
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9797
Date uploaded in London – 30 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு பூர்ணிமா.
சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16
அமாவாசை – ஜூலை 9, பவுர்ணமி – ஜூலை 23,
ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20
ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .
Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை
அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய் 4-6-8
Xxx
ஜூலை 2 வெள்ளிக்கிழமை
அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10
xxx
ஜூலை 3 சனிக்கிழமை
இந்த செல்வத்தின் மதிப்பு என்ன? லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9
Xxx
ஜூலை 4 ஞாயிற்றுக்கிழமை
அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3
xxx
ஜூலை 5 திங்கட்கிழமை
அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6
xxx
ஜூலை 6 செவ்வாய்க்கிழமை
பறவை, பூமியின் பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது 4-5-8
xxx
ஜூலை 7 புதன் கிழமை
அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3
xxx
ஜூலை 8 வியாழக்கிழமை
அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2
ஜூலை 9 வெள்ளிக்கிழமை
அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14
xxx
ஜூலை 10 சனிக்கிழமை
அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு. யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1
xxx
ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை
எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5
xxx
ஜூலை 12 திங்கட்கிழமை
அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13
xxx
ஜூலை 13 செவ்வாய்க்கிழமை
அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2
xxx
ஜூலை 14 புதன் கிழமை
கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8
xxx

ஜூலை 15 வியாழக்கிழமை
பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9
xxx
ஜூலை 16 வெள்ளிக்கிழமை
அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11
xxx
ஜூலை 17 சனிக்கிழமை
அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப் போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12
xxxx
ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை
அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13
xxx
ஜூலை 19 திங்கட்கிழமை
அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக 4-3-13
xxxx
ஜூலை 20 செவ்வாய்க்கிழமை
பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள் 4-3-1
xxxx

ஜூலை 21 புதன் கிழமை
அக்கினியே, நீ அசுரன்! மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5
xxx
ஜூலை 22 வியாழக்கிழமை
மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18
xxx
ஜூலை 23 வெள்ளிக்கிழமை
இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை அறிந்தார்கள்)
(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13
xxx
ஜூலை 24 சனிக்கிழமை
அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள் 4-1-14
xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை
பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15
xxxx
ஜூலை 26 திங்கட்கிழமை
அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9
xxx
ஜூலை 27 செவ்வாய்க்கிழமை
அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு புகழுடன் தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)
xxx
ஜூலை 28 புதன் கிழமை
வேள்விக்காக தன் தலையில் விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே
அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6
xxx
ஜூலை 29 வியாழக்கிழமை
இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17
xxx
ஜூலை 30 வெள்ளிக்கிழமை
ஏழு ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15
xxx
ஜூலை 31 சனிக்கிழமை
காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8
–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021, காலண்டர்,