These are third class verbs, conjugated in the same way. Look at தேடு- search, மூடு- close, ஆடு dance, பாடு- sing, விளையாடு- paly etc. they are useful Tamil verbs
After the root of the verb, I have given infinitive for each verb.
தேடு- THEDU – SEARCH, GO IN SEARCH OF தேட- THEDA/ INFINITIVE- TO SEARCH ,
19 Nov 2014 — Of the three gods Brahma has amazing science behind him. We know about the cosmic rhythm in the dance of Shiva. We see the nuclear explosion …
Every Hindu believes in the doctrine and our females are not behind in their beliefs. According to a very ancient conception, the soul ascends to the abodes of …
25 Jun 2020 — Panini refers to Prajapati under the symbolical name of Ka. Patanjali says Ka is not a pronoun (who), but the proper name of a deity. Panini …
(வி-ரை.) கங்கை – நீர். வேளாளர் உழவுக்கு நீரையே விரும்பி
நிற்பார்கள் என்பதனாற் கங்கா குலத்தவர் எனப்பட்டனர். இச் செய்யுளால்
மதவேளின் தந்தை மோழை யென்றறியப்படும். புண்ணியம் – நன்மை.
வசம் – ஆதரவு. வத்திர ஆபரணம் : வத்திராபரணம் (தீர்க்கசந்தி).
கம்அறி யாக்குரு டராம்
(க-து.) நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப்
பிறர்க்கும் அளித்தல் வேண்டும்..
xxx
எனது உரை
நல்லதொரு பாடல் இது; காசு வேண்டும்; அதை நல்ல வழியில் பெற வேண்டும் ;அதை பாதுகாப்பதோடு 100 மடங்காக அதிகரிக்க சொல்லிக்கொடு; அதை அனுபவிக்க வேண்டும். பிறருக்கு தருமம் செய்து புகழ் ஈட்ட வேண்டும்.
நம்மில் பலரும் இறைவனிடம் வேண்டுவது இதுதான் . தமிழர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ; அதாவது தானும் பயன்படுத்ததாத படி, பிறரையும் அனுபவிக்க முடியாதபடி மண்ணில் புதைத்துவைத்து பின்னர் இறந்து போவான். ஒருவேளை அது பற்றி யாருக்காவது சொல்ல நினைக்கும்போது, வாயில் கடைசி விக்கல் வந்து சொல்லாமலே இறந்தும் போவான்.
மற் றொரு வகை இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை. சர்க்கரை வியாதிக்கும் (Diabetes and Heart disease) இருதய நோய்க்கும் பணக்காரர் வியாதி என்று பெயருண்டு. தனது மகன்/ மகள் கல்யாணத்தில் கூட லட்டு, அல்வாவை சாப்பிட முடியாத நிலை பெரும் பணக்காரர்களுக்கு இருப்பதை நானே பார்த்து இருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்த ஒருவருக்கு லண்டனில் 7 வீடுகள் சொந்தம்; ஆனால் இருதய நோய்; காப்பியில் பால் விடக்கூடாது; சர்க்கரையும் போடக்கூடாது . அடடா ! ஆண்டவா ! என் வாழ்க்கையில் நான் இனிமேல் எண்ணெய்க் கத்தரிக்காய் கறி சாப்பிட முடியாதே என்று சொல்லி அங்கலாய்ப்பார்
இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் அம்பலவாணர் எழுதிய அறப்பளீச்சுர சதகம் பொருளைக்கொடு ; அதை அனுபவிக்கும் உடல் நலம், மன நலம் ஆகியவற்றையும் கொடு ; அது பன்மடங்கு பெருக வேண்டும்; பிறருக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக — தான தருமம் செய்வதாக — அது இருக்கட்டும் என்று வேண்டுகிறார்.
.Xxxx
பணத்தை முதலீடு செய்யாமல் செலவிட்டால் அது கரைந்து போகும். குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது தமிழ்ப் பழமொழி ; பணத்தை 100 மடங்காக மாற் றும் வித்தை பெண்களுக்குக் கூடத் தெரியும்
TAMIL WOMAN’S REINVESTMENT PLAN
புத்திசாலி தமிழ்ப் பெண்கள்
Post No. 9445;Date uploaded in London – –1 APRIL 2021
சங்க கால தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும் (independent and business oriented) வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது சங்க காலப் பாடல்களில் இருந்து தெரிகிறது.
பெணகள் பாடுவதும் ஆடுவதும் உலகம் முழுதும் இருந்துள்ளது. அதில் வியப்பொன்றுமில்லை. இது நிறைய பாடல்களில் வருகிறது. ஆனால் பூ வியாபாரம், உப்பு வணிகம், மோர், பால் , நெய், கள் , எண்ணெய் போன்றவற்றை விற்கும் பெண்களையும் காண்கிறோம். இவைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு செய்தியை சங்க கால நூலான பெரும்பாணாற்றுப் படை (வரிகள் 154-165) அளிக்கிறது.
ஒரு ஆயர் மகள் (Yadava woman) , அதாவது இடைக்குலப் பெண், தயிரிலிருந்து வெண்ணை கடைந்து எடுத்துவிட்டு மோரை விற்கிறாள். அவளே வெண்ணையைக் காய்ச்சி நெய்யாகவும் விற்கிறாள். அந்த நெய்க்கு பண்ட மாற்றாக பொற்காசு ஒன்றை ஒருவர் கொடுக்க முன் வருகிறார். ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கு’மென்பது பழமொழி. தங்கம் என்றால் பெண்கள் சொக்கிப் போய், மயங்கி விடுவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ எனக்கு பொற் காசு வேண்டாம்.அதற்குப் பதிலாக ஒரு எருமை, ஒரு பசு , ஒரு கன்றுக்குட்டி கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறாள்.அந்த புத்திசாலிப் பெண்ணைக் கண்டு வியக்கிறோம். அவளுக்கு தங்கக் காசை வாங்கி நகை செய்து போட்டுக்கொள்ளுவதை விட தன்னுடைய வருவாயை மறு முதிலீடு (Re investment) செய்வதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது! அவளுடைய அறிவு இக்காலத்தில் MBA, M.Com. எம்.பி.ஏ. எம்.காம் படித்த பெண்ணுக்கு நிகர் என்று சொல்லத் தோன்றுகிறது.
இதோ அந்தப் பாடல் வரிகள் :–
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . . .160
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை . . . .170
—பெரும்பாணாற்றுப்படை வரிகள் 154-165
அந்தப் பெண் செய்யும் பண்ட மாற்று வணிகத்தில் (Barter Tade) நெல் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் உற்றார் உறவினர்க்கெல்லாம் உணவிடுகிறாள் என்ற செய்தியும் அப்பாடலில் வருகிறது. ஆக தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தையே நடத்திய புத்திசாலி அவள் என்பதையும் அறிகிறோம்.
****
JAIN WOMAN’S REINVESTMENT PLAN
கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை (Post No.7031)
Date: 29 SEPTEMBER 2019;Post No. 7031
சமண மத நூல்களில் நல்ல கதைகள் உள. அவை பிராக்ருத மொழியில் இருப்பதால் பிரபலமாகவில்லை. இதோ ஸ்வேதாம்பர பிரிவு சமண (ஜைன) மத நூலில் இருந்து ஒரு நல்ல கதை.
ஐந்து தானிய (நெல்) மணிகள்
முன்னொரு காலத்தில் ‘தன’ என்ற வியாபாரி அவனுடைய மனைவி ‘பட்டா’வுடன் வசித்துவதான். அவனுக்கு நான்கு மகன்கள். அவர்களுடைய பெயர்கள்–தன பாலெ, தன கோவெ, தன தேவெ, தன ரக்கியெ. அவர்கள் நால்வரும் கல்யாணம் கட்டிய பின்னர் வீட்டுக்குள் நான்கு மருமகள்கள் புகுந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்- உஜ்ஜீயா, போகவையா, ரக்கையா , ரோகிணீயா.
மகன்கள், மருமகள்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளுடைத்து. அவர்கள் பின்னர் என்ன செய்யப்போகிறார்கள், அவர்களுடைய குண நலன்கள் என்ன என்பதை விளக்கும் பிராக்ருதச் சொற்கள் அவை. பிராக்ருதம் என்பது பேச்சு மொழி; அதாவது கொச்சையான சம்ஸ்க்ருதம் ரக்ஷிதா என்பதை ரக்கையா என்பர், தேவ என்பதை தேவெ என்பர்.
தன என்னும் செல்வந்தருக்கு ஒரு கவலை வந்தது. இவ்வளவு செல்வம் சேர்த்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மருமகள்கள் இதைப் பாது காத்து வருங்கால சந்ததிக்கு வழங்க வேண்டுமே என்று கவலைப்பட்டார். மேலும் அவரும் மகன்களும், திரைகடல் ஓடித் திரவியம் தேடச் சென்றால் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திரும்பி வருவர்.
ஆகையால் வீட்டுக்கு வந்த மகராசிகளில் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஒரு சோதனை வைத்தார். நாலு மருமகள்களையும் அழைத்து ஐந்து அரிசி (நெல்) மணிகளைக் கொடுத்து இவற்றை ஜாக்கிரதையாகப் பாது காத்து வாருங்கள்; நான் திரும்பி வர ஐந்து ஆண்டுகள் ஆகும் . பின்னர் உங்களைச் சந்திக்கிறேன் என்று தானிய மணிகளைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
அவர் போனவுடன் உஜ்ஜீயா என்ற மா/நாட்டுப்பெண் (மருமகள்) அட, வீடு நிறைய சாக்கு சாக்காக நெல் கிடக்கிறது. இதை எவள் பாதுகாத்து வைப்பாள்? என்று சொல்லி ஐந்து நெல் மணிகளையும் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
அதேபோலக் கருதிய போகவையா அவைகளைத் தூக்கி எறியாமல் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டாள்.
மூன்றாவது நாட்டுப் பெண் ஆன ரக்கீயா அவகளை ஒரு நல்ல பட்டுத் துணியில் மடித்து ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பெட்டியில் வைத்து படுக்கை அறையில் தலைமாட்டில் வைத்துப் பாதுகாத்து வந்தாள்
நாலாவது மருமகளா ரோகிணி, ஐந்து நெல் மணிகளையும் வேலைக் கார்களிடம் கொடுத்து இவைகளை மிகவும் கவனமாக வளருங்கள் என்றார். அவை காய்த்துக் குலுங்கியவுடன் புதிய வித்துகளைப் பயிரிட்டாள். அவை மேலும் வளர, வளர பயிர் வளம் பெருகியது; நல்ல அறுவடையும் கிடைத்தது.
ஐந்து ஆண்டுகள் உருண்டோடின. வணிகரும் திரும்பி வந்தார். மருமகள்களை அழைத்தார். 5 தானிய மணிகளையும் கொண்டு வாருங்கள் என்றார். உஜ்ஜீயா என்ன செய்தாள் தெரியுமா? நெற் குதிரில் உள்ள தானியத்தில் ஐந்து புதிய மணிகளைக் கொணர்ந்தார். இவை நான் கொடுத்த தானிய மணிகள் என்று சத்தியம் செய்வாயா? என்று கேட்டார். அவள் பயந்துபோய் உண்மையைக் கக்கினாள். அடச் சீ நீ போ! இனிமேல் வீட்டைக் கழுவி, மெழுகி, வறட்டி தட்டும் வேலைதான் உனக்கு என்று சொல்லி அனுப்பினார்.
போகவையா, இதைப் பார்த்து பயந்து போய், தான் 5 தானிய மணிகளையும் கொடுத்த அன்றே சாப்பிட்ட உண்மையைக் கக்கினார்.
அடச் சீ நீ போ; சரியான சாப்பாட்டு ராமி நீ! இனிமேல் உனக்கு சமையல் அறை வேலைதான். தினமும் எல்லோருக்கும் சமைத்துக் கொட்டு; பாத்திரங்களைக் கழுவி, அடுப்பை மெழுகி, சமையல் அறையிலேயே வசி என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அடுத்ததாக ரக்கீயா வந்தார். படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் பாதுகாத்துவைத்த ரத்தினப் பெட்டியைக் கொணர்ந்து ஐந்து நெல் மணிகளையும் பட்டுத் துணியில் சமர்ப்பித்தார். வர்த்தகருக்கு மெத்த மகிழ்ச்சி. நீ இந்த வீட்டு பண்டக சாலை ( பொக்கிஷ அறை); அனைத்துக்கும் அதிகாரி. இந்தா, சாவி. அவைகளைப் பாதுகாப்பது உன் பொறுப்பு என்றார்.
GOOD INVESTMENT
நாலாவதாக ரோகிணி வந்தாள்- தந்தையே 5 தானிய மணிகளையும் கொணர நிறைய வண்டிகள் வேண்டும்; ஏனெனில் அவைகளைப் பயிரிட்டுப் பெருகவைத்தேன். நல்ல அறுவடை கிடைத்தது என்றார். பின்னர் வண்டி வண்டியாக, மூட்டை, மூட்டையாக தானியக் குவியல்களைக் கொணர்ந்து கொட்டினார். வியாபாரிக்கு பெரும் சந்தோஷம். நீதான் இனி இந்த வீட்டுக்கு மஹாராணி; தலைவி; குடும்பத்தை நிர்வகிக்கும் முழு அதிகாரத்தையும் உனக்குத் தருகிறேன் என்றார்.
இந்தக் கதையின் நீதி என்னவென்றால்– சமண மதத்தினர் போற்றும் அஹிம்சை, பிறர்பொருள் நயவாமை, உண்மை, பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடாமை, கெட்ட வழிகளில் செல்வம் சேர்க்காமை ஆகிய ஐந்து கொள்கைகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களே பெரும் பேறு அடைவர் என்பதாம்.
xxxxx
நாய் பெற்றதெங்கம் பழம்
பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.
அதாவது,
“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.
4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்
நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.
xxx
நல்ல வழியில் ஈட்டாத பொருள் பற்றி திரு வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்:
வினைத் தூய்மை
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (குறள் – 656)
தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது
பலர் ஏன் திருடுகின்றனர் என்ற கதைகளில் ஒருவர் துன்பத்தைத்த துடைப்பதற்காக அவர்கள் திருடினார்கள், கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். அது தவறு என்று வள்ளுவன் சொல்லிவிட்டான் .
இன்னும் பலர் மற்றவர்களை அழவைத்து பொருளைச் சேர்க்கிறார்கள்; அப்படிப்பட்ட செல்வம் அவர்களை அழ , அழ வைத்துவிட்டுப் போய்விடும் என்றும் வள்ளுவன் செப்புவான்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ( – 659)
பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்;
தீய வழிகளில் சேர்த்த செல்வத்தைக் காப்பாற்றவும் முடியாது; பச்சை மண்கலத்தில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது போன்றது அது என்று வள்ளுவன் சொல்லும் உவமை சாலப்பொருந்தும்
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. ( 660)
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
Xxxx
ஈயென்று ஒருவர்
ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்– என்று அருட் பிரகாச வள்ளளார் வேண்டுகிறார் .
xxxx
தான, தருமம் பற்றிய பொன்மொழிகள்
தானத்தின் இலக்கணம்
அநந்தஸ்ரூணி ரோமானி பஹுமானம் ப்ரியம் வச:
கிஞ்சானுமோதனம் தானம் தான் பூஷண பஞ்சகம்.
ஆநந்தஸ்ரூணி – தானம் கொடுத்தபின் ஆநந்தக் கண்ணீர்,
ரோமாணி – மயிர்க்கூச்சம் எடுத்தல்,
பஹுமானம் – மரியாதை காட்டல்,
ப்ரியம் வச: – பிரியமான சொற்களைச் செப்பல்,
அனுமோதனம் – தானத்தை மறுக்காமல் ஏற்றல்
xxx
நல்ல தானம் (சாத்விகம்) எது?
தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)
தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே
தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்
இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்
நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.
அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.
Xxx
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.
ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).
புறநானூற்றில் தானம்
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;
என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (புறம் 184)
அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.
Xxx subham xxxx
Tags-பொருள் ,தேடுதல் ,ஈட்டல், தகனம், தருமம், முதலீடு , கதைகள் , தமிழ்ப் பெண் , சமண பெண்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரதச் செல்வம்
காம கீதா!
ஆசை வெல்லுதற்கரியது! அதை வெல்லும் உபாயம் என்ன?
ச.நாகராஜன்
மஹாபாரதத்தில் 14வது பர்வமாக அமையும் ஆஸ்வமேதிக பர்வத்தில் பதிமூன்றாவது அத்தியாயம் ஆசையை வெல்லுவது கஷ்டம் என்றும் அதை எப்படி வெல்வது என்பதையும் கூறுகிறது.
மாதவர், யுதிஷ்டிரருக்கு இந்த ரகசியத்தைக் கூறுகிறார்.
இது ‘காம கீதா’ என்று அழைக்கப்படுகிறது.
மாதவர் தர்மபுத்திரரிடம் கூறுகிறார் இப்படி : யுதிஷ்டிரரே! இந்த (ஆசை) விஷயத்தில் பூர்வ விருத்தாந்தம் தெரிந்தவர்கள் காமனால் பாடப்பட்ட காதைகளைச் சொல்லுகின்றனர். அவைகளை முழுதும் சொல்கிறேன் கேள்”
எவன் என்னைப் பலவித தக்ஷிணைகள் உள்ள யாகங்களால் கொல்ல முயற்சிக்கிறானோ, தர்மாத்வானவன் ஜங்கமங்களுள் (உயர்ந்த ஜாதியில்) பிறப்பது போல நான் மறுபடியும் அவனுடைய (சித்தத்தில்) தோன்றுகிறேன்.
எவன் என்னை வேதங்களாலும், வேதாந்தத்தில் சொல்லிய சாதனங்களாலும் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனிடத்தில் ஜீவன் ஸ்தாவரங்களில் தோன்றுவது போல நான் தோன்றுகிறேன்.
உண்மையான பராக்ரமுள்ள எவன் ஒருவன் என்னை தைரியத்தினால் கொல்ல முயற்சி செய்கிறானோ, அவனுடைய சித்தமாக நான் ஆகிறேன். அவனும் என்னைத் தெரிந்து கொள்வதில்லை.
கடுமையான விரதமுள்ள எவன் ஒருவன் என்னைத் தவத்தினால் கொல்ல முயற்சிக்கிறானோ, அவனுடைய தவத்தில், பிறகு நான் மறுபடியும் தோன்றுகிறேன்.
யோ மாம் ப்ரயததே ஹந்தும் மோக்ஷமாஸ்தாய பண்டித: |
தஸ்ய மோக்ஷரதிஸ்தஸ்ய ந்ருத்யாமி ச ஹசாமி ச |
அவத்ய: சர்வபூதானாமஹமேக: சனாதன: || (ஸ்லோகம் 18)
எந்தப் பண்டிதன் மோக்ஷத்தைக் கருதி என்னைக் கொல்ல விரும்புகிறானோ, மோக்ஷத்தில் ஆசையுள்ள அவனிடத்தில் நான் நர்த்தனம் செய்கிறேன். நகைக்கிறேன்.”
எப்போதுமுள்ள நான் ஒருவனே ஒரு பிராணியினாலும் கொல்ல முடியாதவன்.
ஆக, நாம் ஒருவனாலும் கொல்ல முடியாதவன் என்று காமன் கூறும் இந்த காம கீதையை உணர்வோர் நிச்சயம் திடுக்கிடுவர்.
ஆகவே இந்த ஆசையை வெல்வது எப்படி என்பதை மாதவர் கூறுவது மிக முக்கியமானதாக ஆகிறது!
“மம (என்னுடையது என்று பொருள்) என்னும் இரண்டு அக்ஷரம் சம்சாரத்திற்குக் காரணமாகும்.
ந மம (என்னுடையதன்று என்று பொருள்) என்பது சாஸ்வதமான பிரம்மத்தை அடையக் காரணம் ஆகும்.
பண்டித யோகியான ஒருவன் மனிதன் பயனில் ஆசைப்படுவது தர்மமன்று; ஆசையை அடக்குவது தான் தர்மம். அதுவே மோக்ஷத்திற்குக் காரணம் என்று ஆலோசித்துத் தெரிந்து கொண்டு அடக்குகிறான்.”
இது தான் மாதவர் விண்டு உரைக்கும் ரகசியம்.
‘எந்த கர்மத்தைச் செய்தாலும் அதில் பயன் பற்றி நினையாதே; பயன் கருதாது கர்மத்தைச் செய்!’ என்பது தான் மொத்த சாரம்!
மஹாபாரதம் மானிட உலகிற்குத் தரும் மிகப் பெரும் ரகசிய செய்தி இது தான்!
***
புத்தக அறிமுகம் 127
கடவுளைக் காட்டு!
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
1. கடவுளைக் காட்டு – 1 2. கடவுளைக் காட்டு – 2 3. கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை என்பதை நிரூபி! 4. கடவுளுக்கு சவால்! குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை! 5. கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்! 6. இறைவன் இருக்கிறான்! – அறிவியல் தரும் ஆதாரங்கள்! 7. இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!) 8. கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்! 9. கடவுள் எங்கே? – 1 10. கடவுள் எங்கே – 2 11.கம்ப்யூட்டர் கடவுளே சரணம்! 12. இறைவன் பற்றிய இரகசியங்கள்! 13. கடவுளும் கம்ப்யூட்டரும் 14. மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்! 15. கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று! 16. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு! 17. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி! 18. நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது? 19. காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்! 20. காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்! 21.பிரார்த்தனையின்சிறப்பு22. பிரார்த்தனை செய்வது எப்படி? 23. மொத்தம் எத்தனை கடவுள்? 24. கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை! 25. லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!! 26. தர்ம விளக்கம்! 27. ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? 28. இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே! 29. தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர்மூடர்! 30. உண்மை ஒன்றே!
*
நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :
என்னுரை
மனித வாழ்க்கையில் எழும் சிக்கலான கேள்விகள் பல!
அவற்றில் முக்கியமான சில : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? – இப்படிப் பல கேள்விகள்.
இவற்றிற்கு அருளாளர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் அவ்வப்பொழுது விடை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் அறிவியல் யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
அறிவியலில் தங்கள் தங்கள் சோதனைச்சாலைக்கு ஏற்ப கடவுளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் விஞ்ஞானிகள். அவர்களில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.
அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளைத் தொகுத்துத் தருகிறது இந்த நூல்.
கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இந்த நூல் தருகிறது.
“Burn worldly love, rub the ashes and make ink of it,
make the heart the pen, the intellect the writer,
write that which has no end or limit.” ― Guru Nanak, Sri Guru Granth Sahib
xxxx
DECEMBER 2 FRIDAY
“He who has no faith in himself can never have faith in God.”
Xxxx
DECEMBER 3 SATURDAY
“Even Kings and emperors with heaps of wealth and vast dominion cannot compare with an ant filled with the love of God.”
Xxxx
DECEMBER 4 SUNDAY
“Dwell in peace in the home of your own being, and the Messenger of Death will not be able to touch you.”― Guru Nanak
Xxxx
DECEMBER 5 MONDAY
“The world is a drama, staged in a dream”
Xxxx
DECEMBER 6 TUESDAY
“For each and every person, our Lord and Master provides sustenance. Why are you so afraid, O mind? The flamingos fly hundreds of miles, leaving their young ones behind. Who feeds them, and who teaches them to feed themselves? Have you ever thought of this in your mind?”
Xxxx
DECEMBER 7 WEDNESDAY
“Speak only that which will bring you honour.”
xxxx
DECEMBER 8 THURSDAY
“He who regards all men as equals is religious.”― Guru Nanak
Xxxx
DECEMBER 9 FRIDAY
“Nanak, the whole world is in distress. He, who believes in the Name, becomes victorious.”― Guru Nanak, Sri Guru Granth Sahib
Xxxx
DECEMBER 10 SATURDAY
“Whatever kind of seed is sown in a field, prepared in due season, a plant of that same kind, marked with the peculiar qualities of the seed, springs up in it.”
Xxxx
DECEMBER 11 SUNDAY
“those who have loved are those that have found God”
― Guru Nanak
xxxx
DECEMBER 12 MONDAY
“In this world when you ask of happiness
Pain steps forward”― Guru Nanak
Xxxx
DECEMBER 13 TUESDAY
“Wherever the Protector of all keeps me, there is heaven.”
Xxxx
DECEMBER 14 WEDNESDAY
“Realization of Truth is higher than all else. Higher still is truthful living.”
XXXX
DECEMBER 15 THURSDAY
Riches cannot be gathered without sin and evil means.
Xxxx
DECEMBER 16 FRIDAY
Through shallow intellect, the mind becomes shallow, and one eats the fly, along with the sweets.
Xxxxx
DECEMBER 17 SATURDAY
“Your Mercy is my social status.”
― Guru Nanak, Sri Guru Granth Sahib
XXXX
DECEMBER 18 SUNDAY
One cannot comprehend Him through reason, even if one reasoned for ages.
Xxxx
DECEMBER 19 MONDAY
Let no man in the world live in delusion. Without a Guru none can cross over to the other shore.
Xxxx
DECEMBER 20 TUESDAY
Alone let him constantly meditate in solitude on that which is salutary for his soul, for he who meditates in solitude attains supreme bliss.
Xxxx
DECEMBER 21 WEDNESDAY
Sing the songs of joy to the Lord, serve the Name of the Lord, and become the servant of His servants
xxxxx
DECEMBER 22 THURSDAY
I bow at His Feet constantly, and pray to Him, the Guru, the True Guru, has shown me the Way.
Xxxx
DECEMBER 23 FRIDAY
I am not the born; how can there be either birth or death for me?
xxxx
DECEMBER 24 SATURDAY
“What should the yogi have to fear? Trees, plants, and all that is inside and outside, is He Himself”― Guru Nanak, Sri Guru Granth Sahib
xxxx
DECEMBER 25 SUNDAY
“I am neither a child, a young man, nor an ancient; nor am I of any caste.”
xxxx
DECEMBER 26 MONDAY
“Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.”
XXXX
DECEMBER 27 TUESDAY
“Death would not be called bad, O people, if one knew how to truely die.”
XXXX
DECEMBER 28 WEDNESDAY
“I am neither male nor female, nor am I sexless. I am the Peaceful One, whose form is self-effulgent, powerful radiance.”
XXXX
DECEMBER 29 THURSDAY
“There is but One God, His name is Truth, He is the Creator, He fears none, he is without hate, He never dies, He is beyond the cycle of births and death, He is self illuminated, He is realized by the kindness of the True Guru.
xxxx
DECEMBER 30 FRIDAY
He was True in the beginning, He was True when the ages commenced and has ever been True, He is also True now.”― Guru Nanak
XXX
Gita Jayanthi in December.
DECEMBER 31 SATURDAY
By His order some obtain their reward; by His order others must ever wander in transmigration. All are subject to His order; none is exempt from it. He who understands God’s order, O Nanak, is never guilty of egoism.
XXXX SUBHAM XXXX
Tags― Guru Nanak, Quotes, Amritsar, Sikh Religion, Guru Grantha Sahib, Golden Temple
உலக பந்த பாசத்தைப் பொசுக்குங்கள் ; அந்த சாம்பலைக் குழைத்து மை தயாரியுங்கள் ; உங்கள் இதயமே எழுதுகோலாக ஆகட்டும் ;உங்கள் புத்தி எழுத்தர் ஆகட்டும்;ஆதி அந்தமற்ற அவனை எழுதுங்கள் – ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் எனப்படும் ஆதிக் கிரந்தத்தில் குரு நானக்ஜி சொன்னது
Xxxx
டிசம்பர் 2 வெள்ளி கிழமை
தன்னையே நம்பாதவனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை ஏற்படாது (தன்னம்பிக்கை அவசியம்)
Xxxx
டிசம்பர் 3 சனிக் கிழமை
மஹத்தான சாம்ராஜ்யமும், மலைபோலச் செல்வமும் உடைய அரசன் கூட இறைவனின் அன்பு நிரம்பிய எறும்புக்கும் சமம் ஆக மாட்டான்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை
உங்கள் உள்ளத்தில் சாந்தி நிலவ வாழுங்கள்; மரண தூதன் உங்களைத் தொட்டே முடியாது – குரு நானக்
Xxxx
டிசம்பர் 5 திங்கட் கிழமை
உலகமே நாடகம்; கனவில் நாடகம் நடக்கிறது. – குரு நானக்
Xxxx
டிசம்பர் 6 செவ்வாய்க் கிழமை
நம் ஒவ்வொருவனுக்கும் இறைவன் படி அளக்கிறான் ; மனமே! என் கவலைப் படுகிறாய்?செங்கால் நாரைகள் தனது குஞ்சுகளை விட்டு விட்டு பல நூறு மைல்கள் பறக்கவில்லையா! அவைகளுக்கு உணவளிப்பது யார்? உண்ணக் கற்றுக்கொடுத்தது யார்? எப்போதாவது இதை எண்ணிப் பார்த்தாயா ? – குரு நானக்
xxxx
டிசம்பர் 7 புதன் கிழமை
எல்லோரையும் சமமாக நடத்துவோனே மதத்தைப் பின்பற்றுவோன் ஆவான்
xxxx
டிசம்பர் 8 வியாழக் கிழமை
உனக்கு மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்தும் சொற்களை மட்டும் செப்பு
Xxxx
டிசம்பர் 9 வெள்ளி கிழமை
நானக், உலகமே துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.அவனுடைய பெயரில் நம்பிக்கை உடைவான் வெற்றி அடைகிறான்
Xxxx
டிசம்பர் 10 சனிக் கிழமை
ஒருவன் எதை விதைத்து , பருவத்தில் பாசனம் செய்கிறானோ அதே பயிர் அந்த கணங்களி உடைய விதைகளுடனே முளைக்கும்
Xxxx
டிசம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
இந்த உலகில் நாம் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் துன்பமே முன்னுக்கு வந்து நிற்கிறது.
xxx
டிசம்பர் 12 திங்கட் கிழமை
யார் அன்புடன் வாழ்கிறார்களோ அவர்களே இறைவனைக் கண்டவர்கள் ஆவர்.
xxxx
டிசம்பர் 13 செவ்வாய்க் கிழமை
எல்லாம் வல்லவன் என்னை எங்கு வைக்கிறானோ, அதுவே எனக்கு சொர்க்கம்
Xxxx
டிசம்பர் 14 புதன் கிழமை
சத்தியத்தை (இறைவன்) உணர்வதே எல்லாவற்றையும் விட மேலானது ; அதையும் வீட்டா மேலானது நேர்மையான வாழ்க்கை .
XXXX
டிசம்பர் 15 வியாழக் கிழமை
பாவத்தின் மூலமும் தீய வழிகள் மூலமுமே செல்வத்தைச் சேர்க்கமுடியும்.
Xxxx
டிசம்பர் 16 வெள்ளி கிழமை
வறட்டு புத்தியினால் மனமும் வறண்டு விடுகிறது. அப்போது இனிப்புடன் அதில் உட்கார்ந்த ஈயையும் சேர்த்தது உண்டுவிடுகிறான்.
xxxx
டிசம்பர் 17 சனிக் கிழமை
இறைவா, நீ என் மீது பொழியும் கருணைதான் எனக்குக் கிடைத்த சமூக அந்தஸ்து
XXXX
டிசம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை
யாரும் மாயையில் உழலவேண்டாம் ; குரு இல்லாமல் மறு கறைக்குச் செல்ல முடியாது
Xxxx
டிசம்பர் 19 திங்கட் கிழமை
ஒருவன் தன்னந்தனியாக அவனது ஆன்ம தாகத் தைத் திடீர்ப்பவன் குறித்து தியானிப்பானாக ; தனியாக தியானிப்பவனே பரம ஆனந்தத்தை அடைகிறான்
XXXX
டிசம்பர் 20 செவ்வாய்க் கிழமை
ஆண்டாண்டுக்கு காலம் சிந்தித்தாலும் விசாரணை/ஆராய்சசி மூலம் அறியக்கூடியவன் அல்ல ஆண்டவன்
Xxxx
டிசம்பர் 21 புதன் கிழமை
ஆண்டவனிடம் அவன் புகழை மகிழ்ச்சியோடு பாடுங்கள் ; அவன் பெயர்கண்ட இடத்த்தில் சேவை செய்யுங்கள்; அடியார்க்கு அடியாராக மாறுங்கள்
Xxxxx
டிசம்பர் 22 வியாழக் கிழமை
நான் எப்போதும் அவன் பாதம் பணிகின்றேன் ; எப்போதும் குருவினைப் பிரார்த்திக்கிறேன்; ; உண்மையான குரு , அவன், எனக்கு வழிகாட்டிவிட்டான் .Xxxx
டிசம்பர் 23 வெள்ளி கிழமை
நான் பிறக்கவே இல்லை; எனக்கு மரணமும் பிறவியும் ஒரு பொருட்டல்லவே
xxxx
டிசம்பர் 24 சனிக் கிழமை
யோகியானவன் எதைக் கண்டு பயப்படுவான்? மரங்கள், செடி கொடிகள் ஆகிய அனைத்தின் உள்ளும் புறமும் அவன்தானே இருக்கிறான்.
Xxxx
டிசம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை
நான் குழந்தையும் அல்ல; இளைஞனும் அல்ல; புராதன புருஷனும் அல்லன் ; எனக்கு ஜாதி ஏதும் இல்லை
xxxx
டிசம்பர் 26 திங்கட் கிழமை
அறியாமை காரணமாக கயிற்றைப் பாம்பாகப் பார்க்கிறான் ;அவ்வாறே நம் ஆன்மாவையும் அழியக் கூடியதாக , நம்முடையதாக, வரையரை க்குட் பட்டதாகக் கருதுகிறோம்.
“டிசம்பர் 27 செவ்வாய்க் கிழமை
உண்மையாக மரணம் எய்தும் முறையை அறிந்துவிட்டால், யாரும் மரணத்தைக் குறை சொல்லமாட்டார்கள்
XXXX
டிசம்பர் 28 புதன் கிழமை
நான் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல.நான் சாந்தமே வடிவானவன்; சுயம் பிரகாசி; ஒளியோடு பிரகாசிக்கிறேன்
XXXX
டிசம்பர் 29 வியாழக் கிழமை
கடவுள் ஒருவனே; அவன் பெயர் சத்தியம்; அவனே நம்மைப் படைத்தவன்; யார்க்கும் அஞ்சாதவன்,வெறுப்பற்றவன்; பிறப்பு இறப்பு எனும் சுழற்சிக்கு அப்பாற்பட்டவன்; அவன் சுயம் பிரகாசி; உண்மையான குருவின் அருள் கிடைத்தால் அவனை அறியலாம்.
xxxx
Golden Temple at Amritsar அமிர்தசரஸ் பொற்கோவில்
டிசம்பர் 30 வெள்ளி கிழமை
இந்த யுகம் தோன்றியபோதும் யுகம் பெருகியபோதும்,இப்போதும் எப்போதும் உண்மைப் பொருளாக விளளங்குபவன் அவன்
XXX
டிசம்பர் 31 சனிக் கிழமை
அவன் அருளாலே சிலருக்கு பரிசு கிடைக்கிறது ; அவன் கட்டளையினால் பலர் பிறப்புச் சுழலில் சிக்குகிறார்கள்;; எல்லோரும் அவன் கட்டளைக்குட் பட்டவர்களே; எவரும் விதி விலக்கல்ல ; ஆண்டவன் கட்டளையை அறிந்தவர்களுக்கு அஹம்காரம் வராது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி
ராமாயணத்தில் நதிகள் – 4
ச.நாகராஜன்
கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:
2. கௌசிகி
கௌசிகி நதி பற்றிய பாடல்கள் சில பிரதிகளில் இல்ல. வை,மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் பதிப்பில் பால காண்டத்தில், 8வது படலமாக அமையும் வேள்விப் படலத்தில் கௌசிகி நதியின் வரலாறு 10 பாடல்களில் சொல்லப்படுகிறது.
ஆனால் மர்ரே அண்டு கம்பெனி சென்னை -1 – 1958 பதிப்பிலோ இந்தப் பாடல்கள் மிகைப் பாடல்களாகத் தரப்படுகின்றன.
கௌசிகி நதியின் வரலாறைப் பார்ப்போம்.
‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?’ – தேவர்கள் வணங்கித் துதிக்கத் தக்க பரிசுத்தி உடைய இந்த நதி எத்தன்மையது?’ – என்று ராமர் விஸ்வாமித்திரரைப் பார்த்துக் கேட்க அவர் கௌசிகி நதியின் வரலாறை விரிவாகச் சொல்கிறார்.
குசன் என்ற அரசனுக்கு அவன் பத்தினியிடத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். குசன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்பது இவர்கள் பெயர்கள். குசநாபனுக்கு நூறு பெண்கள் பிறந்தனர். அவர்கள் ஒரு நாள் சோலையில் சென்று விளையாடினர். அச்சமயம் அவர்களை வாயுதேவன் பார்த்தான். அவர்களால் கவரப்பட்டான். தன்னை மணந்து கொள்ளும்படி வாயுதேவன் கூற கன்னியரோ எனது தந்தையிடம் சொல்க என்றனர். இதனால் கோபித்த வாயுதேவன் அவர்களின் முதுகுகளைக் கூனாகும்படி ஒடித்தான். கன்னியர் நடந்த விஷயத்தைத் தந்தையிடம் கூறினர்.
குசநாபன் தனது மந்திரிகளுடன் ஆலோசித்து அவர்களை சூளி என்னும் மஹரிஷியின் புத்திரனான பிரமதத்தன் என்பவனுக்கு, கன்னிகாதானம் செய்து மணம் முடித்து வைத்தான்.
பிரமதத்தன் அந்த கன்னியரின் கரங்களைத் தொட அவர்கள் கூன் நிமிர்ந்து தங்கள் பழைய அழகைப் பெற்றனர்.
இதனால் மனம் மிக மகிழ்ந்தான் குசநாபன். ஆனால் தனக்கு மகன் ஒருவன் இல்லையே என்ற எண்ணம் தோன்ற அவன் புத்திரகாம யாகம் ஒன்றைச் செய்தான். அந்த அக்கினியிலிருந்து காதி என்பவன் தோன்றினான்.
குசநாபன் தன் மகனான காதிக்கு முடிசூட்டி, பின்னர் சுவர்க்க லோகம் அடைந்தான்.
காதிக்கு, கௌசிகி என்னும் பெண்ணும் விஸ்வாமித்திரரும் பிறந்தனர்.
பிருகு முனிவரின் மகனான ரிசீகன் கௌசிகியை மணந்தான்.
மேன்மையான தவத்தைச் செய்த ரிசீகன் பிரமலோகம் செல்ல ஆரம்பித்தான்.
தனது கணவனான ரிசீகன் ஆகாயமார்க்கமாகச் செல்வதைக் கண்ட கௌசிகி அதைப் பொறுக்க மாட்டாமல் ஒரு நதியின் ரூபம் தரித்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவளைக் கண்ட ரிசீகன், “உலக ஜனங்களின் துன்பங்கள் அனைத்தும் உன்னிடத்தில் மூழ்கும் போது ஒழிந்து போகும். இதே ஆற்றின் ரூபமாகவே பூலோகம் செல்வாயாக” என்று கூறினான். பின்னர் ரிசீகன் பிரமலோகம் சென்றான்.
இந்த வரலாறைச் சொன்ன விஸ்வாமித்திரர், ‘சுவர்க்கத்திலிருந்து மீண்ட கௌசிகி இமயமலையிலிருந்து பெரும் நதியாகப் பெருக, அவளது உடன் பிறந்த தொடர்பால் நான் அந்த மலையில் வசிப்பவன் ஆனேன். இப்போது வேள்விக்காக சித்தாஸ்ரமத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறி முடித்தார்.
‘எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்’ – எனக்கு முன் பிறந்தவளாகிய பெண்களில் சிறந்த கௌசிகி என்பவள் இந்தப் பெரிய ஆற்றின் வடிவமாக ஆயினாள் – என்று விஸ்வாமித்திரர் முடிக்க அதைக் கேட்ட ராமர் ‘அதிசயம் மிகவும் தோன்ற’ – மனதிலே மிகவும் வியப்பு உண்டாக – மேலே லட்சுமணனுடன் நடக்கலானார்.
அற்புதமான இந்த கௌசிகி நதியின் வரலாறு அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.
இந்த நதி நேபாளத்தின் முக்கிய நதியாகத் திகழ்கிறது. நேபாளத்தில் மட்டும் 6000 நதிகள் ஓடுகின்றன.’
கௌசிகி என்னும் புனித நதியையும் கொண்டு, நீர் வளத்தில் உலகின் இரண்டாவது பெரும் நாடாகத் திகழும் நேபாளத்தைப் போற்றுவோம்.
*
புத்தக அறிமுகம் 126
அறிவியல் துளிகள் – பாகம் 18
பொருளடக்கம்
என்னுரைஅத்தியாயங்கள் 443) அறிவியல் வியக்கும் யோகா! 444) சாடலைட்டுகளையும் ஹாக் செய்யும் அபாயம்! 445) வாபி சாபி – வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றைக் கற்றுக்
கொள்வோம்! 446) அறிவியலில் சாதனை புரிந்த அபூர்வப் பெண்மணிகள்! 447. கொரோனா பற்றி அறிவியல் புனைகதைகள் முன்பே சொல்லி
விட்டனவா?! 448. ப்ரூஸ் லீயின் பத்துக் கட்டளைகள்! 449. ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்! 450. ISBN அதிசயம் 451. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1 452. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 2 453. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3 454. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4 455. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5 456. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6
457. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7 458. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8
459. பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் 460. கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்! 461.ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்! 462. ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!! 463. விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்! 464. விண்வெளி ஏகு முன் ரஷிய விண்வெளி வீரர்கள் கடைப்பிடிக்கும்
சில பாரம்பரியப் பழக்கங்கள்!
465. விண்கலம் ஏகும் போது அமெரிக்க வீரர்களின் பாரம்பரியப்
பழக்கங்கள்! 466. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 1 467. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 2 468. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 3 469. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 4 470. மரணத்தை வெல்லும் மனித குலம்! – விஞ்ஞானியின் இன்ப
அதிர்ச்சிக் கணிப்பு!!
என்னுரை
அறிவியல் துளிகள் வரிசையில் இறுதி பாகமாக அமையும் இந்த பதினெட்டாம் பாகத்தை தமிழ் உலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்..
அறிவியல் கடலில் சில துளிகளை சுட்டிக் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த முன்னூறு ஆண்டு வரலாற்றைப் பார்க்கும் போது அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்றாக அமைகிறது.
962 அறிஞர்கள் 1901ஆம் ஆண்டு முதல் 2020 முடிய நோபல் பரிசைப் பெற்றிருக்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் அமெரிக்க பேடண்ட் அலுவலகம் 3,75,000 விண்ணப்பங்களை வருடம் தோறும் பெறுகிறது! 20 லட்சம் ஆவணங்களை வருடம் தோறும் பெறுகிறது;
1883ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய உள்ள 126 ஆண்டுகளில் சுமார் 71,76,477 அமெரிக்க பேடண்டுகள் வழங்கப்பட்டுள்ளன!
அறிவியலில் எத்தனை கிளைகள் உள்ளன என்று பார்த்தால் மலைக்க வைக்கும் எழுநூறுக்கும் மேற்பட்ட துறைகளை இணையதளத்தில் பார்க்க முடிகிறது.
இந்த விஞ்ஞான வளர்ச்சியில் 90 சதவிகிதம் சமீப காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிகிறோம்.
இது அறிவு சார்ந்த ஒரு புதிய உலகத்தில் நாம் வாழ்வதைக் காட்டுகிறது.
P.Hd பட்டம் பெற்றவர்கள் உலகளாவிய விதத்தில் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக ஆகி விட்டது. என்றாலும் கூட ஃபெர்மி மதிப்பீட்டின் படி (Fermi Estimate) பத்து லட்சம் பேர்கள் இந்த உயரிய ஆய்வுப் பட்டத்தை இப்போது பெற்றுள்ளனர் என்பதை இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது.
ஆகவே வளர்ந்து விட்ட ஒரு மாபெரும் அறிவியல் உலகில் நாமும் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கேற்ப வளர வேண்டி இருக்கிறது. இந்த அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களில் முக்கியமானவற்றை கவனக்குறைவினாலோ, அசட்டையாலோ, வேண்டுமென்றோ ஒதுக்கினால் நாம் நடைமுறை உலகியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாவோம். முன்னேறுவது கஷ்டம்!
அனைத்தையும் அறிதல் முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சமாக அடிப்படையான விவரங்களை அறிதல் இன்றியமையாதது.
அந்த வகையில் அறிவியல் துளிகளின் 18 பாகங்களும் பல முக்கிய விஷயங்களைத் தருவதோடு அறிவியலில் ஒரு ஆர்வத்தைத் தூண்டி மேலும் பல புதிய விஷயங்களை அறிய அனைவரையும் தூண்டும் என நம்புகிறேன்.
எனது அறிவியல் கட்டுரைகளத் தொடர்ந்து வெளியிட்ட, டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
அத்துடன் ஹெல்த்கேர், முதல் ஓசை, கோகுலம் கதிர் உள்ளிட்ட பல பத்திரிகைகளும் எனது அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
திரு ஆர்.சி. ராஜா (ஹெல்த்கேர்), முதல் ஓசை (திரு தென்னவன் பாலு), திருமதி கமலி ஶ்ரீபால் (கோகுலம் கதிர்) ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.
தொடர்ந்து எனது அறிவியல் கட்டுரைகளை www.tamilandvedas.comஇல் வெளியிட்டு வரும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
அறிவியல் துளிகள் முதல் பாகத்திற்கு அணிந்துரை நல்கிய நம் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான திரு கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது நன்றி.
பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து தந்த ஆதரவினாலும், வாழ்த்துக்களாலும் உத்வேகம் பெற்று இந்த பதினெட்டு பாகங்களைப் படைக்க முடிந்தது. என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோச.நாகராஜன் 21-9-2022
·
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
உபதேசமது பெற விரும்புவோர் சற் சீடர்ஆம் – அறிவுபெற விழைவோர்
நல்ல மாணாக்கராவர், அவர்க்கு வினைவேர் அறும்படி அருள்
செய்திடுவதே மிக்க தேசிகரது கடன் – அவர்களுக்கு வினையின் வேர்
கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
ஒரு நல்ல மாணவன் யார் என்பதை விளக்கும் பாடல் இது. ஆன்மீக ஒளியை அடைய விரும்பும் குரு -சிஷ்யர்களுக்கு மட்டும் இது என்று நினைத்து விடக்கூடாது. பொதுவாகவே குரு குல வாசத்தில் இந்த விதிகள்தான் பின்பற்றப்பட்டன. இதற்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுகள் இந்து மத இதிஹாச புராணங்களில் உள. ஏகலைவன் என்பவன் அரசற்கு மட்டுமே உரித்தான ஆயுதப் பயிற்சிகளை மறைவாக நின்று பயின்றான். இதை அறிந்த துரோணர், இப்படிக் கற்றதானால் நீ குருதட்சிணை கொடுதாக வேண்டும் என்றவுடன் அவன், கட்டை விரலையே தட்சிணையாகக் கொடுத்தான். அதனால் அவனை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவுகூறுகிறோம்.அந்த அளவுக்கு குரு பக்தி இருந்தது.
மஹாபாரதத்தில் குரு பக்திக்கு மேலும் சில உதாரணங்கள் கிடைக்கும்;குருவே ! உங்களுக்கு என்ன தட்சிணை வேண்டும்? என்று கேட்டவுடன் என்னை அவமானப்படுத்திய பஞ்சாப் மன்னன் துருபதனை இழுத்துக்கொண்டுவா என்று துரோணர் சொன்னவுடன் அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்தான் அர்ஜுனன்.
xxx
குரு குலக் கல்வியில், ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தவுடன், மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவர் இருக்கையில் உட் கார்ந்த பின்னர், மாணவர்களும் அமர்ந்துகொண்டு, குருர் பிரம்மா — என்ற மந்திரத்தைச் சொல்லி, ஆசிரியரே மும்மூர்த்திகளுக்குச் சமமானவர் என்று வாழ்த்துவர் (நேற்றைய பதிவில் இந்த மந்திரத்தைக் கொடுத்துள்ளேன் )
பின்னர் வேத/ உபநிஷத மந்திரமான ஸஹ நாவவது – மந்திரத்தைச்ச்சொல்லுவார்கள் . அதன் பொருள் பின் வருமாறு
ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ॐ सह नाववतु ।
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Saha Naav[au]-Avatu | ஓம்! ஆசிரியரும் மாணவருமாகிய நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம்
Saha Nau Bhunaktu |நாம் கூட்டாக இணைந்து இதில் சிறப்பு அடைவோம்
Saha Viiryam Karavaavahai | கூட்டாக மிகுந்த உற்சாகத்துடன் இதைச் செய்வோம்
Tejasvi Naav[au]-Adhiitam-Astu |நாம் கற்பது பிரகாசிக்கட்டும் ;(ஒளி பெற்று விளங்கட்டும் )
Maa Vidvissaavahai- நம் இருவர் இடையே வெறுப்போ, பகைமையோ தோன்றாமல் இருக்கட்டும்
Om Shaantih Shaantih Shaantih || உள்ளத்தில் சாந்தி நிலவட்டும், சுற்றுப்புற த்திலும் அமைதி நிலவட்டும் ;உலகெங்கும் அமைதி நிலவட்டும்.
xxx
‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையானகதை!
Article written by London swaminathan
Post No. 1780; Date 6th April 2015
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்
ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.
கற்றவனுக்கு அடையாளம் என்ன?
ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.
நல்ல மாணவர்கள் பசி நோக்கார்
அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.
இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாளை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.
குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.
மெய் வருத்தம் பாரார்
இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.
“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.
குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”
குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.
xxx
ஆதிசங்கரர் இயற்றிய குரு பாதுகா அஷ்டகம் ,மேற்கண்ட பாடலில் உள்ள கருத்துக்களையே சொல்கிறது.
மாணவர் ஆற்றுப்படை
பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் 1900ம் ஆண்டில் எழுதிய 335 வரிகளைக் கொண்ட மாணாக்கர் ஆற்றுப்படை நூலையும் நான் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டேன் . ஒரு நல்ல மாணவன் எப்படி வெற்றி பெற்றான் என்று கூறும் நூல் அது..
வால்மீகி ராமாயணத்தில் மாமுனிவர் வால்மீகி நதிகளை நன்கு சித்தரித்துக் கொண்டாடி அவற்றின் புனிதத்தை நமக்குக் காட்டுகிறார் எனில் தமிழில் கம்பன் நதிகளைச் சித்தரித்து அவற்றின் புனிதத்தையும் பெருமையையும் கொண்டாடும் விதமோ தனி தான்! அதன் மூலமாக நதிகளின் பெருமையைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்!
அற்புதமான கவிதை மழைகளைக் கொட்டுகிறான் கம்பன் நதிகள் விஷயத்தில்.
அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்:
1. சரயு
கம்ப ராமாயணத்தின் ஆரம்பமே ஆற்றுப் படலத்தில் தான் ஆரம்பிக்கிறது.
பால காண்டத்தின் முதல் படலம் : ஆற்றுப் படலம்.
இதில் அழகான 20 செய்யுள்கள் உள்ளன.
ராமாயணத்தின் முதல் பாடலிலேயே ‘ஆற்று அணி கூறுவாம்’ என்கிறான் கம்பன்.
ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
நிலத்தின் தன்மையே நல்லொழுக்கத்திற்கும் தீயொழுக்கத்திற்கும் காரணம் என்பது ஆன்றோர் கொள்கை.
மிகவும் குற்றத்தைச் செய்கின்ற ஆடவர்களுடைய ஐந்து இந்திரியங்களும் பாணங்கள் ஆகும். கழுத்திலே அணிந்திருக்கின்ற இரத்தின ஹாரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிப்பதற்கு ஏதுவான மார்பகங்களைக் கொண்ட கண் என்கின்ற போர்த்தொழிலைச் செய்யும் அம்பும் நல்நெறியை விட்டுத் தீநெறியில் செல்லாமல் இருக்கின்ற கோசல நல் நாட்டை அலங்கரிக்கின்ற (சரயு) நதியின் வர்ணனையைக் கூறுவோம்.
இப்படி நன்னெறி நாட்டிலே பாயும் ஆற்றிலே ஆரம்பிக்கிறது ராமாயணம்.
சரயு நதி என்பது தாயின் முலை போன்றது என்று அற்புதமான ஒரு கருத்தை முன் வைக்கிறான் கம்பன். (பாடல் 12 – ஆற்றுப் படலம்)
இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்
புரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இல்
உரவு நீள் நிலத்து. ஓங்கும் உயிர்க்கு எலாம்
கைலாய மலையில் மானஸ மடுவில் தோன்றிய சரயு நதி தாயின் முலைப் பால் குழந்தைக்கு உணவாகி வளர்த்தல் போல அனைத்து உலகத்தாரும் உணவுப் பொருளை உருவாக்கி வளரக் காரணமாகிறது புனிதமான சரயு நதி என்கிறான் கம்பன்.
சூரிய குலத்தில் பிறந்த பல வேந்தர்களுடைய எண்ணுதற்கும் முடியாத பல காலமாகப் பாதுகாத்து வந்த நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகி, மழை வெள்ளத்தால் தோன்றிப் பெருகி வரும் சரயு நதியானது உலவும் தன்மையை உடைய நீரை உடைய கடலினால் சூழப்பட்ட இந்த நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் குழந்தைக்குத் தாய் முலை போலப் பயன் படும் தன்மை உள்ளது.
சரயு முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருதத்தை முல்லை ஆக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதம் ஆக்குகிறது. ‘செல்லுறு கதியில் செல்லும் வினை என அந்த நதி சென்றதன்றே!’
அடுத்து வேள்விப் படலத்தில் ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்:
‘மானச மடுவில் தோன்றி வருதலால் ‘சரயு’ என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது’ என்ன, அப்பால்
போன பின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.
தாடகை வதம் முடிந்து விட்ட நிலையில் விஸ்வாமித்திர மஹரிஷியோடு ராம லட்சுமணர் நடந்து செல்லுகையில் ஒரு பேரரவம் கேட்கிறது.
இது என்ன ஒலி என்று ராமன் கேட்க விஸ்வாமித்திரர் கூறுகிறார்:
மானஸ மடுவில் தோன்றி வருவதால் சரயு என்ற பெயரைப் பெற்றது.
சரயு என்றால் பொய்கையிலிருந்து ஓடி வருகின்றது என்று பொருள் படும்.
‘மேன்மையான தேவர்களும் சிறப்பித்துச் சொல்லும் நதி சரயு,
அந்த நதியோடு கோமதி என்னும் நதி வந்து கலக்கின்ற போது எழுகின்ற ஓசை இது’ என்று விஸ்வாமித்திரர் கூறுகிறார்.
5. கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!
6. ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!
7. தசரத் மஞ்சி – மலையை நகர்த்திய மா மனிதன்!
8. விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்!
9.ஒரு புதிய பென்சில்!
10. இரண்டு கூழாங்கற்கள்!
11. ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!
12. உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?
13. ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
14. நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!
15.நெப்போலியனின் வயது
16. இறைவனிடம் அன்பு
17. முடா! முரா! முரி!
18. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?
19. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 1
20. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2
21. முதுகுச் சுமையில் யார்?
22.சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!
23. அருமையாக இந்த நாள் கழிந்ததா?!
24. தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!
25. மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!
26. மேதை ஆக ஏழு படிகள்!
27. கெடுதலிலும் நல்லதையே பார் :இறைவனின் திட்டம் என்ன என்று தெரியாது!
28. வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!
29. எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!
30. வால்டேர் வளர்த்த கழுகு!
31. சின்னச் சின்ன டிப்ஸ்! பெரிய பலன்கள்!!
என்னுரை
இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல் நிலைக்கு முன்னேற விரும்பாதார் தான் யார்? தனது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரை முன்னேற்ற விரும்பாதார் தான் யார்?
முன்னேற வேண்டும்; முன்னேற்றவும் வேண்டும் – இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும்.
இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.
இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லை; சமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.
இப்படிப்பட்ட சாதனையாளர்கள் சிலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள், அழகிய கதைகள் ஆகியவற்றுடன் நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் தருகிறது.
இந்தக் கட்டுரைகள் ஹெல்த்கேர், பாக்யாஆகிய இதழ்களிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் வெளியானவை.
இவற்றை வெளியிட்டு எனக்கு ஊக்கமளித்த பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே. பாக்யராஜ், ஹெல்த்கேர் ஆசிரியர் ஆர்.சி.ராஜா, தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியிடும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அதைப் பாராட்டிய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச. நாகராஜன்
29-8-2022
·
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
இந்தப் பாடல் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொற்களால் ஆக்கப்பட்டுள்ளது. சத் குரு – நல்லாசிரியர் யார் என்பது பற்றிய பாடல் இது. தான் இயற்றிய குரு பாதுகா அஷ்டகத்தில் குருவை ஏன் வணங்க வேண்டும் என்று ஆதி சங்கரர் காட்டுகிறார். கந்த புராணத்திலுள்ள குரு கீதா என்பது குருவினைப் போற்றும் பாடல்களில் மிகவும் உன்னதமானது. அதில் சற்குருவின் இலக்கணம் விரிவாக இருக்கிறது.
பாரதியார் கனமான குருவைத் தேடிக் கொள் என்கிறார். குரு என்றால் பொதுவாகச் சொல்லப்படும் அர்த்தம் அஞ்ஞான இருளை அகற்றுபவர். சம்ஸ்க்ருதத்தில் பொதுவாக கனம் என்பதற்கும் இச்சொல் பயன்படும்.
இந்துக்கள் உலக மஹா வானியல் நிபுணர்கள்; வேத காலம் முதல் ஆயிரக்கணக்கான வானியல் குறிப்புக்களைப் போகிறபோக்கில் சொல்லிவைத்தனர். சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களில் மிகப்பெரியது குரு JUPITER . பெரிய கிரகம் என்பதை அறிந்து பிருஹஸ்பதி, வியாழன் என்று சொன்னதோடு அதற்கு குருவின் அந்தஸ்த்தைக் கொடுத்தனர். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய கண்டுபிடிப்பு இந்துக்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றிவைத்துவிட்டது
அதாவது குரு கிரஹத்தின் ஈர்ப்புவிசை விண்வெளிக் கலங்களை உந்தி விடுகிறது SLINGSHOT EFFECT. இதனால் அந்த ராக்கெட்டுகள், விண்கலங்கள் எரிபொருள் இல்லாமல் நீண்ட பயணம் செய்ய முடியும். இதை கவண் கல் விளைவு SLINGSHOT EFFECT என்பர். எப்படி ஆன்மீக குரு தனது சீடனை உச்சானிக் கொம்புக்கு தூக்கி விடுகிறாரோ அப்படி குரு கிரகமும் செய்கிறது. இந்துக்கள் மஹத்தான விண்வெளி நிபுணர்கள் என்பது இப்போது புரிகிறது.
The effect known as the gravity assist or slingshot effect is a way of using the motion of a planet to accelerate a space probe on its journey towards the outer planets. Think of a space probe on a journey to Neptune. On its way it will have to pass Jupiter – the largest planet in the Solar System.
சத் குரு என்பவரும் இப்படிப்பட்டவரே ; அவருடைய இலக்கணத்தை வருணிக்கும் திருமூலர் அவரை பரிசன வேதி என்கிறார். அதாவது தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் அற்புதக் குளிகை அது ஆங்கிலத்தில் PHILOSO PHER ‘S STONE என்பர் .
The philosopher’s stone or more properly philosophers’ stone, is a mythic alchemical substance capable of turning base metals such as mercury into gold or silver
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) குருவின் பெருமையைச் சொ ல்லுகையில் குருவின் பாதங்களுக்கு மடத்தில் தினமும் பூஜை நடைபெறுவதைக் குறிப்பிட்டுவிட்டு, கடவுளுக்கு அபராதம் செய்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துவிடலாம் ஆ னால் குருவுக்கு அவமதிப்பு செய்தால் கடவுள் கூட காப்பாற்ற மாட்டார் ; குருவின் காலில் போய் விழு என்று கடவுளே சொல்லிவிடுகிறார். அப்படி உயர்ந்த மதிப்பு குருவுக்கு உண்டு என்று கூறுகிறார்.
குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு சமம் ஆனவர்
அந்த குருவை வணங்குகிறேன்
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
குரு என்பவர் பிறவிப்பிணியை அகற்றும் டாக்டர்.; எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவர் . அவர் தட்சிணாமூர்த்தி.
XXX
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே– திருமந்திரம் 139
குருவின் பெருமையை எளிய தமிழில் திருமூலர் செப்பிவிட்டார்
xxxx
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்
குருபரி சித்த குவலயம் எல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே – திருமந்திரம் 2054
பரிசனவேதி என்ற குளிகை (Philosopher’s stone) பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.
xxxx
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. திருமந்திரம் 2051
ரசவாத (Alchemy) வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.
XXXX
ஸ்ரீ குரு கீதை (392 Slokas) …
எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை
குருவிற்கு சமமான உயர்வுமில்லை
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
முக்திக்கு மூலம் குருவின் கிருபை
– “ஸ்ரீ குரு கீதை”
சத் குருவின் மேன்மையை அறிய வேண்டுவோர் குரு கீதையிலுள்ள நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும்.
(குரு கீதை (392 Slokas or Sutras) யைத் தனியாகத் தருகிறேன்.)
XXXXX subham xxxxxx
TAGS: குரு , சற்குரு , சத்குரு , குரு கீதை , அறப்பளீச்சுர சதகம், நல்லாசிரியர் ,பரிசனவேதி , திருமூலர்