நவம்பர் 2022 காலண்டர்: காஞ்சி பரமாசார்யாள் பொன்மொழிகள் (11,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,401

Date uploaded in London – 31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பண்டிகை நாட்கள் – 8 குரு நானக் ஜெயந்தி, சந்திர கிரஹணம், ;14- குழந்தைகள் தினம்; 21, 28- சிவன் கோவில்களில் சோமவார சங்காபிஷேகம்; 23-சத்ய சாய் பாபா பிறந்த தினம்;

பெளர்ணமி- 8; அமாவாசை- 23; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 4, 19; ;

சுப முகூர்த்த நாட்கள்-  11,14, 20

XXXX

Book with 1957-1960 Madras Discourses 

காஞ்சி சங்கராச்சார்யார் (1894-1994) உபன்யாசத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்மொழிகள். சென்னை நகரில் 1932-ம் ஆண்டில் செய்த உபந்யாங்கள்; Source Book –நமது தர்மம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியீடு , பிப்ரவரி 1950

நவம்பர்  1 செவ்வாய்க் கிழமை

சில மதஸ்தர்கள் முக்கியமான புஸ்தகத்துக்கு கோயில் கட்டி வணங்குகிறார்கள் ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை  அவர்கள் கிரந்த ஸாஹேப்  என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் .

xxx

நவம்பர்  2 புதன்  கிழமை

நம்முடைய மதத்தில், மதத்தைப் பற்றி படிப்பதே கிடையாது  அப்படிப் படிக்காததனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் , நம்முடைய மதத்திலிருந்து பிடித்துப் போகிறார்கள் .

xxx

நவம்பர்  3 வியாழக்  கிழமை

நம்முடைய மதக் கிரந்தங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம் . மற்றவர்கள், பிற மத புஸ்தகங்களை அழிக்கிறார்கள் . நமக்கு புஸ்தகத்தின்  பெயரே தெரியவில்லை படிப்பதால் என்ன பிரயோஜனம் என்றும் கேட்கிறோம் . பிரேமை இருந்தால் காரணம் வேண்டியதில்லை

xxx

நவம்பர்  4 வெள்ளிக்  கிழமை

மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேகமே வராது .மதப் படிப்பை இளம் பருவத்திலே படித்திருந்தால் எல்லோருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும் . ஸந்தேகம் இருக்காது .

xxx

நவம்பர்  5 சனிக்  கிழமை

நமக்குள்ள ஸந்தேகங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்களை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம்  உபதேசம் பெறுகிறோம் ; மஹா க்ஷேத்திரங்களுக்குப் போகிறோம் ; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம்; அப்படிச் செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது

xxx

நவம்பர்  6 ஞாயிற்றுக்  கிழமை

இன்பத்துக்குப் பொருள் சாதனமாக இருப்பது போல , பொருளுக்கு தர்மம் சாதனமாக இருக்கிறது .தர்மம் அர்த்தத்துக்கு சாதனம் ; அர்த்தம் இன்பத்திற்கு சாதனம் .

xxx

நவம்பர்  7  திங்கட்  கிழமை

எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம்ன்ன மாதிரி கொடுத்தால் நாம் பின்னால் செளக்கியமாக இருக்கலாமோ அது தர்மம்

xxx

நவம்பர் 8 செவ்வாய்க் கிழமை

ஸங்கீதம் , ஸாஹித்யம் என்னும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் — ஸாஹித்தியம் உயர்ந்தது ; மருந்தின் மேலே வெல்லம் தடவிக் கொடுப்பது போல  ஸாஹித்தியத்தை எல்லாரும் கேட்பதற்காக ஸங்கீதம் உபயோகப்படுகிறது என்கிறார் சிவ லீலார்ணவம் கவி.

xxx

நவம்பர் 9 புதன்  கிழமை

கவியினுடைய நல்ல வார்த்தைகள் அமிருதத்தைப் போன்றவை .அமிருதம் சாகாது. கவியின் பாவத்தை இருதயத்தில் வாங்கினால் அது சாகாது. உள்ளுக்குள்ளே இருந்து நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும்

xxx

நவம்பர் 10 வியாழக்  கிழமை

வேறே உள்ள மதப் புஸ்தகங்களெல்லாம் மனிதன் அடையவேண்டியது பரலோகம் என்று சொல்லுகிறது. மோக்ஷத்தைப் பரலோகம் என்றே  சொல்லுகின்றன. ஆனால் நம்முடைய புஸ்தகங்கங்களில் பரலோகம் என்று வேறு இல்லை . இங்கேயே மோக்ஷத்தை அடையலாம்

xxx

நவம்பர் 11 வெள்ளிக்  கிழமை

தர்மத்தைச் சொல்லும் புஸ்தகங்கள் 14; அவை ஆறு அங்கங்கள், நாலு வேதங்கள்,, மீமாம்ஸை , புராணம், நியாயம்,தர்ம சாஸ்திரம் . வேதமோடாறங்க மாயினானை என்று தேவாரம் சொல்லுகிறது.

xxx

Book with 1932 Madras Discourses 

நவம்பர் 12 சனிக்  கிழமை

ஒரு ஜாமம் 3 மணி ஆகும்; அதாவது ஏழரை நாழிகை; 5 நாழிகை உஷத் காலத்திலும் இரண்டரை நாழிகை பிரதோஷ  காலத்திலும்  போய்விடும்; 30 நாழிகை பகற் காலத்தில்  போய்விடும்; மிச்சம் இருப்பவை 3 ஜாமங்கள் ; அதனால்தான் ராத்திரிக்கு த்ரி யாமா என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது

xxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக்  கிழமை

சிராத்தம் என்பதற்கு சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்; சிரத்தைதான் நமக்கு முக்கியம் ;ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் சட்டப்படிதான் பண்ண வேண்டும்.;  காரியத்துக்குச் சட்டம் வேண்டும்; பக்திக்கும் ஞானத்துக்கும் ஒன்றும் வேண்டாம்.

Xxxx

நவம்பர் 14  திங்கட்  கிழமை

இந்த மாதிரி வேஷ்டி கட்டிக்கொள்வது , ருத்ராக்ஷம் போட்டுக்கொள்வது இவைகளை எப்பொழுது ஆரம்பித்தார்கள்?இங்கிலீஸ்காரர்கள் இன்ன இன்ன காலத்தில்  இன்ன இன்ன உடை இருந்தது ; இன்ன உடை இப்பொழுதிலிருந்து உண்டாயிற்று என்று எழுதிப் படம் போட்டிருக்கிறார்கள. நாம் அந்த மாதிரி செய்யப் பார்த்தால் நமக்கு அகப்படாது .

xxx

நவம்பர்  15 செவ்வாய்க் கிழமை

சாப்பிடுவதற்கு முன் வைச்வதேவ ஹோமம் பண்ணி பலி கொடுக்க வேண்டும். மனிதர்களை உத்தேசித்து ஹந்தா என்று போட வேண்டும்; தேவர்களை உத்தேசித்து ஸ்வாஹா  என்று போட வேண்டும்; பிதுருக்களை உத்தேசித்து ஸ்வதா என்று போட வேண்டும்.

xxx

நவம்பர்  16 புதன்  கிழமை

இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு பிராணிகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றுக்கும் வைச்வதேவத்தில் பலி உண்டு. நாய், காக்கை, சண்டாளன் இவைகளுக்கெல்லாம் பலி உண்டு.

xxx

நவம்பர் 17 வியாழக்  கிழமை

ஷட்கர்ம நிரதர்களான (அறுதொழில் அந்தணர்) என்று  காகிதம் எழுதுகிற வழக்கம்  உண்டு . யஜனம், யாஜனம் , அத்யயனம் , அத்யாபனம், பிரதானம் , பிரதிக்ரஹம் என்று சொல்லுவது ஒரு வகை .

Xxx

 நவம்பர் 18 வெள்ளிக்  கிழமை

காயத்ரீ மந்திரம் ஆயிரம் ஜபிப்பது உத்தமம் ; நூறு ஜபிப்பது மத்யமம்; பத்து ஜபிப்பது அதமம் .

தைத்திரீய ஆரண்யகம் ” ஸஹஸ்ர பரமா தேவீ சதமத்யமா தசாவரா ” என்று சொல்கிறது .

xxx

நவம்பர் 19 சனிக்  கிழமை

ஒரு சின்ன ஸ்லோகம் இருக்கிறது ; அதில் பிரதிதினமும் பண்ணவேண்டிய ஆறு காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஸந்த்யா ஸ்நானம் ஜபோ ஹோமோ தேவதானாம் ச பூஜனம்

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட் கர்மாணி தினே தினே

xxx

நவம்பர் 20 ஞாயிற்றுக்  கிழமை

நாள்தோறும் செய்யவேண்டிய ஆறு — ஸ்நானம் , ஸந்தியாவந்தனம், ஹோமம் (ஒளபாஸனம்), சிவ பூஜை, ஆதித்யம் (அதிதிக்கு அன்னம் இடுதல்), வைச்வதேவம் .

xxx

நவம்பர்  21 திங்கட்  கிழமை

காந்தி விதவா விவாஹம் தான் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று சொன்னார் காந்தி படம் அநேகமாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது ஆனாலும் அவர் சொன்னபடி எவ்வளவு பேர் கேட்டார்கள்?

xxx

நவம்பர் 22 செவ்வாய்க் கிழமை

நான் கிராப் (crop) பை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லுகிறேன்; எத்தனை பேர் எடுத்தார்கள்? அதையும் கேட்கத் தயாரில்லை;  இதையும் கேட்கத் தயாரில்லை ; ஸங்கடப்படுகிறார்கள்

xxx

Kanchi Shankaracharya in Madurai Dinamani Office

நவம்பர் 23 புதன்  கிழமை

வேத சம்பந்தமான எல்லா கிரியைகளிலும் கோ ப்ராஹ்மணேப்யஹ சுபமஸ்து நித்யம் என்று சொல்லுவது வழக்கம். இந்த வாக்கியத்தில் பசுவைத்தான் முதன்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது

xxx

நவம்பர் 24 வியாழக்  கிழமை

‘கோ’ வானது லோகத்திற்கே தாயாக இருக்கிறது கோ- வைத்தவிர பாக்கி பிராணிகள் எல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றன  . பசுவோ ஆயுள் உள்ள வரை எந்த ஜாதிக்கும் பால் கொடுத்து ரக்ஷிக்கிறது .இதையெல்லாம் உத்தேசித்துத்தான் சாஸ்திரங்களில் கோ- வை ரக்ஷிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது .

xxxx

நவம்பர் 25 வெள்ளிக்  கிழமை

சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நடந்த போட்டியில் வைகை ஆற்றில் நீரோட்டத்தை எதிர்த்துச்  செல்லும் ஓலையே வெல்லும் என்றும் அதுதான் உண்மையான மதம் என்றும் தீர்மானித்து எழுதினர் ; அந்த ஓலையில் திரு ஞான சம்பந்தர் எழுதிய வாழ்த்துப் பதிகத்தில் வாழ்க அந்தணர் வானவர் ஆன்  இனம் என்பதே முதல் வரி . அதுதான் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்னும் சிவ ஸ்தலத்தை அடைந்தது .

xxx

நவம்பர் 26 சனிக்  கிழமை

அந்த ஸ்தலத்தில் இருக்கிற பரமேஸ்வரனுக்கு பத்திரிகா பரமேசுவரன் என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர். பத்திரிகை என்றால் ஏடு என்று அர்த்தம். ஏடு அங்கே தங்கியதால் சுவாமிக்கு அப்பெயர் ஏற்பட்டது

xxx 

நவம்பர் 27 ஞாயிற்றுக்  கிழமை

ஈசுவரன் நமக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் .அதை வைத்துக்கொண்டு பரோபகாரம் செய்யவேண்டும் . தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி ஒரு தர்மத்தைச்  செய்யவேண்டும் ; செய்ய முடிந்தபொழுது உடனே செய்யவேண்டும் ; அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது .

xxx

நவம்பர் 28  திங்கட்  கிழமை

ஸந்யாஸ ஆச்ரமத்தை உடையவர்கள் அஹிம்சையைப் பூர்ணமாக அனுஷ்டிக்கவேண்டும். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளும்போதே  அவர்கள் அஹிம்ஸன் ஸர்வ பூதான் யன்யத்ர தீர்த்தேப்யஹ  (சாந்தோக்யோபனிஷத் ) என்று பிரதிக்ஞை செய்துகொள்கிறார்கள் ‘ ஸகல பிராணிகளுக்கும் என்னால் பயமில்லை என்பது அதன் தாத்பர்யம்

xxx

நவம்பர்  29 செவ்வாய்க் கிழமை

ஸத்தியத்திற்கு லக்ஷணம் (definition)  ஒன்று உண்டு —வாங்மனஸயோரைகரூப்யம்  ஸத்யம்   — மனதும் வாக்கும் ஒரே விஷயத்தைச் செய்வதுதான் ஸத்தியம் .

xxx

நவம்பர்  30 புதன்  கிழமை

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதெள  வைரத்யாகஹ — என்று பாதஞ்ஜல யோக ஸூத்ரம் – 4 சொல்லுகிறது அஹிம்ஸையை  திரிகரணங்களாலும் ஸாதித்து விட்டோமானால் நமக்கு எதிரில் யாவரும் சாந்தம் அடைவார்கள் (கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும் – குறள் 260)

–subham–

Tags- காஞ்சி , பரமாசார்யாள்,  சுவாமிகள் , பொன்மொழிகள், நவம்பர் 2022 காலண்டர் 

அருணகிரிநாதரும் தமிழும்! – 5 (Post No.11,400)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,400

Date uploaded in London – –    31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 5 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

  41) திருவருணை

முதிய மாதமி ழிசைய தாகவே

  மொழிசெய் தேநினைந்  – திடுமாறு

பாடல் எண் 443 : விதியதாகவே எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி…..

 42) சிதம்பரம்

தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி

  வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாட இயல்

    தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு – பெருமாளே

 பாடல் எண் 478 : முல்லை மலர் போலும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்  பெருமாளே!

 43) சிதம்பரம்

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு

   முருகா தமிழ்ப்புலியூர் – பெருமாளே

பாடல் எண் 513 : மனமே உனக்குறுதி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே!

 44) திருக்கழுக்குன்றம் 

வேலெடுத்து நடந்த திவா கராசல

 வேடுவப் பெண் மணந்த புயா சலாதமிழ்

  வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ – குமரவேளே

 பாடல் எண் 543 : ஓலமிட்ட  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே! வள்ளிமலைக் குறப்பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே!

 45) திருச்செங்கோடு 

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்

  கிரங்கார்க் கியற்றண் – டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்

 துளங்காத் திடப்புன் – கவி பாடி

 பாடல் எண் 589 : இடம் பார்த்து   எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட  மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி…

 46) திருச்செங்கோடு 

பழய அடியவ ருடனிமை யவர்கண

 மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு

  பரவ வருமதி லருணையி லொருவிசை -வரவேணும்


பாடல் எண் 605 : கொடிய மறலி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் ; பழமையான அடியார்களுடன் தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேத கீதங்களையும் பாடி வணங்க, முன்பொரு முறை திருவண்ணாமலையில் என் முன் வந்தது போல இன்னொரு முறை வந்து அருளல் வேண்டும்.

47) கொல்லிமலை 

பல்ல பல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

  பல்குதமிழ் தானொன்றி – யிசையாகிப்

பாடல் எண் 607 : தொல்லை  எனத் தொடங்கும் பாடல்

பொருள் ; பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகி வரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி…

48) புகழிமலை 

புகலரிய தான தமிழ்முநிவ ரோது

   புகழிமலை மேவு பெருமாளே

 பாடல் எண் 619 : மருவுமலர் வாசம்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சொல்லுதற்கு அரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

49) பெருங்குடி  

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில் கொண்டெறி

  ப்ரசண்டக ரதண்டமிழ் – வயலூரா

பாடல் எண் 700 : தலங்களில் வரும்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பலத்துடன் கிரௌஞ்ச மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம் கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே!

 50) உத்தரமேரூர்  

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்

 வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்

  வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக

பாடல் எண் 717 : மாதர் கொங்கையில்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேதப் பயிற்சியையும் கிரியை  மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படி செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத்தக்க அறிவாளனே! 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

***

 புத்தக அறிமுகம் – 99 

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-2)

பொருளடக்கம்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

  1. விண்வெளியில் ஆதிக்கமா? 

 2. விண்வெளியில் விழுந்த புதையலைத் தேடி…

 3. அயல்கிரகவாசிகள் எங்கே? 

 4. நட்சத்திரக் குழந்தைகள்

 5. நிலவில் தேன் நிலவு  

 6. அற்புதமான ஒரு விண்வெளிக் கதை   

 7. நாஸா தேடும் ரகசியம்

 8. சந்திரனில் மட்டுமே கொட்டிக் கிடக்கும் அபூர்வ பொருள்

 9. ரஷ்யா சந்திரனில் அமைக்கும் தளம்   

10. ராக்கட் ரேஸ்    

11. சந்திரனுக்கு உரிமை கோரும் விவசாயி

12. சந்திரனில் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் 1000 டாலர்

13. உலகப் பொருளாதாரத்தை மாற்றப் போகும் சந்திரன்    

14. சனியின் துணைநிலவு தரும் அதிசயத் தகவல்கள்

15. பரபரப்பூட்டும் பத்திரிகை தகவல்கள்   

16. நீங்களே ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கட்டலாமே

17. விண்வெளியில் பிழைத்த விண்வெளி வீரர்கள்    

18. விண்வெளி ஆபத்திலிருந்து மீண்டது சோயுஸ் விண்கலம்   

19. வருகிறது தனிநபர் விண்கலம்    

20. நீங்களும் விண்வெளியில் பறக்கலாம்  

21. விண்கலத்தை விட்டு வெளியில் செல்லும் விளையாட்டு    

22. விண்கலத்தை விட்டு வெளியில் சென்று புரியும் ஆனந்த நடனம்  

23. விண்வெளி ஆசிரியர்கள்    

24. விண்வெளிப் பேனாவின் கதை   

25. விண்வெளி யுத்தம்    

26. விண்வெளிப் படை    

27. ராக்கெட் தோல்விக்கு காரணம் ஆவிகளா?   

28. சந்திர மனிதன்   

29. ஹிட்லர் தற்கொலையால்…! 

30. பூமிக்கு வரும் அபாயம் போக்க ஒரு உபாயம்

31. ALH 84001 மனித சாதனைகள்

32. விண்வெளி தூசிகள் பற்றிய ஆராய்ச்சி 

33. ஆகஸ்ட் புரளிகள்

34. இனிமேல் எட்டு கிரகங்கள்தான்  

35. புளூடோவின் இறக்கமும் உலகெங்கும் எழுகின்ற விமர்சனங்களும்

36. ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்   

37. பெயரில் என்ன இருக்கிறது?

அணிந்துரை 

இந்த நூலுக்கு திரு வி.தேசிகன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையை முதல் பாகத்தில் காணலாம்.

 நூலுக்கு எனது முன்னுரை இது:

முன்னுரை 

     விண்வெளியில் மனித சாதனைகள் என்ற இந்தப் புத்தகம் விண்வெளி ஆர்வலர்களுக்கும் அறிவியலில் ஆர்வம் உடையவர்களுக்கும் ஏராளமான சுவையான செய்திகளை அளிக்கும் என நம்புகிறேன்.

     ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலிருந்தே விண்வெளி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைத் தொகுப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. பல்வேறு பத்திரிக்கைகளில் விண்வெளி பற்றிய சுவையான செய்திகளையும் விண்வெளியை வெற்றிக் கொள்ளத் துடிக்கும் மனிதனின் பேராவலையும் அவன் பெற்ற வெற்றிகளையும் எழுதி வந்தேன்.

     அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து காஸினி விண்கல சாதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இல்லத்திலிருந்தே நேயர்களுடம் பேசும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

      இந்த நிலையில் தான் எனது இனிய நண்பரும் டைரக்டரும் பிரபல கதாசிரியரும் பாக்யா ஆசிரியருமான டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் என்னை விண்வெளி பற்றிய தொடர் ஒன்று பாக்யா வார இதழில் எழுதப் பணித்தார்.

சுமார் 156 வாரங்கள் இந்தத் தொடர் நீண்டது. இந்திய பத்திரிக்கைகளிலேயே விண்வெளி பற்றிய நீண்ட தொடர் என்ற புகழையும் பெற்றது.

      இதற்குக் காரணம் டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் தணியாத அறிவியல் தாகமும் அதை அப்படியே பிரதிபலித்த பாக்யா வாசகர்களின் ஆர்வமும் தான்.

       ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் மூலம் ஊக்கம் பெற்றதால், விண்வெளி பற்றிய  ஒரு கலைக் களஞ்சியத் தொடராக இதை என்னால் அமைக்க முடிந்தது.

        முதலில் சூரிய மண்டலம், அதில் உள்ள கிரகங்களின் விவரம், நட்சத்திர மண்டலங்கள், விண்கற்கள், எல்லையற்ற விண்வெளி, அதில் செல்வதற்கான விண்கலங்கள், விண்வெளி வீரர்களுக்கான உடல் மற்றும் உள்ளத் தகுதிகள், அவர்களுக்கான உடைகள், விண்வெளி செல்வதற்கான ஏராளமான பயிற்சிகள் போன்றவற்றையும் ககாரின், ஆர்ம்ஸ்ட்ராங், கல்பனா சாவ்லா உள்ளிட்ட வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் இந்தத் தொடரில் சொல்ல முடிந்தது.

அடுத்து விண்வெளி பற்றிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், அரிய புத்தகங்கள், செவ்வாய் சங்கம், விண்வெளிக் கொடி போன்ற சுவையான செய்திகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்துத் தர முடிந்தது,

எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதன் குடியேற இருப்பது மகத்தான ஒரு பெரிய விஷயம். அதற்கு மனிதனின் ஆயத்தங்களையும் இந்த நூலில் படித்து மகிழலாம்.

        ஒரே ஒரு விஷயத்தை இங்கு தெரிவிப்பது எனது கடமை ஆகிறது. பாக்யா வார இதழில் 2004ஆம் ஆண்டு நவம்பரில் ஆரம்பித்து 2007 நவம்பரில் இந்தத் தொடர் நிறைவு பெற்றது. 2007லிருந்து இன்று  வரை விண்வெளியில் மனிதன் பல்வேறு புதிய சாதனைகளைச் செய்து முடித்துள்ளான். ஆனால் வரலாற்றுப் பதிவு அப்படியே இருக்க வேண்டும் என்பதால் அத்தியாயங்களில் உள்ள விஷயங்கள்  மாற்றப்படாமல் அப்படியே தரப்பட்டுள்ளது. இன்றைய முன்னேற்றங்களை எனது நூல்களான அறிவியல் துளிகள், மாயாலோகம் ஆகியவற்றில் வாசகர்கள் படித்து மகிழலாம்.

   தொடரை முடித்தவுடன் இதை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை நண்பர்களும் வாசகர்களும் விரும்பித் தெரிவித்தனர்.இதை நிறைவேற்ற முடியுமா என்று மலைத்திருந்த போது லண்டனில் உள்ள நிலா பப்ளிஷர்ஸின் உரிமையாளரும் நிலாச்சாரல் ஆசிரியருமான திருமதி நிர்மலா ராஜு இதை மின்னணு முறையில் டிஜிடல் நூலாக வெளியிடும் பெரும் பொறுப்பை ஏற்க முன் வந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    நிலாச்சாரல் குழு ஒரு அற்புதமான, இனிய, ஆடம்பரமின்றி மறைந்திருந்து மாபெரும் சேவையை திருமதி நிர்மலா தலைமையில் ஆற்றிவரும் அதிசயக் குழு. அதில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகர்களில் வாழ்பவர்கள். அரசியலுக்காகவும் ஆதாயத்திற்காகவும் பெயர் மற்றும் விருதுகளுக்காகவும் தமிழை உதட்டால் ஓதாமல் உள்ளத்தால் தமிழுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், முகம் தெரியாமலும் நேரில் பார்க்காமலும் என்னுடன் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்ட இவர்களுக்கு எனது நன்றியை உளமார உரித்தாக்குகிறேன். குறிப்பாக திரு கார்த்திகை பாண்டியன், திருமதி யஷஸ்வினி ஆகியோருக்கு என் நன்றி.

    இந்த நூலுக்கு அணிந்துரை பெறுவதற்கான எண்ணம் என் மனதில் எழுந்தவுடன் அதற்கு மிகவும் பொருத்தமான ஒரே ஒருவராக விண்வெளி பற்றி நன்கு அறிந்தவரும் என் இனிய நண்பருமான திரு வி.தேசிகன் தான் நினைவில் வந்தார்.

தேசிகன் சிறந்த விஞ்ஞானி. ஆடம்பரமும் அகந்தையும் இல்லாத எளிமை கொண்ட அதிசய மனிதர்/. மதுரையைச் சேர்ந்த மாபெரும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். பெரிய அறிவியல் விஷயங்களை எளிதில் விளக்கும் திறன் பெற்றவர்.  இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நவீன சாதனங்களையும் நவீன தொழில் நுட்ப அமைப்புகளையும் நமது விமானப் படை உள்ளிட்ட முப்படைகளுக்கும் வடிவமைக்கும் நிறுவனத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர். டிபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் (டி ஆர் டி ஓ- Defence Research and Development Organizations -DRDO)) இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உயரிய பதவி வகித்தவர். 1983ஆம் ஆண்டுக்கான உயரிய விருதான “ஸயின்டிஸ்ட் ஆப் தி இயர்” என்னும் டிஆர்டிஓ விருதை பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் பெற்றவர். உயர்ந்த பண்பாளரான இவர் சமூக சேவையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். பங்களூரில்  ரோட்டரி சென்ட்ரல் கிளைக்கு தலைவராக இருந்து சேவை புரிந்தவர். இசையையும் டென்னிஸையும் இரு கண்களாகப் போற்றும் திரு தேசிகன் அவ்வப்பொழுது தனது உயரிய சிந்தனைகளை இணைய ப்ளாக்குகளிலும் உலவ விடுகிறார்.1997லிருந்து ஒரு  அரிய அறிவுரையைத் தரும் தனது ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் பங்களூரில் நடத்தி வருகிறார்.

திரு தேசிகனிடம் அணிந்துரை தர வேண்டிய போது மனமுவந்து அதை ஏற்றதுடன் அழகிய அணிந்துரை ஒன்றை அளித்து என்னை கௌரவித்துள்ளார். அவருக்கு என் இதய ஆழத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     வாசகர்களே தமிழ் உலகத்தின் ஜீவ நாடி. அவர்களே அறிவுச் செல்வத்தை வரவேற்பவர்கள்; ஆதரிப்பவர்கள்; பரப்புபவர்கள். அவர்கள் இன்றி எந்த ஒரு புத்தக வெளியீடும் இல்லை. புத்தகமும் இல்லை.எழுத்தாளரும் இல்லை. என்னை இடைவிடாது பல வருடங்களாக ஆதரித்து வரும் நேயர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

தொடர்ந்து என் எழுத்துப் பணியில் அக்கறை செலுத்தி பல்வேறு வழிகளிலும் உதவி வரும் என் மனைவி சித்ரா, மகன்கள் சத்யநாராயணன், விஜயகிருஷ்ணன், மருமகள் ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்கள் இந்த நூலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

பங்களூரு                                      ச,நாகராஜன்

15-3-2012

தொடர்புக்கான மின்னஞ்சல் snagarajans@gmail.com

*நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This is the second part of the series which deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. This book not only outlines several expeditions into space, but also explains how science and technology have improved continuously over years. The functioning of space satellites and space stations have also been detailed. This book is a must read for space enthusiasts.

 ‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடரின் இரண்டாம் பாகம் இப்பொழுது நூலாக! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விளக்குகிறது. பல்வேறு விண்வெளிப் பயணங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. விண்கலங்களின் பயன்பாடுகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது. அறிவியல் ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல்! பரிசளிக்கவும் ஏற்ற நூல்!

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

WHAT IS VIENNA FAMOUS FOR ? (Post No.11,399)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,399

Date uploaded in London – 30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 

In my part of India, that is Tamil Nadu, we used to call two cities as Temple Towns- Madurai and Kanchipuram. If I apply the same criteria to Vienna, what I would call Vienna?

Vienna, capital of Austria is a City of Museums. Not only that A City of Music and a City of Architecture. Over 100 museums are there in the city. Those museums are dealing with art, history , music or Psycho analysis! They cater to every taste of human beings. If you like architecture or music or Freudian psycho analysis or Danube river cruise or anything Royal, there is something for you.

Because we stayed there for only five days (actually 5-2= 3 full days; arrival and departure take lot of time when you go with your family), I had a limited plan. I wanted to see mighty River Danube, the Royal Palace, Music Museums and paintings of famous painters in Belvedere.

We went to

Royal Palace (Schonbrunn),Upper Belvedere, House of Music, some parks, City Centre, Hare Krishna Restaurant (Govinda), River Danube.

From Outside:-  we saw City Hall, Parliament Building, Votive Church, St Francis Church, Museums Quartier, Shopping areas

We bought 72 hour tickets and travelled by Tram , Bus and Underground.

I would advise everyone to buy 24 or 48 or 72 hour tickets depending upon the length of your stay.

Upper Belvedere with famous Paintings

We wanted to see the most famous painting of Klimt “The Kiss”  and so we went to Klint Museum in Upper Belvedere. There is a huge garden with lot of Sphinx Statues. Prince Eugene of Savoy, who commissioned the two Baroque palaces as his summer residence, grew up around the court of Louis XIV. While the impeccably sculpted grounds and over-the-top interiors are indeed reminiscent of the famous French chateau, the Upper Belvedere houses a proudly Austrian art collection that includes works by Schiele, Moser and Klimt, whose gilded tableau “The Kiss” mesmerizes visitors. One can explore the tiered gardens that lead to the Lower Belvedere, which hosts temporary exhibitions in opulent halls.

The upper Belvedere honours all the Austrian painters who made history, such as Gustav Klimt, in a fascinating permanent exhibition and  the Lower Belvedere and Belvedere 21, are home to temporary exhibitions, both Baroque and contemporary. There are three sections in total.

Schönbrunn Palace is the most visited monument in Vienna (and in Austria!). Like any Royal Palace it has the magnificent collection of expensive clocks, decorated chairs, Dining tables, weapons, musical instruments, royal dress, and valuable paintings. Queen Sisi was very fond of her unusually long hair and she spent three hours everyday to maintain her beauty. She was considered one of the beautiful queens; but she had a tragic life;  lost her only son who committed suicide along with his lady love. Queen Sisi herself was stabbed to death in a mistaken identity. But yet she was the most travelled queen about 150 years ago. When she lost her son, she lost interest in governing the country and started journeying to get mental peace. As soon as we enter the palace we see her statue, her long hair and her dressing room.

House of Music (Haus der Musik)

Though there are two museums dedicated to Mozart and Beethoven, House of Music has the history of all composers of the Western world. We went to the museum and enjoyed inter active features in the museum.

Across an exhibition space of 54,000 sq. ft., a range of hi-tech interactive and multimedia presentations introduce the world of music, from the earliest human use of instruments to the music of the present day. Holograms of six famous musicians and the Time lines of six famous musicians are displayed.

This interactive sound and music museum dives into the fascinating world of music and sounds on five floors. Visitors not only learn about the history and tradition of Viennese music, they can also experiment with sounds and instruments. Inter active instruments attract lot of youngsters.

With all its interactive displays a truly entertaining place for the whole family! Highlights include the historical archives of the Vienna Philharmonic where you can listen to their famous New Year’s Eve concert and the brand new Sonotopia Universe on the 2nd floor. It´s here where you can create your own sound creature in a VR Lab but also test interactive stations on the physics of sound. If Beethoven, Mozart or the Strauss family are of interest, then head up to the 3rd floor to learn about their lives in the city and the music they created. Grand finale is the virtual conductor exhibit on the 4th floor – test your conducting skills by waving a baton along to a video of Vienna Philharmonic playing. You will even get feedback after having a go! You might want to enrich your visit by downloading the free museum guide on your smartphone.

(Following is from Wikipedia)
“Although many of the most reputable names that Vienna is often associated with did not originate from Vienna, such as Mozart and Beethoven, the city did home-grow many significant composers, including Johann Strauss I and Franz Schubert.

Among the greats, Mozart was one of Vienna’s most influential residents during the classical era. Born in Salzburg in 1756, the prodigy spent a large proportion of his life in Vienna and composed many of his most coveted works in the city. His first visit was in 1762 when he was invited to play a concert at Schonbrunn Palace, for the Habsburg family. During his time in the city, Mozart resided at numerous locations, a few of which can be visited by the public today. He died and was buried in the city’s Cemetery of Karl Marx.

Aside from Mozart, the list of composers who contributed to Vienna gaining a strong reputation as a city of music is long and impressive; Strauss, Beethoven, Haydn and Berg all spent time in Austria’s capital).

Votive Church

Another land mark in Vienna is Votive Church

Votive Church is situated near Vienna University area. Its height is ninety-nine meters. Made in a Neo-Gothic style, the church was built over a long time in twenty-three years. With a structure of Gothic cathedral, the famous Votive church has a facade with twin towers.

The parliament building covers over 13,500 square meters, making it one of the largest structures on Ringstraße. It contains over one hundred rooms. City hall is another land mark. We saw most of the famous buildings from out side.

No tourist could cover all the museums and landmark buildings.

During our stay we went to hare Krishna Restaurant Govinda and enjoyed proper Vegetarian food. Vegan concept is not approved by the Hindu scriptures. All Hindu scriptures insist the use of dairy projects in all rituals. Moreover, the Vegan restaurants in Western Countries use Fish, Crabs and other sea creatures. So we went  mostly to Italian restaurants and had veggy Pasta, Pizza, Noodles and Risotto.

–subham–

Tags- Museums, Royal Palace, Mozart, Beethovem Strass, Schubert, Klimpt, 

சங்கீதத்துக்கும், ஓவியத்துக்கும் பஞ்சமில்லாத வியன்னா நகரம் (Post.11,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,398

Date uploaded in London – 30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

கடல் என்பதே என்ன என்று தெரியாத நாடு ஆஸ்திரியா. ஏனெனில் ஐரோப்பாவில் எட்டு நாடுகளுக்கு இடையே சிக்கித் (LAND LOCKED COUNTRY)  தவிக்கும் நாடு அது. ஆயினும் அதன் தலைநகரான ( VIENNA, CAPITAL OF AUSTRIA) வியன்னாவை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். காரணம் என்ன  தெரியுமா ? ஓவியக் கலைஞர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் புகழ் பெற்ற நகரம் வியன்னா . மொசார்ட் , பீத்தோவன் , ஷுபர்ட் , ஸ்டிராஸ் (Mozart, Beethoven, Schubert, Strauss)  ஆகிய பலர் அங்கே பிறந்தனர் அல்லது நீண்ட காலம் வாழ்ந்தனர். விமான நிலையத்தில் ட்யூட்டி பிரீ DUTY FREE SHOPS கடைகளுக்குச் சென்றாலும் மொசார்ட் படத்துடன் உள்ள பெரிய சாக்லெட் டப்பாக்களை வாங்கலாம். நாங்கள் தீபாவளி நேரத்தில் 5 நாட்களுக்கு வியன்னாவில் தங்கினோம். எனக்கு மொசார்ட் (MOZART) மியூசியத்துக்கும் பீதோவன் (BEETHOVEN)  மியூசியத்துக்கும் போக ஆசை. ஆனால் அப்படி தனித்தனியே போக நேரம் இல்லாததால் இரண்டு பேரையும் சேர்த்துக்  காட்டும்  ஹவுஸ் ஆப் மியூசிக் HAUS DER MUSIK  (சங்கீத இல்லம்) காட்சி சாலைக்குச் சென்றோம். ஆறு மாடிகளில் அமைந்த கட்டிட மியூசியம் அது.

நிறைய சிறுமிகளை  அம்மாமார்கள் அழைத்து வந்திருந்தனர். இசையில் ஆர்வம் உடைய இளம் சிட்டுகளுக்கான காட்சியகம் அது ; பெரியவர்களும் போகலாம். ஏனெனில் ஆறு புகழ்பெற்ற இசைக்க கலைஞ ர்களின்  வாழ்க்கைப் படங்கள், வரலாறுகள், முக்கிய பாடல்கள் அங்கே காட்சி தருகின்றன. அது மட்டுமல்ல ஒலி /சப்தம் /இசை/Sound என்பதன் விஞ்ஞான பின்னணியும் (Physics of Sound) அறிவியல் ரீதியில் விளக்கப்பட்டுள்ளது இளைஞர்களே Inter Active இயக்கி இன்பம் அடையும் பல உபகரணங்கள் அங்கே உள்ளதால் அவற்றை சிறுவர் சிறுமியர் இயக்கி ஆனந்தம் அடைகின்றனர்.

மொத்தத்தில் இசைப் பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்

என்ன என்ன, எப்படி என்று விளக்குகிறேன்.

மாடியில் ஏறிச் செல்லும்போது ஒவ்வொரு படியை மிதிக்கும்போதும் ஒரு இசை ஒலி கேட்கும். நம்ம ஊரில் புகழ் மிகு கோவில்களில் இருக்கும்  இசைத் தூண்கள் , இசைப் படிக்கட்டுகள் (Musical Pillars, Musical Steps) போன்றது அவை. நாமும் இப்படி இளம் உள்ளங்களைக் கவர்ந்து இழுக்கும் சங்கீத மியூசியத்தை திருவாரூரில் அமைக்க வேண்டும். மும்மூ ர்த்திகளால் சிறப்பு அடைந்த ஊர் அல்லவா திரு ஆரூர் .படிகளில் ஏறும்போது  ஸ, ரி, க ,ம ப த நி, ஸ வந்தால் இளம் உள்ளங்கள் விடுமா ? இரண்டு கல்லூரி  மாணவிகள் அந்தப் படிகளில் குதித்துக் குதித்து, மாறி மாறி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கும் மேல் மாடிக்குச் சென்றால் பெரிய T V Screen டெலிவிஷன் ஸ்க்ரீன். அதற்கு முன்னால் 4 மரப்படிகள் ; அதில் ஏறி நின்றால் அங்கேயுள்ள சின்ன டெலிவிஷன் திரையில் சூதாட்டத்தில் பயன்படுத்தும் (Dice) பகடைக் காய்கள் இருக்கும். அதைக் கையால் பிடிப்பது போல (திரையிலேயே நம் கைகள் தெரியும்)  பாவனை செய்து அதை வீசி எரிய வேண்டும். உடனே அது உருண்டு ஓடுவதைக் காட்டும் பெரிய திரை அதை சங்கீத நோட்டுகளாக மாற்றி இசைக்கும். நாலு சிறுவர் சிறுமியர் சேர்ந்து செய்யும் போது  இனிமையான ஒலிகள் கிளம்பும் . இப்படி நாமும் இன்டர் ஆக்டிவ் Inter Active Musical Museum சங்கீத மியூசியம் அமைக்க வேண்டும் .

அடுத்த மாடிக்குச் சென்றால் ஒரு கீ போர்டும் Key Board  ஏ , பி சி டி ………….. போன்ற எழுத்துக்களும் இருக்கும். மனம் போன படி அவைகளை அமுத்தி (வாசித்து ) நிறுத்திய அடுத்த நிமிடத்தில் திரையில் நீங்கள்  Compose கம்போஸ் செய்த இசை ஒலிக்கும் . அதாவது ஒரு நிமிடத்தில் நீங்கள் மொசார்ட் அல்லது பீத்தோவன் ஆகிவிடுவீர்கள்.

அதற்கும் மேல் மாடிக்குச்  செனறால் ஒரு இருட்டு அறையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அம்மாக்கள் , அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுடன் படுத்து மேலே தெரியும் திரையில் உள்ள பிரபஞ்ச இசையைக் (Music of the Universe) கேட்கலாம். நாஸா NASA முதலிய பெரிய விண்வெளி ஆராய்ச்சி சாலைகளில் பணிபுரிவோர் இப்போதும் பிரபஞ்சத்தின் ஒரு கோடியிலிருந்து ஒலிக்கும் அபூர்வ இசையைக் கேட்டு வியப்புறுகின்றனர். இதைக் காட்டும் வகையில் மேல் திரையில் கோலங்கள் போட்டது போல வண்ண வண்ண வரிகள் வரும்போது பிரபஞ்ச இசையைக் கேட்கலாம்.

இன்னொரு அடுக்கிற்கு ஏறிச் சென்றால் நீங்களே Conductor கண்டக்டர் ஆகலாம். வெள்ளைக்கார ஆர்கெஸ்டராவைப் பார்ப்போருக்கு கண்டக்டர் பற்றித் தெரியும். சங்கீத மாஸ்டர் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண் டு  மேலே, கீழே  என்று ஆட்டுவார். அதைப் பார்த்துக்கொண்டு அவரவர் இசைக்கருவியை இயக்குவார்கள் ; அதைப் போல ஒரு பெரிய திரை முன்னால் நின்றுகொண்டு நீங்களும் ஒரு குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஆபராவை நடத்தலாம். உங்கள் குச்சியின் அசைவுக்கு ஏற்ப திரையில் பெரிய ஆபரா ஒலி கிளம்பும் .

எனக்கு அந்த அளவுக்கு சமங்கீத அறிவு கிடையாது. ஆகையால் அனைத்தையும் வேடிக்கை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்களைச் சொல்லி முடிக்கிறேன்

1. ஒரு இருட்டு அறையில் ஆறு இசை மேதைகளின் ஹோலோ கிராம் Hologram Images வைத்துள்ளனர். அவை இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் மட்டும் ஒளி இருக்கும். அவை சுழன்றுகொண்டே இருக்கும். அவைகளைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.

2.மற்றோர் விஷயம் – ஒவ்வொரு இசை மேதையின் வரலாற்றையும் ஆண்டு வாரியாக (Time line) ஒரு போர்டு காட்டும். அதாவது அவர்கள் வாழ்க்கையில்  முக்கியமான ஆண்டுகளில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு போர்டில் பொறித்து வைத்துள்ள்ளனர் இவ்வாறு ஆறு கலைஞர்களின் வாழ்க்கையும் கிடைக்கும்.

இது தவிர அவர்கள் வாழ்க்கை பற்றிய பெரிய சித்திரங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.

நாமும் ஏன் சங்கீத முமூர்த்திகளான தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் , சாமா சாத்திரிகளுக்குச் செய்யக்கூடாது? அவர்களோடு தமிழ் இசை மன்னர்களையும் கனக தாசர், புரந்தரதாசர் , நாராயண தீர்த்தர், சதாசிவ பிரம்மேந்திரர் , அன்னமாச்சார்யார் ஆகியோரையும் சேர்த்து  ஊருக்கு ஊர் மியூசியம் — இன்டெர் ஆக்டிவ் மியூசியம்– அமைக்கலாமே ! இப்படி இந்து மதத்துக்கும் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் இன்டர் ஆக்டிவ் மியூசியம் (Inter Active Museum for Hinduism)  அமைக்கலாமே! யாரிடமாவது பணம் இருந்தால் சொல்லுங்கள். நான் இலவச ஆலோசகராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.

நிர்வாண ஓவியங்கள் (Nude, Semi Nude Paintings) பற்றி  அடுத்த கட்டுரையில் காண்போம்.

TO BE CONTINUED…………………………………….

tags —-.வியன்னா, இசை, ஹோலோக்ராம் , மேதைகள், மியூசிக், மியூஸியம் 

விநோத விடு(டி) கவிப் பொக்கிஷம்–Part 3 (Post No.11,397)


WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,397

Date uploaded in London – 30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Written By B.Kannan, New Delhi

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எனது வணக்கம் பல.

எந்த மொழி இலக்கியத்திலும் விடுகதைகளுக்குப் பஞ்சமில்லை. நம் முன்னோர்களி டமிருந்து இவற்றைக் கேட்டிருக்கலாம். அரசவையை அலங்கரித்தக் கவிஞர்கள் பல ரும் அவையோரை மகிழ்விக்க இவற்றைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில், ஓரடி, ஈரடி,குறளடி,நாலடி என 8 அடிகள் வரை இருக்கும் வெண்பா விடுகதைகள் உள்ளன.   விவேக விளக்க விநோத விடு(விடி)கதைப் பொக்கிஷம் என்ற அரிய நூல், (இப்போது அச்சு வடிவில் கிடைப்பதில்லை), முதலில் 1898-ல் தஞ்சை சரஸ்வதிமகால் வெளியீ டாக வந்து பின்,(1933)-ல் அதன் திருத்தியப் பதிப்பு வெளிவந்தது. சுமார் 122 விடுகதை வெண்பாக்கள் (மூலம் மட்டும்) கொண்டது.விடை கண்டுபிடிக்க ஏதுவாக கவிஞர் அங்கெங்கே புராண நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நம்மைத் துப்புதுலக்க வைக்கும் எளிய வழியைப் புலப்படுத்துகிறார். இதன் பொருளுரை இல்லை என்று அறிகிறோம். இதைத் தமிழ் அன்பர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்   

இதிலிருந்து 7 வெண்பாக்கள் கட்டுரை எண் 11303/28-9-22, மற்றும் வரிசை எண் 11306/ 29-9-22-ல் வெளியாகியுள்ளன. ஏனையச் செய்யுட்களைத் தொடர்ந்து விளக்க முயற் சிக்கிறேன்..

பொருள் விளக்கத்தில் தவறிருந்தால் திருத்திக் கொள்ளச் சித்தமாய் இருக்கிறேன். எடுத்துக் காட்டி உதவுங்கள். 

அடுத்த விடுகதைப் பாடல்களைப் பார்ப்போம்……

வருணன்னிட்ட கடலதனை வற்றச்செய்த

      மாதவன்வாழ் திருமதுரா புரிநன்னாட்டில்

இருபுறமுந் தையலுடன் எருதி லேறி

      இச்சையாய்ப் படைத்ததெலாம் ஏற்றுக்கொண்டு

பரிவுடனே நடமாடித் திரிதலைந்து

      பலர்பாலுந் தையலரை பாரில்விட்டுப்

பிரியமுள்ளத் தாசருக்குத் தாசராகும்

      பெருமாளு மல்லவிதப் பேசுவீரே!

பொருள்: மதுரையின் மேல் வருணன் ஏவிய ஆழ்கடலை வற்றிப் போகுமாறு மகேசன் செய்தருளியத் திருவிளையாடல் நடந்த கூடல் மாநகரில் வசிப்போரே, இதற்கு விடை சொல்லுங்களேன். தனது அருமை எருதுவுடன் மனைவியர் புடை சூழ ஊர் சுற்றுவார், விருப்பமுடன் கொடுப்பதைக் கையேந்தி வாங்கிச் சாப்பிடுவார், மாந்தரை மயக்கிப் பின்தொடர வைப்பார், ஆனால் அடியாரை ஆட்கொண்டு அவர் களுக்குத் தாசனாக விளங்கும் கேசவப் பெருமாள் அல்ல, அவர் யார்?

விடை: பரமசிவன்

இங்கு, திருவிளையாடல் புராண நிகழ்வையும், நைமிசாரண்யத்தில் ரிஷிபத்தினிகள் ஈசனைப் பின் தொடர்ந்ததையும் சுட்டிக்காட்டி விடை கண்டறியத் துப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

கூத்திதனக் கேயலைவான் குடியனல்ல

குலமில்லக் குலம்புகுந்தான் மிடியனல்ல

வாத்திதனை யேபழித்தான் வம்பனல்ல

மயில்கோழி தனைவளர்ப்பான் மறவனல்ல

தேத்துந்தேன்  தினையுண்பான் வேடனல்ல

    திகழ்வேடந் தான் தரித்தான் சித்தனல்ல

பூத்தமலர்க் கணையுடையான் தேவிபோன்ற

பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!

பொருள்: ஊரெல்லாம் நடனமாடி அலைவான் குடிகாரனல்ல, தேவன் அவன், ஆண்டியும் கூட ஆனால் பொருளற்ற ஏழையல்ல, குடிமாறி மண்ணுலகத் தையல் குலம் ஏகினான்,அறிவூட்டும் வாத்தியானான் வம்பளக்க அல்ல, கலாபம், கூகை வைத்திருப்பான் வேடுவனல்ல, தேனும், தினைமாவும் மகிழ்வுடன் கலந்துண்பான் வேடனல்ல, ஞானப்பழம் போல் திகழ்வான் சித்தனல்ல, மலர்க்கணைகள் உடைய மன்மதனின் சதி, ரதி போன்றப் பொற்கொடியே, இது யார் எனக் கூறுவாய்!

விடை: சுப்ரமண்யர்/ முருகன்

காவடி எடுப்பதையும், ஆண்டியாய் நிற்பதையும், குலம் மாறி குறமகள் வள்ளியை மணந்ததையும்,அப்பனுக்குச் சுப்பனாய் விளங்கியதையும் எடுத்துக் காட்டுகிறது இவ் வெண்பா.

மிடியன்=பொருளற்றவன், திகழ்=ஒளி, கூத்தி=கூத்தாடி /நடனமாடி, மயில்=கலாபம், கோழி=கூகை

உடல்நீண்ட பாதமுண்டு படிக்கமல்ல

 உடம்பிலே கண்ணுண்டிந் திரனுமல்ல

முடியில்பல கங்குண்டு குல்லாவல்ல

     முழநீளம் நீண்டசீங் குழலுமல்ல

இடைநிறைந்த சபைபாடும் புலவரல்ல

      இச்சையுறும் படிநடக்குந் தாசியல்ல

பெடையன்ன நடைநடக்கும் பெண்ணேகண்ணே

      பெறுமையுறும் இக்கதையைப் பேசுவாயே!

பொருள்: உயரமான உடல் நிற்கப் பாதமுண்டு,ஆனால் எச்சில் உமிழும் பாத்திர மல்ல, மேனியில் கண்களுண்டு இந்திரன் அல்ல, சிரசில் பல வரம்புகளுடன் நாடாக்கள் தொங்கும் குல்லாவல்ல, முழம் நீள முரளியுமல்ல, அவை நிரம்பிய சபையில் பாடும் புலவர் அல்ல,முழு இன்பம் தரும் ஆனால் கணிகையல்ல, பெட்டைக்கோழி போல் உல்லாச நடை பயிலும் அணங்கே, இதன் பெயர் என்ன?

விடை: நாதஸ்வரம்

படிக்கம்=எச்சில் உமிழும் கலம், கங்கு=வரிசை,வரம்பு, கரை, சீவாளியுடன் தொங்கும் கயிறு, சீங்குழல்=புல்லாங்குழல் பெடை=பெண்கோழி

வாசல்வழி போகாமற் பிறகேகூடி

வருவாரும் போவாரும் நிரம்பவுண்டும்

காசலையாம் அன்னமுண்டும் தண்ணீருண்டும்

     கையாடக் காலாடும் கியானஞ்சேரும்

ராசிபமோ பின்னாலே தனமுஞ்சேரும்

     ராஜர்கொலு வினிலொருத்த நாலேதோன்றும்

தேசுலவுந் தென்கூடற் பதியில் வாழும்

     தெரிவையரே இதன்பயனைச் செப்புவீரே!

பொருள்: விருந்தினருக்குத் ‘தனியாக’ப் பாடி, மயக்கி,நன்றாக உண்ணவைத்து, சீக்கி ரத்தில் வெளியேற விடமாட்டார், ‘சுருதி’ பெற கரணையும், ‘தொப்பி’ சுகம் கிடைக்க காசு கொடுக்காமல் மாவும், நீரும் கேட்பார், இசைத்தல் நயம்பட “குட்டும்” (மூட்டு அடி) படுவார், கை ஆடும் கூடவே காலும் அசையும்,ஞானமும் பெருகும், பின்னால் பணமும் சேரும், ராஜசபையில் கம்பீரமாய் வீற்றிருப்பார், நிலவொளி வீசும் கூடல் நகரில் வசிக்கும் கட்டிளம் பெண்ணே, இதற்கு விடை சொல்லுவாய்!

விடை: மிருதங்கம், மத்தளம்

காசலை=பணம் கொடுக்காமல், கியானம்=ஞானம், அறிவு, வலப்பக்கத் தோலில் கறுமை நிற கரணை/சிட்டம்/சோறு இடப்பெற்றிருக்கும், இடப்பக்கம் ‘தொப்பி’ எனப் படும்.

நம் பாட்டன்-பாட்டிமார்கள் சுவைபட இப்படியும் கூறுவர்-

“கெஞ்சிக்கெஞ்சிக் கேட்டாலும் ‘பக்கம்’ பார்த்துப் பேசமாட்டான்,

கையால் ‘இரண்டு’ போடு போட்டால் மடை திறந்த வெள்ளம் போல்

பாய்ந்து அலறுவான்”

கட்டியடித் தேயகற்றுங் கதிருமல்ல

   கால்மாறிப் பாயவிடும் வாய்க்கா லல்ல

வெட்டிமறித்தே திரும்பும் படையுமல்ல

   விலங்கினத்தின் தோல்சுமக்கும் பொதியுமல்ல

பட்டமுடன் முடிதரிக்கும் வேந்தனல்ல

   பலநாளும் இரும்பையுண்ணும் பசிதீராது

துட்டமதன் போர்ஜெயிக்கும் வடிவினாளே

   சொற்பமல்ல இக்கதையைச் சொல்லுவாயே!

பொருள்: கட்டி அடித்தால் பறக்கும் ஆனால் ‘போரடி’த்தால் நெற்கதிரிலிருந்துப் பிரிந்தோடும் பதர் போலல்ல,கால் மாற்றிப் பாய்ந்தோடும் வரப்பு நீருமல்ல, பகை வரை வென்று திரும்பும் படையுமல்ல, தோல் ஆடையைத் தாங்கும் பொதிசுமக்கும் கழுதையல்ல, ராஜஅணிகலன்கள் போட்டிருக்கும்,ராஜாவல்ல நாள்தோறும்‘இரும்பை’ ருசித்துச் சுவைத்துக் கொண்டிருக்கும், பசி ஆறாது, துஷ்டர்களைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கும், அது யார் சொல்லடி, என் கண்ணே!

விடை: குதிரை

தோல் சுமக்கும்=சேணம், இரும்பு=கடிவாளம்

இதற்கு நம் வீட்டுப் பெரியோர் வாக்கு இப்படி இருக்கும்:

  “மூன்று எழுத்து கொண்டது, தலை போனால் மறைப்பு ஆகும்,

  இடை குறைந்தால் ஊளையிடும், கடை வெட்டுப் பட்டால் துள்ளும்,

  மூன்றும் இணைந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும்!”

மஞ்சள்தனை மெய்யணியும் மடந்தையல்ல

மணம்புரிந்தே காதல்கொளும் மனைவியல்ல

கொஞ்சிபல பேரேந்தும் குழந்தையல்ல

     கொற்றவர்க ளிடத்தமருந் திருவுமல்ல

பிஞ்சகன்மேல் நின்றாடும் பாம்புமல்ல

     பிரியமுடன் சேயருந்துந் தேனுமல்ல

கொஞ்சுகிளி மொழியுமிளம் பருவமாதே

     குணமுண்டா மிக்கதையைக் கூறுவாயே!

பொருள்: உடல் மஞ்சள் பூசியிருக்கும் ஆனால் அதைத் தடவியிருக்கும் பெண்க ளல்ல,வாசம் முகர்ந்து நாடுவர் ஆசையுடன், மனைவியல்ல,பலர் கையெடுத்துக்

கொஞ்சிக் குலாவுவர், குழந்தையல்ல, அரசர்களுடனிருந்து நல்வினைப் பயக்கும்,

மனைவியோ, செல்வமோ அல்ல, சிவனார் தலைமீது வைத்துக் கொள்வதுண்டு, பாம்பு அல்ல, சந்தோஷத்துடன் சிறுவர் இதன் ரசம் குடிப்பதுண்டு,ஆனால் தேன் அல்ல, கிள்ளைமொழி பேசும் பருவப் பெண்ணே, உடலுக்குக் குணமளிக்கும் இக் கதை நாயகன் யார் எனக் கூறுவாய்!

விடை: எலுமிச்சம் பழம்

பிஞ்ஞகன் (பிஞ்சகன்)= பிறவித் தளையை அறுப்பவன், பரமசிவன்

“பிறப்பறுக்கும் (மறுபிறப்பின்றி) பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க….” (திருவாசகம்-

சிவபுராணம்,–மாணிக்கவாசகர்- வாழ்த்துப் பாடல் 6-11 வரிகள் காண்க

கிராமத்துப் பெரியோர் கூற்று, இதோ

 தொட்டால் மணக்கும், குடித்தால் புளிக்கும்

 மஞ்சள் சட்டை மாப்பிள்ளை, திருஷ்டி பரிகாரம்,

 மண மணக்கிறார் வீட்டிலே!

சீருலவுங் கருங்குருவிக் குபதேசித்த 

தேசிகன்வாழ் திருமதுரா புரிநன் னாட்டில்

நீருமவன் பேருரைக்க சத்தங் காணும்

நெய்பால்சர்க் கரையமுது நிறைய நிற்கும்

ஆரும்மகி ழாமல்கலத் தடிசிலுண்டு

     யாவருக்கும் ஆகாதான் அமிர்தச்சென்னி

பேருமொரு லிபிகாணும் எங்குமுண்டு

     பேதமில்லை யிங்கிதனைப் பேசுவீரே!

பொருள்: ஈரமான இடம் எனச் சொன்னாலே அவன் சத்தம் கேட்கும்,

எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் வேண்டப்படாதவனாக இருந்தாலும்

இனிமையாகப் பாட்டிசைக்கும் பாணன், ஓரெழுத்துப் பெயர் கொண்டவனை எங்கும் காணலாம், யார் அனுமதியும் பெறாமல் விருப்பமுடன் நெய், பால், சர்க்கரை, நெய்ச் சோறு விருந்து உண்பான், கருங்குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசித்த மகே சன் உறையும் மதுரையம்பதியில் வாழும் பெண்ணே, அவன் யார் சொல்?

விடை: ஈ

அமிர்தச்சென்னி=இனிமையாகப் பாட்டிசைக்கும் பாணன்.

இங்கேயும் சிவனாரின் ஒரு திருவிளையாடல் சம்பவம் குறிக்கப்படுகிறது.

இதற்குப் பாட்டிமார் விடுகதை இதோ….

 “கால் ஆறு, சிறகு இரண்டு,

  கண் இரண்டும் கடுகு போல,

  முழிக்கிறாயே, இளிச்சவாயா,

  இன்னுமா புரியவில்லை, அட, ஈ ஸ்வரா!

மங்கையர்கள் அதிமோக மாகக்கொள்வர்

வண்ணநிற மாயிருக்கும் பூவுமல்ல

சங்கரனார் பிறப்பதற்குத் தேசமெங்கும்

     தலைவிரித்துத் திரியுமது பேயுமல்ல

பொங்குங்காய் கறிக்குறவாய்ப் பொருந்திவாழும்

     புகழான நன்மையதிற் சிலுருசெய்யும்

திங்கள்முகம் போலிலங்கும் தெரிவையாரே

      திறமாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!

பொருள்: பெண்கள் அதிகமாக மோகம் கொள்ளும் பொருள், பொன்னிறமானது

ஆனால் பூவல்ல, ‘மாகி’யும் போது தேசமெங்கும் தலை விரித்துத் திரியும் குறி சொல்லும் தேவராட்டி அல்ல, வேகும் காய்கறி, சோற்றுப் பானையில் பக்தி, பரவசமுடன் நன்மை பெறக் கட்டுவர், மதிமுகம் கொண்டவளே,பதில் சொல்லுவாய்!

விடை: மஞ்சள் கொத்து, மாகி= மகர சங்கராந்தி

இதை இப்படியும் சொல்லலாம்: மண்ணுக்குள்ளே ஒளிந்திருப்பாள் பொன்னம்மாள்.

மன மகிழ்ச்சியுடன் இப்பதிவை முடிப்போமா?

கிராமத்து மக்கள் தாங்கள் வேலை செய்யும் வயல்-வரப்பு, காடு-கழனிகளின் சுற்று வட்டாரத்தில் கண்டு களிக்கும் இயற்கையின் அதிசயத் தோற்றங்களை விடு(விடி) கதையின் கருப்பொருளாக்கி உடனிருப்போரை மகிழ்விப்பர். மரங்களில் பறவைகள் கூடுகட்டி வாழ்வது இயற்கை. ஆனால் மற்றகூடுகள் போல் குழிவுள்ளப் பாத்திரம்

மாதிரி இல்லாமல் தனித்து வேறுவிதமாய்ச் செங்குத்தாக மரத்தில் தொங்குவது இந் தத் தூக்கணாங்குருவிக் (WEAVER BIRD) கூடு மட்டும்தான். இதை வைத்து ஒரு விடு கதை உள்ளது.

தூத்துக்குடு மாவட்டம் கோவில்பட்டியில் அருள்புரியும் ஈசன் பூவண்ணநாதன் உடனுறை செண்பகவல்லி அம்மன் ‘ஓய்வு’ (!) எடுத்த சமயம் சிரித்து, மகிழ்ந்துப்

மலர் தொடுத்ததாகவும், அது தூக்கணாங்குருவிக் கூடு போன்றுத் தோற்றமளிப்ப தாகவும் அமைக்கப்பட்டுள்ளது இந்த வட்டார விடுகதை. அதைப் பார்ப்போம்….

 “செண்பகவல்லி அம்மனும், பூவண்ணநாதரும் சிரித்து, மகிழ்ந்துத் தொடுத்த மலர்மாலையைச் சிக்கில்லாமல் அவிழ்ப்பவருக்குச் சிக்கந்தா மலை சீதனம்”

பூச்சரமும், பூமாலையும் அக்கூடு மாதிரி தானே இருக்கும்?

சிக்கந்தா-சிக்கந்தர்-மலை= திருப்பரங்குன்றம். 13-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதுரை ஆளுநராக இருந்த ‘இஸ்கந்தர் (சிக்கந்தர்) துல்கர்னைனின் பள்ளிவாசலும்,

நினைவிடமும் இங்கு இருப்பதால் இப்பெயர் வழக்கில் உள்ளது.

“பட்டணத்து அம்மாடி! நான் திருப்பரங்குன்றத்தையே  தர்றேன்னு சொல்றேன்; நீ

என்னமோ சென்னப் பட்டணத்தில் பாதிதான் தருவேன் எங்கிறாயே!” என்று நக்கல் அடிக்கிறது தூத்துக்குடி பெரிசு! இதோ அந்த வேறு ஒன்று அதே குருவிக் கூட்டைப் பற்றி…

 “சின்னப் பெண்ணும், சின்னப் பையனும் சேர்ந்து கட்டின மாலை,

அதைச் சிக்கில்லாமல் அவிழ்ப்பவருக்குச் சென்னப் பட்டணம் பாதி!”

பி.கு.: கொசுறுச் செய்தி

இக்குருவி இனத்தில் ஆண் குருவிதான் இடம் தேர்வு செய்து, பொருட்களைத் திரட்டிக் கூடு கட்டும். ராணி அம்மா திடீர்திடீரென வந்து கள ஆய்வு செய்யும்- வெயிலுக்கு இதமாகவும், குளிருக்குத் தணிப்பாகவும் இருக்குமாறு உள்ளதா என்று! எதிர்பார்ப்பு சரியாய் இருக்குமானால் தன் அலகால் ஆணுக்கு ஒரு ‘ஷொட்டு’ நேர் மாறாக இருந்தால், அலகு, கால் இரண்டாலும் ஒரே மொத்துமொத்தி விரட்டிவிடும். விரக்தியில் ஆண்குருவி தான் கட்டியக் கூட்டைக் கலைத்து விட்டுப் போய்விடும்!

 இப்போது சொல்லுங்கள், பூவண்ணநாதர் ஜெயிப்பாரா, சின்னப் பொண்ணு முந்து வாளா?

 விடுகதைகள் தொடரும்…….

அருணகிரிநாதரும் தமிழும்! – 4 (Post No.11,396)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,396

Date uploaded in London – –    30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 4 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

31) திருத்தணிகை

விரித்து அருணகிரிநாத னுரைத்த தமி ழெனுமாலை

   மிகுத்த பலமுடனோத – மகிழ்வோனே

 பாடல் எண் 299 : வரிக்கலையின் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அருணகிரிநாத என்ற இந்த பக்தன் விரிவாக உரைத்த, தமிழினால் ஆன இந்த திருப்புகழ் மாலையை நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே!

32) திருத்தணிகை

வெடித்தமணர் கழுவேற ஒருத்தி கண வனுமீள

  விளைத்ததொரு தமிழ்பாடு – புலவோனே

 பாடல் எண் 299 : வரிக்கலையின் எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும் ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் சமணமெனும் படுகுழியிலிருந்து உயிர் மீளவும், அற்புதங்களை விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே!

33) காஞ்சீபுரம்

 இணக்கிப்பத் திமைச்செச்சை பதத்தைப்பற் றுகைக்குச் சொற்

 றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் – திரிவேனோ

பாடல் எண் 326 : கடத்தைப் பற்று எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உனது திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ?

 34) காஞ்சீபுரம்

திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்

 திருக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே

பாடல் எண் 327 : கருப்பற்றி பருத்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் விளங்கும், சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே!

35) காஞ்சீபுரம்

காந்தக்கலு மூசியு மேயென

  ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு

    காஞ்சிப்பதி மாநகர் மேவிய – பெருமாளே

பாடல் எண் 351 : வாய்ந்தப்பிடை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணாக்கருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

 வரலாறு : இந்த அடிகளில் குறிப்பிடப்படும் வரலாறு இது:

காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகராக இருந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் கந்தபுராணத்தை இயற்றினார். அந்தப் புராணத்தின் ஏட்டை தினமும் இரவில் முருகனின் திருவடியில் அவர் வைப்பது வழக்கம். மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் காணப்படும். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிக் குறிப்பிடும் ஒன்று என்று கொள்ளலாம்.

 36) திருவானைக்கா

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர

   பந்தச டானன துஷ்டநிக்ரக

     தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய – பரிபாலா

 பாடல் எண் 353 : அஞ்சன வேல்விழி இட்டு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல் இசை நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே

 வரலாறு : இங்கு மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய்த் தோன்றி தமிழைப் பரிபாலித்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

37) திருவானைக்கா

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்

  சோதிவளர் காவைப் – பெருமாளே

பாடல் எண் 356 : ஆரமணிவாரை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே!

 38) திருவானைக்கா

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்

 அனற்கே புனற்கேவ – ரைந்த ஏடிட்(டு)

   டறத்தாயெனப் பேர் படைத்தாய்

பாடல் எண் 358 : உரைக்காரிகை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞானசம்பந்தராகச்) சென்று அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரம்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய்.

 வரலாறு: இங்கு திருஞானசம்பந்தர் அனலிலும் புனலிலும் ஏட்டினை இட்ட வரலாறு சொல்லப்படுகிறது. முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்ற கருத்தைப் பல இடங்களிலும் அருணகிரிநாதர் இப்படி வலியுறுத்திக் கூறுகிறார்.

39) திருவருணை

 இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்

   திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் – தருவாயே

பாடல் எண் 399 : இரவு பகற்பலகாலும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இரவும், பகலும், பல முறையும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக!

 40) திருவருணை

தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்

  கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்

   தகுமாமிட றொலியாரித ழாஞ்சுலை தேன் கனியின் – சுவை சேருந்

பாடல் எண் 427 : தமிழோதிய குயிலோ எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும் படி குரலை உடைய மிக்க செம்மையான தக்கதான சிறந்த கண்டத்து ஒலியை (புள் குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச்சுளை, தேன், பழம் ஆகியவற்றின் சுவை சேர்ந்ததாகும்.

***

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

புத்தக அறிமுகம் – 98

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. காஸினியின் சனி கிரக பயணம்! 

 2. கென்னடி கண்ட கனவு

 3. விண்வெளி வீரர்கள்   

 4. விண்வெளிக் கலம்    

 5. சந்திரனில் மனிதக் குடியிருப்பு   

 6. செவ்வாயில் வயல்வெளிகள் உருவாக்குவோம்   

 7. செவ்வாயில் வீடுகள்! 

 8. கிரகங்களின் ராஜா வியாழன்!    

 9. மர்ம கிரகம் புதனை நோக்கி..

10. வித்தியாசமான வெள்ளி    

11. உயிர் கொடுக்கும் சூரியன்  

12. இலக்கிய மணம் கமழும் யுரேனஸ்!   

13. நெப்ட்யூனை நோக்கிய நீளமான விண்வெளிப்பயணம்!  

14. ஸ்க்ராம் ஜெட்டின் பயணம் 

15. விண்வெளியில் பறக்கலாம் வாங்க!    

16. சூர்ய மண்டலத்தை நினைவில் கொள்ள எளிய உத்தி!  

17. டைடனில் தரை இறங்கிய ஆய்வுக்கலம்    

’18. டீப் இம்பாக்ட்’ திரைப்படம்  

19. சூரியனைச் சுற்றும் வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரொஸெட்டா!  

20. ரஷிய விண்வெளி நிலையம் மிர் 

21. சந்திரனில் சீன டைகோனெட்!    

22. பன்னாட்டு விண்வெளி நிலையம் (1)   

23. பன்னாட்டு விண்வெளி நிலையம் (2)   

24. விண்ணில் சுற்றும் உளவுக் கண்கள்   

25. விண்வெளியில் சீன ஆதிக்கம்    

26. சாட்டிலைட் புரட்சி    

27. வானிலிருந்தே உதவிகள்!   

28. 60 நாட்களில் செவ்வாய் சென்று திரும்பலாம்!

29. ஸ்டார் ட்ரெக் பயணம் சத்தியமா?

30. சொல்லித் தெரிவது மன்மதக்கலை!    

31. வானமெங்கும் வைரமும், தங்கமும்!   

32. வாடகைக்குக் கிடைக்கும் சாட்டிலைட் 

33. விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா?   

34. புதிய சோதனை நடத்திய விண்வெளி வீரர்  

35. டெலிபதியும் டெக்கில்பதியும்!

36. விண்வெளி அறிவியல் ஏற்றம் தந்த ஸ்டார் வார்ஸ்!   

37. புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் வார்ஸ்    

38. விண்வெளியில் எத்தனை பரிமாணங்கள்!    

39. விண்வெளியில் டீப் இம்பாக்ட் மோதல்!

40. டிஸ்கவரி சாதனை    

41. கொலம்பியா விபத்து  

42. கொலம்பியாவின் சோதனையும் டிஸ்கவரியின் சாதனையும்! 

43. கல்பனா சாவ்லாவும் ஜலீன் காலின்ஸும்   

44. நாஸாவின் கவலை தீர்த்த டிஸ்கவரி!  

45. விண்வெளிக்கொடி

46. பரபரப்பூட்டும் பத்தாவது கிரகம்   

47. சந்திரனில் குடியேறி பூமியைக் காப்போம்   

48. விடாதே பிடி, விண்கல்லை!

49. மாக்னிபிஷண்ட் டெஸொலேஷன்

*

இந்த நூலுக்கு எனது நண்பரும் மிகப் பெரிய விஞ்ஞானியுமான திரு வி. தேசிகன் அவர்கள் வழங்கிய அணிந்துரை :

நான் டி ஆர் டி ஓ-விலிருந்து (DRDO) ஓய்வு பெற்ற விஞ்ஞானி. மதுரையில் 1990ஆம் ஆண்டு சுந்தரம் இண்டஸ்ட்ரீஸில் (டிவிஎஸ் நிறுவனம்) ஒரு பெரிய இண்ஸ்ட்ருமென்டேஷன் வேன் எனப்படும் அதி நவீன சாதனங்களைக் கொண்டுள்ள வாகனம் ஒன்றைக் கட்டும் போது முதன்முதலாக திரு நாகராஜனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது திரு நாகராஜன் அங்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக (Research and Development Manager) வாகனக் கட்டுமானப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். குதூகலமான காலங்களை இருவரும் சேர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கொண்டிருந்தோம். வேலக்கு இடையே இருக்கும் ஓய்வு நேரங்களில், நாகராஜனைப் பற்றிய மறு பக்கத்தை நான் அறிய நேர்ந்தது. தன்னுடைய எழுத்தாற்றலினாலும் தனித்துவம் வாய்ந்த சிந்தனையாலும், தொடர்ந்து எதையும் கற்க விரும்பும் ஞான தாகத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மிக்க எளிமையாலும் அவர் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து விண்வெளியில் மனித சாதனைகள் என்ற புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து என்னை ஒரு அணிந்துரை எழுதுமாறு வேண்டிக் கொண்டார்.வெவ்வேறு உணர்ச்சிகளின் கலவையாக அது எனக்கு அமைந்தது – சாதனை புரிய வேண்டும் என்ற மகத்தான உற்சாகத்துடன் விளங்கிய அந்த நாட்களின் விஞ்ஞானிகள், வானவியல் விஞ்ஞானிகள், விண்வெளி வீர்ர்கள், பொறியியல் வல்லுநர்களை நான் போற்றி வியந்ததும் என்னை அவர் முன்னுரை எழுதத் அணுகியதும் என்னை எப்படி பல்வேறு விஷயங்களைக் கொண்ட ஒரு பெரிய நூலுக்கு ஒரு சிறிய முன்னுரை எழுத முடியும் என்று என்னைக் கவலை கொள்ளச் செய்தது.

 இந்த நூலில் உள்ள பொருளடக்கத்திற்கு வரும் முன்னர் மனிதனிடம் இதுவரை தெரிந்து கொள்ளாத எல்லைகளை அறிந்து கொள்ளத் தொன்று தொட்டு இருந்து வரும் தூண்டுதலைப் பற்றி உங்களுக்கு ஒரு  உடனடியாகப் புரிந்து கொள்ளும் சுருக்கம் ஒன்றைத் தர விழைகிறேன்.

மனிதர்கள் தமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அறிந்து கொண்டு அதைக் காண விழைய ஒரு பெரும் தூண்டுதல் உணர்வைக் கொண்டவர்கள்.

 உணவு, நீர், உறைவிடம் ஆகியவற்றிற்காக குகையில் வாழ்ந்த மனிதன் நாடெங்கும் மலையெங்கும் சுற்றி அலைந்தான்.

பின்னர் மனிதன் படகுகளையும் கப்பல்களையும் கட்டக் கற்றுக் கொண்டான். முன் பின் தெரியாத இடங்களுக்குப் பயணித்து கடலை அளந்தான். ரயில் பாதைகள், நீராவிக் கப்பல்கள் அதன் பின்னர் சாலையில் செல்லும் வாகன ங்கள் ஆகியவை மனிதனின் பயணத்தைச் சுலபமாக்கின. 1901இல் ஆரம்பித்த விமானப் பயணம் கடைசி முன்னேற்றத்தையும் தந்தது.

 60 ஆண்டுகளுக்குள்ளாகவே பயணிகள் செல்லும் கப்பல் கடந்த கால கலைப்படைப்பாக ஆகி விட்டது.விமானப் பயணமோ பூமியின் மேலிருந்து பூமிப் பரப்பைப் பார்த்து வரைபடங்களை அமைக்க வழி வகுத்தது.

நிலத்தையும் கடலையும் அளந்த பின்னர், வானத்தின் பக்கம் மனிதனின் கவனம் திரும்பியது. விண்ணோ எல்லையற்றது. அளக்கமுடியாதது.

டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அறிவியலில் பழைய காலத்திலிருந்து இருந்து வரும் ஒன்றான வானவியல் 17ஆம் நூற்றாண்டில் பெரும் முன்னேற்றத்தை அடைந்து முதிர்ந்தது.

20 ஆம் நூற்றாண்டில், தொழில் நிபுணத்துவம் உடையதாக ஆன வானவியல்  பார்த்து ஆராயும் ஒன்றாகவும் கொள்கை ரீதியான ஒன்றாகவும் இரு கிளைகளாகப் பிரிந்தது. பார்த்து ஆராயும் ஆப்ஸர்வேஷனல் அஸ்ட்ரானமி வானிலுள்ள பொருள்களைப் பார்த்து தரவுகளைக் கொள்வதில் கவனம் செய்தது. அந்த்த் தரவுகள் பின்னர் கொள்கை ரீதியான கிளைகளில் இயற்பியலின் அடிப்படை கொள்கைகளைப் பயன்படுத்து பகுத்துப் பார்க்கப்பட்டன.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய மிகப் பெரிய விஞ்ஞான கொடைகளுக்குப் பின்னர் விண்வெளி பற்றிய அறிவியல்ரீதியிலான அறிவு வெகு வேகமாக வளர்ந்தது. ( காற்றில்லா வெற்றிடத்தில் ஒளியின் வேகம் பார்ப்பவரின் நகர்தலின் பாதிப்பிற்கு உள்ளாகாமல் தனித்த ஒரு நிலை எண்ணாகவே இருக்கும் என்றது அவரின் சிறப்பு ஒப்புமைத் தத்துவம்)

விண்வெளி பற்றிய அறிவு வளர்ந்த பின்னர், விண்வெளியில் பயணிக்க இப்போது மனிதனுக்கு ஒரு வாகனம் தேவையாக இருந்தது. விண்வெளியை அளக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் முன்னணியில் இருந்தனர்.

இன்று வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் R 7 மற்றும் சோயுஸ் கலங்களை அமைக்க காரணமாக இருந்த செர்ஜி கொரோலியவ் விண்வெளிக்கான ஒரு ஓட்டப்பந்தயத்தை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் பாப் கில்ருத்தை நாஸாவின் தலைவராகக் கொண்டு விண்வெளி ஆய்வில் முன்னணிக்கு வந்தனர்.  கில்ருத் மனிதனால் இயக்கப்பட்ட 25 விண்கலப் பயணங்களுக்கு பாதை வகுத்து இயக்கினார். ஜான் எப்.கென்னடிக்கு அவர் தான் சந்திரனை அடைவதற்கான துணிச்சலான முடிவை எடுக்க ஆலோசனை தெரிவித்தார்.

“விண்வெளியில் மனித சாதனைகள்” நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய எல்லாவற்றையும் கலந்து தரும் ஒன்று.

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேற்றத்திற்கான ஆர்வமூட்டும் சாத்தியக்கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம்.

இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூட த் தருகிறது.

  இறுதியாக வாசகர்களுக்கு எனது  எச்சரிக்கை ஒன்றும் உண்டு: இந்த நூலானது வெறும் பொழுதுபோக்குக்காகப் படித்து முடிக்கக்கூடிய ஒரு நூல் அல்ல.

சர் பிரான்ஸிஸ் பேகன் புத்தக வகைகளைப் பற்றி மிகவும் பொருத்தமாகத் தான் இப்படிச் சொன்னார்:

“சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால் 

குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்”

இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது/

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

வணக்கம்.

பங்களூரு                                                   V. தேசிகன்

12-3-2012                                                                          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

A wonderful collection of articles published as a series in Bhagya Weekly Magazine, took the form as a book! Besides being an encyclopedia about Space, this book explains how the development of science and technology helped in exploration of space! This work explain many unknown facts which you may never heard in a well presented manner about such as the voyage of man to The Moon, the qualities required to become an astronaut, the training needed, the structure of a space ship, man’s plan to step in asteroids and finally man’s initiatives to set habitats in the land of The Moon and The Mars.

‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடர் நூலாகப் பூத்திருக்கிறது! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு, அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணை அளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விரிவாக விளக்கும் நூல்! சந்திரனுக்கு மனிதன் மேற்கொண்ட பயணம், விண்வெளி வீரராவதற்கான தகுதிகள், பயிற்சிகள், விண்கல அமைப்பு, விண்கற்களில் இறங்க மனிதனின் திட்டம், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றில் மனிதன் கால் பதித்துக் குடியிருப்புகள் அமைக்க எடுத்து வரும் முயற்சிகள் போன்ற, இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத அதிசயமான விண்வெளித் தகவல்களைச் சுவைபட விளக்கும் இந்த நூல் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 1’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

* 

November 2022 Calendar with Kanchi Shankaracharya’s Golden Sayings (Post.11,395)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,395

Date uploaded in London – 29 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Kanchi Shankaracharya (1894-1994), popularly known as Paramaachaaryaa, stayed in Madras (Chennai) for over one year and lectured everyday.

Festival days – 8-Guru Nanak Jayanti, Chandra Graahana; 14- Children’s Day; 21, 28 Sangaabishekam to Lord Siva (Chanka= Conch shell); 23- Sri Sathya Sai Baba Birth day.

Full moon day/Purnima- 8; Full moon day/Amavasyai-  New Moon-23; Ekadasi Fasting Days- 4 and 19

Auspicious Days- 11,14, 20,

 November 1 Tuesday

We are incompetent to express in words the wonders of God. So, the praise of God will never become an exaggeration. A Guru also stands in the same position.

Xxx

November 2 Wednesday

Those who lived in the time of the great saints like Manickavavasagar and Andal were really blessed.

xxx

November 3 Thursday

According to tradition , our Bhaaratadesa was originally divided into 56 kingdoms. The Bhagavata purana speaks of the Saptadveepas and of the Vedas having been current in all of them.

Xxx

November 4 Friday

It is your duty to treasure Vedic mantras in your heart and observe the prescribed anushtanas in a spirit of dedication to God. This will ensure individual and national prosperity and happiness, and also peace and goodwill on earth.

Xxx

November 5 Saturday

Veda is the basis of all knowledge. Vedic knowledge will ensure that people adhere to the path of righteousness.

Xxxx

November 6 Sunday

The unique feature of India is that she has given an asylum to all the religions of the world. India has a place even for those who deny God.

Xxx

November 7 Monday 

It has been enjoyed that a Sanyasi/ascetic should not remain in one place for any length of time.  He has to be a wandering mendicant (parivraajaka)

Xxx

November 8 Tuesday

The founders of all religions have a common purpose, namely, to help the souls of the followers to find an eternal bliss and rest, i.e. salvation.

Xxx

November 9 Wednesday

I will suggest that , after having written a book on any saastra, its author should go to a scholar upholding a different view, obtain his criticisms and include them in the publication. That way, a healthy cooperative enterprise in scholarship will grow.

Xxx

November 10 Thursday

There is no Agni for the Sanyaasa aasrama. That is why they do not perform any Homa (sacrifice in fire).

Xxx

November 11 Friday

The best propagandist for Hindu religion is the Hindu who lives by its tenets. It is on account of such great men that our religion survives even today.

xxx

November 12 Saturday

Another significant feature of our religion that it has no  name, but at one time no other religion existed. When other religions came into existence, they were called by the names of their founders, to distinguish from the prevailing Vedic religion.

Xxx

November 13 Sunday

The maximum amount of right and ennobling pleasures will be vouchsafed to us if we surrender ourselves at the feet of God.

Xxxxx

November 14 Monday 

Only the best and the purest should be offered to God and nothing should be enjoyed which is not offered to god.

Xxx

November 15 Tuesday

We have the rare privilege of being born as human beings and we desire to live happily in the world. Pain and sorrow, trials and tribulations, these provide the incentive to think about the course of our lives, about the causes of our griefs and the way to overcome them

Xxx

November 16 Wednesday

The strength of a religion does not lie in the numbers of those who practise it; but in the conduct of those who practise it.

Xxx

November 17 Thursday

The special feature of the Hindu religion is that there is no sanction in the sastras for proselytization. But other religions believe in conversion.

Xxx

November 18 Friday

There is evidence to show that the Vedic religion is the most ancient religion and was once current in most parts of the world.

Xxx

November 19 Saturday

Ours is a purely religion of the individual . When an individual perfects himself, his example will be emulated by others.

Xxx

November 20 Sunday

The true prayer is not for getting relief from suffering , but for keeping out evil thought from the mind and for making good thoughts always dwell there.

Xxx

November 21 Monday 

If we purify ourselves through prayer, meditation, and other forms of discipline, enjoyed by our religion, Love, that is God, will dwell in our hearts and direct our deeds. That will give us the enlightenment to realise the oneness of the Seer and Seen.

Xxx

November 22 Tuesday

Living examples of such realised souls will help our religion to withstand all vicissitudes and promote universal welfare.

Xxx

November 23 Wednesday

Spiritual discipline is as rigorous as military discipline. If we really want to fulfil the purpose of our life, we must subject our lives to that discipline.

Xxx

November 24 Thursday

Who is Sri Sankara? He is lokasankarah; he makes for the welfare of the whole world. He is Siva Himself. Sivam means auspiciousness, what is propitious.

Xxx

November 25 Friday

Maunam is the attribute of a Muni. But the ordinary meaning of this word is silence. Our dharma sastras have prescribed the observance of Maunam on various occasions.

Xxx

November 26 Saturday

Maunam is an important method of worshipping God. Maunam in this context does not mean merely silence.  It is also the process of keeping the mind free from all thoughts.

Xxx

November 27 Sunday

The Reformists condemn acharas without caring to understand their significance, purpose and effect. It is like condemning a language even before learning it.

Xxx

November 28 Monday 

All the religions guide us towards salvation, the ultimate goal of life. In fundamentals like, devotion to God, speaking the truth and helping others, there is no difference between one and religion and another.

Xxx

November 29 Tuesday

We believe if a person faithfully follows the teachings of his religion, he will obtain salvation, which is the goal pointed out by all religions

Xxx

November 30 Wednesday

And so, in the craze for a false equality, let us not obliterate every difference. Do not twist the scriptures to suit your views. Understand it properly and act accordingly.

–subham—

Acharya’s Call

These quotations are taken from “Acharya’s Call”, Part Two containing his Madras Lectures between 1957 and 1959; B G Paul Company, 1968

xxx

WHAT I HAVE LEARNT FROM MY FATHER V.SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI? HE WAS A GREAT COLLECTOR OF BOOKS. HE LEFT US NOTHING BUT 6000 BOOKS. NOW WE GET DEIVATHIN KURAL IN 7 VOLUMES IN TAMIL WITH KANCHI PARAMACHARYA’S (1894-1994) LECTURES. WHAT WOULD HAVE HAPPENED IF RA. GANAPATHY DID NOT DO THIS EXCELLENT JOB? NO WORRIES. MY FATHER COLLECTED ALL HIS TALKS PUBLISHED BY B G PAUL COMPANY AND KAMAKOTI PRADHISTANAM. BOTH IN TAMIL AND ENGLISH. WE ALL KNOW KALKI MAGAZINE ALSO PUBLISHED HIS TALKS EVERY WEEK. BUT I HAVE HIS FULL ENGLISH AND TAMIL LECTURES, THANKS TO MY FATHER. HE WAS A GREAT ENTHUSIAST IN PRESERVING BOOKS. LOT OF MONEY WAS SPENT IN BINDING THE BOOKS AND PUTTING WRAPPERS. HE WOULD SPEND HOURS IN DECORATING THE BOOKS; HE WAS ALSO VERY FOND OF WRITING THE TITLE OF THE BOOKS ON THE WRAPPER AND HIS SIGNATURE IN THE FIRST PAGE. MANY OF THE VOLUMES CONTAIN HIS HIGHLING MARKS ON THE PAGES. THAT SHOWED HE READ EVERY BIT OF IT. HERE IS ONE SUCH VOLUME.

Now I am also putting different coloured covers /wrapper for the books and writing the title.

–Subham–

  Tags- Kanchi, Paramacharya, Quotations, Golden sayings, Acharya’s Call

வியன்னா விஜயம் வெற்றி (Post.11,394)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,394

Date uploaded in London – 29 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

ஐரோப்பாவில் 8 நாடுகளுக்கு இடையே அமைந்த நாடு (Austria) ஆஸ்திரியா. அதன் தலை நகரம் (Vienna)  வியன்னா. மதுரை, காஞ்சிபுரம் போன்ற நகரங்களை வருணிக்கும்போது கோவில் நகரம் என்று அடைமொழி கொடுக்கிறோம். அப்படியானால் வியன்னாவை என்ன சொல்லி அழைக்கலாம்? நான் ‘மியூசியங்களின் நகரம்’ (City of Museums)  என்றே அழைப்பேன். இரண்டாவது அடை மொழி கேட்டல் இசை நகரம் என்றே அழைப்பேன்.மொசார்ட், பீதோவன் ஸ்டராஸ் , ஷுபெர்ட்  போன்ற இசை மேதைகளின் பிறப்பிடம் அல்லது வாழ்விடம் இது.

 எந்த ஊருக்கும் போவதற்கு முன்னர் எதற்காகப் போகிறோம், அங்கு என்ன பார்க்கவேண்டும் என்று முன் கூட்டியே படித்துவிட்டு, பார்க்க வேண்டிய இடங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்காகத் திட்டமிட்டு போக வேண்டும். குடும்பத்தோடு, குறிப்பாக சிறு வயது குழந்தைகளுடன் போகும்போது நாம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்காது. அவர்களுடைய உடல்நலமும் மன நலமுமே முக்கியம். ஆயினும் இந்த ஆஸ்திரிய விஜயம் திட்டமிட்டபடி நடந்ததால் வெற்றி என்றே சொல்லுவேன் . அது எப்படி?

நான் பார்க்க திட்டமிட்ட இடங்கள்:

வியன்னாவின் அரண்மனை , டான்யூப் நதி, ஓவியங்கள் நிறைந்த பெல்வெடெர் மியூசியம், ஹவுஸ் ஆப் ம்யூசிக் எனப்படும் இசை மியூசியம், , ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் கோவிந்தா உணவுவிடுதி.

இவை அனைத்தும் இனிதே நடந்தேறியது. ஆயினும் மொசார்ட் மியூசியம், பேரக்குழந்தைகளுக்காக டெக்னலாலஜி மியூசியம் போக எண்ணினேன்; இயலவில்லை.ஐந்துக்கு நாலு பழுது இல்லை என்று திருப்தி அடைந்தேன்.

xxx

சில அறிவுரைகள் 

ஷோன் பிரன் (Schonbrunn palace) அரண்மனைக்குச் சென்றோம். ஆயினும் ஐரோப்பா முழுதும் எல்லா அரண்மனைகளும் ஒரே மாதிரிதான் உள்ளன. 1990ல் பாரிசுக்கு அணித்தேயுள்ள வெர்சாய் அரண்மனைக்குச் சென்றேன். அண்மையில் ஸ்பெயின் நாட்டின் தலை நகரான மாட்ரிட்டில் உள்ள அரண்மனைக்குச் சென்றேன்  இடையில் சுவீடன் நாட்டின் தலை நகரான ஸ்டாக்ஹோமில் உள்ள அரசாங்க மியூசியத்துக்குச் சென்றேன் ஒவ்வொன்றுக்கும் நுழைவுக் கட்டணமோ ‘யானை விலை , குதிரை விலை’. ஒரே ஒரு மியூசியத்தைப் பார்த்தாலே போதும்.

அங்கே என்ன இருக்கும்? அரசர்கள், அரசிகள் உபயோகித்த படுக்கை, நாற்காலிகள், சோபாக்கள், ஆயுதங்கள், இசைக் கருவிகள், பிரம்மாண்டமான கண்ணாடிகள், பளிங்குச் சிலைகள், அவர்கள் உபயோகித்த பெரிய டைனிங் டேபிள், வெள்ளி, தங்கக் கத்திகள் கிண்ணங்கள், சில இட ங்களில் காலணிகள், சுருட்டுகள் , கிரீடங்கள் மஹாராணியின் அலங்கார, அறைகள் , அலங்காரப் பொருட்கள், விதவிதமான கடிகாரங்கள் (தங்கம் அல்லது தங்க முலாம் பூசப்பட்டவை) முதலியன எல்லா இடங்களிலும் இருக்கும். அவை எல்லாம் இந்திய போல 2000 ஆண்டுப் பழமையானதும் அல்ல. அதிகம் சொல்லப் போனால் 300, 400ஆண்டுப் பழமை உடையானதான் ; இதற்குப் போய் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பது நியாயமில்லை. ஆகையால் ஒரு ஐரோப்பிய  மியூசியம் பார்த்தாலே போதும்; காஸை செலவழிக்காதீர்கள்.மேலும்  படிக்கட்டுக்கு மேலே போட்டோ எடுக்கவும் அனுமதி இல்லை. அவர்கள் விற்பனை செய்யும் படங்களையே வாங்க வேண்டும்..

 அவர்களைப் பொறுத்தவரை கட்டணம் நியாயமானதே; ஒவ்வொரு அறையிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைக் காவல் காப்பதற்கு ஊழியர்கள், அவர்களை மேற்பார்வை செய்ய அதிகாரிகள், கழிப்பறை, ஓய்வு அறை , உணவு விடுதி வசதிகள் என்று அவர்கள் ஏராளமாக பொருட் செலவு செய்கிறார்கள். ஆகவே டிக்கெட் கட்டணம் நியாயமானதே. நம்மைப் பொறுத்த வரையில் ஒரு அரண்மமனையைப் பார்த்தால் போதும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் வரலாற்றை ஆராய்வோருக்கு அந்தந்த மியூசியம் அவசியம்.

எனக்குப் பிடித்ததும் பிடிக்காததும்

ஆஸ்திரியா முழுதும் ஜெர்மன் மொழிதான் உபயோகத்தில் உள்ளது; மருந்துக்கும் ஆங்கிலம் கிடையாது. ரயில் டிராம்களில் சொல்லப்படும் அறிவிப்புகளும் ஜெர்மன் மொழியில்தான். இதுதான் எனக்குப் பிடிக்காத விஷயம். மியூசியங்களில் மட்டும் துண்டுப் பிரசுரங்களில் கொஞ்சம் ஆங்கிலத்தைக் காணலாம்.

பிடித்த விஷயம் என்னவென்றால் டிராம் (Tram) மற்றும் ரயில் போக்குவரத்து. சொன்ன நேரத்திற்கு வண்டிகள் வரும்; அவற்றை போர்டில் தெளிவாகவும் காட்டுகின்றனர். நான் வசிக்கும் லண்டன் இதற்கு நேர் மாறானது. அடுத்த மெட்ரோ ரயில் 3 நிமிடம் என்று எழுதியிருக்கும். ஒரு நிமிடம் காட்டும்போது அது மாறாமல் நின்றுவிடும். ரயில் 6, 7 நிமிடங்களுப் பின்னரே வரும். உண்மையில் போர்ட் என்ன காட்ட வேண்டும்? மைனஸ் 1, மைனஸ் 2 என்றுகாட்டவேண்டும். அப்படிச் செய்வது இல்லை. சுவிஸர்லாந்திலோ, ஆஸ்திரியாவிலோ சொன்ன நேரத்துக்கு டிராம் , ரயில்வண்டிகள் உங்கள் முன்னே நிற்கும். அந்த வகையில் வியன்னா பாராட்டுக்குரியதே.

நாங்கள் எல்லோரும் 72 மணி நேர டிக்கெட் வாங்கி 3 நாட்களுக்கு முழுதும் உபயோகித்தோம் அந்த டிக்கெட்டுகளை பஸ் , ரயில், டிராம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

கோவிந்தா ரெஸ்டாரண்ட்

ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஐரோப்பா முழுதும் கோவிந்தா(Govinda)   ரெஸ்டா ரண்ட் நடத்துகின்றனர். நான் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் ஹரே கிருஷ்ணா உணவு வீடுதிக்குச் சென்றுள்ளேன்; வியன்னாவில் உள்ள உணவு விடுதி மிகவும் சிறியது ; ஒரு கடையில் 10, 15 பேர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் உள்ளது; சுற்றிலும்  விற்பனைக்கான கலைப் பொருட்கள் இருக்கின்றன. ஆயினும் சாத்வீகமான உணவு.

 இந்த இடத்தில் வேகன் VEGAN FOOD உணவு விடுதிகள் பற்றி ஒரு எச்சரிக்கை தர விரும்புகிறேன்.. பால், தயிர், வெண்ணெய், சீஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது இந்துக்கள் கொள்கை அல்ல . வேத காலம் முதல் இன்று வரை கடவுளரும் சந்யாசிகளும் பயன்படுத்துவது பால் பொருட்களே. மேலும் மாட்ரிட்  Madrid நகரில் மீன், நண்டு ஆகிய உணவுகளையும் வேகன் ரெஸ்டாரண்ட் விற்கிறது ஆகையால் வெஜிட்டேரியன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.வியன்னா நகரில் SCHONBRUNN PALACE அரண்மனை, டவுன்ஹால், நகர கடைத்தெரு, பல இத்தாலிய உணவு விடுதிகளுக்குச் சென்றோம். தங்கியிருந்த ஹோட்டல் வாசலுக்கே டிராம் வந்ததால் முக்கால்வாசி அதில்தான் பயணம் செய்த்தோம்.

xxx

மஹாராணியின் அலங்கார, அறைகள் , அலங்காரப் பொருட்கள்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹங்கேரிய அரசு குடும்பத்தில் பிறந்த எலிசபெத்தின் பட்டப்பெயர் (Sisi or Sissi) சிஸ்ஸி . அவள் பேரழகி; கூந்தல் ராணி. தினமும் அவளுடைய நீண்ட முடியைக் கட்டுவதற்கு; பின்னுவதற்கு 3 மணி நேரம் செலவிடுவாளாம். வாரத்துக்கு ஒரு முறை முட்டை மற்றும் மதுபானம் மூலம் தலைமுடியைக் கழுவுவாளாம் அன்று அவருடைய நிகழ்சசிகள் அனைத்தும் ரத்து.! நாங்கள் SCHONBRUNN PALACE அரண்மனைக்குள் நுழைந்தவுடன் சிஸ்ஸியின் நீண்ட கூந்தல் அலங்காரத்தைக் கண்டோம். ஏனைய அனைத்தும் நான் மேலே கொடுத்த பட்டியலில் உள்ள பொருட்களே ! ஆஸ்திரியப் பேரரசர் ஜோசெப் பிரான்ஸை மணந்தாலும் ஆஸ்திரிய நாட்டின் சக்ரவர்த்தினியாகவும் ஹங்கேரியின் மஹாராணியாகவும் வாழ்ந்த சிஸ்ஸி நல்ல வாழ்க்கை பெறவில்லை. ஒரே மகனும் மருமகளும் தற்கொலை செய்து கொண்டனர். அவளோ கொலை செய்யப்பட்டாள் ; ஆயினும் மகன் இறந்த பின்னர் தனிப்பட்ட கப்பலில் ஐரோப்பா முழுதும் சுற்றுப் பயணம் செய்தாள் .

 வியன்னா நகரம் பழைய நகரங்களில் ஒன்று. கட்டிடங்கள் எல்லாம் கருங்கற்களால் கட்டப்பட்டவை போல காட்சி தரும் ;ஆயினும் பெரும்பாலான கட்டிடங்களில் குதிரை வீரன் மற்றும் பழங்கால் சின்னங்கள் இருப்பதால் எவை புதிது அவை பழையன என்பது தெரியவில்லை நாங்கள் நகர மண்டபம், பெரிய சர்ச்சுகள் , அரண்மனை, மியூசியம் வாசல்களில் நின்று புகைப்படங்கள் எடுத்தோம்.

புகழ்மிகு (நிர்வாண )ஓவியங்கள்  நிறைந்த Belvedere Museum பெல்வடேர் மியூசியம் குறித்தும் இசை மியூசியம் (House of Music)  குறித்தும் அடுத்த கட்டுரையில் விளம்புவேன் .

TO BE CONTINUED……………………………………………

–SUBHAM —

  tags- ஆஸ்திரியா, வியன்னா, அரண்மனை, சிஸ்ஸி , சிஸி , மஹாராணி 

அருணகிரிநாதரும் தமிழும்! – 3 (Post No.11,393)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,393

Date uploaded in London – –    29 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 3 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

21) சுவாமிமலை

அருமறை தமிழ்நூல் அடைவே

    தெரிந்து உரைக்கும் புலவோனே

பாடல் எண் 221 : தெருவினில் நடவா எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் புலவோனே

22) சுவாமிமலை


சிலகாவி யத்துறைக ளுணர்வோர் படித்த தமிழ்

  செவியார வைத்தருளு  – முருகோனே

பாடல் எண் 227 : பலகாதல் பெற்றிடவு  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவி குளிர ஏற்றருளும் முருகனே!

23 & 24) திருத்தணிகை

(இரு இடங்களில் தமிழ் எனும் சொல் வருகிறது)

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட

  னிலக்கண இலக்கிய – கவி நாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக

 தலத்தினில் நவிற்றுத – லறியாதே

பாடல் எண் 242 : இருப்பவல் திருப்புகழ்  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்றும் அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும் நால்வகைக் கவிகளையும் உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல்…

25) திருத்தணிகை

   துவலைச் சிமிழ்த்து நிற்பவள் நாணத்

தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்

 சுருதித்த மிழ்க் கவிப் – பெருமாளே


பாடல் எண் 257 : கவடுற்ற   எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே!

26) திருத்தணிகை

தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்

  போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்

 சாற்றுதமிழ்க்குரை ஞாளியை நாள்வரை – தடுமாறி

பாடல் எண் 272 : தாக்கமருக்கொரு   எனத் தொடங்கும் பாடல்

பொருள் : நற்பயனை விடுத்து வீணிலே உழலும் பாவியை (நாத்திகனை), புலவர் போல நடித்துக் கொண்டு அன்போடு உன்னை நினையாமல் சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவனை), இந்த நாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து…

27) திருத்தணிகை

எத்திடார்க் கரிய  முத்தபாத் தமிழ்கொ

 டெத்தினார்க் கெளிய – பெருமாளே

பாடல் எண் 275 : தொக்கறாக் குடில   எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி பாசங்களிலிருந்து நீங்கியவனே. தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாக இருக்கும் பெருமாளே!

28) திருத்தணிகை

சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்

 திருத்தணி மேவும்  – பெருமாளே

பாடல் எண் 284 : பெருக்கவுபாயங் கருத்துடை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிறப்புற்ற ஞானமும் முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!

29) திருத்தணிகை

அமரு மிடனன லெனுமொரு வடிவுடை

  யவனி லுரையவன் முதுதமி ழுடையவ

   னரியொ டயனுல கரியவ னடநவில் – சிவன் வாழ்வே

பாடல் எண் 292 : முகிலு மிரவியு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : (அபிராமி தனது இடது பாகத்தில்) அமரும் படியாக வாய்த்தவனும், நெருப்பு என்னும் ஒப்பற்ற  உருவத்தினன், உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன்,  திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே!

 30) திருத்தணிகை


எத்திடார்க் கரிய  முத்தபாத் தமிழ்கொ

 டெத்தினார்க் கெளிய – பெருமாளே

பாடல் எண் 298 : வட்ட வாள் தன எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி பாசங்களிலிருந்து நீங்கியவனே. தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாக இருக்கும் பெருமாளே!

 ***

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

 புத்தக அறிமுகம் – 97

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. ஆங்கார யானைகளை விரட்டும் தேனீக்களின் ரீங்காரம்!

 2. ரொபாட்டுடன் கல்யாணம்!  

 3. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (1)   

 4. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (2)   

 5. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (3)    1

 6. எதிர்கால அறிவியல் – 1    

 7. எதிர்கால அறிவியல் – 2    

 8. எதிர்கால அறிவியல் – 3    

 9. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 1    

10. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 2    

11. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 3    

12. எண்ணங்களைப் பேச்சாக்கலாம்!  

13. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை? 

14. தேனீக்களின் கற்கும் திறன்! 

15. நம் வாழ்வில் நேனோ தொழில்நுட்பம் செய்யும் புரட்சி -1    

16. நம் வாழ்வில் நேனோ தொழில்நுட்பம் செய்யும் புரட்சி -2    

17. கடவுளின் மொழி

18. எதிர்கால மெஷின் – மனிதன்! – 1 

19. எதிர்கால மெஷின் – மனிதன் – 2 

20. முடிவுரை  

                                *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The greatest achievement of science in this century would be the research about the human brain. The functions of left and right brains and the way they govern the behaviours and activities are clearly explained in this book. It is discovered from the research that the brains are not worked out to their full potential. Methods are easily explained to use all of it. Articles that speak about Future Neural Engines, Alternative fuels and Bio intelligence are included in this book. A must read for everyone.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 4’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

ரொம்ப நாளாக எனக்கொரு (டான்யூப்  நதி) ஆசை! (Post No.11,392)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,392

Date uploaded in London – 28 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பத்து நாடுகள் வழியாகப் பாயும் டான்யூப்  நதியைப்  (Danube River) பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை; அது 25-10-2022ல் நிறைவேறியது. குடும்பத்தோடு ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் (Vienna , Austria ) ஐந்து நாட்கள் தங்கி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம்.. தீபாவளியன்று கங்கா ஸ்னானம் ஆச்சா? என்று கேட்பது சம்பிரதாயம்.அதாவது அன்றைய தினம் அதிகாலையில் எங்கு குளித்தாலும் அது கங்கையில் குளிப்பததற்குச் சமம். அதாவது அன்றைய தினம் கங்கா தேவி எல்லா நீர் நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் . நாங்கள் வியன்னாவில் ஹோட்டல் அறையில் குளித்துவிட்டு திருப்தி அடைந்தோம். வியன்னாவில் குடிநீர் சப்ளை  அருகிலுள்ள மலை ஊற்றிலிருந்து வருகிறதாம். நதியிலிருந்து அல்ல; நிற்க .

டான்யூப் நதி மேல் ஏன் அவ்வளவு காதல் என்று கேட்கிறீர்களா? இயற்கையிலேயே  விஞ்ஞானத்தின் எல்லா துறைகளிலும் , பூகோளம் , சரித்திர பாடங்களிலும் எனக்கு ஒரு ஆசை , ஈடுபாடு உண்டு.அந்தவகையில் ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப் நதியைச் சந்தித்து , ஹலோ  ஹவ் ஆர் யூ ? Hello! How are you?  என்று கேட்க விரும்பினேன். நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் கடைசி கப்பலும் சென்றுவிட்டதால் (Boat ride or Cruise) படகு சவாரி செய்ய இயலவில்லை. ஆயினும் நீல நீரையுடைய நீளமான நதியைக் கண்டேன்; ஆனந்தம் கொண்டேன்.

இரண்டு உலக யுத்தங்களிலும் சம்மந்தப்பட்டது இந்த நதி. ஜெர்மனியில் கருங்காட்டில் (Black Forest)  உற்பத்தியாகி 10 நாடுகளில் பாய்ந்து கருங்கடலில் (Black Sea)  சங்கமம் அடைகிறது. ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நீலம்/Blue என்பதை கருமைக்கும் பயன்படுத்துவோம். நீல குயில் என்போம்; கரு ங்குயில் என்று பாடுவோம்.  நான் பிராமணன் என்ற முறையில் தினமும் தெற்கு திசை நோக்கி நின்று, மூன்று வேளைகளில் யமதர்மனுக்குச் சொல்லும் மந்திரத்திலும் அவனை நீல நிறத்தவனே என்று போற்றுவேன். அவனோ Utter Black அட்டர் பிளாக்.;போகட்டும். கருங்காட்டில் உற்பத்தியாகி கருங்கடலில் கலக்கும் நீல(Blue Danube)   டான்யூப் நதிக்கும் அப்பெயரின் பொருத்தத்தை விளக்க இவ்வளவும் சொன்னேன்.

ஹிட்லர் தோற்கப் போவது தெரிந்தவுடன்  ஜெர்மானியர்கள் தங்கள் கப்பல்களை நதியில் வேண்டுமென்றே மூழ்கடித்தனர். இப்போதும் நீர்மட்டம் குறையும் போது அவைகளைக் காணலாம் .

XXX

நதியின் நீளமும் அணைகளும்

இந்தியாவில் சிந்து , பிரம்மபுத்ரா நதிகளின் நீளம் 2900 கிலோமீட்டர். கங்கை நதியின் நீளம் 2525 கிலோமீட்டர். டான்யூப் ஆற்றின் நீளம் 2850 கிலோமீட்டர். ஏறத்தாழ சிந்து நதி போன்றதே. ஐரோப்பாவின் நீளமான நதி வால்கா (Volga River)  . அதன் நீளம் 3535 கிலோமீட்டர்.

ஜெர்மனியில் உற்பத்தியாகி உடனே ஆஸ்திரியாவுக்குள் நுழைவதால் அதன் தூய்மை கெடாமல் நீல நிறத்திலேயே எங்களுக்குக் காட்சி தந்தது.

இந்த நதி பற்றி நூற்றுக் கணக்கான புஸ்தகங்களும் பல டாகுமெண்டரிகளும் வெளிவந்துள்ளன.இதன் மீதும் இதன் உபநதிகள் மீதும் 700 அணைகள் உள்ளன. ஜெர்மனியில் இருக்கும் நதி மூலத்திலிருந்து அடுத்த வீடான ஆஸ்திரியா வருவதற்குள் ஆயிரம் கிலோ மீட்டருக்குள்  60 பெரிய அணைகள் இருக்கின்றன. பல நாடுகளின் குடி நீர்ப் பிரச்சனையையும் மின்சார பிரச்சனையையும் இந்த ஆற்று நீர் தீர்ப்பதோடு பாசன வசதிக்கும் பயன்படுகிறது. எல்லா வற்றுக்கும் மேலாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கிறது .காரணம்; ஆயிரக் கணக்கான சொகுசு(Cruises )  கப்பல்கள் பல லட்சம் மக்களை ஏற்றிய வண்ணம் இங்கே பவனி வருகின்றன.

மேலும் சில சுவையான விஷயங்களை (Bullet Points) புல்லட் பாயிண்டுகளில் காண்போம்; மைல் கணக்கில் இதன் நீளத்தைச் சொல்லவேண்டுமானால் 1777 மைல்கள் . இது தோன்றும் இடம் ஜெர்மனி ;ஆனால் சங்கமம் ஆகும் இடம் ருமேனியா

இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் பல லட்சம் சதுர மைல் பரப்புள்ள பசுமைக் காடுகளும் சதுப்பு நிலக் காடுகளும் பரவிக் கிடக்கின்றன

பல நாடுகளிலிருந்து வரும் குடியேற்றப் பறவைகள் இந்த நதியின் முகத்துவாரத்தில் உள்ள பிரம்மாண்டமான சதுப்பு நிலக்காடுகளில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த ஆறு செல்லும் 10 நாடுகள் – ஜெர்மனி, ஆஸ்திரியா , ஸ்லோவாகியா , ஹங்கேரி, க்ரோவேஷியா செர்பியா , பல்கேரியா,மால்டோவா, உக்ரைன், ருமேனியா .

மூன்று நாடுகளின் தலை நகரங்களான புடாபெஸ்ட், பெல்கிரேட், வியன்னா ஆகியவை இந்த நதிக் கரையில் அமைந்திருப்பது மற்றொரு  சிறப்பு  .

சொகுசு கப்பல்களோடு மிகப்பெரிய வணிகக் கப்பல்களும் செல்லும் அளவுக்கு ஆழம் உடையது இந்த நதி .

இதன் நீர்வழிப்போக்கு மட்டும்தான் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன என்று எண்ணி விடக்கூடாது. நிறைய கால்நடைப் பாதைகளும் சைக்கிள் பாதைகளும் மக்களை ஈர்க்கின்றன.

கலைஞர்கள் , இதன் கரையில் அமர்ந்து வரைவர்; கிராமியப் பாடகர்களும், புலவர்களும் பாடி மகிழ்வர் . 2000 ஆண்டு கிரேக்க, ரோமானிய  வரலாற்றுடனும் இரண்டு உலகப்போர்களுடனும் தொடர்பு இருப்பதால் இதான் வரலாறு நீண்ட வரலாறு ஆகும்

இது  பாயும் நாடுகளில் எட்டு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களோடு மேலும் 20 கோடிமக்கள் இதனால் பயன் அடைகின்றனர் . பல கால் வாய்கள்  உள் நாட்டிற்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றன..

200 வகைமீன்கள் இதில் வசித்தாலும் குறிப்பிடத்தக்கது சால்மன் வகை மீன்தான். அது மனித உயரத்துக்கு வளருவதோடு முப்பது ஆண்டுகள் வரை வாழக்கூடியதும் ஆகும்.

இவ்வளவு அழகான நதிக்கு ஆபத்தாக விளங்குவது மனிதர்கள் கலக்கும் மாசு ஆகும். இதன் புறச் சூழல் பிரச்சனைகள் குறித்து நிபுணர்கள் எச்சகரித்துள்ளனர். பன்னாட்டு அமைப்புகள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. தொழிற்சாலை கழிவுகளோடு சாக்கடை நீரையும் மக்கள் கலக்கின்றனர் .

இயற்கை வனப்பும் தூய நீரும் உடைய இந்த நதியை வருங்கால ஸந்ததி னருக்கு பாதுகாப்பது மனித குலத்தின் கடமை.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

–subham–

Tags- டான்யூப் , நதி, ஆறு, ஜெர்மனி, பத்து நாடுகள்,நீள மான ஆறு, ஐரோப்பா