ரிக் வேதத்தில் புறா ஜோதிடம்; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு – 1 (Post No.10,290)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,290

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் ஏராளமான ஆராய்ச்சி விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகிலேயே பழமையான நூல் என்பதால் அவற்றின் முக்கியம் அதிகரிக்கிறது. ரிக் வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் இலக்கியம் வந்தது. சங்கத் தமிழ் 18 நூல்களிலும் புறாக்கள் பற்றி நிறைய வியப்பான செய்திகள் உள்ளன. ஆண் புறா, வெய்யிலில் வாடும் பெண் புறாவுக்கு சிறகால் விசிறி வீசுவதும், புறாக்கள் ஜீரணத்துக்காக கற்களை சாப்பிடுவதும் சங்கத் தமிழ் புலவர்கள் நேரில் கண்ட காட்சி.

ஆனால் ரிக் வேதத்தில் இரண்டு காட்சிகள் 2 மண்டலங்களில் வியப்பான செய்தியைத் தருகின்றன. அவற்றைக் கண்டுவிட்டு தமிழ் நூல்களை ஆராய்வோம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில்  165ஆவது துதியைக் (RV. 10-165) காண்போம். இந்தத் துதியை இயற்றியவர் பெயரும் ‘புறா’ ! அதாவது ‘கபோதன்’ அவர் அம்மா பெயர் மரண தேவதை. புறாவுக்கு சம்ஸ்க்ருதத்தில் கபோத என்று பெயர் ; மரண தேவதைக்கு நிர்ருதி என்று பெயர்.

முதல் ஆராய்ச்சி

தமிழ் இலக்கியத்தில் காக்கை பாடினியார் , தேய் புரிப் பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீரார் என்ற பல விநோதப் பெயர்களைக் காணலாம் . உலகில் இந்துக்களைத் தவிர வேறு எவரும் இந்த உத்தியை – டெக்னீக்கை- கையாளவில்லை.

ரிக் வேதத்தை, உலக மஹா ஜீனியஸ் – மாமேதை- காக்கா கறுப்பு–என்று அழைக்கப்படும் வேத வியாசர் , நமக்கு தொகுத்துக் கொடுத்தார். அவர் பின்பற்றிய டெக்னீக் இது. அவர் பெயர் ‘தீவுக் கறுப்பன்’ MR BLACK ISLANDER . அவர் பெயரிலேயே இந்த வினோதம் புகுந்துவிட்டது. அவர் யாதவ கிருஷ்ணன், திரவுபதி முதலியோர் அட்டக் கறுப்பு UTTER BLACK ; அதனால் அவர்கள் பெயரே கறுப்பன் (கிருஷ்ணன் MR BLACK), கிருஷ்ணா/ திரவுபதி (MISS BLACK கருப்பாயி) என்று வைத்துக்கொண்டனர். வியாசரும் கறுப்பு . இதனால் அவரை கிருஷ்ண த்வைபாயனர் MR BLACK ISLANDER என்று அழைப்பர். அதாவது கங்கை ஆற்றுத் தீவில் வசிக்கும் கறுப்பன் . கின்னஸ் புஸ்தத்தில் குறிப்பிட இடமில்லாத சாதனை புரிந்தவர் அவர். உலகிலேயே அதிகமாக GREAEST WRITER எழுதியவர் GREATEST COMPILER; தொகுத்தவர்.

ஆகையால் புறா ஜோதிடக் கவிதையில் வரும் ‘புறா’ என்ற பெயரை புலவர் (MR DOVE OR MR PIGEON) பெயராகவும் புறாவினால் மரணம்  வரும் மரணதேவதை (நிர்ருதி) பெயரை புலவரின் அம்மா (MRS DEATH)  பெயராகவும் சொல்லிவிடுகிறார் வியாசர்.

அந்த உலக மஹா மேதை செய்ததை சங்கத் தமிழ் நூலைத் தொகுத்தோரும் ‘கள்ளக் காப்பி’ (CARBON COPY ) அடித்தனர். அதாவது ஒரு புலவர் வினோதமான சொற்றோடரைக் கையாண்டாலோ அல்லது அவர் பெயர் தெரியாவிட்டாலோ அவர் பாட்டில் உள்ள சொல்லை புலவர் பெயராகக் கூறி விடுவார்கள். இப்படிப் பிறந்ததுதான் காக்கைபாடினியார் முதலிய பெயர்கள். இது போல முதல் முதலில் செய்தவர் வியாசர்.

சங்க இலக்கியத்தில் சுமார் 20 புலவர்களும், ரிக் வேதத்தில் சுமார் 20 பெயர்களும் இப்படி அமைந்த விநோதப் பெயர்கள் ஆகும்

xxxx

இப்போது சப்ஜெக்டு SUBJECT க்கு வருகிறேன்

புறா பற்றி RV.10-165 ல் மிஸ்டர் புறா , அதாவது புலவர் திரு. புறவு MR DOVE என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸாரி , ஸாரி SORRY SORRY ! அதற்கு முன்னர் வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது அதையும் சொல்லி விடுகிறேன். சங்க காலத் தமிழர்கள் இப்போது இலங்கைத்  தமிழர்கள் பேசுவது போல குறில் சவுண்டை – ஒலியை– அதிகம் பயன்படுத்துவர் ; புறா என்பதற்குப் பதிலாக புறவு என்பர்; விழா என்பதற்குப் பதில் விழவு என்பர் ; பாண்டில் என்பதற்குப் பதில் பண்டி (வண்டி) என்பர். ஆனால் இதே சொற்களுக்கு நெடில் சவுண்டும் சில இடங்களில் உண்டு. சங்கத் தமிழர்களுக்கு வண்டி  தெரியாது ஆனால் பண்டி, பாண்டில் தெரியும். இவை எல்லாம் என்னைப் போன்ற மொழி ஆராய்ச்சியாளருக்கு (LINGUISTIC RESEARCHER)S   கோதுமை ஹல்வா, பன்னிர் ஜாங்கிரி சாப்பிட்டதுபோல.

நிற்க.

Rig Veda 10-165

1.தேவர்களே ! நிருதியின் தூதனான கபோதன் — புறா –எந்தத் தீமையைக் கருதி இங்கு வந்திருந்தாலும் நாம் அதைப் போற்றுவோமாக ; நாம் பிராய்சசித்தத்தை செய்வோமாக  எங்கள் ஆட்களுக்கும் கால்நடைகளுக்கும் சுகம் தோன்றுக .

2.தேவர்களே !  எங்கள் மனைக்கு அனுப்பப்பட்ட பறவையான புறா சுகத்தைத் தருவதாகுக .விப்பிரனான அக்னீ எங்கள் அவியால் இன்புறுவனாக .சிறகுகளில் ஏந்தப்படும் ஆயுதம் எங்களிடமிருந்து விலகுக.

3.சிறகுப் படை புறா எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.  அது அக்கினியின் ஸ்தானமான அரணிக்கட்டையின் மீது அமருகிறது . எங்கள் பசுக்களுக்கும் ஜனங்களுக்கும் சுகம் தோன்றுக. தேவர்களே, புறா , இந்த மனையில் எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.

4.ஆந்தை வீணாகவே கத்துகிறது ஏனெனில் புறா அக்கினியின் அருகில் அமர்ந்து இருக்கிறான். இந்த வணக்கம் புறாவை தூதுவனாக அனுப்பிய மிருத்யுவான எமனுக்கு அளிக்கப்படுகிறது .

5. தேவர்களே ! நீங்கள் எங்கள் துதியால் துதிக்கப்பட்டு தூத்துவதற்குரிய புறாவைத் துரத்துங்கள் எங்கள் அவியால் மகிழ்ந்து  எங்கள் தீமைகளையெல்லாம் விலக்கி , எங்களுக்கு பசுக்களையும் உணவையும் அளியுங்கள் . துரிதமான புறா எங்கள் உணவை விட்டுவிட்டுப் பறந்து செல்க.

இதற்கான அடிக்குறிப்பில் ‘புறா ஒரு தீய பறவைகயாகக் கருதப்படுகிறது; மரணத்தின் தூதனாக உள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது

இது பற்றி ரிக் வேத மொழிபெயர்ப்பை, ஆங்கில மொழியில்  நமக்குத் தந்த ரால்ப்  டி .எச் . கிரிப்பித் என்ன சொல்கிறார்.  ஆந்தை, புறா பற்றி தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது என்பதையும்  எனது ஆராய்ச்சிக் குறிப்புகளை யும் அடுத்த கட்டுரையில் காணுங்கள்

Rig Veda 10-165

1. GODS, whatsoever the Dove came hither seeking, sent to us as the envoy of Destruction,

     For that let us sing hymns and make atonement. Well be it with our quadrupeds and bipeds.

2. Auspicious be the Dove that hath been sent us, a harmless bird, ye Gods, within our dwelling.

     May Agni, Sage, be pleased with our oblation, and may the Missile borne on wings avoid us.

3. Let not the Arrow that hath wings distract us: beside the fire-place, on the hearth it settles.

     May, it bring welfare to our men and cattle: here let the Dove, ye Gods, forbear to harm us.

4. The screeching of the owl is ineffective and when beside the fire the Dove hath settled,

     To him who sent it hither as an envoy, to him be reverence paid, to Death, to Yama.

5. Drive forth the Dove, chase it with holy verses: rejoicing, bring ye hither food and cattle,

     Barring the way against all grief and trouble. Let the swift bird fly forth and leave us vigour.

     देवाः कपोत इषितो यदिछन दूतो निरतया इदमाजगाम |
तस्मा अर्चाम कर्णवाम निष्क्र्तिं शं नो अस्तु दविपदेशं चतुष्पदे ||
शिवः कपोत इषितो नो अस्त्वनागा देवाः शकुनो गर्हेषु |
अग्निर्हि विप्रो जुषतां हविर्नः परि हेतिः पक्षिणी नोव्र्णक्तु ||
हेतिः पक्षिणी न दभात्यस्मानाष्ट्र्यां पदं कर्णुतेग्निधाने |
शं नो गोभ्यश्च पुरुषेभ्यश्चास्तु मा नोहिंसीदिह देवाः कपोतः ||
यदुलूको वदति मोघमेतद यत कपोतः पदमग्नौक्र्णोति |
यस्य दूतः परहित एष एतत तस्मै यमाय नमोस्तु मरित्यवे ||
रचा कपोतं नुदत परणोदमिषं मदन्तः परि गांनयध्वम |
संयोपयन्तो दुरितानि विश्वा हित्वा न ऊर्जं परपतात पतिष्थः ||


devāḥ kapota iṣito yadichan dūto nirtyā idamājaghāma |
tasmā arcāma kṛṇavāma niṣkṛtiṃ śaṃ no astu dvipadeśaṃ catuṣpade ||
śivaḥ kapota iṣito no astvanāghā devāḥ śakuno ghṛheṣu |
aghnirhi vipro juṣatāṃ havirnaḥ pari hetiḥ pakṣiṇī novṛṇaktu ||
hetiḥ pakṣiṇī na dabhātyasmānāṣṭryāṃ padaṃ kṛṇuteaghnidhāne |
śaṃ no ghobhyaśca puruṣebhyaścāstu mā nohiṃsīdiha devāḥ kapotaḥ ||
yadulūko vadati moghametad yat kapotaḥ padamaghnaukṛṇoti |
yasya dūtaḥ prahita eṣa etat tasmai yamāya namoastu mrityave ||
ṛcā kapotaṃ nudata praṇodamiṣaṃ madantaḥ pari ghāṃnayadhvam |
saṃyopayanto duritāni viśvā hitvā na ūrjaṃ prapatāt patiṣthaḥ ||

–தொடரும்

TAGS- புறா ஜோதிடம், ரிக்வேதம், சங்க இலக்கியம், புறவு, கபோத, நிருதி

6000 ஆண்டுக்கு முன் M.B.B.S. LESSON! ஆறே வரிகளில் மருத்துவப் பாடம்! (Post No.10,277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,277

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபி HERMAN JACOBI , இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் B G TILAK போன்றோரின் கருத்து .

‘இல்லை, இல்லை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது’– என்பது பேராசிரியர் வில்ஸன் PROFESSOR WILSON போன்றோரின் கருத்து; இந்துக்களோவெனில் இதை வியாசர் என்னும் உலக மஹா ஜீனியஸ் GREATEST GENIUS  நான்காகப் பிரித்ததே கி.மு 3150ல் , அதாவது இற்றைக்கு சற்றேரக் குறைய 5170 ஆண்டுகளுக்கு முன்னர்; அதற்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் ரேடியோ அலைகள் போல எப்போதும் காற்றில் உள்ள சப்தங்களை கண்டவர்கள் ரிஷிகள்; கே ட்டவர்கள் ரிஷிகள்– என்று நம்புகின்றனர். சங்கத் தமிழர்களும் இதன் ரகசியத்தை அறிந்து ‘நான் மறை’ (THAT WHICH IS  SECRET) என்றும் ‘கேள்வி’ (THAT WHICH IS HEARD) என்றும் , எழுதாக் கிளவி (THAT WHICH IS NEVER WRITTEN) என்றும் அற்புதமாக மொழிந்தார்கள்

இதில் பத்தாவது மண்டலத்தில் 163-வது துதியில் அதிபயங்கர , அதி அற்புத, உலக மகா அதிசயம் ஒன்று உள்ளது. ரிஷி விவிரிஹனன் – கஸ்யபன் என்ற புலவன் ஆறே வரிகளில் நமது உடலில் உள்ள 28 உறுப்புகளின் பெயரை அழகாக அடுக்கி ஒரு துதி செய்துவிட்டான்.

xxx

இதிலுள்ள அதிசயங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்:

சங்க இலக்கியத்தின் அதிகமாகப் பாடிய புலவன் ஒரு பார்ப்பான். அவன் பெயர் கபிலர். சங்கப் புலவர்கள் பெயர் சொல்லி அதிகம் பாராட்டிய ஒரே ஆள் அந்தப் பிராமணன்தான் . அதுமட்டுமல்ல அவரை ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் பாராட்டிவிட்டனர். அவர் ஒரே மூச்சில் 99 மலர்களின் பெயர்களை சொல்லி, குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலை யாத்து,  பிருஹத் தத்தன் என்ற வடக்கத்தி ஆளை அசத்தி, அவனுக்கு தமிழும் கற்பித்து , அவனை ஒரு பாடலும் எழுத வைத்து அதை சங்கப் பாடல்களில் சேர்த்துப்  புகழ் பெற்றார் . அவர் 99 மலர்களை அடுக்கியது கின்னஸ் புஸ்தக சாதனை என்பத்தில் இரு வேறு கருத்ததுக்கு இடமே இல்லை

ஆனால் அவருக்கு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன், காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஒரு ரிக் வேத துதியை 12 வரிகளில் சொன்னான். அதில் ஆறு வரிகள் பல்லவி. அதைக் கழித்து விட்டால் 6 வரிகள்தான் புதிய செய்தி. இதிலுள்ள செய்தி 27+1 உடல் உறுப்புகள் இன்று சம்ஸ்க்ருதத்தில் எம். பி. பி. எஸ். படிப்பு இருந்தால் மாணவர்களுக்கு உதவும் பாடல் இது.

xxxx

முதலில் பாடலைப் படியுங்கள். பின்னர் என் வியாக்கியானத்தைப் படியுங்கள்:–

ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு

1.நான் உன் கண்களிலிருந்தும் , நாசியிலிருந்தும், உன் செவியிலிருந்தும், உன் மோவாயிலிருந்தும் , உன் தலையிலிருந்தும், மோவாயிலிருந்தும் , உன் மூளையிலிருந்தும் , உன் நாக்கிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன் .

2.நான் உன் கழுத்திலிருந்தும் , உன் தசை நார்களிலிருந்தும் , உன் சந்திகளிலிருந்தும் , உன் மேற் கைகளிலிருந்தும், உன் தோள்களிலிருந்தும், உன் முன் கைகளிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்

3.. நான் உன் அந்திரங்களில், உன் குதங்களில் , உன் இருதயத்தில் , உன் சிறுநீரகங்களில் , உன் கல்லீரலில் , உன் ஈரல்களில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

4.நான் உன் தொடைகளில் , முழந்தாள்  குதிகால், விரல்களில், உன் இடைகளில், உன் நிதம்பத்தில், உன் மர்ம அங்கங்க ளில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

5.நான் உன் நீர் கக்கும் வழியிலிருந்தும் , உன் கலாசயத்திலிருந்தும்  உன் ரோமத் திலிருந்தும், உன் நகங்களிலிருந்தும் ,  உன் முழு தேகத்திலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

6. நான் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் , உன் ஒவ்வொரு ரோமத்திலிருந்தும் , அது தோன்றும் ஒவ்வொரு சந்தியிலிருந்தும் யட்சமத்தை நீக்குகிறேன் .

xxxx

यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||

     From all thyself, from top to toe, I drive thy malady away.

ஆறு மந்திரங்களிலும் கடைசி வரி ஒன்றேதான்.

அதாவது ‘முடி முதல் அடிவரை , உன் னிடமுள்ள நோயை நான் விரட்டுகிறேன்’ என்பதாகும். ஆக இந்த ஆறு வரிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சிய ஆறு வரிகளில் 25-க்கும் மேலான உறுப்புகள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காணலாம்

XXXX

என் கருத்துக்கள்

1. இது கவசம் என்னும் பாடல் வகைக்கு முன்னோடி; பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் சிவ கவசம், இந்திராக்ஷி கவசம், தமிழில் கந்த சஷ்டிக் கவசம், விநாயக கவசம் முதலியன தோன்ற இதுவே மூலம். ஆக, கவசத்தை உருவாக்கியோர் வேத கால முனிவர்கள். அதை நாமும் பின்பற்றி இன்று வரை கவசங்களைப்  படித்து வருகிறோம் ஆகையால் ரிக் வேத முனிவர்களுக்கு நன்றி சொல்வதோடு 6000 ஆண்டுப் பழமையான விஷயத்தைப் பின்பற்றுகிறேன் என்று பெருமைப்பட்டுக்  கொள்ளலாம். .

2. தற்காலத்தில் பஜனைகளிலும், கச்சேரி களிலும் பாடும் பல பாடல்களிலும் கடைசி வரி ஒன்றாக இருக்கும்; அதாவது பல்லவி திரும்பத் திரும்ப வரும்; இதை லகிற்குச் சொல்லிக் கொடுத்தவர்களும் நாம்தான் . ரிக் வேதத்தில் இது போலப் பல பாடல்கள் இருக்கின்றன.

3. சம்ஸ்க்ருதத்தில் உள்ள பல உறுப்புகளின் பெயர்கள் இன்றும்  இந்திய மொழிகளில் உள்ளது. இருதயம், நகம், ரோமம், முதலியன சில எடுத்துக் காட்டுகள்

4.உலகின் எந்த ஒரு பழைய கலாசா ரத்திலும் இப்படியான பழைய பாடல் கிடையாது .

5.இதை, துதிகளில் ஒன்றாக வியாசர் சேர்த்ததும், அதை பிராமணர்கள் அப்படியே நினைப்பில் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இது மன ரீதியில் ஒருவரின் நோயைப் போக்கித் தெம்பைக் கொடுக்கும். இப்போது மருத்துவர்களும் கூட இது போன்ற மந்திரங்கள் உளவியல் ரீதியில் உதவும் என்று கருத்துக் கொண்டுள்ளனர்

7. இது அக்கால மக்களின் மருத்துவ ஆர்வத்தையும், ஆயுர்வேத படிப்பின் source of Ayurveda மூலமாகவும் விளங்குகிறது

8.நமக்கு வேதகால சம்ஸ்க்ருதம் கற்க வழி செய்கிறது.

9. இறுதியாக ப்ளாசிபோ Placebo  என்ற ‘நம்பிக்கை மருந்து’  பறி நிறைய ஆராய்ச்சிக்கு கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் ‘நம்பினார் கெடுவதில்லை’ என்றே தீர்ப்புச் சொல்லிவி ட்டன!

இதோ உடல் உறுப்புகளை நன்கு அடையாளம் காண உதவும் ஆங்கில மொழிபெயர்ப்பு

In this short hymn with 12 lines one comes across 27 ++ body parts; if you delete the repeated last line in every mantra it is only a SIX line mantra!

1.Nostrils ,2.Eyes, 3.Ears, 4.Chin, 5.Head, 6.Brain,7.Tongue, 8.Neck tendons

8.a.Neck, 9.Breast bones, 10.Spine, 11.Shoulders, 12.Arms, 13.Viscera, 14.Rectum, 15.Heart, 16.Kidneys, 17.Liver, 18.Spleen 19.Thighs, 20.Knee caps, 21.Heels, 22.Feet, 23.Stomach, 24.Groin, 25.Hair, 26.Nails,

27.Top to Toe

अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि |
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||


गरीवाभ्यस्त उष्णिहाभ्यः कीकसाभ्यो अनूक्यात |
यक्ष्मं दोषण्यमंसाभ्यां बाहुभ्यां वि वर्हामि ते ||


आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि |
यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते ||
ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम |
यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||


मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||


अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||

Xxxx SUBHAM XXX

ரிக்வேதம், உடல் உறுப்புகள், மருத்துவப் படிப்பு, RV.10-163

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1 (10,232)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,232

Date uploaded in London – 19 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1 (10,232)

ரிக் வேதத்தில் உழவு, விவசாயம், வேளாண்மை பற்றிய ஏராளமான குறிப்புகளும் பாடல்களும் உள்ளன ; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் மிதியடி , செமை அடி , தடியடி கொடுக்கும் பாசுரங்கள் இவை. ரிக்வேதப் புலவன் செப்பியதை பாரதியும் வள்ளுவனும் பிற்காலத்தில் எதிரொலித்தத்தைக் காண்போம்.

ரிக்வேத ஸம்ஸ்க்ருதப் பாடல்கள், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் விக்கிபீடியா முதலிய வெப் சைட்டுகளில் அனைவர்க்கும் இலவசமாகக் கிடைக்கும். ஆயினும் புத்தகங்களில் படிக்கும்போதுதான், அவர்கள் எழுதிய அடிக்குறிப்புகள் அவர்களுடைய உள் நோக்கத்தை அம்பலப்படுத்திவிடுகிறது  .

வேத கால இந்துக்களுக்கு  ‘ஆரியர்கள்’ என்று ஒரு இன முத்திரை குத்தி, ‘தஸ்யூக்கள் தாஸர்’களுக்கு திராவிட அல்லது பூர்வ குடி முத்திரை குத்தி இந்தியாவை பிளவுபடுத்தியது மார்கசீய, மாக்ஸ் முல்லர் கும்பல்கள் . வேத கால இந்துக்களுக்கு விவசாயம் தெரியாது, அவர்கள் ஆடு மாடு மேய்த்த நாடோடிக் கும்பல் என்றும் முத்திரை குத்தி அயோக்கியத்தனம் செய்தது இந்தக் கும்பல்.

இவர்களை எல்லாம் தவிடு பொடி ஆக்க, சொற்தேரின் சாரதியாம்  பாரதி, எல்லா இடங்களிலும் பாரத நாட்டை ஆரிய நாடு என்று பாராட்டி, முடிந்த இடங்களில் எல்லாம் ஆரிய என்பதை உண்மைப் பொருளில் பயன்படுத்தினார். ஆரிய என்றால் ‘படித்தவன்’, ‘பண்பாடு மிக்கவன்’, ‘உயர்ந்தவன்’, ‘உன்னதமானவன்’ என்ற பொருளில் பாடல்களில் இயன்ற மட்டும் பயின்றான் பாரதி.

மற்றோரு பாடலில் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்றான். இது ரிக் வேதக் கருத்தாகும் . ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் பரவிக்கிடக்கிறது உழவு பற்றிய குறிப்புகள். இதனால் எந்த அரை  வேக்காடும் இது பிற்கால வேதப் பகுதி என்று பிதற்றும் வாய்ப்பும் தவிடு பொடி !

ரிக்வேதத்தின் மிகப்பழைய பகுதி என்று கருதப்படும் நாலாவது மண்டலத்தில் உள்ள விவசாயப் பாட்டு , அக்காலத்தில் நிலச் சுவான்தார்கள்,  அவர்களுக்குக் கீழே விவசாயத் தொழிலாளர்கள் இருந்ததையும் காட்டுகிறது என்கிறார் பகவான் சிங். அவர் வேதகால ஹரப்பன்கள் THE VEDIC HARAPPANS BY BHAGAWAN SINGH என்ற விரிவான ஆதாரபூர்வமான நூல் எழுதி சிந்துவெளி நாகரீகம் வேத கால நாகரீகமே என்று நிரூபிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது. அவர் 55 விவசாய சொற்களை ரிக் வேத துதிகளின் எண்களுடன் கொடுத்துள்ளார். அதில் பல தமிழ் சொற்கள் !

XXX

ஒன்பதாவது மண்டலத்தில் (RV.9-112-3)ஒரு புலவர்,

“நான் ஒரு புலவன்; என் அப்பா ஒரு டாக்டர்; என் அம்மா ஒரு மாவாட்டி” என்கிறார். அந்தப் பெண்மணி சோள மாவு அரைக்கிறார். ஆக ஒரே குடும்பத்தில் பல தொழில் புரிவோர் இருந்தனர்.

வேதம் முழுதும் ‘ஹவிஸ்’ என்னும் சோற்று உருண்டை நெய்யுடன் தீயில் ஆகுதி கொடுக்கப்பட்டது. இது நெல் விளைச்சல் பற்றியது. ‘யவ’ என்பது வேதம் முழுதும் வருகிறது. இது பார்லியை மட்டும் குறிப்பதல்ல. எல்லா தானியத்துக்கும் பொதுவானது என்று வெள்ளைக்காரப்பயலே ஒப்புக் கொண்டுள்ளான். இன்று நாம் பயன்படுத்தும் ‘தானியம்’ , ‘களம்’ முதலியன அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது!

சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் வரும் ‘உழவர் ஓதை’ (FARMERS SONGS) என்பது ரிக் வேதத்தில் உள்ளது. மாணிக்க வாசகர் முதலிய அடியார்கள் தானியத்தைக் குத்தும்போது பாடும் ‘உலக்கைப் பாட்டு’ முதலியவற்றை நமக்கு அளிக்கின்றனர். முக்கூடற்பள்ளு போன்ற பாடல்களில் நாம் நெல் வகைகள் மற்றும் உழவர் பாட்டுக்களைப் பாடுகிறோம். பல்லவியுடன் அமைந்த பாடல்களும் உழவர் பாடல்களாக ரிக் வேதத்தில் உள்ளன. உலக மஹா ஜீனியஸ், பேரறிஞன் வியாசர் தொகுத்ததில் நமக்குக் கிடைத்த பாடல்களிலேயே இவ்வளவு விஷயங்கள்; கிடைக்காமற் போன வேத ‘சாகை’களோ ஆயிரம் !

சீதா தேவி

சீதா என்று நாம் வணங்கும் சீதா தேவியே ‘வரப்பு’ தெய்வம். அவளை ஜனக மஹா மன்னன் பீஹார் மாநிலத்தில் வயல் வரப்பில் கண்டு எடுத்ததால் அவள் பெயர் சீதா. அவள் மட்டுமின்றி நான் இன்று பிரஸ்தாபிக்கப்போகும் அற்புதமான விவசாயப் பாடலில் சு’னா’, ‘சீரா’ என்ற தேவிமார்களும் வருகின்றனர். இவர்கள் எல்லாம் விவசாய சொற்களை கடவுள் ஆக்கிய உருவகம்(PERSONIFICATION) என்பர் வெளிநாட்டார். ஆனால் உலகில் விவசாயப் பாட்டே வேறு எந்த பழைய நாகரீகத்திலும் கிடையாது.

நமக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கிரேக்க மொழியில் பல விவசாய, தாவர தேவதைகள் உள்ளன. கிரேக்க மொழிக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளில் பத்து குறள்கள் விவசாயம் பற்றி உள்ளது.

ருது என்ற பருவம் ஆறு வகை என்ற குறிப்பும் ரிக் வேதத்தில் காணக்கிடக்கிறது. இதைத் தமிழர்கள் அப்படியே எடுத்துக்கொண்டு பருவங்களை ஆறு என்று வகுத்தனர். ரிக் வேத இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்து அவை பற்றியும் மழை  பற்றியும் விரிவாகப்  பாடுவது அந்த சமுதாயத்தின் பிரதானத் தொழில் விவசாயம் என்பதைக் காட்டுகிறது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இரண்டு ரிக் வேத விவசாயப் பாடல்களை ( RV.4-57  & RV 10-101) திருக்குறளின் உளவு பற்றிய பாடல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

TO BE CONTINUED……………………….

tags– உழவுக்கும் தொழிலுக்கும், , ரிக்வேதம், பாரதி,வள்ளுவர், விவசாயம், உழவு

ரிக் வேதத்தில் பருந்து மர்மம்!! (Post No.9997)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9997

Date uploaded in London – 19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம லதை எனப்படும் சோமக்கொடியை மலையின் உச்சியிலிருந்து  பருந்துகள் கொண்டு வருவதாக ரிக் வேதப்  புலவர்கள் பலர் பாடியுள்ளனர். சோம ரசம் பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு  புளுகிய இரண்டு டஜன் பேர்வழிகள், வெள்ளைத் தோல்  அறிவிலிகள் , அரை வேக்காடுகள் இது பற்றி மவுனம் சாதிக்கின்றன. பிற்காலத்தில் கருட புராணத்தில் கருடன் அமிர்தம் கொண்டு வந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். ‘இதுதான் சோம லதை , அதுதான் சோமக் கொடி’ என்றெல்லாம் படம் வரைந்து காட்டி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பயலும் சோமரசம் செய்து, டப்பாவில் அடைத்துவிற்கவும் முன்வரவில்லை. இது ஒன்றே போதும் அவர்கள் சொன்னதெல்லாம் முழுப் பொய் , அபத்தக் களஞ்சியம் என்று காட்ட.

இனி ரிக்வேதப் புலவர்கள், பருந்து பற்றி பாடியுள்ள சுவையான சில இடங்களையும். அது சோமம் என்னும் அற்புத மூலிகையைக் கொண்டுதரும் பாடல்களையும் காண்போம் .

‘ஸ்யேன’ என்ற சொல்லை பருந்துக்கும் ‘சுபர்ண’ என்ற சொல்லை கருடன், கழுகுக்கும் வேத கால ரிஷிகள் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 65 இடங்களில் ‘ஸ்யேன’ என்ற சொல் வருகிறது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் FALCON பால்கன், HAWK ஹாக் என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர். நாம் அதை பருந்து , ராஜாளி என்று சொல்லலாம். ஜம்புநாத ஐயர் ரிக்வேதத்தை மொழி பெயர்க்கையில் ‘பருந்து’ என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்துகிறார்.

இதோ ரிக் வேதப்  பாடல்கள் (மந்திரங்கள்)

RV.1-32-14

“இந்திரனே! நீ அஹி என்னும் பாம்பைக் கொல்லும்போது உன் இருதயத்தில் பயம் ஏற்பட்டதா? அப்படிப்பட்ட தருணத்தில் நீ யார் உதவியை நாடுவாய்?

நீ 99 நதிகளை பருந்து கடப்பது போல கடந்து விட்டாயே!”

இங்கு 99 நதிகள் என்று வருவது இன்னும் ஒரு புதிர் போடுவதாக இருக்கிறது. டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM என்னும் தசாம்ச முறையை இந்துக்கள் கண்டுபிடித்தால்தான் இன்று நாம் கம்பியூட்டர் , இன்டர்நெட் முதலியவற்றைப் பயன்படுத்துகிறோம். நூற்றுக் கணக்கான மந்திரங்களில் 10, 100, 1000, 10,000 இது போல நிறைய எண்கள் வருகின்றன. அப்படி இருக்கையில் 99 என்று சொல்லுவது ஏனோ? இந்திரனுடைய பெயரே திருவாளர் நூறு (MR ONE HUNDRED DEEDS சதக்ரது). 99 நதிகள் என்பதால் ரிக் வேத கால இந்துக்களுக்கு நிறைய நதிகள் பெயர் தெரிந்ததும் புலனாகிறது. இங்கே இந்திரனை பருந்துக்கு ஒப்பிட்டதைக் கண்டோம்.

xxx

இந்தப் பாடலையும் முந்திய பாடலையும் பாடியவர் ஹிரண்ய ஸ்தூபன்/ தங்கத் தூண் GOLD PILLAR!!

எவ்வளவு செல்வம் இருந்தால் இப்படி தங்கத் தூண் என்று பெயரிட்டிருப்பார்கள்!!!  வேதம் முழுதும் தங்கம் என்ற சொல் எண்ணற்ற இடங்களில் வருகிறது.

XXX

RV.1-33-2

“நான் இந்திரனைப் போற்றிப் பாடியவாறே உச்சி மரக்கிளையிலுள்ள கூட்டிற்குப் பாய்ந்து செல்லும் பருந்து போல , இந்திரனை நோக்கிப் பாய்ந்து  செல்கிறேன்”.

xxxx

RV.2-42-1/3

இது ஒரு சுவையான குட்டிக் கவிதை.

பாரதியார் குயில், சிட்டுக்குருவி போன்ற பறவைகளைப் பாடும் வகையில் நமக்கு உயர்ந்த தத்துவங்களைப்  போதிக்கிறார். ஆங்கிலத்தில் ஷெல்லி, கீட்ஸ் (SHELLEY AND KEATS) போன்ற பாவலர்களும் பறவைகளைப் பாடிப்பரவுகின்றனர்; புறநானூற்றுப் புலவரும் பிற்கால சத்திமுற்றத்துப் புலவரும் நாரையைப் பாடி மகிழ்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷி க்ருத்சமதன், கபிஞ்சலா என்ற பறவையைப் பாடுகிறார். அதுதான் பறவையை சகுனத்துடன் தொடர்பு படுத்தும் ஜோதிடப் பாடல். பிற் காலத்தில் பஞ்சாங்கத்தில் கூட பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பார்க்கிறோம். சகுனம் என்றாலே பறவை என்றுதான் அர்த்தம் இந்தப் பாடலில் கபிஞ்சலா என்னும் பறவையை பாடுகையில் உன்னை கருடனோ பருந்தோ கொல்லாமல் இருக்கக் கடவது என்று புலவர் ஆசீர்வதிக்கிறார்..

Xxx

RV.3-43-7

ரிஷி காதினன் விஸ்வாமித்திரன் 3-43-7 மந்திரத்தை ஓதுகிறார் :-

“இந்திரனே நீ விரும்பியபோது பருந்து கொண்டு வந்து தருகின்ற சோமக்கொடியைப் பிழிந்து தருகிறோம். குடியுங்கள்.”

இங்கே பருந்துக்கும் சோமத்துக்கும் உள்ள தொடர்பைக் காண்கிறோம்.

Xxx

RV.4-18-3

வாமதேவன் கௌதமன் என்ற ரிஷி பாடிய இந்தத் துதி 4-18-13 மிகவும் புகழ்பெற்றது . அதை மனுவும் கூட மநு ஸ்ம்ருதியில் குறிப்பிடுகிறார். ஆபத்து காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதே தருமம்; ஆகையால் எதையும் சாப்பிடலாம், எதையும் செய்யலாம் என்பதே இதன் பொருள். இதிலும் பருந்து – சோம லதா விஷயம் வருகிறது .

“நான் மிகுந்த வறுமையில் வாடிய காலத்தில் நாயின் குடலைச் சமைத்தேன். இந்திரனைத் தவிர வேறு எவரும் உதவவில்லை அவமதிக்கப்பட்ட என் மனைவியைப் பார்த்தேன்; பிறகு பருந்து  எனக்கு இனிய சோமத்தைக் கொண்டுவந்தது.”

XXX .

RV.4-26-,5,6,7

வாமதேவ ரிஷியின் 4 மந்திரங்கள் மேலும் பல தகவல்களைத் தருகிறது

பருந்துக்கு /கருடனுக்கு/ கழுகுக்கு ஏன் புகழ் என்று அவர் இயம்புகிறார் .

“4. மருத்துக்களே !  எல்லா பருந்துகளைக் காட்டிலும்  இந்தப் பறவை மிக்க புகழுள்ளதாகுக .

ஏனெனில் இந்த சுபர்ணன்;  சக்கரமில்லாத தேரிலே தேவர்களால் ஏற்கப்பட்ட சோமத்தை மநுவுக்கு ஏந்திச் சென்றது .

5.பறவை, அதைக் காப்போரை பயமுறுத்தி சோமத்தை அபகரித்துச் சென்றது . மனோ வேகத்தோடு வானத்தில் வேகமாகப் பறந்து, இனிய சோம மூலிகையோடு  சென்றது. அதனால் இவ்வுலகில் பருந்துகள் புகழப்படுகின்றன

(கருட வாஹனம், கருட புராணத்திற்கு பீடிகை போடும் மந்திரம் இது)

6.நேராகப் பறக்கும் பருந்து , வெகு தூரத்திலிருந்து சோமத்தை ஏந்திவந்தது. மகிழ்ச்சியை அளிக்கும் சோமத்தை உயரேயுள்ள சொர்க்கத்திலிருந்து ,  எடுத்து வந்தது.

7.பருந்து 1000 யக்ஞங்களையும் 10,000 யக்ஞங்களையும் தரித்து சோமத்தை எடுத்து வந்தது. பல செயல்களை செய்ய வல்லவனும், சர்வக்ஞனுமான இந்திரன் சோமத்தின் மகிழ்ச்சியில் திளைத்து சத்ருக்களைக் கொன்றான்”

XXXX

இது போல இன்னும் ஏராளமான பகுறிப்புகள்  உள்ளன. ஒரு மண்டலம் முழுதுமே சோமக் கொடி என்னும் மூலிகை பற்றி உள்ளது. அவற்றைத் தனியாகக் காண்போம்..

இந்த பருந்து – ஸோம குளிகை சம்பந்தம் பற்றி  எவராலும் திருப்தியான விளக்கம் தர முடியவில்லை.

சோமத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாகக் கூறும் அரை வேக்காடுகள் இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? வேதங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டதே. இன்னுமா தெரியவில்லை?

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்க இலக்கியம் தோன்றியது. அந்த 18 நூல்களிலுள்ள சுமார் 30,000 வரிகளில் அமிர்தம், வேள்வி, யூப தூண் , கங்கை ,இமயம், அருந்ததி, இந்திரன், ராஜசூய யாகம், பருந்து வடிவமுள்ள யாக குண்டம், நான் மறை முதலியன  உண்டு. ஆனால் சோம பானம் பற்றிய குறிப்பு கிடையாது. அந்தக் காலத்திலேயே சோம லதா என்னும் செடி கொடி வகை அழிந்து விட்டது என்றே கருத வேண்டும் .

–subham–

tags- சோம ரசம், சோம லதா, சோம கொடி ,பருந்து , ஸ்யேன, சுபர்ண, ரிக்வேதம்

கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் !! (Post No.9972)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9972

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவசங்கள் பற்றிய ஒரு புஸ்தகத்தின்  முன்னுரையைப் படித்தபோது அதை வெளியிட்டவர் “காஞ்சி சுவாமிகள் கவசங்கள் வேதத்திலேயே உள்ளது” என்று கூறியிருக்கிறார் என்று எழுதி இருந்தது. இப்பொழுது ரிக்வேதத்தின் ஜம்புநாதன்  அச்சிட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் ஏழு பாகங்கள் முடித்துவிட்டேன்; இன்னும் மூன்று பாகங்களைப் படிக்கவேண்டும் ஆயினும் காஞ்சி சுவாமிகள் சொன்னதுபோல ஆங்காங்கே குறிப்புகள் வருகின்றன.

பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் என்ற  வழிபாட்டை/ துதியை மூன்று முறை செய்யவேண்டும் . அதில் மத்தியானம் செய்யும் துதியில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரம் வருகிறது. அதில்  ‘சரதஸ் சதம்’ என்ற சொல் 100 ஆண்டுகள் நான் சரத் ருது எனப்படும் மழைக்காலத்தை அனுபவிப்பேன் ஆகுக என்று வேண்டுவதாகும் . நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவரும் திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் போற்றுகிறார். இதை பிராமணர்கள் தினமும் மந்திரமாகச் சொல்கின்றனர். அடுத்துவரும் மந்திரத்தில் நீரின் மந்திர சக்தியும் வருகிறது (ஆபோ ஹிஷ்டா மயோ …). இங்கே கவசம் பற்றி மட்டும் காண்போம்.

‘100 ஆண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க’ என்று வேண்டும் மத்தியான மந்திரத்தில் கண், காது ,மனம் புத்தி, உடல் வலு வேண்டும் என்ற கவசப் பகுதிகள் வந்து விடுகின்றன.

இன்னும் பல இடங்களில் எனக்கு எது வேண்டும் என்ற இடத்தில் கை , கால், பாதுகாப்பு பற்றிக் குறிப்பாக வேண்டும் மந்திரங்கள் வருகின்றன

நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து  வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list  கொடுக்கிறார்.

அந்த LIST லிஸ்டில்

“மதி, ஞானம், தவம் ,தானம் , மானம் , ஒளி , புகழ் , குலம் , வண் சரீரம்

தானம், தான்யம், , மனைவி, மைந்தர்”  என்ற வரிகள் வருகின்றன.

இந்த லிஸ்ட் ரிக் வேதத்தில் தனித்தனி மந்திரங்களில் வருகிறது.

ஆனால் ,

கந்த சஷ்டிக் கவசத்தில் எதிரிகளை எப்படி அழிக்க வேண்டும் என்ற வரிகள் வருகின்றன. அதில் உள்ள விஷயம் அப்படியே ரிக்வேதத்தில் வசிஷ்டர் சொல்லும் ஏழாவது மண்டல மந்திரத்தில் வருகிறது.

இதோ ஒப்பிட்டுப் பாருங்கள் :–

முதலில் உடல் உறுப்புகளைக் காக்கும்படி வேண்டிவிட்டு பின்னர் காலை முதல் இரவுவரை எல்லா நேரங்களிலும் காக்கும்படி வேண்டிவிட்டு இந்த வரிகள் வருகின்றன.:-

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

…………………………………………………

இதில் எல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பாவ மன்னிப்பும் வேண்டப்படுகிறது

XXXXXXXXX

இதோ வசிஷ்டர் சொல்லும் மந்திரம் :–

ரிக் வேதம் 7-104

மந்திரம் 1 (7-104-1)

இந்திர சோமர்களே! அரக்கர்களை அழியுங்கள் இருளுக்கு இருள் சேர்க்கும் கீழானவர்களை வீழ்த்துங்கள்.புல்லர்களை அகற்றுங்கள். கொல்லுங்கள் ; தீக்கிரையாக்குங்கள்.

மந்திரம் 2

இந்திர சோமர்களே!  தீமை செய்பவனை ஒழியுங்கள்; யாகத்தில் போடப்படும் அவிஸ் எரிந்து சாம்பல் ஆவதைப்போல உங்கள் கோபம் அவர்களை சாம்பலாக்கட்டும்.. கடவுளை எதிர்ப்போரையும், கோணல் பார்வையுடைவனையும் மனிதர் மாமிசத்தை உண்பவனையும் வெறுத்து ஒதுக்குங்கள்.

மந்திரம் 3

துஷ்டர்களை ஆழ்ந்த இருட் குகைக்குள் அமுக்கி வெளியே வரமுடியாதபடி செய்யுங்கள்

மந்திரம் 4

துஷ்டர்களை /கெட்டவர்களை அழிக்கும் ஆயுதத்தை வானத்திலிருந்து வீசுங்கள்; எரிக்கும் தீயை மேகத்திலிருந்து செலுத்துங்கள்

(அவன் தலையில் இடி விழுக என்று நாம் திட்டுவது போன்றது இந்த மந்திரம்)

6

இந்திரனே சோமனே , நீங்கள் இருவரும் ரதத்தில் கட்டப்பட்ட இரண்டு குதிரைகள் போன்றவர்கள்; என் துதியை இரண்டு அரசர்களைப் போல ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. துரோகிகளான அரக்கர் களைக் கொல்லுங்கள் அவர்களுக்கு சுகமே வரக்கூடாது

8.என் மனம் சுத்தமானது ; பொய் சொல்பவனை , பழி கூறுபவனை கையில் உள்ள நீர் போல  வழிந்தோடச் செய்க

9.நான் சத்தியத்தைக் கடைப் பிடிப்பவன் ; என்னைப் பழிச் சொற்களால் துன்புறுத்துபவனை பாம்பு கடிக்கட்டும்; நிருதி என்ற துஷ்ட தேவதையிடம் அவனை அனுப்புங்கள்

10. திருடர்களும் கொள்ளையர்களும் சந்ததியின்றி அழிவார்களாகுக

11. இரவிலும் பகலிலும் எங்கள் நாசத்தை நாடும் அவர்களின் புகழ் கெடுக.

12.பொய் எது, உண்மை எது என்று அறியும் பகுத்தறிவு மனிதனுக்கு உளது. சோம தேவன் சத்தியத்தைக் காப்பாற்றி பொய்மையை அழிக்கிறான் .

14.நான் அசத்திய தேவர்களைப் போற்றினால் என்னை தண்டிக்கவும்

15. நான் அரக்கனாக இருந்தாலோ யாரையாவது துன்புறுத்தி இருந்தாலோ இன்றே நான் மரிப்பேனாக . என் மீது பொய்ப்பழி சுமத்துபவன் பத்து புதல்வர்களையும் இழக்கட்டும்

16.என்னை அரக்கன் என்று சொல்வோன் மிருகங்களுக்கும் கீழான நிலையை அடையட்டும்.

17. இரவில் ஆந்தை போல அலையும் பெண்கள்/அரக்கிகள் எல்லையற்ற குகையில் தலை கீழாக விழட்டும்

18.மருத் தேவர்களே ! இரவில் வந்து வேள்வியை அழிப்போரை தேடிக் கண்டுபிடித்து பொடிப் பொடியாக்குங்கள்

19.இந்திரனே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளிலுள்ள தீயோரை உனது வஜ்ராயுதத்தால் அழி .

20.நாய்களோடு வரும் கபடர்களை இந்திரன் வஜ்ராயுதத்தினால் அழிக்கிறான்

21.வனத்தில் மரங்களை வெட்டும் கோடாரியைப் போல, மண் பானைகளை உடைப்பது போல எதிரிகளை இந்திரன் அழிக்கிறான்

7-104- 22

ஆந்தை போலும் ஆந்தைக் குஞ்சு போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

 நாய் போலவும் சக்ரவாகப் பறவை போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

பருந்தைப்போல, கழுதையைப் போல  உள்ள அரக்கர்களை அழித்து விடு

23. ஆணவம் பிடித்த தம்பதிகளை உஷா தேவி விலக்குவாளாகுக  பூமியிலும் வானத்திலும் எங்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது.

24.

ஆண் வடிவம் எடுத்து வரும் அரக்கனைக் கொல்.

மாயையில் மகிழும் அரக்கியைக் கொல்

கபடத்தால் துன்புறுத்துவோரை அழி

கொலை செய்வோரின் தலைகள் வெட்டப்படட்டும் .

அவர்கள் இனி சூர்யோதயத்தையே காணாமற் போகட்டும்

7-104-25

இந்திரனே, சோமனே ! இருவரும் விழித்து இருங்கள்; சுற்றுமுற்றும் பாருங்கள் .

இம்சையே செய்யும் அரக்கர்கள் மீது\ ஆயுதத்தைச் செலுத்துங்கள்.

கந்த சஷ்டிக் கவசத்திலும் ரிக் வேதத்திலும் அகமும் புறமும் உள்ள எதிரிகள், பகைவர்கள், நம்மைத் துரத்தும் தீய குணங்கள் ஆகியன அழிந்து சுபீட்சம் பரவ வேண்டும் என்பதே. இரண்டு துதிகளுக்கும் இடையே 3000 ஆண்டு இடைவெளி இருந்தாலும்  உடல் நலம், மன நலம் வேண்டுவதிலும் நம் மனத்திலும் வெளியிலும் உள்ள பகைவர்கள் ஓடி ஒழிய வேண்டும் என்று கோருவதிலும் ஒற்றுமையைக் காண்கிறோம். அவர்களை நாம் அரக்கர் என்போம், பேய் பூதம் என்போம்.

கந்த சட்டிக் கவசத்தில் நீண்ட நோய்களின் பட்டியல் ஒன்று உளது. இது போல அருணகிரி நாதரின் திருப்புகழிலும் வியாதிகள் பட்டியல் உளது . இவைகளை சொல்லி அழியட்டும் என்று வேண்டும்போது நாம் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிட்டிவ் positive thoughts  எண்ணமும் மேம்படுகிறது.

கவசத்தைப் படியுங்கள், வேதத்தை ஓதுங்கள்

-சுபம்–

கந்த சஷ்டிக் கவசம், ரிக்வேதம், RV 7-104, 

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு (Post.9850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9850

Date uploaded in London –14 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு

உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி முனிவர் பாடியதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினேன். இப்போது மேலும் சில விவரங்களைக் காண்போம்.

சூரிய கிரஹணம் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு ரிக் வேதத்தின் காலம் கி.மு.3000, அதாவது சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்கு முந்தையது என்று உமாபதி சென் நிரூபித்ததை முன்னர் கண்டோம். அதே போல, மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனுடன் நடந்த சண்டையில்  இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை நிலத்தில் சாயும் என்று அர்ஜுனனை சூளுரைக்கவைத்தார் கிருஷ்ணன் ; அன்று சூரிய கிரஹணம் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். மாலையில் பூரண சூரிய கிரஹணம் ஏற்படவே ஜயத்ரதன் சண்டை முடிந்துவிட்டது என்று அசட்டையாக இருந்த பொழுது, அர்ஜுனனை ஏவி,  ஜயத்ரதன் தலையைத் துண்டித்து சுக்கு நூறாக சிதற வழிவகுத்தார் கிருஷ்ணன்.

மஹாபாரதப்போர் 18 நாட்கள்தான் நடந்தன. அது அமாவாசையன்று துவங்கியது. சூரிய கிரஹணங்கள் அமாவாசையிலும் சந்திர கிரஹணங்கள் பவுர்ணமியில் மட்டுமே நடக்கும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மை. அப்படியிருக்க ஜயத்ரதன் இறந்த அன்று எப்படி மீண்டும் அமாவாசை வரமுடியும்? என்று கேட்டோருக்கும் விளக்கம் உண்டு.

மஹாபாரதப் போர் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவில்லை. இடையிடையே போருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது . அதாவது போர்ச் சேதங்களை அகற்றவும், காயமடைந்தோரை குணப்படுத்தவும் இடையிடையே ‘லீவு’ எடுத்துக்கொண்டனர். அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடந்ததால் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்குப் பின்னர் போர் செய்ய மாட்டார்கள். ஆயுதம் இல்லாதவரைத் தாக்க மாட்டார்கள். புற  முதுகு காட்டி ஓடுவோரைக் கொல்ல  மாட்டார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் எவரும் வராத இடங்களில் மட்டுமே போர் நடைபெறும். சமயச் சடங்குகள், பண்டிகைகளை அனுஷ்டிக்க இடையிடையே போர் நிறுத்தப்படும் என்பனவெல்லாம் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றினை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும். ஆக, மகா பாரத யுத்தத்தில் இரண்டு அமாவசைகள் வந்ததும் அதில் ஒரு நாள் பூரண சூரிய  கிரஹணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரஹணம் என்பதில் வட்டமான சந்திரனோ சூரியனோ நிழலின் கீழ் வருகையில் யாரோ அதை விழுங்குவது போல இருக்கும்; பாமர மக்களுக்கு  நிழல் விஷயங்களை விளக்குவது கடினம் என்பதால் “பாம்பு விழுங்குகிறது” என்று சொன்னார்கள். ஆனால் இந்து மத அறிஞர்களுக்கு கிரஹண சாஸ்திரம் அத்துப்படி என்பதை வேதங்களில் வரும் குறிப்பிலிருந்து அறிய முடியும். பூரண சூரிய கிரஹணம் என்பது ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது.

ஓரிடத்தில் அத்ரி முனிவர் நாலு மந்திரம் ஓதி முடிப்பதற்குள் சூரியன் மீண்டும் வெளி வந்ததை எப்படி ரிஷி முனிவர் பாடினார் என்ற அற்புதத்தைக் கீழே காணுங்கள்.

ரிக்வேதம் 5-40-5/6/7/89

பாடியவர் ரிஷி பெளமோ அத்ரி

சூரியனே!  அசுரனின் புதல்வனான ஸ்வர்பானு , உன்னை இருளால் போர்த்தியபோது , தான் எந்த இடத்தில் நிற்கிறான் என்பதை அறியாமல் , கலங்கி நிற்கும் ஒருவனைப் போல, உலகங்கள் தோன்றின.

இந்திரனே நீ ஸ்வர்பானுவால் சூரியனின் கீழே பரப்பப்பட்டிருந்த மாயைகளை விலக்குங்கால் அத்ரி, இருளால் மறைக்கப்பட்டு தன்  செயல்களில் தடைப்பட்டிருந்த சூரியனைத் தனது துரீய பிரம்மத்தால் கண்டான்.

அத்ரியே துரோகி , பசியால் உணவை விரும்பி, பயங்கரமான இருளோடு உனக்குரிய என்னை புசிக்காமல்  இருப்பானாகுக. நீ மித்திரனாய் இருக்கிறாய். உன்னுடைய செல்வம் சத்தியம் ஆகும். நீயும் அரசனான வருணானும் சேர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள் .

பிறகு பிராமணனான அத்ரி , கற்களை சேர்த்து சோமத்தைப் பிழிந்து, தேவர்களை ஏத்தி வணக்கத்தோடு , அவர்களை போற்றி , சூரியனுடைய கண்ணை வானிலே ஸ்தாபித்தான் . அவன் ஸ்வர்பானுவின் மாயைகளை க் கலைத்தான்.

அத்ரி புதல்வர்கள் , அசுரப் புதல்வனான ஸ்வர் பானுவால் ஏவப்பட்ட இருளால் மறைக்கப்பட்ட சூரியனை மீட்டர்கள். அவைகளை விடுவிக்க வேறு எவராலும் இயலவில்லை

1. COME thou to what the stones have pressed, drink Soma, O thou Soma’s Lord,

     Indra best Vrtra-slayer Strong One, with the Strong.

2. Strong is the stone, the draught is strong, strong is this Soma that is pressed,

     Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.

3. As strong I call on thee the Strong, O Thunder-armed, with various aids,

     Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.

4. Impetuous, Thunderer, Strong, quelling the mighty, King, potent, Vrtra-slayer, Soma-drinker,

     May he come hither with his yoked Bay Horses; may Indra gladden him at the noon libation.

5. O Surya, when the Asura’s descendant Svarbhanu, pierced thee through and through with darkness,

     All creatures looked like one who is bewildered, who knoweth not the place where he is standing.

6. What time thou smotest down Svarbhanu’s magic that spread itself beneath the sky, O Indra,

     By his fourth sacred prayer Atri disoovered Surya concealed in gloom that stayed his function.

7. Let not the oppressor with this dread, through anger swallow me up, for I am thine, O Atri.

     Mitra art thou, the sender of true blessings: thou and King Varuna be both my helpers.

8. The Brahman Atri, as he set the press-stones, serving the Gods with praise and adoration,

     Established in the heaven the eye of Surya, and caused Svarbhanu’s magic arts to vanish.

9. The Atris found the Sun again, him whom Svarbhanu of the brood      Of Asuras had pierced with gloom. This none besides had power to do.

आ याह्य अद्रिभिः सुतं सोमं सोमपते पिब |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
वर्षा गरावा वर्षा मदो वर्षा सोमो अयं सुतः |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
वर्षा तवा वर्षणं हुवे वज्रिञ चित्राभिर ऊतिभिः |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
रजीषी वज्री वर्षभस तुराषाट छुष्मी राजा वर्त्रहा सोमपावा |
युक्त्वा हरिभ्याम उप यासद अर्वाङ माध्यंदिने सवने मत्सद इन्द्रः ||

यत तवा सूर्य सवर्भानुस तमसाविध्यद आसुरः |
अक्षेत्रविद यथा मुग्धो भुवनान्य अदीधयुः ||
सवर्भानोर अध यद इन्द्र माया अवो दिवो वर्तमाना अवाहन |
गूळ्हं सूर्यं तमसापव्रतेन तुरीयेण बरह्मणाविन्दद अत्रिः ||
मा माम इमं तव सन्तम अत्र इरस्या दरुग्धो भियसा नि गारीत |
तवम मित्रो असि सत्यराधास तौ मेहावतं वरुणश च राजा ||
गराव्णो बरह्मा युयुजानः सपर्यन कीरिणा देवान नमसोपशिक्षन |
अत्रिः सूर्यस्य दिवि चक्षुर आधात सवर्भानोर अप माया अघुक्षत ||
यं वै सूर्यं सवर्भानुस तमसाविध्यद आसुरः |
अत्रयस तम अन्व अविन्दन नह्य अन्ये अशक्नुवन ||

XXX

ரிக் வேதத்தில் மேலும் பல இடங்களில் சூரிய சந்திர கிரஹணம் பற்றிய குறிப்புகள் உள . சந்திரனுக்கு ஒளி கிடையாது, அது சூரிய ஒளியையே பிரதி பிலளிக்கிறது என்பதையும் வேதகால ரிஷிகள் அறிவர். பிற்காத்தில் காளிதாசன்  முதலிய ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இதைப் பாடியுள்ளனர்

ரிக் வேதம் 1-84-15ம் சூரிய கிரஹணத்தையே குறிக்கும் என்பது ஆன்றோர் கருத்து –

சலனமாகும் சந்திர மண்டலத்தில் மறைக்கப்பட்டுள்ள துவஷ்டாவின் — கற்பிப்பவனின் ஒளியை சூரியனுடைய கதிர்கள் என அவர்கள் இப்போது அறிந்தார்கள் –1-84-15

13. With bones of Dadhyac for his arms, Indra, resistless in attack,

     Struck nine-and-ninety Vrtras dead.

14. He, searching for the horse’s head, removed among the mountains, found

     At Saryanavan what he sought.

15. Then verily they recognized the essential form of Tvastar’s Bull,

     Here in the mansion of the Moon.

16. Who yokes to-day unto the pole of Order the strong and passionate steers of checkless spirit,

     With shaft-armed mouths, heart-piercing, health-bestowing?

     Long shall he live who richly pays their service.

इन्द्रो दधीचो अस्थभिर्व्र्त्राण्यप्रतिष्कुतः |
जघान नवतीर्नव ||
इछन्नश्वस्य यच्छिरः पर्वतेष्वपश्रितम |
तद विदच्छर्यणावति ||
अत्राह गोरमन्वत नाम तवष्टुरपीच्यम |
इत्था चन्द्रमसो गर्हे ||


को अद्य युङकते धुरि गा रतस्य शिमीवतो भामिनो दुर्ह्र्णायून |
असन्निषून हर्त्स्वसो मयोभून य एषां भर्त्यां रणधत स जीवात ||
क ईषते तुज्यते को बिभाय को मंसते सन्तमिन्द्रं को अन्ति |
कस्तोकाय क इभायोत राये.अधि बरवत तन्वे को जनाय ||
को अग्निमीट्टे हविषा घर्तेन सरुचा यजाता रतुभिर्ध्रुवेभिः |
कस्मै देवा आ वहानाशु होम को मंसते वीतिहोत्रः सुदेवः ||
तवमङग पर शंसिषो देवः शविष्ठ मर्त्यम |
न तवदन्यो मघवन्नस्ति मर्डितेन्द्र बरवीमि ते वचः ||
मा ते राधांसि मा त ऊतयो वसो.अस्मान कदा चना दभन |
विश्वा च न उपमिमीहि मानुष वसूनि चर्षणिभ्य आ ||

XXXX

OLD ARTICLES

சூரிய கிரகணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

16 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பாக்யா … ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன் … 1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் …


சூரிய கிரகணம் தந்த அறிவியல் …

https://tamilandvedas.com › சூர…

  1.  

31 Mar 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி. சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் …


சூரிய கிரஹணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

· 

7 Dec 2017 — உமாபாத சென் என்பவர் ரிக்வேத காலம் என்ற புத்தகத்தில் பல சுவையான செய்திகளைத் தருகிறார். ரிக் வேதத்தில் உள்ள சூரிய …

Missing: கிரகணம் ‎| Must include: கிரகணம்


இந்துக்கள் கண்டுபிடித்ததை …

https://tamilandvedas.com › இந்த…

  1.  

2 May 2015 — சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு … ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் … சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள.


Tamil | Tamil and Vedas | Page 137

https://tamilandvedas.com › category

  1.  

19 Oct 2012 — சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான …


உலக விஞ்ஞானிகள் வியக்கும் …

https://tamilandvedas.com › உலக-…

17 Oct 2012 — சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான …

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

  1.  

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam …


in the Veda | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › in-the-veda

  1.  

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE (Post No.4470). Compiled by London Swaminathan. Date: 8 DECEMBER 2017. Time uploaded in …


Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature …

https://tamilandvedas.com › tamil-arti…

  1.  

Translate this page

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-2 (Post.9655) May …

—SUBHAM—

TAGS – ரிக்வேதம், சூரிய கிரகணம்,  ஆய்வு

ரிக் வேதத்தில் தமிழ்வேதம் திருக்குறள் – 2 (Post No.9823)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9823

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டுரையின்  இரண்டாவது பகுதி இது. முதல் பகுதி ஜூலை 2-ம் தேதி இங்கு வெளியானது

ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் முதல் 25 கவிதைகளில் காணப்பட்ட திருக்குறள் கருத்துக்களைக் கண்டோம். திருவள்ளுவ மாலை பாடிய பல கவிஞர்கள் திருக்குறளை தமிழ் வேதம், தமிழ் மறை என்று போற்றியதையும் நாம் அறிவோம்.

இதோ மேலும் சில ரிக் வேதத் துதிகளில் திருக்குறள் கருத்துக்கள் :-

 (மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், மூன்றாவது எண் துதியிலுள்ள மந்திரத்தின் எண்ணையும் குறிக்கும்)

XXX

தந்தை, தாய், மகவு இவர்களிளிடையே உள்ள அன்பையும் பாசத்தையும் பல குறள்களில்  காண்கிறோம்.

மழலைச் சொல் என்பது குழல், யாழ் இனிமையை வீட மிகவும் இனிமையானது; குழந்தைகள் அளாவிய உணவு அமிர்தத்துக்கு இணையானது.; ஈன்ற பொழுது தாய் பெரிதும் உவப்பாள் ; அதைவிட அவன் சான்றோன் என்று கேட்கும்போது இன்னும் மகிழ்வாள்.; ஒரு மகனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. அவன் நல்ல புலமை பெற்று பிரபல ம் ஆகும்போது இத்தைகைய மகனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன நோன்பு அனுஷ்டித்தார்களோ ; ஆள் சக்கைப்போடு போடுகிறானே என்று பல குறள்களில் வள்ளுவர் பாடுவதைக் காண்கிறோம். இதே போல ரிக் வேதம் முழுதும் எங்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும், வீரர்கள் பிறக்க வேண்டும் என்று ரிஷி முனிவர்கள் பாடுகின்றனர்.

ஒரு எடுத்துக்காட்டு இதோ :-

RV 1-26-3

அக்கினியே! போற்றத் தகுந்த நீ எனக்குத் தந்தை போன்றவன்; நான் உனக்கு மகன் .நீ எனக்கு பந்து/ உறவினன்; நீ எனக்கு நண்பனுக்கு நண்பன் போன்றவன்.

ஒரே இரண்டு வரி மந்திரத்தில் கடவுளை தந்தை போன்றவன்; சொந்தக்காரன், நண்பன் என்றெல்லாம் அழைப்பது உறவு நெருக்கத்தையும் அவர்கள் மீதான ன்பையும் காட்டுகிறது.

RV 1-91-20

சபைக்குரியனும், தந்தைக்குப் புகழைத் தருபவனுமான புதல்வனை

சோமன்/சந்திரன் தருகிறான் – ரிக் வேதம்

ஒப்பிடுக :- இவன் தந்தை என்நோற்றான் கொல் – குறள்

குறள் 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பரிமேலழகர் உரை

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி – கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்

XXX

1-26 பாடியது ரிஷி சுனச்சேபன்

கருமிகள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை  வள்ளுவர் ஆதரிக்கிறார். கையை முறுக்கி தாடையை நொறுக்கு; கரும்பு போல கசக்கினால்தான், கருமியிடமிருந்து காசு வரும் என்கிறார் வள்ளுவர்.

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

இதோ ரிக் வேதக்கருத்து

RV 1-36-16

அக்கினியே உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத எல்லா பகைவர்களையும்  மண் பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல அடித்து நொறுக்கு என்கிறார்  கோரனின் புதல்வன் ரிஷி கண்வன் பாடுறார்.

RV 1-84–8

அவியளிக்காதவனை – கருமியை –  தன் காலால் காளானை மிதிப்பது போல எப்போது மிதிப்பான் ? எங்கள் துதிகளை இந்திரன் எப்போது கேட்பான்?

XXX

RV 1-90-9

அடி அளந்தான் என்று விஷ்ணுவின்  வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தை வள்ளுவர் போற்றுகிறார்.

‘ஓங்கி உகளந்த உத்தமன்’ என்று ஆண்டாளும் பிற ஆழ்வார்களும் விஷ்ணுவைப் பாடுகிறார்கள்.

விஷ்ணு மூன்றடியால் உலகை அளந்த விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

கம்பீரமான கால டியுள்ள விஷ்ணு எங்களைக் காப்பாற்றுவானாகுக.- ரிக் வேதம் -RV 1-90-9

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய

நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”

xxxx

1-48-12

உஷா தேவியே, வானிலிருந்து எல்லா தேவர்களையும் சோமத்தைப்பருக அழைத்து வா..

முதல் பகுதியிலேயே கண்டடோம் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

XXX

முதல் நூறு  பாடல்களைக் கண்டோம் .

தொடரும் ……………………………….

tags – தமிழ்வேதம்-2, ரிக் வேதம் , தமிழ்மறை

ரிக்வேதத்தில் கொரோனா வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம் ? (Post.9565)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9565

Date uploaded in London – –4 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிக் வேதத்தில் உள்ள பாம்பு கடி மந்திரம்  மிகவும் பிரபலமானது . இது முதல் மண்டலத்தின் கடைசி மந்திரம் ஆகும் (1-191). இது அகஸ்தியர் பெயரில் உள்ள மந்திரம். அதாவது அவர் ‘கேட்ட மந்திரம்’. வேதங்களுக்கு ‘கேள்வி’ என்று பெயர். அதாவது மானசீகமாகக் கேட்கப்பட்டவை. இதை சம்ஸ்க்ருதத்தில் ‘ச்ருதி’ என்பர்.

துதியிலுள்ள 16 மந்திரங்களையும் இறங்கு வரிசையில் விளக்கியுள்ளேன்.

அகஸ்தியர் கேட்ட இந்த பாம்பு, தேள் கடி மந்திரத்தில் பல சுவையான செய்திகள் உள்ளன. இதிலுள்ள வரிகளைப் பார்க்கையில் இது கொரோனா (Anti Corona Virus) முதலிய வைரஸ் நோய்களையும் தீர்க்கும் என்றே தோன்றுகிறது. இந்த 191ஆவது துதியில் மொத்தம் 16 மந்திரங்கள் இருக்கின்றன.

முதலில் சுவையான விஷயங்களைப் பார்ப்போம்

16ஆவது மந்திரம் –

to be continued…………………………..

tags- கொரோனா வைரஸ், பாம்புக்கடி மந்திரம், விஷம் நீக்கும், ரிக்வேதம், அகஸ்தியர் , அதிசய பறவை, கீரி , மயில் , 99 நதிகள்

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,