தேனீக்கள் தேவி பிரமராம்பா — 1 (Post No.13,052)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,052

Date uploaded in London – –   29 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 இந்துக்களின் தெய்வ  வடிவங்களுக்கு கணக்கே இல்லை ; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் ; எறும்பிலும் இருப்பார் ; யானையிலும் இருப்பார் ; தேனீக்களிலும் இருப்பார் ; வண்டுகளிலும் இருப்பார் .

ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ சைலத்திலுள்ள கோவில் உலகப் பிரசித்திபெற்றது அங்கே உறையும் தேவிக்கு தேனீ தேவி அதாவது பிரமராம்பா என்று பெயர்.; சம்ஸ்க்ருத மொழியில் பிரமரி என்றால் தேனீ. அங்குள்ள மல்லிகார்ஜுன சிவன் கோவில் 12  ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று என்பதால் அதை அறியாத சிவ பக்தன் இந்தியாவில் இல்லை ; இதே போல மேற்கு வங்க கிராமம் ஒன்றிலும் பிரமரி அம்மன் உறைகிறார்.

பிரமராம்பா பற்றி சுவையான கதை உண்டு .

அருணன் என்பவன் ஒரு அசுரன் ; இந்துக்களில் அசுரர்களும் இந்து தெய்வங்களையே வணங்குவர் ; கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வெள்ளைக்காரன் மட்டும் இந்துக்களை பிரித்தாள்வதற்காக அசுரர்கள் என்பவர்கள் பழங்குடி மக்கள் என்றும் மற்றவர்கள் ஆரியர்கள் என்றும் கதை கட்டினான்.

அந்த அருணன் என்ற அரக்கன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வெற்றியும் கண்டான் ; அசுரர்கள் எல்லோரும் புத்திசாலி போல வரம் கேட்பார்கள்; ஆனால் அதில் ஏதேனும் ஒரு ஓட்டை இருக்கும்; அதனாலேயே அழிவார்கள். அருணன் சொன்னான் ; என்னை ஆணோ பெண்ணோ கொல்லக்கூடாது;  இருகால்  பிராணியோ நாற்கால் பிராணியோ கொல்லக்கூடாது. போரிலோ ஆயுதங்களினாலோ கொல்லக்கூடாது; அப்படிப்பட்ட வரம் வேண்டும் என்றான் ; பிரம்மாவும் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்றார் . அதிகாரம் வந்தால் ஆணவம் வரும் ; இரண்டும் சேர்ந்தால் மற்றவர்களை  அழிக்கும்  எண்ணம் வரும் ; அருணனும் அளவில்லாத அக்கிரமங்களை செய்தான் ; தேவர்களுக்கு / அதாவது நல்லோருக்குக் கட்டுக்கடங்காத துன்பம் நேரிட்டது ; எல்லாம் வல்ல சக்தியிடம் , குறை நீக்குமாறு முறையிட்டார்கள் ; அவளும் அப்படியே ஆகட்டும் என்றாள்.

அந்த முட்டாளுக்கு புழுப்பூச்சிகள் பற்றி அறிவே இல்லை ; இறைவி , சக்தியாக உருவெடுத்து அருணனின் அட்டகாசக் கும்பலை அடியோடு அழித்தாள்; இறுதியில் அருணன் மட்டும் மிஞ்சினான்; அப்போது தேவி தன்  உடம்பு முழுவதும் தேனீக்களாகும்படி செய்தாள்; அவனைத் தாக்கி அவன் உடல் முழுதும்  தேனீக்கள் ஆக்கிரமிக்கும்படி செய்தாள் ; அவனும் மூச்சுத் திணறி அழிந்த்தான்.  அசுரர் குணம் படைத்தோர் அந்த குணத்தினாலேயே அழிவர் என்பதே நீதி.

உலகம் முழுதும் ஒரு காலத்தில் இந்துமதம் இருந்தது; ஆனால் இப்போது அதன் எச்ச சொச்சங்களே இருக்கின்றன; இந்து மதத்தில் என்னென்ன சொல்கிறோமோ அதன் ஒரு அம்சத்தையாவது உலக கலாசாரங்களில் காணலாம் ; எகிப்தீய , கிரேக்க , மாயன் நாகரிகங்களிலும் தேனீ தெய்வங்கள் உண்டு. கிரேக்க நாட்டிலும் தேனீ மாதாதான் ஒரு தெய்வம்

மேற்கு வங்கத்தில் ஒரு பிரமரி தேவி கோவில்

ஜல்பய்குரி  நகரிலிருந்து 19 கி.மீ தொலைவில் சல்பரி கிராமத்தில்  ஒரு பிரமரி தேவி கோவில் இருக்கிறது; இதை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுவார்கள்; சதி தேவியின் இடது கால் விழுந்த இடம் இது என்பது ஐதீகம் ( Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal).

xxxx

உலகில் முதல் முதலில் தேனீக்களைப் பாடியவர்கள் ரிக் வேத ரிஷிகள் ஆவார்கள் . மது என்றாலே தேன்; மதுவும் பாலும்தான் ரிஷிகளின் முக்கிய உணவு;  யார் வந்தாலும் இவை இரண்டும் கலந்த மதுபர்க்கத்தையே கொடுத்து விருந்துபசாரம் செய்வார்கள் ; அதுவும் காட்டிலிருந்து கிடைக்கும் இயற்கையான தேனையே அவர்கள் பயன்படுத்தினார்கள் . ரிக்வேதத்தில் வெள்ளைக்காரனுக்கும் புரியாத தெய்வங்கள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் ஆவார்கள்; அவர்களைத் தேனுடன் தொடர்பு படுத்தியே துதிகள் இருக்கின்றன. தேனீக்கு மட்டுமே வேதத்தில் பல பெயர்கள் இருக்கின்றன இதோ அந்த குறிப்புகள்   :

Aarangara Rig Veda 10-106-10; ஆரங்கரா/ ரிக் வேதம் 

Bhrngaa ப்ருங்க / அதர்வ வேதம் Atharva Veda 9-2-22;   யஜுர் வேதம் Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8;  Vaajasaneyi Samhitaa  24-29; it is one of the sacrificed creatures in  Asvamedha yaga. அஸ்வ மேத யக்ஞத்தில் அக்கினியில் போடப்பட்ட 200++++ பொருட்கள் / பலிகளில் தேனீயும் ஒன்று .

Maksaa / Maksikaa – மக்ஷ மகிஷிகா fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words .Atharva Veda 11-1-2; 9, 10

மதுக்க்ருத் Madhukara -Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .மதுகர

Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad

சரக் Saragh – Rig Veda 1-112-2 Taittriya Samhita v.3.12.12;  Satapata Brahmana 13-3-1-4; Panini also mentioned it.

தேனீக்களைப் பாடாத கவிஞர்கள் இல்லை ; காளிதாசன் முதல் கம்பன் வரை பாடியுள்ளனர் ; சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன ; காளிதாசனின் மேக தூதத்தை பார்த்து இயற்கையிலுள்ள எல்லாப்பொருட்களையும் காதலன், காதலிக்குத் தூது விடுவதற்கு பயன்படுத்தினர் சங்கப் புலவர்கள் ; தேனீக்களையம் இப்படி பயன்படுத்தினர்.

xxxx

சங்க இலக்கியத்தில் தேனீக்கள்

Akananuru -4-10; 46  அக நானூறு

Ainkurunuru – 90 ஐங்குறு நூறு 

Narrinai 290 men are like bees visiting many women , 277

நற்றிணை

Kuruntokai 2, 392 குறுந்தொகை

Purananuru – 70; narrinai -55; akam 332 -six legged புறநானூறு

xxxx

காளிதாஸ காவியத்தில்

Kalidasa – Sakuntala; 3-23; 4-7; 5-1, 8; shadpata 1-23; 3-23; 5-19; சாகுந்தலம்

Kumarasambhava – 3-36; shadpata 5-9 குமார சம்பவம்

Vikramaorvaseeyam 4-22, 21; 2-23 விக்கிரமோர்வசீயம்,

Raghuvamsa – shadpata – 6-59; 8-55; 9-26; 11-27, ரகுவம்சம் ,

Raghuvamsa- elephant rut/ beetle – 5-43; 6-7; 30-57; 12-102, ரகுவம்சம் ,

தேனீக்களை சம்ஸ்க்ருத, தமிழ் கவிஞர்கள் ஆகியோர் அறுகால் பறவை என்றும் அழைத்தனர் ; இது தேனீ , வண்டு  முதலிய பல பூச்சிகளைக் குறிக்கும் ; அவற்றுக்கு ஆறு கால்கள் .

காளிதாசனுக்கும் முன்னர் வாழ்ந்த பாஷா எழுதிய நாடகங்களில் தேனீக்கள் உள்ளன .

ஆண்களும் தேனீக்களைப் போல மலர் மேயும் வண்டுகள் என்று தமிழ்ப்புலவர்( நற்றிணை 290)n  சாடுகிறார் ; பிற்காலத்தில் கண்ணனைப் பாடிய ராதா ராணியும் இதைக் குறிப்பிடுகிறார்.

“ஷட் பத” என்றால் ஆறு கால்கள் ; மத யானைகளை மொய்க்கும் வண்டுகள் , மலர் மேயும் ஆறு கால்கள்/ தேனீக்கள் , காட்டில் இசை பாடும் தேனீக்கள் என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் பாடுவது இந்தியப் பண்பாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைக் காட்டுகின்றது.

To be continued………………………………….

TAGS- தேனீ , பிரமரி , பிரமராம்பா , ஸ்ரீ சைலம் காளிதாசன், வேதம்  அறுகால் பறவை , ஷட்பத , சங்க இலக்கியம்

Bee in Hinduism and Bee Goddess Temples – Part 2 (Post No.13,051)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,051

Date uploaded in London – –   29 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In the first part posted yesterday I gave details of two Hindu Bee Goddess temples in Andhra Pradesh and West Bengal.

Meerabai was a princess in Rajasthan. She lived 500 years ago and sang in praise of Lord Krishna. Her kirtans are widely used in Bhajans and concerts. She considered herself  a Bee tasting the Divine lips of Lord Krishna.

Here are a few songs of Meerabai:

“Mira the Bee

O my friends

What can you tell me of Love,

Whose pathways are filled with strangeness?

When you offer the Great One your love,

At the first step you body is crushed.

Next be ready to offer your head as his seat.

Be ready to orbit his lamp like a moth

      giving in to the light,

To live in the deer as she runs toward

      the hunter’s call,

In the partridge that swallows hot coals

      for love of the moon,

In the fish that, kept from the sea, happily dies.

Like a bee trapped for life in the closing

      of the sweet flower.”

xxxx

“Mira has offered herself to her Lord.

She says, the single Lotus will swallow you whole.

If you want to offer love

Be prepared to cut off your head

And sit on it.

Be like the moth,

Which circles the lamp and offers its body.

Be like the deer, which, on hearing the horn,

Offers its head to the hunter.

Be like the partridge,

Which swallows burning coals

In love of the moon.

Be like the fish

Which yields up its life

When separated from the sea.

Be like the bee,

Entrapped in the closing petals of the lotus.

Mira’s lord is the courtly Giridhara.

She says: Offer your mind

To those lotus feet.”  – Mirabhai

xxxxx

“I am true to my Lord,

O my companions, there is nothing to be ashamed of now

Since I have been seen dancing openly.

In the day I have no hunger

At night I am restless and cannot sleep.

Leaving these troubles behind, I go to the other side;

A hidden knowledge has taken hold of me.

My relations surround me like bees.

But Mira is the servant of her beloved Giridhar,

And she cares nothing that people mock her.

– Mirabai

xxxx

Radha’s Divine Love towards Lord Krishna

Gopi- Krishna episode of Krishna hiding the saris of Gopis is in 2000 year old Sangam poets. Krishna’s Bull Fighting is also found in detail in Sangam poems. Krishna’s lady love Radha rani also sang about Bees.

Like Sangam Tamil poets she used the bee as a messenger to send her Divine Love to Krishna.

“Bumblebee, you are accustomed to drinking honey from the flowers, therefore you have preferred to be a messenger of Krishna, who is the same nature of you! I have seen on your moustaches the red powder kumkum, which was smeared on the Krishna’s flower garland while He was pressing the breast of some other competitor. You felt proud touching that flower and your mustaches have become reddish. Now you come carrying a message for me and anxious to touch your feet. But My dear Bumblebee, let me warn you; don’t touch Me. I don’t want any message from your unreliable master and you are an unreliable servant.”

“Your master Krishna is exactly of your quality. You sit on a flower, taking a little honey, then you immediately fly away and sit on another flower to taste honey there….He gave us a chance to taste His lips and then left altogether. We are more intelligent and not going to be cheated anymore by Krishna or His messengers…..You foolish bumblebee, you are trying to satisfy me by singing his glories.

xxxx

Famous poet Narayana Theertha prays to god to make him a bee at his lotus feet in his famous song

Kshemam kuru Gopala

Pallavi
Kshemam kuru Gopala , SAnthatham mama

Anupallavi
Kamam thava paada, kamala brahmari bhavathu,
SRiman , mama Maaanasa, Madhu Sudhana

Meaning :

Always ensure  my  well-being, O Krishna !

To a great extent  (let) my mind  be  (at) your lotus-feet,

Like a honeybee, O auspicious one, slayer of Madhu !

Madhu is the name of a demon as well as Honey. It is a word with double entendre.

It is a common scene in India to see honey bees buzzing around lotus flowers.

Xxxx

Manmata’s (God of Love) Bow and String

“O Daughter of the snow-capped Himalaya Mountain!

Manmatha, the God of love, has only a bow of flowers, whose bowstring is comprised of a cluster of honeybees; he has only five arrows and these are made of flowers. . . Yet with such frail equipment, bodiless and alone though he be, Manmatha, having obtained some grace through Thy benign side-glance, subjugates the entire universe and emerges victorious”

Saundaryalahari, by Adi Shankara

xxxx

Messenger Poems

India is one nation with same values is proved by Messenger Poems found in Kalidasa and Tamil Sangam Poems. Kalidasa who lived in first century BCE did the great Duta Kavya Megha duta. Sangam poets also used all in the Natures as Dutas/Messengers.

Like Radharani’s poem above, Tamil poets also criticised men looking for various flowers/women to taste like bees.

xxxx

When the bee hums over the Kaantal flower bud and tries to penetrate into it, the bud slowly yields to it and blossoms with fragrance like the dutiful and grateful men welcoming with delight the noble  gentlemen with whom they are acquainted- Kuruntokai poem 265 .

XXXX

Kalidasa Kavyas  on  Stamps

Bees and Music

Beetles making holes in bamboos and making them as Nature’s flute is in Kalidasa and  Sangam Tamil literature.

Elephant’s rut attracting bees and their buzz is compared to music from the lute is also in Kalidasa and  Sangam Tamil literature.

Hindus from Kanyakumari to Kashmir thing in the same way.

The sound of the west wind passing through the holes made by the beetles in bamboos is compared to the sweet tune of the shepherd’s flute- Akam 225

The flow of rut in elephants attracts bees and their humming sound is musical enough to attract the mythical animal called Acunam which listens which listens to it and mistakes it for the tune of Yaaz/ lyre – Akam 88

To be continued………………………..

Tags- Bees, Meerabai, Radharani, Narayana Theertha, Brahmari, Lotus, Kalidasa

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.050

Date uploaded in London – — 29 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1 

ச. நாகராஜன்

திகிலூட்டும் திரைப்பட டைரக்டர் 

திரைத் துறையில் நகல் எடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னால் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களை தியேட்டருக்கு வரவழைத்து நாற்காலியின் நுனியில் நடுநடுங்கும் படி அமர வைத்த மர்மக் கதை மன்னர் ஒருவர் உண்டு! அவர் யார் தெரியுமா? அவர் தான் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் – Master of Suspense – என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆல்ப்ரட் ஹிட்ச்காக்!

இதில் சுவையான விஷயம் என்னவெனில் தனது திகில் படங்களை தன்னால் தியெட்டரில் அமர்ந்து பார்க்க முடியாது என்பதை அவரே ஒத்துக் கொண்டது தான்! எப்படித்தான் மக்கள் தனது திகில் படங்களைப் பார்க்கிறார்களோ என்று வியந்தார் அவர்.

இவரைப் பற்றிய சுவையான விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்ப்போம். 

பிறப்பும் இளமையும்

 ஆல்ப்ரட் ஜோஸப் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் இங்கிலாந்திலுள்ள லேடன்ஸ்டோன் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு பலசரக்கு வியாபாரி.

 இளம் வயதிலேயே மோசமான ஒரு அனுபவத்தை இவர் தந்தையார் இவருக்குத் தந்தார். இவரது ஐந்தாம் வயதில் இவர் வீட்டில் ஒழுங்காக இல்லை என்று எண்ணி ஒரு கடிதத்தை இவர் கையில் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுக்குமாறு கூறினார் தந்தை. இவரும் அப்படியே செய்தார்.

அந்தக் கடிதத்தில் இவரை சிறிது நேரம் சிறையில் அடைத்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. லாக்-அப்பில் சிறிது நேரம் இருந்த இவருக்கு வாழ்நாள் முழுவதும் போலீஸைக் கண்டால் பயம் ஏற்பட்டது. ஆனால் இவர் தான் பின்னால் மர்மக்கதை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார்.

 லண்டனில் பொறியியலும் கலையையும் கற்ற இவருக்கு கதை எழுதுவதில் ஈடுபாடு ஏற்பட்டது.

1920இல் இவர் டைடில் கார்ட் என்று கூறப்படும் ஒரு திரைப்படத்தின் போக்கு பற்றி பிலிமும் வசனமும் எழுதும் கார்டுகளைத் தயாரிப்பவர் ஆனார். அந்தக் காலத்திய திரைப்படங்கள் மௌனப் படங்கள். ஆகவே இந்த டைட்டில் கார்ட் மிக முக்கியம். அத்தோடு காபி ரைட்டர் எனப்படும் நகல் எடுப்பவராக வசனங்களை எழுதுவதும் இவரது தொழிலாக ஆனது.

பாரமவுண்ட் பிலிம்ஸில் 1922இல் அவர் ஒரு சின்ன படத்தை எடுத்தார். 1925இல் கொலையை மையமாக வைத்த ‘தி ப்ளஷர் கார்டன்’ என்ற முழு நீளப் படத்தையும் எடுத்தார். 

திருமணம்

1926இல் திரைப்பட எடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த  ஆல்மா ல்யூசி ரெவிலி என்பவரை ஹிட்ச்காக் மணம் புரிந்தார். கணவரின் எல்லா திரைப்பட முயற்சிகளிலும் ஆல்மா ஒரு பங்கு வகித்தார். குறிப்பாகச் சொல்லப் போனால் சைகோ என்ற உலகப் புகழ் பெற்ற படத்தின்  குளியலறைக் காட்சியை அமைக்க இவரே ஆலோசனை கூறினார்.

இயல்பாகவே மற்றவரை பயமுறுத்தி ஆனந்திப்பது ஹிட்ச்காக்கின் வழக்கமாக ஆனது. குறும்புத்தனமும் ஏராளம். 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்த நடிக நடிகையரின் கையில் விலங்கு மாட்டி விட்டு சாவி தொலைந்து விட்டதே என்று கூறி அவர்களைத் திடுக்கிட வைத்தார்.

அதே போல கரப்பான், எலிகளைக் கண்டால் பயப்படுவோருக்கு அவற்றை பார்சலில் அனுப்பி வைப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒரு பழக்கம்! இந்த வேடிக்கைகள் எல்லாம் ஸ்டுடியோ செட்டில் இருப்பவரை பயமுறுத்தும்; திகைப்படைய வைக்கும்! 

ஹாலிவுட்டிற்குப் பயணம்

காலம் வேகமாக மாறத் தொடங்கியது. படங்கள் அனைத்தும் பேசும் படங்களாயின. பின்னால் அனைத்தும் வண்ணப்படங்களாக ஆயின.

இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குச் செல்ல எண்ணினார் ஹிட்ச்காக்.

அவர் 1940இல் அமெரிக்கா சென்று கால் பதித்தார். அவர் கால் பதித்த நேரம் முதல் அமெரிக்காவே நடுநடுங்கி ஆட ஆரம்பித்தது. 7 வருட ஒப்பந்தம் ஒன்றை டேவிட் ஓ. செல்ஸ்நிக் என்பவருடன் செய்து கொண்ட அவரது திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது-

இவரது புகழுக்குக் காரணம் அனைவரது பயமும் திகிலுமே தான்! ஒவ்வொரு மனிதரின் மனதின் ஓரத்திலும் பயம் இருக்கிறது என்கிறார் ஹிட்ச்காக்!

ஒரு காட்சியை அமைக்க இவரது கற்பனை வளமும்  இவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பும் இணைந்து இவரது படங்களைப் பார்க்க அனைவரையும் தூண்டியது; ரசிகர்களை ஈர்த்தது. சஸ்பென்ஸ் மன்னனாக இவர்  மாறினார்.

ஒவ்வொரு காட்சியிலும் லைட் எங்கே அமைப்பது, காமராக்களை எங்கே எப்படிப் பொருத்துவது, வசனம் என்ன, இசை எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தீர்மானமாக முடிவு செய்வது இவர் பழக்கம்.

ஒரு காட்சியை மூன்று வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அதில் ஒரு குறையும் காண முடியாதபடி அது இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

தனக்கே உரித்தான பாணியில் திடீரென்று ஒரு காட்சியில் இவர் ஒவ்வொரு படத்திலும் தோன்றுவார். அது எந்தக் காட்சி என்பதும் சஸ்பென்ஸ் தான். ரசிகர்கள் அதைக் கண்டுபிடித்து ஆரவாரிப்பர்.

சைக்கோ மற்றும் தி பேர்ட்ஸ் 

ஹிட்ச்காக் எடுத்த படங்களில் சைக்கோ, தி பேர்ட்ஸ், டயல் எம். ஃபார் மர்டர், ரியர் விண்டோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

தனது படங்களில் நடிக்க வருபவர்களை கால்நடையை நடத்துவது போல நடத்த வேண்டும் என்று இவர் கூறியதாகச் சொல்வதுண்டு.

ஆனால் இவரிடம் படாதபாடு பட்டவர்கள் நடிகைகளே. அவர்களது அங்க அசைவு, கண் பார்வை, புன்சிரிப்பு, நடை,உடைகள், கேச அலங்காரம் என எல்லாவற்றிலும் முடிவு எடுப்பவர் இவரே. 

கதாநாயகி க்ரேஸ் கெல்லி இவரிடம் அகப்பட்டுக் கொண்ட பெரும் நடிகை. ரியர் விண்டோ, டு கேட்ச் எ தீஃப், டயல் எம் ஃபார் மர்டர் ஆகிய மூன்று ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் நடித்த இவர், பின்னால் மொனாகோ இளவரசரைக் கரம் பிடித்தார். ‘டு கேட்ச் எ தீஃப்’ என்ற படத்தில் வரும் கார் ரேஸ் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியாகும்.

***

Bees in Hinduism and Bee Goddess Temples- Part 1 (Post No.13,049)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,049

Date uploaded in London – –   28 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

The earliest reference to the Bees comes from Hinduism. Rig Veda refers to it in many places with different names. Rig Veda is dated 2000 BCE by Wilson. Max Muller concluded that no one could tell the age of Rig Veda. It may be older than 1500 BCE. Hindu scriptures say that the Vedas were there even before the creation.

The mysterious Vedic Twins Asvins are linked to Honey and Bees. Later references are available in Egypt and Greece and Mayan Civilization.

The most interesting thing is each foreign culture repeats at least one aspect of bees from Hinduism.

Two thousand year old Sangam Tamil literature has innumerable references. They are mentioned as Six Legged in Tamil and Sanskrit literature which means both beetle and Bees.

Two Temples


sri sailam temple 

Brahmari means black bee. We have at least two temples with this name for goddess. One of the two temples of Bee Goddess is very famous , because it is one of the twelve Jyotir Linga Shrines (Sthalaas). Sri Sailam in Andhra Pradesh has Lord Shiva known as Mallikarjuna and Goddess Parvati as Brahmaramba (Bee Goddess).

There is a very interesting story about Brahmari in Devi Bhagavata. The tenth book and thirteenth chapter of this book records the exploits of the goddess Bhramari in detail.

Aruna was a powerful Asura/demon. Since Asuras also were Hindus, they also pray to same Hindu Gods but with bad intentions (Half baked foreigners deliberately misled the world by dubbing Asuras as aborigines; all Asuras in Tamil and Sanskrit literature are shown praying to same Brahma, Vishnu, Shiva like Devas). After praying to Brahma for a long time Aruna received a boon from Him so that he could not be killed by by any man or any woman, by any biped or quadruped creature, or any combination of the two. He also got the boon of not meeting his end at any war, nor by any arms or weapons,. When he got this absolute power he carried out all sorts of atrocities. Devas were worried and prayed to Goddess and she took the form of Bees and Beetles (Brahmaramba). She killed all the soldiers of Aruna with her normal powers and then faced Aruna. He never thought he would die from insects. Now Devi (goddess) used her Bee form to enter all over his body and he was killed by the bees. So , the goddess in Sri Sailam temples is called Brahmaramaba.

Interestingly Greeks also called one of their Goddesses as Bee Goddess.

Temple in West Bengal

Bhramari Devi Mandir is one of the 51 Shaktipeethas belonging to Devi Sati/ Durga where the left leg of Devi Sati fell at Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal . 

The Place is 18.5 kms from Jalpaiguri Town. It is also directly accessible from Siliguri Town via Belakopa. It is about 42 kms from Siliguri.

xxxx

Bees in Rig Veda

Aarangara Rig Veda 10-106-10;

Bhrngaa Atharva Veda 9-2-22;   Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8;  Vaajasaneyi Samhitaa  24-29; it is one of the sacrificed creatures in  Asvamedha yaga.

Maksaa / Maksikaa – fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words

Atharva Veda 11-1-2; 9, 10

Madhukara –Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .

Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad

Saragh – Rig Veda 1-112-21

Taittriya Samhita v.3.12.12;  Satapata Brahmana 13-3-1-4

Panini also mentioned it.

Throughout four Vedas, the mysterious Twins- Asvins are called Honey Whip.

xxxx

Sangam Tamil Literature

Akananuru -4-10; 46

Ainkurunuru – 90

Narrinai 290 men are like bees visiting many women , 277

Kuruntokai 2, 392

Purananuru – 70; narrinai -55; akam 332 -six legged

xxxx

Kalidasa – Sakuntala; 3-23; 4-7; 5-1, 8; shadpata 1-23; 3-23; 5-19;

Kumarasambhava – 3-36; shadpata 5-9

Vikramaorvaseeyam 4-22, 21; 2-23

Raghuvamsa – shadpata – 6-59; 8-55; 9-26; 11-27

Raghuvamsa- elephant rut/ beetle – 5-43; 6-7; 30-57; 12-102

Bhasa’s Svapnavasavadatta also mentioned it.

To be continued………………………………….

Tags- Brahmari, Bees, Brahmaramba , Sri Sailam, Bee Goddess, Vedas, Tamil

QUIZ நாமக்கல் பத்து QUIZ (Post No.13,047)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,047

Date uploaded in London – –   28 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number- 116

1.நாமக்கல் பெயரைச் சொன்னவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் மேதை யார் ?

XXXX

2.நாமக்கல் கோவிலில் உறையும் தெய்வங்கள் யார் ?

XXX

3.நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலின் சிறப்புகள் என்ன?

XXX

4.நாமக்கல்லில் உள்ள மற்றோரு கோவிலான ஆஞ்சனேயர் கோவிலின் சிறப்பு என்ன ?

XXX

5. நாமக்கல் கோட்டையில் என்ன இருக்கிறதுயார் இதைக் கட்டினார்கள் ?

xxxx

6. இந்தக் குன்று பற்றிய கதை என்ன ?

xxxx

7.இந்த நகரை முட்டை நகரம் என்று அழைப்பது ஏன்?

xxxx

8. நாமக்கல் எங்கே இருக்கிறது ?

xxxx

9.நாமக்கல் அருகிலுள்ள மலையும் நதியும் எவை தொடர்புடைய கவிஞரும் கடை ஏழு வள்ளலும் யாவர்?

xxxx

10.நாமக்கல்லில் என்ன உற்சவம் நடக்கும்?

xxxx

விடைகள்

1.கணித மேதை ராமானுஜன் ; அவர் பிறந்தது  ஈரோட்டில்; ஆயினும் அவருடைய குல தெய்வமான நாமகிரிப்பேட்டை தாயார்தான் தனக்கு கனவில் , கணித அற்புதங்களை வெளிப்படுத்தினார் என்கிறார்.

XXX

2.பிரதான தெய்வம் நரசிம்மர் ; அவர் கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் காணலாம். அவரது பாதத்தின் கீழ், சூரியனும் சந்திரனும் இரண்டு தனித்தனி உருவங்களில் சித்தரிக்கப்படுகின்றன.  சிவனும் பிரம்மாவும் இருபுறமும் காணப்படுகின்றனர். எனவே இக்கோயில் திரிமூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. நாமகிரி தாயார் மற்றும் லக்ஷ்மி நாராயணா ஆகிய இரு சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். பிரதான கோவிலுக்கு மேலே ரங்கநாதருக்கு சன்னதி உள்ளது.

XXXX

3.இது பாண்டியர் கால கோவில் ; 1200  ஆண்டுகளுக்கு முந்தையது . மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது. கல் தூண்களும் சிற்பங்களும் நிறைந்தது .

XXXX

4. நாமக்கல் பெருமாளை நோக்கி கைகூப்பிய வண்ணம் மிகப்பெரிய ஹனுமார் (அனுமன்) சிலை நின்ற வடிவத்தில் இருக்கிறது. இதன் உயரம் 22  அடி. அடி முதல் முடி வரை 18  அடி உயரம் . 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. அனுமார் கோவிலுக்கு கூரை கிடையாது.

XXX

5.நாமக்கல் கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னர் திப்பு சுல்தான் இந்தக் கோட்டையைப் பயன்படுத்தினான் .மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோவில்களை கி.பி. 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

xxxx

6. ராமாயணக் கதையில் அரிய மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி  மலையை அனுமன் கொண்டுவந்த சம்பவம் வருகிறது . அப்போது அவர் கொண்டுவந்த ஒரு சாளக்கிராமக் கல்லை கீழே வைக்க அதை மீண்டும் எடுக்க முடியவில்லை; அதுவே குன்றாக வளர்ந்துவிட்டது .

xxxx

7.தமிழ் நாட்டிலுள்ள கோழிப் பண்ணைகளில் 75 சதவிகிதம் நாமக்கல் வட்டாரத்தில்தான் இருக்கின்றன. சுமார் 7 கோடி கோழிகள் மூலம் ஒவ்வொரு நாளும் 50 கோடி  முட்டைகள் கிடைக்கின்றன.

xxxx

8.ஏறத்தாழ தமிழ் நாட்டின் மத்தியில் உள்ளது. வடக்கில் சேலமும் தெற்கில் கரூரும் உள்ளன . சேலத்திலிருந்து 52 கிமீ;  கரூரிலிருந்து சுமார் 40 கி.மீ.

xxxx

9. கொல்லி மலை; காவிரி நதி ; கடையெழு வள்ளல் — வல்வில் ஓரி ; நாமக்கல் கவிஞர் –ராமலிங்கம் பிள்ளை

xxxxx

10. பங்குனி உத்தர உற்சவம் சிறப்பாக நடக்கும் ; அப்பொழுது இறைவனின் வீதி உலா நடைபெறும் . கோவில் உற்சவம் தவிர வல்வில் ஓரி உற்சவ மும் நடைபெறுகிறது .

—சுபம்—

 tags- நாமக்கல் , கவிஞர், ஆஞ்சனேயர், கோட்டை , கணித மேதை, ராமானுஜன், ஓரி, கொல்லிமலை, நரசிம்மர் கோவில் 

கர்ம ரகசியம்! – 7;சுப, அசுப கர்மங்கள், அவற்றின் பலன்கள்! (Post.13,046)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.046

Date uploaded in London – — 28 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம ரகசியம்! – 7

சுபஅசுப கர்மங்கள்அவற்றின் பலன்கள்!

ச.நாகராஜன்

உமா தேவியார் பரம ரகசியம் ஒன்றை சிவபிரானிடம் கேட்க விரும்புகிறார். அதுவும் பூமியில் பிறக்கும் அனைத்து மக்களுக்காகவும் கேட்க விரும்புகிறார்.

இதை மஹாபாரதம் அநுசாஸன பர்வத்தில் 231வது அத்தியாயத்தில் விவரமாகப் பார்க்கலாம்.

அது என்ன ரகசியம்?

சுபம் மற்றும் அசுப கர்மம்  எப்படிப்பட்டது?

அசுபம் பிராணிகளைக் கீழே தள்ளுவதும் சுப கர்மங்கள்  மேலுலகத்தைக் கொடுப்பதும் எப்படி?

இது தான் கேள்வி.

பரமேஸ்வரன் பதில் கூறுகிறார்.

கர்மங்கள் புண்ணியம், பாவம் என இரு வகைப்படும்.

பாவ கர்மம் என்பது மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகியவற்றால் உண்டாகி மூன்று வகையாகிறது.

மனத்தினால் உண்டாகும் கர்மம் தெரியாமலும் தெரிந்தும் உண்டாகிறது.

அதன் பிறகு சொல் என்னும் கர்மம் உண்டாகிறது.

அதன் பிறகு அவற்றைச் செய்வதற்குறிய உடல் செயல் உண்டாகிறது.

துன்பம் செய்யக் கருதுவது, பொறாமை, பிறர் பொருளின் மீது ஆசை, நல்ல மனிதர்களுக்கும் கெட்ட மனிதர்களுக்கும் ஜீவனத்தைக் கெடுப்பது, தர்மச் செயல்களில் சிரத்தை இல்லாமை, பாவ காரியங்கள் செய்வதில் உற்சாகம்,  ஆகிய இவை அசுப கர்மங்களாகும்.

பொய், கடுஞ்சொல், யாருக்கும் அடங்காமல் உத்தண்டமாய்ப் பேசுவது, மனம் நோகப் பேசுவது, நிந்திப்பது, உண்மை பேசாமை ஆகிய இவை வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.

சேரத்தகாதவரிடம் சேருவது, பிறர் மனை புகுவது, அடிப்பதனாலும், கட்டுவதனாலும், கஷ்டப்படுத்துவதனாலும் பிற உயிர்களைத் துன்பப்படுத்துவது, திருடுதல், பிறர் பொருளை அபகரித்தல், அதனை அழித்தல், சாப்பிடத் தகாதவற்றைச் சாப்பிடுவது, (வேட்டை முதலிய)

விஷயங்களில் பற்றுதல் கொள்ளுதல், கர்வத்தினாலும் அலட்சியத்தினாலும் பிடிவாதத்தினாலும் பிறரை நோகச் செய்வது,  அசுத்தமாய் இருப்பது, குடித்தல், கெட்ட ஒழுக்கம், தீயவர்களின் சேர்க்கை, பிறர் செய்யும் பாவங்களுக்கு உதவியாக இருப்பது, புண்ணியத்துக்கும் புகழுக்கும் ஆகாத செயல்களில் புகுவது ஆகிய இவை அனைத்தும் சரீர பாவங்கள் எனப்படுகின்றன.

மானஸ பாவத்தைக் காட்டிலும் வாக்கு பாவம் அதிகமென்றும், வாக்கு பாவத்தைக் காட்டிலும் சரீர பாவம் அதிகம் என்றும் நினைக்கப்படுகின்றன.

இம்மூன்று வகைப் பாவங்களும் மனிதனைக் கீழே தள்ளி விடும்.

பிறருக்குத் தீங்கு செய்வது அதிக பாவம்.

இப்படி மூவகைப் பாவங்களையும் செய்பவனை செய்பவனை மிகக் கொடிய நரகத்தில் சேர்ப்பிக்கும்.

பாவம் கர்ம வசத்தால் அறியாமலோ அவசியம் செய்ய நினைத்து ஒரு காரணத்தைச் சொல்லியோ எவ்விதம் செய்யப்பட்டாலும்  செய்தவனை அடையவே செய்யும்.

பாவத்தை அவசியம் வெளியிடுவதனால் அதற்குக் காரணமான செய்கை பயனற்றுப் போகும் என்று பரமேஸ்வரன் சொல்ல உமா தேவியார், “பாவ காரியத்தை எவ்வகையில் செய்தால் குற்றம் ஏற்படாது?” என்று கேட்கிறார்.

மஹேஸ்வரர் இதற்கு பதில் அளிக்கிறார் இப்படி: “ குற்றம் செய்யாத ஒரு மனிதன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக முதலில் தன்னை அடித்தவனும், அடிக்க ஆயுதத்தை ஓங்கினவனுமான பகைவனைத் திருப்பி அடித்துக் கொன்றால் அவனைப் பாவம் பற்றாது. ஒரு மனிதன், திருடனிடத்தில் அதிகமாகப் பயந்து அவனைத் தடுப்பதற்காக அவனை அடித்துக் கொல்லுவானாயின் அவனுக்குப் பாவம் இல்லை. 

கிராமத்திற்காகவும், யஜமானனுடைய  அன்னத்தைச் சாப்பிட்டதற்காகவும், துயரப்படுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவும்

அடிப்பதையும், கட்டுவதையும், கஷ்டப்படுத்துவதையும் செய்கிறவன் பாவத்திலிருந்து விடுபடுவான்.

பஞ்சத்தில் இருந்து கொண்டு தான் உயிர் வாழ்வதற்காக யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருந்து கொண்டு அக்காரியத்தைச் செய்தாலும், உண்ணக்கூடாதவற்றை உண்டாலும் அவனைப் பாவம் அணுகாது.

இவையெல்லாம் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் கிரஹஸ்தர்களுக்கே உபதேசிக்கப்படுகிறது.

இடத்தையும் காலத்தையும் அனுசரித்து புத்தியினால் ஆராய்ந்து அந்தப் பயனுக்குத் தக்கபடி பேசத் தகாததைப் பேசினாலும் செய்யத் தகாததைச் செய்தாலும் அவனைப் பாவம் சிறிது பற்றும், பற்றாமலும் போகும்,”

அடுத்து குடியினால் ஏற்படும் தீமைகளை விவரிக்கும் சிவபிரான் குடிப்பவர்கள் நரகத்திற்கே போவர் என்கிறார்.

ஆக இப்படி புண்ணிய பாவ கர்மங்கள் விளக்கப்படுகின்றன!

**

உஜ்ஜைனி நகரில் வேத கடிகாரம் (Post No.13,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,045

Date uploaded in London – –   27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உஜ்ஜைனி நகரில் வேத கடிகாரம்

உலகிலேயே முதல் தடவையாக வேத கடிகாரம் ஒன்று மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி (UJJAIN)  நகரில் நிறுவப்பட்டுள்ளது. இது

இந்திய தேசீய நேரம் Indian Standard Time (IST)  , க்ரினீச் நேரம் Greenwich Mean Time (GMT).  ஆகிவற்றோடு வேத கால பஞ்சாங்கம் போல முஹுர்த்தம், நாழிகை, முதலிய தகவல்களையும் அளிக்கும். ஜோதிடத்திலும் சமயச் சடங்குகளிலும் நம்பிக்கை கொண்டோருக்கு இது மிக அவசியம் ஆகும்

உஜ்ஜைனி நகரம் பல விஷயங்களில் புகழ் பெற்றது. ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ஜந்தர் மந்தர் என்னும் 300 ஆண்டுப் பழமையான வானாராய்ச்சிக் கூடம் உள்ள இடம். மேலும் கிரினீச் முதலிய கோடுகளை வெள்ளைக்காரர்கள் நிர்ணயிப்பதற்கு முன்னரே மகர ரேகை செல்லும் இடம் உஜ்ஜைனி என்று இந்துக்கள் கண்டு பிடித்தனர். அதையே நாட்டின் மையமாகக் கருதினர். இன்றும் இந்திய தேசீய நேரம் அதை வைத்தே கணக்கிடப்படுகிறது.

.85 அடி உயர கோபுரத்தின்மேல் ஜந்தர் மந்தர் வானாராய்ச்சிக் கூடத்திற்குள் இந்தக்க கடிகாரம் கட்டப்பட்டுள்ளது. மார்ச் முதல் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி இதைத்திறந்து வைக்கிறார்..

இது கிரகங்களில் நிலையையும், கிரகணம் முதலியன வரப்போவதையும் கணக்கிட்டுக்குக் காட்டிவிடும்

இந்துக்களின் நாள்,  காலை சூரிய உதயத்திலிருந்தது மறுநாள் சூரிய உதயம் வரை கணக்கிடப்படுகிறது . அதன் அடிப்படையிலேயே இந்தக் கடிகாரமும் இயங்கும்.

இதன் அருகே அரசாங்கத்தின் ஜிவாஜி வானோக்கு நிலையமும் இருக்கிறது .

ஒரு முகூர்த்தம் 48 நிமிடங்கள் ஆகும். ஒருநாளில் 30  முகூர்த்தங்கள் இருக்கும் . சூரிய உதயத்தின்போது துவங்கி 30  மணிகளைக் காட்டும் ; அதாவது ஒருநாளில் 30 மணிகள் ; ஒரு மணிக்கு 48 நிமிடம்

நாழிகை வாய்ப்பாடு

ஒரு நாழிகை – 24  நிமிடங்கள்

ஒரு முகூர்த்தம் – 48  நிமிடங்கள்

ஒரு நாள் – 60  நாழிகை அல்லது 30  முகூர்த்தம்

இந்தக் கடிகாரத்தைக் கட்டுவதற்கு 1-62  கோடி ரூபாய் செலவானது. இதை மொபைல்போன் முதலியவற்றிலும் பார்க்கும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன .

–Subham—

Tags=- உஜ்ஜைனி , வேத கடிகாரம் ,

World’s first Vedic clock installed in Ujjain

Compiled BY LONDON SWAMINATHAN (from press cuttings)

Date uploaded in London – –   27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

World’s first Vedic clock installed in MP’s Ujjain; PM Modi to virtually

Prime Minister Narendra Modi will virtually inaugurate the Vedic clock installed on an 85-foot high tower constructed at Jantar Mantar in Ujjain on March 1, 2024. It is located near Government Jiwaji Observatory in the district.

The clock will display information about Vedic Hindu Panchang, planetary positions, Muhurat, astrological calculation, predictions, etc.  It will also show the Indian Standard Time (IST) and the Greenwich Mean Time (GMT). The clock will calculate the time based on from one sunrise to another.

Member of the Vedic clock developing team, Shishir Gupta, told ANI, “The world’s first Vedic clock is installed at an 85-foot high tower constructed here in Ujjain. The clock will calculate time  from one sunrise to another. The time period between the two sunrises will be divided into 30 parts whose one hour consist of 48 minutes according to ISD. The reading will start from 0:00 with the sun  hose one hour consist of 48 minutes according to ISD. The reading will start from 0:00 with the sunrise functions for 30 hours (an hour of 48 minutes).” He added that the clock will display 30 Muhurat… tithi, and all other time calculations of Vedic Hindu panchangam (almanac).

Director of Maharaja Vikramaditya Research Institute, Shree Ram Tiwari, said, “It will be the world’s first clock in which Indian time calculation will be displayed. The Vedic Clock is installed here as Ujjain has been considered the centre of time calculation. The Tropic of Cancer passes through Ujjain.

The Jiwaji observatory was constructed by Maharaja Sawai Raja Jaisingh of Jaipur in 1719. The clock was built at an estimated cost of Rs 1.62 crore aims to make people familiar with the Vedic time calculation.

Vedic Clock 

Elaborating on the Vedic clock the Madhya Pradesh education minister said that the Vedic clock will be based on Vedic calculation of the time, in which the 24 hours of the day are divided into Muhurats. The Vedic clock will be synced with the position of the Sun.

He said that there will be a dedicated mobile application for the readings of the Vedic Clock, and citizens will be able to use it on their smartphones, computers, televisions, and other devices. 

 He also said “the application will also have information on Vedic Hindu Panchang, planetary positions, Muhurats, astrological calculation, and predictions, etc.

This news story is used from Organiser Weekly

—suham–

tags- Vedic clock, Ujjain, 

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 12 (Post No.13,044)

 கத்தாழை

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,044

Date uploaded in London – –   27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 110  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 12

xxxxx

 கோரைக்கிழங்கு

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 12

111.மண்டை இடிக்கு

எருக்கன் வேர் , அதாவது அடிக்கட்டையைக் கொண்டுவந்து, கொளுத்திக் கரியாக்கிய ஒரு பலம் பொடிக்கு கால் பலம் லிங்கம் சேர்த்து  ஜான் அகலமுள்ள சீலையை எருக்கம்பாலில் நனைத்து உலர்த்தி பிறகு முலைப்பாலில்  மூன்று விசை நனைத்து உலர்த்தி அதில் மேற்படி தூளை பரப்பி திரிபோல் திரித்து ஒரு முனையைக் கொளுத்தி அந்தப் புகையை மூக்கில் பிடிக்கவும்.  இப்படி மூன்று நாளைக்கும் இரவில் படுக்கும்போது ஐந்து நிமிஷம் பிடித்து வந்தால் மண்டை இடி, மண்டைக் குடைச்சல்  எப்போதும் விடாத தலை பாரம் இதுகள் நீங்கும்.

xxxxx

112. பேதிக்கு

எருக்கம் பாலில் இரண்டு துளி , கொட்டைப்பாக்கு அளவு மஸ்டு இல்லாத புளி எடுத்து, அதன் நடுவில் எருக்கம்பாலை இரண்டு துளி விட்டு மூடி தின்றுவிட்டால் நன்றாய் பேதியாகும்; இது முறட்டு உடம்புக்குத் தகும்.

xxxx

113. அரையாப்புக்கட்டிக்கு

எருக்கன் செடியின் வடக்கே போகிற வேரும் களிமண்ணும் சரி பங்கு வைத்து அறைத்து அரையாப்புக்கட்டியின் மேல் பூசி வைக்க  கரைந்து போகும்; இப்படி மூன்று நாள் செய்யவும்.

xxxxx

114. வாந்தி பேதிக்கு

எட்டி மரத்தின்  வடவேரின் மேற்றோலை எலுமிச்சம் பழச்சாறு வீட்டறைத்து காய வைத்து சூரணம் செய்து  சிவன் வேம்பு தும்பைச் செடி சமூலம்  இரண்டும் ஒன்றாய்க் கிஷாயம் வைத்து  மேற்படி சூரணத்தில் மூன்று சிட்டிகை போட்டு கொடுக்கவும்; பேதி நிற்காவிட்டால் மறுபடியும் கொடுக்கவும்; இப்படி 3, 4 விசை கொடுக்கவும்; அரிசிக்கஞ்சி காய்ச்சிக் கொடுக்கவும்; பேதி வாந்தி காதடைப்பு யாவும் நீங்கும்.

xxxx

115. மேகப் புண்ணுக்கு

எட்டிப் பழம் இரண்டு கொண்டுவந்து நல்லெண்ணெயில் வறுத்து அல்லது நன்றாய் வேகவைத்து அறைத்து பஞ்சில் துவட்டி மேகப்புண்ணின் மேல் போடப் போகும்

xxxxx

116. நரம்பு சிலந்திக்கு

எருக்கன் மொக்கு 60  கொண்டுவந்து பெருங்காயம் சமநிடை சேர்த்து அறைத்து 5 வேளை அல்லது 7 வேளைக்கு கொடுக்க நரம்பு சிலந்தி நிவர்த்தியாகும் .

xxxxx

117. காது இரைச்சலுக்கு

எருக்கன் இலைச்சாறு இரண்டரைப் பலம்  நல்லெண்ணெய் இரண்டரைப் பலம் வசம்பு  கோஷ்ட …க்கு திப்பிலி இந்துப்பு கோரைக்கிழங்கு வகைக்கு  அரிக்காப் பலம் இடித்துபோட்டுக் காய்ச்சி  காதில் இரண்டு மூன்று துளிகளாக 2,3 வேளை விட்டு வந்தால் தீரும்.

xxxx

118. அரையாப்புக்கு

எலுமிச்சம் வேர் சத்திச் சாரணை  இரண்டும் சமன் கொண்டறைத்து நல்லெண்ணெயில் குழைத்து கொச்சக்  காய் பிரமாணம் சாப்பிட்டுவந்தால் தீரும்; இப்படி 2, 3 நாள் சாப்பிடவும்.

xxxxx

119. மூல கணத்திற்கு

எலுமிச்சம்பழச்சாறு கத்தாழை சோறு  வெந்தியம் சமன் கொண்டறைத்து காய்ச்சிக் கொடுத்து வர மூல கணம் தீரும்.

xxxx

120. வைசூரியின் பேரில் சுரங்கண்டால்

எலுமிச்சம் வேரின் பட்டை ஏலம் சீந்திற்கொடி விளாமிச்சம் வேர் பற்பா…. சந்தனத்தூள் கோரைக்கிழங்கு வகைக்கு விராகநிடை 5 நசுக்கிப்போட்டு ஒன்றாய் கிஷாயமிட்டு மூன்று வேளை கொடுக்க தீரும்.

—subham—

Tags- எலுமிச்சம்பழச்சாறு, கத்தாழை, எட்டிப் பழம், முனிசாமி முதலியார்,மூலிகை அதிசயங்கள் 12, கோரைக்கிழங்கு

கர்ம ரகசியம்! – 6 (Post No.13,043)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.043

Date uploaded in London – — 27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம ரகசியம்! – 6

ஐந்து வித நரகங்கள்!

ச.நாகராஜன்

உமா தேவியார் பரமேஸ்வரனிடம் கொடிய நரகங்கள் எத்தனை, அவை எப்படிப்பட்டவை என்று கேட்க பரமேஸ்வரன் விவரமாக அவற்றைத் தெரிவிக்கிறார்.

மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 230வது அத்தியாயத்தில் ஏராளமான விவரங்களைப் பார்க்கலாம்.

அவற்றின் சுருக்கம் வருமாறு:

நரகங்கள் ஐந்து.

அவை பாவம் செய்தவர்களுக்காகப் பூமியின் கீழ் படைக்கப்பட்டவை. கொடியவை.

ரௌரவம்

முதலாவது நரகம் ரௌரவம் எனப்படும்.

அது நூறு யோஜனை நீளமும் அகலமும் உள்ளது. இருள் மூடியது. பாவிகளைப் பீடிப்பது. மிக்க துர்நாற்றம் உடையது. கொடியது. பயங்கரமான புழுக்கள் நிரம்பியது.

மிகுந்த பயங்கரமானது. சொல்லக் கூடாதது. எல்லா இடங்களிலும் பிரதிகூலமாக இருப்பது.

பாவிகள் புழு பூச்சிகளால் கடிக்கப்பட்டு அவற்றின் மலத்தினால் துர்நாற்றத்தை அடைந்து வெகு காலம் அங்கே நிற்கின்றனர்.

அங்கே படுப்பதுமில்லை; உட்காருவதுமில்லை.

அந்த உலகத்தில் இருக்கும் காலமெல்லாம் இப்படி நடுங்கிக் கொண்டே இருக்கின்றனர்.

அந்த நரகத்தில் யமதூதர்களின் பாதைகளினால் உண்டாகும் துன்பம் இதற்கும் பன்மடங்கு அதிகமாக நினைக்கப்படுகிறது.

அங்குள்ள துயரம் அளவற்றதாகக் கருதப்படுகிறது.

கதறிக் கொண்டும் அழுது கொண்டும் அங்கே துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

துயரத்தை விடுவித்துக் கொள்வதற்காக ஓடுகின்றனர். அங்கே அவர்களைக் கவனிப்பவன் எவனுமில்லை.

துக்கத்திற்கு விடுதலையும் இல்லை; துக்கத்தை அறிபவனும் அங்கே கிடைப்பதில்லை.

மஹாரௌரவம்

மஹாரௌரவம் என்கின்ற பெயரை உடையது இரண்டாவது நரகம்.

 அது அளவிலும் துன்பத்திலும் முன் சொன்ன ரௌரவத்தை விட இரு மடங்கு அதிகம்.

கண்டகாவனம்

மூன்றாவது நரகத்தின் பெயர் கண்டகாவனம். அது துக்கத்திலும் அளவிலும் முன் சொன்ன நரகங்களை விட இரு மடங்கு அதிகமானது. மஹாபாதகங்கள் செய்த கொடியவர்கள் அந்த நரகத்திற்குச் செல்வர்.

அக்நி குண்டம்

அக்நி குண்டம் என்பது நான்காவது நரகத்தின் பெயர். இது கண்டகாவனத்தைப் போல இரு மடங்கு அதிகத் துன்பம் தருவது.  அது போலவே சுகம் இல்லாதது.

அமானுஷம்

அமானுஷம் என்பது ஐந்தாவது நரகம்.  இது அக்னிகுண்டத்தைப் பார்க்கிலும் பெரும் துன்பம் தருவதாகும். இதில் ஏற்படும் துக்கம் சொல்ல முடியாதது; சகிக்க முடியாதது. இடைவிடாமல் இருப்பது.

பஞ்ச கஷ்டம்

ஐந்து இந்திரியங்களும் பாதைப்படுவதனால் அது பஞ்ச கஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

பாவம் செய்தவர்கள் பல இடங்களிலும் கஷ்டப்படுகின்றனர். துன்பத்தைப் பஞ்ச பூதங்களினாலும் அனுபவிக்கின்றனர்.

மிகக் கொடிய செய்கைகளைச் செய்ததனால் பஞ்ச பூதங்களும் அந்தத் துயரத்தை அடைகின்றன.  பஞ்ச கஷ்டத்திற்குச் சமமான துக்கம் வேறில்லை.

இது தவிர அவிசி உள்ளிட்ட வேறு நரகங்களும் உள்ளன. அங்கே துக்கப்பட்டு துன்பம் தாங்க மாட்டாமல் பலர் கதறி அழுகின்றனர்.

சிலர் வாந்தி எடுத்து புரளுகின்றனர். சிலர் தாங்காமல் ஓடுகின்றனர்.  இப்படி ஓடுபவர்களை சூலம் ஏந்திய யமதூதர்கள் நான்கு பக்கங்களிலும் தடுக்கின்றனர்.

முன் செய்த கர்மம் இருக்கும் வரையில்  எவ்வகையிலும் விடப்படுவதில்லை.

பாவம் ஒழியும் வரை அங்கேயே இருக்கின்றனர். பாவம் கழிந்த பின்னர் நரகத்திலிருந்து விடுபடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து யார் யார் எந்தந்த நரகத்தில் எவ்வளவு காலம் இருக்கின்றனர் என்பதை மஹேஸ்வரன் விளக்குகிறார்.

பாவங்கள் கழிந்த பின்னர் மிருகமாகவும் பக்ஷிகளாகவும் பிறக்கின்றனர்.

மனித ஜன்மம் என்பது கிடைப்பதற்கு அரிய ஒன்று.

என்று இவ்வாறாக கிடைத்தற்கரிய மனிதப் பிறவி பற்றி மஹேஸ்வரன் கூறி அருள்கிறார்!

***