Written by London Swaminathan
Post No. 16,166
Date uploaded in London – 5 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx


ENGLISH VERSION POSTED YESTERDAY.
Word beginning with letter U
உதயணன்
உதயணன் – வாசவதத்தா காதல் கதை உலகத்தின் பழங்கால காதல் கதைகளில் முக்கியமான ஒன்றாகும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நடந்த உண்மைக் கதை . சந்திர வம்சத்தில் தோன்றிய உதயணனன் வத்ச நாட்டை ஆண்டுவந்தான் . சஹஸ்ரானிகா என்ற மன்னன் மனைவி ம்ருகாவதி ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமத்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த காலத்தில் உதயணன் பிறந்தான் . பிறக்கும்போதே இவன் உலகப் புகழ்பெறுவான் என்ற அசரீரி வானில் ஒலித்தது. தமிழில் பெருங்கதை என்னும் காப்பியத்திலும், சம்ஸ்க்ருதத்தில் ஸ்வப்னவாசவதத்தம் போன்ற நூல்களிலும் இக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. காளிதாசனும் உதயணனைக் குறிப்பிட்டுள்ளான். பெருங்கதை என்னும் தமிழ் நூலில் காணப்படும் கதை பின் வருமாறு : பெருங்கதை நூல் முழுவதும் கிடைக்கவில்லை காண்டங்களின் உட்பிரிவுகள் ஆகிய காதைகள் பல அழிந்துள்ளன.உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது.உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைத் திருமணம் செய்தான் . தன்னுடைய நாட்டினை ஆளவதற்குத் திரும்பிவந்தான் .நாட்டைக் கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை அவனுடைய நண்பன்/அமைச்சன் யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.
இராசகிரி நகரில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பத்மாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். அதன் பின்னர், மானனீகை என்பவளையும், விரிசிகை என்பவளையும் மணந்து கொண்டு வாழ்ந்தான். வாசவதத்தையின் மகன் நரவாகன தத்தன் காந்தருவ உலகத்தை வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான்.

***
உத்தவ
Uddhava (उद्धव).—கிருஷ்ண பரமாத்மாவின் நெருங்கிய நாப்பண்; யாதவ குலத்தில் உதித்த அவன் கிருஷ்ணருக்கு நண்பனாகவும் தூதனாகவும் செயல்பட்டான் . அவனை ஹரிதாசன் என்று பாகவத புராணம் புகழ்கிறது . துவாரகை மதுரா ஆகிய நகரங்களுக்கு இடையே சென்று திரும்புகையில் கோபியர்கள் கிருஷ்ணரை மீண்டும் மதுரா நகரத்துக்கு அழைத்து வருமாறு கெஞ்சினார்கள். ஒரு சாபத்தினால் யாதவ குலம் அழியப்போவதை மனதில் கொண்டு, கிருஷ்ணரிடம் சென்று, யாது செய்வதென்று வினவினான் ; அவர் பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்று தவம் இயற்றுவாயாக என்று ஆலோசனை வழங்கினார் .
உத்தவகீதை
இந்துமதத்திலுள்ள 64 கீதைகளில் இதுவும் போற்றப்படுகிறது ; உரையாடல் வடிவிலுள்ள உத்தவகீதையிலும் தத்துவ விஷயங்கள் இருக்கின்றன .உத்தவர் பற்றியும் நூல்கள் உள. அவை उद्धवदूत (உத்தவதூத), उद्धवसंदेश (உத்தவசந்தேச) எனப்படும்
***8****
உலூக Ulūka (उलूक).—
ஆந்தை என்று பொருள் ; ஆங்கிலத்திலுள்ள அவ்ல் OWL என்ற சொல் ஸம்ஸ்க்ருத்திலிருந்து உதித்ததே ! ஆந்தை என்னும் பறவை மிகவும் புத்திசாலி என்பதால் லண்டனிலும் லநாதனிலும் கிரேக்க நாட்டிலும் பல பள்ளி கல்லூரிகளில் இதை சின்னத்தில் பொறிக்கின்றனர் ; தமிழில் பிசிர் ஆந்தையார் போன்ற பல புலவர்களின் பெயரில் ஆந்தை உள்ளதும் ஆராய்ச்சிக்குரியதே ; ரிக் வேதத்திலும் பாணினி சூத்திரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையுடைய சொல் ஆந்தை ; இந்திரனுக்கும் ஆந்தை என்ற பெயர் உண்டு
பழைய நூல்களில் முனிவர், மன்னர், நாகர், இடங்களின் பெயராகவும் கையாளப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் சகுனியின் மகனாகவும் பாண் டவர்களிடத்தில் துரியோதனனுப்பிய தூதுவனாகவும் இருந்தவன் பெயரும் உலூக என்பதே . யுத்தத்தில் அர்ஜுனன் அவனைத் தோற்கடித்தான்; சகாதேவன் உலூகனைக் கொன்றான்
ஆந்தை என்ற பொருளில் ஆயுர்வேத நூல்களில் இதன் மாமிசத்தை மருந்தாகப் பயன்படும் செய்திகள் உள்ளன ; ஸ்ம்ருதிகள் என்னும் இந்துமத சட்டப்புஸ்தகங்களில் இதன் மாமிசத்தை திவசம் என்னும் திதிகளில் பயன்படுத்தும் குறிப்புகளும் உள. பஞ்ச தந்தரக் கதையின் கடைசி கதை ஆந்தைகள்- காக்கைகள் போராட்டக் கதை ஆகும் ;இறுதியில் காக்கைகள் மகாநாடு கூட்டித் திட்டமிட்டு பகல் நேரத்தில் ஆந்தைகளின் கூடுகளுக்கு தீ வைத்து அவைகளை அழிக்கிறது ; இதை ஒரு முன்னுதாரணமாக மனதில் நினைத்து பாண்டவர்களின் கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்து பாண்டவர்களில் இளையோர் அனைவரையும் அழிக்கிறான்.
***
உலூபி என்பவள் நாக இளவரசி-(उलूपी)
ஒரு நாள், அர்ஜுனன், தனது அன்றாடச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.அப்போது காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபி, அர்ஜுனனை நீருக்கு அடியில் இழுத்துச் சென்றாள். நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) “ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய்? ஓ மருண்டவளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாருடைய மகள்?” என்று கேட்டான்.”ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மன்றாடினாள் {உலூபியே}, நான் 12 வருட பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறேன் என்று சொல்லி மறுத்தான் . ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை நிறைவேற்றும் ” என்றாள்.அவனும் அவளுடன் இரவில் தங்கி அவளது விருப்பத்தை நிறைவேற்றினான் “நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் உலூபி”. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான்.
பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.அர்ஜுனனுக்கும் சித்திராங்கதைக்கும் பிறந்தவனின் பெயர் பப்புருவாகனன். மஹாபாரத போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உலூபி உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் இறப்பதற்க் அர்ஜுனனும் ஒரு காரணம் பீஹ்மரின் சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அர்ஜுனனை உலூபி காப்பாற்றுகிறாள்.உலூபி ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று குரு குல மன்னர்கள் அனைவருக்கும் சேவை செய்கிறாள் பாண்டவர்கள் இமயமலை நோக்கி நடந்து உயிர்விடச் சென்ற போது உலூபி கங்கையில் மூழ்குகிறாள் . சித்ராங்கதை மணலூர் புரத்துக்குத் திரும்புகிறாள் இந்தக் கதை பாண்டவர்களையும் பாண்டியர்களையும் இணைக்கும் கதையாக உள்ளது.
***
உமா
பார்வதியின் பெயர்; சிவ பெருமானின் மனைவி; 2000 ஆண்டுப் பமையான சங்கத் தமிழ் இலக்கியத்தில் சம்ஸ்க்ருதத்தில் இறைவியின் பெயர் உள்ளது உண்மைதான்; ஏனைய லெட்சுமி, துர்கா, சரஸ்வதி லட்சுமியின் அக்காள் முதலியோர் எல்லோரும் தமிழ்ப்பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர் உபநிஷத்துக்களிலும் வரும் பெயர் உமாதான்! உமா என்றால் காட்டில் தவம் செய்யப்போக்காதே என்று அவளுடைய அம்மா சொன்ன சொற்கள் ஆகும்
அப்போது அவளுடைய அம்மாவின் பெயர் மேனா; அப்பாவின் பெயர் இமவான் ; காளிதாசனின் குமார சம்பவம் என்னும் நூல் உண்மை அம்மையின் பெருமையை உலகரியச் செய்தது.
****
உபநிஷத் Upaniṣad (उपनिषद्).—
(उपनिषद्) அருகிலிருந்து ஞான விஷயங்களைக் கற்றல் அல்லது அறிதல் என்பது இந்தச் சொல்லின் பொருள்; வேத இலக்கியம் என்பது சம்ஹிதை பிராமணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்ற நான்கு பகுதிகளை உடைத்து ; இவற்றில் ஆரண்யகங்கள் என்ற வனம்/ காடுகளில் ரிஷிகள் வாழ்ந்த வாழ்க்கையின் தொடர்ச்சியாகவே உபநிஷத்துக்கள் வருகிறது; ஜீவாத்மா என்னும் மனிதன் பரமாத்மா என்னும் இறைவனின் அம்சமே என்ற விஷயத்தைக் கூறும் இப்பகுதியை வேதாந்தம் என்பார்கள்; வவேதத்தின் அந்தம் — அதாவது வேதத்தின் சாரம்- முடிவு—இதுதான். 108 உபநிஷத்துக்கள் பட்டியல் இருந்தாலும் ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய பத்துதான் பழையவை, ஒரிஜினல்; ஏனையவை இமிடேஷன் கோல்ட் போன்றவை; பத்து முக்கிய — ஒரிஜினல்– உபநிஷத்துக்கள் பின்வருமாறு:
முக்கிய உபநிஷத் மந்திரங்கள் என்ற என்னுடைய ஆங்கில, தமிழ்க் கட்டுரைகளில் ஒரிஜினல் உபநிஷத் மந்திரங்களை அர்த்தத்தோடு கொடுத்துள்ளேன் .
1.ஐதரேய உபநிஷத் -ரிக்வேதம் சார்ந்தது
2.பிருஹதாரண்யக உபநிஷத் (யஜுர்வேத)
3.சாந்தோக்கிய உபநிஷத் (connected to the சாமவேத)
4. ஈஷா உபநிஷத் (also called ஈசாவாஸ்ய)
5.கத உபநிஷத்- கடோபநிஷத்
6. கேன உபநிஷத்
7.மாண்டூக்ய உபநிஷத்
8.முண்டக உபநிஷத்
9.ப்ரஸ்ன உபநிஷத்
10.தைத்திரீய உபநிஷத்
***
உபரிசர வசு Uparicaravasu (उपरिचरवसु)
சேதி நாட்டினை ஆண்ட ஒரு மன்னன் உபரிசர வசு; அவனுக்கு இந்திரன், ஒரு விமானத்தையும் வாடாத தாமரை மாலையையும் கொடுத்தான் . அந்த மாலை அவனுக்கு, யாராலும் வெல்ல முடியாத கவசம் போன்றது . அவன் கிரிகா என்ற பெண்ணை மணந்தான் .சக்திமதி ஆற்றினைத் தடுத்த கோலாகல மலையை அவன் காலால் உடைத்த போது தோன்றிய பெண் கிரிகா; ஒரு நாள் கானகம் சென்றான் ;அவளுடன் இன்பமாக இருந்த நினைவுகள் வந்தபோது, விந்து வெளியேறியது ; அதை வீணடிக்க மனம் இல்லாமல் ஒரு பறவையிடம் இலையில் கொடுத்து கிரிஜாவுக்கு அனுப்பினான் . அது இன்னொரு பறவையுடன் சண்டையிட்டபொழுது அதை நழுவ விட்டது கங்கை ஆற்றில் விழுந்த அந்த விந்துவை ஒரு மீன் சாப்பிடவே மீனவப் பெண் மத்ஸ்யகந்தி பிறந்தாள். அவள் சத்யவதி என்னும் பெயரில் சந்தனுவை மணந்தாள். அவளுக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளும் ஐந்து அரசர்களாகி புதிய வம்சங்களை உருவாக்கினார்கள் ; சத்யவதி- சந்தனு- பீஷ்மர் கதைகள் வேறு பதிவுகளில் உள்ளன.
TO BE CONTINUED………………
TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 110; இந்து மத கலைச்சொல் அகராதி-110, உதயணன் , உபரிசரவசு , உபநிஷத், உலூபி, உலோக, உமா























