How Dance & Drama came to Earth? (Post.9915)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9915

Date uploaded in London –31 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Natyasastra written by Bharata has 36 chapters. The first and the last chapter have interesting stories. In the first chapter we saw the origin of Natyasastra (already posted here). In the last chapter Bharata narrated how dance and drama came to earth.

The sages asked Bharata:

How did drama descend from heaven to earth?

Bharata said in his reply,

“It so happened that, once, a King called Nahusa attained the Kingdom of Gods/ Swarga   by means of his intelligence, diplomacy and valour. There he saw the musical/gandharva and dramatic/natya performance. Then he thought why should not this be performed in his own home on earth. So, he requested the gods to take the Apsaras women to his own home to perform. Then the gods led by Brhaspati told him that human beings are not supposed to come in direct contact with the divine Apsaras and hence they were unable to accede to his request.

But they said you approach the acharya (Bharata) and he might do what you want. It was thus that Nahusa came to me and said, ‘Oh Divine Preceptor, I would like to have this performance on the earth. I am told you were the first one to teach this, so I have to come to you.’

In the ancestral palace of Nahusa, Urvasi practised it with the ladies of the harem. When Urvasi disappeared, the old king went mad with grief and died. So drama again perished.

So I decided that henceforward it should be performed on auspicious days, so that the drama would bring good luck. Nahusa said he wanted it in his earthly  palace and that there  should be many characters and graceful movement of women. I agreed and called my sons and said to them ,

‘Here is King Nahusa requesting us with folded hands to produce a natya in his earthly palace. Let us do it  and get the curse abrogated. All of you go down to the earth and perform. You will be no longer objects of condemnation, for either the Brahmins or the Kshatrias.

Brahma has said that the success of production depends on following his instructions. As for other details, Kohala by his supplementary technical work will explain. make this a pretext for sporting with the Apsaras. I shall be here in heaven working with Swati in charge of musical instruments and Narada in charge of vocal music.

Thus, they went down to earth and there with he help of females produced various Natyas in Nahusa’s palace. They married earthly females, begot sons and daughters and trained them in Natya.  Brahma was pleased with my sons and admitted them to heaven.

Thus, due to a curse, the descendants of Bharata (actors) established themselves on earth.

–Natyasastra Last (36) Chapter

From Natyasasra by Adya Ranagacharya

 Drama on earth, dance on earth, Bharata, Natyasastra

கிரேக்க நாட்டுப் புலவர் பிண்டார் (கி.மு.2500) Post No.9914

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9914

Date uploaded in London –31 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராதன கிரேக்க நாட்டின் புகழ்மிகு புலவர் பிண்டா (ர்) (PINDAR).

அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழப்பட்டார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பாராட்டப்பட்டார்.

பிண்டா (ர்),  (THEBES) தீப்ஸ் என்னும் நகருக்கு அருகில் பிறந்தார். அவர் பிறந்த குடும்பம் பிரபுக்களின் குடும்பம். அவர்கள் பழங்கால புராணப் பெருமையுடைய குலத்தின்  வழி  வந்தவர்கள். நாம் பாண்டியர், சோழ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று  சொல்லிக்கொள்வது போல.

இளமைப் பருவத்தில் அவர் ஏதென்ஸ் மாநகரத்தில் சங்கீதம் பயின்றார்.ஒரு இசைப் போட்டியில் கோரின்னா (CORINNA) என்ற பெண்மணியிடம் அவர் தோற்றுப் போனார் . அவர், பிண்டாருடைய ஆசிரியர் என்றும் சொல்லுவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் தனி பாடகர் யாழ் ( LYRE)  போன்ற இசைக்கருவியை வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். அல்லது ஒரு அணியாக நின்று கூட்டாகவும் (கோரஸ் CHORUS ) இசைப்பார்கள். பிண்டார், கோரஸ் பாடுவோருக்கு பாடல்களை எழுதினார். 20 வயது முதலே அவர் இவ்வாறு கீர்த்தனைகளை எழுதத் துவங்கினார்  இவைகளை ஓட்ஸ் (Odes) என்று அழைப்பர். கிரேக்க மொழியில் (Ode= to sing) ‘பாடு’ என்று பொருள். இசையுடன் கூடிய உணர்ச்சிமிகு பாடல்கள் (Lyrics) அவை.

புராதன கிரேக்க நாட்டில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. ஒலிம்பியன், நேமியன், பிதியன் , இஷ்த்மியன் என்பன அவை. கிரேக்க நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் பங்கேற்கக்கூடியது ஒலிம்பிக் (Olympian) விளையாட்டுகள். இன்று நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளும் அதே பெயரைக் கொண்டனவாகும்  பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற  விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பிண்டார் பாடினார். அவற்றுக்கு ட்ரயம்பல் ஓட்ஸ் / வெற்றி கீதங்கள்(Triumphal Odes) என்று பெயர்.

புலவரின் புகழ் கிரேக்க நாடு முழுதும் பரவவே, பல மன்னர்களும் பணக்கார குடும்பங்களும் எங்களையும் வாழ்த்திப் பாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர் நீண்ட தொலைவு பயணம் செய்து நாட்டை வலம் வந்தார். சென்ற இடமெல்லாம் புகழ் மொண்டுவந்தார். அவருடைய பாடல்களைக் கேட்க ஆங்காங்கே மக்கள் காத்து நின்றனர்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவருடைய 44 பாடல்கள் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன.

பிறந்த ஆண்டு- கி.மு.518

இறந்த ஆண்டு – கி.மு.438

வாழ்ந்த ஆண்டுகள் – 80

அவர் எழுதிய  பாடல்கள்:-

FIFTH CENTURY BCE

TRIUMPHAL ODES – 44 IN TOTAL

xxx

SURVIVING FRAGMENTS

பல பாடல்கள் முழுமையாக இல்லை.

HYMNS

PAENS

CHORAL DITHYRAMBS

PROCESSIONAL SONGS

CHORAL SONGS FOR MAIDENS

CHORAL DANCE SONGS

LAUDATORY ODES

பிற்காலப் புலவர்களும் எழுத்தாளர்களும் இவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டியதால் நமக்குத் துண்டுக் கவிதைகள் கிடைத்தன. இன்னும் சில துண்டுகள், எகிப்தில் பேபைரஸ் (Papyrus)  காகிதத் துண்டுகளில் கிடைத்தன.

xxxxx

தமிழர்கள், அவர்களுக்கும் முன்னால் , கவிதைகள் எழுதிப்  புகழ்பெற்ற சம்ஸ்க்ருத, கிரேக்க, எபிரேய (ஹீப்ரு), லத்தீன், சீன மொழிப்  புலவர்கள் பற்றியும் அவர்களுடைய இலக்கியப்படைப்புகள் பற்றியும் அறிதல் வேண்டும் . பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தல் வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் சொன்னார். இதுவரை  நாம் மொழிபெயர்த்தது எள் அளவுக்கே உளது. அதுவும் பழைய கால மொழிபெயர்ப்புகள்; படிப்பதற்கு இனியனவாக இல்லை .

 ஜம்புநாதன் , ரிக்வேதம் முதலிய 4 வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து அற்புதமான பணியைச் செய்தார். ஆனால் அது செம்மையான தமிழில் அமையவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இன்னும் நாம் வரிக்கு வரி (Verbatim) அதே வேகத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஹோமரின் இலியட், ஆடிசி (ஒடிஸி ) ஆங்கியவற்றின் மொழிபெயர்ப்புகளும் கடனுக்குச் செய்த மொழிபெயர்ப்புகளாகவே உள .

பழங் காலத்தை விட்டு, 100, 200 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளன . இவற்றுக்காக தனித்துறை அமைத்து மொழிபெயர்க்கும் தனியார்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் ; இதைப் பல்கலைக்கழகங்களிடையே விடக் கூடாது. அவர்கள் மெத்த காசு வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு பத்து வரிகள் மொழிபெயர்ப்பார்கள். அதுவும் ‘எழவுத் தமிழில்’ இருக்கும். படிக்கும் நடையில் இராது. தனியார் செய்த மொழி பெயர்ப்புக்களுக்கு அரசு உதவி அளித்தல் நல்லது .

புகழ்பெற்ற பிரெஞ்சு , லத்தீன் , ஜெர்மானிய, ஆங்கில நூல்களை முதலில் மொழிபெயர்த்தல் வேண்டும். அம் மொழி ஆசிரியர்கள் எழுதிய கடிதங்களையும், சொன்ன பொன்மொழிகளையும் மொழிபெயர்த்தாலே பல்லாயிரம் பக்கங்களுக்கு வரும். கதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்தால் கோடிக் கணக்கான பக்கங்களுக்கு வந்துவிடும்!!!

tags- கிரேக்க , புலவர், பிண்டார் ,

–ssubham-

மஹரிஷி உதங்கர்! (Post No.9913)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9913

Date uploaded in London – 31 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் சரித்திர வரிசை

மஹரிஷி உதங்கர்!

ச.நாகராஜன்

கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.குளிகன் என்றொரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் பிறருடைய மனைவிகள், பொருள்கள், இவற்றை அபகரிப்பான். பிறரை துன்பப்படுத்தல், பிராணிகளை இம்சித்தல், பிராமணர்கள், பசுக்களைக் கொல்லுதல், ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கொள்ளையடித்தல் முதலிய பல பாவகரமான காரியங்களைச் செய்து வந்தான். பிராணிகளுக்கெல்லாம் எமன் போன்று விளங்கிய அவன் ஒரு சமயம் சௌவீரன் என்ற அரசனுடைய ராஜ்யத்திற்குச் சென்றான். அந்த நகரோ அமராவதிக்குச் சமமாக இருந்தது. நகரின் மத்தியில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. அது தங்க ஸ்தூபிகளால் பிரகாசித்து ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. உடனே அவற்றைத் திருட வேண்டுமென்று எண்ணிய குளிகன் அந்தக் கோவிலுக்குள் சென்றான். அந்தக் கோவிலின் உள்ளே ஸ்வாமிக்கு பூஜை செய்யும் தபஸ்வி ஒருவரைக் கண்டான். அவர் விஷயங்களில் பற்றற்ற முனிவர். தனியாக இருந்தார். அவருடைய பெயர் உதங்கர்.

‘இவர் நமக்கு இடைஞ்சலாக இருக்கிறாரே’ என்று எண்ணிய அந்த வேடன் கொஞ்சமேனும் இரக்கமின்றி தன் வாளை உருவினான். அவருடைய மார்பைத் தன் காலால் உதைத்தான். இன்னொரு கையால் அவருடைய சடையைப் பிடித்துக் கொண்டான். அவரைக் கொல்ல எத்தனித்தான்.

அப்போது அவர், “ஓ! சாதுவே! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! குற்றமற்ற என்னை ஏன் கொல்லுகிறாய்? நான் உனக்கு ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால் அதைச் சொல்! உலகில் குற்றவாளிகளைத் தண்டிப்பது வழக்கமாக இருக்கிறது. உலகில் நல்ல மனிதன் தனக்கு தீங்கு சம்பவித்த போதிலும், கோடாலியால் சந்தன மரத்தை வெட்டிய போதிலும் அது அந்தக் கோடாலியின் நுனிக்கு வாசனை அளிப்பது போலவே, தீங்கு செய்யாமல் நல்லதையே செய்வான்.

தெய்வம் மிக வலிமையானது. எல்லாப் பற்றுகளையும் விட்டவன் கூட அதிக கஷ்டத்தை அடைகிறான். உலகில் மான்கள் புல்லினாலும், மீன்கள் ஜலத்தினாலும், சாதுக்கள் நல்லொழுக்கத்தில் சந்தோஷம் என்பதினாலும் திருப்தி அடைகின்றனர். ஆனால் குற்றமற்ற இவர்களும் கூட காரணமில்லாமல் இயற்கையிலேயே வேடன், மீனவன், கோள் சொல்கின்றவன் ஆகிய மூன்று விரோதிகளால் கஷ்டப்படுகிறார்கள்.

எந்த இடத்திலிருந்து வந்த போதிலும் எது ஒருவனுக்கு அவசியம் வரவேண்டுமோ அது வந்தே தீரும்!  உலகில் மனிதன் ஆணவத்தினால் மஹா பாவங்களைச் செய்கிறான். தனது மனைவியையும் பிள்ளைகளையும் மிகுந்த முயற்சியுடன் காப்பாற்றுகிறான். இவனால் தேடப்பட்ட செல்வத்தை சுற்றத்தார்கள் நன்கு அனுபவிக்கின்றனர். அந்தச் செல்வத்தை அடைவதற்காக அவன் செய்த பாவ கருமங்களை அடைவது மூடனாகிய அவன் மட்டுமே தான்.”

இவ்வாறு சொல்லிய உதங்க முனிவரைப் பார்த்து வேடன் நடுநடுங்கினான். அந்த மஹரிஷியை விட்டு விட்டு, இரு கரங்களையும் கூப்பியவாறே,” ஓ! மஹரிஷியே! பொறுத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.

சாதுக்களின் சேர்க்கையாலும் விஷ்ணுவின் சந்நிதியில் இருப்பதாலும் பாவங்கள் அவனை விட்டு நீங்கின. அந்த வேடன் மிகுந்த அநுதாபத்தை அடைந்தான். முனிவரை வணங்கி, “ உமது தரிசனத்தால் நான் செய்த அநேக பாவங்கள் நாசமடைந்து போயின். நான் தினந்தோறும் கெட்ட புத்தியுள்ளவனாயும், பெரிய பாவங்களைச் செய்பவனாகவும் இருந்தேன். அந்தப் பாவங்கள் அனைத்தும் நீங்கி பரிசுத்தனாவதற்கு யாரைச் சரணடைய வேண்டும்? நான் பூர்வ ஜன்மத்தில் மிகுதியான பாவங்களைச் செய்து, இழிவான் இந்த வேடப் பிறவியை அடைந்தேன். இப்பிறவியிலும் அளவற்ற பாவங்களைச் செய்வேனாகில் எனக்கு என்ன கதி கிடைக்கும்?” என்று கேட்டவாறே தன்னைத் தானே மிகவும் நொந்து கொண்டான். மிகவும் வருத்தம் கொண்ட அவன் அப்படியே பூமியில் விழுந்து இறந்து போனான்.

அந்தச் சமயத்தில் மிகவும் இரக்க குணம் கொண்ட தயாளுவான உதங்கர், இறந்து கிடக்கின்ற அந்த வேடனின் சரீரத்தை கங்கா ஜலத்தினால் நனைத்தார். அவனுடைய உடலில் கங்கா ஜலம் பட்டவுடன் அவன் பரிசுத்தனானான். திவ்ய விமானத்தில் ஏறிக் கொண்ட அவன் உதங்க முனிவரை நோக்கி, “ ஓ! மஹரிஷியே! நீரா எனது குரு! உமது தயவினால் அளவற்ற பாவத்தைக் கொண்ட நான் அவை நீங்கப் பெற்று பரிசுத்தனானேன்.உமது உபதேசத்தினால் என் மனதிலிருந்த தாபெமெல்லாம் போயிற்று. நீர் கங்கை ஜலத்தினால் அபிஷேகம் செய்ததால் நான் வைகுந்த் பதத்தை அடையும்படியான நல்ல பேற்றைப் பெற்றேன். இதற்கு முன் உமக்குச் செய்த அபராதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ நமஸ்கரிக்கிறேன்” என்று இவ்வாறு கூறி விட்டு அந்த வேடன் அந்த மாமுனிவரை சாஸ்திரப்படி மூன்று முறை பிரதக்ஷிணமாக வந்து நமஸ்கரித்தான்.

கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்டு அவன் மிகவும் அலங்காரமான விமானத்தில் ஏறிக் கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றான். பிறது தபஸ்வியான உதங்கர அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு கைகளை சிரம் மேல் கூப்பி பின் வருமாறு ஸ்தோத்ரம் செய்தார்:_

“ தேவர்களுக்கெல்லாம் முதல்வரே!

ஜெகத்துக்கெல்லாம் இருப்பிடமானவரே!

சக்கரம், தாமரை, வில்,கத்தி ஆகியவற்றைத் தரித்தவரே!

உம்மை நினைத்தவர்களின் பீடையைப் போக்கடிப்பவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.

எவர் ஒருவருடைய நாபி கமலத்திலிருந்து உண்டான பிரம்மா உலகங்களை எல்லாம் சிருஷ்டிக்கிறாரோ, எவர் ஒருவருடைய கோபத்தினினின்றும் ருத்ரர் உண்டாகி ஜெகத்தை அழிக்கிறாரோ, அப்பேர்ப்பட்ட விஷ்ணுவாகிய உம்மை நமஸ்கரிக்கிறேன்.

யாதொருவர் ஸ்தூலம், சூக்ஷ்மம் முதலிய் அநேக பேதங்களால் ஏற்படுத்தப்பட்ட ஜெகத்தைத் தாமே வியாபிக்கிறாரோ, அந்த பிரபஞ்சம் முற்றிலும் நீரே. உம்மைக் காட்டிலும் மேலானது வேறொன்றும் கிடையாது. உமது சொரூபத்தை சாதுக்கள் புலன்களுக்கு அகப்படாததாகவும், சுத்தமாயும், மாயா சம்பந்தம் இல்லாததாகவும், குணம், ஜாதி இவைகள் அற்றதாகவும், பாவ புண்ணிய சம்பந்தம் அற்றதாகவும் அளவிட முடியாததாகவும், பரமார்த்தம் என்ற பெயருள்ளதாயும் அறிகிறார்களோ அப்பேர்ப்பட்ட உமக்கு நமஸ்காரம்!

ஒரே தங்கமானது நகை வேறுபாடுகளினால் வெவ்வேறு பெயர்களை எப்படி அடைகிறதோ அதே போலவே, நீர் பல சொரூபங்களுடன் இருந்து கொண்டு அநேக விதமாகக் காணப்படுகிறீர்!

இந்திரியங்கள், மனம், புத்தி, தேஜஸ், பலம், தைரியம் ஆகியவைகள் வாஸுதேவனுடைய சொருபமென்றே சொல்வார்கள். அந்த வாஸுதேவரையே க்ஷேத்திரன், க்ஷேத்திரக்ஞன் என்றும்  சொல்வார்கள்.

எவர் ஒருவருடைய திருவடித் தாமரையினின்றும் உதித்த தீர்த்தமானது சம்சாரம் என்னும் வியாதிக்கு மருந்தாகிறதோ, எவர் ஒருவருடைய பாத தூளியானது பரிசுத்தத்தை உண்டுபண்ணுகிறதோ, எவர் ஒருவருடைய திவ்ய நாமமானது தீவினையை அகற்றுகிறதே அவ்விதமான உம்மை நமஸ்கரிக்கிறேன்.

சம்சாரமாகிய கடலில் மூழ்கி கரையேறமுடியாமல் கஷ்டப்படுகிறவனும், அநேக விதமான மன சங்கல்பத்தினால் கட்டுப்பட்டவனும், கெட்ட கீர்த்தியை அடைந்தவனும், நன்றி இல்லாதவனும், எப்போதும் பாவத்தில் விருப்பமுடையவனாயும், கோபம் உள்ளவனாகவும், மிகவும் பயந்தவனுமாகவும் இருக்கின்ற என்னை கருணைக்கடலாகிய நீர் ரக்ஷிக்க வேண்டும். அடிக்கடி உம்மைச் சரணமடைகிறேன்” என்று இப்படி உதங்கர் ஸ்தோத்ரரித்தார்.

இதனால் பரம சந்தோஷம் அடைந்த பகவான் அவர் முன் தோன்றினார்.

உதங்கர் மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி அந்த நீரினால் பகவானின் பாதகமலங்களை நனைத்தார்.

பக்தவத்சலான விஷ்ணு பகவான் அவரை வாரி எடுத்து, “குழந்தாய்! உன்ன என்ன வரம் வேண்டும்” என்று கேட்டு நான் பிரசன்னமாயிருக்க்கும் போது உனக்கு சாத்தியம் ஆகாதது ஒன்று உண்டா, என்ன?” என்றார்.

உதங்கர், “பகவானே! உம்மிடத்தில் ஒவ்வொரு ஜன்மத்திலும் நீங்காத திடமான பக்தி வேண்டும். வேறெந்த வரத்தினாலும் யாதும் பயனில்லை” என்றார்.

விஷ்ணு அப்படியே ஆகட்டும் என்றார். தனது பாஞ்சசன்னியம் என்னும் சங்கத்தின் நுனியினால் அவரைத் தொட்டு யோகிகளுக்கும் அரிதான திவ்ய ஞானத்தைக் கொடுத்தார். மீண்டும் உதங்கர் அவரைத் துதிக்கலானார்.

பகவான் அவர் சிரசில் தந்து வலது கையை வைத்தருளி,

 “ ஓ! பிராமணோத்தமரே! என்னை எப்போதும் கிரியைகளாலும், யோகங்களாலும், ஆராதனம் செய். நர நாராயணர்களின் இருப்பிடத்திற்குச் செல். இறுதியில் நீ மோக்ஷத்தை அடைவாய். உன்னால் செய்யப்பட்ட இந்த உத்தமமான ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்கள் இம்மையில் வேண்டிய அனைத்தும் அடைவர்; பின்னர் மோக்ஷத்தை அடைவர் என்று கூறியருளி மறைந்தார்.

பகவான் கூறியபடியே உதங்கர் நரநாராயணர் இருந்த இடத்திற்குச் சென்று அங்கே கிரியை யோகம் முதலியவற்றைச் செய்து பகவானை பிரார்த்தித்து வந்தார். பின்னர் மோக்ஷத்தை அடைந்தார்.

உதங்க மஹரிஷியின் இந்த வரலாற்றை மஹாபாரதம் ஆதி பர்வத்திலும், நாரதீய புராணத்திலும் விரிவாகக் காணலாம்.

****

INDEX

உதங்கர் வரலாறு, குளிகன் என்ற வேடனுக்கு அருளியது, விஷ்ணு பிரசன்னம், உதங்கரின் விஷ்ணு ஸ்தோத்ரம், நரநாராயணர், மஹாபாரதம் ஆதி பர்வம், நாரதீய புராணம்

Tags- உதங்கர், ஆதி பர்வம், நாரதீய புராணம் ,

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் (Post No.9912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9912

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்

ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .

அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18

சுப முஹுர்த்த நாட்கள் -20, 26

முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை

வருணனே!  எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2

xxx

ஆகஸ்ட் 2 திங்கட்  கிழமை

கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18

xxx

ஆகஸ்ட் 3 செவ்வாய்க்  கிழமை

என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16

xxx

ஆகஸ்ட் 4 புதன்  கிழமை

பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12

xxx

ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை

நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21

Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை

உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1

Xxx

ஆகஸ்ட் 7  சனிக் கிழமை

அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும்  நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3

Xxx

ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை

அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9

Xxx

ஆகஸ்ட் 9 திங்கட்  கிழமை

அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3

Xxxx

ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை

சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6

xxx

ஆகஸ்ட் 11 புதன்  கிழமை

பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க  நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13

xxx

ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை

இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும்,  இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3

Xxx

ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை

இந்திரனே! கழுதை போலக்  கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5

Xxx

ஆகஸ்ட் 14  சனிக் கிழமை

இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய்.      அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக  1-30-4

Xxx

ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை

அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய்  வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக  இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6

Xxx

ஆகஸ்ட் 16 திங்கட்  கிழமை

ஏ நான்கு  கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11

Xxx

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16

Xxxx

ஆகஸ்ட் 18 புதன்  கிழமை

நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1

xxx

ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை

இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4

xxxx

ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை

இந்திரனே நீ  அஹி  என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14

Xxxx

ஆகஸ்ட் 21  சனிக் கிழமை

வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை  மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1

xxx

ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை

என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2

Xxxx

ஆகஸ்ட் 23 திங்கட்  கிழமை

அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8

Xxxx

ஆகஸ்ட் 24 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16

மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும்  நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2

xxxx

ஆகஸ்ட் 25 புதன்  கிழமை

மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10

xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1

xxx

ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை

பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4

Xxx

ஆகஸ்ட் 28  சனிக் கிழமை

அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3

Xxx

ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை

3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4

Xxxx

ஆகஸ்ட் 30 திங்கட்  கிழமை

ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6

xxx

ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை

உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14

–subham–

 tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்

பிரெஞ்சு தத்துவ ஞானி , நாவல் ஆசிரியர் ரூஸோ (Post No.9911)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9911

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சுப் புரட்சியைத் (FRENCH REVOLUTION )தூண்டிவிட்ட பல்வேறு அம்சங்களில் ஒன்று உலகம் முழுதும் பரவிய ஒரு கோஷம் ஆகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் Liberty,  Equality, Fraternity  என்ற கோஷத்தைப் பரப்பியவர் தத்துவ ஞானியும்  , நாவல் ஆசிரியரும் ஆன ஷான் ஷாக்க்ஸ்  ரூஸோ JEAN JACQUES ROUSSEAU ஆவார் . ரூசோவின் எழுத்துக்களில் இவை  இருந்தாலும் புரட்சிக்காலத்தில் இவற்றை சேர்த்து முன்வைத்தவர் மாக்ஸ்மில்லியன் ரோபஸ்பியர் என்பவர் ஆவார் .

பிறந்த தேதி – ஜூன் 28, 1712

இறந்த தேதி- ஜூலை 2, 1778

வாழ்ந்த ஆண்டுகள் – 66

பிரெஞ்ச் மொழி இலக்கியத்தில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஒரு கடிகாரத் தயாரிப்பாளரின் மகனாகப் பிறந்தார். அவர் பிறக்கும்போதே அவருடைய தாயார் இறந்தார். ‘என் பிள்ளையை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம்’ என்று அவர் அறிவித்தார். அதற்கேற்ற அம்மாதான் வருக்கு கிடைத்தார். இதனால் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடினார் . ‘ஓடு காலி’யாக 4 ஆண்டுகளுக்குப் பல நாடுகளில் சுற்றித் திரிந்தார். இருபது வயதானபோது பாரிசில் குடிபுகுந்தார். அங்கே தெரெசா லவாசர் என்ற தையல்கார பெண்மணியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார். அந்த 5  பேரையும் அநாதை விடுதிகளில் சேர்த்துவிட்டார். இதுதான் பிரெஞ்சு தத்துவ ஞானியின் அழகு!

இங்கு ஒரு முக்கிய விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால் (அந்தக்காலத்தில்; இப்போது அல்ல) அவர் கற்கக் கசடு  அறக் கற்று அதற்குப்பின்னர் அதுபோல, படித்தது போல, நடந்தார் என்பது பொருள். ஆனால் மேலை நாடுகளில் படிப்புக்கும் சுய வாழ்வுக்கும் சம்பந்தம் இராது. பெரும்பலாலோரின் வாழ்வு நாற்றம் அடிக்கும் வாழ்வே. இந்தியாவில் ஒருவர் ‘மகான் ஆன பின்னர்’ இப்படிப் பார்க்க முடியாது. அவர்கள் வாழ்வு தூய வாழ்வாகவே இருக்கும். அருணகிரிநாதர் போன்றோர் பாவ (sinful) வாழ்விலிருந்து மீண்டுவிட்ட பின்னர் இப்படிப் பார்க்க முடியாது. மேலை நாடுகளிலோ புகழ் பெற்ற ஓவியர், கவிஞர், புலவர், கதாசிரியர், தத்துவ ஞானிகள் வாழ்வு எல்லாம் ஊழல் மலிந்த தாகவே இருக்கும்).

ரூஸோ தனது கவர்ச்சியால் இலக்கிய வட்டத்தில் பலருடன் தொடர்பு கொண்டார் . அதில் ஒருவர் 1751 முதல் வெளியான பிரெஞ்ச் மொழி கலைக்களஞ்சியம் எழுதும் பணியில் இவருக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இதனால் எழுத்தில் ஆர்வம் பிறந்தது. 49 வயதில் முதல் நாவல் ஜூலி வெளியானது. இது குடும்ப வாழ்வின் மஹிமை பற்றியது! இது அவருக்குப் புகழ் ஈ ட்டித் தந்ததுடன் ஐரோப்பிய புதினப் படைப்புகளில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னார்தான் இவருடைய சிந்தனைகள் அடங்கிய சோஷல் காண்ட்ராக்ட்  SOCIAL CONTRACT என்னும் சமூக ஒப்பந்தம் நூல் வெளியானது. அதில் இவருடைய பொன்மொழிகளைக் காணலாம்.

மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். பின்னர் எப்போதும் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான் என்ற வாசகம் இவருடையது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இவரது கோஷமும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் வந்தே மாதரம் கோஷம் போலவும், நேதாஜியின் ஜெய்ஹிந்த் கோஷம் போலவும் இது பிரான்ஸ் எங்கும் எதிரொலித்தது .

ரூசோவின் இலாககிய படைப்புகள் பல்வேறு துறைப்பட்டது. கலை , இசை முதலியன பற்றியும் எழுதினார். அறத்தைப் போதிக்கும் எமிலி போன்ற நாவல்களை எழுதினார். பல ஆபரா/ OPERA  இசைப் பாடல்களையும் எழுதினார்.

இவருடைய சுய சரிதை என்று சொல்லப்படும் கன்பெஷன்ஸ் CONFESSIONS (ஒப்புதல் வாக்குமூலம்) என்ற நூல் இவர் இறந்த பின்னர் வெளியானது. சுவையான நூல் என்ற போதிலும் அது ரூஸோவின் உண்மை வாழ்க்கை வரலாறு அல்ல.

PUBLICATIONS

1750- DISSCOURSE ON THE SCIENCES AND ARTS

1753- DISCOURSE ON THE ORIGIN OF INEQUALITY

1761- JULIE OR THE NEW HELOISE

1762- EMILE OR A NEW SYSTEM OF EDUCATION

1762- THE SOCIAL CONTRACT

PUBLISHED AFTER HE DIED

1782- CONFESSIONS

–SUBHAM-

TAGS-  ரூசோ ரூஸோ , பிரெஞ்சு ROUSSEAU

வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள் – பகுதி 2 (Post No.9910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9910

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் இருப்பது பற்றியும், கிணறு, குளங்களில் யாத்ரீகர்கள் வெள்ளிக் காசுகளை எறிவது ஏன் என்பது பற்றியும், யுத்த கால ரசாயன ஆயுதங்களை அழிக்க வெள்ளி உப்பு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் நேற்று கண்டோம். இதோ மேலும் சுவையான செய்திகள் :-

லத்தீன் மொழியில் அர்ஜெண்டம்(Argentum)  என்றால் வெள்ளி. இது ‘ரஜத’ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. மதுரை என்பதை மருதை என்பது போலவும், குதிரை  என்பதை குருதை என்பது போலவும், ‘ரஜத’ என்பது ‘அர்ஜத’ ஆகும். இந்த வெள்ளியின்  ரசாயனக் குறியீடு ஏஜி Ag என்பது இதனால் வந்ததே . சரகர்  என்பவர் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் வெள்ளியின் மருத்துவ உபயோகங்கள் இருக்கின்றன. வெள்ளி பஸ்மம்  பற்றியும் உளது . வேதத்தில் தங்கம் போலவே வெள்ளியும் குறிப்பிடப்படுகிறது .

இங்கு இன்னும் ஒரு சுவையான விஷயத்தையும் காண்போம். அமெரிஷியம் என்ற மூலகம் அமெரிக்காவின் பெயரில் உள்ளது; போலோனியம் என்ற மூலகம் போலந்து நாட்டவர் கண்டுபிடித்ததால் சூட்டப்பட்டது. ரேனியம் என்பது நதியின் பெயரால் ஏற்பட்டது. இது போல வெள்ளியின் லத்தீன் மொழிப்பெயர் தென் அமெரிக்காவில் உள்ள, கால் பந்து புகழ் வீசும் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்டது.

அர்ஜென்டினாவில் உள்ள நதிக்கும் வெள்ளியின் வேறு பெயர் பிளாட (Plata) . ஸ்பானிய மொழியில் ரியோ த ல பிளாட்டா Rio de la Plata .ஸ்பானியர்கள் மண்ணின் மைந்தர்களிடமிருந்து வெள்ளியைக் கொள்ளை அடித்தனர். ஸ்பானிய ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தபோதும் அர்ஜெண்டினா என்ற பெயர் மட்டும் – வெள்ளி நாடு – ஒட்டிக்கொண்டது. தென் அமெரிக்காவில் பிரேசில் தவிர மற்ற எல்லா இடங்களையும் ஸ்பெயின் ஆண்டது.

இனி வெள்ளியின்  பங்கு பணியைப் பார்க்கலாம். உடலுக்கு வெள்ளி தேவை இல்லை. வெள்ளி கலந்த ரசாயன உப்புகள் கெடுதியே செய்கின்றன. 50 வயதான ஒருவன் வாழ்நாளில் ஒன்பது மில்லிகிராம் வெள்ளியை உடலில் சேர்க்கிறான் என்றும் அது கல்லீரல் அல்லது தோலில் தங்கிவிடுகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

நாம் சாப்பிடும் சாதாரண உணவுப் பண்டங்களில் மிகச் சிறிதளவு வெள்ளி உலோகம் இருக்கிறது. பால், மாவு, தவிடு போன்றவற்றில் இது இருக்கிறது

xxx

மருத்துவ உபயோகங்கள்

சில்வர் நைட்ரேட் (Silver Nitrate)  என்னும் வெள்ளி உப்பை உடம்பில் ஏற்படும் வடுக்களை, மருக்களை அகற்ற பயன்படுத்தினர். இதே போல குழந்தைப் பருவத்தில் கண் பார்வை இழக்கும் நோய்களைத் தடுக்கவும் சில்வர்  நைட்ரேட் கரைசல் பயன்பட்டது. முகப்பருக்களை அகற்றும் மருந்திலும் இது உபயோகிக்கப்பட்டது. இவை எல்லாவற்றிலும் உள்ள ராகசியம் என்னவென்றால், அந்த உப்பு பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்கும் என்பதே. சிகரெட் குடிப்பதை நிறுத்த சில்வர் அசிடேட் (Silver Acetate)  உப்பை பயன்படுத்துகின்றனர். இது கலந்த மாத்திரை புகை பிடிப்போ ரின் வாயில் கசப்பை உண்டாக்குவதால் புகைபிடிப்பது குறையும்.

நீண்ட கால உபயோகம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், வெள்ளியை உடலுக்குள் செலுத்திவிடும் என்பதை அறிவோம். ஆகையால் வெள்ளியை மெதுவாக விடுவிக்கும் புதிய பொருள்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முகப்பருக்கு வெள்ளி மருந்துகள் (Colloidal Silver) இன்றும் பயன்படுகிறது.

பாக்டீரியாக்காளை அழிக்கும் குணத்தால் சில்வர் உப்புக்களை தீக்காயங்களைக் குணப்படுத்தவும்,உபயோகிக்கின்றனர். உடலுக்கு மேலே போடப்படும் பாண்டேஜ் (Bandage) , எலும்பு முறிவு மாவு ஆகியவற்றிலும் உடலுக்குள் செலுத்தப்படும் கதீட்டர் (Catheter) என்னும் குழாய்கள் ஆகியவற்றிலும் கலக்கப்படும் வெள்ளிப் பொருட்கள் கிருமிகளை அழிக்கின்றது.

வெள்ளி உப்புக்களை பயன்படுத்துவதால் முடி முதலியன விரைவில் நரை (Greying) தட்டும் (வெள்ளி மயிர்) அபாயமும் உளது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது. இவைகளை எல்லாம் கருத்திற்கொண்டுதான் வெள்ளியை மெதுவாக வெளியிடும் பாலிமர்களை பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று தயாரித்துள்ளது.

நீரை சுத்தப்படுத்தவும் வெள்ளி பயன்படுகிறது

xxx

வெள்ளியின் வரலாறு

மனிதனுக்கு வெள்ளியின் பயன்பாடு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளின் அகழ்வாராய்ச்சியில்  வெள்ளி உருக்கிய தடயங்கள் உள்ளன. ஆயினும் தங்கம் போல அதிகம் பயன்படவில்லை. காரணம் இது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. வட, தென்  அமெரிக்காவில் பெரு, பொலிவியா, அர்ஜென்டினா , மெக்சிகோ முதலிய நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது வேதம், பைபிள் போன்ற மத நூல்களில் வெள்ளி காணப்படுகிறது.

பல நாடுகள் வெள்ளிக் காசுகளை நாணயங்களாக வெளியிட்டன. பின்னர் நிக்கல், செம்பு கலப்புடன் வந்தன. இப்போது விஷேச விழாக்களைக் கொண்டாட மட்டுமே வெள்ளி நாணயங்கள் (Commemorative Coins) அச்சாகின்றன.

வெள்ளி கிடைக்கும் நாடுகள் தென் அமெரிக்காவில் பொலிவியா, மெக்சிகோ, பெரு, வெளியே சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா , ரஷ்யா. கனடா ஐரோப்பாவில் நார்வே , ஜெர்மனியில் சிறிதளவு கிடைக்கிறது

xxxx

தொழில்களில் வெள்ளி

வெள்ளியின் ரசாயன குணங்கள்

குறியீடு – ஏ ஜி Ag

அணு எண் – 47

உருகு நிலை  962 டிகிரி  C சி

கொதி நிலை – 2212 டிகிரி C சி

ஐசடோப்புகள் – சில்வர் 107, 109.

புகைப்படத் தொழிலில்தான் வெள்ளி அதிகம் பயன்பட்டது. இது தவிர பாத்திரங்கள், ஸ்பூன், கத்தி (Cutlery) ஆகியன தயாரிப்பிலும் கண்ணாடி, நகைகள், அலங்கார சாதனங்கள் ஆகியன தயாரிப்பிலும் இப்போது வெள்ளி உபயோகப்படுத்தப்படுகிறது.

வெள்ளி அயோடைட், வெள்ளி ப்ரோமைட் (Silver Iodide and Bromide) ஆகிய உப்புகள் ஒளி பட்டால் மாறிவிடும் (Light sensitive) . இதனால் புகைப்படத் தொழில் இதை நாடியது. மின்சாரத்தை எளிதில் கடத்தும் குணத்தால் மின்சார மற்றும் மின் அணு சாதனங்களிலும் வெள்ளி இடம்பெறுகிறது .

—SUBHAM–

tags– வெள்ளி-2, Silver- 2

‘ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம்! (Post No.9909)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9909

Date uploaded in London – 30 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 7 – 22-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

                      ‘ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம்!    

                                              ‘ஸ்வச்ச பாரத் உருவாக்குவோம்’, ‘பசுமை பூமியை உருவாக்குவோம்’, போன்ற குறிக்கோள்களை நாம் கொள்ளும் போது அவை மிகவும் கடினமானவை என்றோ அல்லது அடைய முடியாத இலக்கு என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.    

                                                         கழிவைக் குறைப்பதும், ஆற்றல் அல்லது சக்தியை மேம்படுத்துவதும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் எளிதில் அடையக் கூடிய லட்சியமாகும். எடுத்துக் காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.                                    ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் உள்ள சாதாரணமான பல்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும் காம்பாக்ட் ஃப்ளோரெஸண்ட் பல்பாக (Compact Flourescent Bulb) மாற்றினால் குறைந்த பட்சம் பத்து லட்சம் கார்களை சாலைகளிலிருந்து அகற்றினால் கிடைக்கும் மாசற்ற சூழ்நிலையை அடைவோம்.                                                                                    கணினிகளை அப்படியே ‘ஸ்லீப்’ பாங்கில் (mode) வைத்து விட்டுச் செல்லாமல் அவற்றை முழுவதுமாக மூடி விட்டால் 40 வாட்- ஹவரை நாள் ஒன்றுக்குச் சேமிக்கலாம்.     

                                                                                 டிஷ் வாஷரை அல்லது வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும் போது அவற்றை உரிய முறையில் முழுக் கொள்ளளவு பயன்படுத்தினால் ஏராளமான நீரைச் சேமிக்க முடியும். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தினால் காற்று மாசு விலகும். பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே கழிவாகத் தூக்கி எறிந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் அவை மக்கிப் போகாது.              தினமும் அசைவ உணவைச் சாப்பிடுவோர் வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அதை விலக்கினால் பூமியின் மாசைக் குறைத்தவர்களாவோம். ஒரு கிலோ இறைச்சிக்கு 15400 லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்து கொண்டோமானால் நீரை எப்படி சைவ உணவினால் காக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். பல மரங்களையும் காப்பாற்றியவர்களாவோம்.       பேப்பர் நாப்கின்களைப் பயன்படுத்தும் பழக்கம் பரவலாக அதிகமாகி வருகிறது. இதைக் குறைத்தால் குப்பை நிரப்புப் பரப்பு வெகுவாகக் குறையும்.

 ஆயிரக்கணக்கான டன் பேப்பர்கள் அலுவலகங்களிலும் வணிக வளாகங்களிலும், கல்வி பயிலும் இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தி பேப்பரை எறியாமல் இரு பக்கமும் பயன்படுத்தும் பழக்கத்தினால் பேப்பர் பயன்பாடு பாதியாகக் குறையும். இதனால் மரங்கள், காடுகள் பாதுகாக்கப்படும்.

ஒவ்வொரு சிறு விஷயமும் அரிய விதத்தில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் என்பது இதிலிருந்து புலனாகிறதல்லவா?

***

tags- ‘ஸ்வச்ச பாரத்

வெள்ளி பற்றிய சுவையான தகவல்கள் – – Part 1 (Post No.9908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9908

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 35 தனிமங்களின்/மூலகங்களின் அற்புதங்களை கண்டோம். இன்று வெள்ளி SILVER என்னும் உலோகம் பற்றிய செய்திகளை அறிவோம்.

பல நாடுகளில் கிணறுகளிலும், குளங்களிலும், புனித நீர் நிலைகளிலும்  மக்கள் வீசி எறிந்த வெள்ளிக் காசுகள் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கு தண்ணீரை சுத்தப்படுத்தும் குணம் இருப்பதை அறிந்த பழங்கால மக்கள் மற்றவர்களும் இப்படிச் செய்யட்டுமே என்று கருதி அதற்குப் பல சமய நம்பிக்கைகளையும் கற்பித்து இருக்கலாம். உதாரணத்துக்கு நாம் மருத்துவ குணமுள்ள துளசி, வில்வம், அருகம் புல் போன்றவற்றை இந்து தெய்வங்களுக்குப் படைக்கிறோம். அதனால் நம்மை அறியாமலேயே நமக்கு கிடைக்கும் மருத்துவ  பலன்களையும் அனுபவித்துப் பயன் அடைகிறோம்.

புகழ் பெற்ற சைரஸ் (Cyrus) என்ற பாரசீக மன்னன், எங்கே சென்றாலும்  பெரிய வெள்ளிப்பபானைகளில்  குடிநீரைக் கொண்டு செல்வாராம். அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட ஆற்றிலிருந்து எடுத்து காய்ச்சி வடித்துப் பின்னர் வெள்ளிக் குடங்களில் நிரப்புவார் என்று புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடோட்டஸ் (Herodotus  485- 425 BCE) எழுதி வைத்துள்ளார் . கொஞ்சம் வெள்ளி இருந்தாலே கிருமிகள் இறந்து விடும் என்பது தற்கால விஞ்ஞான  ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நீச்சல் குளங்களை குளோரின் வாயு ஏற்றி சுத்தப் படுத்துவதை விட வெள்ளி உலோக உப்புக்களைக் கலந்து சுத்தப்படுத்துவதே மேல்.

அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்காக வெள்ளி இழை கலந்து நெய்யப்பட்ட சாக்ஸ்/ socks காலுறைகள் விற்கப்படுகின்றன. அவர்களுக்கு அதிகமாக வியர்த்து, அங்கே உற்பத்தியாகும் பாக்டீரியா கிருமிகளால் துர் நாற்றம் வீசுவதை இது தடுக்கும். ஆனால் எல்லா பாக்டீரியாக்களையும் வெள்ளி கொல்லாது . கனடா  நாட்டு வெள்ளிச் சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்ட  ஒருவகை பாக்டீரியா தேவை இல்லாத வெள்ளியை செல் சுவர்களில் தள்ளிவிடுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் வெள்ளியின் அருமை தெரியும். கோவில்களில், குறிப்பாக வைஷ்ணவ கோவில்களில், அதிகமான வெள்ளிப்பாத்திரங்களைக் காணலாம். உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் மஹாராஜா அரண்மனையில் உள்ளது . 200 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று பெரிய வெள்ளிப் பானைகள் செய்யப்பட்டன.இவற்றில் 4000 லிட்டருக்கு மேல் கங்கை ஜலத்தை சேமித்து வைக்கலாம். ஜெய்பூர் மன்னர் லண்டனுக்கு இங்கிலாந்து மன்னரின் பட்டமேற்பு விழாவுக்கு கப்பலில் வந்த போது இதில் கங்கா ஜலம் கொண்டுவரப்பட்டது. அவர் பயணம் செய்த கப்பலில் மூன்று பிரம்மாணடமான பானைகளில் கங்கை நீர் எடுத்துவரப்பட்டது. ஒவ்வொரு பானையும் 5 அடி உயரமும் 15  அடி சுற்றளவும் உடையது.

xxx

தேவையற்ற ரசாயன ஆயுதங்களை அகற்றவும் வெள்ளி பயன்படுகிறது.மஸ்டர்ட் கேஸ், நெர்வ் கேஸ் (Mustard Gas, Nerve Gas)  எனப்படும் யுத்த கால விஷ வாயுக்களை, விஷமற்ற உப்புக்களாக மாற்ற வெள்ளி நைட்ரேட் கரைசலும் (Silver Nitrate and Nitric Acid)   நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

வெள்ளி என்பது தங்கம் போலவே பளபளப்பானது . கம்பியாக இழுக்கலாம்; தகடுகளாகத் தட்டலாம். ஒரு கிராம் வெள்ளியை 2 கிலோ மீட்டர் நீளக் கம்பியாக இழுக்கலாம் . இது அமிலங்களின் கரையக்கூடியது.

வெள்ளி உலோகத்துக்கு இரு  ஐசடோப்புகள் இருந்தாலும் அவைகளுக்கு கதிரியக்கம் கிடையாது

கந்தகம் என்னும் மூலகம்  இதனுடன் சேர்ந்து ஸல்பைடுகளை (Sulphides)  உண்டாக்குகிறது. இது கருப்பு நிற உப்புக்களாக படியும். இதனால்தான் வெள்ளிப்  பாத்திரங்களையும், நகைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது . அதிக கந்தகம் அடங்கிய வெங்காயம், உள்ளிப் பூண்டு, முட்டை போன்றவற்றை வெள்ளிப்பாத்திரங்களில் வைக்கக் கூடாது .

நாளைய தினம் மருத்துவ மற்றும் தொழில் உபயோகங்களைக் காண்போம்.

–தொடரும் 

tags- வெள்ளி, Silver

More Rigvedic Quotations (Post No.9907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9907

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

August 2021 ‘Good Thoughts’ Calendar

FESTIVAL DAYS IN AUGUST 3- ADIP PERUKKU (in Tamil Nadu), 8- Adi Amaavasai, 11- Adi Pooram, 15- Indian Independence Day, Aurobindo Birth Day, 20-Mohuram, 21-Varalaakshmi Vratam, 21 Onam, 22- Yajur Upakarma, Raksha Bandhan, 23- Gayathri Japam,30- Krishna Jayanthi

Amavasai / new moon day – 8; Purnima/ Full moon day- 22,

Ekadasi Fasting Days-4, 18

Auspicious Day s for Weddings etc- 20, 26

August 1 Sunday

To gain your mercy, Varuna,with hymns we bind your heart, as a charioteer binds his horse ( to the chariot) 1-25-3

xxx

August 2 Monday

Never do they fail the ever faithful worshipper 1-25-6

xxx

August 3 Tuesday

O Agni, you are like a Father to his son, Kinsman for kinsman and Friend to a good friend 1-26-3

xxx

August 4 Wednesday

Release us from the upper bond, , untie the bond between, and loose the bonds below. 1-25-21

Xxx

August 5 Thursday

Him, whosoever he may be, no man may vanquish, mighty one.

Nay, very glorious power is his 1-27-8

xxx

August 6 Friday

Agni, you save even one ,who walks in evil way 1-31-6

xxx

August 7 Saturday

Agni, you are our Providence, you are our father , we are your

brothers,and you are our spring of life 1-31-10

xxx

August 8 Sunday

Will not the Indestructible endow us with perfect knowledge of this wealth, of cattle? 1-33-1

Cattle does not mean cows and bulls. Like Tamil saint Tirumular it means the five senses.

Xxx

August 9 Monday

I fly to him invisible Wealth giver like a falcon flies to his cherished eyrie 1-32-2

Xxx

August 10 Tuesday

O Asvins, thrice bring to us abundant wealth,; thrice in the Gods assembly, thrice assist our thoughts

Thrice grant us prosperity, thrice grant us fame, for the Sun’s daughter has mounted your three wheeled car 1-34-5

xxx

August 11 Wednesday

Thrice,Asvins, grant to us heavenly medicines, thrice those of earth, and thrice that the waters hold 1-34-6

xxx

August 12 Thursday

His chariot decked with Pearl, of various colours,lofty,with golden pole, the God has mounted

The many rayed one, the holy Savita, bound, bearing power and might, for darksome regions 1-35-4

xxxx

August 13 Friday

Three heavens are there, two Savita’s adjacent, in Yama’ world one, the home of heroes

As on a lynch pin, firm, rest things immortal; he who has known it let him declare it here 1-35-6

xxx

August 14 Saturday

Manu has stabilised you a light, Agni, for all the race of men 1-36-19

Xxxx

August 15 Sunday

Stand up erect to lend us aid, stand up like Savita,the God 1-36-13

Xxx

August 16 Monday

Smite down as with a club, you who has fire for teeth, smite the wicked, right and left. Let not the man who plots against us in the night, nor any foe prevail over us 1-36-16

Xxx

August 17 Tuesday

O, Maruts, before your fury, the earth trembles like a king who is weakened by age 1-37-8

xxx

August 18 Wednesday

Come quickly in swift horses, for you have worshippers among Kanva’s sons.

May you rejoice among them well 1-37-14

Xxx

August 19 Thursday

What now? When will you take us by both the hands as a dear father his son?

Gods, sacred grass is cut and spread for you 1-38-1

Xxx

August 20 Friday

Never were your praiser loathed like a wild beast in pasture land.

Nor should he go on Yama’s path 1-38-5

xxx

August 21 Saturday

O Maruts , at your voice’s at this earthly habitation shakes;

And each man reels who dwells there in 1-38-10

xxxx

August 22 Sunday

You have yoked the spotted deer to your chariot; a red deer, as a leader, draws.

Even the earth herself listened to you as you came near, and men were sorely terrified 1-39-6

xxx

August 23 Monday

O, Son of Strength, each man calls you for aid when spoil of battle waits for him.

O Maruts, may this man who loves you well obtain wealth of good horses and hero might ,may Suntra the goddess come 1-40-2

xxxx

August 24 Tuesday

May Brahmanaspati draw nigh, may Suntra the goddess, come to this rite which gives the god the five-fold gift the Hero, Lover of Mankind .1-40-3

xxx

August 25 Wednesday

Let him not love to speak ill words; but fear the One, who holds all four within his hand until they fall

Tread with your foot and trample out the fire brand of the wicked one, the double tongued, whoever he be 1-42-4

xxx

August 26 Thursday

Lead us to meadows rich in grass; send on our way no early heat.

O Pusan, you find power for this 1-42-8

xxx

August 27 Friday

What shall we sing to Rudra, strong, most bounteous, excellently wise,

That shall be dearest to his heart?1-43-1

Xxx

August 28 Saturday

O, Soma, you set upon us the glory of a hundred men.

The great renown of mighty chiefs 1-43-7

xxx

August 29 Sunday

Agni, Him noblest and most youthful, richly worshipped guest, dear to the men who offer gifts. Him, Jatavedas, I beseech at dawn that he may bring gods to us 1-44-4

xxx

August 30 Monday

Asvins, Sons of the Sea, mighty to save discoverer s of riches, you Gods with deep thought who find out wealth 1-46-2

xxx

August 31 Tuesday

Come in the ship of these our hymns to bear you to the hither shore:

O Asvins, harness the car 1-46-7

The heavens wide vessel is your own; on the floods shore your chariot waits. Drops , with the hymn, have been prepared 1-46-8

–subham–

tags- August 2021, Calendar, Rig Vedic, Quotations

பைத்தியம் பிடித்து இறந்த பிரெஞ்சு சிறுகதை ஆசிரியர் மாப்பாசான் (Post.9906)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9906

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறுகதைகள் எழுதியவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பிரான்ஸ் நாட்டின் GUY DE MAUPPASANT  கை த  மாப்பாசான்  (     பிரெஞ்சு உச்சரிப்பு – கீ த மோபாசான்) ஆவார்.

இவருடைய சிறு கதைகளில் எளிமை, அங்கதம்/கிண்டல், நகைச்சுவை ஆகியன இருப்பதால் இவர் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பட்டியலில் முதல் வரிசையில் நிற்கிறார்  மனிதர்களின் வெளியில் தெரியாத குண நலன்களையும், உணர்ச்சிகளையும் கதையில் வடித்துக் கொட்டியதால் தனி இடம் பெற்றார்.

வடக்கு பிரான்சில் நார்மண்டியில் மாப்பாசான் பிறந்தார்.அவருக்கு 11 வயதானபோதே தாயும் தந்தையும் விவாக ரத்து செய்தனர்.இதனால் அவருக்கு திருமணம், தனிமை, கொ

டுமை ஆகியன குறித்து மனதில் அச்சம் துளிர்விட்டது.

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் பாரிஸ் நகரில் சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். பிரஷ்யா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய ஜெர்மனி, பிரான்சுடன் போர் தொடுத்தது; இந்தப் போர் பிராங்கோ – பிரஷ்யன் யுத்தம் FRANC0-PRUSSIAN WAR  என்று அழைக்கப்படும். இதனால் 1870-ம் ஆண்டில் மாப்பாசான் கல்வியும் தடைப்பட்டது 20 வயதில் போர் வீரர் ஆனார்.

பின்னர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். அப்போது சிறுகதைகளையும் எழுதினார். அவர் தாயாருடன் வசித்த காலம் அது.

பிரெஞ்ச்- பிரஷ்ய/ஜெர்மனி யுத்தத்தில் பிரான்ஸ் தோல்வி அடைந்ததை வைத்து கொழுப்புப் பந்து BALL OF FAT என்ற சிறுகதையை 30 வயதில் எழுதினார். அதை எல்லோரும் ரசித்துப் படித்தனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் மாப்பாசான், 300 சிறுகதைகளையும், கவிதைகளையும், புதினங்களையும் , பயணக் கட்டுரைகளையும்  எழுதிக் குவித்தார்

‘காசுக்கு கை நிறைய கழுதை விட்டை’ என்னும் பாணியில் இல்லாமல் அத்தனையும் முத்துக்களாக பிரகாசித்தன.

அவைகளில் மனித உணர்ச்சிகளை தத்ரூபமாக சித்தரித்தார். பெண்களின் மீது அவருக்குள்ள ஆர்வமும் வெளிப்பட்டது BEL- AMI ‘பெல் ஆமி’,  PIERRE AND JEAN ‘பியர் அண்ட் ஜீன்’ என்னும் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பெல் ஆமி கதையில், கெட்டது செய்யும் கதாநாயகன் வெற்றி பெறுவதைக் காட்டியதால் அதர்மத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக குற்றச் சாட்டுகளும் எழுந்தன.

எழுத்து மூலம் நிறைய பணம் சம்பாதித்தார். ஆயினும் அவர் காம சம்பந்தமான பாலியல் SYPHILIS  நோயால் பீடிக்கப்பட்டார் . பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் இந்த அவல நிலைக்குள்ளானார் . இது அவருடைய மன நிலையை பாதித்து , பைத்தியமாக்கியது;  மாப்பாசான் 42 வயதில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் MENTAL ASYLUM  உயிர் இழந்தார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 5, 1850

இறந்த தேதி – ஜூலை 6, 1893

வாழ்ந்த ஆண்டுகள்-  42

எழுதிய நூல்கள்

1880- BALL OF FAT

1881- THE HOUSE OF MADAME TELLIER

1882 – MADEMOISELLE FIFI

1883- A WOMAN’S LIFE

1884- MISS HARRIET

1885- BEL- AMI

1888- PIERRE AND JEAN

–SUBHAM–

tags- பைத்தியம் , பிரெஞ்சு சிறுகதை , மாப்பாசான்