பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!(Post No.9756)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9756

Date uploaded in London – –  –21 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!

ச.நாகராஜன்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகள் உண்டு. இவை காலத்தின் பொக்கிஷம். இவை தரும் விவரங்கள் ஏராளம், ஏராளம்!

தமிழ் மொழியில் பழமொழிகள் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கடந்த பல்லாயிரம் வருடமாக வாழ்ந்து வரும் மூத்த குடியான தமிழ்க் குடி தனது அனுபவத்தையும், அறிவையும் இந்தப் பழமொழிகளில் கொட்டி வைத்திருக்கிறது.

இவற்றைத் தொகுக்கப் பல முயற்சிகள் கடந்த பல நூறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்று வரை இந்த நல்ல முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வளரட்டும் இந்த முயற்சி.

10760 பழமொழிகளைத் தொகுத்து அனவரத விநாயகம் பிள்ளை என்பவர் 1912இல் ‘பழமொழி அகராதி’ என்ற நூலை வெளியிட்டார்.

1887இல் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 3644 பழமொழிகள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார். இதில் தனது ஆங்கில மொழிபெயர்ப்பையும் சில அரிய விவரங்களையும் அவர் தொகுத்துத் தந்தார்.

1842இல் முதன் முதலாக பழமொழி தொகுப்பு நூல் வெளியானது. இதை யாழ்ப்பாணத்தில் இருந்த பெர்சிவல் தொகுத்து ‘பழமொழித் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார்.

தமிழ் அறிஞரான கி.வா.ஜ. ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது அந்த வட்டாரத்தில் வழங்கி வந்த பழமொழிகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.

பின்னர் அவற்றை தொகுதிவாரியாக வெளியிட ஆரம்பித்தார்.

தமிழ்ப் பழமொழிகள் தொகுதி – 1இல் 5838 பழமொழிகள் இடம் பெற்றன. ‘அ’ முதல் ‘ஐ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 2இல் 5839 முதல் 11207 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘ஒ’ முதல் ‘சூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 3இல் 11208 முதல் 16967 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘செ’ முதல் ‘பூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 4இல் 16968 முதல் 21355 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘பெ’ முதல் ‘ஸ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

நான்காம் தொகுதியில் விடுபட்டுப் போன இன்னொரு 207 பழமொழிகள் பிற்சேர்க்கையாக  இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர அருஞ்சொற்பொருள் அகராதி ஒன்றும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.

மார்ஜாலம் என்ற சொல் பழமொழியில் வருகிறது. இதற்கான பொருள் என்ன? இந்த அருஞ்சொற்பொருள் அகராதியைப் பார்த்தால் பூனை என்று தெரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கிய நூல்களுள் ஏராளமான பழமொழிகள் இடம் பெறுகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அமைகிறது பழமொழி நானூறு.  400 பாடல்களும் சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 401 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது. மூன்றுரை அரையனார் என்ற சமண முனிவர் இயற்றிய அற்புதமான இந்த நூல் 34 தலைப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் பழமொழி சார்ந்த ஒரு பேருண்மை இருக்கும் படி உள்ள சிறப்பான நூல் இது.

அப்பர் பெருமான் பழமொழியை அமைத்து ஒரு பழமொழி பதிகத்தையே அருளியுள்ளார்.

இன்றைய திரைப்படப் பாடல்களிலும் பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.

இன்னும் ஏராளமான பழமொழி சார்ந்த பாடல்கள், நூல்கள் தமிழில் உண்டு.

தமிழில் மட்டும் அல்ல பழமொழிகள். சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இந்த சம்ஸ்கிருத நூல்களின் தொகுப்போ விரிவானது; பெரியது.

இதர நாட்டு மொழிகளில் உள்ள பழமொழிகளின் தொகுப்புகள் அந்தந்த நாட்டில் உள்ள பழமொழி ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

சான்ஃபிரான்ஸிஸ்கோ நூல் நிலையத்திற்கு (அங்கு இருக்கும் போதெல்லாம்).அடிக்கடி செல்லும் வழக்கத்தைக் கொண்டவன் நான்.

அங்கு இப்படிப்பட்ட தொகுப்பு நூல்களைப் பார்த்தால் பிரமிப்பையே தரும்.

தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள பழமொழிகளின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட வேண்டும். இது ஒரு அரிய பெரிய முயற்சி. ஆனால் காலத்தின் கட்டாயத் தேவை இது. பொறுத்திருந்து பார்ப்போம் – யார் முயற்சியை எடுக்கிறார்கள் என்று!

****

TAGS- பழமொழிகள்கி.வா.ஜ.

தண்டலையார் சதகம்- 31 பழமொழிகள் (Post No.9316)

மார்ச் 2021  நற்சிந்தனை காலண்டர் (Post No.9316)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9316

Date uploaded in London – –27 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தண்டலையார் சதகம் என்றும் பழமொழி விளக்கம் என்று கூறப்படும் நூலில் 100 பழமொழிகள் உள்ளன. அவற்றில் 31 பழமொழிகளை இந்த மாத காலண்டரில் காண்போம்

பண்டிகை/விடுமுறை நாட்கள் :–மார்ச் 11- மகா சிவராத்திரி ;  14- காரடையான் நோன்பு ; மார்ச் 28-பங்குனி உத்திரம் , ஹோலி

ஏகாதசி – 9, 24; அமாவாசை – 13; பௌர்ணமி -28;

முஹுர்த்த நாட்கள் – 3, 5, 10, 11, 15, 24, 31

.****

மார்ச் 1 திங்கட் கிழமை

திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையும் தீரும் தானே! (01) பழமொழி: “திருவிளக்கிட்டாரைத் தெய்வமறியும்”, “விளக்கிட்டால் வினைதீரும்”

xxx

மார்ச் 2 செவ்வாய்க்  கிழமை

வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யுமதை மறந்தி டாதே

உலகத்தை வாழவைக்கும் மழைக்கு நன்றிகாட்ட உலகமக்கள் என்னசெய்ய முடியும்?

xxx

மார்ச் 3 புதன்  கிழமை

இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ தில்லை தானே!(03)

இட்டபடி அல்லாமல் வேறு ஆசைப்பட்டால் கிடைத்திடுமோ?

xxx

மார்ச் 4 வியாழக்  கிழமை

நன்மைசெய்தார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று நலிவர் தாமே. (04) நன்மைசெய்தார் நன்மைபெறுவர் தீமைசெய்தார் தீமை பெறுவர்.

xxx

மார்ச் 5 வெள்ளிக்  கிழமை

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை மனைவியுடன் நடத்தி நின்றால்

இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல் இயற்கை தானே. (05)

பழமொழி: இல்லறமே பெரிது

xxx

மார்ச் 6 சனிக்  கிழமை

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா என்றொருத்தி கூறி னாளே. (06)

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா

xxx

மார்ச் 7 ஞாயிற்றுக்  கிழமை

பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பலனுண் டாமே. (07)

பழமொழி: பன்றிபல குட்டி போட்டால் என்ன? யானையின் ஒருகுட்டிக்கு இணையாமோ?

xxxx

மார்ச் 8 திங்கட் கிழமை

நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக்(கு) என்றதனை நல்கு வாரே. (08)

பழமொழி: நல்லதுகண்டால் நாயகனுக்குக் கொடுப்பர். (நாயகன்=இறைவன்)

xxx

மார்ச் 9 செவ்வாய்க்  கிழமை

வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா(து) உணுஞ்சோறு மருந்து தானே.(09) விருந்தில்லாத சோறு மருந்து.

xxx

மார்ச் 10 புதன்  கிழமை

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை தானே. (10)

சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்தாற்போலே.

xxx

மார்ச் 11 வியாழக்  கிழமை

எறும்பெண்ணா யிரமப்பாற் கழுதையுங்கை கடந்ததென்றோன் எண்ணந் தானே. (11)

 ‘எறும்பு எண்ணாயிரம் போனது அப்பால் கழுதையும் கைகடந்தது, என்றாற் போல’.

xxx

மார்ச் 12 வெள்ளிக்  கிழமை

உப்பிட்ட பேர்கடமை உளவரையும் நினைக்குமிந்த உலகம் தானே. (12)

 உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

xxx

மார்ச் 13 சனிக்  கிழமை

காட்டுக்கே எரித்தநிலா கானலுக்கே பெய்தமழை கடுக்கும் தானே. (13)

: காட்டுக்கு எரித்தநிலா, கானலுக்குப்பெய்த மழை போல

xxx

மார்ச் 14 ஞாயிற்றுக்  கிழமை

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக் காயா காதே. (14)

கங்கையிலே படர்ந்தாலும் பேச்சுரைக்காய் நல்லசுரைக்காய் ஆகாது.

xxx

மார்ச் 15 திங்கட் கிழமை

மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை யாயிருந்த வண்ணந்தானே. (15)

பழமொழி: மழைவிட்டும் தூவானம் விடவில்லை.

xxx

மார்ச் 16 செவ்வாய்க்  கிழமை

துர்ச்சனப்பிள் ளைக்(கு)ஊரார் புத்திசொல்லு வார்என்றே சொல்லு வாரே. (16) பழமொழி: துர்ச்சனப்பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்.

xxx

மார்ச் 17 புதன்  கிழமை

பொறுத்தவரே ஆள்வார் பொங்கினவர் காடுறைந்து போவர் தாமே. (17)

பொறுத்தவர் பூமி ஆள்வார்,பொங்கினவர் காடாள்வார்.

xxx

மார்ச் 18 வியாழக்  கிழமை

பிள்ளைபெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறியும் பெற்றி யோரே. (18) பழமொழி: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாளாம்

xxx

மார்ச் 19 வெள்ளிக்  கிழமை

எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும் இயற்கை தானே. (19) மௌனமே மெய்

xxx

மார்ச் 20 சனிக்  கிழமை

முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து மொழிவர் தாமே.(20) முன்னுக்கொன்றாய்ப் பின்னுக்கொன்றாய்ப் பேசுவார் முகத்தில் விழிக்கக் கூடாது.

xxx

மார்ச் 21 ஞாயிற்றுக்  கிழமை

விடியன்மட்டும் மழைபெயினு மதினோட்டாங் கிளிஞ்சின் முளைவீசி டாதே. (21) விடியவிடிய மழைபெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது

xxx

மார்ச் 22 திங்கட் கிழமை

ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே ஆகும் தானே. (22)

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

xxx

மார்ச் 23 செவ்வாய்க்  கிழமை

நாயறியாது ஒருசந்திச் சட்டிபா னையினந்த ஞாயம் தானே. (23)

நாய்க்குத் தெரியுமோ ஒருசந்திப்பானை?/

நக்குற நாய்க்குச் செக்குந்தெரியாது, சிவலிங்கமும் தெரியாது!

xxx

மார்ச் 24 புதன்  கிழமை

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலு மென்னுண் டாமே. (24)

பழமொழி: எட்டிபழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

xxx

மார்ச் 25 வியாழக்  கிழமை

காதவழி பேரில்லான் கழுதையோ(டு) ஒக்குமெனக் காண லாமே. (25)

பழமொழி: காதவழி பேரில்லான் கழுதைக்கொப்பான்

xxx

மார்ச் 26 வெள்ளிக்  கிழமை

தெரியாத செவிடன்கா தினிற்சங்கு குறித்ததெனச் செப்ப லாமே.(26)

செவிடன்காதில் ஊதிய சங்குபோல.

xxx

மார்ச் 27 சனிக்  கிழமை

தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவதும் தக்க தாமே. (27)

தன்னுயிர்போல் மன்னுயிர்க்கு இரங்கவேண்டும்

xxx

மார்ச் 28 ஞாயிற்றுக்  கிழமை

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லாத் தன்மை தானே. (28)

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை.

xxx

மார்ச் 29 திங்கட் கிழமை

போதிலே மவுனமிராப் போதிலே ருத்ராக்கப் பூனை தானே. (29)

பழமொழி: உருத்திராட்சப் பூனை போல ;

xxx

மார்ச் 30 செவ்வாய்க்  கிழமை

தானொன்று நினைக்கையிலே தெயவமொனறு நினைப்பதுவும் சகசந்தானே. (30) பழமொழி: தானொன்றுநினைக்கத் தெய்வமொன்றுநினைக்கும்.

xxx

மார்ச் 31 புதன்  கிழமை

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதிலை மெய்ம்மை தானே. (31)

பழமொழி: மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வானோ?

xxx சுபம் xxx

tags-  தண்டலையார் சதகம்,  பழமொழிகள், மார்ச் 2021 காலண்டர்

வேள்வி, துறவி பற்றிய 30 பழமொழிகள் (Post No.8872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8872

Date uploaded in London – –30 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் 2020 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் –  நவம்பர் 14 தீபாவளி ,கேதார கௌரி விரதம், குபேர பூஜை, CHILDREN’S DAY;  15 கந்த சஷ்டி விரத ஆரம்பம் ; 20- கந்த சஷ்டி ; 29-கார்த்திகை

அமாவாசை– 14;  பௌர்ணமி-29;  ஏகாதஸி-11,26; 

சுபமுகூர்த்த தினங்கள்—4, 6, 11, 12, 13, 20, 26

நவம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

அஸ்வமேத யாகங்கள் மூலம்  அரசர்கள் பாபங்களை அழித்தார்கள் – பாரத் மஞ்சரி

முச்யந்தே ஸர்வ பாபேப்யோ ஹயமேதே ன பூமி பாஹா

XXX

நவம்பர் 2 திங்கட் கிழமை

அவா இல்லார்க்கும் துன்பம்-  திருக்குறள் 368

ஆசை இல்லாதவர்க்கு துன்பம் இல்லை

xxx

நவம்பர் 3 செவ்வாய்க் கிழமை

ஒருவனுடைய செல்வச்  செழிப்பைக் காட்டத்தான் யாகங்கள் நடத்தப்  படுகின்றன – பிருஹத் கதா மஞ்சரி

க்ரதுர்நாம பாஹ்யத்ரவிண ஆடம்பரஹ

XXX

நவம்பர் 4 புதன் கிழமை

ந லிங்கம் யதி காரணம் – மனு ஸ்ம்ருதி 6-66, ஹிதோபதேசம் 4-90

வெளிவேஷம் மட்டும் துறவிகளின் அடையாளம் அல்ல

xxx

நவம்பர் 5 வியாழக் கிழமை

ஒருவனை வஞ்சிப்ப தோறும் அவா – திருக்குறள் 366

பாவம் செய்ய வைப்பது ஆசைதான்

XX

நவம்பர் 6 வெள்ளிக் கிழமை

தேவர்களுக்குப் பிரியமான யக்ஞங்களைச் செய்வது நன்மை பயக்கும் – சிசுபாலவதம்

புரோதாச புஜாம் இஷ்டாமிஷ்டம் கர்த்துமல ந்தராம்

XXX

நவம்பர் 7 சனிக் கிழமை

நவம்பர்அஸமந்தோ பவேத்  ஸாதுஹு – ஸ ம்ஸ்க்ருத பழமொழி

திறமையற்றோர் சந்நியாசி ஆகிவிடுவார்கள்

xxx

நவம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

இன்பம் இடையறா நீண்டும் — அவா கெடின்  –திருக்குறள் 369

ஆசையில்லாவிட்டால் எப்போதும் பேரானந்தம்தான்

xxx

நவம்பர் 9 திங்கட் கிழமை

அவா நீப்பின் …… பேரா இயற்கை தரும்- திருக்குறள் 370

அழியாத இன்பம் தருவது ஆசை இல்லாமை

XXX

நவம்பர் 10 செவ்வாய்க் கிழமை

ஆஸ்ரமத்தில்  வசிப்பது பற்றின்மைக்கு உதவும் – கஹா வத் ரத்நாகர்

நிவ்ருத்தி போஷகஹ ஆஸ்ரமதமஹ

xxx

நவம்பர் 11 புதன் கிழமை

மனதைக் கட்டுப்படுத்தாதவனுக்கு தலையை மழித்து என்ன பயன்

மனசோ நிக்ரஹோ  நாஸ்தி முண்டனம் கிம் கரிஷ்யதி

xxx

நவம்பர் 12 வியாழக் கிழமை

மழித்தலும் நீட்டலும் வேண்டா  உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – குறள் 280

மொட்டையும் தாடியும் தேவையே இல்லை (துறவிக்கு); உலகம் பழிக்கும் காரியங்களைச் செய்யாமல் இருந்தாலே போதும் . தம்மபதம் , பஜகோவிந்தம் நூல்களிலும் உளது

xxx

நவம்பர் 13 வெள்ளிக் கிழமை

ந ப்ராப் னுவந்தி  யதயோ ருதிதேன  மோக்ஷம் –பாததாதித க

எல்லாவற்றையும் கண்டு துக்கப்படுவதால் மட்டும் மோட் சம்  கிடைத்துவிடாது

XXX

நவம்பர் 14 சனிக் கிழமை

ந தேன ஜாயதே  சாதுர் யே நாஸ்ய முண்டிதம் சிரஹ- ஸ ம்ஸ்க்ருத பழமொழி

மொட்டை அடித்துக்கொண்டதால் மட்டும் சந்யாசி ஆகிவிடமுடியாது

xxx  

நவம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

யார் ஒருவர் வேள்விப் பிரசாத த்தை  சாப்பிடுகிறாரோ அவர்கள் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் – பகவத் கீதை 3-13

யக்ஞ சிஷ்டாசினஹ ஸந்தோ  முச்யந்தே  ஸர்வ கில்பிஷை ஹி

XXX

நவம்பர் 16 திங்கட் கிழமை

வேள்வியிலிருந்து மழை உண்டாகின்றது ; வேள்வியோ மனிதனின் முயற்சியில் உண்டாகின்றது-  பகவத் கீதை 3-14

யக்ஞா த் பவதி பர்ஜன்யஹ யக்ஞஹ கர்மஸமுத்பவஹ

XXX

நவம்பர் 17 செவ்வாய்க் கிழமை

நம்பிக்கை இல்லாமல் வேள்வி செய்வது பயனற்றது –  பகவத் கீதை 17-15

ச்ரத்தா விரஹிதம் யக்ஞம் தாமஸம் பரிசக்ஷ தே

XXX

நவம்பர் 18 புதன் கிழமை

அஹோ கஷாய பாஹுல்யம் முனீ னாமபி ஜாயதே – பிருஹத் கதா கோச

அந்தோ, துறவிகளும் கூட அதிக ஆசைக்குட் பட்டுவிடுகின்றனர்

xxx

நவம்பர் 19 வியாழக் கிழமை

அவா என்ப …….. பிறப்பீனும்  வித்து –குறள் 361

ஆசையே மீண்டும் மீண்டும் பிறவித துன்பத்தைத் தரும்

 xxx

நவம்பர் 20 வெள்ளிக் கிழமை

வேண்டாமை  அல்ல விழுச்  செல்வம்  ஈண்டில்லை – குறள் 363

ஆசையில்லாமல் இருப்பதே செல்வம் ;  அதைவிட பில்லியன் டாலர் எதுவும் இல்லை

xxx

நவம்பர் 21 சனிக் கிழமை

எங்கும் நிறைந்த இறைவன் வேள்வியில் உறைகிறான் – பகவத் கீதை 3-15

ஸ ர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞஏ ப்ரதிஷ்டிதம்

XXX 

நவம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை –  குறள் 362

ஒருவன் விரும்பினால் பிறவாமையை விரும்பவேண்டும்

xxx

நவம்பர் 23 திங்கட் கிழமை

தூ உய்மை என்பது அவாவின்மை -குறள் 364

சுத்தம் என்பது ஆசையில்லாத நிலை ; ஆசை என்பது அழுக்கு

xxx

நவம்பர் 24 செவ்வாய்க் கிழமை

ஒரு துறவியின் பேசசு மூலம்தான் அவரை எடைபோட வேண்டுமா?

லோகெ மு னீ னா ம்  ஹாய் கிரா ஸ்திதிஹி

XXX

நவம்பர் 25 புதன் கிழமை

ஆண்டிகளுக்குள் மோதல் வந்தால் நொறுங்குவது பிச்சை  எடுக்கும் சட்டிகள்தான் .- கஹா வத்  ரத்நாகர்

ஸா தூ னாம்  கலஹே  நூ னம் கேவலா கர்பர க்ஷதி ஹி

XXX

நவம்பர் 26 வியாழக் கிழமை

நாமம் போட்டவன் எல்லாம் தாதனா , விபூதி பூசினவனெல்லாம் ஆண்டியா ?

XXX

நவம்பர் 27 வெள்ளிக் கிழமை

ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும் –  தமிழ்ப் பழமொழி

XXX

நவம்பர் 28 சனிக் கிழமை

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி

XXX

நவம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது.

XXX

நவம்பர் 30 திங்கட் கிழமை

முனிவர்களுக்குள் சாந்தமும் மறைவாக எதையும் எரிக்கும் சக்தியும் உளது – சாகுந்தலம்

ச மப்ரதானேஷு  தபோதனேஷு கூ டம்  ஹி தாஹாத்மகஸ்தி தேஜஹ

tags – வேள்வி, துறவி , பழமொழிகள், நவம்பர் 2020, 

xxx subham xxxxxx

சோறு கண்ட இடம் சுவர்க்கம் (Post 8836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8836

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.

ANSWERS

1.சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா

2.சோ ற் றி லே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா

3.சோறும் துணியும் தவிர மற்றத்துக்கெல்லாம் குறைவில்லை.

4.சோற்றால் அடித்த பிண்டம்

5.சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம்

6.சோற்றுக்கும் கறுப்புண்டு , சொல்லுக்கும் பழுது உண்டு

7.சோற்றுக்குத் தாளம் போடுகிறான்

TAGS– சோறு ,சுவர்க்கம் , பழமொழி

–subham–

சைவம் பற்றிய 4 பழமொழிகள் என்ன ? (8762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8762

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.



விடைகள்:–

1.சைவத்திற்கு ஆசைப்பட்டு மரக்கறி தள்ளிவிட்டேன்

2.சைவப்பழம் வில்வக்கிளை

3.சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்

4.சைவம் முற்றி எலும்பெலும்பாய்க் கழிகிறது

SOURCE BOOK – பக்கம் 211, கழகப் பழமொழி அகரவரிசை , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970

tags–சைவம் , பழமொழிகள்

பெருமாள் பற்றிய 5 பழமொழிகள் என்ன ?(Post.8735)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8735

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெருமாள் பற்றிய 5 பழமொழிகள் என்ன ? கட்டத்தில் காணுங்கள்

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.பெருமாளைச் சேர்ந்தோர்க்குப் பிறப்பில்லை , பிச்சைச் சோற்றுக்கு எச்சிலில்லை

2.பெருமாள் இருக்கிறவரையில் திருநாள் உண்டு

3.பெருமாள் என்ற பெயர் மாறி பெத்த பெருமாள் ஆச்சுது

4.பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்.

5.பிச்சை எடுத்ததாம் பெருமாளு , அதை புடுங்கியதாம் அனுமாரு.

tags–பெருமாள், பழமொழிகள்

–subham–

தோட்டம் பற்றிய 7 பழமொழிகள் என்ன? (Post No.8720)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8720

Date uploaded in London – –22 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தோட்டம் பற்றிய 7 பழமொழிகள் என்ன? கட்டத்தில் காண்க

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.தோட்டத்தில் அந்தம்

2.தோட்டக்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சுது

3.தோட்டத்தில் பழமிருக்க தூரத்தில் போவானேன்?

4.தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?

5.தோட்டப் பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாய் இல்லை

6.தோட்டம் முச்சாண் சுரைக்காய் அறு சாண்

7.தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்?

tags — தோட்டம், பழமொழிகள்

–subham—

ஐயர் பற்றி 7 பழமொழிகள் கண்டுபியுங்கள் (Post No.8707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8708

Date uploaded in London – –19 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஐயர் முனகல் அத்தனையும் வேதம்

2.ஐயர் வரும்வரை அமாவாசை  காத்திருக்குமா ?

3.ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்

4.ஐயர் என்பவர் துய்யர் ஆவார் ((துய்யர் = தூயவர்))

5.ஐயர் ஒன்றே கால் சேர், அவர் அணியும் லிங்கம் அரை சேர்

6.ஐயர் கொண்டுவருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை

7.ஐயர் குடுவை போல அவர் மனைவி கூடை போல

துய்யர் = தூயவர்

tags- ஐயர், பழமொழிகள்

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8703

Date uploaded in London – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆண்டி அடுத்த ஊரையே புகழ்வான்

2.ஆண்டி  குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்

3.ஆண்டி க்குப் பிச்சையா , அவன் குடுவைக்குப் பிச்சையா

4.ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்

5.ஆண்டியு ம் ஆண்டியு ம் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்

6.ஆண்டி  சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போயிற்று

7.ஆண்டிகள் மட ம் கட்டுவது போல

 tags–ஆண்டி ,பற்றி, பழமொழிகள்

–subham–

எண்.8 பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post No.8692)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8692

Date uploaded in London – –16 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 எட்டு பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.எட்டுமிரண்டும் தெரியாத பேதை

2.எட்டு வருடத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழிதேடும்

3.எட்டுக்குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது

4.எட்டுக்கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்

5.எட்டுப்படி அரிசி ஒரு கவாளம் ; ஏழுர்ச் சண்டை ஒரு சிம்மாளம் 

6.எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில்  தப்பாமல் தலைபோம்

TAGS – எட்டு , பற்றி,  பழமொழிகள்