
(மன்மத வருஷம்,கார்த்திகை/மார்கழி)
இந்த மாதக் காலண்டரில், பலம், மானம் பற்றிய 31 அரிய சம்ஸ்கிருத பழமொழிள் இடம் பெறுகின்றன.
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 26 நவம்பர் 2015
Post No:2363
Time uploaded in London :– 8-36
(Thanks for the pictures)
முக்கிய நாட்கள்: டிசம்பர் 11- பாரதி பிறந்த நாள், 17- மார்கழி மாதப் பிறப்பு, 21 வைகுண்ட ஏகாதசி, 24 மிலாடி நபி, 25 கிறிஸ்துமஸ் , 26 ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை)
அமாவாசை – டிசம்பர் 11
ஏகாதசி – டிசம்பர் 7, 21 வைகுண்ட ஏகாதசி
பௌர்ணமி— டிசம்பர் 25
முகூர்த்த நாட்கள்: டிசம்பர் 6, 7.

டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை
துர்பலஸ்ய பலம் ராஜா – ஹிதோபதேசம்
பலமில்லாதவர்களுக்கு அரசனே துணை
(ஒப்பிடு: திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை)
டிசம்பர் 2 புதன்கிழமை
திக் பலம் க்ஷத்ரிய பலம்
ப்ரம்மதேஜோ பலம் பலம் – மஹாபாரதம்
அரசர்களுடைய பலம் பெயரளவுக்குதான்; ஆன்மீக பலமே பெரிய பலம்
(ஒப்பிடுக: புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் – அவ்வையார்)
டிசம்பர் 3 வியாழக்கிழமை
நாஸ்தி ச ஆத்ம சமம் பலம் – சாணக்ய நீதி
தனக்குத்தானே பலம் (ஒருவன் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைவிட தன் சுய பலத்தையே நம்பியிருக்க வேண்டும்.
டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை
ப்ரக்ஞா நாம பலம் தஸ்மான் நிஷ்ப்ரஜஸ்ய பலேன கிம்? – கதா சரித் சாகர்
புத்திதான் உண்மையான பலம்; மற்றவற்றால் என்ன பயன்? (உடல் பலம் உண்மையான பலம் அல்ல).
டிசம்பர் 5 சனிக்கிழமை
பலம் மூர்கஸ்ய மௌனித்வம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
முட்டாள்களுக்கு மௌனமே பலம்.
டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
பலீயசீ கேவலம் ஈஸ்வர இச்சா – மஹாபாரதம்
ஆசையில் பெரியது, இறைவன் மீதுள்ள ஆசையே!
ஒப்பிடு: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு- குறள்

டிசம்பர் 7 திங்கட்கிழமை
சௌராணாம் அந்ருதம் பலம் — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
திருடர்களுக்கு பொய்தான் பலம்.
டிசம்பர் 8 செவ்வாய்க்கிழமை
துல்யே பலே து பலவான் பரிகோபமேதி – பஞ்ச தந்திரம்
சமமான பலமுள்ளவனிடத்தில்தான், பலசாலி
கோபத்தைக் காட்டுவான் (பலம் குறைந்தவர்களிடம் சண்டை போட மாட்டான்)
டிசம்பர் 9 புதன்கிழமை
பாலானாம் ரோதனம் பலம் — சு.ர.பா
சிறுவர்களுக்கு அழுகையே பிரதானம்
டிசம்பர் 10 வியாழக்கிழமை
பாஹூ மே பலமிந்த்ரியம் – யஜூர் வேதம்
தோள் வலிமையே பெரிய சொத்து.

டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை
மசகஸ்ய பலம் கியத்?
கொசுவுக்கு என்ன பலம்?
டிசம்பர் 12 சனிக்கிழமை
யஸ்ய புத்திர்பலம் தஸ்ய நிர்புத்தேஸ்து குதோ பலம் – பஞ்ச தந்திரம்
யாரிடம் மூளை இருக்கிறதோ அவனிடம் பலம் உண்டு; புத்தியில்லாதவனிடம் பலம் எங்கே?
டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை
ரூப யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம் – (சாணக்ய)
பெண்களின் பெரிய பலம்: அழகு, இளமை, இனிமை.

டிசம்பர் 14 திங்கட்கிழமை
வீரபோக்யா வசுந்தரா
இந்த பூமியானது வீரர்களுக்கே சொந்தம்.
டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை
ஹிம்சா பலம் அசாதூனாம் – மஹாபாரதம்
கெட்டவர்களின் பலம் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதே
டிசம்பர் 16 புதன்கிழமை
அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லபதே– பஞ்ச தந்திரம்
தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தாத சக்திமான், பழிச்சொல்லுக்கு ஆளாவான்.
டிசம்பர் 17 வியாழக்கிழமை
அவக்ஞாத்ருடிதம் ப்ரேம நவீகர்தும் க ஈஸ்வர:
அவமரியாதையில் உடைந்த அன்பை எந்தக் கடவுள்தான் ஒட்ட வைப்பான்?
(கடவுளினாலும் முடியாது)
டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை
உன்னதோ ந சஹதே திரஸ்க்ரியாம் – கிராதர்ஜுனீயம்
உயர்ந்த மனிதன், வசவுகளைப் பொறுக்கமாட்டான்
டிசம்பர் 19 சனிக்கிழமை
பரிபவோரரிபவோ ஹி சுது: சஹ: – சிசுபாலவதம்
எதிரியினிடம் அடையும் தோல்வி பொறுத்துக் கொள்ள முடியாததே
டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை
மோன ஹானி: குத: சுகம்?
மானம் போன பின்னால் சுகம் எங்கே?

டிசம்பர் 21 திங்கட்கிழமை
வரம் ம்ருத்யுர்ன புனரபமான:
அவமானத்தை விட சாவே சிறந்தது
டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை
சந்தத கமனாதனாதரோ பவதி – சு.ர.பா.
அடிக்கடி செல்வது மரியாதைக் குறைவு
(பழகப் பழகப் பாலும் புளிக்கும்)
ஒப்பிடு: முதல் நாள் தலை வாழை இலையில்
இரண்டாம் நாள் தையல் இலையில்
மூன்றாம் நாள் கையில் (சாப்பாடு கிடைக்கும்).
டிசம்பர் 23 புதன்கிழமை
கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா: – ஹிதோபதேசம்
யானைகள் சகதியில் சிக்கினால் யானைகள் தான் அவைகளைக் காப்பாற்றமுடியும்
(ஒப்பிடுக: யானையால் யானை யாத்தற்று)
டிசம்பர் 24 வியாழக்கிழமை
தாரு சஸ்த்ர ப்ரஹாரேண ம்ருகேந்த்ரோ நைவ ஹன்யதே- கஹாவத்ரத்னாகர்
மரக் கத்தியை வைத்து சண்டை போட்டு சிங்கத்தைக் கொல்ல முடியாது
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை
ந நிர்பலா பாத்ரபதோ ஹி ஸ்ராவணாத்- கஹாவத்ரத்னாகர்
ஆவணிக்கு சளைத்தது அல்ல புரட்டாசி!
(இரண்டும் பருவ மழை கொட்டும் மாதங்கள். புரட்டாசியில் கல்யாணம் செய்ய மாட்டார்கள்; ஆவணியில் நல்ல காரியங்களைச் செய்வார்கள்)

டிசம்பர் 26 சனிக்கிழமை
ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி- ப்ரதிமா நாடகம்)
மான்குட்டிகள் புலிகளைத் தாக்காது.
டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை
ந ஹி துல்யம் பலம் சௌம்ய ஸ்த்ரியாஸ் ச புருஷஸ்ய ஹி – வால்மீகி ராமாயணம்
அன்பரே! ஆணும் பெண்ணும் சம பலம் படைத்தவர் அல்ல
டிசம்பர் 28 திங்கட்கிழமை
ப்ரபலே துர்பலே ஜாதே துர்பல: ப்ரபலாயதே – கஹாவத்ரத்னாகர்
பலவான், பலவீனம் அடையும் போது, பலமற்றவன் வலிமையுள்ளவனாகிறான்
(ஒப்பிடு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்)
டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை
பக்னாதி மசகமேவ லூதாதந்துர்ன மாதங்கம் —விக்ரம சரித
சிலந்தி வலையில் கொசுதான் சிக்கும், யானை சிக்காது!

டிசம்பர் 30 புதன்கிழமை
பலம் ஹி சித்தம் விகரோதி – சாணக்கியர்/கௌடில்யர் அர்த்தசாஸ்திரம்
உடல் பலம், உள்ளத்துக்கு உரமூட்டும்
(ஒப்பிடுக: இளைஞர்கள், பகவத் கீதை படிப்பதைவிட கால்பந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன். பலவீனனால் இந்த ஆத்மாவை ஆடைய முடியாது என்று உபநிஷதம் கூறுகிறது:- சுவாமி விவேகாநந்தர்)
டிசம்பர் 31 வியாழக்கிழமை
வஜ்ரம் வஜ்ரேண பித்யதே- சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 2-45
வைரத்தை வைரத்தால்தான் அறுக்கமுடியும்
(ஒப்பிடுக: முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்).

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை (2016)
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! மங்களம்! சுப மங்களம்!!
You must be logged in to post a comment.