31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)

Picture line- London University Tiru Valluvar Statue Installation- Right extreme-London Swaminatha, Left extreme Dr Sighvi, High Commissioner of India in Britain

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,311

Date uploaded in London – 30 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர்

திருக்குறளில் உள்ள 31 இந்துமத செய்திகள் – இந்த மாத காலண்டரில் இடம்பெறுகின்றன.

பண்டிகை நாட்கள்: 2- காந்தி ஜயந்தி 3-துர்காஷ்டமி 4- ஸரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை5-விஜயதசமி /தசரா 24- தீபாவளி பண்டிகைலெட்சுமி குபேர பூஜை 25-சூரிய கிரஹணம் 25/26 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் 30- கந்த சஷ்டிசூர சம்ஹாரம்

அமாவாசை – 24/25பெளர்ணமி – 9ஏகாதஸி விரத நாட்கள் – 621

சுபமுஹுர்த்த நாட்கள் –  2830

அக்டோபர்  1 சனிக்கிழமை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்-குறள் 1; அக்ஷரானாம் அகாரோஸ்மி – பகவத் கீதையில் (10-33) கண்ணன் ; ஸம்ஸ்க்ருத சொல்லான அகார — என்பதை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

xxx

அக்டோபர்  2 ஞாயிற்றுக் கிழமை

இந்திரன் பற்றி

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. –குறள் எண் – 25

xxx

அக்டோபர்  3 திங்கட் கிழமை

மோக்ஷம் அடைய வழி –

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்–  குறள் எண்:38

xxx

அக்டோபர்  4 செவ்வாய்க் கிழமை

குறள் 580ல் சிவன் மகிழ்ச்சியோடு விஷம் குடித்த கதையைப் பாடுகிறார்- 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்– குறள் 580

நஞ்சுண்ட கண்டன் = சிவன்.

xxx

அக்டோபர்  5 புதன் கிழமை

தானம்தவம் என்ற பகவத் கீதையின் ஸம்ஸ்ருதச் சொற்களை அப்படியே எடுத்தாண்டு இந்துமதத்தின் உயர்வினைக் காட்டுகிறார் -குறள்கள் 19, 295

xxx

அக்டோபர்  6 வியாழக் கிழமை

முதல் அதிகாரத்தில் இறைவனின் பாத கமலங்களை தாள்அடி என்று 7 குறள்களில் சொல்லி வள்ளுவர்,  தான் ஒரு தூய ஹிந்து என்பதை சத்தியம் செய்கிறார்; மற்ற மதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை

xxx

அக்டோபர்  7  வெள்ளிக் கிழமை

நூலின் பெயர் முப்பால் -தர்ம, அர்த்த, காம – ஆறாம், பொருள், இன்பத்துப் பால் ; குறள்கள் 754, 760, 501 ஆகியவற்றில் தர்மஅர்த்தகாம என்பதைத் திரும்ப வலியுறுத் துகிறார்.

xxx

அக்டோபர்  8 சனிக்கிழமை

இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞம் ; யமனுடைய திக்கு- தெற்கு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை -குறள் 43

xxx

அக்டோபர்  9 ஞாயிற்றுக் கிழமை

ராமனும் கிருஷ்ணனும் , காஞ்சி பரமாசார்யாளும், ரமணரும் கடவுளே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்–குறள் 50

xxx

அக்டோபர்  10 திங்கட் கிழமை

இந்து மதக் கருத்து- 7 பிறவிகள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்-குறள் 62, also 107

xxxx

அக்டோபர்  11 செவ்வாய்க் கிழமை

இந்திரர் அமிழ்தம் (புறநானூற்றிலும் உள்ளது ; பாடல் 182

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்–குறள் 64 ; ALSO 82, 720, 1106

xxx

அக்டோபர்  12 புதன் கிழமை

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்–குறள் : 70, also 160

இந்துமதம் தவிர வேறு எதிலும் ‘தவம் செய்து பிள்ளை’ பெறும் வழக்கம் இல்லை

xxx

அக்டோபர்  13 வியாழக் கிழமை

லக்ஷ்மி , அவளுடைய அக்காள் மூதேவி பற்றி

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்-குறள் 179, Also 617, 519, 920,936

xxx

அக்டோபர்  14 வெள்ளிக் கிழமை

ஈசாவாஸ்யோபநிஷத் கருத்து

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு– குறள் எண்:180

அசையும் உலகனைத்தும் ஈசனால் நிரம்பியுள்ளது;

அதைத் துறந்து நீ இன்பம் துய்த்திடுக;பிறர் பொருளை விரும்பற்க.  

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .

தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷

xxx

அக்டோபர்  15 சனிக்கிழமை

தீதும் நன்றும் பிறர்தர வாரா- புறநானூறு 192; கர்மா வினை கருத்து

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்.

xxx

அக்டோபர்  16 ஞாயிற்றுக் கிழமை

பகவத் கீதை 2-47

கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)

கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு–குறள் 211

xxx

அக்டோபர்  17 திங்கட் கிழமை

உத்திஷ்ட! யசோ லப !! எழுந்திரு, புகழ்  அடை (பகவத் கீதா 11-33)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று-  குறள்:236

xxx

அக்டோபர்  18 செவ்வாய்க் கிழமை

வாமன/ த்ரிவிக்ரம அவதாரம்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு–குறள் 610

XXX

அக்டோபர்  19 புதன் கிழமை

உலகைப் படைத்த பிரம்மா பற்றி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்–குறள் 1062

XXX

அக்டோபர்  20 வியாழக் கிழமை

யமன் பற்றி – மார்க்கண்டேயர் கதை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு- குறள் 269 ALSO 326, 765, 1083, 1085

XXX

அக்டோபர்  21 வெள்ளிக் கிழமை

தேவலோகம், இந்திரலோகம் பற்றி

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.–குறள் 58 ALSO  213, 222, 234, 290

XXX

அக்டோபர்  22 சனிக்கிழமை

அரவிந்தாக்ஷன், கமலநயனன் , தாமரைக்கண்ணன் – விஷ்ணு பற்றி

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு—குறள் 1103

தாமரைக் கண்ணான் உலகு= வைகுந்தம்

XXX

அக்டோபர்  23 ஞாயிற்றுக் கிழமை

பன்மாயக் கள்வன் – மாய கிருஷ்ணன் ; கோபி கிருஷ்ணா

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை–குறள் 1258

XXX

அக்டோபர்  24 திங்கட் கிழமை

அகஸ்தியர்- நகுஷன் கதை, பரசுராமன், சாணக்கியன் கதைகள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்–குறள் 899

XXX

அக்டோபர்  25 செவ்வாய்க் கிழமை

யமனைக் கைதட்டி அழைத்தல் -தக்ஷன் கதை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்–குறள் 894

XXX

அக்டோபர்  26 புதன் கிழமை

பிராமணர் வேதம், கோ மாதா பற்றி

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்- குறள் 560 ALSO 134,543, 8, 30

XXX

அக்டோபர்  27 வியாழக் கிழமை

குருகுலத்தில் முதல் பாடம் – தர்மம் சர ; அது மட்டுமே செத்த பிறகும் கூட வரும் . மஹாபாரதக் கதை – தருமனுடன் கடைசி வரை வந்த நாய்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை–குறள் 36

அக்டோபர்  28  வெள்ளிக் கிழமை

நல்லோரை வாழ்த்திட தீயோரை வீழ்த்திட; பரித்ராணாய ஸாதூனாம் –கீதை 4-8

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்–குறள் 550

XXX

அக்டோபர்  29 சனிக்கிழமை

ஆசாரம் பற்றி

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது–குறள் 1075

XXX

அக்டோபர்  30 ஞாயிற்றுக் கிழமை

அஸ்வத்தாமா தீ வைத்த மஹாபாரத/ பஞ்ச தந்திரக்  கதை

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது–குறள் 481

Other Pancha tantra stories in Tirukkural  – 273, 274, 277, 481, 500, 495, 633, 1087,

XXX

அக்டோபர்  31 திங்கட் கிழமை

ஆண்டவன், கடவுள், இறைவன் என்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் தெய்வம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே வள்ளுவர் போற்றினார்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை– குறள் 55

‘கணவனே கண்கண்ட தெய்வம்’; ‘பத்தினிப் பெண்கள் அற்புதம் செய்ய முடியும்’ என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு

தெய்வம் Deiva / divine – 43, 50, 55, 619, 702, 1023

–SUBHAM–

tags-  திருக்குறளில், இந்துமதம், அக்டோபர் 2022 ,காலண்டர், குறள்

மத்தவிலாச பிரஹசனம் (Post No.11,310)

WRITTEN BY B. Kannan, Delhi

Post No. 11,310

Date uploaded in London – –    30 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிறமொழி நையாண்டிக் காவியம்                                        

                      மத்தவிலாச பிரஹசனம்

                      Written By B.Kannan, New Delhi

மத்தவிலாசம் என்கிற மத்தவிலாச பிரஹசனம்‎ கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத அங்கத நாடகம். இதைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவன் இயற் றியுள்ளார்.

ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்தி ருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய் கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுப தன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7-ஆம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றி யும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இயற்றப்பட்ட மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் என்ற இரண்டு அங்கத நாடகங்களும் இந்திய இலக்கிய வரலாற்றில் ஓர் உன்னத மான காலகட்டத்தின் சான்றுகளாகும். இந்திய அங்கத இலக்கியத்திற்கு மிகப் பழ மையான எடுத்துக்காட்டுகளாகும் இவை. இவையிரண்டும் மகேந்திரன் காலத்தி லேயே முன்னோடிகளாக எண்ணப்பட்டன. இந்த நாடகங்களின் முன்னுரைகளே இந்த உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. பகவதஜ்ஜுகத்தின் முன்னுரையில் அரங்கப் பொறுப்பாளி சூத்திரதாரி தனது நண்பனிடம் நகைச்சுவை சிறந்து தோன்று கிற அங்கத நாடகம் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நண்பன் விதூஷகன் அந்தவிதமான நாடகத்தைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான்.

மத்தவிலா¡ச அங்கதத்தில் போதைக் களிப்பு நிறைந்த அங்கத நாடகம் போடப்போவ தாக சூத்திரதாரி சொல்லும்போது, அவனது மனைவி நடீ, அந்தவிதமான நாடகம் புது முயற்சி என்கிறாள். குடவரைக் கோயிலமைப்பு மற்றும் இசை இவைகளுக்கு மட்டுமின்றி நாடகக் கலைக்கும் மகேந்திரன் முன்னோடி என்பதை இக்குறிப்புகள் வெளிப் படுத்துகின்றன. இசை நயம் இந்த நாடகங்களின் மற்றுமொரு சிறப்பு அம்ச மாகும். எடுத்துக்காட்டாக, மத்தவிலாச நாடகத்தின் வசனத்துள் இருபத்துமூன்று பாடல்கள் இணைந்துள்ளன. இந்த இசைநய அங்கதங்கள் ஷேக்ஸ்பியர் காலத்திற் கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தியவையாகும்.

பல்லவ அரசின் தலைநகரான காஞ்சிபுரம் மத்தவிலாச நாடகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. சத்தியசோமன் என்னும் கபாலிகன், அவனுடைய துணைவி தேவ சோமா இவர்களின் குடிக்களியாட்டத்தை மையமாகக் கொண்டு நாடகம் இயங்குகி றது. கபாலிகர் என்பவர்கள் புரட்சிக்கார சைவர்கள். மதுவுண்ணல், மயங்கியாடல், கூடவே துணைவியரோடு யோகபோகம் செய்தல் முதலியவை இவர்களுடைய வேள்விகள் ஆகும். மயானக் காடுதான் கபாலிகர்களின் உறைவிடம். பாத்திரம் போன்ற கபால வோட்டின் மேல் பாகத்தைத் தானவோடாகப் பயன்படுத்துவர். இதன் காரணமாகத்தான் இவர்கள் கபாலிகர் எனப்பட்டார்கள். பிரமனின் சிரம் அறுத்து வேள்வி செய்த சிவ பெருமான் பற்றிய புராண நிகழ்ச்சியைக் குறிப்பாக உணர்த்து வது இது.

சத்தியசோமனாகிய கபாலியின் தானக் கபாலம் காணாமல் போகிறது. அதைத்தேடிக் கண்டெடுத்துக் கொள்வதே நாடகத்தின் கருப்பொருள். குடித்துவிட்டு அரங்கில் நுழை கிறார்கள் கபாலியும் தேவசோமாவும். மதுவுண்ணும் பெருஞ் சபதத்தில் நிலைத்து நிற்பதால் அவளிடம் தோன்றியப் பெரிய மாற்றத்தை கபாலி பாராட்டுகிறான்.

முத்தென வியர்வை சொரிந்திடும் எழில் முகம்
முழுவதும் அழகுற நெளிந்திடும் புருவம்
மத்த நடை ஒரு பொருளற்ற முறுவல்
முறையறு அசையொடு முழங்கிய வாய்மொழி
மருங்கினில் தொங்கியே சுழல் இருவிழிகள்
மேல் இளஞ்சாயச் செந்நிறத் தேமல்
நறுமலர் மாலை ஊடறுந் தளர்ந்திட
தடந்தோள் விளிம்பினில் விழுந்திடும் குழைகள். என அவளிடம் குழைகிறான்

பேச்சின் போக்கிலேயே கபாலி போதை மயக்கத்தில் அவளது பெயரை சோமதேவா என மாற்றிச் சொல்லிவிடுகிறான். அவன் வேறு பெண்ணிடம் சகவாசம் வைத்தி ருக்கிறான் என்று பொறாமை கொள்கிறாள் தேவசோமா. அதைப் போதை மயக்கத் தால் வந்த நா பிசகு எனக் கூறி மன்னிப்பும் கேட்கிறான் சத்தியசோமன். இனி குடிப் பதில்லை என்று சபதமும் செய்கிறான். தனது காரணமாக சபதத்தை முறித்து அழிந்து போக வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள் தேவசோமா!

இருவரும் வேறு மதுக்கடைக்குப் போகிறார்கள். (அன்றைய ‘டாஸ்மாக் கடை, அமர்ந்து குடிக்குமிடம் ஆகியவற்றைக் கபாலிகன் வர்ணிப்பதைப் பாருங்கள்)

அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத் துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறி யும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாமவேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்… ஆகவே தாராளமாகக்

குடிப்போம். ‘

மதுவைக்குடி காதல் முகத்தை ரசி
தன்னுணர்வின்றியே திகிலுடை தரி
முத்திப் பாதையை இப்படி விதித்த
சூலப் படைச்சிவன் அ(ரு)ளுக என்றும் (நம்மை) எனப் பாடியவாறே கடைக்குள் போகிறார்கள்.

அங்கே தானமாக மதுவைப் பெறப் போகும் போது தனது தானவோடு காணாமல் போனதை அறிகிறான் சத்தியசோமன். நிலைமையைக் கருதி தேவசோமா மாட்டுக் கொம்பில் மதுவை வாங்குகிறாள். சத்தியசோமா கபாலவோட்டுக்காக ஏங்கித் தவிக் கிறான். பழைய இடத்துக்கே வந்து தேடுகிறார்கள். அங்கும் கபாலவோட்டைக் காண வில்லை. தானக் கபாலத்தில் சிறிது பொரித்த மாமிசக் கறி இருந்ததால் அதை ஒரு நாய் அல்லது புத்த துறவிதான் எடுத்திருக்க வேண்டும் என்று சத்தியசோமன் நிர்ண யம் செய்கிறான். அப்போது அங்கு ஒரு புத்த துறவி வருகிறார். கபாலிகர் ஜோடி, தான வோட்டைத் திருடிக்கொண்டது அவர்தான் என்று முடிவு கட்டுகிறது. சண்டை மூளுகிறது. இப்பொழுது சத்தியசோமனுக்கு அறிமுகமான பாசுபதன் என்று பெயர் கொண்ட துறவி வந்து மத்தியஸ்தம் செய்கிறான். முடிவற்ற தர்க்கத்தின் இறுதியில் புத்த துறவி சோர்வடைந்து தனது கபால வோட்டை ஒப்படைக்கவே தயாராகிறான். உண்மையான கபாலவோட்டை அதிலிருந்த மாமிசத்துக்காக ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது. ஒரு பைத்தியக்காரன் அதைத் துரத்திச் சென்று திருவோ டைப் பறிக்கிறான் இதோ அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வதைக் கேளுங்கள்.

அதோ, அதோ இருக்கிறது அந்தப் பொல்லாத நாய். பொரித்த கறியுடைய கபால வோட்டை எடுத்துக்கொண்டு ஓடுகிறாய். அயோக்கியனே, எங்கே போவாய்? இப் பொழுது மண்டையோட்டைக் கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடி வருகிறது. (சுற்றிப் பார்த்து) நான் அதனுடைய பற்களை இந்தக் கல்லால் பொடியாக்கி விடு வேன். கேடு கெட்ட பைத்தியக்கார நாயே, ஏன் கபாலவோட்டைப் போட்டு விட்டு ஓடுகிறாய்? இந்த வீரத்தனத்தில் என்னிடத்தில் ஏன் கோபப்படுகிறாய்? நாட்டுப்புறப் பன்றியின் முதுகின்மீது ஏறி உயரே ஆகாயத்தில் குதித்தேன். சமுத்திரத்தை ஆயுத மாக்கி ஐராவத யானையை வீழ்த்தினேன். இந்திரனின் பிள்ளை மிருக ஜந்து அந்தத் திமிங்கிலத்தையும் பிடித்தேன். ஓய் ஆமணக்கு மரமே, நீ என்ன சொல்லுகிறாய்? அது பொய், பொய் என்றா சொல்லுகிறாய்? இதனால் கொழுத்த குளவி போன்ற கையுடைய இந்தச் சொறித் தவளை இருக்கிறானே அவன் தான் நமக்குச் சாட்சி. ஏன்? மூன்று உலகத்திற்கும் வீரத்திற்குப் பெயர் பெற்ற ஒருவனுக்குச் சாட்சிக்கு என்ன தேவை இருக்கிறது? நான் இப்படிச் செய்கிறேன். நாய் விட்டுப் போன கறித் துண்டை உண்ணுகிறேன். (சாப்பிட,காரக் கறியினால் பைத்தியம் தலைக்கேறுகிறது)…. பலத்த வாக்குவாதத்துக்குப் பின்னர், பாசுபதனின் உதவியுடன் கபாலவோடு உரியவ னானக் கபாலிகனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கபாலவோட்டை அரவணைத்துக்கொண்டு, மதுவருந்தியத் தள்ளலுடன் துள்ளிக் குதித்துப் பாடிக் கொண்டுச் செல்கிறான் கபாலிகன் தன் துணையோடு

காலம் பலவும் பல கலையாத் தவமியற்றி
மகேசுரனுக்கு என்னை நான் கொடுத்திருந்தேன்
புனித கபாலமுனைக் கண்ட இக்கணமே,
இமைத்தக் களிப்பினிலே எந்தனுள்ளம் விட்டு
அமலன் அவனுமுடன் ஏகிவிட்டனே! 
இவ்வாறு முடிவில் மகிழ்ச்சியுடன் எல்லோரும் நண்பர்களாகப் பிரிந்து செல்கி றார்கள்.
இந்தக் கபாலி மற்றும் பாசுபதப் பிரிவினர் மகேந்திரன் காலத்தில் சீர்குலைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். இதனை நாடகத்தில் மன்னர் எள்ளி நகையாடு கிறார். இவர்கள் இந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவில் கபாலிகர் பின்பற்றும் தாந்திரீகத் தத்துவம் ஒரு முக்கியத் தத்துவமாக இருந்தது. புராதன சைவர்கள் ஏற் றுக்கொள்ளாத ஐந்து செய்திகள் தாந்திரீகத்தின்படி முக்தி வழிகளாகும். அவை பஞ்ச மகரங்கள் எனப்படும். 1. மத்தியம் (மது), 2. மாமிசம் (புலால்), 3. மத்சியம் (மீன்), 4. மதுரம், 5. மைதுனம் (யோகபோகம்) என்பன அவை. நாடகத்தில் ஆசிரியர் இவற்றை யெல்லாம் குறிப்பாக எடுத்தாளுகிறார்.



மத்தவிலாசம் ஏழாம் நூற்றாண்டின் காஞ்சிபுரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏகாம்பரநாதர் கோயில் நேரடியாகவே குறிக்கப்படுகிறது. கோவிலின் மத்தள ஓசை, பூக்கடைகள், எழிலுடைய இளமங்கையர் – இவை போன்ற குறிப்புகளும் காணப்படு கின்றன. ஆண்டவனே, காஞ்சி இந்த தெய்வீக மதுவைப் போலவே அப்பழுக்கற்றுச் சுவைக்கிறது, என்கிறாள் தேவசோமா மகேந்திரவர்மனின் பல பட்டப்பெயர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சூத்திரதாரி என்பவனால் நாடகம் தொடங்கி வைக்கப்படு கிறது. முன்னுரைக்குப்பின் நாடகம் இயல்பாக இணைக்கப்படுகிறது. சூத்திரதாரி ஆசிரியருடைய புகழைப் பாடியே பழகிவிட்டது என்று சொல்லுகிற உரையாடலின் தொடர்ச்சியாக, நாடகப் பாத்திரமான கபாலிகன் சொல்லுகிற மதுவருந்தியே பழகி விட்டது என்ற உரையாடல் அமைகிறது. சமணர்கள் நாத்திகர்கள்,அவர்களைப் பற் றிச் சொன்ன வாயை மதுவைக் கொண்டு கொப்புளிக்க வேண்டும் என்று வேறொரு இடத்தில் கூறுகிறான் கபாலிகன்!

மகேந்திரவர்மனின் மற்றொரு நாடகமான பகவதஜ்ஜுகத்திலும் இது போன்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனந்தமுடன் ரசித்துப் படிக்கலாம்.

 

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post …

https://tamilandvedas.com › நகை…

Written by London Swaminathan. Date: 26 NOVEMBER 2017. Time uploaded in London- 9-09 am. Post No4434. Pictures shown here are taken from various sources …

கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி (Post No.11,309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,309

Date uploaded in London – –    30 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை என்பதை நிரூபி!

ச.நாகராஜன்

கடவுளைக் காட்டு என்போருக்கு ஆன்மீக அருளாளர்களும், அறிஞர்களும், அறிவியல் மேதைகளும் பலவாறாக பதில் கூறி விட்டார்கள்; இன்னும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் பதில் சொல்லி வருகின்றனர்.

ஆனால் நீ சொல்லப் போவது எதுவும் எனக்குப் புரியப் போவதில்லை என்ற நிலையை முதலிலேயே எடுத்துக் கொண்டவர்களிடம் எதைச் சொல்வது? அவர்களுக்குத் தான் எது சொன்னாலும் புரியப் போவதில்லையே.

என்றாலும் கூட இறை நம்பிக்கை பற்றித் தங்களை மேம்படுத்திக் கொள்ள விழைவோருக்கு கடவுளைப் பற்றி விளக்க வேண்டியது சமூகம் சார்ந்த ஒரு கடமையாக ஆகிறது.

விஞ்ஞான பூர்வமாக விளக்கம் கேட்போருக்கு அறிவியலை வைத்தே ஆதாரம் காட்ட வேண்டி இருக்கிறது.

கணிதத்தை எடுத்துக் கொண்டால் உலகில் நாம் காணும் எதிலும் ஒரு கணித அமைப்பு இருக்கிறது.

ஒன்றை 137 என்ற எண்ணால் வகுத்தால் வரும் விடை பிரமிக்க வைக்கும் ஒன்று. அது பூஜ்யம். வகுத்து வரும் மீதமோ 1.

1 divided by 137 = 0. The remainder is 1.

1/137 is 0.007299270072992700729927007299270072992700729927007299270072992701 (in the set of reals).

இது ஏன் இப்படி வருகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

137 என்ற எண்ணின் மகத்துவத்தை அறிவியல் அறிஞர்களே அதிசயத்துடன் பார்க்கின்றனர்.

கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பதில் கேள்வியாக இப்போது பலரும் கேட்பது : “ நாங்கள் சொல்வதைச் சொல்லி விட்டோம்; இப்போது உங்களைக் கேட்கிறோம். கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபியுங்கள்” என்பது தான்.

இதற்கு பதிலைச் சொல்ல யாராலும் முடியவில்லை.

கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றால் அவரைப் படைத்தவர் யார் என்பது நாத்திகவாதிகளின் கேள்வி.

மண்ணால் ஆன குடம் என்று ஒன்றைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் என்று ஒருவன் இருக்கத் தானே வேண்டும்.

இல்லை, தானாக அனைத்தும் உருவாகியது என்பது புது நாத்திகவாதிகளின் வாதம்!

பிரபஞ்சம் பெரு வெடிப்பு என்ற நிகழ்வால் ஏற்பட்டது. சரி, ஒப்புக் கொள்கிறோம். அதற்கு முன்னால் என்ன இருந்தது? அந்தப் பெருவெடிப்பு ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது.

பதிலைக் காணோம்.

மனம் என்றால் என்ன, மனச்சாட்சி எங்கு எப்படி உருவாகிறது?

பதிலைக் காணோம்.

உயிர் எப்படி எப்போது எதற்காக ஒரு உடலில் சேர்கிறது, அது எப்படி எப்போது எதற்காக நீங்குகிறது. உயிரைக் கொஞ்சம் காட்டுங்கள்.

பதிலைக் காணோம்.

இயற்பியல் என்று எடுத்துக் கொண்டால் க்வாண்டம் மெகானிக்ஸ் என்ற புதிய கிளை வந்த பின்னர் ஹிந்து மதம் கூறும் கொள்கை அதனுடன் ஒத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து பிரமிக்கின்றனர்.

ஒரு துகளானது ஒரே சமயத்தில் ஒரு இடத்திலும் பல இடத்திலும் இருக்க முடியும் என்பதை தர்க்கவாதத்தால் அனுமதிக்க முடியவில்லை என்றாலும் க்வாண்டம் பிஸிக்ஸ் அதை வற்புறுத்துகிறது.

அறிவியல் சொல்வதால் அதை ஒப்புக் கொள்கிறோம்.

இதையே தான் இறைவன் எங்கும் பரவியுள்ளான் என்பதை ஆன்மீகம் வற்புறுத்துகிறது.

தி காட் டெலூஷன் (The God Delusion) என்ற தனது புத்தகத்தில் புதிய நாத்திகத்தைத் தீவிரமாகப் பரப்பி வரும் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins) கடவுள் நம்பிக்கைக்கான ஒரு அளவு கோலைத் தருகிறார்.

அந்த அளவுகோலில் 7 நிலைகள் உள்ளது!

யாராலும் மாற்றவே முடியாத தீவிர ஆன்மீகவாதி

100 விழுக்காடிற்கு நெருங்கி வரும் இறை பக்தர்

50 விழுக்காடிற்கு மேல் உள்ளவர். எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுளை நம்புகிறேன் என்பவர்.

எந்த ஒரு நிலையையும் எடுக்காத நடுநிலையாளர். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. நான் சந்தேகப்படுபவன் தான் என்று கூறுபவர்.

நாத்திகவாதியாக ஆகி வருபவர். 50 விழுக்காடிற்கும் கீழாக இருப்பவர். கடவுள் இருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் நாத்திகவாதி தான் நான்!

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுள் என்பவர் இருக்கவே முடியாது எனது வாழ்க்கையை அவர் இல்லை என்பதை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நிச்சயமாக கடவுள் இல்லை; இல்லவே இல்லை!

(Richard Dawkins Seven-Point Scale:

  • Strong Theist: 100 per cent probability of God. In the words of C.G. Jung: “I do not believe, I know.”
  • De facto Theist: Very high probability but short of 100 per cent. “I don’t know for certain, but I strongly believe in God and live my life on the assumption that he is there.”
  • Leaning towards Theism: Higher than 50 per cent but not very high. “I am very uncertain, but I am inclined to believe in God.”
  • Completely Impartial: Exactly 50 per cent. “God’s existence and non-existence are exactly equiprobable.”
  • Leaning towards Atheism: Lower than 50 per cent but not very low. “I do not know whether God exists but I’m inclined to be skeptical.”
  • De facto Atheist: Very low probability, but short of zero. “I don’t know for certain but I think God is very improbable, and I live my life on the assumption that he is not there.”
  • Strong Atheist: “I know there is no God, with the same conviction as Jung knows there is one.”)

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ரிச்சர்ட் டாகின்ஸே தன்னை ஆறாவது நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வது தான்.

ஒரு வேளை கடவுள் அவர் முன் வந்து நேரில் தோன்றி. “நான் இல்லை; நிச்சயமாக இல்லை” என்று உறுதி மொழி அளித்தவுடன் அவர் ஏழாவது நிலையான தீவிர நாத்திகர் என்ற நிலைக்குத் தாவி கடவுள் இல்லவே இல்லை; அவரே என்னிடம் சொன்னார் என்று சொல்லி விடுவாரோ என்னவோ!

கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்,(Christopher Hitchens)  சாம் ஹாரிஸ் (Sam Harris) உள்ளிட்டவர்கள் தங்களின் தீவிர நாத்திக வாதங்களை முன் வைக்கின்றனர்.

 அதே சமயம் பிரபல விஞ்ஞானியான ஃபிரான்ஸிஸ் எஸ். காலின்ஸ் (Francis S. Collins) எழுதியுள்ள ‘தி லாங்வேஜ் ஆஃப் காட்” (The Language of God) பிரபல ஆன்மீகவாதியான டீன் எல்.ஓவர்மேன் (Dean L. Overman) எழுதியுள்ள ‘எ கேஸ் ஃபார் தி எக்ஸிஸ்டென்ஸ் ஆஃப் காட் (A Case For The Existence of God), பிரபல அறிவியல் எழுத்தாளரான அமிர் டி. அக்ஸெல் (Amir D.Aczel) எழுதியுள்ள ‘ஒய் ஸயின்ஸ் டஸ் நாட் டிஸ்ப்ரூவ் காட்’ (Why Science Does not Disprove God) உள்ளிட்ட நூல்கள் பல அருமையான எடுத்துக்காட்டுகளுடன் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவனைப் பற்றிக் கூறுவதைப் படித்து மகிழலாம்.

இதே போல அறிவியல் உலகில் மேதைகளால் எழுதப்படும் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன.

இவற்றைப் படிப்பதோடு, படிக்கும் நல்ல கருத்துக்களை இறைவனைப் பற்றி அறியத் துடிக்கும் இளைய வயதினருக்கும் சொல்லலாம்.

அருணகிரிநாதர் சொல்வதை மறக்கமுடியுமா என்ன?

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும்               

     அடியார் இடைஞ்சல் களைவோனே”

–    அருணகிரிநாதர் (விறல் மாரனைந்து எனத் தொடங்கும் திருப்புகழ்)

—  subham—

Tags- கடவுளைக் காட்டு,  பதில் கேள்வி,: கடவுள்

புத்தக அறிமுகம் – 72

நாக நங்கை!

நாவலில் உள்ள அத்தியாயங்கள்

1. மூலிகை எங்கே?

2. நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும்

3. நாக நங்கை

4. அமாவின் சபதம்

5. சிற்றருவியில்!

6. ஜைன சித்தர் 

7. ஈட்டி பாய்ந்தது!

8. கடமையும் காதலும்

9. ராட்சஸ ஆசை!

10. நகர் பவனி

11. குரு தக்ஷிணை!

12 வாளின் மீது ஆணை

13. காதல் உஷ்ணம்!

14. மங்கையின் ரகசியம்!

15. உஜ்ஜயினிக்கு ஆபத்தா!

16. சத்திரத்துச் செய்தி

17. போர்த் திட்டம்!

18. தந்தையும் மகனும்!

19. கொலைகாரனின் ஈட்டி

20. நங்கைக்கும் நாகமணிக்கும் ஆபத்து!

21. மன்னர் எங்கே!

22. கௌடவஹோ

23. நாகாவலோகா

24. முடிவுரை

இந்த நாவலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது! பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்!

*

இந்தச் சரித்திர நாவலின் முன்னுரையில் பாரத தேசத்தின் வரலாற்றில் மாமன்னர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுகின்றன என்றும் அவற்றில் தன்னைக் கவர்ந்த ஒன்றை வாசகர்களுக்கு அளிப்பதாகவும் நாவல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். நாக நங்கை என்ற சரித்திர நாவலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

**

Sadhu Vaswani Quotations – OCTOBER 2022 CALENDAR (Post No.11,308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,308

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In September 2022 ‘Good Thoughts’ calendar I gave 30 quotations of Sri Vaswani; More Quotations from Sadhu Vaswani are given below.

Festival Days- October 2- Gandhi Jayanthi, 3-Durgashtami, 4- Sarasvati Puja/ Aayudha Puja, 5-Vijaya Dasami, Dasarah, 24- Deepavali/ Diwali, Laksmi Kubera Puja, 25- Solar Eclipse/ Surya Grahana, 25/26 Skanda Shashti Vrata begins, 30- Soora Samharam/ Skanda Shasti

Newmoon day/ Amavasyai- 24/25;Fullmoon day- 9

Ekadasi Fasting Days- 6, 21

Auspicious days- 28, 30

OCTOBER 1 Saturday

“The universe works like an echo: Whatever thoughts you think, will rebound on you. Therefore, be careful of the thoughts you think.”

OCTOBER 2 Sunday

“The secret of relaxation is in these three words: ‘Let it go”!”

OCTOBER 3 Monday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 4 Tuesday

If there is a language which the deaf can hear and the blind can see, it is the language of love!

OCTOBER 5 Wednesday

“Love can keep you healthy and happy, and help you face the problems of daily life in the right spirit.”

OCTOBER 6 Thursday

“With a healthy sense of humour you can confront the most difficult of situations and come out unscathed.”

OCTOBER 7 Friday

Peace has three dimensions. Peace within ourselves, peace among nations and peace with nature.

OCTOBER 8 Saturday

Refuse to be disturbed by anything. Refuse to be resentful or unhappy. And you will always feel on top of the world.

OCTOBER 9 Sunday

Problems and challenges are not a dead end; they are only a bend in the road.

OCTOBER 10 Monday

Problems are not stumbling blocks; they are stepping stones to a better, richer, more radiant life.

OCTOBER 11 Tuesday

Life is too short to be spent in fault-finding, holding grudges, or keeping memory of wrongs done to us. Forgive even before forgiveness is asked. Forgive and forget.

OCTOBER 12 Wednesday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 13 Thursday

The test of character is –

  • Do you have the courage to stand up for truth even though the heavens fall?
  • Can you smile in trouble?
  • Can you say “No” when evil tempts?

OCTOBER 14 Friday

It is not outer conditions that need to be changed. The change has to be brought within me to be able to see things as they are.

OCTOBER 15 Saturday

Be not afraid of life, but believe that every experience life brings to you is for your good. Move on in faith. Believe and achieve.

OCTOBER 16 Sunday

You may write wonderful commentaries on the Bhagavad Gita or any other world scriptures, but if you do not reflect the wisdom of these scriptures in word and action, how are you any better than a desktop printer?

OCTOBER 17 Monday

The stars can only indicate. They cannot compel. Man is the maker of his own destiny.

OCTOBER 18 Tuesday

We must build bridges between hearts, for building bridges of brotherhood is the price of a man’s survival.

OCTOBER 19 Wednesday

Selfless service equals meditation.

OCTOBER 20 Thursday

“We would miss some of the best lessons of life, if suffering did not come to us. Suffering is a great teacher.”

OCTOBER 21 Friday

Both rain and sunshine are needed to make a rainbow. Both joy and sorrow are needed to make a life truly beautiful and colorful.

OCTOBER 22 Saturday

The food of the soul is silence. If we don’t practice silence, we are starving ourselves.

OCTOBER 23 Sunday

Teach me O Lord! To observe all the rules of the game of life, never to lose my sense of humor, and always to hold my tongue when it is so difficult to hold it!

OCTOBER 24 Monday

Always look at the bright side of things and you will be happy and will make others happy.

OCTOBER 25 Tuesday

It is good to know many things, but it is always better to make good use of whatever little we know.

OCTOBER 26 Wednesday

What we give to this world comes back to us. Therefore, let us give love, kindness, help, sympathy and service and they will return to us, and we will stand strong as a towering lighthouse amidst the stormy waves of this world.

OCTOBER 27 Thursday

Every time you are irritated, you are burning up valuable emotional energy, which can be used constructively.

OCTOBER 28 Friday

Patience brings rhythm and harmony into our chaotic lives.

OCTOBER 29 Saturday

With faith we can achieve the impossible. Without faith we cannot cross the threshold.

OCTOBER 30 Sunday

The present system trains only the head. It produces sharp brains, not illuminated hearts. Education can only be complete when it trains the head, the hands (to serve) and the heart. It is the emotional quotient that leads to the sacrifice quotient, which in turn binds humanity.

OCTOBER 31 Monday

“The Guru is one who dwells in the Light and the Light dwells in him.”

–subham—

Tags–Sadhu Vaswani , Quotations , OCTOBER 2022 , CALENDAR,  Diwali

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3 (Post No.11,307)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,307

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இது மூன்றாம் பகுதி

மதுரை வைகை நதி ஒரு காலத்தில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அ தன் அழகை சங்க காலத்துக்குப் பின்ன எழுந்த சிலப்பதிகார காவியத்திலும் காணலாம். சங்க கால நூல்களில் எட்டுத் தொகையில் ஒன்று கலித்தொகை என்னும் நூல்;. வைகை நதியின் கரைகளில் உள்ள ஐந்து வினோத உருவம் கொண்ட மரங்கள்  இருந்தன.அவைகளின் பூக்களும் வெவ்வேறு நிறத்தில் பூத்துக் குலுங்கின இதைக்க கண்டவுடன் கலித்தொகை புலவருக்கு புராணம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார் :-

5 மரம் 5 கடவுள்

கலித்தொகை 26, பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;

(FROM PROJECT MADURAI WEBSITE)

பொருள்

ஒப்பற்ற குழைகளை அணிந்த பலதேவனைப் போல வெண்ணிற பூங்கொத்துக்களைக்  கொண்ட மராமரம் , பருதியஞ் செல்வனான கதிரவனைப் போல , விரிந்த இதழ்களைக் கொண்ட செருந்தி, சுறாமீனைக் கொடியாக உடைய மன்மதனைப்  போலக்  கரிய வண்டுகள் ஆர்க்கும் காஞ்சி, காமனின் தம்பியான சாமனைப்போல  நிறம் மாறுபட்டு, பசலை பாய்ந்து, தோன்றும் ஞாலல் , இடபக் கொடியை உடைய சிவனைப் போல சிவந்து தோன்றும் இலவம் — இவ்வாறு கரை அழகுடன் விளங்கியது .

என்ன ஆச்சரியம் பாருங்கள் ; மரங்களைக் கண்டாலும் கடவுள் நினைப்பேதான் ! அதுவும் காதல் கவிதை நிறைந்த நூலில். இந்தக்  கடவுளரும், அவர்களுடைய  கொடிகளும் தமிழர்களுக்குப் புதிதும் அல்ல.. ஏற்கனவே நக்கீரர் பாடிய புற நானூற்றுப் (56) பாடலிலும் இவைகளைக் காண்கிறோம். தமிழர்களுக்குத் தெரியாத வாகனங்களோ, புராணக் கதைகளோ கிடையாது!

Xxxx

திரிபுராந்தகன் (சிவன்)

கலித்தொகை நூலில் ஒரு விசித்திரமான ஒற்றுமையையும் காணலாம். உலகைத் தோற்றுவித்தவர் பிரம்மா.  பாலைக் கலியைத் துவங்கும்  பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அவர் பெயரைச் சொல்லி தொடங்குகிறார் அதுதான் நூலின் முதல் பாடல் !

முப்புரங்களை சிவன் எரித்த காட்சியை பல சங்கப்  புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துவர். பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அதை வருணிக்கிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழிலேயே  நாம் ‘முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா’- என்பதைக் காண்கிறோம்

கலித்தொகை 2

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,           

 அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,          

 மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்        

 கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்      

 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்          

 சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்         

 ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்  

 ஆறு கெட விலங்கிய அழல் அவிர் அரிடை –        

 மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,        

 இறப்பத் துணிந்தனிர், 2-9

பொருள்:

உலகம் தோன்றிய காலத்தே தோன்றிய முதியவனான நான்முகன் முதலாக, அடங்காதவர்களின் (அரக்கர்) வலிமை

தேவர் பலரும் வந்து முறையிட,சிங்கம் போல் சினத்துடன் சென்று ,மாய வேலை செய்யும் அரக்கர்களை வென்று எரிக்கும் வலிமையொடு,முக்கண்ணனான சிவன் முப்புரங்களையும் எரிக்க சினந்து நோக்கிய போது தோன்றிய அவன் முகம்போல,ஒளிரும் கதிரவன் (தீப்பிழம்பாக) சுடுகின்றான்.

சீறுகின்ற கணிச்சி படையை உடைய அந்த சிவன் சினந்து நோக்கியதால் அந்த மதில் சுவர்கள் படைகளால் தாக்கு பெற்று உதிர்வனபோல் (அக் கதிரவனின் வெம்மையால்) மலை வெடித்துச் சிதறி வழியை அடைத்து கிடக்கும். அரிய அவ்வழியாக -நீயும் கடந்து செல்ல நினைக்கிறாய்.

XXX

மஹாபாரதக் கதை

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,

மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்

குறங்கு அறுத்திடுவான் போல்கூர் நுதி மடுத்துஅதன்

நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,

மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,

கல் உயர் நனம் சாரல்கலந்து இயலும் நாட! கேள்;

பொருள்

அறம்  மறந்து , அதர்மத்தையே கொண்டவனாயிருந்தான் நூற்றுவர்  தலைவனான துரியோதனன்  அவனது தொடையை முறித்து பீம சேனன் அவனைக் கொன்றான். அது போல முறம் போன்ற காதுகளைக்கொண்ட யானை, தன் தந்தங்களால் புலியைக் குத்திக் கொன்றது . அதன்பிறகு அந்த யானை, மல்லரை வீழ்த்திய திருமாலைப்போல கம்பீரமாய் யானைக் கூட்டத்தில் உலவியது

திரு முருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய மூன்று சங்கத்தமிழ் நூல்களிலும்  நூற்றுக் கணக்கான புராண இதிஹாஸக் கதைகள் உள்ளன.

தொடரும்tags-  மஹாபாரதக் கதை, கலித்தொகை , 5 மரம் 5 கடவுள்,  பாலை பாடிய பெருங்கடுங்கோ

விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்! -Part 2 (Post No.11,306) 

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,306

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Part Two

 மின்சாரப் பம்ப் செட் புழக்கத்தில் வருவதற்கு முன் கிராமங்களில் வயலுக்கு நீர் பாய்ச்ச ‘ஏத்தம்’ உபயோகப்பட்டது. இளங்காலையில் விவசாயி “மூங்கில் இலை மேலே, தூங்கும் பனிநீரே! தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே!” என உல்லாசமாகப் பாடியவாறே ஏற்றம் இறைப்பர். அதை விளக்கும் ‘விடி’ ஒன்றை ஆசிரியர் தரும் அழகே, அழகு!

சீருண்ட மங்கையர்க்கு வளையல் விற்ற

   செம்மலுறை திருமதுரா புரிநன்னாட்டில்

நீரேறத் தலையாகும் வாலுங்கூழை

   நிற்பதுகீ ழிருகாலு மொருகான்மேலே

சீருடனே ஒருகாலில் நடக்கும்போது

திடமாக மெலிரண்டாட் சுமைசுமக்கும்

வாரணியுங் கொம்புமுள தோடிப்பாயும்

வண்மையுள விக்கதையை வழுத்துவீரே!

{ இறைவன் சொக்கநாதர் வளையல் வியாபாரியாகத் தோன்றி, அழகிய வணிகர் மகளிருக்கு வளையல்கள் விற்று, அணிவித்து, அவர்களின் சாபத்தைப் போக்கிய கூடல்மாநகரில் நடப்பதைப் பாருங்கள்! நீர் நிரப்பத் தலையாகும், குட்டை வாலு முண்டு,கீழே நிற்பதோ இருகால்,ஒருகால் மேலே, ஒழுங்காக அந்த ஒரு காலில் நடக்கும் போது, உறுதியுடன் எளிதாக இரண்டு ஆள் பாரம் சுமக்கும், தோல்பையி லிருக்கும் நீரும் செடிகளின் வேர் நோக்கிப் பாயும்!}

 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம், ‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி என்றழைக்கப்படும் விநோதப் பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களி டமும், புலவர்கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியம் எதுவும் சுமுகமாக நடந்தேறாது என்ற நிலை! அருகில் இருப்பவருக்குச் சங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத்தியேகமான பொடி ஜாடியிலிருந்து சன்ன மானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனி ருக்கும் கரண்டியால் தட்டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக் கும்!) மட்டைநார் இலையில் போடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும் மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை ரசிக்கலாம்….

கிள்ளிக்கை பார்ப்பதுவுந் தேய்ப்பதுவு முண்டும்

கெம்பீர மாய்வறுத்து இடிப்பதுவுமுண்டும்

அள்ளிநறு நெய்சுண்ணஞ் சேர்ந்தாடலுண்டும்

     அதற்கான ஜாடியதி லடைப்பதுண்டும்

கள்ளருந்துங் காளைடைப்போற் றிரிவதுண்டும்

     கருதிமரி யாதைகெட்டு நடப்பதுண்டும்

புள்ளிமயிற் சாயலென்றும் நடையினாளே

     பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!

{ ஒரு சிட்டிகைக் கையிலெடுத்துப் பார்த்துத் தேய்ப்பது உண்டாம், நன்றாக வறுத்து சன்னமாய் இடிப்பதுமுண்டாம், நறுமணமிக்க நெய், சுண்ணாம்பு சேர்ப்பது உண்டு, அதற்கான ஜாடியில் வைப்பதுண்டாம், கள் குடித்த காளையைப் போல் திரிந்துப் பிறரிடம் மரியாதைக் கெட்டு நடப்பது உண்டாம். மயில் போல் ஒய்யாரநடை பயி லும் பொற்கொடியே இதற்குப் பதில் என்ன?}

இதோ பொம்மலாட்ட நாட்டுப்புறக் கலைக்கு வீரவணக்கம் செலுத்துகிறார் புலவர்….

குலுக்குண்டு வலுக்கொண்டு குதிப்பதுண்டு

கொத்துமணி முத்துவடங் கொள்வதுண்டு

வலிப்புண்டு, சிரிப்புண்டு வாட்டமுண்டு

மருங்கிலுடை யணியொட்டி யாணமுண்டு

கலுக்குண்டு, பிலுக்குண்டு அலைப்புமுண்டு

     கணிக்கவல்ல வேசியுங்கூத் தாடியல்ல

சிலைக்குநிகர்வடிவழகி தேவமாதே

     தெளிவாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!

{ குலுக்கி-மினுக்கி, பலம் கொண்டுக் குதிக்கும், பல சாரம் கொண்ட மணிமாலை, முத்துச் சங்கிலி அணிந்திருக்கும், அழகு காட்டும்,சிரிக்கும், வாடும்,இடையில் ஒட்டியாணம் தரித்திருக்கும், பகட்டு-ஆடம்பரம் காட்டி வருந்தவும் செய்யும், கணிகை, வேசி, கூத்தாடியுமல்ல, அழகியத் தெய்வப் பெண்ணே, விடை பகருவாய்!}

படித்து, ரசிக்க இன்னும் பல புதிர் வெண்பாக்கள் உண்டு. கடைசியாக ஒரு விடு(டி) கதையுடன் முடிவு செய்வோம்…காஞ்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒருகள ஆய்வு ஆராய்ச்சியில் கிராம மக்கள் சொன்ன ஒரு விடு(டி)கதை……

ஊருக்கு ஒதுக்குப்புரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்தப் பையன் அவ்வழியே சென்ற ஒரு பைராகியைப் பார்த்துக் கேட்கிறான்:

“அய்யா, புல்லாங்குழலாம் ,புலித்தோலாம்! பூரண புஸ்தகமாம்,

போறதோர் பண்டாரமே, நாளை இதே வழி வருவியா?” (குழலூதி,புலித்தோல் அணிந்து ஊர் சுற்றும் எல்லாம் அறிந்த ஞானியே, நாளையும் இவ்வூர்ப் பக்கம் வருவீரா?)

அதுக்கு அந்தப் பைராகி அளிக்கும் சொல்லாடல் பதிலைப் பாருங்கள்!

“அப்பனே! வெள்ளி வேர் கடந்து, வேங்கணம் பொய்மாரி, கள்ளிப் பால் வத்தி

,கடலும் திசைமாறி, பம்பையாடு குட்டியிட்டு, வறட்டாடு பால் கறந்து,

செத்தாடு குட்டியிட்டு,, செனையாடு பால் கறந்து, ஒலக்கைத் துளுத்து,

ஒரலேறிப் பூப்பூத்து,அம்மி பழஞ்சாறாம், நார்த்தங்கா(ய்) ஊறுகாயாம்,

எருது பசுவாகி, பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்! என்றாராம்.

 {பொருள்–நான் நிச்சயம் இவ்வழி வருவேன். அதற்குரியச் சாத்தியக் கூறுகளைச் சொல்கிறேன், கேள் அப்பனே!  வெள்ளியாகிய நிலா சாய்ந்து,இருள் பொய்யாக மாறி, வெளுத்தவுடன் வருவேன்,

கள்ளிப்பால் வத்தி=  வெட்டுண்டக் கள்ளிச் செடியிலிருந்து வடியும் பால் வற்றிக் காயும் போது வருவேன்,

கடலும் திசை மாறி= கட்டுடலாய் இருந்தாலும் உட்கார்ந்து எழும்போது உண்டாகும் தடுமாற்றம் நிற்கையில் வருவேன்,

பம்பையாடு குட்டியிட்டு….செனையாடு பால் கறந்து= முல்லை நில ஆடு வயதுக்கு வந்து, குட்டிபோட்டு, பால் வற்றிவிட்ட ஆடு பால் சுரக்க,செனை ஆடு குட்டிப் போட் டுப் பால் கொடுக்கும் சமயம் வருவேன்,

ஒலக்கை துளுத்து= இப்போது நட்ட தென்னம்பிள்ளை வளர்ந்து,

ஒரலேறிப் பூப்பூத்து= உலக்கை மாதிரி உயர்ந்து நின்று, பூப்பூத்து காய்க்கும் போது,

அம்மி பழஞ்சாறாம்….ஊறுகாயாம்=உச்சி வெயிலில் உடல் காக்க, அம்மியில் அறைத் தக் கூழும், பழஞ்சாறும், தொட்டுக்க நார்த்தங்காய் ஊறுகாயும் கொண்டு வாரேன்,

எருது பசுவாகி= காளை, பசுவைச் சினையாக்கி,

பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்= அந்தப் பசுவும் கன்று போடும் போது நிச்சயம் நான் வருவேன் எனச் சாதுரியமாகவும், நக்கலாகவும் பதிலளித்துச் சென்றாராம்!}

 அக்காலத்தில் சாதாரணமானவர்களிடம் கூட தமிழ் எப்படியெல்லாம் செழித்து வளர்ந்துள்ளது என்பதை நினைக்கும் போது நமக்குப் பெருமை பிடிபடவில்லையே!

       வாழ்க தமிழ், வளர்க தமிழ் மொழி!

  Tags- மூக்குப் பொடி, பைராகி, சொக்கநாதர் ,வளையல் வியாபாரி,  ‘ஏத்தம்’

கடவுளைக் காட்டு! – 2 (Post No.11,305)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,305

Date uploaded in London – –    29 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு! – 2

ச.நாகராஜன் 

1

கடவுளைக் காட்டு

‘கடவுள் இருக்கிறார் என்றால் எனக்குக் காட்டு’ என்ற நாத்திகவாதியின் கூற்றிற்கும் கூட காலம் காலமாகப் பலரும் பதில் அளித்து வந்துள்ளனர்.

‘பார்க்க வேண்டிய ஒருவனுக்குத் தகுதி இருந்தால் அவன் பார்க்க முடியும்’ என்பது தான் எளிய பதில்!

கால்குலஸ் போட வேண்டுமெனில் அதற்கான அடிப்படை கணித அறிவு வேண்டுமல்லவா?

அறுவை சிகிச்சை செய்ய ஆசைப்படும் ஒருவனுக்கு சர்ஜனாக ஆக வேண்டுமெனில் அதற்கான படிப்பையும் அனுபவத்தையும் பெற்றால் தானே அது முடியும்?

தேனின் சுவை என்ன என்று கேட்பவனுக்கு விளக்கம் எத்தனை பக்கங்களில் தந்தாலும் அவனால் உணர முடியுமா?

சுவைத்துப் பார்த்தால் தானே தேனின் சுவையை அவன் அறிய முடியும்.

‘பக்குவிகள் அறிய முடியும்’ என்று ஒரு சிறிய பதிலை மெய்ஞானிகள் ‘கடவுளைக் காட்டு’ என்பவனுக்குப் பதிலாக அளிக்கின்றனர்.

2

கடவுளைக் கண்டதுண்டா?

ஸ்வாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரை, “நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?” என்று கேட்டார்.

“ஆம், பார்த்திருக்கிறேன்” என்று பதில் சொன்னார் பரமஹம்ஸர்.

“அப்படியானால் அவரை எனக்குக் காட்டுங்கள்” என்றார் விவேகானந்தர்.

அவரை அருகிலிருந்த கங்கை ஆற்றுக்கு இழுத்துச் சென்ற பரமஹம்ஸர் கங்கை நீரில் ஆழ்த்தினார்.

மூச்சு முட்டியது விவேகானந்தருக்கு.

ஒரு வழியாக விவேகானந்தரின் தலையை வெளியில் எடுத்தார் பரமஹம்ஸர்.

திகைத்துப் போன விவேகானந்தர் பரமஹம்ஸரைப் பார்த்தார் – ‘இப்படிச் செய்யலாமா?’ என்று.

“நீரில் மூழ்கி இருந்த போது என்ன நினைத்தாய்?” கேள்வியைக் கேட்டார் பரமஹம்ஸர்.

“உயிர் பற்றிய நினைப்பு ஒன்று தான் இருந்தது” என்றார் விவேகானந்தர்.

இது போல ஏகாக்ர சிந்தனையுடன் இறைவனை நினை; அவர் உனக்குக் காட்சி அளிப்பார் என்றார் பரமஹம்ஸர்.

விவேகானந்தருக்குப் புரிந்தது.

அவர் பரமஹம்ஸர் காட்டிய வழியில் சென்றார்; கடவுளைக் கண்டார்.

3

இறைவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான்?

இறைவன் இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்று மன்னன் ஒருவன் தன் குருவைக் கேட்டான்.

உடனே அவர், “அவன் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறான்!” என்று பதில் கூறினார்.

ஒருமுனைப்போடு ‘ஆதிமூலமே’ என்று கூக்குரலால் கூப்பிட்ட கஜேந்திரனுக்கு அந்தக் கணத்திலேயே காட்சி அளித்து அவனைக் காப்பாற்றினான் இறைவன்.

“இதயகமல வாஸா! ஹிருஷிகேஸா” என்று அலறிய திரௌபதிக்கு ஆடை அளித்து அந்தக் கணமே காப்பாற்றினான் கண்ணன்.

ஆக அவன் கூப்பிடு தூரத்தில் தானே இருக்கிறான். இதயத்தில் உறைபவனே என்றாள் திரௌபதி. கூப்பிடு தூரத்தில் இருந்த அவன் உடனே வந்து அவளைக் காத்தான்!

மன்னன் புரிந்து கொண்டான்; எப்படி இறைவனைக் கூப்பிட வேண்டும் என்றும் அறிந்து கொண்டான்!

4

கடவுளை எப்படிக் காண்பதுஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?!

மன்னன் ஒருவன் தன் மந்திரியிடம், ‘கடவுளை எப்படிக் காண்பது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். எனது இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடையை நாளை அரசவையில் அனைவருக்கும் முன்னாலும் சொல்ல வேண்டும். இல்லையேல் தண்டனை உண்டு’ என்றான்.

கவலைப்பட்ட மந்திரி வீட்டிற்கு வந்து சோகமாக இருந்தான்.

அவனது கவலையைப் பார்த்த  மந்திரியின் சிறுவயது மகன் விஷயம் என்ன என்று கேட்டு மன்னனின் கேள்விகளை அறிந்து கொண்டான்.

‘இதற்கு நானே பதில் சொல்வேனே’ என்ற அவனை மந்திரி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

மறுநாள் அரசவை கூடியது. மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

மந்திரியோ தன் மகனைக் காட்டி, “இந்த இரண்டு கேள்விகளும் பெரிய கேள்விகள் இல்லை மன்னா! என் மகனே பதில் கூறுவான்” என்றார்.

“இந்தச் சிறுவனா?” என்று அதிசயித்த மன்னன் அவனைப் பார்த்தான்.

“மன்னா! எனக்குத் தயிரைக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றான் சிறுவன்.

பானையில் தயிர் வந்தது.

அதைக் காட்டிய சிறுவன், ‘இதோ இப்போது இது கடையப் படப் போகிறது’ என்றான்.

தயிரைக் கடைந்தவுடன் வெண்ணெய் மேலே மிதந்து வந்தது.

“மன்னா! இதோ இந்த வெண்ணெய் உள்ளே தானே இருந்தது? எப்படி வந்தது இப்போது?” என்றான்.

“கடைந்தவுடன்” என்றான் மன்னன்.

“அதே போலத் தான் இறைவனும். அனைவரின் உள்ளேயும் இருக்கிறான். முறுக வாங்கிக் கடையுங்கள். உங்களுக்குத் தானே வெளிப்படுவான்” என்றான் சிறுவன்.

மன்னன் முகம் மலர்ந்தது.

‘அடுத்த கேள்விக்கு பதில்?’ என்றான் மன்னன்.

“மன்னா! நான் குருஸ்தானத்தில் இருந்து அல்லவா இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் உங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி இங்கே என் ஸ்தானத்தில் அமருங்கள். உங்கள் இடத்தைத் தாருங்கள்” என்றான்.

மன்னனும் இணங்கினான். அவன் கீழே அமர சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

காவலாளிகளைக் கூப்பிட்டு தனக்கு பணிவிடைகளைச் செய்யச் சொன்னான் சிறுவன்.

அவர்களும் மன்னனின் சிம்மாசனத்தில் அமர்ந்த அவனுக்கு அவனது ஆணையின்படி அனைத்தும் செய்தனர்.

“மன்னா! இதைத் தான் இறைவன் இப்போது இங்கு செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் மன்னர். நானோ சிறுவன். ஆனால் உங்கள் இடத்தை எனக்குக் கொடுத்து என் இடத்தை உங்களுக்குக் கொடுத்து அவரவர் முன்பு செய்த வினைக்கு ஏற்ப பலன்களைத் தருகிறான். புரிகிறதா, உங்களுக்கு?” என்றான் சிறுவன்.

மன்னன் விக்கித்துப் போனான்.

அரசவையில் உள்ள அனைவரும் மேதையான அந்த சிறுவனைப் பாராட்டினர்.

அன்றிலிருந்து அவனை அரசவையில் தன் மந்திரிகுழாத்தில் ஒருவனாக அமர்த்திக் கொண்டான் மன்னன்.

இந்த நீதிக் கதை உணர்த்துவது தான் இறைவனைப் பற்றிய உண்மை!

5

காண்பதற்கு எளியன்!

வாதுக்களாலும் பற்பல ஏதுக்களாலும் இறைவனை அறிய முடியாது.

தூய்மையான உள்ளத்துடனுன் அன்புடனும் தகுந்த செய்கைகளினால் மட்டுமே இறைவனை அறிய  முடியும் காண முடியும்!

அப்போது அவன் எளியன்!

***

 புத்தக அறிமுகம் – 71

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. ஹான்ஸ் ஜென்னி   விளக்கும் மந்திர மகத்துவம்!                     2. ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!

3. ஹிந்து மதம் ஒரு மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை!

4. அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

5. விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!

6. விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

7. ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

8. ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

9. நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

10. ஆரேகானில் தோன்றிய அதிசய ஶ்ரீ யந்திரம்

11. விஞ்ஞானிகள் வியக்கும் வித்தக சித்தர் கணம்!

12. இறைவன் இருக்கிறான் உயிரியல் தரும் ஆதாரங்கள்!

13. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட – மல்டிவர்ஸ் – நாயகியே சரணம்!

14. க்வாண்டம் பிஸிக்ஸ் அடிப்படையில் வெள்ளையர் வியந்த அருள்

   வெள்ளம்!

15. பெருவிலிருந்து வந்த தம்பதியர் கண்ட ரமணர்!

16. கணிதத்தின் மூலம் கடவுள்!

17. மூளை ஆற்றலை ஊக்குவிக்கும் தோப்புகரணம்!

18. அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தம் அடைந்த அதிசய சித்தர்

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

வளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக! இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2 (Post No.11,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,304

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழர்கள் இந்து மத நூல்களைக் கரைத்துக் குடித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். பழந்  தமிழ் நூல்களில் அமிர்தம்,  இந்திரன் என்பனவெல்லாம் தினசரி பேச்சுவழக்கில் கூட இருந்திருக்கிறது. இது எப்படித் தெரிந்தது என்று நீங்கள் வியக்கலாம். அம்ருத என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை மூன்று உச்சரிப்புகளில் (three different spellings) 40 இடங்களில் பழந்  தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் அவர்தம் திருக்குறளில் அமிழ்தம் (குறள்  64, 720, 1106 ) என்றும் சாவா மருந்து என்றும்  (குறள் 82) பயன்படுத்துகிறார். திருவள்ளுவர் இந்திரன் என்ற சொல்லை குறள் 25லும்  பயிலுகிறார்.

சிலர் இது தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் ஏனெனில் தொல்காப்பியரும் இந்திரன், வருணனைத் தமிழ்க் கடவுளராகக் காட்டுகிறார் என்று சொல்லிப் பசப்பினர் . ஆனால் அவர்களின் சந்தேகத்துக்கு அதற்கும் முன்னரே புறாநானூறு விடை கூறிவிட்டது   திருவள்ளுவருக்கு முன்னர் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்ற பாண்டிய மன்னன், தமிழர்கள் இந்திரன் அமிழ்தம் கிடைத்தால்கூட தனியே சாப்பிடாமல் பகுத்துண்டு உண்ணுவர் என்று பாடிவிட்டார்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”—புறநானூறு 182

XXX

இப்போது மேலும் சில புராணக் காட்சிகளைக் காண்போம் .

நீல நிற யமுனை நதியும், வெள்ளை நிற கங்கை நதியும் கலப்பதை உலகப் புகழ் பெற்ற காளிதாசன் வருணிப்பதை (மேகதூதம் 51, 61; ரகு வம்சம்  13-54/57) நினைவுகூறும்  வகையில் கபிலர் பாடுகிறார் :

மாயோன் அன்ன மால்வரைக் கவா அன்

வாலியோன் அன்ன வெள்ளருவி – நற்றிணை 32, கபிலர்

பொருள் :

“நீல நிற மலை கிருஷ்ணன் போல உள்ளது ; அங்கே வானிலிருந்து விழும் வெண்ணிற அருவி பலராமன் போல உள்ளது. காளிதாசன் (கி.மு .முதல் நூற்றாண்டு) , கபிலருக்கு முன்னால் வாழ்ந்தவன். அவனும் வெள்ளை, நீல நிறத்தைக் கண்டவுடன் இப்படி பலராமன்- கிருஷ்ணன்”  என்று ஒப்பிடுகிறான்

கிருஷ்ணன் – கோபியர் கதை தமிழர்களுக்கு அத்துபடி என்று காட்டும் இன்னும் ஒரு கவிதையும் சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடக்கிறது :

அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

புன் தலை மடப் பிடி உணீஇயர்அம் குழை,

நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த

தண் நறுங் கழுநீர்ச் சேண் இயற் சிறுபுறம்

தாம் பாராட்டிய காலையும் உள்ளார் 15

வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு

அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்

பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

—–அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

மருதன் இள நாகன் பாடிய இந்தப் பாடலில் இரண்டு புராணச் செய்திகள் உள்ளன. பாகவத புராணம்கந்த புராணச் செய்திகளை இங்கே காண்கிறோம்.

பொருள் :

“வடக்குத் திக்கில் நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றின் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய யாதவர் குல மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக்கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் . அவனைப்  போல ஆண்  யானையானது, தனது துணைவியான பெண் யானை உண்பதற்காக அழகிய தளிர்களை உடைய  ‘யா’ மரத்தை வளைத்துத் தருகிறது”.

இந்தக் கதையின் முழு வடிவம் சம்ஸ்க்ருத நூலில் உள்ளது.  யமுனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  ஆயர் / யாதவர் மகளிரின் ஆடைகளை கண்ணன் விளையாட்டாக எடுத்து மரத்தின் மீது போட்டுவிட்டான். அப்போது கண்ணனின் அண்ணன் பலராமன் தூரத்தில் வந்து கொண்டு இருந்தான். அவன் மிகவும் கறாரான (Very Strict man) பேர்வழி ; அண்ணனுக்குப் பயந்த கண்ணன், பெண்களுக்கு ஆடை கிடைக்குமாறு குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்தான்

‘யா’ மரத்தின் தழைகளைத் தின்னுவதற்கு வசதியாக பெண் யானைக்கு, ஆண் யானை வளைத்துக் கொடுத்ததற்கு மிகவும் பொருத்தமான உவமை இது. தமிழர்கள், பாகவத புராணத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர், தினமும் படித்திருப்பார்கள் போலும் .

இதை நான் எழுத்துவதற்குக் காரணம் என்னவென்றால் யமுனை நதியைத் தொழுநை என்று அழைக்கிறார் மருதன் இளநாகன். வடக்கேயுள்ளவர்கள் ஜமுனா என்பர். அது எப்படி தமிழில் தொழுனை ஆனது என்பதை உரைகார்கள் விளக்கவில்லை.ஆனால் அப்படியே பேசசு வழக்கில் சொல்லியிருக்கவேண்டும்

தொழு என்றால் மாட்டுக் கொட்டில் . யமுனைக்கரையில் கண்ணன்  வளர்ந்த இடம் மாட்டுக் கொட்டில் தான். தொழு என்றால் தொழுதல் , வணங்குதல் என்ற பொருளும் உண்டு. கண்ணனை கோபியர்கள் தொழுத நதி என்றும் பொருள் சொல்லலாம். ஆனால் இந்த கோபியர்- கண்ணன் சம்பவம் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் மேலும் விரிவாகவே இடம்பெறுகிறது. அங்கும் இளங்கோ அடிகள், தொழுநை என்றே குறிப்பிடுகிறார்.

ஆய்ச்சியர் குரவை

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3

எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை

அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி 1

அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்

அறுவை யொளித்தான் அயர அயரும்

நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் 2

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்

வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

XXX

தொழுநைத் துறைவன் ராதா என்ற பெயருடைய நப்பின்னையுடன்  ஆடிய காட்சியையும் கண்ணனின் ஏனைய திருவிளையாடல்களையும் ஆய்ச்சியர் குரவை –யில்  படம்பிடித்துக் காட்டுகிறார்  இளங்கோ.

XXX

மீண்டும் அகநானூறு பாடல் 59க்கு வருவோம். இங்கு கந்த புராணச்  செய்தியையும் மருதன் இளநாகன் நமக்கு வரைந்து காட்டுகிறார்.

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இந்த வரிகளின் பொருள்

சூர பன்மனையும் அவனுடைய உறவினரையும் அழித்த, ஒளி பொருந்திய இலை போன்ற, நீண்ட வேலை உடைய சினம் மிக்க முருகப் பெருமானின் குளிர்ந்த திருப்பரங்குன்றம் . அது நல்லந்துவனால் பாடப்பட்டது

ஆக , அகநானூற்றின் காதல் கவிதையில் கூட இரண்டு புராணச்  செய்திகளை நமக்கு அளித்துவிட்டார் இளநாகன்.

—தொடரும்

TAGS- ஆய்ச்சியர் குரவை, சூரபன்மன் , தொழுநை, கண்ணன், நப்பின்னை , ராதா, கோபியர், பாகவதம், கந்த புராணம் , சங்க இலக்கியம், யாதவர் , மகளிர் புராணச் செய்திகள் 2

விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!  (Post No.11,303)  – Part 1   

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,303

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                            விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!                

            Written By B.Kannan, New Delhi

சமீபத்தில் நாட்டுப்புற இலக்கிய நூல்களைப் படிக்கத் தேடுகையில் தற்செயலாக இரு சிறியப் புத்தகங்களைக் காண நேர்ந்தது. அவையிரண்டும் நாம் பாட்டிமார், கொள்ளுப் பாட்டிமார்களிடமிருந்துக் கற்றுக் கொண்டதும், மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடியதுமான, புதிர் இலக்கியத்தைப் பற்றியதுதான்!

“அம்மாடி என் செல்லம், டேய் பேராண்டி! நான் இப்போ புதிர் போடுறேன்,கண்டுப் பிடிக்கிறீங்களா? கடகடா,குடுகுடு நடுவிலே பள்ளம், அக்காள் வீட்டுக்குத் தங்கச்சி போகலாம், தங்கச்சி வீட்டுக்குள் அக்காள் நுழைய முடியாது!, ஆள் இறங்காத குளத் திலே இறங்கி சுற்றிச் சுற்றிக் கும்மாளமிடுது!’ என்ன சொல்லுங்க பார்க்கலாம்என்று வாய்நிறையப் பற்கள், நமுட்டுச் சிரிப்புடன் நம்மைக் கேள்வி கேட்டப் பெரியவங் களை மறக்க முடியுமா, என்ன? ( விடை: கல் உரல், படி-ஆழாக்கு, மத்து)

122 புதிர் வெண்பாக்கள் கொண்ட விநோத விடிகதை என்ற முதல் புத்தகம் ஆதிபுரி இரத்தினவேலு முதலியார் அவர்களால் 1898-ம் ஆண்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளிடப் பட்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட மறுபதிப்பு, விவேக விளக்க விநோத விடுகவிப் பொக்கிஷம் என்ற தலைப்பில் த. குப்புசாமி நாயுடு அவர்களால் 1938-ல் பிரசுரமானது.ஒவ்வொரு செய்யுளும் உற்சாகமுடன் நம்மைச் சிந்திக்க வைக் கிறது. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டச் சில புதிர்களைப் பார்க்கலாம்…….

முதலில், மேற்கண்ட நூல்களின் தலைப்பிலுள்ள ‘விடி’, ‘விடுகவி(தை)’ என்பதற்கு இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது நல்லது. அச்சில் நூல்கள் வருவ தற்கு முன் வாய்மொழி இலக்கியங்களே, அதாவது, கதை, பாடல், பழமொழி, விடு கதை என்பவை, புழக்கத்தில் இருந்தன. இவற்றுள் அறிவூட்டுதலையும், அறிவுநுட் பத்தை வளர்ப்பதிலும் பெரும்பங்காற்றியவை விடிகளாகும். உறவுமுறை, உயிரி னங்கள், அன்றாடம் புழக்கத்திலிருக்கும் பொருட்கள் என அனைத்துக் கருத்துருவி லும் விடிகள் விடுக்கப்படுகின்றன. உடனுக்குடன் ஓரிரு சொல்லில் விடுக்கும் புதி ருக்குப் பதில் பெறப்படுவது விடிகள் எனப்படும். ஒரு பொருளின் பெயரை மனதில் இருத்தி, அதன் குணங்களை வரிசையாகச் சொல்லி, அப்பொருள் எதைக் குறிக்கிறது என்று கேட்பதே இதன் நோக்கம்.

(உ.ம்.) ‘ஓடியாடி வேலை செய்வாள், பின்னர் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள்’ (துடைப்பம்).

‘தாடிக்காரன், கொண்டைக்காரன் சமையல் அறைக்குள் சென்றால் வெள்ளைக்காரன்’

(தேங்காய்). உடைபட்டால் வெண்ணிறமாகத் தானே தோற்றமளிக்கும்!

‘அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அது என்ன? (வளையல்)

இதிலிருந்து சற்றுமாறுபட்டு கேட்கப்படும் கேள்வியின் பதில் ஒரு கதையாக அமை யுமானால் அது விடுகதை வகையாகிறது. இதில் கேள்வி கேட்கப்பட்டவர்கள் தான் பதில் கூறமுடியும். (உ.ம்) அக்பர்- பீர்பல், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன், வேதா ளம்-விக்கிரமாதித்தன்,போஜ ராஜன்-பதுமைப் புதிர்க் கதைகள் எனலாம். இதற்குரிய ஒரு சுவாரசியமானச் சொல்லாடல் நிகழ்வைக் கட்டுரை முடிவில் காணலாம்.

இப்போது நாம் புத்தகத்தில் சொல்லப்படும் சில விடிகளுக்கு விளக்கம் காண்போம்….

எதையும் ஆரம்பிக்கும் முன் பிள்ளையார்சுழி போட வேண்டுமல்லவா? எனவே அந்தக் காப்புச் செய்யுளிலிருந்தே சுவாரசியம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. விநாயகரைப் பற்றிய விளக்கம், இதோ……

வருங்காலம் நிகழ்ந்துரைப்பான் சாஸ்திரியல்ல

வாங்கியுண்ண வழிபார்ப்பான் முடவனல்ல

 சுரும்புமுகர் மலர்முடிப்பான் சுதனுமல்ல

     துகளில்பசும் புல்சுமப்பான் தோட்டியல்ல

 பருமனுடல் நீறணிவான் பரமனல்ல

     பலரில்லம் புசிக்கும்பர தேசியல்ல

 பொருந்துவனக் கிளிபோன்ற மொழியினாளே

     புகழுண்டாம் இக்கதையைப் புகலுவாயே.

{எதிர்காலம் நலமுற வழி காட்டுவான், சோதிடன் அல்ல, உட்கார்ந்த இடத்திலிருந்தே சாப்பிடக் கிடைக்குமா எனப்பார்ப்பான், நொண்டியல்ல,

வண்டு முகரும் மலரை அணிவான் (மலர்க்கணை ஏந்திய மன்மதன்) மகனுமல்ல,

தன் மேல் பசும்புல் (அருகம்) சுமப்பான், தோட்டக்காரனல்ல, பருத்த உடலில் சாம் பல் நீறணிவான் முக்கண்ணன் அல்ல, பலரது வீட்டிலும் விரும்பிச் சாப்பிடுவான், பரதேசி அல்ல, அப்படியானால், கிள்ளை மொழி பேசும் பெண்ணே, பொருத்தமான பதில் கூறுவாய்! )

இதோ இவரை நமக்கு நன்றாகத் தெரியுமே!

பார்த்துமுகம் பல்காட்டுங்கண் ணாடியல்ல,

   பசங்களிடம் சேட்டைசெயும் வேசியல்ல,

கூத்தாடிப் பணம் பறிக்கும் தாசியல்ல,

   குந்திசற்று மிருக்காது நாயுமல்ல,

போத்துகின்ற கொடியாகும் பூமியல்ல,

போர்புரிந்து ஜெயமடையும் விஜயனல்ல,

சாத்துகின்ற விக்கதையின் பயனைச் சொன்னால்

சரணமென்றே அவரடியைச் சாரலாமே!

{ பார்த்தால் மூஞ்சி, பல் காட்டும், கண்ணாடியல்ல, பசங்களிடம் வம்பு செய்யும் வேசியல்ல, அரங்கமேறி காசு கேட்கும் கணிகையுமல்ல, ஓரிடத்தில் சும்மா யிருக்காது, நாயுமல்ல, கிளையில் தொங்கும் கொடியுமல்ல, சண்டையிட்டு ஜெயிக்கும், பார்த்தன் அல்ல, இவர் யார் என்று சொன்னால் அவர் பாதங்களைச் சரணடையலாம்! }  ( மந்தி, குரங்கு)

இதைக் கண்டால் மயங்காதவர் உண்டோ?

நீலக்கண் ணாடிகொள்ளும் கவரையல்ல,

   நேர்த்தியுடன் தான்விரிக்குங் கடையுமல்ல

கால்தூக்கி நடனமிடுங்  காளியல்ல

   கால்கொண்டே பாம்பாட்டும் ஜோகியல்ல

மேல்நிறைந்த பொட்டுமுண்டும் வானமல்ல

மேன்மைமிகக் கொண்டாடும் வேந்தனல்ல

பாலுக்கு நிகரான மொழியினாளே

பத்மினியே இக்கதையைப் பகருவாயே!

{ சுவரில் மாட்டிவிட்ட நீலக் கண்ணாடியல்ல, பாங்காகப் பொருட்களைப் பரத்தி வைக்கும் கடையுமல்ல, ஒருகால் தூக்கி நாட்டியமாடும் காளியுமல்ல, கால்களைக்

கொண்டே பாம்பை வசப்படுத்தும், பாம்பாட்டியுமல்ல, மேனிமுழுதும் கண்பொட்டு உண்டு, ஆகாயமல்ல, தேவேந்திரனுமல்ல, மேன்மைமிகு மருதநில வேந்தனல்ல (இந்திரன்), பெண்ணே, பத்மினியே விடைசொல்லுவாயே!} (வண்ணத் தோகை மயில்)

இன்னுமொன்று….

மண்மிதித்து மேற்றுளைக்கும் குயவனல்ல

மதித்துவயல் நெல்காக்கும் மனிதனல்ல

கண்ணிரண்டுங் குழிந்துநிற்குங் குருடனல்ல

கற்கோட்டைக் குள்ளிருக்கும் வேந்தனல்ல

எண்ணமுடன் பகைஞர்பசி நோயைத் தீர்ப்பான்

ஈரைந்து கரமுடையோன் பரமனல்ல

பெண்ணணங்கே இக்கதையின் சாரமாய்ந்து

பேசிடிலோ ஆசிரியப் பெயருண்டாமே!

{ மண்சேற்றை மிதித்துப் பிசைந்து, துளையிட்டு மண்பாண்டம் செய்யும் குயவ னல்ல, வயற் கரையில் மறைந்திருந்துப் பயிர்க் காக்கும் விவசாயியல்ல, இரண்டு கண்களும் குழிவாயிருக்கும், குருடனல்ல, உறுதியானக் கற்கோட்டையில் இருக்கும் அரசனல்ல, தன் பகைவனின் (மனிதன்) பசியைத் தீர்த்து வைப்பான், பத்து கைகள் உண்டு ஆனால் தெய்வமல்ல, இதன் பொருள் கண்டு பதில் கூறுவாய், பெண் அணங்கே! }  (நண்டு)

இதை வேறுவிதமாக கிராமப்புறங்களில் கூறுவதுமுண்டு

எட்டுக்கால் ஊன்றி, இரண்டு கால் படமெடுக்க, வட்டக் குடை பிடித்து வாறாராம் வன்னியப்பு! (சிற்றரசன்).

 to be continued……………………………..

tags- B.Kannan, விநோத, விடு(டி)கவி ,பொக்கிஷம்,

கடவுளைக் காட்டு! – 1 (Post No.11,302)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,302

Date uploaded in London – –    28 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு! – 1

ச.நாகராஜன்

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறார் என்றால் கடவுளைக் காட்டு!

விஞ்ஞானிகளில் பெரும்பாலோனோருக்கு இந்தக் கேள்வி எழுகிறது.

இதே கேள்வியைப் பு’திய நாத்திகவாதிகளும்’ கேட்கின்றனர்.

புதிய நாத்திகம் (New Atheism) என்னும் ‘நியூ அதியிஸம்’ கடவுள் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் மதமும் பகுத்தறிவற்ற தன்மையும் கொஞ்சம் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும் அது வலியுறுத்துகிறது.

கடவுளின் மீதான நம்பிக்கை பெரும் தவறு என்றும் டார்வினின் பரிணாமக் கொள்கையின் படியும் பல கோடி ஆண்டு இயல்பான வளர்ச்சியில் அணுத்துகள்கள் மாறி மாறி இயற்கைத் தேர்வின் படி மனிதனாக உருவானான் என்றும் அது வற்புறுத்துகிறது.

பழைய நாத்திகம் என்னும் கொள்கையில் ஊறிப் போன மடலின் மர்ரே ஓ’ஹேர் (Madalyn Murray O’Hare) முதலானோர் நாத்திகம் என்பது மதவாதக் கொள்கை போல ஒரு கொள்கை அல்ல என்றனர்.

ஆனால் புதிய நாத்திகமோ ‘கடவுள் இல்லை; இயற்கையின் இயல்பான பரிணாம எழுச்சியில் தான் அனைத்தும் உருவானது என்பது ஒரு தீவிரமான கொள்கை தான்’ என்று உறுதிபடக் கூறுகிறது.

இந்த புதிய நாத்திகம் என்ற சொற்றொடர் 2006ஆம் ஆண்டு கேரி உல்ஃப் (Gary Wolf) என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டது.

அதை உற்சாகமாக நாத்திகவாதிகள் பலரும் ஆமோதித்து வரவேற்றனர்.

இதற்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் உலகெங்கும் வெளியாகி விட்டன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விட்டன.

காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும், ‘இந்தக் கடவுளைக் காட்டு, கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணத்தைக் காட்டு’ என்ற வாதத்திற்கு அவ்வப்பொழுது அந்தந்தக் காலத்திற்கேற்ப அறிஞர் பெருமக்கள் விடை அளித்து வந்துள்ளனர்.

இவர்களில் விஞ்ஞானிகளும் உண்டு; மெய்ஞானிகளும் உண்டு.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த லியனார்ட் யூலர்  (Leonard Euler – தோற்றம் 15-4-1707 மறைவு 18-9-1783) ஒரு பிரபலமான கணித மேதை. இயற்பியல் விஞ்ஞானி. வானவியல் நிபுணர். பூகோளவியல் அறிஞர். தர்க்கத்தில் வல்லுநர். ஒரு பொறியியல் வல்லுநரும் கூட.

கணிதத்தில் அனலிடிக் நம்பர் தியரி, காம்ப்ளெக்ஸ் அனாலிஸிஸ், இன்ஃபைனட்ஸிமல் கால்குலஸ் (Analytic Number Theory, Complex Analysis, Infinitesimal Calculus) உள்ளிட்டவற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்து உலகை பிரமிக்க வைத்தவர் அவர்!

ரஷியாவில் செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் அமைந்திருந்த ராயல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்-இல் அனைவரும் போற்றும் ஒரு உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

ஒரு நாள் பிரான்ஸை சேர்ந்த நாத்திகவாதியான டெனிஸ் டிடராட் (Denis Diderot) ரஷிய ராணியான காதரினின் அழைப்பின் பேரில் ரஷியாவுக்குவந்தார்.

எப்படியாவது ஆத்திகவாதியாக இருக்கும் யூலரை நாத்திகவாதியாக மாற்றுவது தான டிடராட்டின் நோக்கம்.

இதை அறிந்து கொண்ட யூலர் அவரை ராணியின் முன்னிலையில் பொது அவையில் இது பற்றி விவாதிக்க அழைத்தார்.

அரசவை கூட்டம் கூடியது.

யூலர் கம்பீரமாக டிடராட்டைப் பார்த்து, “ஸார்! ஏ ப்ளஸ் பி டு தி எந்த் பவர் டிவைடட் பை என் ஈக்வல்ஸ் எக்ஸ். தேர்ஃபோர் காட் எக்ஸிஸ்ட்ஸ். ரிப்ளை” என்று முழங்கினார்.

(Sir, a plus b to the nth power divided by n equals x; , therefore, God exists! Reply!)

கணிதத்தில் ஒன்றுமே தெரியாத டிடராட் முழித்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.

கூட்டத்தில் அனைவரும் சிரித்தனர். அவமானப்பட்ட டிடராட் மறுநாளே மூட்டை கட்டிக் கொண்டு பிரான்ஸுக்குத் திரும்பினார்.

கணிதத்தில் நிலை எண்கள் அல்லது மாறிலிகள் (Constants) பலவற்றை ஒன்று சேர்த்து அற்புதமான ஒரு சூத்திரத்தை யூலர் தரவே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் டிடராட் தவித்தார்.

கடவுள் என்பவர் கணிதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை பல கணித மேதைகள் வற்புறுத்தி வந்துள்ளனர்.

காலமும் கணக்கும் நீத்த காரணன் இறைவன்!

பிரபஞ்சமானது தானே தோன்றியது என்ற கூற்றை பிரபல விஞ்ஞானியான ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) தனது ஒரே ஒரு வாக்கியத்தால் தவிடு பொடி ஆக்கி விட்டார்.

பிரபஞ்சம் தானே உருவாக வேண்டுமெனில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு எண் அமைந்தால் மட்டுமே அது உருவாக முடியும். அப்படிப்பட்ட எண் எது என்று கேட்டால்  அது இது தான் என்று அவர் ஒரு கணித சூத்திரத்தைக் கூறினார்.

அது இது தான்:-

Penrose has put ‘the probability against the emergence of Universe as 1 divided by  ten raised to the power to the power of 123!’

கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த எண்ணை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்! இது அமைந்தால் தான் படைப்பவன் இன்றி பிரபஞ்சம் தானே உருவாகும் சாத்தியக்கூறு அமையும்!

ஆகவே படைப்பவன் – இறைவன் – ஒருவன் இருக்கிறான் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்!

** 

புத்தக அறிமுகம் – 70

பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

1)பிரமிடின் அபூர்வ சக்திகள்

 2)பிரமிடா? ·ப்ராடா?

 3)பிரமிட் கல்லறையின் புதிய ரகசியம்

 4)உயிர்த்தெழ விரும்பும் உறைபனிச் சடலங்கள்

 5)செத்தும் வாழ பல கோடி செலவழிப்போர்

 6)நடமாடும் பிணம்

 7)ரத்தம் உறிஞ்சும் டிராகுலா

 8)மனித ரத்தத்தில் குளித்த மகாராணி

 9)சூனியக்கலையின் சூத்திரதாரிகள்

10)மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?

11)மரணத்திற்குப் பின் – கார்ல் ஜங்கின் அனுபவம்

12)விமான விபத்தின் காரணங்களைக் கூறிய ஆவி

13)இறந்தும் எழுதினார் சார்லஸ் டிக்கன்ஸ்

14)சிந்தனையாளர் லாட்ஜின் அனுபவங்கள்

15)ஜெயிலுக்கு வந்த பேய்

16)பேயைப் படம் பிடித்த டி.வி.

17)ஸ்படிக மண்டை ஓடு காக்கும் உலக ரகசியம்

18)விளங்காத மர்மங்களின் தொகுப்பு

19)தானே எரிந்த விநோத சம்பவங்கள்

20)விநோதமான மழைகள்

21)கண்ணீர் விடும் அதிசய பொம்மை

22)உங்களிடம் சைக்கிக் பவர் உள்ளதா?

23)டெலிபதி மனிதர்

24)அயல் கிரகவாசிகள் நம்மைக் கடத்துகிறார்களா?

25)அயல்கிரகக் கடத்தல்

26)பறக்கும் தட்டைப் படம் பிடித்த பி.பி.சி. கேமராமேன்

27)படைவீரர்களை விழுங்கிய பறக்கும் தட்டு!

28)மர்ம வட்டங்கள் பற்றிய திரைப்படம்

29)அயல் மனித தேடல்

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

பிரமிடின் அபூர்வ சக்திகள் ஏராளம். அதன் மர்மங்களை விளக்கும் கட்டுரை உள்ளிட்ட 29 கட்டுரைகளை இந்த நூலில் காணலாம். உறைபனி சடலங்கள், நடமாடும் பிணம், ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மனித ரத்தத்தில் நிஜமாகவே குளித்த மகராணி, ஜெயிலுக்கு வந்த பேய் என்று பல்வேறு  அதிசய சம்பவங்களை விளக்குகிறது இந்த நூல். டெலிபதி மனிதர், அயல்கிரகக் கடத்தல் என்று அயல் கிரகவாசிகள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இந்த நூலில் படிக்க முடியும்.

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**