HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-116 ; இந்து மத கலைச்சொல் அகராதி-116 (Post.16,206)

Written by London Swaminathan

Post No. 16,206

Date uploaded in London – 17 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆங்கில அரிச்சுவடியின்படி வி V எழுத்தில் வரும் சொற்கள்

வாகனங்கள்

கடவுள் பவனி வரும் வாகனங்கள் உண்மையில் ஆழ்ந்த மறை பொருளை கொண்டுள்ளது; அவைகள் குணங்களின் அடையாள பூர்வ சின்னங்கள் ; இதனால்தான் எலி மீது பவனிவரும் யானை முகக்கடவுளைக் காண்கிறோம்.  முன் காலத்தில், உலகம் முழுதும் இந்துக்களைப்போல கடவுளரை வாக்கங்களில் காட்டியதை எகிப்து, இராக் துருக்கி ஆகிய இடங்களில் இன்றும் காணலாம் ; அனால் அந்தக் கடவுள்கள் எல்லாம் செத்துப் போய் மியூசியங்களில் முடங்கிக்கிடக்கின்றனர் . இந்துக்களின் கடவுள்களோ இன்றும் பல லட்சம் மக்கள் புடைசூழ பவனி வருகின்றனர் . முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.

காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.

புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.

ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;

விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61

இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159

நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26

முருகப் பெருமானின் பிணிமுக (யானை) ஊர்தி: புறம் 56;முருகு 247;பரிபாடல் 5-2, 8-10, 17-49, சிலம்பு 24-8-3;

முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:

பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)

பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56

மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)

மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)

முருகன் மஞ்ஞையன் (முருகு 210)

விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)

சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)

சேவலங்கொடியன் (முருகு 210)

கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.

காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.

காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி  ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.

திருமாலின் சேஷ வாகனம்: பெரும் பானாற்றுப்படை-372/5

பரிபாடல் 8-2: புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்

பரி 13ல் : சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ (திருமால்)

புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.

ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.

பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.

“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)

xxx

வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:

எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.

இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.

சிம்ம வாகனம்

வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.

கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.

கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.

கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.

காளை வாகனம்

காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது

கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.

இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.

பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார். 

இதோ முக்கிய வாகனங்களின் பட்டியல் :

1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse

2.வேல் முருகன் —மயில்  Kartikeya/Skanda/Murugan–Peacock

3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi

4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion

5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle

6.பைரவர்— நாய் Bhairava=Dog

7.சாஸ்தா—குதிரை Sastha= Horse

8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger

9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow

10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse

11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant

12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl

13.சரஸ்வதி— வெண் தாமரை, அன்னம் Sarasvati=White Lotus, Swan

14.கங்காதேவி—மகரம்/முதலை Ganga Devi= Crocodile

15.மன்மதன், ரதி—கிளி Manamatha & Rathi= Parrot

16.குபேரன்—மனிதன், கிளி, குதிரை, கீரி Kubera= Man,Parrot or Horse

17.விஷ்ணு— சேஷ (பாம்பு) வாகனம் Vishnu= 7 headed Snake/ Sesha

18.கண்ணன் —ஆல இலை Krishna=Banyan leaf

19.பிரம்மா— அன்னம் Brahma= Swan

20.கார்த்திகேயன்- காண்டாமிருகம் (வியட்நாம்) Kartikeya=Rhino (Vietnam)

21.சண்டி தேவி—பன்றி/வராஹம் (சுஜனாகாட்) Chandi= Pig

22.சிந்தி இன மஹான்—மீன் Sindhi saint= Fish

23.கண்டபேரண்ட பட்சி— மன்னார்குடி ராஜகோபாலசுவாமி

Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy

24. வருணன் — மகரம் Varuna= Makara (Shark or Crcodile)

25. அக்னி— ஆடு Agni / Fire= Ram

26.துர்க்கை—கலைமான் Durga= Antelope

27. மருத்— மான் Marut= Deer

28.நேபாளத்தில் லெட்சுமி— ஆமை, வங்காளத்தில் —ஆந்தை

Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl

29.tதுர்க்கை—புலி அல்லது சிங்கம் Durga= Lion or Tiger

30.சாமுண்டி—ஆந்தை Chamundi- Owl

31.கழுதை—அஸ்வினிதேவர்கள், இந்திரா, அக்னி

Asvini Devas= Donkey (also for Indra and Agni)

32.பிண வாகனம்—நிருதி Dead Body= Niruthi

33. சூரியன்—ஏழு குதிரைகள் Sun= 7 Horse Chariot

34.ராகு, சஷ்டி— பூனை Rahu/ Shasti= Cat

35.ரதி- புறா Rathi= Pigeon

கீழ்கண்ட (36 to 43) வாகனங்கள் பொதுவாக கோவில்களில் எல்லா தெய்வங்களையும் உலா விடப் பயன்படுத்துகின்றனர்

36.சூரிய பிரபை—வட தமிழ்நாட்டு தெய்வங்கள்

Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu

37.சந்திர பிரபை– வட தமிழ்நாட்டு தெய்வங்கள்

Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu

38. கற்பக விருட்சம் Karpaka Vrksha= (Wish fulfilling Tree)

39. காமதேனு Kamadenu= Wish fulfilling Cow

40. கைலாச வாகனம் Kailash Vahana= Siva

41.பூபால வாகனம் Bhupala Vahanam= Vishnu

42.புருஷாமிருக வாகனம் Purusha Mrugam

43.பூத வாகனம் Bhuta Vahanam= Shiva

44.புன்னைமர வாகனம் Punnai Tree Vahana= krishna

45.காராம்பசு வாகனம் Karampasu Vahanam (See Kamadhenu)

46.ஆடுகள் பூட்டிய ரதம்—பூஷன் Goat Chariot=Pushan

47.ஏழு பசுக்கள் பூட்டிய ரதம்—உஷஸ் 7 Cow Chariot=Ushas

48.காளி—யாளி Kali= Yali (Yali is a mythical animal)

48.பாம்பு—மானசா தேவி Snake= Manasa Devi

49.சீதளா தேவி– கழுதை Seetala= Donkey

50.விஸ்வகர்மா—யானை  Viswakarma= Elephant

நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)

சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chaiot

சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon

செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram

புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse

வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant

சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile

சனி—காகம் Saturn / Saniswarea= Crow

ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger

கேது— மீன் Ketu=Fish

சப்த மாதாக்களின் (ஏழு தெய்வீகத் தாய்மார்கள்) வாகனங்கள் பின்வருமாறு :

  1. பிராம்மி (Brahmi): அன்னப் பறவை (Swan/Anna)
  2. மகேஸ்வரி (Maheswari): ரிஷபம் / காளை (Rishaba/Bull)
  3. கௌமாரி (Kaumari): மயில் (Peacock/Mayura)
  4. நாராயணி / வைஷ்ணவி (Narayani/Vaishnavi): கருடன் / கழுகு (Garuda/Eagle)
  5. வராகினீ / வராகி (Varahi): பன்றி (Pig/Varaha)
  6. இந்திராணி (Indrani): யானை (Elephant/Gaja)
  7. காளி / சாமுண்டி (Kali/Chamunda): எருமை (Mahisha/Buffalo)

xxx

அஷ்ட பைரவர் வாகனங்கள்

அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் (Swan)ருரு பைரவர் – காளை வாகனம் (Bull / Vrushabha)சண்ட பைரவர் – மயில் வாகனம் (Peacock)குரோத பைரவர் – கருட வாகனம் (Garuda)உன்மத்த பைரவர் – குதிரை வாகனம் (Horse)கபால பைரவர் – யானை வாகனம் (Elephant)பீஷண பைரவர் (Bitchana) – பேய் / பிரேத வாகனம் (Pretha) (சில குறிப்புகளில் சிம்ம வாகனம் என்றும் கூறacknowledgeப்படுகிறது) சம்ஹார பைரவர் – நாய் வாகனம் (Dog / Swana)

Please read my other articles on Vahanas in my blogs:

Iraq: 7 Gods Procession on Vahanas

Deer Chariot: Rig Veda to Santa Claus

Hindu Vahanas around the World

Vahanas in Kalidasa and Tamil Literature

உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்

வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?

Who Rides What Vahanas?

***

வாமன அவதாரம்

திருக்குறளிலும் சங்க இலக்கியப்   பாடல்களிலும் 2000 ஆண்டுகளாகப் பாடப்பட்ட வாமன அவதாரம் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் ஆகும்; வாமன என்றால் குள்ளம் குட்டை; அவரே மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானம் கேட்டு ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் ஆனார் . மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்க அவர் செய்த யாகத்தின்போது குள்ள பிராமணச் சிறுவனாக வந்து மூன்றே அடி மண் கேட்டபோது அந்த அசுர சக்கரவர்த்திக்கு ஆசிரியராக இருந்த பிராமண ஆசிரியர் சுக்ராச்சார்யார் அவரை எச்சகரித்தார்; அதையும் மீறி மஹாபலி தருகிறேன் என்று வாக்கு கொடுத்த போது, வானத்தையும் பூமியையும் இரண்டே  அடிகளால் அளந்த வாமனன், முன்றாவது அடி எங்கே என்று கேட்டவுடன் , வந்தவர் விஷ்ணு என்றுஅறிந்து என் தலை மீது மூன்றாவது அடியை வையுங்கள் என்று காட்டினான் . அதன் மூலம் அவரை பாதாள உலகத்துக்கு அனுப்பிய விஷ்ணு , உனது பணிவு  காரணமாக ஒவ்வொரு ஆண்டு ம் என்னுடைய திருவோண நட்சத்திரத்தன்று இந்த பூமிக்கு வா என்று ஆசீர்வதித்தார் . இப்பொழுது கேரளத்தில் மட்டும் அந்த ஓண விழாவைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள். 

வாமன  (वामन).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயிக்கு பதஞ்சலிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்பின்னர்  வாமனர் என்பவரும் ஜயாதித்ய जयादित्य (jayāditya).  என்பவரும் உரை எழுதினார்கள்; அதற்கு காசிகா என்று பெயர்; இருவர் எழுதிய இந்த பாஷ்யத்தில் வாமனர் எழுதிய பகுதி எது என்று சொல்ல முடியாது  இவர்களைத் தவிர காஷ்மீரில் ஒரு வாமனர் பத்தாம் நூற்றாண்டில் சில நூல்களை எழுதினார்.

***

வாமாசாரம்

சிவனின் வாம / இடது பாகத்தில் இருப்பவள் சக்தி/ பார்வதி/ உமை; அவளை தாந்திர முறைகளில் வழிபடுவது வாமாசாரம் எனப்படும்; இதைப் பின்பற்றுவோர் மது, மாது, மாமிசம் என்பதையும் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெறுவார்கள் இவையல்லாமல் யாக யக்ஞங்களை செய்தோ அல்லது பக்தி முறையில் பூஜைகளை செய்தோ வழிபடும் முறை பழைய சம்பிரதாய முறை ஆகும் ; அவர்களை வாமாசாரத்தை ஆதரிப்பதில்லை ; பிரிட்டிஷ் நீதிபதி  Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe)  ஆர்தர் ஆவலோன் இந்த முறை  பற்றியும் இதன் பின்னுள்ள தத் துவங்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் பிரபலமான நூல்கள் ஆகும்.

***

வரருசி

Vararuci (वररुचि).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலுக்கு வார்த்திகா என்னும் குறிப்புகளை எழுதியவர் வரருசி; இவரை காத்யாயனர் என்றும் சொல்லுவார்கள். இவர் சுமார் 4000 ‘அப்டேட்’களை செய்தார்; அதாவது பாணினி எழுதியதைத் திருத்தி, தனது காலத்தில் வழங்கிய மொழியைக் காட்டினார் . இவர் விக்ரமாதித்தன் அவையில் இருந்த நவரத்தினங்களில் ஒருவர்.

***

வார்த்திக

Vārtika (वार्तिक).—பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு வரருசி எழுதிய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இவை ; பிரபல சம்ஸ்க்ருத அறிஞர் தியோடர் கோல்ட்ஸ்டாக்கர் prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, மொழியியல் வல்லுநர் ஆவார்; அவருடைய கணக்குப்படி பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; அவருக்கு 200 ஆழ்ந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வரருசி வாழந்தார் என்பதாகும் . ஏனெனில் ஒரிஜினல் நூலில் 4000 மாற்றங்களை செய்வதானால் பாணினிக்கும் இவருக்கும் பல நூற்றாண்டு இடை வெளி இருக்க வேண்டும் தமிழிலும் தொல்காப்பியத்து க்கு அப்டேட் குறிப்புகள் எழுதிய பவணந்தி சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மாற்றங்களைச் செய்தார் .இவருக்குப்பின்னர் மஹாபாஷ்யம் எழுதியா பதஞ்சலி முனிவர் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை உறுதியான வரலாறு காட்டுகிறது; இந்த மூ வரையும் வணங்கும் ஸ்லோகத்தை  சம்ஸ்க்ருதம் பயில்வோர் சொல்லும் ஸ்லோகம்

வாக்கியகாரஞ் வரருசிஞ் பாஷ்யகாரஞ் பதஞ்சலிம் |

பாணினிஞ் சூத்ரகாரஞ் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம் ||

சுலோகத்தின் பொருள்:வாக்யகாரம் வரருசிம்: பாணினியின் சூத்திரங்களுக்கு ‘வார்த்திகம்’ என்னும் விளக்க வாக்கியங்களை எழுதிய வரருசி (காத்யாயனர்).பாஷ்யகாரம் பதஞ்சலிம்: அந்த சூத்திரங்களுக்கும் வார்த்திகங்களுக்கும் ‘மஹாபாஷ்யம்’ என்னும் விரிவுரை எழுதிய பதஞ்சலி முனிவர்.பாணினிம் சூத்ரகாரம் ச: சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையான ‘அஷ்டாத்யாயி’ சூத்திரங்களை இயற்றிய பாணினி மகரிஷி.ப்ரணதோஸ்மி முனித்ரயம்: சமஸ்கிருத இலக்கணத்தை நமக்கு அருளிய இந்த மூன்று சிறந்த முனிவர்களையும் (முனித்ரயம்) நான் வணங்குகிறேன்.

***

வருணன்

வேதகால முக்கியக்கடவுளான வருணன் தமிழர்களின் நெய்தல் நிலக்கடவுள்  என்று தொல்காப்பியம் கூறுகிறது பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா வர்ண பகவானை  புகழ்கிறது. துருக்கி நாட்டில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கியூனிபார்ம் களிமண் கல்வெட்டில் வருணன் புகழப்பட்டுள்ளான்; பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியா வந்தன  கிரியைகளில் வருணனை பயபக்தியுடன் வணங்கித் துதிக்கின்றனர் .

ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம். 

மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.

வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.

பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:

‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.

வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.

மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.

வள்ளுவன் போற்றிய வருணன்

இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :

‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)

‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)

பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;

மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.

மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.

தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?

ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள  மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing)  ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?

இதோ கணக்கு

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப்  பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள்  அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக்  கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)

சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை

ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது

600x 16 மணி = 9600 முறை

உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..

7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700

இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.

உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .

நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை

9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)

இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .

பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று

துருக்கி- சிரியா  எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy  களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–

அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )

1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்

2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.

நாலாவது மந்திரம்

4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி  CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )

ஐந்தாவது மந்திரம்

வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!

ஆறாவது மந்திரம்

6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக்  கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே

ஏழாவது மந்திரம் 7.

ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய்  சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்

எட்டாவது மந்திரம்

8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய்  நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்

ஒன்பதா வது மந்திரம்

9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.

ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான்  : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை  கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.

xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்

இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை

1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது  NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான்.  இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .

2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

3. வருணன் இன்விஸிபிள் மேன்  ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்;  டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று

இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?

பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.

மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது

நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.

பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)

மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..

கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே  நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.

–சுபம்—–

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-116 ; இந்து மத கலைச்சொல் அகராதி-116, வசிஷ்டர், வாகனங்கள், வருணன் , வரருசி வார்த்திக , வாமன

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)

Written by London Swaminathan

Post No. 16,200

Date uploaded in London – 15 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கடந்த 4 நாட்களில் 40 கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்

41

பல்லவன்மன்னன் தோற்றவுடன் கம்போடியா நாட்டில் பெண்கள் ஆடிப் பாடியது ஏன் ?

42

சமுத்திர குப்பதன் கைது செய்த பல்லவ மன்னன் யார் ?

43

காளிதாசன் உரகபுரமும் பல்லவர் உரகபுரமும் கூறுவது என்ன ? 

44

பாரத்வாஜ கோத்ர, மதுரைப் பார்ப்பான் , உச்சி மேற் புலபவர் கொள் நச்சினார்க்கினியர் சொல்லும் நாக கன்னிகை – தொண்டைக்கொடி – திரையன்  -இளந்திரையன் கதைக்கு ஆதாரம் உள்ளதா?

45

பிராமணர்கள் ஆராய்ச்சிக்கு பல்லவர்  செப்பேடுகளில் என்ன உள்ளது ?

46

வரலாற்று அறிஞர்கள் ஆராய பல்லவர் செப்பேடுகளில்  இன்னும் என்ன இருக்கிறது ?

47

ஊர்ப்பெயர்களை ஆராய்வோருக்கு பல்லவர்  செப்பேடுகளில் என்ன இருக்கிறது ?

48

கூரம் செப்பேடுகளில் பரமேச்வர வர்மனை எந்த நான்கு புராண இதிஹாச புருஷர்களுடன் ஒப்பிடுகிறார்கள்?

49

குதிரைகள் யானைகள் பெயர் பற்றிக் கிடைக்கும் விநோதத் துகள்கள் என்ன ?

50

பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை எவை ?

.****

விடைகள்

41.க்மேர்

சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன்  பல்லவர்களை வென்று தென் இந்தியா முழுமைக்கும் தனி அரசனாக விளங்கினான். கி.பி. (CE) 692 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் தூதுவரை அனுப்பினான். அப்போது அவன் தென்னிந்திய ராஜ்யத்தின் அதிபதி என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் அந்த வெற்றியின் காரணமாக  இந்தோ சீனாவிலுள்ள காம்போஜமும் அவன் ஆளுகைக்குட்பட்டது . பல்லவர்களை வென்று பிறரால் அடக்க முடியாதவர்களை வென்றதால் காம்போஜ நாட்டு பெண்கள் ஆடிப்பாடினர் என்ற செய்தி CE.693 ஆம் ஆண்டு கோலாப்பூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து அடைந்த வெற்றிகளை இபோதுதான் கொண்டாடுகிறோம்; ஆயினும் அவர்களுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் வியட்நாம் முதல் இந்தோனேஷியா வரை சென்ற தகவல்கள் பல்லவர் செப்பேடுகளில் உள்ளன. போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த மூல வர்மன், பூரண வர்மன்  ஆகியோர் பெயர்கள் , பல்லவர் பெயர்களைப்  போல உள்ளன . இவர்கள் நான்காம் நூற் றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் ; இரண்டு கேள்விகள் நம் மனதில்  எழும் ; எதற்காக அவன் சீனாவுக்கு தூது அனுப்பினான் ; எதற்காக கமேர (இப்போதும் கம்போடியா மக்கள் தங்களை க்மே ர் இன மக்கள் என்றே சொல்கிறார்கள் ) நாட்டுப் பெண்கள் டான்ஸ் ஆடிக் கொண்டாடினார்கள் என்று.

கம்போடியாவில் சீனர்கள் செல்வாக்கும் இருந்தது. அதுவரை அந்த இடம் பல்லவர்கள் ஆட்சியில் இருந்தது! அவ்வளவு கம்போடிய மன்னர்களும் தன்னை வர்மன் என்றே அழைத்துக் கொண்டனர்; பல்லவர்களும் கம்போடியா மன்னர்களும் மட்டுமே வர்மன் பட்டத்தை கடைசி வரை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டனர் இதற்கெல்லாம் பின்னர்தான் உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் கட்டப்பட்டது .

அஸ்வத்தாமன் முதல் மஹேந்திர பல்லவன் வரையுள்ள இடைவெளியை  சாளுக்கிய, கங்க, கம்போடிய , இந்தோ னேஷிய மன்னர்கள் மூலம் நிரப்ப முடியும். ஏனெனில் சம்பு என்ற மூதாதையரைக் பல்லவ சாசனங்கள் குறிப்பிடும் கின்றன இதை கம்பு என்று கம்போடிய சாசனங்கள் சொல்லி அவர்கள்தான் மூதாதையர் என்கின்றனர் . இதை வெள்ளைக்காரர்களும் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இந்தியாவுக்கு வெளியே சீனர் போன்ற முகமுள்ள யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவர்களை நாக கன்னிகை என்று குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்; அவர்களுக்கு மங்கோலாய்ட்/MONGOLOID முகம் இருக்கும் . கடல்கடந்து செல்லும் பொழுது அதை பாதாள லோகம் என்று அழைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . அவர்கள் தமிழர்கள் அல்ல.

Missing Pallavas are in Cambodia?

Scholar George Coedes refers to a 10th century inscription of a Cambodian dynastic legend in which the hermit Kambu Swayambhuva and the celestial nymph Mera unite and establish the Cambodian Solar royal dynasty (Kambu-Mera), that begins with the Chenla ruler Srutavarman and his son Sreshthavarman. Coedes suggests that the Kambu Swayambhuva legend has its origins in southern India, as a version of the Kanchi Pallava dynasty creation myth.

Claimed to be the eponym of the Kambojas, Kambu Swayambhuva is characterized as a Brahmin chieftain, married to Mera, who was given to him by Lord Shiva.

The name Kambu is stated to be a corruption of the standard Sanskrit Kamboja.[6] English Scholars such as C. Lassen, S. Levi, Michael Witzel, J. Charpentier, A. Hoffman, A. B. Keith, A. A. Macdonell, H. W. Bailey and many others have traced the ethnic name Kamboja in the royal name Kambujadeshah (कम्बुजदेशः) in the Old Persian Inscriptions Parskar Gryhamsutram spells the usual Kamboja as Kambuja. The Markandeya Purana (8.1-6) as well as in Srimad Devi Bhagawatam (5.28.1-12) etc. refers to the Kambojas as Kambu clan. King Ashoka’s Rock Edicts V & XIII located at Peshawar write Kamboj as Kamboy or Kambo.

Numerous Muslim writings of medieval era spell the Kamboj clan name as Kambu as well as Kambo. Obviously, these Kambu/Kambo terms are the corrupted forms of Kambuj/Kamboj and relate to the Kamboja of ancient Sanskrit and Pali texts and Inscriptions.[original research?] This Sanskrit Kamboja appears as K.b.u.ji.i.y, Kabujiya or perhaps Kabaujiya/Kaboujiya and Kambujiya or perhaps Kambaujiya ( OR with -n- in place of -m- as Kanbujiya or Kanbaujiya) of Old Persian inscriptions, and Cambyses of Greek writings. The same name appears as C-n-b-n-z-y in Aramaic, Kambuzia in Assyrian, Kambythet in Egyptian, Kam-bu-zi-ya or Ka-am-bu-zi-ya in Akkadian, Kan-bu-zi-ia or Kan-bu-si-ya in Elamite, and Kanpuziya in the Susan language.[8]

***

42..பல்லவர் செப்பேடுகளில் உள்ள புராண மன்னர்களை மறந்துவிட்டு வரலாற்றுச் சான்று வேண்டுமானால் முதல் சான்று சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டில் (பிரயாகை பிரசஸ்தி) கிடைக்கிறது . அவன் காஞ்சீபுர விஷ்ணு கோபனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து , பின்னர் கிரஹண மோக்ஷ அனுக்ரஹா என்ற கொள்கையின் படி அவனை விடுதலை செய்து கப்பம் பெற்றான் என்று ஹரிசேனன் எழுதிய சாசனம் கூறுகிறது . சமுத்திர குப்தன் கி பி 335 CEல் அரியாசனம் ஏறினான் ; கேரளத்தில் மாந்தரஞ் சென்றால் இரும்பொறையையும் இவன் தோற்கடித்தான் ; சம்ஸ்க்ருதத்தில் மந்த ராஜா என்று எழுதப்பட்டுள்ளது .ஆக 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவன் காஞ்சீபுரத்தில் ஆட்சி செய்ததை அறிகிறோம் ; கல்வெட்டு செய்திகளை யாரும் மறுப்பதில்லை.

***

43.உரகபுரம்- காளிதாசன் காவியமான ராகு வம்சத்தில் முதல் தடவையாக பாண்டியர்- அகஸ்தியர் தொடர்பு எழுதப்பட்டுள்ளது இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டது ; இதை விளக்கிய வட நாட்டு ஆசிரியர்கள் இதை உறையூரோ நாகப்பட்டினமோ என்றெல்லாம் எண்ணி கேள்விக்குறியுடன் முடித்து விட்டனர் அவர்களுக்கு புரா நானூற்றில் பேராளவாயர் என்று அப்புலவர் இருப்பது தெரியாது ஆலவாய் என்பது உரக்க புறம் ஆதாவது பாம்பு ஊர்.

 (திருவிளையாடல் புராண செய்தி:  உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு  வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.

இதிலிருந்தது சங்க காலத்துக்கு  முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய்  (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !)

இதே போல முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றிய கூரம், உன்னகுரவய பாளையம் செப்பேடுகளில் உரகபுரம் வருகிறது ; உதயேந்திரம் செப்பேடுகளில் சாளுக்கிய விக்ரமாதித்தன் தோற்று கந்தைத் துணியுடன் ஒடிய தகவல்  கிடை க்கிறது. சாளுக்கிய விக்ரமாதித்தன்  கி பி 674 ஆம் ஆண்டில் உரகபுரத்தில் தங்கியிருந்தான் என்ற செய்தியை விளக்கிய உரைகள் இதை கும்பகோணம் அருகிலுள்ள பாம்பூர் என்னும் திருநாகேஸ்வர க்ஷேத்திரம் என்று உறுதிசெய்துள்ளது ; இதிலிருந்து பாம்புசம்பந்தப்பட்ட எந்த ஊரையும் உரகபுரம் என்று அழைக்கின்றனர் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது; உரகம் என்றால் பாம்பு; மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் வரக்காரணமும் ஒரு பாம்புதான் ; இனி காளிதாசர    பற்றிய பழைய புஸ்தகங்களைத் திருத்தி எழுதுவது நமது கடமை;  பாண்டியனுக்கும் பாம்புக்கும் சம்பந்தமுள்ள ஒரே இடம் மதுரைதான்

****

44.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சோழ அரசன் ஒருவன் நாகலோகம் சென்று நாக கன்னிகையை மணந்தான் என்றும் பின்னர் அந்தப்பெண்ணவர்களுக்குப் பிறந்த குழந்தையைக்   கப்பலில் அனுப்பியபோது அடையாளத்துக்கு கழுத்தில் தொண்டைக்கொடியைக் கட்டி அனுப்பினாள் என்றும் எழுதியுள்ளார்.  தொண்டைக்கொடியுடன் வந்த வம்சம் தொண்டைமான் வம்சம் என்றும் திரைகடல் மூலம் வந்ததால் திரையன் என்றும் அவர்களை அழைக்கிறோம் . அவர்கள் ஆண்ட பூமி தொண்டை மண்டலம் ஆகும். இதை நச்சினார்க்கினியர் எழுதுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே மஹேந்திர வர்மன் தனது தளவானூர்க் குகைக் கல்வெட்டில் தொண்டை மாலை அணிந்தவன் என்று வருணி க்கப்பட்டுள்ளான்  . ஆக நச்சினார்க்கினியர் சொல்வது உண்மையே.  நாக கன்னிகையை மணந்த சோழன் யார் என்று தெரியாது; பிற்கால தமிழ்க் காப்பியமான மணி மேகலையும் இது போல் ஒரு செய்தியைக் கூறுகிறது .

***

45.பிராமணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு பல்லவர் செப்பேடு களில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தண்டந்த் தோட்டம் சாசனத்தில் மட்டுமே 214 பிராமணர்களின் பெயர்கள், ஊர்கள், கோத்ரங்கள், சூத்திரங்கள் காணப்படுகின்றன. பல பெயர்களை இன்று யாரும் சூட்டுவதில்லை . துரோணர் பெயர் மட்டும் பலரிடத்தில் காணப்படுவதால் பல்லவ மன்னர்கள் அஸ்வத்தாமன்- நாககன்னிகை வழிவந்த பிராமணர்கள்தான் என்பது உறுதியாகிறது . புள்ளூர்ச் செப்பேடுகளில் மேலும் 204 பிராமணர்களின் முழு பட்டியல் வருகிறது .இவை தவிர ஒவ்வொரு செப்பேட்டிலும் பிராமணர் பற்றிய விஷயங்கள் உள்ளன . இவைகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமே பெறலாம்!

***

46.பல்லவர்கள் 600 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ததாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டுகின்றன. ஆயினும் 12 பல்லவர்களின் ஆட்சிக்காலம்தான் பட்டியலில் உள்ளது. உலக வரலாற்று நிபுணர்கள் ஒப்புக்கொண்ட ஒரு மன்னனுக்கு 25 ஆண்டுதான் என்ற கணக்குப்படி பார்த்தால் இது 300 ஆண்டுஆட்சியை மட்டுமே காட்டும்! மீதி 300 ஆண்டுகளுக்கு முன்னோர்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளன . அவைகளை குப்தர் காலம் முதல் உள்ள கல்வெட்டு தாமிர பட்டயங்கள் மூலம் வரிசைப்படுத்தலாம் . பின்னர் ஆண்டுகளையும் யூகிக்கலாம் . அஸ்வத்தாமன் – நாக கன்னிகை மகன்தான் முதல் பல்லவன் என்பதை ஒப்புக்கொண்டால் மேலும் 3000 ஆண்டு வரலாற்றினை ஆராய வேண்டிவரும்! அவர்கள் இரானியர்களா அல்லது யானைத் தலை மகுடம் பூண்ட இந்தோ கிரேக்க மன்னர்களா என்றும் ஆராய வேண்டும் . ஒரு பல்லவ மன்னனுக்கு யானைத் தலைமுடி கிரீடம் வந்தவுடன் எல்லோரும் ஆசாரியப்பட்டு கேள்வி எழுப்பியது சாசனங்களில் உள்ளது இது தவிர வைகுண்டப்பெருமாள் கோவில் சிற்பங்களுக்கு சரியான விளக்கம் பெறவேண்டும் . சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ள, தமிழில் இல்லாத, விஷயங்களை சம்ஸ்க்ருத மொழி அறிஞர்கள் உதவியுடன் ஆராய வேண்டும். இந்த ஒரு ஆராய்ச்சியே பலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்க உதவும் . பல்லவர் செப்பேடுகள் என்னும் நூல்  குறிப்பிடும் ஏராளமான பிற சாசனங்களை முதலில் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு பின்னர் ஆய்வினைத் துவங்க வேண்டும்.

***

47.பல்லவர் செப்பேடுகளில் சுமார் ஆயிரம் ஊர்களின் பெயர்கள் வருகின்றன . பல ஊர்ப்பெயர்கள் மீண்டும் மீண்டும் வந்திருக்கலாம் இவை தவிர நதிகள் தானம் செய்யப்பட்ட இடங்களும் வருகின்றன; பல ஊர்களின் பெயர்கள் இப்போது எப்படி மாறிவிட்டன என்பதை ஓரளவுக்கு பல்லவர் செப்பேடுகள் முப்பது நூல் விளக்குகிறது ஆயினும் நிறைய விஷயங்கள் கேள்விக்குறிகளாகவு ம் ஆச்சர்யக் குறிகளாகவுமே உள்ளன. தற்காலத் தலை முறை மறைந்துவிட்டால் விளக்கம் சொல்லக்கூட ஆட்கள் கிடைக்காது . தல புராணங்களிலிலும் பெரிய புராணத்திலும் திருமங்கை ஆழ்வார் பாடல்களும் வரும் விஷயங்கள் உதவி செய்யக்கூடும். அப்பர், சம்பந்தர் தரிசித்த தேவாரத் தலங்களும் மகேந்திரன் பல்லவர் கால ஊர்களே என்பதை நினைவிற்கொல வேண்டும்.

***

48.கூரம் செப்பேட்டில் பரமேஸ்வர வர்மனின்  கழைப்பாடும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் அவனை பரதன், சகரன் கர்ணன், யயாதி (உஷானஸ் கவி ) ஆகியோருடன் ஒப்பிடுகிறது

ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு

பரதன் போல எல்லாவற்றையும் அடக்கியவன் / ஸர்வ தமனன்; தன் பிள்ளையான அசமஞ்சசனைக் கைவிட்ட சகரன் போல அசமஞ்சசர்களைத் துறந்தவன்; அங்க தேசத்து அரசனான கர்ணன் போல அங்கங்களைக் கொண்டவன்; கவி குலத்தில் பிறந்த உஷனஸ் என்ற தன் மாமனாரான காவியனிடம் பிரியம் கொண்ட யயாதியைப்போல கவிகளிடம் பிரியம் கொண்டவன் .

(இதற்கு விளக்கம் சொல்லப்போனால் ஒரு புஸ்தகமே எழுதலாம் ! பிராமணர் வீடுகளில் மக்குப்பிள்ளைகளை தவறிழைப்பவர்களை அசமஞ்சன் என்றுதான் திட்டுவார்கள்;  அங்க தேசம் என்ற சொல் கர்ணன் விஷயத்தில் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அதாவது அங்க தேச மன்னன் கர்ணன் போல வாரி வழங்கும் கைகளைப் படைத்தவன்(அங்கம்);  உஷனஸ் கவி ரிக்வேதத்திலும் பகவத் கீதையிலும் தொல்காப்பியர் பெயரிலும் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற சங்கப்புலவர் பெயரிலும் கவி, கவிதை, கவிஞர் காவியம் என்ற சொற் களில் இருப்பதையும் இதே பிளாக்கில் காணலாம்.)

***

49.ரிக்வேத சரமேயஸ் என்னும் நாய், மஹாபாரத அஸ்வத்தாமன் என்னும் யானை காரி, ஓரி என்னும் சங்க இலக்கிய குதிரைகளை இதே பிளாக் கட்டுரைகளில் கண்டோம்; இப்போது அந்தப் பட்டியலில் மேலும் மூன்று பெயர்களை சேர்க்கலாம் :-

.கூரம் செப்பேடுகளில் பரமேஸ்வர வர்மனின் யானை பெயர் மகிவாரணம் என்றும் குதிரையின் பெயர் அதிசயம் என்றும் வியப்பான செய்திகள் உள்ளன.  சாளுக்கிய பூமியைப் பல்லவர்களிடமிருந்து மீட்ட விக்கிரமாதித்தனின் குதிரையின் பெயர் சித்ரகண்டம் (அழகிய கழுத்து) என்பதை அவனுடையய சாசனங்கள் கூறுகின்றன!

***

50.பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை :

பள்ளங்கோயில் செப்பேடுகள்

கூரம் செப்பேடுகள்

உன்னக்குரவயபாளையம் செப்பேடுகள்–ஆந்திரம்

ரேயுருச் செப்பேடுகள்–ஆந்திரம்

ராயக்கோட்டை செப்பேடுகள்

உதயேந்திரம் செப்பேடுகள் -1

காசக்குடி செப்பேடுகள்

புல்லூர்ச் செப்பேடுகள்

தண்டந்தோட்டம் செப்பேடுகள்

பட்டதாள் மங்கலம் செப்பேடுகள்

வேலூர்பாளையம் செப்பேடுகள்

பாகூர் செப்பேடுகள்-புதுவை

ஓங்கோடு செப்பேடுகள் -1-ஆந்திரம்

உருவப்பள்ளி செப்பேடுகள்

மாங்களூர் செப்பேடுகள்- கர்நாடகம்

பீகிரச் செப்பேடுகள்-ஆந்திரம்

நெடுங்கராயச் செப்பேடுகள் 

வேஷந்தச் செப்பேடுகள்–ஆந்திரம்

விழவெட்டிச் செப்பேடுகள்-ஆந்திரம்

செந்தலூர்ச் செப்பேடுகள்-ஆந்திரம்

ஓங்கோடு செப்பேடுகள் -2-ஆந்திரம்

தர்சி உதிரி செப்பேடுகள்–ஆந்திரம்

சுராச் செப்பேடுகள்–ஆந்திரம்

உதயேந்திர செப்பேடுகள் -2

மயிதவோலு செப்பேடுகள்–ஆந்திரம்

ஹீரஹடஹள்ளி செப்பேடுகள்- கர்நாடகம்

குணபதேயம் செப்பேடுகள்–ஆந்திரம்

ஹொசக்கோட்டை செப்பேடுகள்- கர்நாடகம்

ஹெல்லகரே  செப்பேடுகள்– – கர்நாடகம்

ஹால்திபூர் செப்பேடு செப்பேடுகள்– கர்நாடகம்

Tags- பல்லவர் செப்பேடுகள், ஐந்தாவது 10 கேள்விகள்

–subham–

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-114 (Post16,197)

Written by London Swaminathan

Post No. 16,197

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :

வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)

உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்; இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .

வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.

பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

 இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.

வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்

1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.

2)  நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.

3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.

4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.

5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.

6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.

7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.

8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.

9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.

It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.

***

வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர்  என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.

***

வைகுண்டம்

விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை

இந்து சமய நூல்களில் பரமபதம், விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .

வைகுண்ட ஏகாதசி

மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி  ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை  (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

***

வாஜசநேயி

வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது.  சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள்.  யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.

காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.

ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.

***

வஜ்ர

கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்

வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .

***

வாக்கியபதீயம்

வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.

 ஸ்போட வாதம் (Sphota Theory)

பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார்.  மொழியும் அறிவும்  பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.

***

வலன்  (वल).—(பலன் ) அசுரர்.

ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்;   வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.

வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல்,  திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது  – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .

***

வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .

ராம் சே படா ராம் கா நாம்

“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.

மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல  தெரியவில்லை. மரா,  மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா  தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்: 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London): 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது

வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.

நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார்.  அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.

 ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன்,  ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I

தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!

சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I

ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114, வால்மீகி கதை

–subham

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)

Written by London Swaminathan

Post No. 16,164

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–

PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.

வெற்றிவேற்கை

1

அதி வீர ராம பாண்டியன்  யார் ?

2

அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?

3

‘வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன  ?

4

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

5

உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச  தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான  வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன்  என்ன சொல்கிறார் ?

6

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற  வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?

7

பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன்  சொல்லும் அறிவுரைகள் என்ன ?

8

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

9

தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?

10

பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?

*********************************

விடைகள்

1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce)  என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.

***

2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி.  அதிவீரராம பாண்டியன்  செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.

***

3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

****

4.  முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :

உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .

 மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.

அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.

— கதாவாசகம்.

***

5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 

தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.

 நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.

— பாகவதம்.

*****

6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.

— திருவிளையாடற் புராணம்.

———-

 எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.

— புலவர் புராணம்.

****

7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.

***

8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.

— பாகவதம்.

***

9. தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:

தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.

முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.

— இராமாயணம்.

***

10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:

பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.

நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.

–subham—

Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் , உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் , காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவி, கவிதை, காவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும், மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர், சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதி, நாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன், உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

“என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது, மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103; இந்து மத கலைச்சொல் அகராதி-103 (Post.16,124)

Written by London Swaminathan

Post No. 16,124

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already

தைத்திரீய சம்ஹிதா— தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம்  கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு.  அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார்.  பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —

•     சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.

•     ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.

•     பிருகு வல்லி:  பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது

***

தாள துவஜம்  – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன  பலராமனின் கொடி.  2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994)  அழகாக விளக்கியுள்ளார்

***.

தக்ஷக

நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை  தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால  பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில்  ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான்  ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காரு, ஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் ; பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத்  தோற்றுவித்தனர் .  பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில்  மண்ணைத் தூவினான். 

***

தமஸ், தமோ குணம்

தமஸ் என்றால் இருள், அறியாமை .

மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன அமைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை  ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே;  மூன்றாவது வகை தமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .

***

தாம்ரபரணி

பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு;  பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்

 128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

***

தாண்டவம்

சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை  இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.

ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது  பூமி, தண்ணீர், அக்கினி,  வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி,  இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.

***

தாரக அசுரன்

தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்;  இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்;  அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ , கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ;   தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.

***

தாரா

(கற்பழிக்கப்பட்ட கதை)

Planet Jupiter and its four large moons.

தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை;  பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .

To be continued……………….

Tags- தாரா ,

இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்