பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம் ! (Post.10,429)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,429
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் முப்பது வெள்ளைக்காரர்கள் நமது நான்கு வேதங்களை மொழிபெயர்த்தனர் ; எல்லோரும் நவக்கிரகங்கள்; நல்ல கோமாளிகள் ; இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது என்ற பழமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே சொல்லுக்கு நாலு கோமாளிகள் நாலு விதமாகப் பொருள் சொன்னதோடு எ திரும் புதிருமாக அர்த்தம் செய்தார்கள் . ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தார்கள், பூர்வ குடிமக்களை விரட்டியடித்தார்கள் என்பதில் ஒற்றுமை!! ஏனெனில் உலகம் முழுதும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்குள்ள பூர்வ குடிமக்களை குருவி சுடுவது போலவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது போலவும் கொன்று குவித்து அந்த நாடுகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இன்று ஆங்காங்கே பெயரளவுக்கு மட்டுமே அவர்கள் உள்ளனர் ; அதே கொள்கையை இந்தியா மீதும் திணித்து, சங்ககால இலக்கியத்தில் இல்லாத, புராண இதிஹாசங்களில் இல்லாத பொய்மைச் செய்திகளைப் பரப்பினார்கள்.

நல்ல வேளை , பாரதி போன்ற யுகபுருஷர்களும், மஹாத்மா காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர் போன்றோரும் ஆரிய திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்தார்கள்


இந்த முப்பது வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம் சோமபானம் என்பது போதைப்பொருள்; அது சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறும் என்று சொல்லி பல காளான் வகைத் தாவரங்களின் பெயர்களை எல்லாம் உளறிக் கொட்டினார்கள். இது 1895ம் ஆண்டு RALPH T H GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பிலேயே உள்ளது. மொத்தத்தில் மாக்ஸ் முல்லர் கும்பலும் தேச விரோத, இந்து விரோத மார்க்ஸீயக் கும்பலும் ஒத்துக்கொண்ட விஷயம் இது.

ஆனால் வேதம் முழுதும் சோமபானம் பற்றிவரும் அதிசயச் செய்திகளை மறைத்தோ அல்லது அவை செய்தியே அல்ல என்ற பாணியில் பாராமுகம் காட்டியோ இதைச் செய்தனர். இன்றுவரை அவர்கள் சோம பானத்தை பயன்படுத்தி, அவர்கள் சொன்னதை நிரூபிக்கவும் இல்லை !
XXX
சோமபானம் பற்றிய அதிசயச் செய்திகள்

4 வேதங்களிலும் சோம பானம் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன.

1.சோம லதா என்ற கொடியை அல்லது தாவரத்தை கழுகுகள் கொண்டுதரும்

  1. சோமம் என்னும் மூலிகை, மூலிகைகளின் அரசன்
  2. சோமத்தில் 15 வகைகள் உண்டு
  3. சோமம் என்பது சிவப்பு நிற மரம்
    5.சோமபானத்தைக் குடித்தால் பாவம் போகும்
  4. மனம் சுத்தம் ஆகும்
  5. சக்தி, வீரம் அளிக்கும்
    8.புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும்
    9அதைப் பிழியும் மரக் கரண்டிகள், கற்கள் ஆகியன தெய்வம் போன்றவை
    இவைகளை எல்லாம் விளக்காமல் சென்றுவிடுவார்கள்
    .தளவாய்புரம் செப்பேடுகள் 1200 ஆண்டு பழமையானவை. அது சோமயாகம் செய்து மனம் சுத்தமான காடக சோமயாஜியின் புகழைப் பாடுகின்றது . பகவத் கீதை, சிலப்பதிகாரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியன சோம யாகத்தைப் புகழ்கின்றன. ; உலக மகா கவி சுப்ரமணிய பாரதி, நம து நாட்டை ஆரிய நாடு என்று பல இடங்களில் புகழ்வதோடு ஆரிய என்பதை நல்ல பொருளில், உண்மைப் பொருளில், பயன்படுத்துகிறார்.
    இதே போல பாரதியார் சோம ரசத்தைப் புகழ்ந்தும் பாடுகிறார் ; இது பலருக்கும் தெரியாது

அவருடைய படலைப் பார்ப்பதற்கு முன்னர், கீதையும் சிலப்பதிகாரமும் எப்படிப் புகழ்கின்றன என்று பாருங் கள் !
பகவத் கீதை 9-20
“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னைப் பூஜித்து சோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் சுவர்கத்துக்குச் செல்லுவதை வேண்டுகின்றார்கள் .அவர்கள் புண்ய பலத்தின் உறைவிடமான தேவேந்திர உலகத்தை அடைந்து அவ்வானுலகில் ஒளி வீசுகின்ற தேவர்கள் அனுபவிக்கும் சுக போகங்களை அனுபவிக்கிறார்கள் “.

இந்த ஸ்லோகம், சோமபானம் அருந்துவதால் பாவம் போய், அவர்கள் சொர்கத்துக்குச் சென்று ஒளிமயம் ஆகிவிடுவார்கள் என்கிறது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அரசனுக்குரிய வெண் குடை சோமயாஜிகளுக்கு கிடைக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதிய சங்கரரும் சோமபானம் என்பது கடவுளரின் ரத்தத்துக்குச் சமம் என்று ஹரிவம்ச ஸ்லோகத்தின் மூலம் காட்டுகிறார்.
இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் சோமயாகம் செய்தது பற்றிப் பாடுகிறார் .

“இந்திரனுடைய அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களை வஞ்சி நகருக்குக் கொண்டுவந்து , மது அருந்துவதற்குரிய சோம வேள்விகளைச் செய்தவன் இன்று இல்லை” என்கிறார்

சதுக்கப்பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
— நடுகல் கதை, சிலப்பதிகாரம்

இதிலிருந்து ஒருகாலத்தில், ஒரு சேர மன்னன், சோம யாகம் செய்தது தெரிகிறது; மது என்னும் சொல் தேன், சோமம் ஆகிய இரண்டுக்கும் வேதத்தில் பயன்பட்டது சுரா பானம் என்பதை கள் , சாராயம் என்று சொல்லி வேதம் கண்டிக்கிறது .
பாரதி இரண்டு பாடல்களில் சோம ரசத்தைக் குறிப்பிடுகிறார்.

மது என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது போலவே சோமம் என்பதற்கு சந்திரன், சோமபானம் என்ற இரண்டு பொருள் உண்டு. அதற்கு உமையுடன் கூடிய சிவன் (ச+உமா=சோம )என்றும் சங்கரர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் விளம்புகிறார்.

ஜய ஸோம என்ற பாரதி பாட்டில் இந்திரனையும் சோமனையும் தொடர்பு படுத்திப் பாடுகினறார் .ரிக்வேதம் முழுதும் இந்திரனுடன் சோம ரசம்தான் சம்பந்தப்படுகிறது. அதனால்தான் இந்திரன் சக்தி பெற்று விருத்திரன் முதலியோரைக் கொன்றான் என்றும் வருகிறது.

இந்திர- சோமன் என்று ஜோடியாகப் பாடப்படும் ஓரிரு துதிகளிலும் சோமம் என்னும் மூலிகைப் பற்றித்தான் பேசுகின்றனர் உரைகாரர்கள் ; ஆகவே ஜய சோமம் பாடல் சோம மூலிகை பற்றிதே. ஒருவேளை வேத கால முனிவர் போலவே பாரதியும் இரட்டுற மொழிந்திருக்கலாம் .

சோம ரசம் பற்றிய பாடலைப் படிப்போருக்கு பாரதியின் கருத்து தெள்ளிதின் விளங்கும். அவர் அதன் சிறப்புகளை எடுத்து ஓதுகிறார்; குறை ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பாரதியின் பாடல்கள்
XXX
சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx
சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்


xxx SUBAHM xxxx

tags- சோமம், சோம ரசம், பானம் , பாரதி, இளங்கோ , கீதை

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி! (10,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,162

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம். அண்ணலைப் போற்றுவோம்!

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

ச.நாகராஜன்

மஹாத்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கில் துணுக்குச் செய்திகள், குட்டிச் சம்பவங்கள் உண்டு. எதை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு பொருள் புதைந்து இருக்கும்.மஹான்களை அவர்கள் அருகில் இருப்போர்கள், சிறு சம்பவங்களினாலும் அவர்கள் கூறும் சொற்கள் அவை ஒன்றிரண்டாக இருந்தாலும் சரி- அந்தச் சொற்கள் மூலமாகவும், அவர்களை மஹாத்மா என்று இனம் கண்டு கொள்ளலாம்.

ராம்நாராயண் சௌத்ரி என்ற காந்திஜியின் அணுக்கத் தொண்டர் தனது அனுபவங்களை BAPU, AS I SAW HIM என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

அவற்றில் சில இதோ:

உழையுங்கள் – நீரையும், உணவையும் பெறுங்கள்!

காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சில பேர் வருகை புரிந்திருந்தனர். நேரம் நண்பகல். அவர்களுக்கு ஒரே தாகம். ராம்நாராயண் சௌத்ரி அங்கிருந்தார். அவரிடம் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். உடனே கிணற்றிலிருந்து ஒரு பக்கெட் நீரை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார் ராம்நாராயண். உடனே அங்கிருந்த அவரது ஆசிரம சகாக்கள் அப்படிக் கொடுக்கக் கூடாது என்றும அது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்றும் கூறினர். ராம் நாராயணனுக்கோ அப்படி தாகம் கொண்டவர்களுக்கு நீர் வழங்குவது ஒரு சேவையாகவே தோன்றியது. இதில் என்ன முரண்பாடு?!- என்று அவருக்குத் தோன்றியது. மதியம் காந்திஜை வழக்கம் போல நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற சமயம் அவருடன் ராம்நாராயணனும் கூடவே சென்றார்.

அப்போது இப்படி நீர் வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏன் என்றும் கேட்டார். உடனே மஹாத்மா பதில் கூறினார்: “ நாம் நம்மால் முடிந்த அளவு நம் உடலினால் ஆன சேவையை நோயுற்றவர்களுக்கும் ஒரு வேலையைச் செய்ய முடியாதபடி இருக்கும் செயலிழந்தவர்களுக்கும் தான் செய்ய வேண்டும். ஆனால் நல்ல உடல் வலிமை கொண்டவர்களுக்கு அப்படி இலவ்சமாக உணவையும் நீரையும் கொடுப்பது என்பது அவர்களிடம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும், பிச்சை எடுப்பதைத் தோற்றுவிக்கும், மனித கௌரவத்தைக் குறைப்பதாகவும் ஆகும். ஒவ்வொரு மனிதனையும் சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவராக ஆக்க வேண்டும். ஆகவே தான் கிணற்றின் அருகே ஒரு பக்கட்டையும் கயிறையும் வைத்துள்ளேன். தேவையானோர், அதிலிருந்து நீரை எடுத்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். உணவும் இங்கு அப்படித்தான்.  ஏதேனும் வேலை செய்தவருக்கே இங்கு உணவு – அவர் செய்த வேலைக்காக!

இன்று தமிழக அரசு இலவசமாக அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதையும் காந்திஜி மிகவும் வலியுறுத்திய மது விலக்கை அமல் படுத்தாமல் குடிகார நாடாக தமிழ்நாட்டை ஆக்கியதையும் நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறதல்லவா!

*

ராம்நாராயண் ஆன்மீக சம்பந்தமான ஒரு கேள்வியை காந்திஜியிடம் கேட்டார். அதற்கு விரிவாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வரியை முடித்தவுடனும் ‘ஜி’, ஜி என்று ராம்நாராயண் தான் கேட்பதை உறுதிப்படுத்தி மரியாதையாக சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆனது. காந்திஜி சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது கவனிக்கத் தவறி விட்டார் ராம்நாராயண் அல்லது காந்திஜி சொல்லியது அவருக்குப் புரியவில்லை. அவர் ஜி என்று சொல்லவில்லை. காந்திஜியும் பேச்சை நிறுத்தி விட்டார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.

“ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தது என்றால் அல்லது நான் சொன்னதை  உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் பேசாமல் இருக்கக் கூடாது. என்னைக் கேட்க வேண்டும். அறிவை அடைய கீதை மூன்று படிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. எளிமை, பிரஸ்னம் அதாவது கேள்விகள் கேட்பது, சேவை.

கேள்விகளைக் கேட்க ஒருவர் தயங்கவே கூடாது. விடையில் திருப்தி கொள்ளாத வரை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மௌனமாக இருப்பது கூட ஒருவகையில் பொய் தான். கவனமாக ஒருவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அது இங்கிதம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.”

பாபுஜி மிக்க பொறுமையுடன் ஒருவருக்கு அறிவைப் புகட்டுவார். அதே சமயம் கேட்கும் ஒருவர் கவனத்துடன் இருபப்தையும் வலியுறுத்துவார்.

நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சுகரை அணுகி கேள்விகளைக் கேட்கும் போது நடக்கும் சம்வாதத்தை மேற்படி சம்பவம் நினைவு படுத்துகிறது. கீதையும் பரிப்ரஸ்னம் என்பதை வலியுறுத்துகிறது – அதாவது மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுதல்!

அடடா! மஹாத்மாவின் வாழ்க்கை தான் எத்துணை எளிமையானது, அதில் தான் எத்தனை பேர் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற்று அறிவை அடைந்தனர். அவர் தான் எப்படிப்பட்ட சேவையை உலகினருக்கு அளித்தார்!

கீதை காட்டிய வழியை அவர் எப்படி அழகுற போதித்தார்.

அவரை வணங்குவோம்; போற்றுவோமாக!

***

tags –எளிமை, சேவை , கீதை,  காந்திஜி

கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! (Post.9404)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9404

Date uploaded in London – –  21 MARCH  2021    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கீதையின்  மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! by S Nagarajan

உலகின் மஹிமை வாய்ந்த நூல்களில்  மகான்களாலும், அருளாளர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் பெரும் நூல் பகவத்கீதை. மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. கிருஷ்ண-அர்ஜுன சம்வாதமாக – உரையாடலாக – அமைந்துள்ள இந்த நூல் மனித குலத்திற்கே ஒரு வழிகாட்டி.

இந்த நூலை துருக்கி நாடு 1971ஆம் ஆண்டு தடை செய்தது.

பாரத நாட்டில் உள்ள அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.

எதற்காக இந்தத் தடை திடீரென்று என்று!

tags – கீதை,  மஹிமை,  தடை,  துருக்கி, 

கீதையின் ஏழாவது கட்டளை! (Post No.7156)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 30 OCTOBER 2019

Time  in London – 7-15 am

Post No. 7156

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7131 வெளியான தேதி : 26-10-2019 – கீதையின் ஆறாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை. இந்தத் தொடரில் இதுவே கடைசிக் கட்டுரை

கீதையின் ஏழாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் கடைசிக் கட்டளை இது:

 ஏழாவது கட்டளை :

 Thou Shalt Rejoice in Everything That the Will of God Brings to Thee

 கடவுள் உனக்கெனக் கொண்டு வரும் எதிலும் சந்தோஷப்படு 

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:||

                       -கீதை அத்தியாயம் 18 – ஸ்லோகம் 66

அனைத்து அறங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை; நான் உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.

இது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய அருளுரை.

இதை ராமானுஜர் கீதையின் சரம ஸ்லோகம் – கடைசியான – முத்தாய்ப்பான ஸ்லோகம் என்று கூறியுள்ளார்.

அனைத்தையும் கடவுளிடம் விட்டு விடு. அவரை முழுமையாக நம்பு. அவர் உனக்கு மிகவும் சிறந்ததையே அருள்வார் என்பதை அறிவாயாக.

இதைப் பற்றி, சில முக்கியமான ஆலோசனைகள் உங்களுக்கு உதவக் கூடும்.

அவை இவை தான்:

இடையூறுகளை புன்னகையுடன் எதிர் கொள்க. சோதனைகளையும் தற்காலிக தோல்விகளையும் அன்புடன் சந்தியுங்கள்.

பிரார்த்தனை என்பது உங்களுடைய பழக்கமாகவே ஆகட்டும்.

இன்னும் அதிகம், அதிக நம்பிக்கைக்காக பிரார்த்தியுங்கள்.

உலகியல் ரீதி, மன ரீதி, ஆன்மீக ரீதியாக உள்ள அனைத்து வியாதிகளும் குணமடைவது ஆண்டவனின் தொடர்பினால் தான் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.

வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி சொல்வது இது தான்: இறை நம்பிக்கை கொண்டவன் ஒரு மலைப்பாம்பு போல. அவன் இரைக்காக அலைய மாட்டான்.  இரை அவனைத் தேடி வரும்.

ஒரு  முறை பெரிய சக்ரவர்த்தி ஒருவன் புத்தரிடம் சரணடைய நினைத்தான்.

தன் ராஜ்யம் மக்கள், அரண்மனை அனைத்தையும் துறந்து துவராடை பூண்டான்.

புத்தரிடம் அவன் உபதேசம் பெறுவதைப் பார்க்க அனைத்து பிட்சுக்களும் திரண்டனர்.

புத்தரிடம் சமர்ப்பிக்க தன் வலது கையில் விலை உயர்ந்த வைரம் ஒன்றை அவன் வைத்திருந்தான்.

ஒரு வேளை வைரத்தை அவர் வாங்க மறுத்தால் அவருக்கு சமர்ப்பிக்க ஒரு தாமரையைத் தன் இடது கையில் வைத்திருந்தான்.

புத்தரை அவன் நெருங்கி நடந்த போது புத்தர் அவனை நோக்கி, “ அதைக் கீழே போடு”  என்றார்.

உடனே மன்னன் வலது கையிலிருந்த வைரத்தைக் கீழே போட்டான்.

பின்னர் நடக்க ஆரம்பித்தான்.

இப்போது புத்தர் கூறினார் : “அதைக் கீழே போடு”

இந்த முறை மன்னன் தன் இடது கையிலிருந்த தாமரை மலரைக் கீழே போட்டான்.

பின்னர் நடக்க ஆரம்பித்தான்.

இப்போது புத்தர் கூறினார் : “அதைக் கீழே போடு”

மன்னன் ஒரு கணம் திகைத்தான். பின்னர் புரிந்து கொண்டான்.

எல்லாவற்றிற்கும் காரணமான ‘நான்’ என்னும் எண்ணம் ஒரு போதும் இருக்கக் கூடாது என்று அவர் கூறிய போதனையை நினைவு கூர்ந்தான்.

தனது ‘தான்’ என்ற எண்ணத்தையும் விட்டான்.

புத்தர் அவனை அருள் கூர்ந்து நோக்கினார்.

முழுவதும் சரணடைந்த அவனை ஏற்றுக் கொண்டார்.

***

சாது வாஸ்வானியை பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்தார்.

ஏராளமான அலுவல்களால் உங்கள் டயரி நிரம்பி வழிந்திருக்குமே என்றார் அவர்.

அதற்கு சாது வாஸ்வானி, “எதையும் நான் திட்டமிடுவதே இல்லை. இறைவன் என்னை வழி நடத்த விட்டு விடுகிறேன்” என்றார்,

***

சாது வாஸ்வானி மூன்று “கொல்லிகளை” (Killers)  மனித குலத்தின் கொல்லிகள் என்றார்.

கடிகாரம், காலண்டர், டெலிபோன் ( The Clock, The Calender and the Telephone) ஆகிய மூன்று தான் அவர் கூறிய் கொல்லிகள்!

அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடுங்கள் என்பதே அவரது அருளுரை!

***

அருமையான ஏழு கட்டளைகளை இப்படி விளக்கியுள்ள சாது வாஸ்வானி அவர்களின் உரைகள் The Seven Commandments of the Bhagavad Gita புத்தகத்தில் 417 பக்கங்களில் இன்னும் ஏராளமான கதைகள், சம்பவங்கள், உவமைகள், செய்யுள்கள், ஸ்லோகங்கள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் உள்ளன.

அன்பர்கள் படித்து மகிழலாம்.

அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களையே நாம் இந்தத் தொடரில் பார்த்தோம்.

இன்னும் சுமார் 78 புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அனைத்தையும் படித்தால் ஆன்மீக ஞானம் மிகவும் பெற்றவர்களாக ஆவோம் என்பதில் ஐயமில்லை.

பகவத் கீதையைப் படிப்போம்; அதன் வழி நடப்போம்; உயர்வோம்!

***

இந்தத் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது.

கீதையின் ஆறாவது கட்டளை! (Post No.7139)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-25 am


Post No. 7139

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7123 வெளியான தேதி : 22-10-2019 – கீதையின் ஐந்தாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் ஆறாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஆறாவது கட்டளை இது :

 Thou Shalt Seek the Lowest Place

 நீ உனக்கென ஒரு தாழ்ந்த இடத்தை நாடு

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

அதிகாரத்தையும் விளம்பரத்தையும் தேடும் இந்த உலகின் இன்றைய நாளில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? விந்தை தான்!

அக்பரை கடவுள் என்று துதி பாடும் கூட்டம் பீர்பலிடம் வந்து, ‘அக்பர் கடவுள் தானே, அதை நீ ஒத்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டனர்.

பீர்பல் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

இது தான் சமயம் பீர்பலை ஒழித்துக் கட்ட என்று எண்ணிய அவர்கள் அக்பரிடம் சென்று, “நீங்கள் தாம் எம் கடவுள். ஆனால் பீர்பல் இதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்” என்று கோள் மூட்டினர்.

அக்பர் உடனடியாக பீர்பலை அழைத்தார்.

“பீர்பல், இவர்கள் என்னைக் கடவுள் என்று எண்ணுகிறார்கள். நீர் அதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியது உண்மையா?” என்று கேட்டார்.

பீர்பல் ஆம் என்று தான் கூறியதை ஒத்துக் கொண்டார்.

அக்பர் கோபத்துடன், “ பீர்பல், நான் என் குடிமக்களுக்கு கடவுள். உமக்கு எம் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா?” என்று கேட்டார்.

பீர்பல் அக்பரை நோக்கிக் கூறினர் :”அரசே! தாங்கள் கடவுள் இல்லை என்று நான் கூறியது உண்மை தான்! ஏன் அப்படிக் கூறினேன்? தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே! அதனால் தான் நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினேன்”

பீர்பலைத் தண்டிக்க நினைத்தவர்கள் இந்தப் பதிலைக் கேட்டு திடுக்கிட்டனர்.

அக்பருக்கு ஒரே மகிழ்ச்சி. வியப்பு தாளவில்லை.

“சற்று விளக்கிக் கூறும்” என்று பீர்பலை நோக்கிக் கூறினார்.

பீர்பல் கூறினார்: “அரசே! கடவுளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவோ பேர் என்னென்ன தவறுகள் உண்டோ அவ்வளவையும் செய்கிறோம். ஆனால் அவரது சாம்ராஜ்யமான இந்தப் பூவுலகிலிருந்து ஒரு போதும் அவர் யாரையும் விரட்டி விடுவதில்லை.

ஆனால் தாங்களோ, எவனேனும் ஒருவன் தவறிழைத்து விட்டதாகத் தோன்றினால் அவனை உடனடியாகத் தண்டித்து விடுகிறீர்கள்; நாடு கடத்தி விடுகிறீர்கள்! தங்களின் அதிகாரம் எப்படிப்பட்டது, பாருங்கள்! தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே தானே இருக்கிறீர்கள்?!”

அக்பர் பெரும் புத்திசாலி.

பீர்பல் கூற வந்ததை நன்கு புரிந்து கொண்டார்.

அகம்பாவம் ஒருவனை எந்த அளவுக்குக் கொண்டு போய் விடும் என்பதை, தான் கடவுள் என்று கூறியதை ஒத்துக் கொண்டதாலேயே தெரிய வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

பீர்பலை அவர் போற்றித் தன் நிலையை உணர வைத்ததைப் பாராட்டினார்.

மாமன்னர் அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது அன்னைக்குத் துக்கம் தாளவில்லை. ஓவென்று அழுதார்.

அலெக்ஸாண்டர் அவரை அருகில் அழைத்தார். “தாயே! கவலைப்பட வேண்டாம். நான் இறந்த பிறகு என்னைப் புதைத்த பிறகு, வரும் பௌர்ணமியன்று என் கல்லறைக்கு வந்து அலெக்ஸாண்டர் என்று என்னைக் கூப்பிடுங்கள். நான் உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.

அலெக்ஸாண்டர் மரணமடைந்த பின்னர் அவர் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

முழுநிலா ஒளி வீசிப் பிரகாசிக்கும் பௌர்ணமியும் வந்தது.

கல்லறைக்கு ஓடோடி வந்த அலெக்ஸாண்டரின் தாயார், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து, “ஓ!அலெக்ஸாண்டர்” என்று கத்திக் கூப்பிட்டார்.

உடனடியாக நாலா புறங்களிலிருந்தும் ஏராளமான குரல்கள் எழும்பின:

“இங்கு நூற்றுக் கணக்கான அலெக்ஸாண்டர்கள் புதையுண்டு கிடக்கிறோம். எந்த அலெக்ஸாண்டரை நீங்கள் கூப்பிடுகிறீர்கள்? உங்களுக்கு யார் வேண்டும்?”

இது தான் உலகம்.

அக்பர் ஒரு நாள் பீர்பலுடன் விருந்துண்டார்.

“ஆஹா! பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு கறிகாயை நான் கண்டதே இல்லை. என்ன ருசி? நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்.

“மன்னா! அது தான் உண்மை! எப்படிப்பட்ட கறிகாய் கத்தரிக்காய்! அதனால் தான் அதற்கு கிரீடம் போல ஒன்றை வைத்திருக்கிறான் கடவுள்”

பீர்பலின் இந்த பதிலால் அக்பருக்கு ஏக குஷி.

ஆனால் அன்று அவருக்கு ஜீரணம் ஆகவில்லை. பெரிதும் கஷ்டப்பட்டார்.

மறுநாள் பீர்பலிடம் அவர், “பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு மோசமான கறிகாயை நான் பார்த்ததே இல்லை! நீர் என்ன சொல்கிறீர்” என்றார்.

“மன்னா! அது தான் பெரிய உண்மை! அதனால் தான் அதன் தலையில் ஆணி போன்ற ஒன்றை அடித்து சுற்றி வர முள்களை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றா பீர்பல்.

அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. “பீர்பல்! நேற்று நீர் தான் கடவுள் அதற்குக் கிரீடம் கொடுத்திருக்கிறார். அது தான் பிரமாதமான காய் என்றீர். இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறீரே” என்றார் அக்பர்.

பீர்பல் மன்னனை நோக்கிக் கூறினார்: “ மன்னரே! எனக்கு நீங்கள் தான் எஜமானர். கத்தரிக்காய் இல்லை. நீங்கள் சொன்னதை மறுத்து இந்த எளியேன் பேசக் கூடாது. ஆனால் கத்தரிக்காயைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அது எனக்கு எஜமானன் இல்லை” என்றார்.

அக்பருக்கு பீர்பலின் எளிமை புரிந்து விட்டது.

எப்போதும் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துக் கொள்ளும் பண்பு அவருக்குப் புரிந்து அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

எளிமை என்றும் வெற்றி பெறும்!

***

கீதையின் ஐந்தாவது கட்டளை! (Post No.7123)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 22 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-33 am
Post No. 7123

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7115 வெளியான தேதி : 20-10-2019 – கீதையின் நான்காவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் ஐந்தாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை இது தான் :

Whatever Thou Doest, Do It for the Love of God

நீ எதைச் செய்தாலும் கடவுளின் மீது அன்பு கொண்டு செய்

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

எந்தச் செயலைச் செய்தாலும் மனிதர்களை மகிழ்விக்கச் செய்யக் கூடாது. ஆனால் இறைவனின் அருளைப் பெறவே செய்ய வேண்டும்.

டெட்சு – ஜென் ஒரு புத்த துறவி. புத்த மத அறநூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது அவரது பேரவா. இப்படிச் செய்தால் புத்தரின் உபதேசங்கள் ஜப்பானியரைச் சுலபமாக சென்றடையும் என்று அவர் எண்ணினார்.

ஆனால் இதற்காக பெரும் நிதி தேவை என்பதை உணர்ந்தார். ஆனால் மனம் தளராது ஒரு பொதுநல நிதி ஒன்றை அவர் ஏற்படுத்தி அனைவரிடமும் நிதி உதவி கேட்டு சேகரிக்க ஆரம்பித்தார்.

பத்து வருட காலம் கழிந்தது. தேவையான நிதி சேர்ந்தது. தனது பணியை ஆரம்பிக்க வேண்டியது தான் என்று அவர் எண்ணினார். அப்போது ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

உடனடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய தான் சேகரித்த நிதி அனைத்தையும் கொடுத்தார்.

ஆனால் தான் ஆரம்பித்த பணியை அவர் அப்படியே விட்டு விடவில்லை.

மீண்டும் பணம் சேகரிக்க ஆரம்பித்தார்.

இன்னொரு பத்து வருட காலம் கழிந்தது. போதுமான நிதி சேர்ந்தது.

 இந்தச்  சமயம் இன்னொரு பேரிடர் வந்தது. அவர் தான் சேகரித்திருந்த நிதி அனைத்தையும் மக்களுக்கு உதவி செய்வதற்கென இந்த முறையும் கொடுத்தார்.

ஆனால் அவர் தான் எடுத்த பணியை விடுவதாயில்லை.

அடுத்து இந்த முறையும அவர் நிதியைச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்னொரு பத்து ஆண்டுகள் ஓடிய பின்னர் போதுமான பணம் சேர்ந்தது.

கடைசி கடைசியாக ஜப்பானிய மக்களுக்கு புத்தமத அறநூல்கள் சென்று சேர்ந்தன.

ஜப்பானிய மக்கள் மிக்க அன்புடன் அதை ‘தி தேர்ட் இம்ப்ரெஷன்’ – (The Third Impression)- மூன்றாவது பதிப்பு என்று கூறினர்.

முதல் இரண்டு பதிப்புகள் செயல் முறைப் பதிப்புகளாம். மூன்றாவது பதிப்பு தான் அச்சிடப்பட்ட பதிப்பாம்!

டெட்சு – ஜென் உண்மையான ஒரு கர்மயோகி. அவர் எதைச் செய்தாலும் இறையன்புடன் செய்தார்.

ரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனதைப் பொறுக்கமாட்டாத சிலர் அவரிடம் வந்து, “நீங்கள் ஒரு பித்தலாட்டக்காரர். கடவுளிடம் பேசுவதாக நீர் பொய் சொல்கிறீர். எங்கே, அந்தக் கடவுளை எங்களிடம் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று கூவினர்.

“காட்டாவிட்டால், அவரிடமே உங்களை “அனுப்பி விடுவோம்” என்று அவர்களில் ஒருவர் எச்சரிக்கவும் செய்தார்.

ரமண மஹரிஷி சாந்தமாக இருந்தார்; அனைத்தையும் கேட்டார்.

பின்னர் அவர்களிடம், “நாளை காலை எல்லோரும் வந்து விடுங்கள் . கடவுளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.

அடுத்த நாள் அனைவரும் வந்து குழுமி விட்டனர்.

ரமணர் அவர்கள் அனைவரையும் இருள் அடர்ந்த காட்டினூடே அழைத்துச் சென்றார்.

அங்கு சிதிலமடைந்த குடிசை ஒன்று இருந்தது.

அதற்குள் இரண்டு ஆடிப்போன கட்டில்கள் இருந்தன.

குடிசைக்குள் சென்ற அனைவரும் அங்கு ஒரு வயதான தம்பதியினர் கட்டில்களில் படுத்திருப்பதைப் பார்த்தனர். இருவரும் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடனேயே கூட்டத்தினர் வெகு வேகமாக வெளியே சென்று தூரத்தில் நின்றனர்.

ரமணரோ அவர்கள் காயத்தைக் கழுவி கட்டுப் போட்டார். மெதுவாக நடந்த இந்தச் செயல் மூன்று மணி நேரம் நீடித்தது.

பின்னர் கூட்டத்தினரை நோக்கிய ரமணர்,”அதோ அவர்களிடம் நான் கடவுளைப் பார்க்கிறேன். அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் மூலமாக இறைவனுக்கு நான் தொண்டு செய்கிறேன்” என்றார்.

அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர். அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரது அருளுக்காக வேண்டினர்.

மனிதன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவன் இறைவனின் பக்கத்தில் இருக்கிறான்.

எந்தச் செயலைச் செய்தாலும் இறைவன் மீதான அன்புடன் செய்ய வேண்டும்!

இது தான் கீதை தரும் கட்டளை!

***

கீதையின் மூன்றாவது கட்டளை! (Post No.7108)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 18 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-37 AM
Post No. 7108

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7101 வெளியான தேதி : 16-10-2019 – கீதையின் இரண்டாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் மூன்றாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் மூன்றாவது கட்டளை இது தான் :

 Thou Shalt Do Thy Duty and a Little More

நீ உனது கடமையை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரும் பாடகியான மாப்ரிபான் (Mabribon) ஒரு நாள் மாலை தன்னைப் பார்க்க வருபவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

பல பேரைச் சந்தித்த பிறகு, தனது வேலைக்காரியிடம், “மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.

தனது விசிறிகளிடம் பேசி அவர்களைத் திருப்திப்படுத்துவதை அவர் தனது கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரே ஒருவர் தான் இருக்கிறார்,அம்மா” என்றாள் வேலைக்காரி. “அதுவும் அவன் ஒரு சிறு பையன்” என்றாள் அவள்.

“சரி, உள்ளே அனுப்பு” என்றார் மாப்ரிபான்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்த மாப்ரிபான். “வா, உள்ளே வா, உன் பெயர் என்ன?” என்றா.

“பியரி” என்றான் பையன்.

“சொல், உனக்கு என்ன வேண்டும்?” மாப்ரிபான் கேட்க பையன் பதில் சொன்னான் :” எனது அம்மா… மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். நான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீங்கள் பாடினால் .. அதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்தால்.. மிகவும் உதவியாக இருக்கும். இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன்”

“அட, உனது கவிதையைக் கொடு. அப்படியே உன் முகவரியையும் சேர்த்துக் கொடு.”

பையன் கவிதையுடன் முகவரியையும் சேர்த்துக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

மறுநாள் மாப்ரிமான் அந்தக் கவிதையை அரங்கத்தில் பாடினார்.

அனைவருக்கும் அந்தக் கவிதை பிடித்திருந்தது – அவருக்கும் தான்!

அனைவரும் ஆரவாரித்துக் கை தட்டினர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக அவர் பியரியின் வீட்டிற்குச் சென்றார்.

அவனையும் அவனது தாயாரையும் பார்த்தார்.

“பியரி, உனது கவிதை பிரமாதம். அனைவரும் அதைப் பாராட்டினர். இதோ இந்தா” என்று அன்று நிகழ்ச்சியில் கிடைத்த முழுப்பணத்தையும் மாப்ரிபான் அளித்தார்.

“உனது தாயாருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது செய்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

நன்கொடை, உதவி என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு கடமைக்கும் சற்று மேலாகச் செய்வது தான் சேவை.

அதை செய்யத் தவறக் கூடாது

*

பிரபல ஓவியரான மைக்கேலேஞ்சலோவிற்கு 20 வருட காலம் நம்பிக்கைக்குரியவராயும் பணி செய்பவராகவும் இருந்தவர் ஆர்பினோ (Arbino) என்பவர்.

ஆர்பினோவிற்கு வயது அதிகமாகவே தள்ளாமை வந்து விட்டது. நீண்டகாலம் தான் இருக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

மைக்கேலேஞ்சலோ அவரை நன்கு ஓய்வு எடுத்து சக்தியை சேமிக்கும்படி கூறி அதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆர்பினோ அதற்கு இணங்கவில்லை.”உங்களுக்கு நான் ஒரு சுமையாக ஆகி விடுவேனே” என்றார்.

ஆனால் மைக்கேலேஞ்சலோ அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“ஒரு சுமையும் இல்லை நான் இரவும் பகலும் உங்களைப்பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

சொன்னபடியே தன் வார்த்தையை அவர் காப்பாற்றினார்.

ஆர்பினோ நோய்வாய்ப்பட்டார். அவரை நன்கு பார்த்துக் கொண்ட மைக்கேலேஞ்சலோ ஆர்பினோவின் இறுதி நாட்களில் அவர் படுக்கை அருகே அமர்ந்து ஒரு பெரிய அற்புதமான ஓவியத்தையும் வரைந்து முடித்தார்.

*

அமெரிக்க ஜனாதிபதி க்ளீவ்லேண்ட் (Cleaveland)  ஒரு பயணத்திற்காக ரயிலில் ஏறினார். அவருடன் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரிச்சர்ட் கில்டரும் (Richard Gilder) அதே ரயிலில் பயணம் செய்தார்.

ஜனாதிபதி அந்த ரயிலில் பயணம் செய்வதைக் கேட்ட ரிச்சர்ட் அவரைத் தேடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டிய  முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது.

 ஆனால் எவ்வளவு தேடியும் அவரால் ஜனாதிபதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழப்பமடைந்த ரிச்சர்ட் கடைசி கோச்சுக்குச் சென்று ரயில் கண்டக்டரிடம் ஜனாதிபதி எங்கே என்று கேட்டார்.

என்ன ஆச்சரியம். அங்கே ஒரு மர பெஞ்சில் ஜனாதிபதி அமர்ந்திருந்தார்.

ஒரு பெண்மணி தனது குழந்தையுடன் ரயிலில் ஏற தனது சீட்டை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து விட்டு மர பெஞ்சில் அமர்ந்து பயணிக்கலானார் க்ளீவ்லேண்ட்!

*

இது போன்ற இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கடுக்காகச் சொல்லி சாது வாஸ்வானி கடமையைச் செய்யும் போது அதில் பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

****

கீதையின் இரண்டாவது கட்டளை! (Post No.7101)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 16 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7101

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் 7085 வெளியான தேதி 11-10-2019 – ‘கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்”

கட்டுரை எண் : 7088 வெளியான தேதி : 12-10-2019 – கீதை : மனிதகுலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி!-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் இரண்டாவது  கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் இரண்டாவது கட்டளையைப் பார்ப்போம் :

இரண்டாவது கட்டளை : Thou Shalt Not fail to do Thy Duty

                          நீ உனது கடமையைச் செய்யத் தவறாதே

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் பல.

அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:

மஹாத்மா காந்திஜி கடமையைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார். பலனை எதிர்பாராமல் நிஷ்காம்யகர்மமாக தேசத் தொண்டை அவர் செய்த போது ஒரு கணத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்பது அவரது எண்ணம்; அவரது சங்கல்பம்.

இதே போல தன்னுடன் இருந்தவர்களும் தங்கள் நேரத்தை வீணாக்காது முழு நேரத்தையும் தேசப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.

அவருடைய காரியதரிசியான மஹாதேவ தேசாய் அவருடனேயே இருப்பவர். அண்ணலைக் கண் போலப் பாதுகாத்து வந்தவர்.

ஒரு சமயம் மஹாதேவ தேசாய் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்பது காந்திஜிக்குத் தெரிய வந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் இதற்காக அவர் செலவிடுகிறார் என்பதும் அவருக்குச் சொல்லப்பட்டது.

அவர் மஹாதேவ தேசாயை அழைத்தார்.

காந்திஜி :- “மஹாதேவ், நீங்கள் பிரெஞ்சு மொழி கற்று வருவது உண்மைதானா? –

மஹாதேவ் :- ஆமாம், பாபுஜி

காந்திஜி :- ‘எப்பொழுது படிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்?

மஹாதேவ் :- ஒரு மணி நேரம் பாபுஜி

காந்திஜி: – இன்னும் எத்தனை நாள் படிக்க வேண்டும்

மஹாதேவ் – இன்னும் ஒரு ஆறு மாதம் ..

காந்திஜி : – ஓஹோ! அதாவது 180 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், சரி தானே!

மஹாதேவ் :- என்னால் அது முடியும். சீக்கிரமாகவே கற்றுக் கொள்வேன்.

காந்திஜி :- அதாவது அத்தனை மணி நேரம் தேசப் பணிக்கான நேரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆகிறது. ஒவ்வொரு கணமும் தேசத்திற்காகத் தான் என்று நாம் உறுதி மொழி எடுத்துக் கொண்டோமில்லையா? மற்ற எல்லாம் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, அவை நமக்கு ஆடம்பரம் போலத் தான். இப்போது நமது நேரத்தை ஆடம்பரத்தில் வீணாக்க முடியாது.

    மஹாதேவ தேசாய் காந்திஜியின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்பு தருபவர். பிரெஞ்சு மொழி கற்பதை அவர் நிறுத்தி விட்டார்.

*

பாரத பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு இருந்த போது நடந்த சம்பவம் இது :

ஒரு முறை அவர் தனது காரில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். ரெயில்வே க்ராஸிங் ஒன்று வந்தது. அது மூடப்பட்டிருந்தது.

காரின் டிரைவர், கேட் கீப்பர் அருகே சென்று, “கேட்டைத் திற. உள்ளே உட்கார்ந்திருப்பது யார் தெரியுமா? பாரதப் பிரதமர். அவராலெல்லாம் காத்திருக்க முடியாது. கதவைத் திற”

கேட் கீப்பர் மரியாதையாக பதிலளித்தார் இப்படி : “ எனது கடமை சிக்னல் வந்தவுடன் கேட்டை மூட வேண்டியது தான். திறக்கும்படி சிக்னல் வந்தவுடன் தான் என்னால் திறக்க முடியும்.”

டிரைவருக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை எச்சரிக்கிறேன். உன்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லப் போகிறேன், பார். உனது வேலை போகப் பொகிறது.கதவைத் திற.”

ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

பண்டிட் நேரு இதைக் கேட்ட போது கேட் கீப்பரின் கடமை உணர்ச்சியை எண்ணி சந்தோஷப்பட்டார். அந்த கேட்கீப்பரைப் பாராட்டுவித்து அடுத்த பிரமோஷனுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

*

மிகப் பெரிய இசைக் கலைஞரான ப்ராஹ்ம்ஸ் (Brahms) ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரிக்கு அழைக்கப்பட்டார். அவரது நண்பரன ஜொயாசிம்மும் (Joachim) அவருடன் கூட வரவே அவரது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

புடாபெஸ்ட் நகருக்கு மிகுந்த ஆவலுடன் அவர்கள் சென்று சேர்ந்தனர். ஆனால் என்ன ஏமாற்றம்! ஒரே ஒருவர் தான் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.

ஜோயாசிம் வெறுப்புடன் கூறினார்: “சீ, என்ன இது! இந்த இசை நிகழ்ச்சியை கேன்ஸல் செய்து விடுவோம். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.” என்றார்.

ப்ராஹ்ம்ஸ் ஒப்புக் கொள்ளவில்லை. “இவர் நமது இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காக வந்துள்ளார்.அவரை ஏமாற்றமடையச் செய்து எப்படித் திருப்பி அனுப்புவது. நமது கடமை இசை நிகழ்ச்சியை நடத்துவது தான்!’

அப்படியே முழுநேர இசை நிகழ்ச்சி அந்த ஒருவருக்காகவே நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை வெகுவாக ரசித்த அந்த ரசிகர், “அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.

அடுத்து, இந்திய சாஸ்திரீய சங்கீத விற்பன்னரான விஷ்ணு திகம்பர் பண்டிட் அவர்களுக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு முறை சிறிய நகர் ஒன்றில் அவரது இசை நிகழ்ச்சி ஏற்பாடானது. அங்கு ஒரே ஒருவர் தான் வந்திருந்தார்.

விஷ்ணு தனது முழு இசைக் குழுவுடன் நிகழ்ச்சி முழுவதையும் நன்கு நடத்தி முடித்தார். 3 மணி நேர நிகழ்ச்சிக்கு அந்த ரஸிகர் கொடுத்தது 4 அணாக்கள் தான். (இந்தக் கால 25 பைசாக்கள்)

*

ஒரு  முறை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகர்கள்  மூவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சின்ன போக்குவரத்து விதியை அவர்கள்  மீறி விட்டனர்.

கார் நிறுத்தப்பட்டது. போலீஸ் ஆபீசர் காரின் அருகில் வந்தார்.

காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த ரால்ஃப் ரிச்சர்ட்ஸன்(Ralph Richardson), “ஆபீஸர், நான் என்று உங்களுக்குத் தெரிகிறதா?” என்றார்.

“எஸ், சார்! நீங்கள் தான் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்றும் ரால்ஃப் ரிச்சர்ட்ஸன். உங்களை அடிக்கடி டி.வியில் பார்ப்பேன்” என்றார் போலீஸ்காரர்.

“இதோ இருக்கிறாரே, இவர் தான் சர் செட்ரிக் ஹார்ட்விக் (Sir Cedric Harwicke ). பின்னால் இருக்கிறாரே அவர் தான் லாரன்ஸ் ஆலிவர் (Laurence Oliver). நிச்சயமாக நீங்கள் அபராத சீட்டைத் தரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ரால்ஃப்.

“சார், நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நீங்கள் மன்னர் ஆர்தரின் ரவுண்ட் டேபிளில் அமரும் பிரபுக்கள் என்றாலும் கூட நான் உங்களுக்கு டிக்கட்டைத் (அபராத சீட்டை) தந்தே ஆக வேண்டும் என்றார் அந்த போலீஸ் ஆபீசர்.

இப்படி கடமை உணர்ச்சி கொண்டவர்கள் உலகில் ஆங்காங்கே ஏராளம் பேர் உள்ளனர்.

சாது வாஸ்வானி இப்படி இன்னும் அநேக சம்பவங்களைக் கூறி கடமையைச் செய்வதிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது என்று விளக்கி விட்டு அடுத்த மூன்றாவது கட்டளைக்குச் சென்றார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

***

கீதை: மனித குலத்திற்கான அற நூல்: பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! (Post No.7088)

Written  by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 12 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-31
Post No. 7088

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதை தரும் ஏழு கட்டளைகள்! (Post No. 7085)

WRITTEN  by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 11-14 am
Post No. 7085

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

–subham–