரையும் முருகன் பெற்றான். ஒளி பெறும் அனைத்து விஷயங்களுக்கும் முருகனுக்கும் சம்பந்தம் உண்டு.

அக இருளைப் போக்கும் தமிழ் மொழி ஒளியே. புற இருளைப் போக்கும் கார்த்திகை தீபமும் ஒளியே. இவை இரண்டுமே முருகனுக்கு உகந்தவை!

கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. வேதம் கிருத்திகா நக்ஷத்ரம் அக்னி தேவதா என்று முழங்குகிறது!

கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்கு அல்லது தீப் பிழம்பு போலத் தோற்றமளிக்கின்றன இந்த ஆறு நட்சத்திரங்களும்!

பௌர்ணமி சந்திரன் ஒவ்வொரு மாத நள்ளிரவில் எந்த நட்சத்திரத் தொகுதியில் தோன்றுகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே தமிழ் மாதப் பெயர்கள் எழுந்துள்ளன. சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது இரவில் வானில் விருச்சிகத்திலிருந்து ஏழாவது ராசியாக அமைந்துள்ள ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரம் நமது தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகை  மாதத்திற்கு கார்த்திகை நட்சத்திரத்தின் பெயரை தமிழர்கள் சூட்டினர்.

     பிளையாடிஸ் (Pliades) என்று அழைக்கப்படும் ஆறு நட்சத்திரங்கள் வானில் தீப்பிழம்பு வடிவத்தில் தோன்றுவதாகும். இது 250 ஒளி வருட தூரத்தில் உள்ளது.

  தீபத்தை ஏற்றி வழிபடுவது நமது பாரம்பரிய பழக்கமாகும்.

தமஸோ மா ஜோதிர் கமய – இருளிலிருந்து எம்மை ஒளிக்கு இட்டுச் செல் – என்பது பழம்பெரும் இலக்கியமான வேதத்தின் பிரார்த்தனை!

தீபம் பற்றிய இலக்கிய உவமைகளில் காளிதாஸனின் உவமையை எண்ணி எண்ணி வியக்காதோர் யாரும் இல்லை.

ரகுவம்சத்தில் சுயம்வரத்தில் இந்துமதி தன் மணாளனைத் தேர்ந்தெடுக்க வருகிறாள். வரிசையாக பல தேசத்து ராஜகுமாரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவள் ராஜகுமாரர்கள் அருகிலே செல்வதை காளிதாஸன் வர்ணிக்கும் போது அவள் ஒளிச்சுடரின் நுனி போலச் சென்றாள் – சஞ்சாரிணி தீப ஷிகேன ராத்ரௌ என்கிறார்.

சுடர் அருகே வந்தவுடன் தன்னைத் தான் அவள் தேர்ந்தெடுக்கப் போகிறாள் என்று பிரகாசமாகும் மன்னர்களின் முகங்கள் அவள் அவர்களைத் தாண்டி நகர்ந்தவுடன் இருண்டு போனதாம்!

நரகாசுரனை அழித்து அவனால் இருள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் கிருஷ்ணரால் விடுவிக்கப்பட்ட போது அவர்கள், வாழ்வின் ஒளியைக் கண்டனர். ஒளி தந்த கிருஷ்ணரை அவர்கள் தீபத்தை வரிசையாக ஏற்றி வழிபட்ட தீப ஆவளியே தீப வரிசையே தீபாவளி ஆனது!

500க்கு மேற்பட்ட தீபங்கள் தொன்று தொட்டு நம் நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னிக்குமரி வரை இருந்து வருகின்றன.

அன்றாடம் தீபம் ஏற்றும் பிறை மாடங்களை கிராமம் தோறும் பார்க்கலாம்.

சங்க இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் சேயோன் என்று குறிப்பிடப்படும்  முருகனின் பிறப்பு, அவனது இளமை நலம், தலைமைத் தன்மை, போர் வல்லமை, தேவர் தம் குறை தீர்க்கும் தன்மை, இந்திரனை வென்ற புகழ், தெய்வயானை கணவன், வள்ளி கணவன், அவனது அடி முடி சிறப்பு, எழுந்தருளும் இடங்கள், குன்று தோறாடல், அவனை வணங்கும் முறை, வரம் பெறுதல் என இப்படிப் பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புகளைப் பற்றி சுமார் நானூறு பாடல் குறிப்புகளைக் காணலாம்.

நேரத்தைக் கருதி ஒரு பத்துக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

  1. முருகன் பிறப்பு பற்றி கலித்தொகை கூறுவது:

ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

போல வருமென் உயிர்

  • நயத்தகு மரபின் வியத்தகு குமர! பரிபாடல்
  • வானோர் வணங்குவில் தானைத் தலைவ! திருமுருகாற்றுப்படை
  • குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து
  • காட்டுமான் அடிவழி ஒற்றி

வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே அகநானூறு

  • அருந்திறல் கடவுள் அல்லன்

பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோனே ஐங்குறுநூறு

  • பலி பெறு கடவுள் பேணி நற்றிணை
  • சேயோன் மேய மை வரை உலகமும் தொல்காப்பியம்
  • செந்தில் நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை புறநானூறு
  • தளிமழை பொழியும் தண்பரங்குன்றில்

கலி கொள் சும்மை  மதுரைக் காஞ்சி

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நானூறையும் நான் உரைக்க நேரம் இங்கு உண்டா என்ன?

அறுமீன், ஆரல், ஆல், அறுவர், கார்த்திகை  மகளிர் என்று இப்படிப் பலவாறாக கார்த்திகை நட்சத்திரத்தை சங்க இலக்கியம் போற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபம் ஏற்றும் பண்பை பொய்கையார் கார் நாற்பதில் கூறும் போது “கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே” என்கிறார்.

சீவக சிந்தாமணி கார்த்திகை தீபத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது “குன்றின் கார்த்திகை விளக்கிட்டன்ன கடி கமழ் குவளை பைந்தார்” என்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கார்த்திகை தீபம் ஏற்றும் பெருவிழா தமிழ் நாட்டில் இருந்து வந்திருப்பதை இப்படிப்பட்ட இலக்கியச் சான்றுகள் மூலம் காண முடிகிறது.

சங்க இலக்கியத்தைத் தாண்டி தேவார திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம், 96 வகை பிரபந்தங்களின் உள்ளே நுழைந்தோமானால் சுமார் ஆயிரம் பாடல்களைச் சுலபமாக கார்த்திகை பற்றியும் தீபம் பற்றியும் சுட்டிக் காட்டி விடலாம்.

அயனும் அரியும் காண முடியா சிவனின் பெருமை பற்றி சம்பந்தரின் ஏராளமான பாடல்களில் பார்க்கலாம்.

தீப மங்கள ஜோதி நமோ நம என்று ஆரம்பித்தால் அருணகிரிநாதரின் தீப மஹிமைப் பாடல்களைத் திருப்புகழில் பரக்கக் காணலாம்.

கார்த்திகை தீபத்தைப் பற்றியும் பெண்கள் திருவிளக்கை கார்த்திகையில் ஏற்றுவதைப் பற்றியும் இந்த தெய்வீக மகான்கள் குறிப்பிடுகின்றனர்.

சிவநேசர் ஒருவரின் மகளான பூம்பாவை என்னும் பெண்ணை விதி வசத்தால் பாம்பு ஒன்று தீண்ட அவள் இறந்து போகிறாள். அவள் உடலை தகனம் செய்த சிவநேசர் அஸ்தியை ஒரு குடத்தில் வைத்திருந்தார். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்த சமயத்தில் எங்கே பூம்பாவை என்று கேட்க மனம் வருந்திய சிவநேசர் நடந்ததைச் சொல்லி அந்த அஸ்தி இருந்த குடத்தைக் கொண்டு வந்தார். உடனே ‘மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலை’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார் சம்பந்தர். என்ன ஆச்சரியம். எலும்புகள் சேர, தசை இரத்தம் கொண்ட உடல் உருவாக உயிர் சேர பூம்பாவை உயிருடன் மீண்டு எழுந்தாள். அந்தப் பதிகத்திலே

வளைக்கை மடநல்லார்  மாமயிலை வண்மறுகில்

துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்

தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்         என்று பாடி

கார்த்திகை தீபத் திருநாளைக் காணாமல் போய் விட்டாயே பூம்பாவாய் என சம்பந்தர் உருகிக் கூறுகிறார். சென்னையில் உள்ள மயிலையில் இன்றும் இந்த கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!

தீபத்தை ஏற்றுவதால் சகல பாவங்களும் நீங்கும்.

தீப தானம் சுவர்க்கம் செல்வதற்கான வழி. கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் செய்து அருணாசல தரிசனம் செய்தால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பயனை எய்தலாம் என நமது அற நூல்கள் கூறுகின்றன.

பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டரான  முருகனார் தீப தரிசனத் தத்துவத்தைப் பற்றி ஸ்ரீ பகவானை எழுதும்படி வேண்டிக் கொண்டார். உடனே பகவான் தீப தர்சனத் தத்துவம் என்ற இந்தப் பாடலைப் பாடி அருளினார்:

இத்தனுவே நான் ஆம் எனும் மதியை நீத்து

அப் புத்தி இதயத்தே பொருந்தி அக நோக்கால்

அத்துவிதமாம் மெய் அகச் சுடர் காண்கை – பூ

மத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே

இந்த ஜட உடல் ஆகிய சரீரமே தான் நான் என்று நினைக்கின்ற மனதை நீக்கி அந்த மனதை உள்முகமாக்கி இதயத்தில் நிலையாக ஒன்றி, உள்முக திருஷ்டியால் ஏகமான உள் ஒளியின் உண்மை சொரூபத்தை உணர்வதே பூமியின் இதய ஸ்தானமாக அமைந்துள்ள அருணாசல சிகரத்தில் விளங்கும் ஜோதி ஒளியின் உண்மை என்று அறிவாயாக!

அண்ணாமலையில் தீப தர்சனத்தின் உண்மைப் பொருளை இப்படி விளக்கி அருளுகிறார் பகவான் ரமண மஹரிஷி!

தீப வழிபாட்டால் பாவம் நீங்கும்; புண்ணியம் சேரும். செல்வம் சேரும்; நோய்கள் அகலும். குடும்பம்  மேன்மையுறும்.பிறவிப் பிணியும் நீங்கும்.

திருமூலர் தனது அருள்வாக்கில் கூறும் இரகசியம் இது தான் :-

      விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு

விளக்குடையான் கழல் மேவலும் ஆமே!

இலக்கியம் விளக்கும் தீப மஹிமையை உணர்ந்து உய்வோமாக!

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

பல்லக விளக்கு அது பலரும் காண்பது

நல்லக விளக்கு அது நமச்சிவாயவே

தீப மங்கள ஜோதி நமோ நம!

நன்றி வணக்கம்!

tags– இலக்கியத்தில், கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை – ஆலயம் அறிவோம்!(Post 8981)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8981

Date uploaded in London – –29 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!

அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!

 கிரி உருவாகிய கிருபைக் கடலே!

க்ருபை கூர்ந்து அருள்வாய் அருணாசலா!

என்ற பகவான் ரமண மஹரிஷியின் துதியை இந்த கார்த்திகை தீபப் பெருநாளில் துதிப்போம்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் நினைக்கவே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை ஆகும். இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 187 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தலமாகும்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள இந்தத் தலம் திரு அருணை, முக்தி புரி, அருணாசலம், சிவ லோகம், அண்ணா நாடு என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு சிறப்பு மிக்க ஒன்றாகும்.

ஒரு முறை ஹரியும் அயனும் தங்களில் யார் பெரியவர் என விவாதித்துக் கொண்டிருந்த போது சிவபிரான் தனது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் கண்டார்களோ அவரே பெரியவர் என்று கூற அதற்கு இணங்கிய பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவனின் உச்சியைக் காண மேலே பறக்கலானார். திருமாலோ வராஹமாக – பன்றியாக – மாறி அடியைக் காணப் புறப்பட்டார். யுகங்கள் கழிந்தன. அடியையும் முடியையும் இருவராலும் காண முடியவில்லை. தாழம்பூ ஒன்று ஆகாயத்திலிருந்து கீழே விழுவதைக் கண்ட பிரம்மா நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க தாழம்பூ சிவனின் தலையிலிருந்து என பதில் கூறியது. பல யுகங்களாகப் பறந்து கீழே வருவதாக அது கூறவே திடுக்கிட்ட பிரம்மா சிவபிரானின் முடியைக் காணவே இயலாது என்று உணர்ந்தார். தாழம்பூவைத் தன் கையிலே பிடித்து சிவனின் முன் தோன்றி தான் முடியைக் கண்டதாகக் கூறினார். அவரது பொய்யை அறிந்து சினந்த சிவபிரான் “உனக்கு பூமியில் கோவிலே இல்லாமல் போகக் கடவது” என்று சாபமிட்டார். பொய்க்கு உடந்தையாக இருந்த தாழம்பூவை, “இனி யாம் உன்னைச் சூடுவது இல்லை” என்றார். தாழம்பூ இறைவனுக்கு உரிய மலராக இல்லாமல் போனது. அடியைக் காண முடியாத விஷ்ணு இந்தச் சம்பவத்தால்  ஆனந்தமுற்றார். மாலும் அயனும் சிவனின் உண்மை சொரூபத்தைக் காண வேண்டி நிற்க, சிவபிரான் பிரம்மாண்டமான ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றினார். அடியும் முடியும் அறிய இயலாத அந்த ஜோதி தோன்றிய நாள் கார்த்திகை மாதம், பரணி நட்சத்திர நாள் அன்று.

அன்று முதல் கார்த்திகை மாதம் பரணி தீபம் ஏற்றுவது வழக்கமாயிற்று; சிவபிரானை ஜோதி ஸ்வரூபமாகக் கண்டு களித்துப் போற்றி வணங்குவது வழக்கமாயிற்று.

இதே தலத்தில் தான் தேவி மஹிஷாசுரனை வதம் செய்தாள்.

இங்கு ஏராளமான ரிஷிகளும் மகான்களும் அருளாளர்களும் சித்தர்களும் அன்று முதல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

பகவான் ரமணர் அருளாட்சி புரியும் தலம் இது. மேலை நாட்டு எழுத்தாளரான பால் ப்ரண்டன் பகவான் ரமணரிடம், ஒரு முறை, திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் குடைந்தார். மலையிலே குகைகள் உள்ளனவா என்ற அவரது கேள்விக்கு ‘எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்’ என்றார் பகவான். சித்தர்கள் உள்ளனரா என்ற அவரது கேள்விக்குப் பெரிய சித்தர்கள் உள்ளனர் என்று பதில் கூறினார். பின்னர் “சிவபிரான் உறைந்திருக்கும் தலம் கைலை. ஆனால் சிவனே தான் இந்த மலை” என்று இந்த மலை பற்றிய உண்மை ரகசியத்தைக் கூறி அருளினார்.

அருணகிரிநாதர் தோன்றி முருகனின் அருள் பெற்ற தலம் இதுவே. தித்திக்கும் திருப்புகழில் இந்தத் தலம் பற்றி அவர் பாடியுள்ள பாடல்கள் 79.

சேஷாத்ரி ஸ்வாமிகள், குரு நமசிவாயர், குகை நமசிவாயர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் இங்கு வாழ்ந்து வந்து இறைவனின் அருள் மஹிமையை பக்தர்களுக்கு உணர்த்தியுள்ளனர்.

இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். இறைவி உண்ணாமுலை நாயகி. ஆலயம் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. ஸ்தல விருக்ஷம் மகிழ மரம். இது மூன்றாவது பிரகாரத்தில் உள்ளது.

சிவனே உருவான இந்த கிரியை வலம் செய்தால் சகல பாவங்களும் அகன்று முக்திப் பேறு கிடைக்கும் என்பது உறுதி. அங்கவர் என்னும் மஹரிஷி பல யுகங்களாக இந்த கிரிவலத்தை நட்சத்திர ரூபமாக மேற்கொண்டு வ்ருகிறார். இரவில் ஏழு மணி அளவில் தோன்றும் இந்த நட்சத்திரம் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை பக்தர்கள் இன்றும் கண்டு களிக்கின்றனர். பௌர்ணமி அன்று அருணகிரியை லக்ஷக்கணக்கான பக்தர்கள் வலம் வருவதை இன்றும் நாம் காணலாம்.

இங்கு கார்த்திகை திருவிழா 14 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் அன்று கொடி ஏற்றப்படும். பத்தாம் நாள் விழா தான் கார்த்திகை தீபப் பெருவிழா. பிரம்மாண்டமான குண்டத்தில் ஏற்றப்படும் ஜோதி பல நாட்களுக்கு எரியும்.

இந்த ஸ்தலத்தைப் பற்றிய ஏராளமான மஹிமைகளை அருணாசல மாஹாத்மியம் நூலில் காணலாம்.

தேவார மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் திருப்பதிகங்களைப் பாடி அருளியுள்ள தலம் இது. மாணிக்கவாசகர் போற்றித் துதித்த தலம் இது.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் அருணாசலேஸ்வரர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.     ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நன்றி. வணக்கம்

tags –திருவண்ணாமலை

–subham–

TAMIL WORDS IN ENGLISH- PART 36 (Post No. 8980)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8980

Date uploaded in London – –29 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 36

 WORDS BEGINNING WITH ‘T’ CONTINUED…….

T.86.Talaka—thaalpaal/ lock; Ta+ lock தாலக/சம்ஸ்க்ருதம்= தாழ்ப்பாள்

தா —  லாக் /ஆங்கிலம் 

T.87.Thorough– ‘thuru’ sollal (Vedic Recitations); துரு சொல்லுதல்; பிராமணர்கள் முழு வேதத்தையும் சொல்லுதல்

ஆங்கிலத்தில் ‘தரோ’

T.88.Turbine– Thuruval shape டர்பைன் = தேங்காய் துருவல் வடிவம்

T.89.Teacher –Acharya, dikshit ஆசார்ய , தீக்ஷிதர்

T.90.Talon, claw –talai தளை , பிடிமானம்

T.91.Thrill –thikil திகில்

T.92.Timber– taru, furniture wood தரு /மரம்

T.93.Terminal –theru munai தெரு முனை

T.94.Times– tharam thatavai, murai தரம்/தடவை/முறை

T.95.Tired –ayarvu (T—IRED=AYARVU) டி – அயர்வு

T.96.Them/ they – (AVAR) tham, thamathu, thamar அவர் தம் , தமது, தமர் /தாயாதி ; தமிழில் உறவினர் பெயர்கள் த -காரத்தில் துவங்கும் — தந்தை, தாய், தம்பி, தங்கை ,தமையன், தமக்கை , தாத்தா , தமது.

T.97.Toilet – aay (EXCREMENT) ஆய்

T.98.Think– dhyan த்யான் / தியானம்

T.99.Tumultuous — tumula, amali- thumali துமுல/ சம்ஸ்க்ருதம்; அமளி துமளி

T.100.Tosser, –cough- thosam, jala dosham இருமல்/ ஜல தோஷம்

T.101.Trowel–  thuruval துருவல் / தோண்டித் துருவினான்

T.102.Tulip– tulpe, turban thalaIppa shape துலிப் மலர் வடிவம்/ தலைப் பா (கை )

T.103.Thorp – outlying farm thoppu, thuravu தோப்புத் துறவு (இங்கிலாந்தில் தோர்ப் என முடியும் பெயர்கள்)

(In Britain many places  have suffix Thorp;
Middle English, from Old English throp, thorp; akin to Old High German dorf village, Latin trabs beam, roof.)

T.104.Thackeray –Tagore (Thackeray is common suffix in Indian and England) தாக்கரே பெயர் இங்கிலாந்திலும் உண்டு .

(English (Yorkshire): habitational name from Thackray in the parish of Great Timble, West Yorkshire, now submerged in Fewston reservoir. It was named with Old Norse þak ‘thatching’, ‘reeds’ + (v)rá ‘nook’, ‘corner’. Similar surnames: Thacker, Harker, Hackney, Thackery, Blackerby, Hackman, Haverly.)

T.105. Talaq –thalli vai, Thallip po தலாக் = தள்ளிப் போ , தள்ளி வை

T.106.Tethys/Greek — உ- ததி udhathi in Sanskrit; உ/ டெதைஸ் /கிரேக்க மொழி

T.107.Tangerine thanga nira, golden தங்க நிற ஆரஞ்சு

T .108. Tirzah, Biblical name—pleasure, thiruviza திர்ல ( பைபிள் ) திருவிழா

T.109.Talbot-  thalapathy தளபதி ; messenger of destruction in European languages

T.110.Towel– thuvaalai ,thuvattu, thundu, thorththu,Thottu, துவாலை , துவட்டு , தோட்டு , துண்டு

T 111. Toast for friends– dosth, dhwanthva (PAIR) தோஸ்த் ; த்வந்த்வ /இரட்டை இணைபிரியா

T.112.Tomb- stamba /Nadu Kal ஸ்தம்ப / நடு கல் / இறந்தோர்க்கு

T.113.Tit –sittu (T= S) Then chittu, CHITTU kuruvi Birds சிட்டு , தே ன் சிட்டு , சிட்டுக் குருவி

T.114.Tender –Thandu, stem தண்டு/ மெல்லிய காம்பு

T.115.Tarot- cards —Aarutam, Kili jothita cards ஆருட அட்டைகள்; கிளி ஜோதிடர் அட்டைகள் போன்றவை

T.116.Theobrama cacao =Deva Brahma maram, chocolate tree; கோகோ மரத்தின் தாவரவியல் பெயர் தேவ பிரம்ம மரம்

கோகோ =க- காரம் ; க என்பது பிரம்மா ; it means food of the gods in Greek

T.117.Talis-man, another derivation; thalai manitha தலை – மனித உருவம் உள்ள தாயத்து ; (see already listed meaning also)

T.118. Manitha thalai (PORITHTHA) kasu மனித தலை பொறித்த காசு/பதக்கம்

‘T’ finito; next we will look at ‘U’

tags- tamil words-36

–subham—

பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2 (Post.8979)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8979

Date uploaded in London – – 29 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் பெல்காமில் தங்கி இருந்த போது பலரும் அவரைச் சந்தித்து வந்தனர்.

அவர்களுள் ஒருவர் ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர். அவர் பெல்காம் நகரிலேயே மெத்தப் படித்தவர் என்ற பெயரைப் பெற்றவர். பாரம்பரியம் தவறாது தென்னிந்தியாவிற்கே உரித்தான ஆசாரங்களைக் கடைப் பிடிக்கும் ஹிந்து அவர். ஆனால் மனதால்  அறிவியல் நோக்கில் எதையும் அலசுபவர் அவர். சந்தேகப் பேர்வழி. சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வந்தாலும் கூட எதையும் விஞ்ஞான நோக்கில் பார்த்து வந்ததால் ஸ்வாமிஜியை அவர் சந்தித்த போது மிகவும் குழம்பிப் போனார்.

ஸ்வாமிஜி அவரை விட அதிக அனுபவசாலி. அவரை விட இன்னும் அதிகம் படித்திருந்தார். தத்துவம் மட்டுமல்ல, அறிவியலிலும் அவர் தேர்ந்த நிபுணராக இருந்தார்.

ஆகவே விவாதங்களில் தனது கருத்துக்களை வலியுறுத்த அடிக்கடி அவர் ஆவேசப்பட்டார்; கோபப்பட்டார். அகங்காரமாகப் பேசவில்லை என்றாலும் கூட அவர் அடிக்கடி எதிர்த்துப் பேசி வந்தார்.

இதையெல்லாம் பார்த்த ஜி.எஸ். பாட்டேயின் (G.S.Bhate) தந்தையார் சற்று சங்கடப்பட்டார். அவரை அப்படிப் பேசக் கூடாது என்று கூறினார்.

ஆனால் ஸ்வாமிஜியோ சற்றும் கோபப்படவில்லை. பாட்டேயின் தந்தையார் எஞ்ஜினியரைக் கடிந்து கொண்ட போது குறுக்கிட்ட ஸ்வாமிஜி புன்முறுவலுடன் அவரது பேச்சால் தனக்குச் சிறிதும் வருத்தமோ கோபமோ இல்லை என்று கூறினார்.

இந்த மாதிரி சமயங்களில் குதிரையைப் பழக்குகின்ற பயிற்சியாளரின் வழியே சிறந்த வழி என்று கூறிய ஸ்வாமிஜி அதை விளக்கலானார்.

குதிரைகள் குட்டியாக இருக்கும் போது பயிற்சியாளர்களிடம அனுப்பப்படுவது வழக்கம். எல்லா குட்டிக் குதிரைகளும் அடங்காது. பிடிவாதம் பிடிக்கும். தன் மனம் போல ஓடும்! குதிக்கும்!

இப்படிப்பட்ட குதிரைகள் வரும் போது பயிற்சியாளர் முதலில் அதன் முதுகின் மீது ஏறி அமர்வார். அப்படி அமர்ந்தவுடனேயே தனது இருக்கையை விட்டு விடாது பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்.

தன் மீது ஏறி அமர்ந்த பயிற்சியாளரை கோபம் கொண்ட குதிரைக் குட்டிகள் எப்படியாவது கீழே தள்ளப் பார்க்கும்.

அங்கும் இங்கும் ஓடும்; குதிக்கும்!

ஆனால் பயிற்சியாளரோ அமைதியாக தன் பிடியை விடாது குதிரையின் மீது அமர்ந்திருப்பார்.

ஆடி, ஓடி தனது ஆற்றலை எல்லாம் இழந்த குதிரை களைத்துப் போகும்!

இந்த நிலையில் தான் பயிற்சியாளரின் நிஜமான வேலையே ஆரம்பிக்கும். அவர் தனது வேலையை ஆரம்பிக்கும் போது, குதிரைக்குத் தெரிய வரும் தனது உண்மையான  மாஸ்டர் தன் மீது அமர்ந்திருப்பவர் தான் என்று!

பிறகு பயிற்சி மிக சுலபமாக ஆகி விடும்.

மாஸ்டர் சொன்னதையெல்லாம் அது கேட்கும்.

இதே போலத் தான் விவாதங்களும் என்று கூறி நிறுத்திய ஸ்வாமிஜி மேலும் விளக்கலானார்.

உரையாடலின் போதும் விவாதத்தின் போதும் எதிராளியை தனது சக்தியை எல்லாம் உபயோகித்துப் பேசட்டும், விவாதிக்கட்டும் என்று அதை அப்படியே விட்டு விட வேண்டும். தன்னிடம் மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் களைத்துப் போன நிலையில் அவரைச் சுலபமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். என்ன வேண்டுமானாலும் அவரைச் செய்யச் சொல்லலாம்.

வற்புறுத்தலினாலோ, தொடர்ந்து பேசுவதினாலோ சாதிக்க முடியாததை இப்போது செய்து விட முடியும். விவாதத்திற்கு வரும் ஒருவர் தன்னை எதிராளி வற்புறுத்தப் பார்க்கிறார், சம்மதிக்க வைக்கப் பார்க்கிறார் என்றே நினைப்பார். ஆக வற்புறுத்தல் இல்லாமல் அவர் ஒப்புக் கொள்ள வேண்டியதை உரிய முறையில் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வார்.

ஸ்வாமிஜியின் இந்த உத்தி பெல்காமில் அவரை வாதுக்கு அழைத்து வெல்ல வேண்டும் என்று நினைத்த அனைவரையும் தோற்க அடித்தது.

தங்களின் எல்லாத் திறமைகளையும் உபயோகித்து அவர்கள் வாதம் செய்த போதும் புன்முறுவலுடன் அதை கேட்ட ஸ்வாமிஜி மெதுவாக தனது கருத்துக்களை முன் வைப்பார்.

அனாயாசமாக வெவ்வேறு நூல்களிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல அவர் தரும் மேற்கோள்கள் எதிராளியின் வாயை அடைத்தது மட்டுமல்ல; பிரமிக்க வைத்தது.

ஆனால் ஸ்வாமிஜி ஒரு விவாதத்தில் தான் வெல்ல வேண்டும் என்று எப்போதுமே நினைத்ததில்லை ; ஹிந்து மதத்தின் கொள்கைகள் உலகின் முன் சரியானபடி வைக்கப்படும் காலம் வந்து விட்டது என்பதை நிரூபித்தால் போதும் என்றே அவர் நினைத்தார்.

வேதாந்தம் என்பதை ஒரு கோழை கூடப் பேசி விளக்க முடியும், ஆனால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க வலிமை வாய்ந்த ஒருவரால் தான் முடியும் என்பதை முத்தாய்ப்பாக அவர் கூறி அருளினார்!

சந்யாசி ஒருவரின் நியதிப்படி சில நாட்களிலேயே பெல்காமை விட்டு ஸ்வாமிஜி சென்ற போது பெல்காமே வருந்தியது.

பின்னால் உலகம் வியக்கும் பெரும் ஆற்றல் கொண்ட விவேகானந்தராக அவர் போற்றப்பட்ட போது அவர்கள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்ல முடியுமா என்ன?

***

ஆதாரம் : ஜி.எஸ். பாடே தனது நினைவுகளை 1923 ஜூலை இதழில் பிரபுத்த பாரத இதழில் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியதன் சுருக்கமே இந்தக் கட்டுரையில் தரப்படுகிறது.

ஸ்வாமிஜியைப் பற்றி 35 பேர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நூல் Reminiscences of Swami Vivekananda. கிடைக்குமிடம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடக் கிளைகள் அனைத்திலும்!

வேதாந்தம், பெல்காமில் , விவேகானந்த,

PLEASE JOIN US TODAY; KARTHIKAI SPECIAL — SUNDAY 29-11-2020

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder) BROADCAST

SPEECH BY SRI NAGANATHA SIVACHARYA OF LONDON MURUGAN TEMPLE ON KARTHIGAI DEEPAM;

THIRUPPUGAZ BY JAYANTHY SUNDAR GROUP , MRS SARASWATHY CHANDRASEKARAN’S  KALYAANA PAATTU,

BENGALURU NAGARAJAN’S Q AND A; THEVARAM BY MR AND MRS BALASUBRAHMANYAM OF CHIGWELL ; MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON TIRUVANNAMALAI TEMPLE

— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

–SUBHAM–

1100 USEFUL CELESTIAL NOTES IN 38,000 INSCRIPTIONS! (Post No.8978)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8978

Date uploaded in London – –28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Salient features from an article by Meera Bharadwaj:–

BENGALURU: Looking at the stone and understanding the sky is what she does. And she is leaving no stone unturned to understand the celestial events of the past. The celestial world has always fascinated B S Shylaja. And therefore, opting for astrophysics to understand the astronomical occurrences and phenomena was not at all surprising. In 1994, she joined as an educator in Jawaharlal Nehru Planetarium, Bengaluru. Till her retirement in 2017 as the Director of Planetarium, she taught basics of astronomy and astrophysics to graduate students.

The tradition of getting edicts recorded on stone can be traced back to 3rd century BCE. Stone inscriptions also provide records of eclipses, solstices and planetary conjunctions, Shylaja informs. She has studied not only Indian inscriptions but extended her studies to South and South East Asia – Cambodia, Sri Lanka, Myanmar, Nepal and Thailand. This has thrown light on many new aspects such as the evolution of calendars independently from the influence of Indian system of time measurement as early as the 3rd century BCE.

Shylaja says, Many interesting records of planetary conjunctions are also available.” This voluminous exercise has involved scrutiny of 38,000 inscriptions from 6th to 17th century and gathering of 1,100 useful information about celestial events.

The result of her effort has led to deciphering records of solar and lunar eclipses, solstices, equinoxes and planetary conjunctions. In all these cases, the dates and timings are meticulously written down while the details on the positions of planets are also available. She has also traced Kannada inscriptions to far off regions like Myanmar. She was assisted by Geetha K G (project assistant/co-researcher) for some discoveries in 2016.

Shylaja and Geetha mainly dealt with inscriptions found in and around Karnataka. Shylaja says, “A good number of Kannada inscriptions are found in AP, TN, Maharashtra and Goa. Many are bi-lingual. All inscriptions in Tirupati are in Kannada, Sanskrit and Telugu and at times, Tamil.

TWO TOAL SOLAR ECLIPSES IN INSCRIPTIONS

The earliest stone inscription of total eclipse in 754 CE has been found in Pattadakal. In fact, European visitors learned the procedures of calculations from Indians. Records of total eclipses have made for an exciting study for Shylaja.

They are recorded as Saka Year, Samvatsara (a cycle of 60 years), lunar month, tithi (the phase of the moon) and Vara (the week day). “We see examples of the naksatra citation (each day is associated with a star, naksatra, the one closest to the moon among the 27), while in some examples, lagna, the ascendant zodiacal sign is cited, giving the time of the day,” Shylaja says.

There is one prominent mention of planetary grouping in 1665 when there was a solar eclipse. This is recorded as śadgraha yóga – grouping of six planets. They are sun, moon, descending node (Kétu) considered as planet and the other three planets. This occasion was used to donate special grants called “tulāpurushadāna”, which means gold of weight equivalent to the weight of the king was disbursed. This particular record pertains to the then Mysore Maharaja.


Languages used in earliest inscriptions are Pali, Prakrit, Nagari and Sanskrit. Subsequent ones are in Kannada, Tamil, Telugu and Persian. Earliest Kannada inscription dated back 
to 450 CE.

Source – Article By Meera Bhardwaj

Express News Service November 22, 2020

TAGS–  INSCRIPTIONS, CELESTIAL EVENTS 

–subham–

38,000 கல்வெட்டுகளில் 1100 சுவையான வானியல் செய்திகள் (Post No.8977)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8977

Date uploaded in London – –28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெங்களூரில் வானியல் காட்சிக் கூடம் (PLANETARIUM) இருக்கிறது. இதில் கல்வி கற்பிப்பவராகச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்மணி டைரக்டராக உயர்ந்து அண்மையில் 2017-ல் ஓய்வும் பெற்றுவிட்டார். இவர் பட்டதாரிகளுக்கு வானியலும்,  வான் பவுதீக இயலும் கற்பித்து வந்தார். இவருடைய பார்வை வரலாறு பக்கமும் திரும்பியது. இதன் விளைவு? 38,000 கல்வெட்டுகளில் இருந்து 1100க்-கும் அதிகமான வானியல் செய்திகளை சேகரித்து ஆராய்ந்து வருகிறார்.

கிரஹணங்கள் , கிரஹச் சேர்க்கைகள், தக்ஷிணாயன , உத்தராயண புண்ய காலங்கள் புகழ் பெற்ற அமாவாசை , பவுர்ணமி விழா கொண்டாட்டங்கள், வருஷப் பிறப்புகள் என்று சூரிய, சந்திர, கிரஹ நிலைகள் பற்றிப் பேசும் எவ்வளவோ செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன.

கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்த செய்திகள் பற்றியவையே. ஆயினும் முக்கியமான கிரஹ நிலைகள், தேதி , மாதம், வருஷம் ஆகியனவும் அவற்றில் உள்ளன. இதுவரை இவைகளை ஒட்டுமொத்தமாக ஆராயவில்லை. இப்பொழுது ஷைலஜா அந்தப் பணியை செய்துவருகிறார்.

கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகள் இவருடைய கவனத்தை ஈர்த்தபோதிலும் , தென் கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, நேபாளம், இப்போதைய பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா முதலிய  நாடுகளில் உள்ள சம்ஸ்கிருத, தமிழ் ,கன்னட, பிராகிருத கல்வெட்டுகளையும் இவர் ஆராய்கிறார்.

இந்தியாவில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அசோகர் காலத்தில் இருந்து நிறைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவருக்கு கே.ஜி. கீதா என்பவரும் உதவி வருகிறார். இருவரும் பர்மா வரையுள்ள கன்னட கல்வெட்டுகளை நுணுக்கமாக ஆராய்கின்றனர். கன்னட மொழியைப் பொறுத்தவரையில் கி.பி.450 தேதியிட்ட கல்வெட்டுதான் பழமையானது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ் நாடு ஆகிய இடங்களில் பரவிக் கிடைக்கின் றன.

கி.பி.754-ல் நடந்த பூரண சூரிய கிரஹணம் பட்டடக்கல் கல்வெட்டில் பதிவாகியுள்ளது.1665–ம் ஆண்டில் மைசூர் மஹாராஜா ‘துலா புருஷ தானம்’ செய்தார். அதாவது அவருடைய எடைக்குச் சமமான தங்கத்தை தானம் கொடுத்தார். அப் போது சூரிய கிரகணமும் ஆறு கிரஹச் சேர்க்கையும் நடந்ததே இதற்கு காரணம்.

இந்த நிகழ்சசிகளையும் வானியல் குறிப்புகளையும் ஆராய்வதன் மூலம் புதிய வரலாற்றுச் செய்திகள் கிடைக்கலாம். பழைய புதிர்கள் விடுவிக்கப்படலாம்.

ஆதாரம் – மீரா பரத்வாஜ் , நவம்பர் 22ம் தே தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் NEW INDIAN EXPRESS 22-11-2020 நாளேட்டில் எழுதிய கட்டுரை.

–SUBHAM—

tags — கல்வெட்டு, சுவையான,  வானியல் செய்திகள்