Part 8 with Madurai Meenakshi Temple; Rare Pictures from 1928 German book (Post No.12871)


Maduriai Meenakshi Crown made up of pearls

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,871

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

This is part 8 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part eight, rare pictures of Madurai Sri Meeakshi Sundareswarar  (Shiva Temple) are posted; Pictures of her jewels, temple towers and near by temples are given below.

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Madurai Temple Door

Golden Lotus Tank in Madurai Temple

Srivilliputtur Temple

Rameswaram, Engineering Marvel, Longest corridor

—subham—

Tags- Madurai Temple, Rare pictures, longest corridor, Rameswaram ,temple, Srivilliputtur Andal,

My Visit to Rail Museum in Perambur, Chennai- Part 1 (Post No.12,870)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,870

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PICTURE OF PROF. S SURYANARAYANAN

PITCURE OF LONDON SWAMIATHAN

I went to Chennai Rail Museum with my brother Prof. Suryanarayanan on 20th December 2023. It has got four galleries with lot of train models and pictures. Fans of Railway clubs and those who with train spotting hobby will enjoy more. Outside the museum all old type train engines are kept. Though children would like to see trains, they wouldn’t understand the significance of black smoke emitting Steam Rail Engines.

When we saw those old model engines it kindled our nostalgic memories.  About 60 years ago we, brothers, used to travel from Madurai to Madras (now called Chennai) and our aunty in Madras used to tease us saying “what is this ? Why are you wearing black shirt?”

The reason is whatever colour shirt you wear , that will be deposited with black particles that came from the coal fired steam engine. All our brothers studied in Setupati High School, Madurai which was behind the Goods Shed of Madurai Railway station.

Sitting at the playground during afternoon lunch time and play time we used to enjoy inhaling the smoke from the coal fire. Anyone would like the smell.

Apart from this we used to watch the burning fire and the driver and fireman throwing big lumps of coal into the inferno and the steam coming out of umpteen holes in the engine, emitting big noise.

Only my eldest son had the fortune of at least seeing the coal fire and thick black smoke. Now and then I used to take him to the Railway station to show the engine and praise the genius of George Stevenson.

Those are the golden /olden days. When we read that Madurai- Madras will have Diesel powered engines we got exited; then came the electric trains which generated more excitement because of its speed. But I would like to go back to the olden days with al least one or two coal fired smoky engines.

It is like reading Ponniyin Selvan novel by Kalki and all of us wish to travel back in time to the golden days of Great Choza emperors.

In London, they run the old coal fired steam engine once a year with £25 ticket for a short distance. Whenever I looked at the website, it said the tickets were sold out.

Indian Railway should have at least one line with such old model trains in every area. It will generate very good income from train fans.

Here in London, we have separate clubs for Train spotters, Railway Stamp collectors and Train travellers.

Though I have used Euro Rail and trains in Italy, nothing will match the good old steam engines. The big noise and the whistle are still ringing in my ears.

xxxx

Coming back to Chennai Rail Museum, we have al types of carriages, engines, the mechanical parts and a lot of pictures of personalities like Jawaharlal Nehru to Queen Elizabeth. She visited the Perambur Coach factory during her trip to Chennai.

Another interesting feature of the museum is the display of lot of drawings and paintings with train as the theme.

Indian Picasos have done lot of modern, mechanical sculptures. Some of them are beautiful, but lot of others need explanation or description to appreciate them. Just like Picaso’s paintings!

With a very small entrance fee, it is worth visiting. A toy train is also run for the benefit of children.

When you visit Chennai next time, don’t miss it.

Since I took over fifty pictures I post them in two parts.

TO BE CONTINUED………………………………….

PITCURE OF LONDON SWAMIATHAN

–subham—

Tags- Rail Museum, Chennai, My visit, Steam engine, coal fired,

கோட்டக்கல் தன்வந்திரி,   மஞ்சேரி  சிவன் கோவில்கள்- 43 (Post.12,869)

Thriprangodu Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,869

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 43

கோவில் எண்கள் –55. 56, 57, 58

மலப்புரம் வட்டாரத்திலுள்ள காடம்புழா பகவதி, திருநாவாய் விஷ்ணு கோவில்களை முந்தைய பகுதிகளில் கண்டோம். மலப்புரம் வட்டாரத்தில்தான் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை உள்ளது .

55. கோட்டக்கல் விச்வாம்பர / தன்வந்திரி  கோவில்

அருகிலுள்ள ரயில் நிலையம்- திரூர் : Tirur,சுமார் 16 கிமீ;

கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ;

 கண்ணூரிலிருந்து 140 கி.மீ.

கோட்டக்கல் என்ற ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் உலகப்  புகழ்பெற்ற ஆர்ய வைத்ய சாலாதான் நினைவுக்கு வரும். தற்பொழுது அவர்கள் உலகம் முழுதும் கிளைகளைத் திறந்துவிட்டனர்; நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் வந்து சிகிச்சை  பெற்ற சிற்ப்புடைத்து.

1920ம் ஆண்டு பி.எஸ். வாரியரால் துவக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருத்துவ சாலை ஆயுர்வேதம் கைகண்ட மருந்து என்பதை உலகிற்குக் காட்டிவருகிறது. அவர்களுடைய சிகிச்சை  முறையும், உடலில் தடவும் தைலங்களும்  தனித்துவம் பெற்றவை.

ஆயுவேதத்தின் , உலக மருத்துவத்தின் தந்தை தன்வந்திரிஅவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ; கைகளில் நோய் தீர்க்கும் அமிர்த கலசத்துடன் தோன்றியவர் . கோட்டக்கல்லில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் விஸ்வாம்பர கோவில் அமைந்துள்ளது; இங்கு விஷ்ணுவை தன்வந்திரி ரூபத்தில் வழிபடுகின்றனர்.

விக்கிரகம் சலவைக் கற்களால் ஆனது. ஆண்டு உற்சவம் ஏப்ரல் மாதத்தில்  7 நாட்களுக்கு நடைபெறும்.

சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகிய நாட்டிய நாடகங்களையும் பஞ்சவாத்ய முழக்கத்தையும் உற்சவ காலத்தில் கண்டு களிக்கலாம்.இரவு முழுதும் கதகளி நடனம் நடக்கும்.பிரபல சங்கீத வித்துவான்களின் கச்சே ரிகளும் ரசிகர்களையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கும்.

ஆர்ய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ். வாரியார் 1932ம் ஆண்டில் கோவிலை எழுப்பினார். ஓராண்டுக் காலத்துக்கு தானே பூஜை செய்த, ஆக்ரா சலவைகல்லினால் ஆன, தன்வந்திரியை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகள் உண்டு

நான்கு கைகள் கொண்ட தன்வந்திரி சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக்கிறார்.

ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் கோவிலுக்குள் வரலாம்..

Contact details of Kottakkal Arya Vaidya Sala

Arya Vaidya Sala,

Kottakkal (P.O.),

Malappuram,

Kerala – 676 503.

Ph.: +91 483 2742216, 2808000

Xxxxx

56.பொன்னானி பகவதி கோவில்

ஸ்ரீ மூக்குத்தல பகவதி கோவிலை ஆதி சங்கரரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் (நம்பிக்கை வரலாறு).

முக்தி தல பகவதி என்பது சரியான பெயர்; இங்கு வனதுர்க்கை, பகவதியாக வழிபடப்படுகிறாள் . பொன்னணி- த்ரிசூர் பாதையில் சங்கரகுளம் என்னும் இடத்தில் கோவில் இருக்கிறது

சிறப்பு அம்சம்

நாராயணீயம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூலை இயற்றிய நாராயண பட்டத்ரிபாடு , இங்கு தியானம் செய்து முக்தி அடைந்தார். இதனால் முக்தி ஸ்தலம் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது..

நவராத்திரி பண்டிகையின்போது  9 நாட்களும் கோவில் விழாக்கோலம் பூணும்; நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் .

xxxx

57.த்ரிபரங்கோடு சிவன் கோவில் Sree Triprangode Shiva Kshetram

இந்தக்  கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது. திரூர் நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவு.

சிவராத்திரி பண்டிகைக் காலத்தில் 2 நாள் உற்சவம் நடக்கும். இரண்டு நாட்களும் யானைகள் பவனி உண்டு.

உத்தண்ட சாஸ்திரி எழுதிய குயில் வீடு தூது/ கோகில சந்தேச என்னும் சம்ஸ்க்ருத நூலில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது; பத்தாம் நூற்றாண்டில்  ஆட்சிபுரிந்த ரவிவர்மாவின் கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.

14ஆம் நூற்றாண்டில் திருநாவாய் யுத்தம் நடந்தபொழுது ஜாமோரின்/ இந்து மன்னர்கள் படைகள் இங்கே தங்கின .

ஆறு ஏக்கர் பரப்பில் அமைந்த பழமையான கோவிலில் பெரிய ஆலமரம், இலஞ்சி மரம், வில்வ மரங்களும் உள்ளன. 16 வயதில் எமனிடமிருந்து காப்பாற்றப்பட்ட மார்க்கண்டேய புராணத்துடன் கோவில் தொடர்புபடுத்தப்படுகிறது  5 குளங்கள், 3  ஸ்ரீ கோவில்கள் (கருவறைகள்) இருப்பது கூடுதல் சிறப்புகள் ஆகும்

கஜ ப்ருஷ்ட (யானையின் பின்பகுதி) வடிவில் முக்கிய சந்நிதி சிவன்-பார்வதியுடன் உள்ளது .

கோவில் வளாகத்தில் விஷ்ணு, ஐயப்பன் , நாகர், கிருஷ்ணர், பிரம்மராக்ஷஸ் , பத்ரகாளி, வேட்டக்கொரு மகன் சந்நிதிகளும் இருக்கின்றன .

xxxxx

58.கலிக்காவு பகவதி கோவில், மேலகம் 117 நாள் விழா

மஞ்சேரி மேலகம் பகுதியில் ஸ்ரீ கலிக்காவு பகவதி கோவில் இருக்கிறது.

கேரள கோவில் வரலாற்றில் மிக நீண்ட நாட்களுக்கு விழா நடக்கும் சிறப்புடைத்து.

117 நாட்களுக்கு களமெழுத்து விழா நடக்கும். அதாவது பெரிய உருவத்தை பாட்டுப் பாடிக்கொண்டே வரைவார்கள் . தாளப் பொலி விழாவுடன் நிறைவுபெறும். மறு நாளைக்கே அடுத்த 117 நாள் விழா துவங்கிவிடும்; அதாவது வருடம் முழுதும் இடைவிடாத விழா.

இதை வேறு எங்கும் காண முடியாது; மேலும் சித்திரம் தீட்டும் கலையயும் நாட்டுப்புறப் பாடல் கலையையும் ஆண்டு முழுதும் போற்றிப் பாதுகாக்கிறது !

–subham–

Tags- களமெழுத்து விழா, 117 நாள் விழா, த்ரிபரங்கோடு , சிவன் கோவில், கோட்டக்கல் , விச்வாம்பர ,  தன்வந்திரி  கோவில், ஆர்ய வைத்ய சாலை,

Kottakkal Arya Vaidyasala,

அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்! (Post No.12,868)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,868

Date uploaded in London –  –  31  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்!

ச.நாகராஜன்

உலகில் வாழ்வாங்கு வாழ ஹிந்து மதத்தில் உள்ள சாஸ்திரங்கள் பல.

இவற்றைக் கற்றுத் தேர்வது ஒரு ஜன்மத்தில் இயலாத காரியம்.

ஆகவே தான் இதில் சித்தி பெற்ற மஹாபுருஷர்களை அணுகி ஆசி பெற்று அவற்றைக் கற்கிறோம்.

மந்திர சாஸ்திரம், யந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என  அபூர்வமான சாஸ்திரங்கள் பல உண்டு.

அனந்தஸ்ச சாஸ்திரம் பஹு வேதிதவ்யம்

அல்பஸ்ச காலோ, பஹுவஸ்ச விக்ன:

யத் சாரபூதம் தத் தத் உபாசிதவ்யம்

ஹம்ஸோ யதா க்ஷேத்ரம் இவ அமுமா மிஸ்ரம்

என்ற ஸ்லோகம் ஒரு அபூர்வமான விஷயத்தைக் கூறுகிறது.

(Ananthacha Sastram bhahu vedithavyam
Alpascha kalo bhahavascha vignah
Yat sarabhutam tad upasitavyam
Hamso yada kheseram iva amuma misram)

உலகில் ஏராளமான சாஸ்திரங்கள் கற்பதற்கு உள்ளன.அவற்றைக் கற்பதற்கான நமது காலமோ மிகவும் குறைவு. அதில் வரும் இடைஞ்சல்களும் ஏராளம். ஆகவே நாம் சாஸ்திரங்களின் சாரத்தைக் கற்க வேண்டும். காலம் மிக மிகக் குறைவாக இருப்பதால் ஹம்ஸப் பறவையானது எப்படி பாலுடன் கலந்த நீரில் பாலை மட்டும் பிரித்தெடுக்கிறதோ அது போல சாரத்தை எடுக்க வேண்டும்.

குருவின் அருள் முக்கியம். சிரத்தை முக்கியம். மன ஈடுபாடு முக்கியம். உச்சரிப்பு முக்கியம். நமக்குரிய நேரத்தை இதில் ஒதுக்குவது முக்கியம்.

ராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அருமையான விளக்கத்தைத் தருகிறது.

ஆம், கும்பகர்ணன் தான் அவன்!

நித்யத்வத்தை வேண்டி சிவனை நோக்கி அவன் தவம் இயற்றத் தொடங்கினான். அவன் வரம் வேண்டும் போது நித்ரைத்வத்தைக் கேட்டான். சிவனும் அருளினார் அப்படியே.

என்றும் வாழும் வரம் (நித்யத்வம்) கேட்க நினைத்த அவன் என்றும் தூங்கும் வரத்தை (நித்ரைத்வம்) கேட்டான்.

யஜுர் வேதத்தில் உள்ள ஒரு சரித்திரம் இது.

ஒரு சமயம் தேவேந்திரனை வெல்லக் கருதி விருத்ராஸுரன் என்ற அசுரன் தவம் செய்தான். இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

அவன் இந்திரசத்ருர்வர்தஸ்ச என்று கேட்பதற்குப் பதிலாக ஸ்வரபேதத்தால் இந்திரனால் கொல்லப்படும் வரத்தைப் பெற்றான்.

இந்திரனால் வதம் செய்யப்பட்டான்.

ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு. ஒரு பலன் உண்டு.

நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரம் இதன் அடிப்படையில் உருவான ஒன்றே தான்.

ஸித்த சாபரதந்திரம் என்ற நூல் ஒவ்வொரு எழுத்திற்குமான தேவதை, பலன் ஆகியவற்றை விளக்குகிறது.

சேஷ ஸம்மிதா என்ற நூல் எழுத்துக்கள் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது.

பாத்ம ஸம்மிதா என்ற நூலிலும் அற்புதமான விளக்கங்களைக் காணலாம்.

உதாரணத்திற்காக ஒரு எழுத்து பற்றிய விளக்கத்தை இங்கு பார்க்கலாம்:

அ : அ என்ற அகார தேவிக்கு உள்ள வர்ணம் சிவப்பு. சிவந்த வர்ணத்துடன் வெள்ளாட்டின் முகமும் வெண்மை வஸ்திரமும் தரித்து  ஹம்ஸ வாகனமேறி வலது கையில் வில், இடது கையில் பாணம், அபயம், பாணம் ஆகியவற்றோடு விளங்குகிறாள். இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்டு.

இந்த அக்ஷரத்திற்கு விஷ்ணு மூர்த்தி. தாமரை தாது.

இதைப் பற்றி சேஷ ஸம்மிதா கூறுவது:

பத்மகிஞ்ஜல்கம் நிறம். பீதாம்பரதாரீ. எல்லா ஆபரணங்களுடன் கதா, பங்கஜம், (கதை உள்ளிட்டவை) சங்கம் கத்தி என நான்கு கரங்களில் ஆயுதங்கள் உள்ளன.

பலன்: இந்த அக்ஷரம் ஆதியானது என்பதால் எல்லா வித விக்னங்களும் நீங்கி சக்தியை விருத்தி செய்ய வைக்கும்.

மந்திரங்களில் உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் ஆராய்ந்தால் நாம் வியப்படைவோம்.

அதில் நியூமராலஜி உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் காண்போம்.

***

Part 7 with Aihole Durga Temple; Rare Pictures from 1928 German book – (Post No.12,867)


Aivalli= Aihole in Karnataka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,867

Date uploaded in London – –   30 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 7 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part seven, rare pictures of Temples of Karnataka and Gujarat are posted; Pictures of horoscope, Ganesh, Dhinoj,Delmal, Aivalli/ Aihole  etc are shown

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Elephanta Caves

Kheda in Gujarat

Hindu Horoscope

Konur, Gujarat

Huli,Karnataka

Panchalinga Temple, HOOLI

Dhinoj, Gujarat

Limboji Mta, Gujarat (Delmal)

—subham—

Part 7, 1928 German book, Aihole, Dhinoj, Konur, Delmal, Hooli, Karnataka

QUIZ  முருகன், கந்தன் QUIZ (Post No.12,866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,866

Date uploaded in London – –   30 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.92

1.அறுபடை வீடுகளில் எந்த இரண்டு தலங்களில் பழம் இருக்கிறது?

xxxx

2.முருகன் பெயரைச் சொன்னவுடன் எந்த இரண்டு பறவைகள் நினைவுக்கு வரும்?

xxx

3.கந்த புராணத்தையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இயற்றியோர் யாவர்?

xxxx

4.சங்க இலக்கிய நூல்களில் எந்த நூல் முழுக்க முழுக்க முருகன் புகழைப்பா டுகிறது காய் இயற்றியவர் யார் ?

xxxx

5.சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை என்னும் எட்டு நூல்களில் முருகன் பற்றிய பாடல்கள் எதில் உள்ளன?

xxxx

6.சுவாமிநாதன்தண்டாயுதபாணி செந்தில் ஆகிய முருகன் பெயர்களை அறுபடை வீடுகளில் எதனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?

xxxx

7.திருப்பதி பாலாஜியை/ வெங்கடாசலபதியை முருகன் என்று பாடியவர் யார் ?

xxxx

8.காங்கேயன் என்றால் என்ன பொருள்?

xxxx

9.எந்த இரண்டு நட்சத்திரங்களை முருகன்/கந்தனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?

xxxx

10.ஊமையாகப் பிறந்து முருகன் அருளால் கவிபாடும் திறன் பெற்ற புலவர் யார் அவர் பாடிய முக்கிய நூல்கள் என்ன?

xxxx

விடைகள்

1.பழம் உதிர் சோலை, பழம் நீ (பழனி)

xxxx

2.மயிலும் , சேவலும்

xxxx

3.கந்த புராணம் ஆசிரியர்- கச்சியப்ப சிவாச்சார்யார்

கந்த சஷ்டிக் கவச ஆசிரியர்- தேவராய சுவாமிகள்

xxxx

4.திருமுருகாற்றுப்படை; அதை நக்கீரர் இயற்றினார்.

xxxx

5.பரிபாடலில் உள்ளன.

xxxx

6.சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் குடிகொண்டுள்ள முருகனின் பெயர்கள் அவை .

xxxx

7.அருணகிரிநாதர் திருப்புகழ் நூலில் இப்படிப்பாடியுள்ளார்

xxxx

8.முருகனையும் பீஷ்மரையும் கங்கையின் மைந்தர்கள் என்று குறிப்பிட்ட காங்கேயன் என்ற பெயரைப் பயன் படுத்துவார்கள் 

xxxx

9.கார்த்திகை , விசாகம் ஆகிய இரண்டு விண் மீன்களை;

Xxxx

10.குமார குருபரர் ; அவர் பாடிய பல நூல்களில் மிகவும் பிரபலமானவை :

மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகல கலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்; கந்தர் கலிவெண்பா.

xxxx

—subham—-

Tags- முருகன் கேள்வி பதில் , QUIZ  முருகன், கந்தன் QUIZ

முருகன் கேள்வி பதில்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

30 Apr 2016 — பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது? 7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது? 8.பழனி மலையில்

லவ குசனுக்கு கோவில்கள்: வயநாடு கோவில்கள் – 42 (Post No.12,865)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,865

Date uploaded in London – –   30 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 42

கோவில் எண்கள் –51. 52, 53, 54

51.புல்பள்ளி சீதா தேவி கோவில்

சுல்தான் பேட்டரியிலிருந்து 8 கி.மீ . தொலைவில் புல்பள்ளி இருக்கிறது. இங்குள்ள கோவிலில் ராமனின் புதல்வர்களான லவ, குசர்கள், மற்றும் சீதா தேவி ஆகியோர் தரிசனம் தருகின்றனர் .

கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அழகான ராமாயண ஓவியங்கள் உள்ளன

இந்த  சீதா தேவி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் பழசி ராஜாவால் கட்டப்பட்டது.

மத வெறிபிடித்த மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் இந்த கோவிலை அழிக்கத் திட்டமிட்டார். ஆனால்  தேவியின் அற்புத சக்தியால் நண்பகலில்  இருள் மண்டியது. இதனால் துலுக்கப்படைகள் பின்வாங்கின.

சிறப்பு அம்சங்கள்

சீதா தேவி லவனையும் குசனையும் பெற்ற இடம்  வட இந்தியாவில் உள்ளது. ஆயினும் இங்குள்ள மக்கள், அது இங்கு நடந்ததாக நம்புகின்றனர்

இந்த வட்டாரத்தில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் அதிகம்; ஆயினும் கோவில் வட்டாரத்தில் அவை இல்லை. சீதை இட்ட சாபத்தால் அவை வருவதில்லை என்றும் நம்புகின்றனர்.

வால்மீகம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் புற்று என்று பொருள்; புற்று சேரும் அளவுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து தவம் செய்ததால் வால்மீகிக்கு இப்பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் ஒரு புலவர் பெயர் வால்மீகி !

இந்த வட்டாரத்தை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தும் வண்ணம் புற்றுக்கள் நிறைந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் ஆண்டு உற்சவம் நடக்கும். இதற்கு திர உற்சவம் என்று பெயர். மூன்று வகையான தெய்யம் Theyyam நடனங்கள் அப்போது நடக்கும். வித விதமான முக வர்ணங்கள்; பலவகை வளையல்கள், வித்தியாசமான கிரீடங்கள் ஆகியவற்றைக் காண பெரிய பக்தர்கள் கூட்டம் கூடுகிறது

தெய்யம் நடனத்தில் ஆடுவோர், தெய்வங்களை தம் மீது ஏற்றி (ஆவாஹனம் செய்து) ரசிகர்களை ஆசீர்வதிப்பார்கள் .

பணியர் களி என்ற பழங்குடி மக்கள் நடனமும்  அதற்கே உரித்தான இசையுடன் நடக்கிறது.

XXXXX

52.திருநெல்லி விஷ்ணு கோவில்

வடகேரளத்தில் வயநாடு பகுதியில் உள்ள முக்கிய மஹா விஷ்ணு கோவில் திருநெல்லி கோவில் ஆகும். மணத்தவாதியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது. இதை சஹ்யாமல (மேற்கு மலை) க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்

3000 ஆண்டுப் பழமை உடையது என்றும் காசி, கயா க்ஷேத்திரங்களுக்குச் சமமானது என்றும் பக்தர்கள் சொல்லுவர் ; இந்தக்கோவிலை வணங் கியோர் பட்டியல் நீண்ட பட்டியல் ! பிரம்மாவே ஸ்தாபித்த இந்தக்கோவிலுக்கு ராம லட்சுமண , சுக்ரீவ, சபதரிஷிகள் , கருடன் ஆகியோர் வந்தனர். கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையையும் இந்த இடத்துடன் தொடர்புபடுத்துவார்கள் .

ஒரு பர்லாங் தூரத்தில் பாபநாசினி ஓடை ஓடுகிறது; இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் அனைத்தும் ஓடிவிடும் தென்பகுதியில் உள்ள புனிதப்   பாறையில் இறந்தோருக்கான சடங்குகள் நடக்கும். ஜமதக்கினிமுனிவர் வந்து சிறப்பித்த இடம் இது.

விஷு புண்ய நாளில் ஆண்டு உற்சவம் நடக்கிறது. ஒட்டந்துள்ளல் , கதகளி நடனங்கள் அப்போது நடக்கின்றன.

கார்கிடகம், துலாம்,கும்பம், மாதங்களில் அமாவாசை நாளில் நீத்தாருக்கு பலி கொடுக்க தாய் தந்தையரை இழந்தோர் வருவார்கள். அருகிலுள்ள த்ரிசேரி மஹாதேவன் கோவிலுக்கும் அவர்கள் செல்கின்றனர்.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் இயற்கை வனப்புமிக்கது.

கோவிலில் கண்கவரும் ஓவியங்களும் உள்ளன.

தெற்குப் பக்கமுள்ள பஞ்ச தீர்த்தக்குளம் ஒரு புனிதக் குளம். ஐந்து புனித ஆறுகளின் நீர் இக்குளத்தில் கலப்பதாக ஐதீகம். குளத்தின் நடுவே ஒரு மேடு உள்ளது. அதை அடைய ஒரு கல்பாலம் உள்ளது. இந்த மேட்டில் உள்ளது சரிவான கல்லை விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.

XXXX

53.சுல்தான் பேட்டரி மஹா கணபதி கோவில்

சுல்தான் பேட்டரி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை திப்பு சுல்தானும் வணங்கியதாகத் சொல்லுவார்கள்.

ஐனவரி -பிப்ரவரி மாதங்களில் எட்டு நாள் உற்சவம் நடக்கிறது. சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகியன நடக்கும். மூன்றாம், நாலாம் நாள் திருவிழா முக்கியமானது. அந்த நாட்களில் களம் எழுத்துப் பாட்டு செய்வார்கள்.பூமியில்/ களத்தில்  இறைவனின் படத்தை எழுதுகையில்/ வரைகையில் பாட்டுப்  பாடுவார்கள். விழாவின் கடைசி நாளன்று அலங்கார யானையின் மீது திடம்பு (இறைவனின் திரு உரு) ஏற்றப்பட்டு நகர் முழுதும் பவனி வரும். காலை முதல் மாலை வரை பவனி நடைபெறும் .

XXXX

54.சுல்தான்பேட்டரி  மாரியம்மன் கோவில்

அம்மை போன்ற நோய்கள் அண்டாமல் பாதுகாக்க மாரியம்மாவை வணங் கும்  வழக்கம் தென் இந்தியா முழுதும் உள்ளது. சுல்தானபேட்டரி மாரியம்மன் கோவிலில்  பிப்ரவரி- மார்ச் மாதத்தில் 3 நாள் விழா நடக்கும். மூன்றாம் நாளன்று கழச்ச வரவு ஊர்வலம் நடக்கும். அதில் கும்பம் களி , கோல் களி , திர , காவடி முதலியன இடம்பெறுகின்றன. பறிச்சமூட்டுக்களி , பரத நாட்டியம், மோஹினியாட்டம் ஆகியவையும் உற்சவ காலத்தில் நடப்பது கோவிலின் சிறப்பு அம்சங்களாம் .

—-சுபம்—

TAGS– வயநாடு, கோவில்கள், சுல்தான் பேட்டரி, லவ குச, சீதாதேவி, கோவில்

சமயக் குரவர் நால்வரின் வயது, நட்சத்திரம், அவதாரச் சிறப்பு! (Post.12,864)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,864

Date uploaded in London –  –  30  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சமயக் குரவர் நால்வரின் வயதுநட்சத்திரம்அவதாரச் சிறப்பு!

ச.நாகராஜன்

சைவ சமயம் தழைத்தோங்க அவதரித்த நால்வரைப் பற்றிய விவரங்களை ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்.

அதை விளக்கும் பாடல்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சமயக் குரவர் நால்வரின் வயது

அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்கு

செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் – இப்புவியிற்

சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்

கந்தம் பதினா றறி.

அப்பரின் வயது 81.

81 வருடங்கள் அவர் புவியில் வாழ்ந்து பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றிப் பாடினார்.

வாதவூரர் எனப் புகழ் பெற்ற மாணிக்கவாசகருக்கு வயது 32. அவர் திருவாசகத்தைப் பாடி அருளினார்.

சுந்தரருக்கு வயது வயது 18.

18 வயதுக்குள் அவர் ஆற்றிய தெய்வீக விளையாடல்கள் பல. அவர் தலம் தோறும் சென்று தேவாரப் பாடல்களைப் பாடி அருளினார்.

திருஞானசம்பருக்கு வயது 16.

16 வயதுக்குள் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள தேவாரப் பாடல்களை அவர் பாடி அருளினார். அவர் ஆற்றிய தெய்வீகத் திருவிளையாடல்கள் பல.

நால்வரின் நட்சத்திரம்

நால்வரின் நட்சத்திரம் குறித்த பாடல் இது.

பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்

நீடிய சித்திரை மாதச் சதயம் நிறைவன்றொண்டர்

ஆடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகந்

தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே.

சம்பந்தர் – வைகாசி மாதம் மூலம்

அப்பர் – சித்திரை மாதம் சதயம்

வன்றொண்டர் எனப்படும் சுந்தரர் – ஆடி மாதம் சுவாதி

திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் – ஆனி மாதம் மகம்

சேக்கிழார் – வைகாசி மாதம் பூசம்

நால்வரின் அவதாரச் சிறப்பு

நால்வரின் அவதாரச் சிறப்பு குறித்த பாடல் இது.

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகனு – முற்கோலி

வந்திலரே னீறெங்கே மாமறை நூல் தானெங்கே

எந்தைபிரா னைந்தெழுத் தெங்கே

அப்பரும் சம்பந்தரும் சுந்தரும் வாதவூர் மாணிக்கவாசகரும் தோன்றவில்லை எனில் திருநீறு இல்லை, மாமறை நூல் இல்லை, ஐந்தெழுத்தும் இல்லை அல்லவா?

திருஞானசம்பந்தர் – குலம் அந்தணர்; நாடு – சோழ நாடு; ஊர் – சீர்காழி; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் 385 பாடல்கள் 4169 முதல் மூன்று திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன

திருநாவுக்கரசர் (அப்பர்) – குலம் வேளாளர்; நாடு – நடு நாடு; ஊர் – திருவாமூர்; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் 312 பாடல்கள் 3066 நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன.

சுந்தரர் – குலம் ஆதிசைவர்; நாடு – நடு நாடு; ஊர் – திருநாவலூர்; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் நூறு. பாடல்கள் 1026. இவை ஏழாம் திருமுறையில் உள்ளன.

மாணிக்கவாசகர் – குலம் –  அந்தணர்    நாடு- பாண்டிய நாடு   ஊர் –  திருவாதவூர்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. பாடல்கள் 658. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

திருக்கோவையாரில் 25 அதிகாரங்கள் உள்ளன. பாடல்கள் 400. இவை எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ளன.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்

பாடலின் பொருள் :

திருக்குறள், ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரம், முனிவர்கள் மொழி, திருக்கோவையார் மற்றும் திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வாசகமே. அதாவது உணர்த்துகின்ற மெய்ப்பொருள் ஒன்றேயாம்.

 இவற்றைக் கற்போம்; உயர்வோம்!

***

Part 6 with Rajasthan Temples; Rare Pictures from 1928 German book – (Post No.12,863)

Three Bulls, Mount Abu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,863

Date uploaded in London – –   29 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 6 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part six, rare pictures of Temples of Rajasthan are posted; Akali (Sikh)symbols, South Indian Temple Cars (Chariots), Temple models are also pictured.

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Akali Turban and Chakra

Udaipur

Temple Chariots from Trichy and Mysuru

Amber in Rajasthan

Sun Temple at Modhera, Gujarat

Shiva templeShiva Temple Model

Marble Templecombe 

Kota, Rajsthan

Ekalinga Temple, Udaipur, Rajsthan

—subham—

Part 6, 1928 German book, Udaipur, Kota, Rajasthan, Mount Abu, Amber

QUIZ யானைப் பத்து QUIZ (Post No.12,862)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,862

Date uploaded in London – –   29 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.91

1.முருகனின் யானையின் பெயர் என்ன ?

xxxx

2.இந்திரனின் யானையின் பெயர் என்னஅதன் நிறம் என்னஅதற்கு எத்தனை தந்தங்கள்?

xxxx

3.மஹாபாரத யுத்தத்தின் போக்கை மாற்றிய யானை எது?

xxxx

4.கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் என்ன அதை ஏவியவன் யார்?

xxxx

5.பல சம்ஸ்க்ருத நூல்களின் கதாநாயகன் ஆன உதயண மன்னன்  அடக்கிய யானையின் பெயர் என்னபுத்தர் அடக்கிய யானையின் பெயர் என்ன?

xxxx

6.சந்திரலேகா என்ற யானையின் பெயர் எங்கே வருகிறது?

xxxx

7.எந்த யானைக்கு குருவாயூரில் சில உள்ளது ?ஏன்?

xxxx

8.யானைகளை மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்டு அவை இறப்பதை பார்த்து ரசித்த ஹுன மன்னன் யார் ?

xxxx

9.யானை மீது ஏறி கயிலை மலைக்குச் சென்றவர் யார்?

xxxx

10.ரிக்வேதத்தில் யானைக்கு என்ன பெயர் சொல்லப்பட்டுள்ளது?

xxxx

விடைகள்

1.முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்

xxxx

2.இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம்; அது வெள்ளை யானை; அதற்கு 4 கொம்புகள்.

xxxx

3.மஹாபாரத கால யானையின் பெயர் என்ன அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது. துரோணர் இறக்க நேரிட்டது ; ஏனெனில் அவருடைய மகன் பெயரும் அஸ்வத்தாமா

 xxxx

4.குவலயாபீடம்.; அதை கம்சன் ஏவினான் ; கிருஷ்ணர் அதன் கொம்பை உடைத்து அதைக்கொன்றார் .

xxxx

5.உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி.

புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.

xxxx

6.சம்ஸ்க்ருத நாடகம் ஒன்றில்  யானையின் பெயர் சந்திரலேகா.

xxxx

7.நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.

அதுதான் உயரமான, கம்பீரமான யானை; பல்லாண்டுகளுக்கு கிருஷ்ணன் விக்கிரகத்தைச் சுமக்கும் பாக்கியம் பெற்றது

xxxx

8.மிஹிரகுலன் (Huna King)

Xxxx

9.நால்வரில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை மீது அமர்ந்து கைலாயம் சென்றார் ; அவரைப் பார்த்த சேர மான் பெருமாள் நாயனார், குதிரை மீது அமர்ந்து அவருடன் கயிலை சென்றார்.

xxx

10.வேதத்தில் யானைக்கு இபம் என்று பெயர்; அதிலிருந்து ஆங்கிலச் சொல் எலிபண்ட் ELEPHANT வந்தது. அருணகிரிநாதர் கூட முருகனை இபமா முகன் தனக்கிளையோனே என்று திருப்புகழ் பாடுகிறார்.

xxxx subham xxxx

tags- QUIZ யானைப் பத்து QUIZ ,