
கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)
மே 2018 நற்சிந்தனை காலண்டர்
COMPILED by London Swaminathan
Date: 28 APRIL 2018
Time uploaded in London – 8-43 am (British Summer Time)
Post No. 4956
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்
(2018 சித்திரை– வைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;
விளம்பி காலண்டர்)
முக்கிய விழாக்கள் – 28- வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28.
பௌர்ணமி– – 29; அமாவாசை– – 15; ஏகாதஸி விரதம்—11, 15
சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27
மே 1 செவ்வாய்க்கிழமை
ஒன்றெ என்னின் ஒன்றேயாம்
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்
ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)
மே 2 புதன்கிழமை
கங்குல் பொழுதும் துயிலாத
கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)
மே 3 வியாழக்கிழமை
முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)
மே 4 வெள்ளிக்கிழமை
பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்
தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)
மே 5 சனிக்கிழமை
உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

மே 6 ஞாயிற்றுக் கிழமை
வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)
மே 7 திங்கட்கிழமை
மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்
உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)
மே 8 செவ்வாய்க்கிழமை
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்
(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)
மே 9 புதன்கிழமை
ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்
(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)
மே 10 வியாழக்கிழமை
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ
யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

மே 11 வெள்ளிக்கிழமை
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)
மே 11 வெள்ளிக்கிழமை
உயர்வு மீட்சியும்
பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்
மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால் அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))
மே 12 சனிக்கிழமை
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது
வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)
மே 13 ஞாயிற்றுக் கிழமை
தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))
மே 14 திங்கட்கிழமை
அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்
கடல்படைத்தவரொடும் கங்கை
தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)
மே 15 செவ்வாய்க்கிழமை
ஈசனின் பெறு படைக்கலம்
இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்
நாசம் உற்றிட நடப்பன
கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு அளித்தான்.)

மே 16 புதன்கிழமை
தெறு சினத்தவர்கள் முப்புரம்
நெருப்புற உருத்து எய்த அம்பும்
குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு
இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)
மே 17 வியாழக்கிழமை
குலத்த கால் வயநெடுங் குதிரையும்
அதிர் குரல் குன்றும் இன்று
வலத்த கால் முந்துறத் தந்து நம்
மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)
மே 18 வெள்ளிக்கிழமை
அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)
மே 19 சனிக்கிழமை
வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை
சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)
மே 20 ஞாயிற்றுக் கிழமை
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

மே 21 திங்கட்கிழமை
வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்
மே 22 செவ்வாய்க்கிழமை
என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய
உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)
மே 23 புதன்கிழமை
காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்
மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்
மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)
மே 24 வியாழக்கிழமை
காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)
மே 25 வெள்ளிக்கிழமை
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு
விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

மே 26 சனிக்கிழமை
வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்
பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)
மே 27 ஞாயிற்றுக் கிழமை
உபநிடதங்கள் ஓதுவ
கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)
மே 28 திங்கட்கிழமை
முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்
சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)
மே 29 செவ்வாய்க்கிழமை
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)
மே 30 புதன்கிழமை
ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)
மே 31 வியாழக்கிழமை
கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்
கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)
–SUBHAM–