கம்பனின் சிருங்கார ரஸக் காட்சிகள்!இளைஞனின் புலம்பல்! (Post.10,646)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,646
Date uploaded in London – – 10 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே : இளைஞனின் புலம்பல்!
ச.நாகராஜன்

கம்பன் தரும் காதல் சித்திரங்களில் ஆறு
இளைஞர்களைச் சுட்டிக் காட்டுகிறான். அதில் ஒரு இளைஞன் இவன்.
 
ஒரு அழகி! அவள், தாமரை போன்ற தன் இரு பாதங்கள் நோகும் படி மெல்ல அடி எடுத்து வைத்து ஒரு இளைஞனைப் பின் தொடர்கிறாள்.
அந்த இளைஞனும் பேரழகி ஒருத்தி தன்னைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறான்.
அந்த இளைஞன், ஆஹா, என்று சந்தோஷம் தானே பட வேண்டும்!
வலிய ஒரு அழகி தன்னைப் பின் தொடர்வதை அவன் விரும்பத் தானே வேண்டும்!
அவன் விரும்பவில்லை.
காரணம் என்ன?
பாடலைப் பார்ப்போம். விடை தெரியும்.
 
துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்
கணைக் கருங் கணினாளை ஓர் காளை தான்,
‘பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்’’ என்றான்
 
துணைத்த தாமரை நோவ – இரண்டு தாமரைப் பாதங்களும் நொகும் படி
தொடர்ந்து – பின் தொடர்ந்து வந்த
அடர் – தன்னை வருத்துகின்ற
கணை கரு கணினாளை – அம்பை நிகர்த்தும் கரும் கண்களை உடைய ஒருத்தியை
ஓர் காளை – ஒரு வாலிபன் பார்த்து
நங்கைக்கு – “இந்த அழகிக்கு
‘பணைத்த வெம் முலை – பருத்துப் பெரிதாக இருக்கும் விரும்பத்தக்க இவளின் மார்பகங்கள் எனும்
மதம் பாய் யானையை – மதநீர் பெருகப் பெற்ற யானையை
அணைக்க – முழுவதுமாக அணைத்து ஏந்தக் கூடிய அளவுக்கு
அகல் இடம் – விசாலமான அகன்ற மார்பு
இல் என்றான் – என்னிடத்தில் இல்லையே” என்றான்.
காரணம் புரிந்து விட்டது.
அவளது மார்பகங்களோ மிகப் பெரிது. இவன் மார்போ அதை ஒப்பிடும் போது அளவில் சிறிது.
எப்படி அணைக்க முடியும், முழுவதுமாக?
நொந்து போய்ப் புலம்புகிறான்.

இன்னொரு இளைஞனின் கதியைப் பாருங்கள்.

வார் குலா முலை அழகி ஒருத்தி – அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!

அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.

அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.

ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.

கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான்,நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்!

வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது’
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.

கண்களும் மனமும் இன்னொரு இடத்தில் நிலைத்திருந்தால் எதிரில் இருப்பது தெரியாது என்பது அரிய உண்மை.
அழகியால் அவன் பட்ட பாட்டைக் கொஞ்சம் கற்பனை கலந்து சிந்தித்துப் பாருங்கள்!
கம்பனின் சிருங்காரக் கவிதை கவிதையே தான்!


tags- கம்பன்,  சிருங்கார,   காட்சி, இளைஞன் ,புலம்பல், 

தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!-கம்பன் (Post No.10,643)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,643
Date uploaded in London – – 9 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்பன் தரும் காதல் சித்திரம்

தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!
ச.நாகராஜன்

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஒரு சங்கடம்.
இராமாயணத்தில் எந்த இடத்தில் சிருங்கார ரஸத்தை உச்சத்தில் கொண்டு வைப்பது?
ஒரே வழி!

சீதையின் கல்யாணத்தை வைத்துக் காட்சிகளை அரங்கேற்ற வேண்டியது தான்!
அப்படி மலர்ந்தவை தான் பால காண்டத்தில் உள்ள எழுச்சிப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், புனல் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் முதலிய ஐந்து படலங்கள்.
82+77+34+33+67 = 293 பாடல்கள்!

ஆக இந்த 293 பாடல்களிள் படை எழுச்சி, படைவீரர் எழுச்சி, மகளிரின் ஊடல், கூடல், காதலர் கண்ணோடு கண் நோக்குவது, அழகிகளைத் தழுவுவது உள்ளிட்ட அனைத்தையும் சித்தரித்தான்; மகிழ்ந்தான். நம்மையும் மகிழ்விக்கிறான்.
எழுச்சிப் படலத்தில் ஒரு ஆறு இளைஞர்களின் செயலை அட்டகாசமாய் சித்தரிக்கிறான். (பாடல்கள் 31 முதல் 36 முடிய)
அவற்றில் ஒன்று தான் தழுவி நின்று ஒழியான்; தரை மேல் வையான் என்னும் காட்சி.

காட்சி என்ன?

சுழிகள் அமைந்த்த பாய்ந்து செல்லும் வல்லமை படைத்த ஒரு குதிரை.
அதில் ஒய்யாரமாக ஏறி உட்கார்ந்து சென்று கொண்டிருக்கிறாள் மயில் போன்ற சாயலை உடைய ஒரு இளம் அழகி. குதிரையின் ஒரு திடீர்த் துள்ளலில் அவள் குதிரையிலிருந்து தவறி கீழே விழத் தொடங்குகிறாள்.
இதைப் பார்த்து சும்மா இருக்க முடியுமா? வள்ளல் ஒருவன் வேகமாக வந்து அவளைக் கீழே விழாமல் தாங்கிக் கொள்கிறான்.
அப்படியே ஏந்திய வேகத்தில் மார்போடு அணைத்துக் கொள்கிறான்.
சரி தரையில் வைக்க வேண்டியது தானே!

அது தான் இல்லை!
தழுவி நின்று ஒழியான்; தரையினில் வையான்!
‘சான்ஸ்’ கிடைத்தது என்று அவளை அப்படியே தழுவிக் கொண்டே நிற்கிறான். தரையில் வைக்க மாட்டேன் என்கிறான்.
இந்த வள்ளலைக் காதலன் என்றும் கூறலாம்; கூடவே வந்த அவளது கணவன் என்றும் கொள்ளலாம்.

பாடலைப் பார்ப்போம்:
சுழி கொள் பாய் பரி துள்ள ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான்
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான்

பாடலின் பொருள் :
சுழி கொள் – சுழிகள் அமைந்த
பாய் பரி – பாய்ந்து செல்லும் தன்மை உடைய ஒரு குதிரையானது
துள்ள – திடீரென்று துள்ளிக் குதிக்க
ஓர் தோகையாள் வழுவி வீழல் உற்றாளை – மயில் போன்ற சாயலை உடைய ஒருத்தி தவறி வீழத் தொடங்கிய போது, அவளை
ஓர் வள்ளல் – ஒரு உதாரகுணமுடையவன்
தான் எழுவின் நீள் புயத்தால் – தனது இரும்புத் தூண் போன்ற நீண்ட கைகளால்
எடுத்து ஏந்தினான் – எடுத்துத் தாங்கினான்
தரை மேல் வையான் – அவளைத் தரையில் வைக்கவில்லை
தழுவி நின்று ஒழியான் – தழுவிய வண்ணமே நின்றிட்டான்.

இப்படி இன்னும் ஐந்து இளைஞர்கள் செய்த செயல்களையும் அவன் விவரிக்கிறான்.

அருமையான செய்யுள்களில் சிருங்காரக் காட்சிகள் அரங்கேறுகின்றன!


tags- சிருங்காரக் காட்சி, தழுவி நின்றொழியான், கம்பன், 

தோள் கண்டார் தோளே கண்டார்- கம்பனுக்குப் போட்டி! (Post.10,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,134

Date uploaded in London – 25 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தோள் கண்டார் தோளே கண்டார்- கம்பனுக்குப் போட்டி!

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

–(பால. 1028)- கம்பராமாயணம்

ராமனின் வடிவழகை வருணிக்க வந்த கம்பன் அருமையான ஒரு பாடலை நமக்கு அளித்தார்.தமிழ் விரும்பிகளுக்கு நன்கு தெரிந்த பாடல் இது.

இதே போல ஒரு பாடலை கம்பனுக்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழி கவிஞன் பாடி விட்டான்.

காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி நூலில் 700 அகத்திணைப் பாடல்கள் உள்ளன . அவற்றில் ஒன்று இது.

ஹாலன் என்ற சாதவாகன மன்னன், கோடிப் பாடல்களில் இருந்து 700 பாடல்களை தேர்தெடுத்ததாக அதே புஸ்தகத்தில் ஒரு கவிதையும் உளது. இங்கே ‘கோடி’ என்பதை பத்து மில்லியன்- 100 லட்சம்– என்று கொள்ளாமல் ஏராளமான கவிதைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள 2000 அகத்துறை  பாடல்களைப் போலவே சமகாலத்தில் இப்படி பிராகிருத மொழியிலும் உளது. சுமார் 300 கவிஞர்கள் பாடிய பாடல்கள் இவை. ஆயினும் நிறைய இடைச் செருகல் இருப்பதால் 700க்கும் மேலான கவிதைகள் இத்தொகுப்பில் உள . மொத்தத்தில் 2000 ஆண்டுப் பழமையான நூல் என்று சொல்லலாம். அகநானூற்றில் உள்ள சில புலவர்கள் பெயர்கள் இதிலும் உள்ளன. சங்க இலக்கியத்தில் காணப்படும் பிரம்மச்சாரி , (குண்டுகட்  ) பாலியாதன் ஆகிய பெயர்கள் சில எடுத்துக் காட்டுகள்.

ராமனுடைய உடல் அழகு எப்படிப் பட்டதென்றால் , அவருடைய உடலில்  ஒரு அங்கத்தைக் கண்டவர்கள் அதிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் வியந்து பார்த்துக் கொண்டு இருப்பார்க்களாம் ; யாரும் தேகத்தின் முழு அழகைக் காண முடியவில்லையாம் ! அதைச் சொன்ன கம்பன் ஒரு அருமையான உவமையையும் நமக்கு அளிக்கிறான். எப்படி மதத்தைப் பின்பற்றுவோர் தன் கடவுளே சிறந்தவர் என்று அதையே பற்றிக்கொண்டு, போற்றிக்கொண்டு,  இருப்பார்களோ அப்படி அவர்கள் உடல் அழகினையும் ரசிப்பார்களாம் .

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழிக் கவிஞன் பாடிய பாடலை பன்மொழிப் புலவர் மு.கு ஜெகந்நாத ராஜா இப்படித் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.:

எப்படிச் சொல்வ தேந்திழை எழிலே!

எங்கெங்கவ ள்  அங்கங்களிற்  பதியும்

பார்வையதுவே பங்கத் தழுந்தி

வீழ்த்த வலி யில் விடை போலெழாதே

–பர்வத குமாரன்  (3-71)

இங்கே தலைவியின் அழகு/ எழில் வருணிக்கப்படுகிறது எந்த அங்கத்தில் என் பார்வை விழுகிறதோ அதிலிருந்து கண்கள் எழுவதே இல்லை – இவ்வாறு தலைவன் கூறுகிறான்  ; இதற்கு அவன் கூறும் உவமை உழவன் உவமையாகும் . உழுகின்ற காளை (விடை) மாடுகள் எப்படி சேற்றில் (பங்கம்) ஆழப் பதிகின்றனவோ அப்படிப் பதிந்தன என்கிறான் . அதாவது கண்களால் அவளுடைய உடலை உழுது விடுகிறான் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவ்விரு புலவரில் கம்பனே சிறந்தவன் என்பது என் கணிப்பு. ஏனெனில் பெண்களின் உடல் அழகு வருணனை எல்லா நாட்டு, எல்லா மொழி இலக்கியங்களிலும் உளது. அதை ஒரு ஆண்  மகனுக்கு — இராம பிரானுக்கு –ஏற்றிச் சொன்ன கம்பனின் திறமையே திறமை; புலமையே புலமை. வடுவூர் போன்ற இடங்களில் விக்கிரகமாக வடிக்கப்பட்ட இராமனின் அழகை ரசித்தோருக்கு இது நன்கு விளங்கும். பிராகிருத மொழிக் கவிஞன் பாடியதை மேம்போக்கான உடல் அழகு என்றால் கம்பன் சொன்ன அழகை தெய்வீக அழகு எனலாம்.!

காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

https://tamilandvedas.com › காத…

· Translate this page

11 Jan 2015 — நான், காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில … இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் …


காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்! – Tamil and …

https://tamilandvedas.com › காத…

· Translate this page

9 Jan 2015 — கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை …


புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை

https://tamilandvedas.com › புகழ…

· Translate this page

6 Jan 2015 — பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது.

Did Hala copy Kalidas in GSS? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/01/09 › did-hala-cop…

9 Jan 2015 — Research Paper written by london swaminathan Research article No 1561; Dated 9th January 2015. Gatha Sapta Sati (GSS) is a Prakrit book of …

–subham—

Tags- காதா சப்த சதி ,ஹாலன் , கம்பன், உடல் அழகு, தோள் கண்டார்

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! (Post No.10,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,030

Date uploaded in London –  30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!

ச.நாகராஜன்

தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!

தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!

அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.

அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.

  1. வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

வாக்கிற்கு – அருணகிரி

கனிவிற்கு – மாணிக்கவாசகர்

தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்

நோக்கிற்கு – நக்கீர தேவர்

நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்

சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்

  • அடுத்த பாடல் இது

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி

ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்

ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி

கூழுக்கிங் கௌவையெனக் கூறு

காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்

கருணைக்கு – அருணகிரிநாதர்

தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்

உவக்கப் பாடுபவர் – புகழேந்தி

கூழுக்கோ – ஔவையார்

  • மூன்றாம் பாடல் இது:-

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

      செயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

   வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

   வசைபாடக் காளமேகம்

பண்பாக வுயர் சந்தம் படிக்காசு

   லாதொருவர் பகரொ ணாதே

 வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்

பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.

விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.

கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்

கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்

வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்

பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.

இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!

ஆதாரம் : பெருந்தொகை பாடல்கள் 1802, 1803, 1804

***

INDEX

அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், நக்கீரர், சுந்தரர், கம்பன், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, ஔவையார். ஜெயங்கொண்டான்,இரட்டையர்கள், படிக்காசுப் புலவர்

Tags – அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், சம்பந்தர், கம்பன், காளமேகப் புலவர்

அன்னவர்க்கே சரண் நாங்களே!(Post No.9708)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9708

Date uploaded in London – –  –9 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்

அன்னவர்க்கே சரண் நாங்களே!

ச.நாகராஜன்

மாபெரும் ராமாயண காவியத்தை இயற்றிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் ராமாயண காவியத்தின் முக்கிய தத்துவத்தை முதல் செய்யுளிலேயே சொல்லி விடுகிறான். சரணாகதி தான் அது!

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்

அன்னவர்க்கே சரண் நாங்களே

நான்கே நான்கு வரிகள். 17 வார்த்தைகள். இதன் பொருளை விவரிக்க வார்த்தைகள் போதாது. ராமாயணத்தை சரணாகதி காவியம் என்றே அழைப்பர்.

சரணாகதி மிக எளிதான வழி. யார் வேண்டுமானாலும் இறைவனைச் சரண் அடையலாம். எண்ணித் தொலையாத பிறவிகளில் சேர்த்த பாவங்களை விலக்கிக் கொள்ள ஒரே வழி சரணாகதி தான் என்பதே ராமாயணத்தின் சாரம்.

சரணமடைய விசேஷ தகுதி தேடி அலைய வேண்டியதில்லை என்பதை பிள்ளைலோகாசார்யாரின் ஸ்ரீ வசன பூஷணம் 32, 33,34 சூத்திரங்களில் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

சூத்திரம் 32

அதிகாரி நியமமின்றைக்கே ஒழிந்தபடி என்? என்னில், தர்ம புத்ராதிகளும் திரௌபதியும், காகமும், காளியனும், ஸ்ரீ கஜேந்திராழ்வானும், ஸ்ரீ விபீஷணாழ்வானும், பெருமாளும், இளைய பெருமாளும் தொடக்கமானவர்கள் சரணம் புகுதுகையாலே அதிகாரி நியமமில்லை.

இதன் பொருள்:

தர்மர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் கண்ணபிரானைச் சரணம் அடைந்தார்கள். ஆகவே இங்கு ஆண், பெண் என்ற பேதமில்லை.

காகம் சரணம் புகுந்தது. ஆகவே பறவை என்ற பேதம் இங்கு இல்லை. காளிங்கன் சரணம் புகுந்தது. பாம்பு என்பதால் ஊர்வன என்ற பேதமும் போயிற்று. கஜேந்திரனோ ஆதிமூலமே என்று கூவி சரணமடைந்தது. விலங்கு என்ற பேதமும் போயிற்று. விபீஷணன் இராமரைச் சரண் அடைந்ததால் ராக்ஷஸர் என்ற பேதமும் போயிற்று. பெருமாளே கடலைச் சரண் புகுந்தார். இளைய பெருமாளாகிய லக்ஷ்மணன்  ராமரைச் சரணம் அடைந்து கூடவே காட்டிற்கு ஏகினார். இன்னும் கத்திரபந்து, முசுகுந்தன் உள்ளிட்டவர்களும் அவனைச் சரண் அடைந்தார்கள். இதன் மூலம் சரணம் அடைய ஒரு தகுதியும் தேவையில்லை, ஒரு நியமமும் இல்லை என்பதை நன்கு அறியலாம். சரணாகதி செய்ய அதிகாரி நியமம் இல்லை.

அடுத்த சூத்ரம் 33:

பல நியமமின்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் தர்மபுத்ராதிகளுக்குப் பலம் ராஜ்யம்; திரௌபதிக்குப் பலம் வஸ்திரம். காகத்திற்கும், காளியனுக்கும் பலம் ப்ராணன். ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்குப் பலம் கைங்கர்யம்; ஸ்ரீ விபீஷணாழ்வானுக்குப் பலம்  ராம பிராப்தி. பெருமாளுக்கும் பலம் ஸமுத்ர தாரணம்; இளைய பெருமாளுக்குப் பலம் ராமானுவ்ருத்தி.

இந்த சூத்ரத்தின் விளக்கம்:

சரணாகதி அடையும் ஒருவருக்கு இன்ன பலன் தான் கிடைக்கும் என்பதில்லை. அவரவர் தேவைக்குத் தக்கபடி அருள் கிடைக்கும்.

உதாரணமாக

பாண்டவர்கள் பெற்றது அரசாளும் உரிமை (ராஜ்யம்)

திரௌபதி பெற்றது – வஸ்திரம் (மானம் காக்க சேலை)

காகம், காளியன் பெற்றது – உயிர்

ஸ்ரீ கஜேந்திராழ்வான் பெற்றது கைங்கரியம். தனது துதிக்கையில் தாமரை மலரை எடுத்து அதைப் பகவானிடம் சேர்ப்பித்த கைங்கரியம்.

ஸ்ரீ விபீஷணாழ்வான் பெற்றது ஸ்ரீ ராமபிரானை அடைந்தது.

ஸ்ரீ இராமபிரான் அடைந்தது கடலில் அணை கட்டுதல்.

இளைய பெருமாளான லக்ஷ்மணன் பெற்றது – இராமனுடன் கூடவே காட்டிற்குச் சென்று கைங்கரியம் செய்யும் அரிய வாய்ப்பு.

ஆகவே மனிதனானாலும் சரி, விலங்கு, பறவை, அரக்கர் என்று எதாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, சராணகதி என்ற எளிய வழி மேன்மையைத் தரும்; அவரவர்க்கு உரியதைத் தரும்.

‘கொற்றவ சரணம்என்று சுருக்கமாகக் கூறிச் சரணாகதி அடைந்தான் விபீஷணன். அப்போது அபயம் என்று வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்தோரைப் பற்றி ராமர் விரிவாக எடுத்துரைப்பதை கம்பன் அழகுற எடுத்துரைக்கிறான்.

வால்மீகி ராமாயணத்தில் சரணாகதி ஸ்லோகம் பிரசித்தி பெற்ற ஒன்று.

(இதை ராமாயண வழிகாட்டி என்ற எனது தொடரில் (பின்னர் புத்தகமாகவும் வந்துள்ளது- பிரசுரித்தோர் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் – தொடர்புக்கு www.nilacharal.com அணுகவும்) விவரித்திருப்பதால் இங்கு மீண்டும் விவரிக்கவில்லை)

சரணடைந்தோரை ஏற்பது இறைவனின் தர்மம்; ஆகவே தான் அன்னவர்க்கே சரண் நாங்களே என்றான் கம்பன்.

இந்த பிரபத்தி தர்மத்தை உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகளே.

***

tags– சரணாகதி, கம்பன், சரண் நாங்களே!

குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9072

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச்  சொல்லும்போது  அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.

கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை   பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு  விட் ட  செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை  இழைப் பொலிந்தாங்கு

அறா அ அறு  நகை இனிது பெற்றிகுமே —

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்தன்  தலையே – 378

பொருள் :–

என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்

காதில் பூணத் தக்கவற்றை  விரலில் அணிபவரும் 

இடுப்புக்குரியவற்றை  கழுத்தில் அணிபவரும்

கழுத்துக்குரியவற்றை  இடையில்  அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்

, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது 

அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது

XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி

அரம்பையர் வெறுத்து நீத்த  அவிர்மணிக் கோவை ஆரம்

மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ

–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்

பொருள் :–

தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண்  குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .

இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .

Tags — குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு

–சுபம்–

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! – கம்பன் (Post No.8907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8907

Date uploaded in London – –9 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘கண்டதும் காதல்’, ‘கண்கள் பேசின’, ‘ஈருடல் ஓருயிர்’ — என்றெல்லாம் சினிமா வசனங்களிலும் தற்கால கதைகளிலும் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவன் கம்பன்தான் போலும்.

கம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில்  மிதிலைக் காட் சிப் படலத்தில் வரு ம் இரண்டு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை.

ஒரு பாடல்

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” –

என்று முடியும்.

இன்னும் ஒரு பாடல்

“பிரிந்தவர் கூடினால் பேசல்  வேண்டுமோ “-

என்று முடியும்..

சில பாடல்களுக்கு முன்னர் ராமனையும் சீதையையும் முதலில் அழகாக வருணித்துவிட்டு, பின்னர் சில பாடல்கள் தள்ளி, பிரிந்த ராமனும் சீதையும் மீண்டும் இணைந்தனர் என்று  சொல்லுவது பொருந்துமா?

பொருந்தும்; ஏனெனில்…………………………….

இங்கே வால்மீகி முனிவரைப் போலன்றி , ராமனையும் சீதையையும் அவதார நிலைக்கு கம்பன் உயர்த்திவிட்டான்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி  முயங்கப் பெறின் – குறள் 1330

என்ற கடைசி குறள் கம்பனுக்கு நினைவுக்கு வந்தது போலும்.

கணவன்- மனைவி இடையே கோப தாபங்கள் ஏற்படுவது அவசியமே. ஏனெனில் அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் கூடி இணைவது தோசைக்கு தேங்காய் சட்னியுடன் வெங்காய சட்னியும் சேர்த்துக் கொடுத்தது போல சுவையாக இருக்கும் என்பது வள்ளுவனின் கருத்து. அதைச் சொல்லிவிட்டு அவரும் குறள் புஸ்தகத்தையே முடித்ததை பார்த்தால் நேரே படுக்கை அறைக்குச் சென்றிருப்பார் என்று தோன்றுகிறது!!

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

தேவலோகத்தில் நாராயணனும் லெட்சுமியும் ‘ஜாலி’யாக இருந்த போது கருத்து மோதல் வெடித்ததாம் ; உன்னால்தான் இது நடந்தது என்று ஒருவரை ஒருவர் ஏசினர் . இன்று ‘பெட் ரூமு’ BED ROOM க்கு வராதே என்று சொல்லிவிட்டு லெட்சுமி அம்மா போய்விட்டாள்; பிறகு ஊடல் தீர்ந்து  இருவரும் சந்தித்தனராம்.

எங்கே?

மிதிலாபுரியில்.

எவ்வாறு ?

ராமனும் சீதையாக அவதாரம் எடுத்து!

இதோ கம்பன் பாடல் –

மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்

ஒருங்கிய இரண்டு  உடற்கு  உயிர் ஒன்று ஆயினார்

கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்

பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ

பொருள்

இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை சீதைக்கு.

இழிவு இல்லை என்று சொல்லும்படி உலகிலுள்ள எல்லா குணங்களும் உடையவன் ராம பிரான்.

இந்த இரண்டு உடல்களும் ஓருயிர் என்று சொல்லும்படி ஆயினர்.

திருப்பாற் கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் , மீண்டும்

இங்கே சந்தித்ததால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப் பேச்சும் தேவையோ?

தேவையில்லை.

TAGS — பிரிந்தவர் கூடினால், கம்பன்

–SUBHAM—

விலைமகளிர்க்கு மாளிகை சிலேடை – கம்பன்! (Post No.8573)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8573

Date uploaded in London – – –26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த சிலேடை சிரேஷ்டன் கம்பன்!

ச.நாகராஜன்

கவிச் சக்கரவரித்தி கம்பனுக்கு நிகர் கம்பனே தான்! அணிகளை அமைப்பதிலும் நாம் நம்ப முடியாத இடத்தில் சிலேடையாக கவியை அமைப்பதும் அவனுக்குக் கை வந்த கலை.

ஒரு மாளிகையையும் விலைமகளிரையும் சிலேடைப் பொருள் ஆக்க முடியுமா? கம்பனால் முடியும்,

அயோத்தி நகர வர்ணனை. ஒரு மாளிகையை வர்ணிக்கிறான் கம்பன்.

பாடகக் காலடி பதுமத் தொப்பன

சேடரைத் தழீஇயன செய்ய வாயன

நாடகத் தொழிலன நடுவு துய்யன

ஆடகத் தோற்றத்த மகளிர் போன்றன

                              – பால காண்டம் நகரப் படலம் பாடல் 31

சின்னச் சின்ன சொற்களால் சீராக மாளிகையை நிர்மாணிக்கிறான் கம்பன்.

பாடு அகம் – வேலைப்பாடு அமைந்த

காலடி – தூண்களின் அடிப்பகுதிகள்

பதுமத்து ஒப்பன – தாமரை  மலர் வடிவமாக அமைந்துள்ளன

சேடரை தழீ இயன – அஸ்திவாரத்தின் ஆழத்தால் நாக லோகத்தை சேர்ந்துள்ளதாகவும்

செய்யவாயின – (அற்புதமான வேலைத் திறத்தால்) செப்பம் உடையதாகவும் ஆயின

நாடு அகம் தொழிலன – யாவரும் விரும்பிக் காணும் உள்வேலையை உடையதாக உள்ளன

நடுவு துய்யன – நடுவில் உள்ள இடமெல்லாம் சுத்த வெளியாக அமைந்துள்ளன

ஆடகம் தோற்றத்த – பொன்னினால் ஆகிய வெளி அமைப்பை உடையவனாக உள்ள மாளிகைகள்

மகளிர் போன்றன – விலை மகளிரை ஒத்து இருக்கின்றன.

விலை மகளிர்கள் பாடகம் என்ற ஆபரணத்தை அணிந்த கால் என்னும் அடித்தாமரையைக் கொண்டவர்கள்.

சேடரை அதாவது வாலிபர்களைத் தழுவுவது அவர்கள் தொழில்.

செந்நிற வாயுடன் இருப்பது அவர்களின் இயல்பு.

நாடகம் ஆடும் தொழிலைப் பயின்று அதில் வல்லவர்கள் அவர்கள்.

அவர்களது இடையோ சிறுத்த இடை. அது பஞ்சின் தொடர் நுனியை ஒத்திருக்கிறது.

ஆடகம் ஒப்ப அதாவது பொன் போல ஒளிர்கின்ற மேனியை உடையவர்கள் அவர்கள்.

மாளிகையை வர்ணிக்கையில் அதே சொற்களால் விலை மகளிரையும் வர்ணித்திருப்பதால் இது சுருங்கச் சொல்லணி என்று சொல்லப்படும்.

சேடர் என்றால் விடர் அல்லது இளைஞர்கள் என்ற பொருளைத் தருகிறது.

பாடகம் கால் என்ற சொற்கள் பக்கங்களிலும் அகத்திலும் நாட்டப்பட்ட தூண்கள் என்ற பொருளைத் தருகிறது.

சேடரைத் தழீ இயன என்பதால் பெரியோரைத் தம்மிடத்துப் பொருந்தியன என்ற பொருளைப் பெறலாம்.

செய்யவாயின என்பதால் நேர்மையான வாயிலை மாளிகைகள் கொண்டிருப்பதை அறியலாம்.

நாடகத் தொழிலன என்பதை நாடு, அகம், தொழிலன எனப் பிரித்து மனதினால் கருதி செய்யப்படும் சித்திரத் தொழில் என்றும் கொள்ளலாம்.

இப்படி தேர்ந்தெடுத்த சொற்களால் சிலேடையைத் தரும் கம்பனை சிலேடை சிரேஷ்டன் என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

கம்ப ராமாயணம் முழுவதும் படித்தால் அதில் வரும் பல்வேறு அணிகளைக் கண்டு வியக்கலாம்; சிலேடைகளைக் கண்டு ரஸிக்கலாம்!

tags – விலைமகளிர், மாளிகை சிலேடை , கம்பன்

வெள்ளை வேண்டாம்’- வள்ளுவன், கம்பன் போர்க்கொடி (Post No.8526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8526

Date uploaded in London – 17 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெள்ளை என்றால் முட்டாள்தனம்; வெள்ளையர் என்றால் முட்டாள் பயல்கள். வள்ளுவனும் கம்பனும் ‘வெள்ளை மர்தாபாத் ‘ என்று உச்ச ஸ்தாயியில் பாடுகின்றனர் . திருவள்ளுவ ஐயங்காருக்கு ரொம்ப பிடித்தது விஷ்ணுதான் ; ரொம்ப பிடிக்காதது நாஸ்திகம் பேசும் சமண பவுத்த , சாருவாக மதத்தினர்தான்

புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் இவர்களைப் ‘பேய்கள்’ (ALGOL) என்றும் வெள்ளை என்றும் திட்டுகிறார்.

இவர் ‘ஓபனாக’ வாமனாவதாரம் , கிருஷ்ணாவதாரத்தைப் புகழ்வதை வள்ளுவர் ஐயரா ஐயங்காரா? என்ற தலைப்பில், எடுத்துக் காட்டினேன் .

நாஸ்தீக வாதிகளை ‘பேய்கள்’ என்று திட்டுவதையும் ஆல்கால் நட்சத்திரத்தை இவர் அலகை என்ற பேய் நட்சத்திரத்தின் பெயரால் திட்டுவதையும் எழுதி இருந்தேன் (காண்க–  திருக்குறளில் ஒரு பேய் நட்சத்திரம் )

இப்போது வேறு சில குறள்களைப் பார்ப்போம். வெள்ளை ஆடை உடுத்திய சமணர்களை ஸ்வேதாம்பரர் என்பர். ஸ்வேத என்றால் வெள்ளை. ஆங்கிலச் சொல்லான ஒயிட்  (S+white= Swehta) இதிலிருந்து வந்ததே இதையே நெடிலாக மாற்றி நீட்டித்து ஸ்வேதா என்று சொன்னால் அறிவுத் தெய்வமான சரஸ்வதி என்று பொருள்படும்.

வெள்ளை ஆடை உடுத்த ஸ்வேதாம்பர சமணர்களைத் தாக்கும் வள்ளுவர்,

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னுஞ் செருக்கு – குறள் 844 என்று பாடுகிறார் .

இதன் பொருள் என்ன ?

முட்டாள்தனம் என்பது என்னவென்றால் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வதாகும் .

இதை ஆங்கிலத்தில் நாலாவது வகை மனிதர் என்று சொல்லும் ஒரு பழமொழி இதோ :-

He who knows not and he knows not, he is simple teach him.

He who knows and knows not that he knows, he is asleep, awaken him.

He who knows and knows that he knows, he is wise, follow him.

“He who knows not, knows not, he knows not, he is a fool shun him.

கம்பனும் வெள்ளையரை – வெள்ளையைச் சாடுகிறான்.

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோய்

வள்ளியர் ஆகில் வழங்குதல் அல்லால்

எள்ளுவ என்சில இந்த உயிரேனும்

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்

-பால காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள்

நீ வெள்ளியாக — அறியாமை உடையவனாக — இருப்பதால் இப்படிக்கூறினாய் .உயர்ந்தவர்கள் எதைக்கேட்டாலும் கொடுப்பர். கொடுக்கக்கூடாது என்று விலக்கப்பட்டது ஏதேனும் உண்டா ? கிடையாது. இனிய உயிரையும் பிச்சையாகப் பெறுவது தீயது; உயிரையும் தானமாக ஈவது  சிறந்தது (வெள்ளி நிறம் இங்கும் அறியாமையைக் குறிக்கும்)

(இந்தப் பாடலில் ‘கொடுப்பது நல்லது; அதை வாங்குவது தீயது’ என்று முரண்பட இருப்பதாக நினைக்கலாம் ; அது தவறு  ; அவ்வையாரும் கூட , ஆத்திச் சூடியில்,   ஈவது விலக்கேல்  என்று நாலாவது வரியில் சொல்லிவிட்டு ஏற்பது இகழ்ச்சி என்று எட்டாவது வரியில் சொல்கிறார். இது வெவ்வேறு சூழ்நிலையில் பொருந்தும் வாசகம் ஆகும்)

****

நிர்வாண சாமியார் மீது வள்ளுவன் தாக்கு !

சமணர்களின் வெள்ளாடை (ஸ்வேதாம்பரர்) சாமியார்களைத் தாக்கிய வள்ளுவன் நிர்வாண சமண சன்யாசிகளையும் விடவில்லை . திசையையே – அதாவது வானத்தையே — ஆடையாகக் கொண்ட நிர்வாண சாமியார்களை திக் அம்பரர் = திகம்பரர் என்பர்

அவர்களை வள்ளுவன் கிண்டல் செய்யும் குறள்  இதோ —

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா  வழி -குறள் 846

பொருள் –  தம்முடைய குற்றத்தை நீக்காது , உடம்பை ஆடையால் மறைத்து வைக்க நினைப்பது புல்லறிவு – அதாவது முட்டாள்தனம் ; இப்படி அவர் பாடியதற்கு ,அவர் மனக்கண்களில் தோன்றியது, திகம்பர சமணர்களாகும் .

அதுமட்டும் அல்ல உலகம் எல்லாம் ‘உண்’டு என்று சொல்லும் கடவுளை ‘இல்லை’ என்று சொல்லுவான் பேய்ப்பயல் என்பதை ‘அலகை/ பேய் ‘என்று சொல்லிச் சாடுகிறான். புத்தரும் கடவுள் பற்றியே எதுவும்  சொல்லாமல் எட்டு குணங்களை மட்டும் வலியுறுத்துவதால் அவரைத் தாக்கும் விதத்தில் பத்து ‘கடவுள் வாழ்த்துப் பாட்டுப் பாடி’ கடவுள் உண்டு என்கிறார். 


புல்லறிவாண்மை அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் சேர்ந்து படிப்போருக்கு இது தெள்ளிதின் விளங்கும்.

OLD ARTICLES

திருக்குறளில் பேய் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/08/12

  1.  

12 Aug 2017 – திருக்குறளில் பேய் நட்சத்திரம்ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151). Algol is a binary star. Written by London Swaminathan. Date: 12 August 2017. Time uploaded in London- …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

tamilandvedas.com › tag › ஐயரா…

– 

17 Aug 2016 – Tagged with ஐயரா, ஐயங்காரா … தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

swamiindology.blogspot.com › 2016/08 › post-no3068

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015. –Subham—. Posted 16th August 2016 by Swaminathan. Labels: ஐயங்காரா? ஐயரா திருக்குறளில் இந்து …

‘வெள்ளை, வெள்ளி, வள்ளுவன், கம்பன், சமண

–SUBHAM–

கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்! (Post No.7806)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7806

Date uploaded in London – – 10 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

இராமாயணமும் மஹாபாரதமும் தரும் ஒரே செய்தி : தர்மம் வெல்லும்; அதர்மம் தோற்கும் என்பது தான்.

‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதை கம்பன் தனது முக்கிய செய்தியாக ராமாயணத்தில் தருகிறான்.

மஹாபாரதத்திலோ முக்கிய உபதேசமான கீதையில் கண்ணன் எப்பொழுதெல்லாம் தர்மம் குறைவு படுகிறதோ, அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் என்கிறான்.

இராமனும் கிருஷ்ணனும் அவதார பேதமே அல்லாது ஒரே பரம் பொருள் தான்!

இதை வலியுறுத்தும் வகையில் அருமையான ஒரு பாடலை பிணி வீட்டு படலத்தில் கம்பன் தருகிறான். (பாடல் 81)

அதையும் கீதை ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாகத் தருகிறான்.

கீதையின் ஸ்லோகம் இது:

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (அத்தியாயம் 4 ஸ்லோகம் 8)

கம்பன் தரும் பாடல் இது:

அறந்தலை நிறுத்தி வேதமருள்சுரந் தறைந்த நீதித்

திறந் தெரிந்துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்

பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (பாடல் 81)

பொருள் : தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – தனது அழகிய திருவடிகளைத் துதிப்பவர்களுடைய பிறப்பைப் போக்கி அருள்பவனாகிய அந்த மஹாவிஷ்ணு

அறம் தலை நிறுத்தி – தருமத்தை எங்கு நிலை பெறச் செய்து

வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி திறம் – வேதங்கள் மக்களிடத்தில் கருணை கூர்ந்து சொல்லிய நீதி வகைகளை

உலகம் – உலகில் வாழ்வோர்

தெரிந்து பூண – அறிந்து அதை மேற்கொண்டு அதன் படி நடக்கும்படி, அவர்களை

செந்நெறி செலுத்தி –  செம்மையான வழியிலே நடத்தி

தீயோர் இறந்து உக நூறி –  கொடியவர்கள் இறந்தொழியும் படி அழித்து

தக்கோர் இடர் துடைத்து – நல்லவர்களுடைய துன்பங்களைப் போக்கி

ஏக  – பின்னர் தன் ஜோதிக்கு எழுந்தருளுமாறு

ஈண்டு – இங்கே, அயோத்தியில்

பிறந்தனன் – வந்து அவதரித்துள்ளான்.

கீதை கூறும் ஸ்லோகத்தை அப்படியே இங்கு காணலாம்

பரித்ராணாய சாதூனாம் – தக்கோர் துயர் துடைத்து

விநாசாய ச துஷ்க்ருதாம் – தீயோர் இறந்து உக நூறி

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய – அறம் தலை நிறுத்து வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி திறம் உலகம் தெரிந்து பூண

ஸம்பவாமி யுகே யுகே (யுகம் தோறும் அவதரிக்கிறேன்) – ஈண்டு பிறந்தனன்.

இராமன் பரம்பொருள் என்னும் பேருண்மையை இதற்கு முந்தைய பாடலாக அமைக்கிறான் கம்பன்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய

காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில்லேந்திச்

சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை

ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (பாடல் 80)

பொருள் :

மூலமும் நடுவும் ஈறும் இல்லது – ஆரம்பமும் நடுவும் முடிவும் இல்லாததான

ஓர் மும்மைத்தாய காலமும் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ன்னும் மூன்று காலத்தின் எல்லையையும்

கணக்கும் நீத்த காரணன் –  இடம், குணம், செயல் ஆகிய எல்லைகளையும் கடந்து நிற்கும் எல்லாப் பொருள்களுக்குமான காரணனான அந்த முழுமுதற் கடவுளே

சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து – சூலாயுதம், சங்கு, சக்கரம் கமண்டலம் ஆகியவற்றைத் துறந்து

கை வில் ஏந்தி – கைகளில் வில்லை ஏந்தி

தொல்லை ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு – பழமையாகிய தனக்கு உரியதான ஆலிலை, தாமரை மலர், கைலாய கிரி ஆகியவற்றை விட்டு விட்டு

அயோத்தி வந்தான் – அயோத்தியை இடமாகக் கொண்டு திரு அவதாரம் செய்துள்ளான்

இந்தப் பாடலில் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் சிவன், பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தி போலன்றி இராமன் முழுமுதற்கடவுளின் மொத்த அம்சம் எனக் கம்பன் குறிப்பிடுவது நம்மை பிரமிக்க வைக்கிறது.

சூலம் – சிவன் கையில் ஏந்துவது

திகிரியும் சங்கும் – விஷ்ணு கையில் ஏந்துவது

கரகம் – ஜலபாத்திரம் அல்லது குண்டிகை பிரமன் ஏந்துவது.

ஆலிலை – திருமால் பிரளய காலத்தில் பள்ளி கொள்ளுமிடம்

திருமாலின் நாபித் தாமரை மலர் – பிரமன் தோன்றி வாழும் இடம்

வெள்ளிப் பொருப்பு – சிவன் உறையும் கைலாயம்

இவற்றை விட்டு அயோத்தி வந்துள்ளான் முழுமுதற் கடவுள் என கம்பன் இப்பாடலில் உணர்த்துகிறான் அநுமன் வாயிலாக.

யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.

பிணி வீட்டு படலத்தில் வரும் பாடல்கள் மிக அருமையானவை. ஓர்ந்து படிப்போம்: 

Time and Maths – காலமும் கணக்கும் நீத்த காரணனைப் பணிந்து உண்மை உணர்வோம்; உயர்வோம்!

tags  — கீதை ,இராமாயணம்,  கம்பன்!

***