
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9210-B
Date uploaded in London – –31 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜனவரி 31 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
Xxx
குடியரசு தின அணிவகுப்பில் சரணம் அய்யப்பா கோஷம்

டில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டோர் மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளை செத்தபி படுத்தினர். ராமர் கோவில் அலங்கற உறுதி, கேதார் நாத் அலங்கற உறுதி ஆகியன குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன. விவசாயிகளின் வன்முறையில் இஅவைகள் சேதப்படுத்தப்பட்டன. இதை இந்துக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க அரசு தரப்பிலிருந்து வந்த நல்ல செய்தியும் உண்டு. ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வீர முழ க்கம் உண்டு. அதன்படி பிரம்மோஸ் அணிவகுப்பின் கோஷம் சுவாமியே சரணம் அய்யப்பா என்பதாகும். ஏற்கனவே ஜனவரி 15ம் தேதி நடந்த ராணுவ தின அணிவகுப்பில் அதி பயங்கர ஏவுகணை தாங்கியான பிரம்மாஸ்திரம் சென்றபோது டில்லி விதிகளில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணதிர முழக்கப்பட்டது குடியரசு தின அணிவகுப்பிலும் இதே பிரம்மோஸ் அணி சரண கோஷத்தை எழுப்பி மக்களை மகிழ்வித்தது பாரத் மாதா கி ஜே , ஜெய துர்கா மாதா என்பன வேறு சில ராணுவ வெற்றி வெற்றி முழக்கங்கள் ஆகும்
XXXX
விவசாயிகள் பேரணியில் வன்முறை –ஆர்எஸ்எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் ஜன.,26 விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.
டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx
சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி
குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். குடியரசு தினத்தையொட்டி , நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், கீழ வீதி ராஜகோபுரத்தில், தீட்சிதர்கள் ஜனவரி 26ம் தேதி காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றினர்
xxxx
‘தாண்டவ்‘ வலைத் தொடர் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாண்டவ் TANDAV வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை’ என, உச்ச நீதிமன்றம் SUPREME COURT உத்தரவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘அமேசான் பிரைம்’ தளம், திரைப்படங்கள் மற்றும், ‘வெப் சீரிஸ்’ எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. ‘பாலிவுட்’ நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.
இந்த மனு, SUPREME COUERT நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ‘கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.
XXXX

குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.. சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.
அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
XXXXXXX
திருமலையில் இலவச தரிசன டிக்கெட் 20 ஆயிரமாக உயர்வு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அக்.,26ம் தேதி முதல் தினசரி 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இப்போது இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
XXXX

சபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி கோர திட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ‘இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
Xxxx
பழனி முருகன் கோவில் தைப்பூசம்
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.
* விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டத்தையொட்டி பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
Xxxxx
தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்த ஒரு சுவையான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது .

தெலுங்கானா மாநிலத்தில் வேமுலவாடாவில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிவன் கோவில். அங்கு இறைவனுக்கு காளை மாட்டு ஒன்றை கட்டும்சடங்குக்கு கொடை மொக்குலு என்று பெயர். இந்தக் கோவிலின் இன்னொரு புதுமை கோவில் வட்டத்துக்குள் ஒரு முஸ்லீம் தர்காவும் இருக்கிறது இதன் காரணமாக இந்துக்கள் அங்கு செல்வதும் முஸ்லிம்கள் இந்தக் கோவிலுக்கு வந்த்து வழிபடுவதும் வழக்கம். மந்தாணி என்னும் ஊரைச் சேர்ந்த அபிசார என்னும் முஸ்லீம் பெண்மணி இந்த மாட்டுக் கோட்டை செய்ய விரும்பினார். கோவில் நிர்வாகத்தினரும் அவரை கோவிலுக்குள் அனுமதித்து கொட மொக்குழு சடங்கை நிறைவேற்ற அனுமத்தித்தனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்துடன் வெளியிட்டுள்ளது .
XXX
மலேஷியாவில் தைப்பூசம்
மலேஷியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ரத யாத்திரை பெரிய ஊர்வலம் இன்றி நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முருகன் சிலை தங்கிய புனித ரதம் பத்து குகை, என்றும் பாது குகைகள் (BATU CAVES) என்றும் அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றது.பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈடுபடும் ரத ஊர்வல பத்து பேர் மட்டுமே ரத்தத்துடன் வரலாம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. வைரஸ் தாக்குதலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிவிக்கப்பட்டது.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
—SUBHAM—
TAGS- உலக இந்து சமய, செய்தி மடல் 31-1-2021