Written by London Swaminathan
Date: 31 October 2016
Time uploaded in London:19-42
Post No.3307
Pictures are taken from various sources; thanks to Facebook friends.
அந்தக் காலத்தில் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் (ஆட்சியாளர்), வைஸ்யர்கள் (வணிகர், விவசாயிகள்) ஆகிய மூவர்ணத்தினரும் வேள்விகளைச் செய்தனர் அல்லது செய்வித்தனர். அப்போது வேள்வித் தீயில் சோறு, நெய், பால், மற்றும் பூர்ணாஹுதியின்போது வேஷ்டி, புடவை, தங்க காசுகள் முதலிய பயனுள்ள பொருட்களும் பலவகை மரக்குச்சிகள் (சமித்து) போன்றவையும் போடப்பட்டன. மனிதர்களுக்குப் பயன்படும் பொருட்களை இப்படி தீயில் போட்டு வீணடிக்கலாமா? என்று பலரும் எண்ணுவர். குறிப்பாக பகுத்தறிவு வா ((ந்)) திகள் கேள்வி கேட்பர்.
ஒவ்வொரு நிமிடமும் பல கோடி சிகரெட்கள் புகைக்கப்பட்டு காசை வீனடிக்கிறார்களே இது நியாயமா? அது மட்டுமல்ல இப்படி சிகரெட், பீடி, சுருட்டைக் குடித்து புறச்சுழலை மாசு படுத்துவதோடு மற்றவர்களுக்குப் புற்று நோயைத் தருகிறார்களே! இது நியாயமா? என்று எந்த பகுத்தறிவு வா ((ந்)) தியும் வாதாடி இது வரை பார்க்கவில்லை. நிற்க.
யாஹத்தில் போடுவது ஏன்? என்ற கேள்விக்கு விடை காண்போம்.
பிராமணர்கள் அந்தக் காலத்தில் தினமும் அக்னிஹோத்ரம் செய்துவந்தனர். அதில் அக்னி, பிரஜாபதி முதலிய கடவுளரின் பெயரைச் சொல்லி அக்னியில் — தீயில் — இப்படி பொருட்களைப் போடுவது வழக்கம் அப்போது அவர்கள் இதம் ந மம என்று சொல்லி அதைப் போடுவர். இது என்னுடையது அல்ல என்பது அதன் பொருள். அதாவது தியாக உணர்வை முதலில் இருந்தே வளர்க்க வேண்டும் என்பது இதன் தாத்பர்யம்– கருத்து- அது மட்டுமல்ல. எந்த இறைவன் நமக்கு இவை எல்லாவற்றையும் கொடுத்தானோ அவனுக்கு நன்றி காட்டும் முகத்தானும் இப்படி அளிப்பதாகக் கொள்ளலாம்.
பாரி என்ற தமிழ் மன்னன் ஒரு முல்லைக் கொடி காற்றில் பற்றுக் கொம்பு இல்லாமல் தத்தளித்தபோது அதற்கு தனது தேரையே ஈந்தான்/ எந்த பகுத்தறிவு வாந்தியும் பாரியை முட்டாள் பயல் என்று திட்டுவதில்லை. ஒரு மன்னனுக்கு பொது அறிவுகூட இல்லையா? காற்றில் முல்லைக் கொடி படபடப்பது நியாயம்தானே! என்று பகுத்தறிவு வாந்திகள் வசை பாடவில்லை. மயில் இயற்கையாக ஆடியதைப் பார்த்து ரசிக்கத் தெரியாத பேகன் அது குளிரில் நடுங்கியதாக எண்ணி தனது போர்வையையே அளி த்தானே! இவனுக்கு சின்னக் குழந்தைக்குத் தெரியும் விஷயம்கூடத் தெரியவில்லையா? பொது அறிவே இல்லாத மூடனா? என்று பகுத்தறிவு வாதிகள் கிண்டல் செய்வதில்லை! முன்னர் கூறியபடியே கோடிக்கணக்காண மக்கள் குடிக்கும் சிகரெட்டுகளையும் மதுபானக் குடியையும் பரிகசிப்பதில்லை. எங்காவது இவைகளுக்கு ஏஜன்ஸியோ காண்ட்ரா க்டோ கிடைத்தால் முதலில் கியூ வரிசையில் நின்று பணம் பண்ணுவதும் பகுத்தறிவு வாந்திகள் என்பதை உலகறியும்.
பாரியும், பேகனும் , கர்ணனும் செய்தது மாபெரும் தியாகம். ஆகையால்தான் போற்றுகிறோம். அது போலவே தமக்கென்று வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு வாரி வழங வேண்டும்; குறிப்பாக இறைவனுக்கு நன்றிக்கடன் செய்ய வேண்டும்..
யாக யக்ஞங்களில் நெய்யை விடுவதாலும் சிலவகை மரக்குச்சிகளைப் போடுவதாலும் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை நமது இலக்கியம் முழுதும் இழையோடிச் செல்லும் விஷயமாகும். ஆனால் இதற்கு நேர்மாறாக இன்று உலக எங்கும் நடக்கும் “சிகரெட் அக்னிஹோத்ரம்” புகைப்பவரை மட்டுமின்றி புகையை சுவாசிப்போருக்கும் புற்று நோயை உண்டாகும் என்பதை நாம் அறிவோம். அறிந்தும் தடுப்பதற்கு எவரும் முன் வருவதில்லை.
தியாக மனப்பான்மை பாரதம் முழுதும் உள்ளது. இந்த,” இதம் ந மம” ( என்னுடையது அல்ல) என்பது புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னர் பாடிய பாட்டிலும் வருகிறது:-
உண்டால் அம்ம, இவ் உலகம் — இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்னமாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
–கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது (புறநானூறு 182)
இந்த உலகம் ஏன் நிலைபெற்று இருக்கிறது என்றால், இந்திரனின் அமிழ்தம் கிடைத்தாலும் தனியாக உண்ணமாட்டாதவர்கள் உள்ளதாலும், தர்ம விரோதச் செயல்களுக்கு பயப்பட்டு, புகழ் தரும் செயலுக்காக உயிரையும் கொடுப்பவர் இருப்பதாலும்தான்.
பழி வரும் பாபச் செயல் என்றால் உலகத்தையே தருகிறேன் என்று சொன்னாலும் வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடுவர். இப்படி தன்னலம் கருதாது பொது நலம் கருதும் மக்களால்தான் இந்த உலகம் இன்னும் அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கிறது என்று பாண்டிய மன்னன் செப்புவான்.
இதில் இந்திரர் அமிழ்தம் என்னும் சொல் மிக முக்கியமானது. இத ஆரிய-திராவிடவாத நோய்க்காரர்களுக்கு செமை அடி கொடுப்பதாகும். சங்க இலக்கியத்திலும் திருவள்ளுவர் குறளிலும் இந்த இந்திரர் அமிழ்தம் நிறைய இடங்களில் வருகிறது. கடல் கடைந்து அமிழ்தம் எத்த கதையை தமிழர்கள் தம்முடைய கதையாகவே கொண்டு சங்க இலக்கியம் முழுதும் பாடி பரவியுள்ளது அடி மேல் அடி கோடுக்கும் ஆரிய-திராவிட இன வெறியர்களுக்கு.
வாழ்க இந்திரர் அமிழ்தம்; வளர்க “இதம் ந மம”!!
You must be logged in to post a comment.