திருலோகம் கண்ட மஹாகவி! (Post No.10,491)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,491
Date uploaded in London – – 27 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் கண்ட மஹாகவி!
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரை பல்வேறு அறிஞர்கள் நேரில் கண்டு வியந்து அவரது கவித்வத்தைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். அது போலவே அவரை நேரில் காணவிட்டாலும் கூட அவரின் கவிதைகளில் அவரை தரிசனம் செய்து பிரமித்தவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.

ஆனால் மஹாகவியை நேரில் காணாவிட்டாலும் கூட அவரைத் தனது தந்தையாகப் பாவித்து மானசீக புத்திரனாக மாறி அவருக்கு ஆண்டு தோறும் திதி கொடுத்த ஒரு “அற்புத மகனைப்” பற்றி உலகம் அறியுமா?
உலகிலேயே இப்படி ஒரே ஒரு அபூர்வ மகனாகத் திகழ்ந்தவர் திருலோக சீதாராம் அவர்கள்.

அவர் கண்ட மஹாகவி அவருக்குத் தந்தையாய் தாயாய், ஆசானாய் ஏன் எல்லாமாய் இருந்தார்.

மஹாகவி பாரதியார் பிறந்தது 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி. அவர் மறைந்தது 1921 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி.
திருலோக சீதாராம் பிறந்தது 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி. அவர் மறைந்தது 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி.


அதாவது மஹாகவி மறைந்த போது அவர் நான்கு வயதுக் குழந்தை!

இந்த நான்கு வயதுக் குழந்தை மஹாகவியைப் பார்க்காவிட்டாலும் கூட
அவனது கவிதைகள் மூலம் அவனையும் அவன் உளத்தையும் நன்கு தரிசித்து விட்டது!

இளம் பருவத்திலேயே கவிதா ஆர்வம் கொண்டு கவிதா ஆவேசம் பெற்ற அவர் தமிழில் தன்னைத் தோய்த்துக் கொண்டார்.
அவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் கூட தமிழின் அமுதச் சுவையைக் கண்டு அதில் மூழ்கிப் போனார். அமிர்தத்தின் ஒரு சொட்டு நம் நாக்கில் பட்டாலும் கூட சாவே வராது. அவரோ தமிழ் அமிர்தத்தில் முழுகியே விட்டார் என்றால் அவருக்கு மறைவு என்பது ஏது?

அத்துடன் மட்டுமல்லாமல் கவிதையை ரசிக்க (தாய்)மொழி ஒரு தடை இல்லை என்பதைத் தான் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தும் விட்டார் அவர்.

‘நவசித்தன் பாரதி என்ற நற்பொருளை நானே பயின்று கொண்டேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்த அவர் அந்த பாரதி பல்கலைக் கழகத்தில், கல்வியில் உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுக்குரிய டாக்டர் பட்டத்தையும் தானே பெற்றுக் கொண்டார்.

மக்களிடையே அவர் பாரதியை எடுத்துச் சென்ற போது மக்கள் வியந்தனர்.
பாரதியாரின் கவிதைகளைத் தனது பாணியில் நீண்ட நேரம் விளக்கி உரை ஆற்றும் அவர் பாணியில் சொக்கிப் போனவர்கள் ஏராளம்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதும் தன் பணியை நிறுத்தி நேராக செல்லம்மாள் பாரதியைப் பராமரிக்கும் பணியை விரும்பி மேற்கொண்டார்.

அவரது மடியிலேயே செல்லம்மாள் பாரதி தன் உயிரை விட்டார் என்பது மனதை உருக வைக்கும் ஒரு செய்தி.
பாரதியைப் படித்துப் படித்து அவரது வசன கவிதை நடை போலவே தனது நடையையும் அவர் பெற்று விட்டாரோ என்று எண்ணத் தோன்றும் அவரது கட்டுரைகளைப் படிக்கும் போது!
எடுத்துக் காட்டாக அவரது எழுத்திலிருந்து ஒரு அருமையான பகுதியை மட்டும் இங்கு மேற்கோளாகப் பார்க்கலாம்.

‘இலக்கியப் படகு’ என்ற அவரது நூலில் ‘கடமை உணர்ச்சி’ என்ற கட்டுரையில் வருவது இந்தப் பகுதி.
“சங்கற்பம் இல்லாமலேயே ஒருவன் வாழ்வாங்கு வாழும் இயல்புடையவனாகி விடுவது தான் ஒவ்வொருவனுக்கும் உலகத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான கடமை. அப்படி வாழ்வது தான் பலனை எதிர்பாராமல் செய்கின்ற கரும யோகம்.

பாரதி இதற்கு அருமையானதொரு விளக்கம் கொடுக்கிறார்.

சூரியன் உதிப்பதால் உலகத்தில் இருள் விலகுகிறது. ஒளி வருகிறது, உஷ்ணம் தோன்றுகிறது. மழை பொழிகிறது. உயிர்க்கு அமுதாகிறது. உயிர்கள் வாழ்கின்றன. உலகுக்கு இவ்வளவு நலன்களை இடையறாமற் செய்து கொண்டிருந்த போதிலும் தான் செய்யும் நன்மையும், அந்த நன்மையை அடைபவர் யார் யார் என்ற தகவலும், இதொன்றும் சூரியனுக்குத் தெரியாது. அவன் தருகின்ற ஒளியின் மேன்மையைப் பாராட்டி அவனைப் புகழ்ந்து அவனுக்கு வாழ்த்து மடல் வாசித்தளிப்பதாக இருந்தால் இதெல்லாம் அவனுக்கு விளங்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

முதலில் அவனிடம் உள்ள, வேறு எவரிடமும் இல்லாத பேரொளியே அவனுக்குத் தெரியாது.

இருள் என்பது இதுவென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலல்லவோ, ஒளியென்பதொன்று உண்டு என்று அவனுக்கு விளங்கப் போகிறது. ஆயினும் அவனிடமிருந்து ஒளி வருவதும் அதனால் உலகுய்வதும் எவ்வளவு மகத்தான உண்மை. அதைப் பற்றிய அறிவு சிறிதுமின்றி – ஆனால், அதன் பயனை அனைத்துலகும் பெறத்தக்க ஓய்வற்ற இயக்கம் அவனுடையதாக அமைந்திருக்கிறது.

எவன் ஒருவன் பிறந்ததனால், வாழ்வதனால், பேசுவதால், செய்வதால் உலகமே நலன் பெறுமோ, அத்தகையவன் தனது செயலின் விளைவைப் பற்றிச் சிறிதும் எண்ணமற்றவனாக இருந்து கொண்டே பெரும் பயன் விளையக் காரணனாக இருக்கின்றானோ அவனே நிஷ்காம்ய கர்மி.

ஞாயிற்றை எண்ணி – என்றும்
நடுவு நிலைபயின்று
ஆயிரம் ஆண்டு – உலகில் – கிளியே
அழிவற்று இருப்போமடி

கடமையென்று ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து கடமையாளனாக விளங்க முயல்வது வீண் தொல்லை. நம் செயல்கள் எல்லாம் கடமையல்லாது வேறில்லை என்றாகி விடுகின்ற இயல்பு வசமாவது போல மானிட வெற்றி பிறிதொன்றில்லை.
கடமையுணர்ச்சி சுமையாகும். கடமை இயல்பே இனிதாகும்”.

இப்படி அழுத்தம் திருத்தமாக அற்புதமான ஒரு கருத்தை, பாரதியில் தோய்ந்து, எளிய நடையில் இனிய தமிழில் தருபவரை “பாரதியைக் கண்டவர்” என்று தானே கூற முடியும்!

பாரதியை நினைக்கும் போதெல்லாம் அவரது பக்தர்களின் நினைவும் கூட வருவது இயல்பே.
அந்த பக்தர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் திருலோக சீதாராம்!

tags– திருலோக சீதாராம், பாரதி


பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம் ! (Post.10,429)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,429
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் முப்பது வெள்ளைக்காரர்கள் நமது நான்கு வேதங்களை மொழிபெயர்த்தனர் ; எல்லோரும் நவக்கிரகங்கள்; நல்ல கோமாளிகள் ; இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது என்ற பழமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே சொல்லுக்கு நாலு கோமாளிகள் நாலு விதமாகப் பொருள் சொன்னதோடு எ திரும் புதிருமாக அர்த்தம் செய்தார்கள் . ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தார்கள், பூர்வ குடிமக்களை விரட்டியடித்தார்கள் என்பதில் ஒற்றுமை!! ஏனெனில் உலகம் முழுதும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்குள்ள பூர்வ குடிமக்களை குருவி சுடுவது போலவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது போலவும் கொன்று குவித்து அந்த நாடுகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இன்று ஆங்காங்கே பெயரளவுக்கு மட்டுமே அவர்கள் உள்ளனர் ; அதே கொள்கையை இந்தியா மீதும் திணித்து, சங்ககால இலக்கியத்தில் இல்லாத, புராண இதிஹாசங்களில் இல்லாத பொய்மைச் செய்திகளைப் பரப்பினார்கள்.

நல்ல வேளை , பாரதி போன்ற யுகபுருஷர்களும், மஹாத்மா காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர் போன்றோரும் ஆரிய திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்தார்கள்


இந்த முப்பது வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம் சோமபானம் என்பது போதைப்பொருள்; அது சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறும் என்று சொல்லி பல காளான் வகைத் தாவரங்களின் பெயர்களை எல்லாம் உளறிக் கொட்டினார்கள். இது 1895ம் ஆண்டு RALPH T H GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பிலேயே உள்ளது. மொத்தத்தில் மாக்ஸ் முல்லர் கும்பலும் தேச விரோத, இந்து விரோத மார்க்ஸீயக் கும்பலும் ஒத்துக்கொண்ட விஷயம் இது.

ஆனால் வேதம் முழுதும் சோமபானம் பற்றிவரும் அதிசயச் செய்திகளை மறைத்தோ அல்லது அவை செய்தியே அல்ல என்ற பாணியில் பாராமுகம் காட்டியோ இதைச் செய்தனர். இன்றுவரை அவர்கள் சோம பானத்தை பயன்படுத்தி, அவர்கள் சொன்னதை நிரூபிக்கவும் இல்லை !
XXX
சோமபானம் பற்றிய அதிசயச் செய்திகள்

4 வேதங்களிலும் சோம பானம் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன.

1.சோம லதா என்ற கொடியை அல்லது தாவரத்தை கழுகுகள் கொண்டுதரும்

  1. சோமம் என்னும் மூலிகை, மூலிகைகளின் அரசன்
  2. சோமத்தில் 15 வகைகள் உண்டு
  3. சோமம் என்பது சிவப்பு நிற மரம்
    5.சோமபானத்தைக் குடித்தால் பாவம் போகும்
  4. மனம் சுத்தம் ஆகும்
  5. சக்தி, வீரம் அளிக்கும்
    8.புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும்
    9அதைப் பிழியும் மரக் கரண்டிகள், கற்கள் ஆகியன தெய்வம் போன்றவை
    இவைகளை எல்லாம் விளக்காமல் சென்றுவிடுவார்கள்
    .தளவாய்புரம் செப்பேடுகள் 1200 ஆண்டு பழமையானவை. அது சோமயாகம் செய்து மனம் சுத்தமான காடக சோமயாஜியின் புகழைப் பாடுகின்றது . பகவத் கீதை, சிலப்பதிகாரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியன சோம யாகத்தைப் புகழ்கின்றன. ; உலக மகா கவி சுப்ரமணிய பாரதி, நம து நாட்டை ஆரிய நாடு என்று பல இடங்களில் புகழ்வதோடு ஆரிய என்பதை நல்ல பொருளில், உண்மைப் பொருளில், பயன்படுத்துகிறார்.
    இதே போல பாரதியார் சோம ரசத்தைப் புகழ்ந்தும் பாடுகிறார் ; இது பலருக்கும் தெரியாது

அவருடைய படலைப் பார்ப்பதற்கு முன்னர், கீதையும் சிலப்பதிகாரமும் எப்படிப் புகழ்கின்றன என்று பாருங் கள் !
பகவத் கீதை 9-20
“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னைப் பூஜித்து சோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் சுவர்கத்துக்குச் செல்லுவதை வேண்டுகின்றார்கள் .அவர்கள் புண்ய பலத்தின் உறைவிடமான தேவேந்திர உலகத்தை அடைந்து அவ்வானுலகில் ஒளி வீசுகின்ற தேவர்கள் அனுபவிக்கும் சுக போகங்களை அனுபவிக்கிறார்கள் “.

இந்த ஸ்லோகம், சோமபானம் அருந்துவதால் பாவம் போய், அவர்கள் சொர்கத்துக்குச் சென்று ஒளிமயம் ஆகிவிடுவார்கள் என்கிறது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அரசனுக்குரிய வெண் குடை சோமயாஜிகளுக்கு கிடைக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதிய சங்கரரும் சோமபானம் என்பது கடவுளரின் ரத்தத்துக்குச் சமம் என்று ஹரிவம்ச ஸ்லோகத்தின் மூலம் காட்டுகிறார்.
இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் சோமயாகம் செய்தது பற்றிப் பாடுகிறார் .

“இந்திரனுடைய அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களை வஞ்சி நகருக்குக் கொண்டுவந்து , மது அருந்துவதற்குரிய சோம வேள்விகளைச் செய்தவன் இன்று இல்லை” என்கிறார்

சதுக்கப்பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
— நடுகல் கதை, சிலப்பதிகாரம்

இதிலிருந்து ஒருகாலத்தில், ஒரு சேர மன்னன், சோம யாகம் செய்தது தெரிகிறது; மது என்னும் சொல் தேன், சோமம் ஆகிய இரண்டுக்கும் வேதத்தில் பயன்பட்டது சுரா பானம் என்பதை கள் , சாராயம் என்று சொல்லி வேதம் கண்டிக்கிறது .
பாரதி இரண்டு பாடல்களில் சோம ரசத்தைக் குறிப்பிடுகிறார்.

மது என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது போலவே சோமம் என்பதற்கு சந்திரன், சோமபானம் என்ற இரண்டு பொருள் உண்டு. அதற்கு உமையுடன் கூடிய சிவன் (ச+உமா=சோம )என்றும் சங்கரர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் விளம்புகிறார்.

ஜய ஸோம என்ற பாரதி பாட்டில் இந்திரனையும் சோமனையும் தொடர்பு படுத்திப் பாடுகினறார் .ரிக்வேதம் முழுதும் இந்திரனுடன் சோம ரசம்தான் சம்பந்தப்படுகிறது. அதனால்தான் இந்திரன் சக்தி பெற்று விருத்திரன் முதலியோரைக் கொன்றான் என்றும் வருகிறது.

இந்திர- சோமன் என்று ஜோடியாகப் பாடப்படும் ஓரிரு துதிகளிலும் சோமம் என்னும் மூலிகைப் பற்றித்தான் பேசுகின்றனர் உரைகாரர்கள் ; ஆகவே ஜய சோமம் பாடல் சோம மூலிகை பற்றிதே. ஒருவேளை வேத கால முனிவர் போலவே பாரதியும் இரட்டுற மொழிந்திருக்கலாம் .

சோம ரசம் பற்றிய பாடலைப் படிப்போருக்கு பாரதியின் கருத்து தெள்ளிதின் விளங்கும். அவர் அதன் சிறப்புகளை எடுத்து ஓதுகிறார்; குறை ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பாரதியின் பாடல்கள்
XXX
சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx
சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்


xxx SUBAHM xxxx

tags- சோமம், சோம ரசம், பானம் , பாரதி, இளங்கோ , கீதை

ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,405

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.

“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.

வள்ளுவனோ சினம்/வெகுளாமை  என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309)  என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

……

“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

 செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் “

சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

அதே பாடலில் பாரதி,

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

XXXX

அதர்வண வேதப் பாடல்

காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான்  உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே

இதற்குப் பழைய விளக்கம்:

இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

xxx

எனது வியாக்கியானம்

இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம்  சொல்லுவது அன்று ; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.

நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே ; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே ; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்

இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.

இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெ ஷன் கட்டளைதான் அந்த துதி

இதையே வள்ளுவனும் சொல்கிறான் .

.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும்  சினம்’ – குறள் 305

சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்

கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.

அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

பார்ப்பான் வாழ்க ; வேதம் வாழ்க ; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க

வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து  முறை படியுங்கள்

xxxxx

பாபநாசம் சிவன் பாடல்

ராதே உனக்கு……………………………….

FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)

படம். சிந்தாமணி

வருடம். 1937

பாடல். பாபநாசம் சிவன்

பல்லவி.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….

மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………

மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….

ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………

மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண

ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………

எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….

4

எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….

நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ

ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………

நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ

ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….

ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..

8

கண்ணை இழந்தவன் நீயோ நானோ……………..

கண்ணை இழந்………..தவன் நீயோ………..நா………..னோ………..

கண்ணை இழந்தவன் நீ………யோ நா…………னோ……………

கண்………ணை இழந்தவன் நீயோ………….நானோ………….

கண்ணா…………..நீ வேறு நான் வேறோ…………எவன் சொன்ன…………வன்

கண்ணை யிழ………ந்தவன் நீ…………யோ நா…………னோ…………..

கண்ணை யிழ……….ந்தவன் நீயோ நானோ…………………

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே………….

4

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே…………….

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று………….

கண்ணை இழந்…………தவன் நீயோ நானோ……………

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ…………..தி பொருளே இன்று

கண்………..ணை இழ………..ந்தவன், நீயோ நானோ………ஓ……….ஓ……….

—SUBHAM—

tags -கோபம், பாரதி, பாபநாசம் சிவன், அதர்வண வேதம், சினம், ராதே உனக்கு

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 64 (Post No.10,275)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,275

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘பாரதியின் அறிவியல் பார்வை’  8- வா.செ.குழந்தைசாமி

      மஹாகவி பாரதியாரை அறிவியல் பார்வையில் பார்க்கும் நூல் இது. எழுதியவர் டாக்டர் திரு வா.செ.குழந்தைசாமி. (பிறப்பு 14-7-1929 மறைவு: 10-12-2016) அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்.2002ஆம் ஆண்டு நமது மத்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றவர். பல்வேறு நூல்களை எழுதியவர்.

இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது நான் தினமணி கதிர் இதழுக்காக இவரை நேரில் சென்று பேட்டி கண்டேன். அந்தப் பேட்டிக் கட்டுரை ‘அறிஞர்கள் போற்றும் குழந்தை’ என்ற தலைப்பில் 3-11-1978 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியானது. (அப்போது எனது புனைப் பெயர் ‘கிருஷ்ணபிரகாஷ்.)

      சிறந்த அறிஞரான இவர் எழுதியுள்ள இந்த ‘பாரதியின் அறிவியல் பார்வை’ என்ற நூல் மார்ச் 1983இல் வெளியிடப்பட்டது. 124 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1) அறிவியல் பார்வை 2) பாரதியின் அறிவியல் பார்வை 3) புதுமைப் பெண்கள் 4) ஆயிரம் தொழில் செய்குவீர் 5) பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம் 6) மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 7) ஒப்பிலாத சமுதாயம் 8) மனிதர் தம்மை அமரர்களாக்குவோம் ஆகிய எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில் (அறிவியல் பார்வை) நமது சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மை இன்னும் பரவலாக உருவாகவில்லை, அறிவியல் அணுகுமுறை இயற்கையான ஒரு கூறுபாடாக இன்னும் இடம் பெறவில்லை என்று குறிப்பிடும் இந்த நூலாசிரியர், முதிர்ந்த தெளிவோடும், முறையான வழியோடும் ஒரு மறுமலர்ச்சியை மாற்றத்தை உருவாக்கும் வழிகாட்டிகளின் வரிசையில் முன் நிற்பவர் பாரதி என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் (பாரதியின் அறிவியல் பார்வை),

பாரதியார், “காலத்துக் கேற்ற வகைகள் – அவ்வக்

காலத்துக் கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்று அறுதியிட்டு உறுதியாய்க் கூறியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் ‘பழம் பெரும் நூல்கள் பயன்படக் கூடிய அளவிலே இடம் பெற வேண்டும்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். அவரது பயணத்திலே அறிவியல் பார்வை அணையா விளக்காகப் பயன்பட்டது என்கிறார்.

மூன்றாவது அத்தியாயத்தில் (புதுமைப் பெண்கள்) மிளகாய்ப் பழச் சாமியார் என்ற கதையில் சாமியார் வாயிலாகப் பாரதியார் கூறும் பின் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார் திரு வா.செ.குழந்தைசாமி.

“ உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை”

“மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும்” என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார். ‘பட்டங்கள் ஆளவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று அவர்களாகவே அறிவித்துக் கொண்டதையும் பாரதியார் மகிழ்ச்சியோடு பதிவிடுகிறார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் – இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்பது அவர்கள் சட்டம்.

‘புதுமை எனில் இது புதுமை; புரட்சி எனில் இது புரட்சி’.

 நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட பெண்களுக்கு அப்படிப்பட்ட புதிய நிலையை உருவாக்குவது கல்வியே என்பது பாரதியாரின் முடிவு. ‘ சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற புதுமைப் பெண்ணின் முழக்கத்தையும் அதற்கான அடிப்படை – ‘அறிவு நிலை’ என்ற உண்மையையும் நூலாசிரியர் இங்கு விளக்குகிறார்.

அடுத்து நான்காம் அத்தியாயமான ஆயிரம் தொழில் செய்குவீர் என்ற அத்தியாயத்தில்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

என்று பாரதியின் நெஞ்சம் புழுங்குவதையும் அந்தப் பஞ்சத்தை நீக்க செல்வநிலை உயர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுவதையும் நூலாசிரியர் நிலை நிறுத்துகிறார். பாரதியாரது அறிவியல் அணுகுமுறை தொழில் வளர்ச்சி ஏற்படுவது இயல்பானதே என்பதைக் கொள்வதால், “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே

இயந்திரங்கள் வகுத்திடுவீ ரே “ என்று அவரை வேண்டுகொள் விடுக்கச் செய்கிறது என்றும், ‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே’ என்றும் அவரைப் பாட வைக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்த ஐந்தாம் அத்தியாயத்தில் (பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம்)

‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்க’ விழைந்தவர் பாரதி என்று கூறும் நூலாசிரியர் அதற்கு அடிப்படைத் தேவையாக, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ ‘பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்” என்று கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்வி பெற்ற மக்களே தான் இனிச் செல்வம் பெற முடியும் என்பது இன்றைய காலகட்டத்தின் நிலை.

ஆகவே தான் அவர் “அறிவே வலிமை – கல்வியே செல்வத்தின் தாய்” என்று முழங்கினார்.

‘மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’ என்பது அடுத்த அத்தியாயம். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று முழங்கியவர் பாரதியார்.

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அதே சமயம் தமிழின் இன்றைய குறைபாடுகளைப் பற்றியும் அவர் எண்ணுகிறார். ஆகவே “புதிய செய்தி, புதிய புதிய யோசனை; புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.

“புதிய நுட்பங்கள் கூறும் கலைகள் தமிழினில் இல்லை; அவற்றைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை; மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று கூறிய ஒருவனை “என்று அந்தப் பேதை உரைத்தான்” என்று கூறிச் சாடுகிறார்.

“இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்று வானம் அளந்தது அனைத்தும் அளந்த வண் மொழி வாழ வழி கூறுகிறார் அவர்.

இன்றைய உலகில் 100,000 பத்திரிகைகள் பல மொழிகளில் வருகின்றன. இன்று ஆண்டு தோறும் 12,00,000 ஆய்வுக் கட்டுரைகள் உலகில் வெளியாகின்றன. எல்லா வகையான துறைகளையும் சேர்த்துப் பார்த்தால் அமெரிக்காவில் 80,000 தலைப்புகள் உள்ளன. சோவியத் ஒன்றியம் 85000 தலைப்புகளை வெளியிடுகிறது. ஆகவே தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்பதை நூலாசிரியர் மிகச் சரியாக இப்படி ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

ஏழாவது அத்தியாயத்தில் (ஒப்பிலாத சமுதாயம்) – எப்போதுமே புதுமை, புதிய உலகு, புதிய சமுதாயம் ஆகியவை பற்றிய எண்ணங்களை பாரதியார் வெளியிடுகிறார். அவர் சொற்களில் இந்தக் கனவுகளே ஒளி விடுகின்றன என்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் கூறுகிறார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது தான் பாரதியின் நிலைப்பாடு.

இறுதி அத்தியாயத்தில் (மனிதர் தம்மை அமரர்களாக்குவோம்) பாரதியின் பாடல்களில்

1) பாரதிக்கு மனிதனின் ஆற்றலில் அளவு கடந்த நம்பிக்கை

2) மனிதன் உயர்ந்து தானே அமர நிலை அடையக்கூடியவன்

என்ற எண்ணம் ஆகிய இரண்டையும் காணலாம் என்பதை திரு குழந்தைசாமி சுட்டிக் காட்டுகிறார்.

‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து

மனிதர் தம்மை அமரர்களாக்க” என்று இப்படி மகத்தான கனவைக் கண்டவன் பாரதி. அவர் பார்வையின் உயரத்தை அவரது சொற்களிலேயே காணலாம் என பல சான்றுகளைக் காட்டி நிறுவி நூலை முடிக்கிறார் நூலாசிரியர்.

பாரதியாரின் அறிவியல் பார்வையைத் தெள்ளத் தெளிவாக அலசி ஆராயும் இந்த நூல் அறிவியல் நோக்கில் அமைந்துள்ள நல்ல ஒரு நூல்.

இந்த நூலுக்கு பாரதி பக்தர் ம.ப.பெரியசாமித் தூரன் அழகிய  முன்னுரை ஒன்றைத் தந்துள்ளார்.

அறிவியலிலும் பாரதி முன் நிற்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டி விளக்கும் இந்த நூல் பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.

tags- பாரதி, அறிவியல் பார்வை, வா.செ.குழந்தைசாமி,

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1 (10,232)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,232

Date uploaded in London – 19 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1 (10,232)

ரிக் வேதத்தில் உழவு, விவசாயம், வேளாண்மை பற்றிய ஏராளமான குறிப்புகளும் பாடல்களும் உள்ளன ; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் மிதியடி , செமை அடி , தடியடி கொடுக்கும் பாசுரங்கள் இவை. ரிக்வேதப் புலவன் செப்பியதை பாரதியும் வள்ளுவனும் பிற்காலத்தில் எதிரொலித்தத்தைக் காண்போம்.

ரிக்வேத ஸம்ஸ்க்ருதப் பாடல்கள், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் விக்கிபீடியா முதலிய வெப் சைட்டுகளில் அனைவர்க்கும் இலவசமாகக் கிடைக்கும். ஆயினும் புத்தகங்களில் படிக்கும்போதுதான், அவர்கள் எழுதிய அடிக்குறிப்புகள் அவர்களுடைய உள் நோக்கத்தை அம்பலப்படுத்திவிடுகிறது  .

வேத கால இந்துக்களுக்கு  ‘ஆரியர்கள்’ என்று ஒரு இன முத்திரை குத்தி, ‘தஸ்யூக்கள் தாஸர்’களுக்கு திராவிட அல்லது பூர்வ குடி முத்திரை குத்தி இந்தியாவை பிளவுபடுத்தியது மார்கசீய, மாக்ஸ் முல்லர் கும்பல்கள் . வேத கால இந்துக்களுக்கு விவசாயம் தெரியாது, அவர்கள் ஆடு மாடு மேய்த்த நாடோடிக் கும்பல் என்றும் முத்திரை குத்தி அயோக்கியத்தனம் செய்தது இந்தக் கும்பல்.

இவர்களை எல்லாம் தவிடு பொடி ஆக்க, சொற்தேரின் சாரதியாம்  பாரதி, எல்லா இடங்களிலும் பாரத நாட்டை ஆரிய நாடு என்று பாராட்டி, முடிந்த இடங்களில் எல்லாம் ஆரிய என்பதை உண்மைப் பொருளில் பயன்படுத்தினார். ஆரிய என்றால் ‘படித்தவன்’, ‘பண்பாடு மிக்கவன்’, ‘உயர்ந்தவன்’, ‘உன்னதமானவன்’ என்ற பொருளில் பாடல்களில் இயன்ற மட்டும் பயின்றான் பாரதி.

மற்றோரு பாடலில் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்றான். இது ரிக் வேதக் கருத்தாகும் . ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் பரவிக்கிடக்கிறது உழவு பற்றிய குறிப்புகள். இதனால் எந்த அரை  வேக்காடும் இது பிற்கால வேதப் பகுதி என்று பிதற்றும் வாய்ப்பும் தவிடு பொடி !

ரிக்வேதத்தின் மிகப்பழைய பகுதி என்று கருதப்படும் நாலாவது மண்டலத்தில் உள்ள விவசாயப் பாட்டு , அக்காலத்தில் நிலச் சுவான்தார்கள்,  அவர்களுக்குக் கீழே விவசாயத் தொழிலாளர்கள் இருந்ததையும் காட்டுகிறது என்கிறார் பகவான் சிங். அவர் வேதகால ஹரப்பன்கள் THE VEDIC HARAPPANS BY BHAGAWAN SINGH என்ற விரிவான ஆதாரபூர்வமான நூல் எழுதி சிந்துவெளி நாகரீகம் வேத கால நாகரீகமே என்று நிரூபிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது. அவர் 55 விவசாய சொற்களை ரிக் வேத துதிகளின் எண்களுடன் கொடுத்துள்ளார். அதில் பல தமிழ் சொற்கள் !

XXX

ஒன்பதாவது மண்டலத்தில் (RV.9-112-3)ஒரு புலவர்,

“நான் ஒரு புலவன்; என் அப்பா ஒரு டாக்டர்; என் அம்மா ஒரு மாவாட்டி” என்கிறார். அந்தப் பெண்மணி சோள மாவு அரைக்கிறார். ஆக ஒரே குடும்பத்தில் பல தொழில் புரிவோர் இருந்தனர்.

வேதம் முழுதும் ‘ஹவிஸ்’ என்னும் சோற்று உருண்டை நெய்யுடன் தீயில் ஆகுதி கொடுக்கப்பட்டது. இது நெல் விளைச்சல் பற்றியது. ‘யவ’ என்பது வேதம் முழுதும் வருகிறது. இது பார்லியை மட்டும் குறிப்பதல்ல. எல்லா தானியத்துக்கும் பொதுவானது என்று வெள்ளைக்காரப்பயலே ஒப்புக் கொண்டுள்ளான். இன்று நாம் பயன்படுத்தும் ‘தானியம்’ , ‘களம்’ முதலியன அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது!

சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் வரும் ‘உழவர் ஓதை’ (FARMERS SONGS) என்பது ரிக் வேதத்தில் உள்ளது. மாணிக்க வாசகர் முதலிய அடியார்கள் தானியத்தைக் குத்தும்போது பாடும் ‘உலக்கைப் பாட்டு’ முதலியவற்றை நமக்கு அளிக்கின்றனர். முக்கூடற்பள்ளு போன்ற பாடல்களில் நாம் நெல் வகைகள் மற்றும் உழவர் பாட்டுக்களைப் பாடுகிறோம். பல்லவியுடன் அமைந்த பாடல்களும் உழவர் பாடல்களாக ரிக் வேதத்தில் உள்ளன. உலக மஹா ஜீனியஸ், பேரறிஞன் வியாசர் தொகுத்ததில் நமக்குக் கிடைத்த பாடல்களிலேயே இவ்வளவு விஷயங்கள்; கிடைக்காமற் போன வேத ‘சாகை’களோ ஆயிரம் !

சீதா தேவி

சீதா என்று நாம் வணங்கும் சீதா தேவியே ‘வரப்பு’ தெய்வம். அவளை ஜனக மஹா மன்னன் பீஹார் மாநிலத்தில் வயல் வரப்பில் கண்டு எடுத்ததால் அவள் பெயர் சீதா. அவள் மட்டுமின்றி நான் இன்று பிரஸ்தாபிக்கப்போகும் அற்புதமான விவசாயப் பாடலில் சு’னா’, ‘சீரா’ என்ற தேவிமார்களும் வருகின்றனர். இவர்கள் எல்லாம் விவசாய சொற்களை கடவுள் ஆக்கிய உருவகம்(PERSONIFICATION) என்பர் வெளிநாட்டார். ஆனால் உலகில் விவசாயப் பாட்டே வேறு எந்த பழைய நாகரீகத்திலும் கிடையாது.

நமக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கிரேக்க மொழியில் பல விவசாய, தாவர தேவதைகள் உள்ளன. கிரேக்க மொழிக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளில் பத்து குறள்கள் விவசாயம் பற்றி உள்ளது.

ருது என்ற பருவம் ஆறு வகை என்ற குறிப்பும் ரிக் வேதத்தில் காணக்கிடக்கிறது. இதைத் தமிழர்கள் அப்படியே எடுத்துக்கொண்டு பருவங்களை ஆறு என்று வகுத்தனர். ரிக் வேத இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்து அவை பற்றியும் மழை  பற்றியும் விரிவாகப்  பாடுவது அந்த சமுதாயத்தின் பிரதானத் தொழில் விவசாயம் என்பதைக் காட்டுகிறது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இரண்டு ரிக் வேத விவசாயப் பாடல்களை ( RV.4-57  & RV 10-101) திருக்குறளின் உளவு பற்றிய பாடல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

TO BE CONTINUED……………………….

tags– உழவுக்கும் தொழிலுக்கும், , ரிக்வேதம், பாரதி,வள்ளுவர், விவசாயம், உழவு

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63 (Post No.10,215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,215

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63

பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள் : T.N. இராமச்சந்திரன்

      சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளையின் சார்பில் 7-3-2002 அன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகச் சார்பில் ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்திய அன்றே இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

48 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பாரதி ஆய்வுகள் – இதுவரை, பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று அத்தியாயங்களில் சிந்தனையைத் தூண்டி விடும் விஷயங்கள் அடுக்கடுக்காகத்த் தரப் படுகின்றன.

முதல் அத்தியாயம் மிக விரிவாக பாரதியார் பற்றிய ஏராளமான நூல்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

‘பாரதியார் ஒரு விராட் புருஷர்; அவரை உங்கள் சிறு விரலால் அளந்து காட்டத் துணியாதீர்கள்’ என்ற இந்த நூலாசிரியரின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது.

பாரதியாரைப் பற்றிய பல விவரங்கள் பிழைபடப் பல நூல்களிலும் தரப்பட்டுள்ளன. (சில விவரங்களை தமிழ் உலகம் அறியவே இல்லை.)

இவற்றைக் களைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த ஆதங்கம்.

பாரதியின் நூல்களுக்குப் பர்மா அரசாங்கம் தடை விதித்தது. அதையொட்டித் தமிழ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தடை விதித்தவர் பின்னாளில் காங்கிரல் அமைச்சராக விளங்கிய பி. சுப்பராயன் அவர்கள். இதைக் க்ண்டு

கொதித்தெழுந்தார் சத்தியமூர்த்தி. அவரது கிடுகிடுக்க வைக்கும் ஆங்கிலப் பேச்சுக்கள் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்கன.

பாரதியார் நண்பர்கள் பற்றி வந்துள்ள விவரங்களில் கபாலி சாஸ்திரியார் இடம் பெறாததை சுட்டிக் காட்டும் நூலாசிரியர் அது பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பாரதியாரைப் பற்றி வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் திரு இராமச்சந்திரன்.

இதுவரை வந்த ஆய்வுகளை முதல் அத்தியாயத்தில் சித்தரிக்கும் அவர், இரண்டாவது அத்தியாயமான ‘பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் முயற்சிகளை விவரிக்கிறார்.

திரு சீனி விசுவநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள கால வரிசைப்படியான பாரதியார் எழுத்துக்கள் என்ற நூலில் 263 தலைப்புகளில்  24-1-1897 தொடங்கி 29-12-1906 வரையிலான எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

பாரதியாரின் வடமொழி அறிவு பற்றித் தனி ஒரு நூல் வேண்டும் என்ற நூலாசிரியரின் கூற்றை அனைவரும் ஆமோதிப்பர். 

சூரத் காங்கிரஸ் கூட்டத்தை வருணித்து மகாகவி மூன்று மொழிகளைக் கலந்து  காங்கிரஸ் கீதை என்று ஒரு பனுவல் படைத்தார்.

யாரும் அறியாத செய்தி இது. இதில் உள்ள ஒரு சுலோகத்தை – தேவி வஸந்தானந்தா தந்ததை – இந்த நூலில் காண முடிகிறது:

“தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேத யுயுத்ஸவஹ

மாமகாகஹ எக்ஸ்ட்ரீமிஸ்ட் மாடரேட்ஸ் சைவ கிமகுர்வத ஸஞ்சயா”

பாரதியின் பல கவிதைகளில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருள் கண்டு அதை விவரிப்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.

காணி (நிலம் வேண்டும் என்ற பாடல்) அம்பு (அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் என்ற பாடல்) ஆகிய சொற்களுக்கு உண்மையான அர்த்தத்தை விவரிக்கிறார்.

சீனி.விசுவநாதன் வெளியிட்டுள்ள பாரதி நூற்பெயர்க்கோவை என்ற தொகுப்பு நூலில் சுமார் 370 நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இதில் 275 நூல்கள் விவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர் பற்றி 1982  முடிய 1,50,000 நூல்கள் வெளியாகி இருப்பதையும் வருடத்திற்கு சுமார் 3000 நூல்கள் ஷேக்ஸ்பியர் பற்றி வெளியாகி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார் திரு இராமச்சந்திரன். ஷேக்ஸ்பியர் பற்றிய வினா விடை நூல்கள் நிறைய உள்ளன. அது போல பாரதியார் பற்றியும் வினா- விடை நூல்கள் வேண்டும். 1000 கேள்விகள் கொண்ட நூறு நூல்களை வெளியிட வேண்டும் என்பது இவரது ஆசை. அவ்வளவுக்கு விஷயங்கள் உள்ளன.

மூன்றாம் அத்தியாயமான, ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும், பாரதியார் போற்றிய நம் நாட்டு, வெளி நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்பு வரையப்பட வேண்டும். உலக அளவில் பாரதியார் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற முத்து முத்தான யோசனைகளை எதிர்கால ஆய்வாளருக்குத் தருகிறார் நூலாசிரியர்.

பல பிழையான தகவல்களை அடியோடு களைந்து அதிகாரபூர்வமான பாரதியார் வாழ்க்கை பற்றிய நூல் ஒன்று வேண்டும் என்பதைச் சொல்வதோடு இனி பிழையான கருத்துக்களைச் சொல்லவும் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

நூலின் இணைப்பாக மாதிரிப் புதிர் வினா- விடை ஒன்றும் தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால ஆய்வுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் நல்லவொரு அரிய சேவையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.

பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

***

சேக்கிழார் அடிப்பொடி திரு T.N. இராமச்சந்திரன் பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தையும் கரைத்துக் குடித்தவர். வழக்கறிஞராக இருந்தவர் தமிழ் இலக்கியத்தின் பால் தீராக் காதல் கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார்; சுமார் 50000 நூல்களை தனி ஒருவராகத் தனக்காகச் சேகரித்து வைத்த பெரும் மேதை. 18-8-1934இல் பிறந்த அவர் சமீபத்தில் 6-4-2021 அன்று மறைந்தார்.

tags- பாரதி , எதிர்கால ஆய்வுகள் , T.N. இராமச்சந்திரன், 

பாரதி பாட்டில் ரிக் வேத வரிகள் (Post 10081)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,081

Date uploaded in London – 11 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடல் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகள் போல இருக்கின்றன. பாரதியார் காசியில் தங்கிய காலத்தில் வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி என்ற சொல் வந்தது)

எடுத்துக் காட்டாக

எனக்கு வேண்டும் வரங்களை

     இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலனமில்லாமல்,

     மதியி லிருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

     நிலைவந்  திடநீ செயல்வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறுவய   

     திவையுந் தர நீ  கடவாயே.

என்று பாரதியார் பாடுகிறார் . நான்கு  வேதங்களிலும் உள்ள காயத்ரீ  மந்திரத்தில் எல்லோரும் அனுதினம் வேண்டுவது ‘மனதில் ஒளி உண்டாகுக; அதாவது ஞான ஒளி உண்டாகுக’ என்பதே. அதை இந்தப்பாட்டின் மூன்றாவது வரியில் காண்கிறோம். ‘கனக்கும் செல்வம், நூறு வயது’ என்ற வரிகள் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. பிராமணர்கள் தினமும் சொல்லும் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற யஜுர் வேத மந்திரத்திலும் வருகிறது 

பாரதியாரே காயத்ரீ மந்திரத்தை பாஞ்சாலி சபதத்தில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்

எல்லா இந்துக்களுக்கும் ‘ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ’ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்


“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” —

என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

பாரதியார் பாடல்களில் வேத உபநிஷத் வரிகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டதை முந்தைய கட்டுரைகளில்  (கீழே இணைப்புகளைக் காண்க) கொடுத்தேன். இங்கு மருத் பற்றிய வரிகளை மட்டும் ஒப்பு நோக்குவோம்

அவரே ‘தமிழில் பழ மறையைப் பாடுவோம்’ என்றும் ‘வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுவதாலும் பழைய  மறையை மொழி பெயர்த்ததை சொல்லாமல் சொல்லுகிறார் .

பாரதியாரின் மழை , புயற் காற்று பாடல்களில் ‘மருத்’ துதிகளின் தாக்கத்தைக் காணலாம்:-

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்

Xxxx

ரிக் வேத மந்திரங்கள் இதோ:–

ரிஷி கௌதம ராஹுகணன் 1-85

1-85-1

பாறைகளைப் பொடிப்பொடியாக்குகிறான் மருத்

1-85-8

போர் வீரர்களைப் போலும், தீரர்களைப் போலும் போராடுகிறார்கள். எல்லாப் பிராணிகளும் மருத் தேவர்களைக் கண்டு அஞ்சுகின்றனர் .

1-85-10

மருத்துகள் தங்கள் பலத்தால் கிணறுகளை மேலே உயர்த்தினார்கள்; மலையைப் பிளந்தார்கள்;

1-85-11

கனலாகச் சென்ற மேகத்தை  இங்கே செலுத்தினார்கள்; நீர் ஊற்றைப் பொழிந்தார்கள்

1-86-10

எங்கும் பரவிய இருளை அகற்றுங்கள்;

1-87-1

பகை அழிப்பவர்கள் ; மிகுந்த பலம் வாய்ந்தவர்கள்; பலவித சப்தம்/ தீம் தரிகிட  தாளம் / உண்டாக்குவோர்;

1-87-2

பறவை போல மேகங்கள் எங்கும் செல்வது உங்களால்தான்.மேகத்தோடு மேகம் மோதி மழை  கொட்டுகிறது.

1-87-3

கணவன் பிரிந்து சென்ற பின்னர் நடுங்கும் மனைவி போல பூமி நடுங்குகிறது.

1-87-6

மருத்துக்கள் சூரிய கிரணங்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு நன்மை செய்ய மழையைக் கொட்டுகிறார்கள்

1-88-1

நீங்கள் முழங்கும் கீதங்கள் ! மின்னல் என்னும் ஈட்டி உடையோர்; பறக்கும் குதிரைகள் ; பறவைகள் போல பறந்து வந்து உணவு கொடுங்கள் / தானியம் விளையட்டும்

1-88-2

தேர் சக்கரத்தால் பூமியை அடிக்கிறார்கள்; தங்கம் போல பளபளக்கும் ஆயுதம்/ மின்னல் ஏந்தி வந்து பகைவர்களை/ வறட்சி கொல்லுங்கள்

1-88-3

உங்கள் உடல் உறுப்புகளில் ராஜ்யத்தை வெல்லும் ஆயுதங்கள் உண்டு

1-88-5

தங்கச் சக்கர தேரும் இரும்பு ஆயுதமும் கொண்டு பகையை வெல்லுகிறீர்கள்

XXX

அகஸ்தியர் பாடிய பாடல்களில் சில மந்திரங்களைக் காண்போம்

1-166-4

உங்கள் குதிரைகள் தங்கள் திறத்தால் உலகங்களை சுற்றுகின்றன, உங்கள் வருகையால் எல்லா உலகங்களும் மலைகளும் கலங்குகின்றன. போரில் ஈட்டியால் குத்தப்படுவது போல மழை பொழிந்து தள்ளுகிறீர்கள் .

1-166-10

உங்களுடைய ஆயுதங்களின் தாரைகள் கூர்மையாக இருக்கின்றன.

1-167-10

மருத்துக்களே ! அருகிலோ தொலைவிலோ  உங்களை விட எவனும் பலத்தின் எல்லையை அடையவில்லை; நீங்கள் தீரத்திலும், திண்மையிலும் உயர்ந்து, பகைவர்களைக் கடல் போல வெல்கிறீர்கள்

1-168- 4

பிரகாசிக்கும் கண்கள் உள்ள மருத்துக்கள் (மின்னல், இடி) திறமான மலைகளையும் ஆட்டினார்கள்

1-168-5

மின்னல் ஆயுதம் உடைய மருத்துக்களே !தாடை களின் நடுவில் நாக்கு இருக்கிறது. உங்களை யார் அப்படி நாக்கு போல ஆட் டுகிறான்?

XXXX

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்….. என்று துவங்கும் ஊழிக் கூத்து பாடலிலும் சில வரிகள் அப்படியே மருத் தேவர்களைப் பற்றியதே. ரிக் வேதத்தில் இந்திரன் பற்றிய பாடல்களிலும் இதைக் காணலாம்

XXXX

பர்ஜன்ய என்ற மழைக் கடவுள் பாடல்களிலும் மழையின் ,

காற்றின் கோர தாண்டவத்தைப் படிக்கலாம்.

XXXX

34. ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்

https://tamilandvedas.com › தமிழ…

  1.  

11 Dec 2014 — “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)


Tagged with ஆதித்ய – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

  1.  

29 May 2016 — ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன் … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact : swami_48@yahoo.com.


கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள் ! (Post No …

https://tamilandvedas.com › கண்…

  1.  

7 Aug 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம் … ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்

—SUBHAM—-

tags – பாரதி, ரிக் வேத, வரிகள், ‘திக்குகள் எட்டும் , ‘மருத்’ ,MARUTS ,காற்று, வெடிபடு மண்டத் திடிபல

பாரதி மீது (நாராயணன்) கவிதைகள் (Post No.10066)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,066

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் ஞானமயம் ஒலி பரப்பு கொண்டாடிய பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் லண்டன் ராணி சீனிவாசன் வாசித்த லண்டன் நாராயணன் எழுதிய பாரதி கவிதைகள் ; (தேதி 6-9-2021)

பாரதிரும் பாரதி

தேன் மதுரத் தமிழில்

தெளிவானக் கவிதையில்

தேரோட்டிய கவிஞன் பாரதி பாரத

தேசத்தின் விடுதலை இயக்கத்தில்

தேயாத புகழ் பெற்ற சாரதி !

 வேதிய  குலத்தோ னாயினும்

சாதியெனும் பிரிவில் சரியாது

சந்தனம் பூசி அறவணைத்தானோ

அந்தண ரல்லாரையும்  சாதி

இரண்டொழிய  வேறில்லையென்று

வறுமை இவன் வாழ்வில் அதிக

உரிமை கொண்டாடினும் விலகாதோ

நேர்மை யெனும் இவன் போர்வை

போறாமையிலும் பொறுமை நகையாக

எளிமையிலும் என்றும் இன்புற்றான்

கவிதையெனும் கடலில் கப்பலோட்டிக் கரை

கண்டானோ பக்தி புரட்சிக்விதை நாட்டுப்பற்று

ஆன்மீகமெனும் துறைகளாகக் காவியங்ள் படைத்துக்

கலங்கரை விளக்காக ஏற்றி வைத்த ஈடில்லாக் கவி

கலங்காமல் கலக்கினானோ நாடாண்ட அன்னியனை!

எழுத்தென்னும்  ஏவுகணையை கவிதை

எனும் வில்லில் பொருத்தி  வைத்த இலக்கோ

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்

என்றுமடியுமெங்கள் அடிமையில் மோகம்

ஐய்யோ! தாகம் தீரா மரணமோ இக்கவிக்கு

வந்துதித்து வளர்ந்த  நாடோ பரதேசியாதிக்கமாக

வறுமையே வாழ்க்கை வாக்கே அவன் செல்வமாக

வருந்தியதோ அன்னியனாதிக்கமும் சமூகக்கேடுமாக

வாழிய பாரதம் வாழிய சுதந்திரமென வாழ்ந்த தமிழன்

வீடடைந்தானோ விடுதலை வேட்கையிலே

நாராயணன்,

(Dr A.Narayanan, London)

பாரதிரும் = பார் + அதிரும்

XXXX

பாரதிக்கோரஞ்சலி

தீக்குள் விரலை விட்டுக் கரி எடுத்துப்

பாரதிரும் கவிதை தீட்டியோனே பாரதி

போருணர்ச்சிப் பொழிவ தவன் மொழி

சமூகக் கூச்சலே அவன் கவிதையின்

பேரிரைச்சலாய் சாதி இரண்டொழிய

வேறில்லையெனப் பறைச் சாற்றிக்

கோத்திரம் கேட்டாலாத் திரமடைந்து

முப்புரி நூலோ மூவர்ணத் துரிமை

யென சரித்திரம் படைத்தோனுக்கு

தரித்திரமே உதாரமென வறுமைக்கு

வருமானம் புலவன் வறுமையே என

வருத்தமடையா இவனே புலவர்களில்

புரவலன், ஐய்யோ! என்னே!கொடுமை

காலனின் கணிசம் இவன்

கொண்ட ஆயுளிலும் வறுமை!

நாராயணன்

(DR A. NARAYANAN, LONDON)

Xxx

Other Poems written by Dr A Narayanan

உதிரும் இலைகள்

வீசிய தென்றலில் விழுமோ இலைகள்

பசுமையோ பழுத்ததோ வெனத்  தருவோ

உணரா இலையி னிழப்பை காற்றோ

அறியா இலையின் நிலையை

உடைமையில் உரிமை இலைக் கில்லை

கடமையில் பார பட்சம் காற்றுக் கில்லைப்

போன்றோ ஆத்மா உடலுக்கும் உயிருக்கும்

ஒப்பந்தம் முடிய ஒண்டுமோ வெங்கோ கண்டு

கொள்ளாது துய்த்தது மரணவாய் முதியோனோ

இளையோனாக இருப்பதுமில் லாததும்

இயற்கையை இறைவ னியக்கும் வழி

நாராயணன்

xxxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோரு மென்றும் வாழ்த்துவர்

நிறைவான செல்வன் பறை சாற்றிச் செய்யுமறம்

தரை மட்ட நிலையில் வளரும் புல்லாகும்

குறை செல்வமுள்ளோன் மறைவாய் செய்யுமறம்

உறைவிடமோ இறைவனின் பாதமே

நாராயணன் 

XXX

  மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

நாராயணன்

-subham–

tags –  பாரதி , நாராயணன் கவிதைகள், 

பெண்கள் வாழ்க- Part 20; பெண்களைப் பற்றிய பொன்மொழிகள் (Post.9547)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9547

Date uploaded in London – –29 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்களைப் பற்றிய பாரதி பொன்மொழிகள்

(தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)

1.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்

Xxxx

2.கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்தி பெண்ணை கட்டிக் கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

3.சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

xxxx

(பிஜிதீவு கரும்புத் தோட்ட்த்தில் ஹிந்து மாதர்க்கு நேர்ந்த கொடுமைகள்)

4.பெண் என்று சொல்லிடிலோ – ஒரு

பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது

எண்ணம் இரங்காதோ? – அந்த

ஏழைகள் அங்கே சொரியும் கண்ணீர் வெறும்

மண்ணிற் கலந்திடுமோ – தெற்கு

மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்

கண்ணற்ற தீவினிலே – தனிக்

காட்டினிலே பெண்கள் நடுங்குகிறார் – அந்த

கரும்புத் தோட்டத்திலே

xxx

5.தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ! – பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

xxxx

6.புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொது வான் வழக்கமாம்;

xxx

7.போற்றி,போற்றி! ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்

8.ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

சிவன் உடலிலே பாதி மலைமகள், அயன் (பிரம்மன்) நாவினிலே சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பில் திருமகள் ஆணில்லாமல் பெண் இயங்க முடியாது பெண்ணில்லாமல் ஆண் இயங்க முடியாது என்று இந்து மதம் உணர்த்துகிறது. இதைத்தான் பாரதி தனது பாடலில் அழகாக விளக்கியுள்ளார்.

8a.பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்

  • கம்பராமாயணம் ஆரண்ய 627
  •  

(சிவன் தனது உடலில் ஒரு பாகத்தில் உமை அம்மையை வைத்தான். தாமரையில் வீற்றிருக்கும் லெட்சுமியை விஷ்ணு தனது மார்பில் வைத்தான். பிரம்மனோ— சரஸ்வதியை தனது நாவில் வைத்தான்.)

xxxx

9.உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ – உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

xxxx

9a.O woman! lovely woman!

Nature made thee to temper man:

we had been beasts without you. – OTWAY

பெண்ணே அழகிய பெண்ணே

ஆணை கட்டுக்குள் வைக்க அல்லவோ

இயற்கை உன்னைப் படைத்தது

நீ இல்லாதபோது நாங்கள் மிருகமாகி இருந்தோம் – OTWAY

xxxx

10.சிங்கத்தில் ஏறி சிரிப்பாள் உலகழிப்பாள்

சிங்கத்தில் ஏறி சிரித்து எதையும் காத்திடுவாள்

11.வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு

வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்

பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து

பார்க்கினும் பெறல் சால அரிதுகாண்.

xxxx

12.பூட்டைத் திறப்பது கையாலே நல்ல

மனந்திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே

xxxx

13.பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம் ஓம்

xxxx

14.நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர்

அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்தி டுவாள்.

xxxx

15.நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்

xxxx

16.மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில்
எந்த வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம்
இந்த நாட்டிலே

xxxx

17.ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்

QUOTATIONS FROM POET BHARATIYAR

xxxx

TO BE CONTINUED………………………………………………

tags — பெண்கள் வாழ்க Part 20,   பொன்மொழிகள் , பாரதி 

பாரதியே மீண்டும் பிறந்து வா!!! (Post 9055)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9055

Date uploaded in London – – 20 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

www.tamilandvedas.com சஇல் வெளிவந்த ச.நாகராஜன் தொகுத்த பாரதி போற்றி ஆயிரம், இதோ தொடர்கிறது, இதோ kattukutty  மிகப் பழைய தமிழ் இதழ்களிலிருந்து தொகுத்துத் தரும் சில புதுக் கவிதைகள்!

பாரதியே மீண்டும் பிறந்து வா!!!

(என் கவிதை தொகுப்பிலிருந்து) –

By Kattukutty

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையை கொளுத்துவோம்

என்ற பாரதியே!!!

அழகிப் போட்டிகளில் தங்கள் “தங்க”

அடையாளங்களைக் காட்டி

பரிசு பெறும் பெண்களைப் பார்!!!

நாகரீகம் என்ற பெயரில் நடை,உடைகளை

மாற்றித்திரியும் நங்கைகளைப்பார்!!!

அழகு என்ற பெயரில் அரை குறையாய்

திரியும் பேதைகளைப் பார்………

பணத்திற்காக தன் உடலை விற்கும்

பெண் பாவைகளைப் பார்……….

ஆபாசப் பொருள் ஆக்காதே என

கூக்குரலிட்டு அரைகுறை உடைகளுடன்

அழகிப்போட்டிகள் நடத்தும்

மாதர் சங்கங்களைப் பார்……..

இவ்வளவையும் பார்த்த பின்பும் கூடவா

உனக்கு மனமில்லை மீண்டும்

பிறக்க பாரதியே????

மீண்டும் பிறந்து வா

இங்கு மாதர் தம்மை இழிவு செய்வோரை

கொளுத்த அல்ல…….

இழிவு செய்யும் அந்த

மாதரையே கொளுத்த……………. என். வீர விஜயன் கோவை

பாரதியே…….நீ இல்லை என்றால்

காந்தி இல்லை என்றால்

அஹிம்சை தெரிந்திருக்காது………….

புத்தன் இல்லை என்றால் வாழ்வின்

தத்துவம் தெரிந்திருக்காது…….

இயேசு இல்லை என்றால் அன்பின்

அர்த்தம் புரிந்திருக்காது……….

ஹிட்லர் இல்லையென்றால் சர்வாதிகார

கொடுமை தெரிந்திருக்காது……….

பாரதியே நீமட்டும் இல்லையென்றால்

புரட்சிக் கவிதையே பிறந்திருக்காது!!!

                             டி.சந்திரசேகரன்அய்யம்பாளையம்

Xxx

மீசை முளைக்காத பாரதிகள்

உண்ணாமல், உறங்காமல்,சம்பாதித்து

அள்ளிக் கொடுத்து எங்களைத் தள்ளி விட்டீர்கள்…….

அன்று முதல் இன்று வரை சுவற்றில் அடித்த பந்து போல

பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும்

வந்து வந்து போகின்றோம்

நீங்கள் எங்களை உருவாக்கவில்லை,

நாங்களும் உருப்படவில்லை

பெற்றோர்களே இனிமேல் நாங்கள்

மீசை முளைக்காத பாரதிகள்…….

பாரதியே உங்களின் வார்த்தைகளே

எங்கள் நெஞ்சுக்கு உரங்கள்…………

சகோதரிகளே நமது ஒவ்வொரு வீட்டிலும்

மீசை முளைக்காத பாரதிகளை

உருவாக்கிட வேண்டும்…….

நாம் ஒவ்வொருவரும் அவர்களின் தாய்

என மார் தட்டிட வேண்டும்!!!                     

சி. மரகதம்,சமத்தூர்

xxxxx

மீசைக்காளிபாரதியே !!!

பாரதியே, ஏழு வயதில் பாட்டெழுதிய

இலக்கிய தீபமே!!!

விதையிலேயே விழுது விட்ட

ஆல மரம் நீ!!!

கயமையைக்கண்டு

கனலாய் எழுந்த மீசைக்காளியே!!!!

மீசை மட்டுமா பெரியது, உனது

ஆசை கூட பெரியது தான்!!!

நீ காணி நிலத்தினுள் சொர்க்கத்தையே

அல்லவா கேட்டாய்???

எமன் கூட உன்னிடம் எருமையில்

வரப் பயந்து மாறுவேடமிட்டு

யானை உருவில் வந்தான்!!!

உனது சவ ஊர்வலத்தில்

ஜனங்கள் திரளாததே சரி எனப்படுகிறது!!!

இறப்பில்லாதவனுக்கு

இறுதி ஊர்வலம் எதற்கு????                 அ. பால முருகன், பாகாயம்

***

tags- பாரதி,  பிறந்து வா,