அன்னம்/ உணவு பற்றிய 7 பழமொழிகள் என்ன? (Post 8757)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8757

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

அன்னம் இட்டாரைக் கன்னம் இடலாமா

அன்னமயம் பிராண மயம்

அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்

அன்னம் மிகக் கொள்வானும் ஆடை  அழுக்கு ஆவானும் பதர்

அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு

அன்னம் இறங்குவதே அபான வாயுவால்

அன்னத்தில் புத்தி கூர்மையேயன்றி வித்தையில் புத்தி கூர்மையில்லை

tags– அன்னம்/ உணவு , பழமொழிகள்

SWAMI CROSS WORD 30920 (Post No.8756)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8756

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1 2 3 456 7
      8    
9     10    
           
11     12    
    13      
      14.    
15          
16     17    
18          

ACROSS-

1. –11letters—FOUNDER OF HINDU FRONT IN TAMIL NADU

8.—5—CAPITAL OF KUBERA AS PER SIVA PURANA

9 — 6—FIRST AND FOREMOST GOD IN HINDU PANTHEON

10.—4—WHERE JAIN TIRTHANKARA MAHAVIR DIED IN UTTAR PRADESH

11.—5—FASTING IN HINDUISM; VOW

12.—5—NAIL IN SANSKRIT AND OTHER INDIAN LANGUAGES

13.—4—WORLD’ S FIRST LAW GIVER

14.—5—CHILD, BABY

15.—6—UNTRASLATABLE  HINDU WORD FOR ALL GOOD THINGS

16—6—FAVOURITE STAR OF MOON

17.—5—LOWER CASTE PEOPLE OF MAHARASHTRA

18.—9—HALF SIVA, HALF GODDESS FORM

*******

DOWN—

1.—11—MANTRALAYA MAHAN

2.—8—ONE WHO CHURNS  OUR MIND

3.—6—SLOGAN, RECITATION  SOUND

4.—9—ONE WHO DESTROYS PAPA, TWO TOWNS  ARE IN TAMIL NADU

5.—5—MELODY IMPROVISATION,

6.—8—TWINS IN RAMAYANA

7. – – 10—HAND GESTURES IN BHARATA NATYA DANCE

founder of Hindu Front

tamilandvedas.com, swamiindology.blogspot.com

crossword, 30920,

–SUBHAM–

தகுதி, திறமை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.8755)

அக்டோபர் 2020 நற்சிந்தனை காலண்டர்

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8755

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – 2-காந்தி ஜெயந்தி , 17-நவராத்ரி ஆரம்பம், துலா விசு புண்ய காலம்; 

25-சரஸ்வதி பூஜை,  26-விஜய  தசமி, தசரா .

பவுர்ணமி -1, 31;  அமாவாசை -16; ஏகாதசி விரதம் – 13, 27

முகூர்த்த தினங்கள் – 18, 26, 29, 31

கடந்த எட்டு ஆண்டுகளில் 3000 தமிழ் பொன்மொழிகளையும் 3000 ஆங்கிலப் பொன்மொழிகளையும் ஸப்ஜெக்ட் -வாரியாக SUJECT WISE தமிழ், ஸம்ஸ்க்ருத புஸ்தகங்களிலிருந்து கொடுத்துள்ளேன். எனக்கே வியப்பு; எல்லாம் இறைவன் செயல்.

அக்டோபர் 1 வியாழக்கிழமை

அயோக்ய புருஷோ நாஸ்தி , யோஜகஸ் தத்ர துர்லபஹ – சுபாஷித ரத்ன பாண்டா காரம்

உலகில் உதவாக்கரை என்று எவருமிலர் ; அவரவர் திறமையைக் கண்டு உபயோகிக்கும் ஆட்கள் தான் இல்லை .

***

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை- GANDHI JAYANTI

அதி ப்ரவ்ருத்தா சால்மலி வாரணஸ்தம்போ  ந பவதி – சாணக்கிய நீதி சாஸ்திரம்

இலவம் பஞ்சு மரம் எவ்வளவு உயர வளர்ந்தாலும் யானையைக் கட்டிப்போட உதவாது.

****

அக்டோபர் 3 சனிக்கிழமை

அயோக்யாய பதம் தத்தம் ஸர்வதா ஹானிக்ருத் பவேத் – கே ஆர்

தகுதியற்றவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாவகையிலும் ஆபத்து

***

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும்

***

அக்டோபர் 5 திங்கட்  கிழமை

தக்கார் தக்கவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் – திருக்குறள் 114

ஒருவன் இறந்தபின்னர் நிற்கும் புகழோ வசையோ அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் .

***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

இதனை இதனால் இவன் முடிக்கும்  என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் – திருக்குறள் 517

யார் எதை திறமையாக செய்வார் என்று சிந்தித்து அந்த வேலையை அவனுக்குக் கொடு.

***

அக்டோபர் 7 புதன்  கிழமை

அங்கணம் சம்ஸ தே வக்ரம் நர் தனே குசலோ ஜனஹ

ஆடத் தெரியாத தேவடியாள் தெருக்கோணல் என்றாளாம்

***

அக்டோபர் 8  வியாழக்கிழமை

யோக்யம் யோக்யாய தாதவ்யம் – ஸதோபதேச ப்ரபந்த

தகுதியுள்ளவருக்கு தகுதியானதைத் தாருங்கள்

***

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

யோக்யேனார்த்தஹ  கஸ்ய ந ஸ்யாஜ்ஜனேன – சிசுபால வதம்

தகுதியுள்ள மனிதர்களால் பயன் அடையாதோர் உண்டா

***

அக்டோபர் 10 சனிக்கிழமை

யோ யஸ்மின் கர்மணி குசலஹ ஸ தஸ்மின் நியோக் தவ்யஹ- சாணக்கிய நீதி

யாருக்கு எந்த வேலையில் திறமை இருக்கிறதோ  அவரிடம் அந்த வேலையை ஒப்படை

***

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

சகடம் ச்வா ந கர்ஷதி – கே ஆர் கஹாவத் ரத்னாகர்

வண்டியை இழுக்க நாய் உதவாது

***

அக்டோபர் 12 திங்கட்  கிழமை

மந்தார மாலா மாலோக்ய மாலத்யாம் கோ ஹி  சாதரஹ –  ப்ருஹத் கதா மஞ்சரி

தேவ லோக மந்தார மலர் மாலை கிடைத்த பின்னர் , மல்லிகையை நாடுவோமா

****

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவாருண்டா ?- தமிழ் பழமொழி

****

அக்டோபர் 14 புதன்  கிழமை

சிறு துரும்பும் பல்குத்த உதவும் (யாரையும் ஒதுக்காதீர்கள் )

****

அக்டோபர் 15  வியாழக்கிழமை

ஹேம் நஹ சம்லக்ஷ்யதே ஹயக்நெள விசுத்திஹி ஸ்யாமிகாபி – ரகு வம்சம் 1-10

தங்கத்தின் தூய்மையை நெருப்பில் பரிசோதிப்போம்

(ஒருவரின் தன்மை/தகுதி  கஷ்டம் வரும்போது தெரிந்து விடும்)

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

பாரிஜாத லதாபருங்கொ ந ஹி  ஜாதிஷு சாதராக -ப்ருஹத் கதா மஞ்ச ரி

பாரிஜாத மலரை மொய்க்கும் வண்டு, மல்லிகைப்  பூவுக்கு மதிப்பு தராது

அக்டோபர் 17 சனிக்கிழமை- NAVARATRI BEGINS- DOLL DISPLAY IN SOUTH INDIAN HOMES

தன்  முதுகு தனக்குத் தெரியாது (தன்னைப் பற்றி மற்றவர் கருத்தைக் கேட்கவேண்டும் )

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

வெளவிய கருமம் எண்ணித் துணி – தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 19 திங்கட்  கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும் (டீம் ஒர்க் team work அவசியம்) தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ; முயற்சி திருவினை ஆக்கும் —தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 21 புதன்  கிழமை

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?– பாரதி பாடல் (Good Things/People are available from unexpected places)

XXX

அக்டோபர் 22 வியாழக்கிழமை

“முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

“கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 24 சனிக்கிழமை

சுகஹ ஸ்லோகான் வக்தும் ப்ரபவதி ந காகஹ க்வசிதபி – ஸுபாஷித ரத்னாவளி

கிளிதான் ஸ்லோகங்களைத் திரும்பச் சொல்லும்   காகத்தினால் ஒருபோதும் செய்ய முடியாது

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை- Sarasvati Puja

தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு –தமிழ்ப் பழமொழி (YOU DON’T NEED TO IMITATE YOUR BOSS; BUT STICK TO PRINCIPLES/ RULES)

அக்டோபர் 26 திங்கட்  கிழமை- Vijaya Dasami

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்- தமிழ்ப் பழமொழி

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் PRACTICE MAKES PERFECT

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

புராண மித்யேச்வ ந சாது சர்வம் –மாளவிகாக்னி  மித்ரம்

பழமை என்பதால் மட்டும் பெருமை சேர்ந்துவிடா து

அக்டோபர் 28 புதன்  கிழமை

வ் ருதா வ்ருஷ்டிஹி ஸமுத்ரேஷு – சாணக்கிய நீதி 11-12

கடலில் பெய்யும் மழை எல்லாம் வீண் (தகுதியற்றவருக்கு பதவி கொடுப்பது வீண் )

*****

அக்டோபர் 29 வியாழக்கிழமை

ந பேகஹ கோகநதிநீ கிஞ்சல்கா வாத கோவிதஹ – கதா சரித் சாகரம்

செந்தாமரையின் மகரந்தத் தாதுக்களை அனுபவிக்க தவலைக்குத் தகுதி இல்லை

****

அக்டோபர் 30  வெள்ளிக்கிழமை

ந ஹி  தாபயிதும் சக்யம் சாகராம்ப ஸ் த்ருனோ நுகயா – ஹிதோபதேசம்

கடல் நீரை வைக்கோல் தீப்பந்தத்தைக் கொண்டு  சூடுபடுத்த முடியாது

அக்டோபர் 31 சனிக்கிழமை

வினைக்கண் வினையுடையான்  கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு – Tirukkural 519

நன்றாக வேலை செய்பவனின் நட்பை இழந்தால் , உள்ளதும் போய்விடும்

TAGS– தகுதி, திறமை, பொன்மொழிகள் ,அக்டோபர் 2020 காலண்டர்

—SUBHAM–

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1 (Post No.8754)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8754

Date uploaded in London – – 30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1

ச.நாகராஜன்

கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர்.

அவருக்கு மிக்க பதிவிரதையான அக்ஷசூத்ரை என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் கற்கி.

ஒரு பிரார்த்தனையையும் இரு மந்திரங்களையும் கொண்ட ‘க்ருஹ்ய சங்க்ரஹசூத்ரா’ என்பதை அருளியவர் ஆபஸ்தம்பர்.

ஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவரான ஆபஸ்தம்பர் க்ருஹ்ய சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரௌத சூத்திரமும் இயற்றியுள்ளார்.

க்ருஹ்ய சூத்திரங்களை இயற்றியுள்ள மஹரிஷிகள் இருப்பத்தைந்து பேர்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் வருகின்ற சிஷ்ய ஜனங்கள், காலத்தின் கோலத்தினால் புத்திக் குறைவு ஏற்பட, அதனால் அந்தந்த கிரியைகளுக்கு உரிய மந்திரங்களை அந்தந்த காலத்தில் எடுத்து உபயோகிக்கத் தடுமாறுவர் என்பதை உணர்ந்து சிறந்த யுக்தியுடன் சூத்ரத்தை இவர் அமைத்துச் சிறந்தவரானார்.

ஜாதகர்மம் முதல் அக்னி ஹோத்ரம் வரை உள்ள பூர்வ சம்ஸ்காரங்களுக்கும், பிராணோத் க்ரமண சமய முதல் பிதுர் லோக பிராப்தி வரையிலான அபர சம்ஸ்காரங்களுக்கும் உரிய வேத மந்திரங்களைக் கோர்வையாக எடுத்து மந்த்ரப் ப்ரச்னம் என்று இரு ப்ரச்னங்களை இவர் நன்றாக செய்து அருளியதால் ஸூத்ரகாரர்கள் பலர் இருப்பினும் இவருக்கே ஸூத்ரகாரர் என்ற பெயர் அமைந்து விட்டது.

இவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் வந்த வரலாறு சுவையான ஒன்று.

அதை பிரம்மபுராணம் விவரிக்கிறது.

வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களையே அவர் அழைப்பது வழக்கம்.

ஒரு சமயம் சிரார்த்தம் செய்ய விழைந்த போது அவர் எண்ணியபடி ஒரு பிராமணர் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார்.

அவரது இந்த எண்ணத்தை மஹரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். உலக க்ஷேமத்தை மனதில் எண்ணிய அவர் மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் பிரம்ம காயத்ரியை எவன் ஒருவன் முறையாக உபதேசம் பெற்று ஜபிக்கிறானோ அவன் யோக்கியனாகிறான் என்றும் படிப்படியாக அவனும் கற்றறிந்தவர் அடையும் நிலையை அடைகிறான் என்பதையும் உலகத்தாருக்கு உணர்த்த எண்ணினார்.

தானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு மேற்சொன்ன சிரார்த்தம் செய்ய விழைந்த பிராமணர் வீட்டுக்கு வந்தார்.

ஆபஸ்தம்பரைக் கண்ட பிராமணர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரை நன்கு வரவேற்று அர்க்ய பாத்திரம் முதலியவற்றால் உபசரித்து அவரை சிரார்த்தம் செய்யும் படியும் போஜனத்திற்கும் அழைத்தார்.

சிரார்த்தம் முறையாக நன்கு நடந்தேறியது. பிறகு போஜனமும் நடைபெற்றது.

உணவு உண்டு முடித்த பின்னர் சிரார்த்த காலத்தில் கடைசியில் கேட்க வேண்டிய முறைப்படி பிராமணர் ஆபஸ்தம்பரை நோக்கி, “அன்னமும், திரவ பதார்த்தங்களும் நன்றாக இருந்ததா, தங்களுக்கு திருப்தி தானா?” என்று கேட்டார்.

இதற்கு சாதாரணமாக போஜனம் கொண்டவர் திருப்தி என்று சொல்வது வழக்கம்.

ஆனால் ஆபஸ்தம்பரோ வழக்கத்திற்கு மாறாக, “சற்று அன்னமும், தயிரும் கொண்டு வாரும்!” என்றார்.

இதைக் கேட்ட சிரார்த்த கர்த்தா, “இப்படி கேட்பதானது தர்மத்திற்கு விரோதமாயிற்றே. செய்த சிரார்த்தம் வீணாகி விட்டதே” என்று எண்ணி கோபம் அடைந்தார். கையில் ஜலத்தை எடுத்து சபிப்பதற்காக பூமியை நோக்கி விட்டார்.

அதைக் கண்ட ஆபஸ்தம்பர் புன்சிரிப்புடன்  அந்த தண்ணீரை கீழே விழாமல் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தார். நீர் அப்படியே நின்றது.

இந்த அதிசயத்தைக் கண்ட சிரார்த்த பிராமணர் இவர் ஒரு மஹாத்மா என்பதை உணர்ந்து அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். தனது சாப பிரயோகம் தன்னை வந்து சாராமல் இருக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினார்.

அந்த பிராமணர் மீது இரக்கம் கொண்ட ஆபஸ்தம்பர் அவரை மன்னித்து அருளியதோடு, தான் யார் என்பதை அவருக்குத் தெரிவித்தார். பிறகு தான் அங்கு வந்த காரணத்தையும் சொன்னார்.

சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை அதிக பரிசோதனையில்லாமல் அவர்களை ஆதரிப்பதே உத்தமம் என்றும், கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹித்து சிரார்த்தம் செய்வது மத்திமம் என்று கூறினார்.

அன்று முதல் சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை யாரும் அதிக சோதனை செய்வதில்லை என்ற வழக்கம் ஏற்பட்டது.

குலம், கோத்திரம் விசாரித்து காயத்ரி சொல்லும் பிராமணர் தானா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற வழக்கம் ஏற்பட்டது.

ஆபஸ்தம்பர் பிராமணரால் உபசரிக்கப்பட்டு தன் ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

தண்ணீரை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்த இந்த சம்பவத்தால அவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்து இன்னும் ஒரு சம்பவம்.

          ***  தொடரும்

tags- ஆபஸ்தம்பர்

சிரிப்பு பற்றிய 6 பழமொழிகள் என்ன? (Post No.8753)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8753

Date uploaded in London – –29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடைகள்  கீழே  உள்ளன . ஒரு சொல் மீண்டும் மீண்டும் பழமொழிகளில் வரக்கூடும் .

ஆனால் கட்டத்தில் ஒரு முறை மட்டுமே இருக்கும் .

விடைகள்

1.சிரித்துச் சிரித்துக் கழுத்தறுக்கிறது

2.சிரித்தாயோ, சேலை அவிழ்த்தாயோ ?

3.சிரித்துச் சிரித்துத் தின்ற தோசைக்கு காசில்லையா ?

4.சிரித்தையோ சீரைக் குலைத்தையோ ?

5.சிரிப்பாணிக் கூத்துச் சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது

6.சிரிப்பார்  சிரித்துத் தெருவிலே நிற்கிறது

உதவிய நூல் – கழகப்  பழமொழி அகர  வரிசை

tags-   சிரிப்பு , பழமொழிகள்

–subham–

31 QUOTATIONS ON INDIA (Post No.8752)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 8752

Date uploaded in London – –29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS – OCT.2- GANDHI JAYANTI ; 15-WORLD STUDENTS DAY; 17- NAVARATRI BEGINS; 17-TULA VISHU PUNYA KALA; 25-SARASVATI PUJA; 26-VIJAYA DASAMI/ DASARA

NEW MOON/ AMAVASYAI- 16; FULL MOON/ PURNIMA -1 AND 31; EKADASI/ FASTING DAYS -13 AND 27

MUHURTA/ AUSPICIOUS DAYS – 18, 26, 29, 30

31 QUOTATIONS ON INDIA BY SWAMI VIVEKANANDA

OCTOBER 2020 GOOD THOUGHTS CALENDER

OCTOBER  1 THURSDAY

The present want of India is the Kshatriya force 5-316

OCTOBER  2 FRIDAY- GANDHI JAYANTI

What India wants is a new electric fire to stir up a fresh vigour in the National veins-5-57

OCTOBER  3 SATURDAY

India’s potentialities are great and will be called forth 5-199

OCTOBER  4 SUNDAY

None can resist her any more; never is going to sleep anymore; no untoward power can hold her back anymore;

for the infinite giant is raising to her feet 3-146

OCTOBER  5 MONDAY

India must conquer the world and nothing less than that is my ideal 3-316

OCTOBER  6 TUESDAY

We, of all the nations of the world, have never been a conquering race,

and that blessing is on our head, and therefore we live-3-106

OCTOBER  7  WEDNESDAY

We are destined by the Lord to do great things in India 5-13

OCTOBER  8 THURSDAY

I see in my minds eye the future perfect India is rising out of this chaos and strife, glorious and invincible, with Vedanta brain and Islam body 6-416

OCTOBER  9 FRIDAY

Religion is the one and sole interest of the people of India-3-178

OCTOBER  10 SATURDAY

Each nation has a main current in life; in India it is religion.

OCTOBER  11 SUNDAY

Renunciation, that’s the flag of India, floating over the world, the one undying thought

which sends India again and again as a warning to dying races, as a warning to all tyranny,

as a warning to wickedness in the world-3-344

OCTOBER  12 MONDAY

We have no quarrel with any religion in the world whether it teaches

men to worship Christ or Buddha or Mohammed or any other prophet-3-132

OCTOBER  13 TUESDAY

All orthodox systems of Indian philosophy have one goal in view, the liberation of the soul through perfection-1-122

OCTOBER  14  WEDNESDAY

There is only one country in the world which understands religion— it is India – vol.8-322

OCTOBER  15 THURSDAY

The gift of India is the gift of religion and philosophy and wisdom and spirituality.-3-273

OCTOBER  16 FRIDAY

Here alone the best ideal for mankind 3-138

OCTOBER  17 SATURDAY

The talk of brother hood of man becomes in India the brother hood of universal life, of animals, and of all life down to the little ants- all these are our bodies 3-126

OCTOBER  18 SUNDAY

The ideal woman in India is the mother , the mother first , and the mother last 8-57

OCTOBER  19 MONDAY

In India father and mother are living gods to their children- 2-158

OCTOBER  20 TUESDAY

Gratitude and hospitality are the peculiar characteristics of indian humanity 5-122

OCTOBER  21  WEDNESDAY

Here in India, every body wants to become a leader, and there is nobody to obey 5-216

OCTOBER  22 THURSDAY

What our country now wants are muscles of iron and nerves of steel, gigantic wills which nothing can resistance , which can penetrate into the mysteries and secrets of the universe  and accomplish their purpose in any fashion even if it meant to going to down to the bottom of the ocean and meeting death face to face. -3-190

OCTOBER  23 FRIDAY

A nation in in India must be a union of those whose hearts beat to the spiritual tune. 3-371

OCTOBER  24 SATURDAY

Modern India belongs to the spiritual part of the Vedas.3-536

OCTOBER  25  SUNDAY- sarasvati puja

India dies not-3-444

OCTOBER  26 MONDAY- vijaya dasami

Political greatness or military power is never the mission of our ra CE race; it never was and Mark my words, it never will be 3-19

OCTOBER  27 TUESDAY

If we want to regenerate India, we must work for the masses 5-223

OCTOBER  28   WEDNESDAY

To Europeanise India is therefore an impossible and foolish task 5-198

OCTOBER  29 THURSDAY

Religion in India culminates in freedom.

OCTOBER  30 FRIDAY

Priest craft is the bane of India 4-327

OCTOBER  31 SATURDAY

Here in India the first and foremost duty of our lives is to be spiritual first, and then, if there is time, other things come. 3-371

tags – October 2020, quotes on India, Vivekananda

Xxxxxx

சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானது? (Post .8751)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8751

Date uploaded in London – – 29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

28-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது என்ற கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது?

ச.நாகராஜன்

QUESTION

ஐயா தங்களுக்கு சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் . Tamil and vedas ல் வரும் தங்களின் பல கட்டுரைகளை படித்துள்ளேன் . எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . உங்கள் கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கியங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது . உங்களுக்கு அனந்த கோடி நன்றி . சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாகவும் , தெளிவானதாகவும் , தவறான கருத்தான திராவிட இயக்க சிந்தனைகளாகிய துர்வாடை கலக்காததாகவும் இருக்கும் ? அப்படிப்பட்ட இந்த நூல்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ? தயவுசெய்து முகவரி சொல்லுங்கள் ஐயா?

P. D . , AYYAMPALAYAM
(POST), MANACHANALLUR (TK)

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்!

இன்று நமக்கு முன் இருக்கும் கேள்வி சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது?

இதே போல சங்க இலக்கியம் மட்டும் அல்லாது பொதுவான தமிழ் இலக்கியம் பற்றியும் கேள்விகள் பல எழுகின்றன.

கேள்வியில் தவறாக இல்லாமல், திரிதல் இல்லாமல் இருக்கும் நூல்களைக் குறிப்பிட வேண்டுகிறார் தமிழ் அன்பர்.

திருக்குறளின் கடவுள் வாழ்த்து என்பதற்கே பொருளை மாற்றியும் திரித்தும் எழுதப்பட்ட ஏராளமான நூல்களை அன்பர் கண்டதால் தான் இப்படி ஒரு கேள்வியையே அவர் எழுப்ப நேரிட்டுள்ளது.

ஆகவே பதிலைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் சங்க இலக்கிய நூல்கள் என்பதைச் சொன்னவுடனேயே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும் ஒரே பெயர் மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதையர் -உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சுவாமிநாதன் -அவர்களின் பெயர் தான்.

தன் வாழ் நாள் முழுவதையும் தமிழுக்கு அர்ப்பணித்த பெருந்தகையாளர் -தமிழ்த் தாத்தா – அவர்.

ஓலைச் சுவடிகளைக் கண்டால் அவர் பெறும் ஆனந்தம் பேரானந்தம். ஊர் ஊராக அவர் பழைய நூல்களைத் தேடிச் சென்றதை அவரது என் சரித்திரம, நினைவு மஞ்சரி உள்ளிட்ட நூல்களில் காணலாம். 3000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் அவர் சேகரித்தார். தீர ஆராய்ந்து அர்த்தம் கண்டு அவற்றைப் பதிப்பித்தார். நலிந்து கிடந்த தமிழுக்குப் புதுவாழ்வு தந்தார்; தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டினார்.  புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நூல்களை அவர் பதிப்பித்தார். சென்னை பெசண்ட் நகரில் உ.வே.சா. நூலகம் அமைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது. ஐயர் அவர்களின் பல நூல்களைப் பதிப்பிடும் அரும்பணியையும் செய்து வருகிறது. கம்பராமாயணம் முழுவதற்கும் ஐயர் அவர்களின் குறிப்புரையைப் படித்தால் அதை விட தமிழ் ஆனந்தம் வேறொன்றும் இருக்க முடியாது.

ஆகவே தயங்காமல் செய்ய வேண்டிய முதல் பணி உ.வே.சா அவர்களின் நூல்களைப் படிப்பது தான்!

அடுத்து பன்னிரு திருமுறைகளை பாரம்பரியம் கெடாமல் பழைய உரையை உள்ளது உள்ளபடி அளிக்கும் மாபெரும் பணியைச் செய்து வரும் தருமபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய ஆதீனங்களைப் போற்றிப் புகழ வேண்டும். ஏராளமான நூல்களை மரபு கெடாதபடி விளக்கவுரையுடன் இவர்களின் வெளியீடுகளில் படித்து மகிழலாம்.

சைவ நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் மரபு கெடாமல் விளக்கவுரையுடன் வெளியிட்டுள்ளது.

இவையும் குறிப்பிடத்தகுந்த நூல்களே!

கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதத்திற்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றிய உரை ஆழ்ந்த ஞானத்துடனும் பல்வேறு மேற்கோள்களுடனும் அமைந்துள்ளது.

மஹாபாரதத்தைத் தமிழில் முழுவதும் உள்ளது உள்ளபடி படித்து அனுபவிக்க ஸ்ரீ மஹாபாரதம் பிரஸ், கும்பகோணம் வெளியிட்ட ம.வீ.இராமானுசார்யரின் விளக்கவுரையே சிறந்த உரையாக அமைந்துள்ளது. அற்புதமான விளக்கங்களை ஆங்காங்கே இவர் தந்திருப்பது நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கவுரையை நாட வேண்டுமானால் நாம் நாட வேண்டியது கிருபானந்தவாரியார் அவர்களின் உரைகளைத் தான்.

தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களும் திருப்புகழ் ஆராய்ச்சி, தேவார ஒளி நெறி போன்ற மிக நல்ல நூல்களைத் தமிழுக்கு அர்ப்பணித்துள்ளார். தமிழர்கள் போற்றிப் படிக்க வேண்டிய நூல்கள் இவருடையவை.

வைணவ இலக்கிய உரைகளை வேண்டுவோர் வியாக்கியான சக்கரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் நூல்களைப் படிக்கலாம். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் உள்ள நான்காயிரம் பாடல்களின் சுவையை அறிந்து பரவசமடையலாம். ஈட்டு உரைகளும் இன்று கிடைக்கின்றன; அவற்றையும் படித்து மகிழலாம்.

தற்காலத்திற்கு ஏற்றவாறு பல நல்ல நூல்களை அளித்துள்ளது சென்னை புத்தகப் பதிப்பு நிறுவனமான லிப்கோ.  லிப்கோவின் நூல்கள் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக வைணவ இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்தவையாகும். இவற்றின் விலை அனவராலும் வாங்கக் கூடிய அளவில் இருப்பது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

தமிழ் என்பதே தெய்வத் தமிழ் தான்! இதில் ஆன்மீக இலக்கியம் என்று எடுத்துக் கொண்டோமானால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4 வெளியிட்டுள்ள எண்ணிலா நூல்களைச் சொல்லலாம். எந்த நூலானாலும் அது சிறந்ததே. வேத சூக்தங்கள், 108 உபநிடதங்களின் உரை உள்ளிட்டவற்றை வேறு எங்கும் காண முடியாதபடி அற்புதமாக வெளியிட்டுள்ளது மடம். அண்ணா அவர்கள் தந்துள்ள  ஏராளமான நூல்களின் உரைகளை இங்கு வாங்கலாம். அனைத்துமே அழகான பதிப்பு; குறைந்த விலை தான்.

விவேகானந்தர் இலக்கியம் தனி. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அன்னை சாரதா தேவியார் பற்றிய நூல்கள், பரமஹம்ஸரின் தலையாய சீடர்களின் நூல்கள் என்று பெரிய பட்டியல் இங்கு கிடைக்கும்,

ஆன்மீக இலக்கியத்தில் பெரும் தொண்டு ஆற்றியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். இவரது திருவாசக உரை மற்றும் தாயுமானவர் அருளிய பாடல்களுக்கான உரை குறிப்பிடத்தகுந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடுகளாக சுவாமி சித்பவானந்தரின் அருமையான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் ஆன்மீக அரசோச்சிய பகவான் ரமண மஹரிஷியின் நூல்களும் அவர் பற்றிய நூல்களும் திருவண்ணாமலை ரமணாசிரமத்திலும் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெறலாம்.

மிக அற்புதமான ஆன்மீக நூல்களை காஞ்சி காமகோடி பீடத்தின் வெளியீடுகளில் காண முடியும். காஞ்சி பெரியவாள் பரமாசார்யரின் உரைகளை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் பல்வேறு தொகுதிகளில் படிக்கலாம்.

கலைமகள் காரியாலயம் வெளியிட்டுள்ள நூல்கள் பாரம்பரியம் தவறாதவை. கலைமகளின் ஆசிரியராகப் பணியாற்றிய திரு கி.வா.ஜ. அவர்களின் ஏராளமான நூல்கள் உள்ளத்திற்கு உவகை ஊட்டுபவை.

சிருங்கேரி பரமாசார்யர்களின் உரைகளையும் ஆன்மீக நூல்களையும் தமிழில் சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது.  ஆழ்ந்த ஞானம் தரும் அற்புத நூல்கள் இவை; அழகான பதிப்பு; ஆனால் விலையோ குறைவு.

    ஸ்ரீ சத்யசாயிபாபா அவர்களின் ஏராளமான நூல்களை Sri SathyaSai Books and Publications Trust  வெளியிட்டுள்ளது. புட்டபர்த்தி பிரசாந்தி நிலயத்திலிருந்து ப்ரேம வாஹிணி, உபநிஷத் வாஹினி, ராமகதா ரஸ வாஹினி உள்ளிட்ட அனைத்து நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெறலாம். அவர் தெலுங்கில் ஆற்றிய உரைகளையும் தமிழில் இன்று பெற முடிகிறது.

இன்னும் அரவிந்த ஆசிரம் பாண்டிச்சேரி வெளியிட்டுள்ள அன்னை மற்றும் மஹரிஷி அரவிந்தரின் நூல்கள் ஏராளம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.

     தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் வள்ளலார் பற்றி எழுதியுள்ள நூல் அதிகாரபூர்வமான ஆவண நூலாகும். வள்ளலார் பற்றி ஊரன் அடிகள் எழுதியுள்ள நூல்களை சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், சமயபுரம், திருச்சி மாவட்டம் வெளியிட்டுள்ளது. இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

     தற்காலத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த கவிஞர் மஹாகவி பாரதியார். இவரது கவிதைகள் எங்கும் கிடைக்கின்றன. இவர் பற்றிய நூல்களில் செல்லம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.ரா., சிட்டி, அமுதன், யதுகிரி அம்மாள், ரா.அ.பத்மநாபன், பெ.தூரன் உள்ளிட்டவர்களின் நூல்களைப் படித்தால் பாரதி பற்றியும் அவர் தம் கவிதையின் திறன் பற்றியும் அறியலாம்.

இப்படி தமிழ் வளர்க்கும் நல்ல நூல்கள் ஏராளம் உள்ளன; விரிப்பின் பெருகும்.

   ஆகவே நல்லோர்கள் விளக்கவுரையுடன் பதிப்பித்திருக்கும் நூல்களை மட்டும் வாங்கிப் படிப்போம்; இவை அல்லாத நூல்களைத் தவிர்ப்போம்; பாரம்பரியமாகப் பெரியோர் காட்டிய வழியில் முன்னேறுவோமாக!

நன்றி, வணக்கம்.

tags — சங்க இலக்கிய,  விளக்கவுரை, 

28-9-20 உலக இந்து சமய செய்தி மடல் (Post.8750)

statues, idols recovered from Pondicherry

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8750

Date uploaded in London – –28 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 28 திங்கள்    —  இந்து சமய செய்தி மடல் —

இது ‘ஆகாச த்வனி’யின்  உலக இந்து சமய செய்தி மடல்

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம்

செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும்,

 இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படுகிறது

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள  facebook.com/gnana mayam  முகவரியில் அணுகவும்

Xxxxx

கிருஷ்ண ஜென்ம பூமி

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்கக் கோரி புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, ‘ஷாயி ஈத்கா’ மசூதியை மாற்ற வேண்டும் எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.

‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்’ என, கடந்த 2019 நவ.,ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதே, ‘உத்தர பிரதேசம் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியையும் மீட்க வேண்டும்’ என, இந்து அமைப்புகள் குரல் எழுப்பின.
இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில், ‘கிருஷ்ண ஜென்ம பூமி நிர் மாண் நியாஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 80 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீகிருஷ்ண விராஜ்மன் சார்பில் லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி மனு தாக்கல் செய்துள்ளார்

இந்தியாவில் கடந்த 1658ம் ஆண்டு முதல் 1707ம் ஆண்டு வரை முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. அவுரங்கசீப்பின் உத்தரவுபடி அவரது படையினர், மதுராவில் உள்ள கேசவ தேவ் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதியை கட்டினர். மசூதி அமைந்துள்ள இடம் பகவான் கிருஷ்ண விராஜ்மனுக்கு சொந்தமானது. அந்த ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற வேண்டும். என்று மனுதாரர் கோரியுள்ளார்

XXXXXX

ஜெகன் மோகன் ரெட்டி சர்ச்சை

திருப்பதி- திருமலை தேவஸ்தானம் சென்ற வாரம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கோவில் மரியாதையைப் பெற்றுக்கொள்ள அழைத்தது. இதன்  காரணமாக ஒரு சர்ச்சைப் புயல் கிளம்பியது. அவரும் அவர் குடும்பத்தினரும் கிறிஸ்தவ மதத்தினர்.

மேலும் அவர் கருட வாகனத்தன்று பட்டு வஸ்திர மரியாதையை ஏற்க மனைவி இல்லாமல் வந்தார். அவர் கிறிஸ்தவர் என்பதால் வர மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்து அல்லாதவர்கள் ஒரு மனுவை பூர்த்தி செய்யவேண்டும். அதையும் ரெட்டி விஷயத்தில் பாலாஜி கோவில் நிர்வாகம் வலியுத்தவில்லை. அவரது மனைவி இல்லாத வருகை, இந்து மதக் கடவுளரை இழிவு படுத்துவது போல உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவும் பாரதிய ஜனதா கட்சியினரும் கண்டித்துள்ளனர்.

இந்து சமய வழக்கப்படி, மனைவி உயிரோடு இருக்கையில் மனைவி இல்லாமல் யாக யக்ஞங்களை செய்யவும் முடியாது. கோவில் மரியாதைகளை ஏற் கவும் முடியாது.

XXXX

பால்கர் சாது சன்யாசி படுகொலை

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் என்னும் வட்டாரத்தில் சென்ற ஏப்ரல் 16 ம் தேதி இரண்டு சாது சன்யாசிக்களை ஒரு கும்பல் போலீசார் முன்னிலையில் கொடூரமாக அடித்துக்கொன்றது. இந்த படுகொலைத் தாக்குதலை பாரதிய ஜனதாக கட்சி எம்.பி.யு ம் காவி உடைதரித்த ன்யாசினியுமான பிரயாகா தாகூர் லோக் சபையில் எழுப்பினார் .

சீ ன வைரஸ் தாக்குதலால்  ‘லாக்டவுன்’ கட்டுப்பாடுகள் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தில் எப்படி பெரிய கும்பல் சேர்ந்தது, போலீசார் இருந்தும் அவர்கள் முன்னிலையில் சாது சன்யாசிகளை அடித்தே கொன்றது எப்படி?  என்பதை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கசியினரின் தாக்குதல் இது என்றும் முன்னரும் இதுபோன்ற தாக்குதல்கள் அவ்வட்டாரத்தில் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் லோக சபையில் சுட்டிக்காட்டினார்.

XXXXX

நேயர்கள் கேட்டுக்கொண்டிருப்பது திங்கட் கிழமை தோறும் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும்

ஆகாசத் த்வனியின்

உலக இந்து சமய செய்தி மடல்

XXX

உத்தர பிரதேசத்தில் இருந்து ஒரு நல்ல செய்தி இதோ.

பிரயாக் ராஜ் மாவட்டத்தில் அரக்கு மாளிகைச் சின்னம் உள்ள இடத்தில் மஹாபாரத ஆராய்ச் சி  நிலையம் அமைக்கப்படும் என்று  உத்தர பிரதேச சுற்றுலாத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மஹாபாரதத்தில் வரும் அரக்கு மாளிகை சம்பவம் இந்துக்கள் எல்லோரும் அறிந்ததே.

அரக்கு என்னும் மெழுகினால் செய்யப்படும் பொருட்கள், கட்டிடங்கள். முதலியன எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது . பாண்டவர்களை அதில் தங்க வைத்து எரித்துச் சாம்பலாக்கி விட  கௌரவர்கள் திட்டமிட்டனர். ஆனால் பாண்டவர்கள் நல்லோர் துணையுடன் அந்த சதித்திட்டத்தில் அகப்படாமல் உயிர்தப்பினர் அந்த இடம் பிரயாகை வட்டாரத்தில் உள்ளது. அங்குதான் இந்த ஆய்வு மையம் அமையப்போகிறது அங்கே மஹாபாரதம் குறித்த ஆராய்ச்சிகள் நடை பெறும்  என்ற நல்ல செய்தியை சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

XXXX

மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் கோவிலில் 410 கல்வெட்டுகள்

மதுரை பற்றிய புதிய வியப்பான செய்திகளை தொல்பொருட்த் துறை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் கோவிலில் 410 கல்வெட்டுகள் உள்ளன என்றும் அவை 11ம் நூற்றா ண்டு முதல் வெட்டப்பட்டவை என்றும் சாந்தலிங்கம் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது

சங்க காலம் முதல் மதுரையின் புகழ் பரவியபோதும் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 11- 12ம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன. இதுவரை எல்லா கல்வெட்டுகளும் வெயிடப்படவில்லை. ஆகவே புதிய நூல் ஓன்றில்  410 கல்வெட்டு விவரங்களையும் வெளியியிடவும் குழு முடிவு செய்துள்ளது

முதல் கல்வெட்டு என்பது வைகைக்கரையில் கிடைத்தது. இது 1961ல் வைகையில் கண்டெடுக்கப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் பதிக்கப்பட்டது. கி.பி., 700ஐ சேர்ந்த கூன்பாண்டியன் காலத்து கல்வெட்டு இது… தேவார பாடல்களில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. அதில் அங்கையற்கண்ணி உடன் ஆலவாய் அண்ணல் என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 7 ம் நுாற்றாண்டில் இக்கோயில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

XXXX

சபரிமலையில் மேல்சாந்தி தேர்வு அக்., 17ல் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கிறது.

சபரிமலையில் அனைத்து பூஜைகளுக்கும் தலைமை வகிப்பவர் தந்திரி. தாழமண் குடும்பத்தில் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் சுழற்சி முறையில் இதை கவனிக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுவார். தற்போதைய மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியின் பதவி காலம் வரும் அக்., 16ம் தேதி நிறைவு பெறுகிறது.

அடுத்த மேல்சாந்தியை தேர்வு செய்வதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இதற்கான நேர்காணல் அக்., 5, 6 தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் அக்., 17-ல் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் குலுக்கல் தேர்வில் தேர்வு செய்யப்படுவார்.


XXXXX

புதுச்சேரியில் மீட்கப்பட்ட பழமைவாய்ந்த 74 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.



தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் இருந்து திருடி கொண்டு வந்து விற்கப்பட்ட ஏராளமான உலோகம் மற்றும் கற்சிலைகள் புதுச்சேரி ரோமன் ரோலண்டு தெருவை சேர்ந்த ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஜீன்பால் ராஜரத்தினம் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று சோதனை செய்தனர். சோதனையில் 60 உலோக சிலைகள் மற்றும் 14 கற்சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அந்த சிலைகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று காலை ஒப்படைத்தனர்.


புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் கோவில்களில் இருக்கக்கூடிய உற்சவர் சிலைகள். கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்படக்கூடிய சிலைகள்.

XXXXXXX

பாடும் நிலா என்று அழைப்பட்ட , பல்லாயிரம் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட, எஸ் பி பால சுப்பிரமணியத்தின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களுடைய குல வழக்கப்படி  சென்னை அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன ; முன்னதாக வழி நெ டுகிலும் மக்கள் நின்று அஞ்சலி  செலுத்தினர்.

ஞானதீபம் மற்றும் நமது செய்திக் குழுவினரும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது தெய்வீ கப்  பாடல்களைப் போற்றும் விதத்தில் அடுத்த திங்கட்கிழமை ஒரு சிறப்பு நிகழ்சசியை  இங்கே ஒலி பரப்புகிறோம். அவரது தெய்வீ கப் பாடல்களை போற்றிப்  பேசியோ பாடியோ உங்கள் அன்பையும் தெரிவிக்கலாம். ஆடியோ அல்லது வீடியோ க்ளிப்பு CLIPS களை எங்களுக்கு அனுப்புங்கள். மூன்று அல்லது 4 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். நேரடியாக திங்கட் கிழமை பங்கேற்க விரும்பினால் ஜூம் ZOOM LINK  லிங்க் அனுப்புவோம். எங்கள் முகவரி

FACEBOOK.COM / GNANA MAYAM

இத்துடன் உலக இந்து சமய வார செய்தி மடல் நிறைவு பெறுகிறது

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்.

நன்றி, வணக்கம்

TAGS — 28-9-20, இந்து சமய, செய்தி மடல்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பங்களூர் செய்தி மடல்  by  பிரஹன்நாயகி சத்ய நாராயணன்

28-9- 2020 திங்கள் கிழமையன்று லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் பங்களூர் செய்தி மடல் ஒளிபரப்பானது. ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.

28-9-2020 அன்று ஒலிபரப்பான செய்தி மடல் இதோ:

வணக்கம்.

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்

மைசூர் தசரா விழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

பெங்களூர் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் ஆலயங்களுக்கு மக்களின் வருகை அதிகரிப்பு

பங்களூரின் அருகே உள்ள சிறப்பு வாய்ந்த கோவில் சாமுண்டீஸ்வரி ஆலயம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்

இனி விரிவான செய்திகள்.

10 நாள் உற்சவமான மைசூர் தசரா விழா 400 வருட பாரம்பரியத்தைக் கொண்ட மாபெரும் விழாவாகும். இந்த ஆண்டும் கொரானா கொள்ளை நோய் மக்களைப் பயமுறுத்திய போதிலும் பாரம்பரியத்தை விடாது மிக எளிமையாகக் கொண்டாடப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் 17ஆம் தேதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்குத் துவங்கும். அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமி நாளன்று கோலாகல வெற்றியுடன் முடியும்.  ஜம்போ சவாரி மற்றும் டார்ச் லைட் பாரேட் ஆகிய இரு நிகழ்ச்சிகள் உண்டா என்பது பற்றி வெகு விரைவில் முடிவு எடுக்கப்படும்.

சென்ற ஆண்டு மிக கோலாகலமாக நடந்த தசரா விழா 409ஆம் ஆண்டு விழாவாக அமைந்திருந்தது. இதையொட்டி மைசூரின் அரண்மனை, மிருகக் காட்சிச் சாலை, சாமுண்டீஸ்வரி ஆலயம், கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் தோட்டம் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து திரண்டவர்களும் உள்ளூர்வாசிகளும் லட்சக் கணக்கில் இந்த 10 நாள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தசராவை ஒட்டி பல்வேறு இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், திரைப்பட விழா உள்ளிட்டவை நடைபெற்றன.  சென்ற ஆண்டு இந்த விழா இனிதே யானை ஊர்வலத்துடன் நிறைவேறியது. அதே போல இந்த ஆண்டும் இந்த விழா விஜயதசமி குறிக்கும் வெற்றி விழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அடுத்து இன்றைய பங்களூர் நிலையைப் பார்ப்போம்.

கொரானா நோய் பயத்தால் வீட்டினுள்ளே முடங்கி இருந்த மக்கள் இப்போது வெளிவரத் துவங்கி உள்ளதால் மெள்ள மெள்ள இயல்பான நிலைக்கு பங்களூர் திரும்பி வருகிறது. இதையொட்டி ஆங்காங்கே அமைந்திருக்கும் கோவில்களுக்கு வரும் பக்தர் கூட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.  என்ற போதிலும் அரசு அறிவித்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் உரிய முறையில் மேற்கொண்டு நடந்து வருகின்றனர்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன்

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் பற்றிய ஒரு சிறிய செய்திக் குறிப்பு.

மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக சாமுண்டீஸ்வரி அம்மனை தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல  ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில்  அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தியின் சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது.

இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.

பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நீளம் சுமார் 16 அடி. உயரம் சுமார் 13 அடி.

ஆக, நாட்டின் உள்ள நந்திகளில் பெரிய நந்தியைக் கொண்டுள்ளது சாமுண்டீஸ்வரி ஆலயம்.

மக்கள் தொன்று தொட்டு பயபக்தியுடன் வணங்கி வரும் சாமுண்டீஸ்வரி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன்.

நன்றி!

tags– ப்ரஹன் நாயகி

28-9-2020 Weekly World Hindu News Bulletin (Post No.8749)

VAISHNAVA DEVI TEMPLE IN JAMMU KASHMIR

COMPILED BY LONDON SWAMINATHAN (News Editor)

Post No. 8749

Date uploaded in London – –28 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

28-9-2020 Weekly World Hindu News Bulletin

Namaste , Namskaram to everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN

This is a broadcast through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at 2 pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM/ Gnana mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AKASA DWANI’

Read by SUJATHA RENGANATHAN

Xxxxx

CIVIL SUIT ABOUT MATHURA KRISHNA TEMPLE

A civil suit was filed before the court of civil judge, senior division, Mathura, on behalf of child deity Bhagwan Shri Krishna , seeking the removal of the Shahi Idgah, adjacent to the Shri Krishna temple complex at Mathura IN UTTAR PRADESH

One Ranjana Agnihotri, a resident of Lucknow in Uttar Pradesh, has filed the suit,  reports Hindustan Times News Paper

The suit seeks recovery of 13.37 acres of land situated within the area of the temple.

Places of Worship (Special Provisions Act) was passed in 1991. Conversion of mosques into temples or vice versa is barred as per the Act. When Ayodhya land was exempted, the Supreme Court had reaffirmed that similar cases cannot be entertained with respect to other sites. Ranjana asked the court to remove  such condtion.

Xxxxxxx

BJP MP Pragya Thakur has demanded probe by central agencies into Palghar lynching.

Pragya Singh Thakur, while raising the issue during Zero Hour in Lok Sabha, said it should be ascertained why there was a mob during the coronavirus-induced lockdown and why innocent victims were killed.

She alleged that the CPI(M) has influence in the area where the incident took place and similar cases have come to light in the past.

The incident took place at Gadchinchle village on April 16 when two seers were heading towards Surat from Mumbai in a car with a driver to attend a funeral.

A mob of villagers stopped them and beat them to death even after a few police personnel had reached the spot.

Xxxxxxx

Here is a news report from VAISHNAVA DEVI TEMPLE IN JAMMU-KASHMIR

Vaishno Devi devotees to have live ‘darshan’ through mobile application  very soon.

Devotees of the Mata Vaishno Devi shrine in Trikuta hills of Jammu and Kashmir’s Reasi district will soon have live ‘darshan’ of the cave shrine through its mobile app, officials said.
Devotees offer prayers at the holy cave shrine of Shri Mata Vaishno Devi.

IT IS A POPULAR TEMPLE OF GODDESS WHICH ATTRACTS LAKHS OF PEOPLE EVERY YEAR.

XXXX

HERE IS SOME GOOD NEWS FROM UTTARPRADESH

Mahabharata Research Center to come up at Uttar Pradesh’s “Lakshagriha”  

 According to mythological belief, it was during the Mahabharat era, when the Pandavas had come to Lakshagriha of Prayagraj , they foiled an attempt of Kaurvas to end their lives.

It is believed that it was the place where Kauravas built an entire house of ‘lac’ (a resinous material) which catches fire easily, and burnt it down as part of their conspiracy to kill Pandavas, but they had escaped unhurt.  

Efforts have already begun to set up the Mahabharata Research Center at this site under the Chief Minister Tourism Promotion Scheme and Ganga circuit development plan by the tourism department.

Xxxxxx

YOU ARE LISTENING TO “AKASA DWANI” NEWS BULLETIN COMING FROM LONDON EVERY MONDAY

Xxxxxxxx

MADURAI TEMPLE NEWS

AMAZING NEW DETAILS HAVE BEEN REPORTED ABOUT THE WORLD FAMOUS MADURAI MEENKASHI SUNDARESWARAR TEMPLE  BY AN ARECHEOLOGIST LAST WEEK.

A team led by retired assistant director of the state archaeology department, C Santhalingam, had been on this work commissioned by the temple administration since July 2019.

THERE ARE 410 STONE INSCRIPTIONS IN THE TEMPLE

Santhalingam told NEWSPAPERMEN that though the temple has been sung about in the Tamil Sangam era literature, there are no stone inscriptions available on its premises now pertaining to that period. Most of the 410 stone inscriptions they studied in the last one year pertained to the period between 12 and 13th century AD.

The inscriptions were never completely read and A NEW BOOK WITH ALL THE INSCRIPTIONS WILL BE PUBLISHED SOON.

XXXXXX

NEWS  ABOUT BHAVANI DEEKSHA HAS COME FROM ANDHRA PRADESH

According to the officials, devotees from various States observe the Bhavani ‘deeksha’ in the month of September and relinquish their ‘deeksha’ after the Dasara festivities. Before Covid-19, the temple used to witness a huge rush of Bhavanis during Dasara festivities. 

“Every year, devotees from Telangana, Tamil Nadu, Karnataka and other States visit the  Kanaka Durga temple atop Indrakeeladri to relinquish their 40-day ‘deeksha’. 

But this year, the scene is completely different.

In view of strict Covid-19 norms, Sri Durga Temple Devasthanam on Tuesday decided not to allow Bhavanis into the temple .  The Bhavani Devotees are asked  to relinquish the ‘deeksha’ in temples at their respective regions/places. 

It may be recalled that the officials decided to allow only 10,000 devotees per day for darshan during Dasara festivities, beginning October 17, at the temple. 

Xxxxx

TTD ROW

A Row over Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy’s participation in Tirumala Brahmotsavams without  his wife has been published in news papers last week


Even as Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy presented silk robes on state’s behalf to Tirumala Venkateswara following the annual Brahmotsavam custom, a fresh row ensued over his participation in the divine event without his wife by his side

Reddy’s sixth known visit to the temple on Wednesday took place amidst a huge controversy over his continuing refusal to submit his faith declaration in Lord Venkateswara as required by non-Hindus to enter the revered sanctum.

Reddy and his family are followers of Christianity. With the TDP and the BJP insisting that the chief minister should sign the form, several leaders were put under house arrest by the police in the Chittoor district anticipating obstructions to his visit.

 …
According to purists, a married man should be accompanied by his wife in Hindu rituals. “It would bring evil upon the state’s people when husband alone participates in the temple puja when his wife is alive,” former chief minister Chandrababu Naidu …
Chandrababu Naidu said on Wednesday, while accusing Reddy of willfully hurting the Hindu devout sentiments. BJP leaders also expressed similar opinions.

Xxxxxxxxxxxxxxxx

Tamil Nadu  police seize 74 antique idols worth crores of rupees from house of French national in Puducherry

A 20-member team of the Tamil Nadu idol wing CID led by Superintendent of Police R Sakthivel on Wednesday recovered 74 antique idols from the house of a French national in Puducherry.

The seizure was made based on credible information on the network and after obtaining a warrant to search from Additional Chief Judicial Magistrate Kumbakonam Vijaykumar, Sakthivel told The New Indian Express.

The ancestral house on Romain Rolland Street (opposite to the Department of Art and Culture) was searched in the presence of the owner Jean Paul Rajarathinam and the idols were recovered

Rajarathinam told police that the idols were in possession of the family since the time of his grandfather.

Incidentally, Rajarathinam is the brother of Marie Therese Anandi Vanina, a French woman of Indian origin whose Puducherry house was raided in 2016 by the idol wing CID and 11 antique bronze idols worth several crores of rupees were seized. 

She was subsequently arrested by the idol wing CID in August 2019 in Chennai on charges of illegally exporting stolen antique idols and artifacts for several years from Puducherry to France.

She and her husband Prabakaran, residents of France, allegedly used to stock the illegally procured artefacts and idols in their Puducherry house before shipping them to France via Colombo.

Xxxxxx

TTD to launch cow conservation programme for Hindu temples across Andhra, Karnataka & Telangana

The Tirumala Tirupati Devasthanams (TTD) has decided to commence its desi cow protection and promotion plan by offering indigenous cows to 28 temples spread across Andhra Pradesh, Telangana, and Karnataka.
The executive committee meeting of TTD’s Hindu Dharma Prachara Parishad (HDPP) was held on Thursday Tirumala…

The committee has decided to, provide one cow to each of the 28 temples in three states.

Xxxx

A Probe is launched after miscreants pour saffron paint on Periyar bust, garland it with slippers

Miscreants desecrated a bust of Dravida Kazakam  leader Periyar E V RAMASAMY NAICKER kept in the Periyar memorial Samathuvapuram in Inamkulathur village near Tiruchy’s Inamkulathur. 

The bust was found with saffron paint poured all over it and was garlanded with slippers on the wee hours of Sunday.

While Manikandam police immediately cleaned the statue with the help of local residents, an investigation is on to nab the accused. 

Hindu devotees point out that the attack is an expression of their anger at such statues near the Hindu temples. The statues contain provocative anti god and anti devotee slogans, they point out.

Xxxx

Legendary singer SPB is no more .

Akasa dwani news team and Gnana Mayam team joins the music world in conveying their heartfelt condolences to his family.

Versatile singer, actor and music composer S P Balasubrahmanyam hailed as “singing moon” and “music cloud” by his millions of fans was laid to rest at his farm house near Chennai on Saturday with a 24-gun salute by Tamil Nadu police.

After the singer’s son S P Charan performed the funeral rites amid Vedic chants by priests, 24 police personnel gave a gun salute and later the body was lowered into a deep pit and buried.

With policemen marching along, the body was brought on a bier to the designated burial spot from an enclosure earmarked for people to pay homage and perform rituals.

Gnana mayam is holding a special tribute to SPB coming Monday.

Next Monday our broadcast will be extended to allow our team and listeners to pay their Anjali to the great singer.

We request our listeners to join us by sending us an audio or video clip for 3 to 4 minutes duration appreciating his contribution in the devotional field.  If you want to participate live next Monday , please send your e mail IDs to Gnana mayam team. We will send you our zoom link. As you have already heard,  our live programme begins at 2 pm London time and 6-30 pm Indian time every Monday. Our address is facebook.com / gnana mayam

Please do join us. We prefer only comments about his devotional music NOT film music

THAT IS THE END OF AKASA DWANI HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON

READ BY SUJATHA RENGANATHAN.

Bye for Now.

TAGS – 28-9-20 HINDU NEWS  BULLETIN

தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி -9 (Post.8748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8748

Date uploaded in London – –28 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், சம்ஸ்க்ருத,  ஆங்கில இலக்கண அகராதி -9

அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் மூன்று முக்கிய நூல்களில் உளது. ஸம்ஸ்க்ருதத்தை அகற்றினால் மூன்று நூல்களும் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் போல சிதைந்து விடும்.(சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ் வாழ்த்தில் ஒரு வரியை நீக்கிவிட்டு தமிழ் வாழ்த்து என்று சொல்லிக்  கொண்டாடுகிறோம். அதுவோ முழுக்க ஸம்ஸ்க்ருதச் சொற்கள் நிறைந்த  பாடல். “தமிழ் வாழ்த்தை மாற்றுக” என்ற எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க)

திருக்குறளில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன என்று கேட்டால் 133 அதிகாரங்கள் என்போம்.

தமிழில் மிகச்  சிறந்த  காவியம் எது என்று கேட்டால் , சிலப்பதிகாரம் என்போம். அதனால்தான் பாரதியாரும் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு’ என்று புகழ்ந்து பாடினார்; விதந்து ஓதினார்.

தமிழில் மிகப்பழைய நூல் என்று நாம் சொல்லிக்கொள்ளும் தொல்காப்பியத்தில் எத்தனை அத்தியாயங்கள்/ பிரிவுகள்  என்று கேட்டால் நாம் மூன்று பிரிவுகள் என்போம். அவையாவன

எழுத்ததிகாரம் , சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் .

இவைகளில் வரும் அதிகாரம் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினி காலச் சொல்.

(இந்த அதிகாரம் என்ற சொல் வழக்கினாலும், வேறு பல காரணங்களாலும் மூன்று நூல்களும் கி.பி. 4 அல்லது 5ம் நூற்றாண்டில் தோன்றியவை அல்லது தொகுக்கப்பட்டவை  என்பது எனது ஆராய்சசியின் முடிபு. அதனை ‘தொல்காப்பியர் காலம்’ என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடரில் காண்க)

இப்பொழுது சில திராவிட ‘’பரிதாபக் கேசுகள்’’ அதை ‘’இயல்’’ என்று மாற்றி  புஸ்தகம் போடுகின்றன. ஆனால் ‘கப்ஸா கருணாநிதி’ தவிர பழைய உரைக்காரர்கள்  அனைவரும் ‘அதிகாரம்’ என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் காலத்தில் தமிழில், ‘அரசியல் சாக்கடை’ கலக்கவில்லை.

அதிகாரம் என்பது பற்றிய அற்புதமான விளக்கத்தை சிவ ஞான முனிவர் எழுதிய ‘தொல் காப்பிய விருத்தி’ என்ற நூலில் இருந்து தருகிறேன். அவருடைய விருத்தியில் வரும் சொற்களுக்கு திருவாவடுதுறை ஆதின வித்துவானும் புகழ்பெற்ற தமிழ் அறிஞருமான தண்டபாணி தேசிகர் விளக்கம் தருகிறார்.

“தொல்காப்பியத்தில் முதல் அதிகாரம் எழுத்து அதிகாரம் .

எழுத்ததிகாரம் என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை

அதிகாரம் என்பதற்கு முறைமை எனப் பொருள் காண்பர் நச்சினார்க்கினியர் , மயிலைநாதர், இராமானுச கவிராயர் முதலியோர்.

அதிகாரம் என்பது பலபொருளை உணர்த்தும் ஒரு சொல். ஈண்டு , ஒரு பொருளை நுதலி வரும் பல ஒத்தினது  தொகுதியை உணர்த்திற்று  என்பர் சேனாவரையர் .

அதிகாரம் – அதிகரித்தல் (Increasing)  என்பர் சுவாமிகள். அதிகாரம் என்பது ஆரியச் (Sanskrit, Cultured) சொல் . இதனால் இதற்கு அதிகரிக்கப்படுகிறது; அதாவது ஈண்டு எழுத்தினது அதிகரித்தலையுடையது எனப் பொருள்பட்டு, எழுத்து அதிகரிக்கும் பல  ஒத்தினது  தொகுதியை (Collection) உணர்த்திற்று  என்றலே சிறத்தல் காண்க. முறைமை (Orderly arrangement) என்னும் பொருள் சொற்பொருளாகாது . பல ஒத்தினது தொகுதியை (collection of such things) உணர்த்துதலின்  முறைமை எனல்  கருத்துக் பொருளேயாயினமை காண்க.

(நுதலிவர = கருதி  வர)

பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யம் –வேற்றுமையின் 2 வகை

வேற்றுமை ‘காரக வேற்றுமை’ எனவும் , ‘துனைச் சொல் வேற்றுமை’ எனவும் இருவகைப்படும் . இவற்றை மாபாடியக்காரர்

‘காரக விபக்தி,  உபபத விபக்தி’ – என்பர்.

காரக வேற்றுமையாவது வேற்றுமை ஏற்ற பெயர்ச் சொல் வினைகொண்டு முடிய நிற்பதாம்

‘மரம் வெட்டினேன்’,

‘முருகனைக் கண்டேன்’,

‘சிவனாற்  செய்யப்பட்டது’ என்பன போல .

ஆறாம் வேற்றுமை ‘எனது புத்தகம்’, ‘தன் கைகள்’ எனப் பெயர்கொண்டு முடிதலே  வழக்காய் வினைகொண்டு முடியாது . ஆயினும் ‘தாயது நினைவு, அவனது வரவு’ என்பவற்றுள் ஆறாம் வேற்றுமை  தொழில் தற்கிழமைப் பொருளவாய்  ‘நினைவு, வரவு’ என்பவற்றின்  வினைப்பகுதியைக் கொண்டு முடித்தலின்   இதுவும் காரகமேயாம் என்பது. இதனைக் ‘காரக சஷ்டி’ என்பார் பாடியக்காரர்.

ஈண்டு எழுத்தினது அதிகாரத்தையுடையது  என்னும் பொருளதாய் , எழுத்தின் என்னும் ஆறாம் வேற்றுமை அதிகரி என்னும் வினைப்பகுதியைக் கொண்டு முடிவதாய்த் தனது கிழமைப் பொருளை உணர்த்தாது  எழுத்து உடையது என வினைமுதற் பொருண்மை உணர்த்துதலின் வினைமுதற் பொருண்மைக் கண் வந்த காரகம் எனப்பட்டது .

மாபாடியத்தும் ‘கார்த்திரு காரக சஷ்டி’  எனப்படுவது காண்க.

எழுத்ததிகாரம் என்பது  எழுத்துணர்த்தினமை  காரணத்தான் வந்த பெயர் எனவும் , எழுத்தை உணர்த்திய அதிகாரம்  என விரிக்க எனவும் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் .

****

ஒத்து

ஒன்றோடொன்று நேரான மணிகளை முறையாக வைத்தாற்போல ஒரேயினமான பொருள்களை  ஒரு வழியே தொகுப்பது  மொழிவர் உயர்ந்த மொழியியல்பாய்  யுணர்ந்த அறிஞர் என்றவாறு .

***

என் கருத்து

இதைப் படிக்கையில் வேதங்களை தமிழில் ‘ஒத்து’ என்று ஏ ன் சொன்னார்கள் என்று விளங்குகிறது. சம்ஹிதை — ஒரே இழையில் தொகுக்கப்பட்டது- ‘ஒத்து’

மற்ற  ஒரு  கருத்தும் நினைவுக்கு வருகிறது.பகவத் கீதை யில் கண்ணனும் ‘ சூத்ர மணி கணா’ இவ (7-7 ) என்பதை பயன்படுத்துகிறார். ‘நூலில் முறையாக கோர்க்கப்பட்ட ரத்தினைக் கற்கள் போல’ ஈதெல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன என்கிறார் ஆக ‘அதிகாரம்’ என்பது பழைய சம்ஸ்கிருதத் சொல் என்பதும்   அதைத் தமிழர்கள் எந்த காழ்ப்புணர்ச்ச்சியும் இல்லாது நூலில் பயன்படுத்தினர் என்பதும்   தெளிவாகிறது .

(அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்தது என் வேலை)

tags – இலக்கண அகராதி -9, ஒத்து, வேற்றுமை  வகை

—சுபம்–