உலக இந்து சமய செய்தி மடல் 2-1-2022 (Post No.10,517)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,517

Date uploaded in London – –    2 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை JANUARY 2-ஆ ம் தேதி 2022 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

xxxx

சபரிமலையில் மகரவிளக்கு காலம் துவக்கம்

சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம்  துவங்கியது. நான்கு நாள் இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் மண்டலபூஜை முடிந்து டிச.26 ல் அடைக்கப்பட்ட நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறக்க, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை துவக்கி வைத்தார். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

நெய்யபிஷேகம் ஜன.18 வரை நடைபெறும். பக்தர்கள் நிலக்கல், பம்பை வழி மட்டுமல்லாமல் எருமேலி, அழுதை, கரிமலை வழியாகவும் வரத்துவங்கி உள்ளனர்.பெருவழிப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி எருமேலி மற்றும் பம்பையில் தொடர்ந்து செயல்படுகிறது.

XXXXX

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.500 கோடியாகும்.

மீட்கப்பட்ட சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு எப்படி மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Xxxx

திருத்தணி கோவிலில் நடைபெறும் படித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் டிச., 31-ம் தேதி திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த படிக்கட்டுகள் ஒரு வருடத்திற்கான நாட்களை குறிப்பதால் ஆங்கில புத்தாண்டு வழிபாடு இங்கு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். படிகளில் மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

அதன்படி டிசம்பர் 31-ம் தேதி  திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் எம்.எல்.ஏக்கள். ,அதிகாரிகள் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர். புத்தாண்டு தினமான நேற்று சிறப்பு தரிசனமும் நடைபெற் றது.

Xxxxx

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில்  மீண்டும் தரிசனம் துவக்கம்

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் வழக்கமான தரிசனம் துவங்கிவிட்டது. என்றும் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பால் நிகழ்ந்த ஜன நெரிசலை அதிகாரிகள் ஐந்தே நிமிடத்தில் கட்டுப்படுத்தினர் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 27000 பேர் மாதா வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்தனர்.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

காஷ்மீரின் கட்ரா என்ற பகுதியில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. புத்தாண்டு என்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். கூட்டம் அதிகம் வர பக்தர்கள் முண்டியடித்தனர். வரிசையில் இருந்தவர்கள் பலர் அம்மனை வணங்க வேகமாக செல்ல முற்பட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  மாநில  அரசும் பெரும் உதவித்தொகையை அறிவித்தது

பக்தர்களில் இளம் வயதினரும்  இருந்தனர். அதிலுள்ள இரண்டு குழுக்களிடம் ஏற்பட்ட மோதலே  ஜன நெரிசலை உண்டாக்கியது என்று பெரிய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்து பற்றி விசாரித்து எதிர்காலத்தில் இப்படி நடக்காமல்  தடுக்க மூன்று பேர் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது

xxx

பாலாஜி வெங்கடேச பெருமாள் உண்டியல் வருவாய் ரூ.833 கோடி

திருப்பதி திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்தாண்டு உண்டியல் காணிக்கை 833 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது. உண்டியல் வருமானம் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானமாக கருதப்படுகிறது.

கடந்தாண்டு உண்டியல் வருவாய் பெருமளவில் குறைந்து உள்ளது.வழக்கமாக 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்து வந்த ஆண்டு உண்டியல் வருவாய், இந்தாண்டு 833 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் 1.04 கோடி பக்தர்கள் மட்டுமே இந்தாண்டு ஏழுமலையானை தரிசனம் செய்துஉள்ளனர்; 48.75 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்; 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசிப்பர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களில் மட்டும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

ஏழுமலையானுக்கு ‘இன்னோவா’ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் விஸ்வநாத் என்பவர் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரஸ்டா காரை, நேற்று காலை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் காருக்கான சாவி மற்றும் ஆவணங்களை விஸ்வநாத் அளித்தார்.


Xxx

திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

திருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.


வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.



கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோவிலில் ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.


பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx

அனைவருக்கும்   ஞான மயம் குழுவினர்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

 tags- tamilhindu, newsroundup, 212022 

உலக இந்து சமய செய்தி மடல் 21-11-2021 (Post No.10,364)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,364

Date uploaded in London – –   21 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 21 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

கார்த்திகை திருவிழா-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.

40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர்.

XXX

ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது.

நாமக்கல்லில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர் நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன.

மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர்.

XXX

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்


பெரியகார்த்திகையான  வெள்ளிக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Xxxxxx

திருமலையில் கனமழை- பாலாஜி கோவிலைச் சுற்றி வெள்ளம்

திருப்பதி: திருமலையில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மலைப் பாதையில் 13 இடங்களில் மண் சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வேறு ஒரு நாளில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கிஉள்ளது

திருப்பதி அருகே பாடிபேட்ட பகுதியில் சொர்ணமுகி ஆற்றங்கரையில் பழங்கால சிவன் கோவில் இருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக சிவன் கோவில் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மழையா ல் சாமி தரிசனமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதே போல கேரளத்தில் சபரிமலையில் கன  மழை காரணமாக சனிக்கிழமைய ன்று  அய்யப்ப சாமி தரிசனம்  நிறுத்தி வைக்கப்பட்டது.

XXXX

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

”ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,” என மத்திய அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சில தினங்களுக்கு முன் எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் சஞ்ஜித் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டிற்கு, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முரளிதரன் வந்தார். சஞ்ஜித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். சஞ்ஜித் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையை தொய்வு ஏற்படுத்த சில சக்திகள் மாநில அரசின் பின்னால் செயல்படுகின்றன.

எனவே, இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ., ) விசாரணை நடத்த கேரள அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, முரளிதரன் தெரிவித்தார்.இதன்பின், திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிஜுவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் அளித்துள்ளனர்.

சஞ்சித்  என்பவரை  மனைவியின் கண் முன்பாக முஸ்லீம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொன்றதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டுகிறது. இதுவரை கேரள போலீசார் யாரும் கைது செய்யாதது மேலும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.

சஞ்ஜித் கொலை செய்யப்பட்டபோது, அப்பகுதியில் ஒரு போலீஸ்காரர் இருந்துள்ளார். இது தெரிந்தும், போலீசார் குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர். கொலை சம்பவம் பதிவான சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க திணறுகின்றனர். இவை போலீஸ் விசாரணையின் தொய்வினை காட்டுகிறது.


இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் அழுத்தம் உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸ் தாமதம் செய்தால், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க கோரி நாளை (22ம் தேதி ) மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு, சுரேந்திரன் தெரிவித்தார்.

XXXX

நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்

நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில், அவரது சீடர் உட்பட மூன்று பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் செப்., 20ல், மடத்தின் தலைவரும், ‘அகில பாரதிய அகார பரிஷத்’ என்ற சாதுக்களுக்கான அமைப்பின் தலைவருமான நரேந்திர கிரி, துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அவரது சீடர் ஆனந்த் கிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.அதில் ஆனந்த் கிரி, அலகாபாத் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி ஆத்யா திவாரி மற்றும் அவரது மகன் சந்தீப் திவாரி ஆகிய மூன்று பேரும், சதி செய்து நரேந்திர கிரியை தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

XXX

சபரிமலையில் ‘ஹலால்’ சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள ஐகோர்ட்

 சபரிமலையில் பயன்படுத்துவது ‘ஹலால்’ சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்துதான் சர்க்கரை வருகிறது. சில நாட்களாக பம்பை குடோனில் இருந்து வரும் சர்க்கரை சாக்குகளில் ‘ஹலால்’ என்ற முத்திரை உள்ளது; இது தொடர்பான வீடியாக்களும் வெளியானது.

இந்நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீசில் கொடுத்த புகாரில், அரவணை தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அப்பம், அரவணை தயாரிக்க ‘ஹலால்’ முத்திரை உள்ள சர்க்கரையை பயன்படுத்த தடை விதிக்கும் படி கோரியுள்ளார்.

இதில் ஆஜாராகி விளக்கமளித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழக்கறிஞர், 2019ல் வாங்கிய சர்க்கரையில் சில பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது என்றும், இது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டடு தவறுதலாக வந்து விட்டது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

XXXX

லண்டனிலிருந்து இரண்டு செய்திகள்

தீபாவளித்  திரு நாளை ஒட்டி  பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சனும் பிரிட்டிஷ் உட்துறை அமைச்சர் ப் ரிதி படேலும் லண்டனில் உள்ள நீஸ்டன்  சுவாமி நாராயணன் கோவிலுக்கு நவம்பர் 7ம் தேதி விஜயம் செய்தனர். அங்குள்ள சுவாமிநாராயணரின் பா ல வடிவ சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். பின்னர் சுவாமி நாராயண் தொண்டர்கள் , கோவிட்  வைரஸை எதிர்த்து செய்து வரும் பணிகளைக் காட்டும் கண்காட்சியையும் பார்வையிட்டுப் பாராட்டினார்கள்

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள ஜகன்னாத் கோவிலைப் போல பிரிட்டனிலும் ஒரு கோவில் கட்டும் பணி  துவக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவும் பூஜையும் சவுத்தாலி ல் உள்ள ராமர் கோவிலில் நடந்தது 4 மில்லியன் பவுண்ட் செலவில் 2024ல் கோவிலை எழுப்புவதற்கு ஸ்ரீ ஜெகன்நாத் சொ சைட்டி முடிவு செய்துள்ள து.

ஒரிஸ்ஸாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேப்ப மரத்தின் அடிமரத்திலிருந்து செதுக்கப்பட்ட , ஜெகான்நாதன் பலபத்ரன், சுபத்ரா , சுதர்சன சக்ரம் ஆகியோருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட து

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tamilhindu, newsroundup, 211121

உலக இந்து சமய செய்தி மடல் 31-10-2021 (Post No.10,282)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,282

Date uploaded in London – 31 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 31-ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

போப்பாண்டவர் -மோடி சந்திப்பு – ஆர் எஸ் எஸ் வரவேற்பு

இத்தாலியில் வாத்திகன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசை நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் சந்திப்பு என்று நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இருவரும் உலக விஷயங்களை ஒரு மணி நேரம் அலசி ஆராய்ந்தனர். போப்பாண்டவரை  இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோ டி அழைப்பும் விடுத்தார்.

இதற்கு முன்னரும் அப்போதைய போப் இந்தியாவுக்கு விஜயம் செய்தது அடல் பிஹாரி வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

தார்வாட்டில் ஆர் எஸ் எஸ் கூட்டம்  வரவேற்பு

போப் – மோடி  சந்திப்பை உலகத்தின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் வரவேற்றது . ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேஸீய செயற்குழு கூட்டம் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில் மூன்று நாட்களுக்கு நடந்தது  அதன் இறுதியில் இயக்கத்தின் செயலாளர் தத்தாத்ரேய ஹோஷபாலே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருகையில் போப் பிரான்ஸிஸ் – பிரதமர் மோடி சந்திப்பை ஆர் எஸ் எஸ் இயக்கம் வரவேற்பதாகச் சொன்னார் . மோடி, உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்; போப் பிரான்சிஸ் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தனிப் பெரும் தலைவர். இருவர் சந்திப்பு இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும் – மேலும் ‘வசுதைவ குடும்பகம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்பது இந்துக்களின் பண்பாடு. மேலும் இருவரும் இரு நாட்டு தலைவர்கள் என்பதால் இது நாட்டுத் தலைவர்கள் சந்திப்பாகும் என்றும் சொன்னார். இத்தாலியின் தலைநகரான ரோமாபுரிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டி நாடு வாத்திகன் சிட்டி ஆகும் . இது இந்தியாவின் பெரிய நகர் அளவுக்குக் கூட இல்லை .

தார்வாட் நகரில் நடந்த ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் 350 கார்யகர்த்தாக்கள் கலந்து கொண்டனர். இயக்கத்தின் தலைவரான  சர்சங்க சாலக்  மோகன் பகவத், இயக்கத்தின் செயலாளரான   சற்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹோஷபாலே முன்னிலையில் விவாதங்கள் நடந்தன

வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் இதைத் தடுத்து நிறுத்த வங்க தேச அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டம் எச்சரித்தது .

நாட்டில் நடக்கும் மத மாற்ற முயற்சிகளையும் ஆர் எஸ் எஸ் வன்மையாகக் கண்டித்தது

.xxx

இத்தாலியில் ஓம் நமச்சிவாயாமந்திரத்தை கூறி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்

G 20  (ஜி 20)  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றிருந்தார். அப்போதுஅந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் ‛ஓம் நமச்சிவாயா’ மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை கூறி வரவேற்றனர்.

இரு நாட்களாக நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பைசா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், வெளிவந்த பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் வணங்கி வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்

பின் அங்கு கூடியிருந்தவர்களில் பலர் ஓம் நமச்சிவாய மந்திரம் மற்றும் பல சமஸ்கிருத மந்திரங்களை ஒலித்து மோடியை வரவேற்றனர். குஜராத்தி மொழியிலும் பக்தி பாடல்களை பாடினர்.

XXXXXXXXXX

தங்க நகை உருக்கும் தி.மு.க . திட்டத்துக்கு கோர்ட் தடை

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளிக்கப்படுவதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

இந்து சமய அறநிலையத் துறை  முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இது சம்பந்தமாக செப்டம்பர்  22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து  செய்யக் கோரியும் ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ மற்றும் சிலர் உயர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய  அறநிலைய சட்டத்தில்  கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும்  வழங்கவில்லை. கோயில்  நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே  தவிர மத வழிபாட்டு  விவகாரங்களில்  தலையிட முடியாது.

வருவாய் ஈட்டுவதற்காக  நகைகளை உருக்கி  டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள  ஆயிரக்கணக்கான ஏக்கர்  கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில்  நகைகள் தொடர்பாக முறையாக  எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில்,  நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது.   பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த  அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத  உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால்  நகைகளை உருக்குவது தொடர்பான  சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை  ரத்து செய்ய வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நகைகளை பொறுத்தவரை  உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோயில்களுக்கு  பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை கண்டறியலாம்.  அறநிலையத்துறை சட்டப் பிரிவின்படி  கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக கோயில்களின் அறங்காவலர்  குழுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன்பு  காணிக்கை நகைகளை உருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் அரசு  செய்ய கூடாது. இந்த வழக்கில் அரசு பொதுவான பதில் மனுவை 4 வாரங்களில்  தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Xxx

கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

‘கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன்,விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.”அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,” என்றார்.



இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார். உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.

xxxxx

அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி; எம்.பி.,க்கள் உற்சாக பங்கேற்பு

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.

‘இன்டியாஸ்போரா’ அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ”ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.



 

INDIAN DIASPORA அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.

Xxxx

தீபாவளி வாழ்த்துக்கள்

இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளித் திருநாள் நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குஜராத்திகள்  இதை நான்கு  நாள் விழாவாகக் கொண்டாடுவர் ; புத்தாண்டு தினமாகவும் கொண்டாடுகின்றனர் . இந்துக்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர் ஆகியோரும் இதே நாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது ; ராம பிரான் அயோத்தி திரும்பிய நாள் என்பதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்ததாலும், உலகிற்கே பட்டாசு மத்தாப்புகளை ஏற்றுமதி  செய்யும் சிவகாசி மக்களின் நல்வாழ்வுக்கு ஒளி வீசுவதாலும் மத்தா ப்பு பட்டாசுகளுடன் தமிழ் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். சென்னை முதலிய நகரங்களில் மழை யையும் பொருட்படுத்தால் கடைத் தெருக்களில் கூட்டம் அலை மோதுவதாக இன்று காலை வெளியான தமிழ் நாளேடுகள் செப்புகின்றன. நவம்பர் 3ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்ட் தீபாவளியும் நவம்பர் 6ம் தேதி லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி விழாவும் பிரிட்டனில் நடைபெறுகிறது.

நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஞான மயம் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது .

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

உலக இந்து சமய செய்தி மடல் 3-10-2021 (Post No.10,169)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,169

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 3-ம் தேதி 2021

ஆம் ஆண்டு



 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON JAYASHREE


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’

திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு நடக்கும் பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடப்பதில்லை; தவறாக நடத்தப்படுகிறது’ என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, திருலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.  ஆந்திர உயர் நீதிமன்றத்தில்,  பக்தர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு அபிஷேக சேவை, தோமாலா சேவை, ஆர்ஜித் பிரம்மோற்சவம் உட்பட பல பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுவதில்லை. ‘தவறாகவும் நடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்’ எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ‘திருப்பதி தேவஸ்தானத்தின் விதிமுறைகளிலும், அதன் நடவடிக்கைகளிலும் தலையிட முடியாது’ என உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த பாலாஜி பக்தர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹீமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி ரமணா தெலுங்கிலேயே பதில் கூறினார்.

அதன் விபரம்:நான், என் குடும்பத்தினர், இங்குள்ள அனைவரும், பாலாஜி வெங்கடாசலபதி மீது மிகவும் பக்தி கொண்டவர்கள். தனக்கு நடக்க வேண்டிய பூஜை உட்பட அனைத்து வழிபாடுகளும், சரியான முறையில் நடக்கவில்லை என்றால், அதை ஏழுமலையானே பொறுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கான பூஜைகளும், வழிபாடுகளும் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும் என அனைத்து பக்தர்களும் விரும்புகின்றனர்.

எனவே, தேவஸ்தானத்தின் வழக்கறிஞர், மனுதாரரின் கேள்விகளுக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்,.விசாரணை, வரும் 6- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


XXXXX

தமிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் – அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியசுவாமி மனு

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோவில் சொத்துக்களின் உரிமையாளராக அரசு இருக்க முடியாது. இதனால் சமயம் சார்ந்த செயல்களில் அரசு தலையிடக் கூடாது. கோவில் சம்பிரதாயத்தினர்தான் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களை நியமித்துக்கொள்ளும் விவகாரத்தில் அரசு தலையிடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

XXXXX

இந்தியாவிலேயே முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்



தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும். இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டு வருகின்றனர்.



தேங்காய் தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வகையில நவீன எந்திரத்தை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தினர் வடிவமைத்தனர்.


ரூ.7 லட்சம் மதிப்பில் தாங்கள் வடிவமைத்த எந்திரத்தை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நிறுவினர். இந்த கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  செப்டம்பர் 27 – ம் தேதி இயக்கி வைத்தார்.

பின்னர் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேங்காய் தண்ணீரில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி கோவில்களில் பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபடும்போது, அந்த தேங்காயி்ல் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியில் வீணாகுவதோடு, கழிவுநீர் போல் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டும் எனக் கருதி இந்த நவீன கருவியை வடிவமைத்தோம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி.. அறநிலைத்துறை அறிவிப்பு.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில்களில் பயன்படுத்தப்படாத பழைய, சேதமடைந்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்ல தங்கம், வெள்ளி காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் நகைகளை உண்டியல் திறக்கப்படும் போது, சேகரித்து அவற்றை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த நகைகள் முழுமையாக பயன்படுத்தாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

இந்த நகைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நகைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஆய்வு செய்து மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு

‘கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது’ என்று தமிழகபாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும்.



அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும்.

திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

XXX

கர்நாடகத்தில் கட்டாய மத மாற்ற தடுப்புச்சட்டம்

கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை கொண்டு வர பரீசிலிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாநிலத்தில் மதமாற்றம் தூண்டுதலின் பேரிலோ அல்லது வலுகட்டாயமாகவோ நடைபெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மதமாற்றம் முயற்சி செய்ய வந்த கும்பலின் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்த வீடியோவில் பெண்களை வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய கூடாது எனவும் மேலும் இந்த செயல் அரசாங்கதின் அனுமதி பெற்று நடைபெறுவதாகவும் கூறினர். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் அரேகா ஜானேந்திரா கட்டாய மதமாற்ற சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே உத்ரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும், அசாம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து பரிசீலித்து வருகின்றன.

 மேலும், கட்டாய மதமாற்ற தடை சட்டம் மதங்களுக்கு இடையிலான திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரபடவில்லை மாறாக கட்டாய மதமாற்றத்தால் நடைபெறும் குற்றங்களை கண்டறியவே இந்த சட்டம் என் தெரிவித்துள்ளது.

. இதனை எதிர்த்து கர்நாடக கத்தோலிக்க ஆயர்கள், பீட்டர் மச்சாடோ லைமையில் கர்நாடக முதல்வர் பசவ்ராஜ் பொம்மையை சந்தித்து மனு அளித்தனர். தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை என்றும், இந்த சட்டம் தேவையற்ற வகுப்புவாத பிரச்சனைகள், அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினர்.

 கேரளாவில் முஸ்லிம்கள் நடத்தும் லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத் குறித்து அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகளே கவலை தெரிவித்துள்ள சூழலில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

XXXX

தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை -கர்நாடக அரசின் உத்தரவு செல்லாது

சிக்கமகளூரு தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்து முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் தத்தாத்ரேயா கோவில் உள்ளது. அங்கு இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் பூஜை செய்கிறார்கள். அது இந்துக்களுக்கு சொந்தமானது என்று இந்துக்களும், முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று முஸ்லிம்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரைப்படி, தத்தாத்ரேயா கோவிலில் முஸ்லிம் முறைப்படி தொழுகை நடத்த முல்லாவை (முஜாவர்) நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அந்த கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தத்தாத்ரேயா கோவில் மேம்பாட்டு குழு, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி தினேஷ்குமார் இந்த வழக்கின் தீர்ப்பை  அறிவித்தார். அதில் தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON JAYASHREE

நன்றி, வணக்கம்

 tags- tamilhindu, newsrpoundup, 3102021, 

உலக இந்து சமய செய்தி மடல் 8-8-2021 (Post No.9951)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9951

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 8  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’ என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டுக்குள் முடியும் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

XXX

இந்து கோவில் தாக்குதல்; பாகிஸ்தான் பார்லிமெண்ட் கண்டனம்


பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு பார்லிமென்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

பாகிஸ்தான் பார்லிமெண்டில் இந்த பிரச்னை பற்றி பாக்., ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வங்வானி பேசுகையில், ”கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது; இது நாட்டுக்கே அவமானம். இதை  கண்டிக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து கண்டனம் தெரிவித்து, பார்லிமெண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.

இதோ வங்க தேசத்திலிருந்து ஒரு செய்தி

நமது பக்கத்து  நாடான வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டு பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. கிராமத்தில் குளம் தோண்டும்போது இந்த சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டில் வைத்திருந்ததாக அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

XXXX

பாரத மாதாவுக்கு ‘நினைவாலயமா? நினைவாலயம் என்பதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு

DINAMALAR NEWS

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார்.

போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, பாரத மாதா ஆலயத்துக்கு, அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், சிவா இறந்து விட்டார். இதனால், அவரது கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், 1.5 கோடி ரூபாயில், அதே பாரத புரத்தில், பாரத மாதாவுக்கு, தமிழக அரசு சார்பில், நினைவாலயமும் அருகில் நுாலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்.

 இதற்கிடையில், பாரத மாதாவுக்கு எப்படி “நினைவாலயம்” எழுப்பலாம் என பா.ஜ.,வினர் கேட் கின்றனர்.


இது குறித்து, அக்கட்சியின் மாநில பொருளாளர் சேகர் கூறியதாவது:சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற, நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்., தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், பக்கத்தில் நுாலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதை திறந்து வைப்பதற்குள், இ.பி.எஸ்., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.



ஆனால், பாரத மாதா “நினைவாலயம்” என, அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் “நினைவாலயம்” கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரத மாதாவை சாகடித்துள்ளனர். இது, பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு தலைக்குனிவு என்று B J P மாநில பொருளாளர் சேகர் கூறினார்.


XXXXX

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செடி, கொடிகள் முளைத்திருந்த ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தினகரன் செய்தி எதிரொலியாக ெதாடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தரைக்கோட்டைகளில் வலுவானதாக தற்போதும் விளங்கி வருவது வேலூர் கோட்டை. வேலூர் கோட்டைக்கு முன்னதாகவே அங்கு சம்புவராயர்களால் ஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, கோட்டையை கட்டமைத்த விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். என்று தினகரன் நாளிதழில் கடந்த 2ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக, வேலூர் கோட்டை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும், ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து இந்திய தொல்லியல்துறை வேலூர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ் கூறுகையில், ‘வேலூர் கோட்டை ஜலகண்ேடஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் ரசாயன கலவை பூசி சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பறவைகள் எச்சத்தினால் செடி, கொடிகள் முளைப்பது தடுக்கப்படும். மழைநீரும் கோபுரத்தில் ஊறி பாசி படர்வது, பூஞ்சைகள் படர்வது இருக்காது. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும், என்றார்.

XXX

திருத்தணி முருகனுக்கு திருப்பதி பாலாஜி  கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடந்தது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் அப்போது  நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.

அவர்கள், பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி  தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.

XXXX

ஆகஸ்ட் 11ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா

108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின், பாமாலை பாடி, இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.


சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

MALAI MALAR NEWS

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

TAGS- TAMILHINDU, NEWS ROUNDUP, 882021, RANI

உலக இந்து சமய செய்தி மடல் 18-7-2021 (Post No.9866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9866

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 18 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN

tags- tamilhindu,

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

அமர்நாத் பனிலிங்க தரிசனம் டிவியில் நேரடி ஒளிபரப்பு



ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டு தோறும் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் பனி லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நலன் கருதி, இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ‘ஆன்லைன்’ வழியாக பக்தர்கள் பங்கேற்க, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


‘பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

‘கோவில் அர்ச்சகர், பக்தர்களின் பெயரில் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தபால் வழியாக பக்தர்களின் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்’ என, கோவில் வாரியம் அறிவித்தது.

இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ டிவி’ பனி லிங்கத்தை பக்தர்கள் நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.’ஜியோ டிவி’ செயலியில் இதற்கென தனி சேனல் துவக்கப்பட்டு, அமர்நாத் பனி லிங்கத்துக்கு நடக்கும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

XXX

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்? நித்யானந்தா வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில்  பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களில் அவர் தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். அவரது சொற்பொழிவுகள் அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

கைலாசா நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நித்யானந்தாவும் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

XXXX

சர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி!

அயோத்தி: அயோத்தியில் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரி துவங்கும் என்றும், சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.


அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
* அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது

* மேலும், 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன

* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன

* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

XXXXXXXXXXXXXXX

ஜகா‘ திரைப்பட போஸ்டர் விவகாரம்மன்னிப்பு கேட்டார் இயக்குனர்

சுவாமி சிவபெருமானை அவமதிக்கும் வகையில் வெளியான ‘ஜகா’ என்ற திரைப்பட போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக ஹிந்து கடவுள்களையும், மத நம்பிக்கை களையும் கேலி செய்யும் விதமாக சினிமா எடுத்து வருகின்றனர். தற்போது ஓம் டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜயமுருகன், நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாய் பாஸ்கர் இசையில், விளம்பர வடிவமைப்பு ஜோசப் ஜாக்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள ‘ஜகா’ திரைப்பட போஸ்டரில் ஹிந்துக்கள் போற்றி வணங்கும் சிவபெருமானுக்கு முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் தோன்றியுள்ளார்.

இதற்கு ஹிந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சென்னை பாரத் முன்னணி நிறுவன தலைவர் சிவாஜி கூறியதாவது: ‘ஜகா’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் மனதை காயப்படுத்தும். மத உணர்வை புண்படுத்தும். இந்திய இறையாண்மைக்கு எதிராக, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குரோத எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட ஓம் டாக்கீஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து, ஒட்டு மொத்த ஹிந்துக்கள், சிவ பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் பட நிறுவனம், தயாரிப்பாளர் ஆறுபடையான் மீது வழக்கு தொடரப்படும், என்றார்.பட போஸ்டருக்கு தொடர்ந்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

XXXX

கோவில்களை குறிவைத்து இடிப்பதா ? கோவையில் இந்து முன்னணியினர் போராட்டம்

கோவையில் இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் இந்து கோவில்களை குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து டவுன்ஹால் பகுதியில் இந்து முன்னணி கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஆனால், இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அப்போது, மசூதிகளை இடிக்காமல் இந்து கோவில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக முறையிட்டனர்.


இந்து முன்னணியனரை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ.,யினரும் திரண்டால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக  இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

XXXXX

தத்வ நிர்ணய சதுஷ்டயம்  நூல் வெளியீட்டு  விழா

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு சிவஶ்ரீ வீரட்டநாத சிவாசாரியார் திருமதி. பர்வதவர்த்தனீ தம்பதிகள் சதாபிஷேக வைபவத்தில், அகோர சிவாசாரியாரின் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் போஜராஜர் ஸத்யோஜோதி சிவாசாரியார் முதலிய மகான்களால் உரையெழுதப்பட்ட தத்வநிர்ணய சதுஷ்டயம் தொகுப்புநூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை சதாபிஷேக தம்பதிகளின் திருக்குமாரர் வடமொழிப்பேராசிரியர், டாக்டர் வீ. அபிராமசுந்தர சிவம் அவர்கள் தமிழுரையுடன் ஆக்கினார்.

பெங்களூர் வாழும்  கலைப்பயிற்சி   மையம் வேதாகமசம்ஸ்க்ருத பாடசாலையின் சார்பில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருஜியின் ஆதரவுடன் முதல்வர் சிவஶ்ரீ சுந்தரமூர்த்திசிவம் இந்நூலைப்பதிப்பித்தும் வெளியீட்டுவிழாவை நேர்த்தியாகவும் நிகழ்த்தினார்கள். நேரிலும், இணையவழியிலும் சிவாசாரியப்பெருமக்களும், ஆகம ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முதல்பிரதியை ஆதிசைவகுலப்பிதாமகர் பெங்களூர் சிவஶ்ரீ சபேசசிவாசாரியார் வெளியிட, சிவபுரம் ஶ்ரீகுருநாதர் பெற்று மகிழ்ந்தார்கள்.

XXXX

விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரவீந்திர நாராயண சிங் தேர்வு

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தவர், விஸ்ணு சதாசிவ கோக்ஜே (வயது 82). இவர் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது

இதில் துணைத்தலைவராக இருந்த ரவீந்திர நாராயண சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் எலும்பு மருத்துவ நிபுணர் ஆவார். இந்த துறையில் சிறந்த பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராக டாக்டர் ரவீந்திர நாராயண சிங் தேர்வு செய்யப்பட்ட தகவலை அமைப்பின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைப்போல அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளரான மிலிந்த் பாரண்டே, மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.

xxxx

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர்  கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூலை 16 ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும்  ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என்றும்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

news round up, 18july21,

உலக இந்து சமய செய்தி மடல் 11-7-2021 (Post.9840)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9840

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 11 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

xxx

கூசமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.

‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை போல், ‘கூ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது’ என்றார்.

கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என, கூறப்பட்டுள்ளது

XXX

முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத்

காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

XXXX

திருப்பதி கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில் 

தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது.

முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் 

அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது.

ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

XXXXX

புரி ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந் தேதி வரை 144 தடை – கோவில் நிர்வாகக்குழு முடிவு

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புரியில் மட்டும் யாத்திரை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் எந்த துணிச்சலான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒடிசாவின் புரியில் மட்டுமே ரத யாத்திரை நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து வைரஸ் பரவலால் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பலியை சந்தித்துள்ளோம்.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக கொண்டாடலாம். புரியைத் தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

XXXX

பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?

‘தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். ”அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.


அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர்.. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் –

XXX

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் சுவாமி பிரகாஷானந்தா, 99 வயதில் இறந்தார்

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலத்தின் பழமையான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி பிரகாஷானந்தா வயது தொடர்பான வியாதிகளால் இறந்தார் என்று மட வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 99.

ஆன்மீகத் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அடங்குவர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சுவாமி பிரகாஷானந்தாவை அறிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார்.

“சுவாமி பிரகாஷானந்தா ஜி அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரது தன்னலமற்ற சேவை செயல்கள் ஏழை ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தன. உன்னதமான எண்ணங்களை பிரபலப்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார்
ஸ்ரீ நாராயண குரு. அவரது மறைவால் வேதனை. ஓம் சாந்தி, ”என்று ட்வீட் TWEET செய்துள்ளார்.

சுவாமி பிரகாஷானந்தா, -சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தை உலகளவில் மதிக்கப்படும் ஆன்மீக மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN


நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

உலக இந்து சமய செய்தி மடல் 27-6-2021 (Post No.9787)

BRHANNAYAKI SATHYANARAYANAN

COMPILED BY LONDON SWAMINATHAN 

Post No. 9787 

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com




இன்று ஞாயிற்றுக் கிழமை ஜூன் 27-ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர்
 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYANARAYANAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXX

வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி.அறைகூவல்

நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்’ என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.


உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:

ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.

இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது- பிரதமர் சிறப்புரை

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி திங்கட் கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். 

அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி  வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார். 

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.

TIMES SQUARE, NEW YORK, USA

யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற

நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்

XXX

ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை

மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.

இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

 கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.. 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை

நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக மீண்டும் பாரத் என்றே மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,
ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா…சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம்.

இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.

ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.


கங்கனா நடித்த தலைவி ஜெயலலிதா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தலைவி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்

XXX

காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.

கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன

.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

XXXX

கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் பேட்டி

நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

பின்னர்  செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம்  கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து  உள்ளனர்.சைவ மற்றும் வைணம்  வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு  தேர்வு எழுத்திய  பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்

XXXX

திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வித்யாதான அறக்கட்டளைக்கு வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.


அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

XXXX

வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க  பாபா ராம்தேவ் முறையீடு

கடந்த மாதம், யோகா குருவான பாபா ராம்தேவ், ‘அலோபதி மருத்துவம் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு  , இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை ‘வாபஸ்’ பெறும்படி, பாபா ராம்தேவிடம் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று, பாபா ராம்தேவும், தன் கருத்தை திரும்ப பெற்றார்.எனினும், பாபா ராம்தேவுக்கு எதிராக, பல மாநிலங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பாபா ராம்தேவ் முறையிட்டு உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:எனக்கு எதிராக, போலீசாரிடம் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

XXXX


இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவ


நன்றி, வணக்கம்


TAGS – TAMILHINDU, NEWSRPONDUP, 27621

உலக இந்து சமய செய்தி மடல் 20-6-2021(Post No.9761)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9761

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com




இன்று ஜூன் 20-ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan



 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan



 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx



கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை– அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

மகாபாரதத்தில் குந்தி தேவி, தனது குழந்தையை கூடையில் வைத்து நதியில் மிதக்க விட்டுவிடுவார். நதியில் மிதந்து வரும் குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்ப்பார்கள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஓடும் கங்கை நதியில் கரையோரம் படகில் குலுசவுத்ரி என்பவர் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்தபடி வந்தது.

உடனே அப்பகுதி மக்கள் மரப்பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்குழந்தை பிறந்து 20 நாட்களே இருக்கும்.

அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த மரப்பெட்டியில் சிவப்பு நிற துணியில் குழந்தை சுற்றப்பட்டு இருந்தது. மேலும் காளிதேவியின் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தது.

அக்குழந்தையை தானே வளர்ப்பதாக கூறி படகுக்காரர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்

இதற்கிடையே கங்கை நதியில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். குழந்தைக்கான வளர்ப்பு செலவு, வீடு உள்பட அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

குழந்தையை கண்டெடுத்த படகுக்காரரிடமே அந்த குழந்தை வளர்க்க ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு கங்கா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. மரப்பெட்டியை முழுமையாக தயார் செய்து நதியில் மிதக்க விட்டுள்ளனர். அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கி இருக்கிறார்கள். குழந்தையின் உடல்நிலையை ஆஸ்பத்திரியில் பரிசோதித்து பார்த்தோம். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.





xxx


காஷ்மீரில் பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு பூமி பூஜை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு


காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் பாலாஜி வெங்கடேஸ்வரர்  கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளது.

அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது:-

மாதா வைஷ்ணோ தேவி மண்ணில் ஏழுமலையான் கோவில் அமைய வேண்டும் என்ற காஷ்மீர் மற்றும் வடஇந்திய மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தேவஸ்தானத்துக்கு நன்றி. இந்த நாள், காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள்.

கோவில் கட்டி முடித்த பிறகு, இது ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும். முக்கிய பூசாரிகள், மேற்பார்வையாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளூர் மக்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினாா்.

மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ரூ.33 கோடியே 22 லட்சம் செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைகிறது. வேதபாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர் குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் அந்த வளாகத்தில் அமைய உள்ளன.

xxxx


திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட 5 கோவில்களில் ‘ரோப்கார்’ வசதிக்கு நேரடி  ஆய்வு

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜூன் 16ம் தேதி  திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு கோவில் குருக்கள் ராமநாதன், பிரபு ஆகியோர் தலைமையில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரை தரிசனம் செய்த அவர் பின்னர், தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து மலைக்கோட்டைக்கு சென்று மூலவர் உச்சிப்பிள்ளையாரை வழிபட்டார்.
இந்த ஆய்வின்போது மலைக்கோட்டை கோவிலை மேம்படுத்துவது தொடர்பாகவும், ‘ரோப்கார்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வுக்கு பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநீர்மலை கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய 5 கோவில்களில் ‘ரோப் கார்’ அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஆய்வு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மலைக்கோட்டையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோப்கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.


மீதி உள்ள கோவில்களிலும் ஆய்வு முடித்த பின்னர் இதன் அறிக்கைகள் முதல்-அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும். இத்திட்டங்கள் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டவை. இடையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


தமிழகத்தில் சைவம், வைணவம் என 6 ஆகம பள்ளிகள் இருக்கிறது. அதை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இந்த பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து ஆகம பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.


இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளன. அதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து வாரந்தோறும் ஆணையர் தலைமையில் பரிசீலனை செய்து ஏற்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து குறைகள் தீர்க்கப்படும்.
தமிழகத்தில் இன்னும் ஒருவாரத்திற்குள் நோய்த்தொற்று விரட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, அச்சம் விலகும் நிலையில் கோவில்கள் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு விடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
xxxx

சிவசங்கர் பாபா டில்லியில் கைது



பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது ‘சுஷில் ஹரி இன்டர் நேஷனல்’ பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபா மீது ‘போக்சோ’ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றன

இந்நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். இதனால், டி.எஸ்.பி. குணவர்மன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எஸ்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் டேராடூன் விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பியோடினார். டில்லியின் காசியாபாத்தில் பதுங்கி இருந்த அவரை டில்லி போலீசார் கைது செய்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


இவ்வழக்கில் சென்னையைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர் .


xxx


ராமர் கோவில் கட்டுவதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார்:

அயோத்தியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ. 18 கோடிக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் கீழ் 70 ஏக்கர் நிலம் உள்ளது.  


ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஒட்டி 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் உடனடியாக ரூ. 18.5 கோடிக்கு ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும்


பத்திரப்பதிவுகளும் மற்றும் முத்திரைதாள்களும் மோசடி நடந்ததற்கு சான்று ஆவணங்களாக இருக்கின்றன  என்றும் சில நிமிடங்களில் நிலத்தின் விலை மதிப்பு பல கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு மோசடியே காரணம் என்றும்  சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராமர் கோவில் விவகாரம் அரசியல் கட்சிகளின் வியூகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அயோத்தியில் நிலம் மோசடி குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. நிலம் மோசடியில் அயோத்தி மாநகர மேயர் மற்றும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

குற்றச்சாட்டை மறுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் அறக்கட்டளையின் செயலாளருமான சம்பத் ராய், அரசியல் நோக்கத்திற்காக குற்றஞ்சாட்டப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் வளர்ச்சி பணிகளை உத்தரப் பிரதேச அரசு துவக்கி உள்ளதால் நிலத்தின் விலை மதிப்பு உயர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
xxx



மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை; தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு


 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.

பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் நடத்தினர்.

தீ விபத்திற்கு அம்மனே காரணம். தினப்படி நிவேதனத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். தந்திரிக்குரிய மரியாதைகள் தரப்பட வேண்டும். நாகர் சன்னதியின் கூரை அகற்றப்பட வேண்டும். அம்மனுக்கு மாதம் ஒரு நாள் மூன்று வேளை பிராமண பூஜை நடத்த வேண்டும். கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்க வேண்டும்.

மூலஸ்தான கூரை அமைக்கும் போது பலா மரத்தின் தடிகளை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் தேவசம்போர்டு சார்பில் தங்க தேரில் தேவியை அமர்த்தி பவனியாக வரவேண்டும். இவ்வாறு பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர்.

கோவிலில் தேவியுடன் ஒரு யக்ஷி -துணை தேவதை தெரிவதாகவும், அதற்கும் சன்னதி அமைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இல்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் மறுத்தனர். அந்த சிலை இருக்கும் இடத்தை பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர். அங்கு மண்ணுக்குள் தோண்டியபோது சிலை இருந்தது. சிலை வெளியே எடுக்கப்பட்டது. சன்னதி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது
xxx


சிவகங்கையில் கோயில் நிலம் மீட்பு

சிவகங்கையில், மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் – பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.


திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதன்படி சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. அடுத்து அடுத்து தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
xxx


இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்
ராணி ஸ்ரீனிவாசன்
நன்றி, வணக்கம்

tags-  tamilhindu, newsroundup20621,

உலக இந்து சமய செய்தி மடல் 30-5-2021 (Post No.9667)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9667

Date uploaded in London – –30 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று May   30 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

ஆயுர்வேத மருந்தை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் உதவும்

ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.

இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.

அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.



 

ஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது

Xxxx

பாபா ராம்தேவ் சவால்! அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது!!

அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ.1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

.

பாபா ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், “நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. அந்நிகழ்வில் பாபா ராம்தேவ் அவர்கள் தனக்கு வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.

பதஞ்சலி நிறுவனம் குற்றச்சாட்டு

இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே ஏ ஜெயபால் இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்க சதி செய்வதாகவும் அதனால்தான் ஆயுர்வேதம் மற்றும் யோகா முறைகளைக் குறை கூ றுவதாகவும்  யோகா குரு பாபா ராமதேவின் உதவியாளர் ஆசார்ய பாலகிருஷ்ணா டிவிட்டரில் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், “அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் பேசுகிறார்.

xxxxx

கேரள தேவசம் போர்டின் வருவாய் ரூ.261 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக சரிவு

திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.


கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாய், தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுகிறது. ஊதியம், ஓய்வூதியம் என, ஆண்டுக்கு ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.


கோவிட் காரணமாக கடந்த 2020ம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் தேவசம்போர்ட் நிதி கோரியுள்ளது. தற்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

xxxx

தமிழ்நாட்டு அமைச்சர்களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைப்பு!

புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை, வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக 70 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் 30 அமைச்சர்களுக்கு, பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், தனக்கு பங்களா வேண்டாம் என்று கூறி விட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் சென்னையில் வசிப்பதால், அவர்களுக்கும் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., வேண்டுகோளை ஏற்று, அவர் தங்கியுள்ள பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். ஐந்து பேர் இன்னும் காலி செய்யவில்லை. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் வாஸ்துப்படி சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தி.மு.க., அமைச்சர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கை, சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின் விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

Xxxxx

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது கடந்த May 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து 27-ந் தேதி பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.

ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.

Xxxx

திருப்பதியில் கருட வாரதி மேம்பாலத் திட்டம்

ஆந்திர நிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளை பக்தர்கள்  நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் சென்று தரிசனம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பக்தர்கள் வரத்து பெரிதும் குறைந்துள்ளது. திருப்பதி நகரில் கருட வாரதி என்ற பெயரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளை கபிலதீர்த்தம் சர்க்கிள் வரை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தை விரைவாக கட்டி முடிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பாலம் கட்டுமானப் பணிகளை திருப்பதி நகராட்சி பூங்கா அருகே தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ் ரெட்டி உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, நான்கு வழி மேம்பாலமாக கட்டப்பட்டு வரும் கருட வாரதியை அலிபிரி டோல்கேட் வரை நீட்டிக்க வேண்டும்.



இதன்மூலம் திருமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பல்வேறு சிக்னல்களில் நின்று செல்வது தடுக்கப்பட்டு கால விரயத்தை தவிர்க்கலாம். திருமலைக்கு நடைபயணமாக செல்ல விரும்பும் பக்தர்களும் அலிபிரிக்கு விரைவாக சென்றடைய முடியும்.



இதற்கான கூடுதல் செலவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதில் உரிய முடிவெடுத்த பின்னர் செலவை ஏற்பது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

xxxxx

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர்-தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் அந்த பகுதியில் உள்ள திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.

அந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இரவு 10 மணிக்கு திருஞானசம்பந்தர்- தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.


இதனையடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சாமி-அம்மன் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Xxxxx

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.

முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறறது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் அவதரித்ததும் நிருவாணமடைந்ததும் இதே திதியிற்தான் என்பர்.

Xxxx

கோவை ஈஷா  அமைப்பின்  கொரோனா தடுப்பு சேவை!

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பிபிஇ கிட்டுகள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.


அப்போது அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு 500 பிபிஇ கிட்கள், 5 ஆயிரம் என்95 மாஸ்க்கள், 500 சிபிஏபி முக கவசங்கள் வழங்கப்பட்டன.


ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் செய்யப்படும் சேவைகள் குறித்து நிருபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.



அதேபோல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- tamilhindu, newsroundup, 30521